ஊர்ப்புதினம்

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது

2 months 2 weeks ago

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது

29 Dec, 2025 | 09:15 AM

image

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது, 

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (28) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.

இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில  உள்ள ஒரு விடுதியில்  ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபரும், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த  சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

DSC_0755.JPG

DSC_0726.JPG

https://www.virakesari.lk/article/234639

சம்பூர் கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது

2 months 2 weeks ago

சம்பூர் கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது

Published By: Vishnu

28 Dec, 2025 | 10:07 PM

image

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp_Image_2025-12-28_at_21.57.17.jp

குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் மாலையளவில் சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற பாகங்களாக இவை இருக்கலாமா என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றன.

https://www.virakesari.lk/article/234614

காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார

2 months 2 weeks ago

காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார

Published By: Vishnu

28 Dec, 2025 | 09:26 PM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது. ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்கொண்டார்கள். அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் தித்வா சூறாவளி தாக்கத்தால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

நாட்டில் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) அசாதாரண காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பாரிய அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. மழையுடனான காலநிலை மாத்திரமே நிலவும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுவது உண்மையா அல்லது வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுவது உண்மையா, இது அரச நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாட்டையும், பரஸ்பர வேறுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/234613

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எண்மர் கைது!

2 months 2 weeks ago

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எண்மர் கைது!

28 Dec, 2025 | 05:23 PM

image

யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/234604

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

2 months 2 weeks ago

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

Dec 28, 2025 - 05:05 PM

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjpnkaqt037jo29n4q8lnw9s

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

2 months 2 weeks ago

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

Dec 28, 2025 - 01:11 PM

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். 

பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே "டித்வா" புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர். 

அதற்கமைய குறித்த நிதியத்திற்கு 108,000 ரூபாவினை பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வொன்று நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

https://adaderanatamil.lk/news/cmjpf7i4n037bo29ngy088u5z

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்!

2 months 2 weeks ago

Jaffna_Pix9.jpg?resize=640%2C375&ssl=1

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

https://athavannews.com/2025/1457523

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

2 months 2 weeks ago

download-15.jpg?resize=275%2C183&ssl=1

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் 15 பிரதேச செயலக நீதியாக உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்ட அலுவலர்கள் அமையத்தினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2700.9 மில்லியனில் 2625.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய அமைச்சுகள் மூலம் 5368.8 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 4210.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

தீவக வீதிகள் வேலைத் திட்டம் நாட்டிலே ஏற்பட்ட இடர் நிலை காரணமாக உரிய காலப் பகுதியில் நிறைவு செய்யப்படாத நிலையில் அதற்கான நிதியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆகவே இவ் வருடம் நிறைவடைய இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தற்போது இடம் பெற்று வரும் வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி வரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Athavan News
No image previewயாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது...
இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்

மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்

2 months 2 weeks ago

மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்

28 Dec, 2025 | 05:04 PM

image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், போன்ற பல பிரதேசங்களில் நீண்ட நாட்களாக காட்டு யானைகள் தொல்லைகளும் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்திரிந்ததனால் மக்கள் பீதிடைந்தநிலையில் காணப்பட்டனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கைக்கு வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் அப்பகுதிக்கு விரைந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து காட்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்படுத்தியுள்னர்.

எனினும் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உள்நுளையாமலிருப்பதற்காக வேண்டி அங்குள்ள காட்டுயானைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி, யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

photos_elepant__2_.png

photos_elepant__20_.png

photos_elepant__18_.png

https://www.virakesari.lk/article/234601

வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள்

2 months 2 weeks ago

வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள்

28 December 2025

1766917447_65339_hirunews.jpg

இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகப் பாரிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

குறித்த நிவாரண உதவிகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தின் அதிகாரிகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

இதன்படி தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள், 2 கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் 12,33,604 இந்திய ரூபாய் நிதியுதவியையும் (இலங்கை ரூபாயில் சுமார் 42,50,000) வழங்கியுள்ளனர்.

இதற்கமைய குறித்த நிவாரணப் பொருட்கள் கடந்த 26ஆம் திகதி சென்னையிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவை உரிய திணைக்கள அதிகாரிகள் ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மேலும் இக்கட்டான காலகட்டத்தில் அனர்த்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்குத் தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர்.

மேலும் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்து, அந்தந்தப் பகுதி காவல்துறையில் பதிவு செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், அவர்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்கமைய குறித்த உன்னதமான பங்களிப்பிற்காக இலங்கை அரசாங்கம் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து அடுத்த வாரத்தில் மற்றுமொரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தது. 

அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து இதுவரை 4 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய ஆடைகள், உலர் உணவு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நப்கின்கள் உள்ளிட்டவை அடங்கும். 

மக்களின் தேவைக்கருதி அடுத்த வாரத்தில் மேலும் ஒரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/438008/humanitarianism-blossoms-even-in-poverty-massive-relief-assistance-from-sri-lankans-living-in-tamil-nadu

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை

2 months 2 weeks ago

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை

கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். 

அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் ஏனைய வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் கல்வித் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் நிமல் முதுன்கொடுவ வலியுறுத்தியுள்ளார். 

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றாமல் இறுதியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செய்ய முயற்சிப்பதால் இதனை வெற்றிகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, பாடசாலைகளை பிற்பகல் 2.00 மணி வரை நடத்துவதும், பாடவேளைகளை 50 நிமிடங்கள் வரை நீடிப்பதும் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 6ஆம் தரத்திற்கும், ஜனவரி மாத இறுதியில் 1ஆம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், தற்போது அது பாரிய சிக்கலாக மாறியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார். 

ஏனைய தரங்களுக்கான பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கூறப்பட்டாலும், அது இதுவரை நான்கு முறை சுற்றறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

கடந்த ஆண்டுகளில் இந்த காலப்பகுதியில் பாடசாலை நேர அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கல்வி அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என அவர் தெரிவித்தார். 

இது அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதோடு, நேர அட்டவணைகளை அங்கீகரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

40 நிமிடப் பாடவேளைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை 50 நிமிடப் பாடவேளைகளுக்கு அமைய முன்னெடுப்பது சிக்கலானது என்றும், அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து கல்வி அமைச்சு இதுவரை எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

மேலும், சீர்திருத்தங்கள் தொடர்பான எந்தவொரு தொகுப்புகளும் (Modules) இதுவரை எந்தப் பாடசாலைக்கும் கிடைக்கவில்லை எனவும், இந்நிலையில் ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பித்து கற்பித்தல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் பெரும் கேள்விக்குறி நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjpklfcw037go29n5vtsxvm0

”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” - இளையதம்பி சிறிநாத்

2 months 2 weeks ago

”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது”

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும்.

எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை சமஸ்டி முறையிலான தீர்வாகும்.

அதனை ஒருபோதும் இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காது.

புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்தி வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே மிஞ்சி இருக்கின்றது.

2025 புயல் ஏற்பட்டு தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலும் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்காலப் பகுதியில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள் இன்னும் மீண்டெழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பெரிதும் பாதித்திருக்கின்றன.

தற்போது இந்த புயல் காரணமாகவும் மக்களின் நிலை மேலும் மோசமாகியுள்ளது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆகக் குறைந்த தீர்வாக 13வது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்கள் கூட பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது

மிக இலகுவாக பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது.

13வது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதே யதார்த்த கள அரசியல் ஆகும் என தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/சமஸ்டி-முறையிலான-அரசியல/

சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️

2 months 2 weeks ago

சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️

adminDecember 28, 2025

தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

🔍 விசாரணைக்குள்ளாகும் அமைச்சர்கள்:

  • பிமல் ரத்நாயக்க

  • வசந்த சமரசிங்க

  • குமார ஜெயக்கொடி

  • சுனில் ஹந்துன்னெத்தி

  • நளிந்த ஜெயதிஸ்ஸ

  • சுனில் வட்டகல (பிரதி அமைச்சர்)

ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வாக்குமூலங்களை வழங்குவதற்காக அவர் நாளை (டிசம்பர் 30, செவ்வாய்க்கிழமை) ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

சொத்துக்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்பது குறித்து பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சட்டத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை (Asset Declaration) சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு தன்னிச்சையாகவோ அல்லது முறைப்பாட்டின் அடிப்படையிலோ விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டு.



https://globaltamilnews.net/2025/225152/#google_vignette

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது

2 months 2 weeks ago

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது:

adminDecember 28, 2025

jaffna-drugs-arrest.jpg?fit=1170%2C878&s

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார்.

இது தொடா்பில் பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குறித்த பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சட்டவிரோத போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் போதை தரக்கூடிய ‘மாவா’ பாக்கு வகைகளுடன் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக இந்த வலையமைப்பை நடத்தி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://globaltamilnews.net/2025/225120/

அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்

2 months 2 weeks ago

அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்

adminDecember 28, 2025

3-2-3.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் கலாச்சார நிகழ்வுகள்,இரவு நேரத்தை உற்சாகப்படுத்த பிரம்மாண்டமான இன்னிசை கச்சேரி ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இன்று இரவு வரை நீடிக்கவுள்ள இந்தத் திருவிழா, காங்கேசன்துறை கடற்கரைப் பகுதிக்கு ஒரு புத்துயிரைத் தந்துள்ளதுடன், ஏராளமான மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

https://globaltamilnews.net/2025/225120/

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

2 months 2 weeks ago

download-15.jpg?resize=275%2C183&ssl=1

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்குரிய உத்தரவு கிடைக்குமாயின் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் அல்லாவிட்டால் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1457475

2026 இல் உள்ள அரச விடுமுறைகள்

2 months 2 weeks ago

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ...

Dec 28, 2025 - 12:07 PM

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ...

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. 

புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன. 

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. 

2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது. 

அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன. 

2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள், 

ஜனவரி - 03 சனிக்கிழமை – துருத்து முழுநோன்மதி தினம் 

ஜனவரி - 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் பண்டிகை 

பெப்ரவரி - 01 ஞாயிற்றுக்கிழமை – நவம் முழு நோன்மதி தினம் 

பெப்ரவரி - 04 புதன்கிழமை – சுதந்திர தினம் 

பெப்ரவரி - 15 ஞாயிற்றுக்கிழமை –  மகா சிவராத்திரி விரதம் 

மார்ச் - 02 திங்கட்கிழமை –  மெதின் முழுநோன்மதி தினம் 

மார்ச் - 21 சனிக்கிழமை – ரமழான் பண்டிகை 

ஏப்ரல் - 01 புதன்கிழமை – பஃக் முழுநோன்மதி தினம் 

ஏப்ரல் - 03 வெள்ளிக்கிழமை –  பெரிய வெள்ளி தினம் 

ஏப்ரல் - 13 திங்கட்கிழமை –  சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம் 

ஏப்ரல் - 14 செவ்வாய்க்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு 

மே - 01 வெள்ளிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினம் 

மே - 01 வெள்ளிக்கிழமை – உலக தொழிலாளர் தினம் 

மே - 02 சனிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம் 

மே 28 வியாழக்கிழமை – ஹஜ் பெருநாள் 

மே 30 சனிக்கிழமை – அதி பொசன் முழு நோன்மதி தினம் 

ஜூன் - 29 திங்கட்கிழமை – பொசொன் முழுநோன்மதி தினம் 

ஜூலை - 29 புதன்கிழமை –  எசல முழுநோன்மதி தினம் 

ஒகஸ்ட் - 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்) 

ஒகஸ்ட் 27 வியாழக்கிழமை – நிக்கினி முழுநோன்மதி தினம் 

செப்டம்பர் 26 சனிக்கிழமை – பினர முழுநோன்மதி தினம் 

ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை – வஃப் முழுநோன்மதி தினம் 

நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை 

நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை – இல்புர முழுநோன்மதி தினம் 

டிசம்பர் 23 புதன்கிழமை – உந்துவப் முழுநோன்மதி தினம் 

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் பண்டிகை

https://adaderanatamil.lk/news/cmjpcwz3m0379o29nx5mkv94r

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

2 months 2 weeks ago

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

Dec 27, 2025 - 09:51 PM

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய் வருமானமும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 2,105 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தின் ஊடாக 213 பில்லியன் ரூபாவும், ஏனையவை ஊடாக 70 பில்லியன் ரூபாவும் வருமானமாக பெறப்பட்டுள்ளது. 

2025 இன் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 410.5 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 355 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதியின் ஊடாக 54.6 பில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டிருந்தது. 

இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்த அரச வருமானம் 35.5% இனால் அதிகரித்து 4,945.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தத் தொகை 3,650.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmjoica7w036vo29ndf1gzlsj

எமது காணிகளை மீட்டு தாருங்கள் - நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் கோரிக்கை

2 months 2 weeks ago

எமது காணிகளை மீட்டு தாருங்கள் - நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் கோரிக்கை

27 Dec, 2025 | 05:48 PM

image

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர்.

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.

குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் " மக்களின் காணி மக்களுக்கே " என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி, அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார்.

அதனை அடுத்து, காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன், காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட, தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

4__3___1_.jpg

4__1_.jpg

https://www.virakesari.lk/article/234548

பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

2 months 2 weeks ago

பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

Dec 27, 2025 - 10:13 PM

பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது இன்று (27) மாலை 4 மணியளவில் தவறி நீருக்குள் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து காணாமல் போனவரை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்தனர். 

பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmjoj4sq1036wo29np6kg9fw5

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr