ஊர்ப்புதினம்

ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை!

2 days 6 hours ago

ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு ; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை!

Published By: Digital Desk 1

15 Mar, 2026 | 02:50 PM

image

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இலங்கையின் காலி மற்றும் கொழும்பு கடற்பரப்புக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிர் தப்பியவர்கள் காலி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர்வதேச வர்த்தகத்திற்கான பாதுகாப்பான வலயமாகவே கருதப்பட்டது. ஆனால், ஒரு வெளிநாட்டு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். 

குறிப்பாக, 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு'  மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இதில் இந்தியா ஒரு முக்கிய தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது கடற்பரப்புக்கு மிக அருகில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் முறையான விளக்கத்தைக் கோர வேண்டும் என்று அவர் கூறினார். 

நமது கடல் எல்லையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் இறையாண்மை அதிகாரம் இலங்கைக்கு உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் இறக்குமதி மற்றும் தொழிலாளர் பணம் அனுப்புதல் பாதிக்கப்படலாம்.

இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குநராக ஈரான் இருப்பதால், வர்த்தக ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சுற்றுலாத்துறையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஈரானிய வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுக்கும் என்றும், நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கூடுதலாக, கச்சத்தீவு விவகாரத்தில் 1974 ஒப்பந்தத்தின்படி அது இலங்கைக்குச் சொந்தமானது என்றும், தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தமிழக அரசுடன் சிறந்த பேச்சுவார்த்தைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை தனது மண்ணில் வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அனைத்து நாடுகளுடனும் சமநிலையான உறவையே பேணுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

WhatsApp_Image_2026-03-15_at_12.49.17.jp

https://www.virakesari.lk/article/241028

வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு

2 days 11 hours ago

வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு

ஞாயிறு, 15 மார்ச் 2026 09:38 AM

வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு

வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

https://jaffnazone.com/news/55586

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும்

2 days 11 hours ago

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும்

ஞாயிறு, 15 மார்ச் 2026 09:46 AM

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும்

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும்  அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. 

சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. 

காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே எமது மாவட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கியவர். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த நிதியின் ஊடான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். 

அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் புத்திசாதுரியமான நடவடிக்கையால் வீதிகளைத் தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது. 

தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன.

 எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன், என்றார்.

https://jaffnazone.com/news/55587

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை?

2 days 11 hours ago

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை?

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 

சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. 

விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmrlcwe9001i356ppgca3jj3

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

2 days 11 hours ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

adminMarch 14, 2026

written by admin March 14, 2026

TamilNews2-38.png?fit=900%2C1200&ssl=1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.  விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன், மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திறமை அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/230472/

புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி

2 days 14 hours ago

புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி

15 Mar, 2026 | 09:51 AM

image

வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார்.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை 12 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார்,

வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை கமநல சேவைகள் நிலையம், கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம், பம்பைமடு கமநல சேவைகள் நிலையம் ஆகியவை அதிக சுமையுடன் இயங்கிவருகின்றன.

இந்த மூன்று கமநல சேவைகள் நிலையங்களிலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றினைத்து புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இதன்மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் நிலையங்களினூடாக சிறந்த, விரைவான சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் , இது ஒரு சிறந்த முன்மொழிவு. இந்த விடயத்தை கையாள்வதற்காக ஏற்கனவே ஒரு குழுவொன்று அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முன்மொழிவை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்று அதனை குறித்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவாக உருவாக்கித்தர முடியும் என தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/240987

மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்!

2 days 15 hours ago

மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்!

Published By: Digital Desk 1

15 Mar, 2026 | 07:40 AM

image

• ஜூனில் தேர்தல் முறைமை அறிவிக்கப்படும்

• புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க வாய்ப்பு

(லியோ நிரோஷ தர்ஷன்)

மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூட உள்ளது. இதன் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

இது குறித்து மேலும் தெளிவுப்படுத்துகையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது மாகாணசபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை அரச தரப்பு வெளியிட உள்ளது. மறுபுறம் மாகாணசபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறித்த குழுவுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகளில் தேர்தல் முறைமை  மற்றும் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளது.

அத்துடன் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடி இருந்தார். இந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட விடயங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வருடத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவுப்பெறுகின்றது. அந்த வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கையை பொறுத்த வரையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. மறுபுறம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் விடயத்தில் அநாவசியமான அழுத்தங்கள் வரக்கூடும் என்பதால் அதற்கு முன்னரே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/240979

போதைப்பொருள் கடத்தல் மூலம் வாங்கிய சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்

2 days 15 hours ago

போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் முடக்கம்

Mar 15, 2026 - 07:44 AM

போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

அதன்படி, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. 

பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அந்த உத்தரவு நீடிக்கப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சுமார் 400 இலட்சம் (4 கோடி) ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீட்டையும் காணியையும் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmmr4d7i1000w356pou7cte5z

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

2 days 15 hours ago

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

Mar 15, 2026 - 01:48 AM

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இதன்படி, இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.


இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.


முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):

பேருந்துகள் : 60  
மோட்டார் சைக்கிள்கள்  : 5  
வேன்கள் : 40 
மோட்டார் வாகனங்கள் : 15 
மோட்டார் லொறிகள்: 200 
காணி வாகனங்கள் : 25
முச்சக்கர வண்டிகள்: 15 
விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 
குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5


நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.


தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmqre9bq000t356pv7bj2q3a

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு

3 days 5 hours ago

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு இலங்கைக்கு

14 Mar, 2026 | 05:26 PM

image

இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது.

இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும்.

அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக் கூடிய தலையீடுகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், அவர்கள் பெற்ற அறிவை ஜப்பான் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அதேபோன்று, ஜப்பானில் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கையை பிரபல்யப்படுத்தல், கொழும்பு, அநுராதபுரம், சீகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வது போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சபுகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சிகிரியா, தம்பான, மல்வத்து மகா விகாரை, துறைமுக நகர் உட்பட பல்வேறு சிறப்புமிக்க இடங்களுக்கும் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர்.

WhatsApp_Image_2026-03-14_at_16.34.52.jp

WhatsApp_Image_2026-03-14_at_16.34.51.jp

WhatsApp_Image_2026-03-14_at_16.34.53.jp

WhatsApp_Image_2026-03-14_at_16.34.53__1

WhatsApp_Image_2026-03-14_at_16.34.53__2

WhatsApp_Image_2026-03-14_at_17.20.08__1

WhatsApp_Image_2026-03-14_at_17.20.08.jp

WhatsApp_Image_2026-03-14_at_16.34.53__2

https://www.virakesari.lk/article/240970

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!

3 days 6 hours ago

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 03:43 PM

image

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் Maha Rattana Buddhist Association அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், நேற்று 13ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்.

இதன்போது, 108 புத்தர் சிலைகளை இலங்கைக்கு வழங்கும் புண்ணியக் கருத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் அடையாளமாக அமைச்சரிடம் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால மத மற்றும் இராஜதந்திர உறவுகளை உறுதிப்படுத்துவதே இந்த விசேட திட்டத்தின் நோக்கமாகும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீகப் பிணைப்பை வலுப்படுத்துவது இதன் முதன்மை இலக்காகும்.

இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக, நுவரெலியா மாவட்டத்திலுள்ள வசதிகள் குறைந்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை வழங்கும் பணிகள் அடையாள ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. 

WhatsApp_Image_2026-03-14_at_14.31.26.jp

WhatsApp_Image_2026-03-14_at_14.31.25.jp

WhatsApp_Image_2026-03-14_at_14.31.25__1

WhatsApp_Image_2026-03-14_at_14.31.24.jp  

WhatsApp_Image_2026-03-14_at_14.31.25__2

https://www.virakesari.lk/article/240950

அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை

3 days 10 hours ago

அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை

Mar 14, 2026 - 02:25 PM

அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை

பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. 

இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது. 

வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது 'அதிக அவதானம்' செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmq3aokq000b356p1wq6hcdn

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

3 days 10 hours ago

WhatsApp-Image-2026-03-13-at-22.33.57-1.

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார்.

நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது . சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப் பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.

கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றனர்.

https://athavannews.com/2026/1468417

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்!

3 days 11 hours ago

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 11:21 AM

image

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா' முகாமில் நடைபெற்றது.

வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் கடந்த 10ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், எல்லை தாண்டிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடத்தல்களைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடல் வளங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவித்தல் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, பொலிஸ், மீன்பிடி திணைக்களம் மற்றும் மீனவ சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மீன்பிடி சூழலை உருவாக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வட பிராந்திய கடற்படை அதிகாரிகள், இலங்கை கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், மீன்பிடி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மீன்பிடி பரிசோதகர்கள் மற்றும் உள்ளூர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்படையினர் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.  

WhatsApp_Image_2026-03-14_at_11.03.08.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.10.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.11.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.12.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.13.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.14.jp

https://www.virakesari.lk/article/240930

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முன்னுரிமை: 2026 – 2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி!

3 days 11 hours ago

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முன்னுரிமை: 2026–2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 11:04 AM

image

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அது அடிமட்ட மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

'போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்கான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம்' குறித்த விளக்கமளிக்கும் கூட்டம், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரின் பங்கேற்புடன் நேற்று வெள்ளிக்கிழமை (13) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் அதிகரித்து வரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட, சான்றுகளின் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகமயப்படுத்தல் ஆகிய பணிகளைப் பலப்படுத்துவதை இந்த மூலோபாயத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிதல், தொடர்ச்சியான பராமரிப்பு, சமூகம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் குணமடைந்த நபர்களை மீண்டும் சமூகத்தில் இணைத்தல் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. ஆரம்ப சுகாதார மற்றும் வெளிநோயாளி மட்டங்களில் பரிசோதனைகளைப் பலப்படுத்துதல், வைத்தியசாலை சிகிச்சை மற்றும் கண்காணிப்புச் சேவைகளை மேம்படுத்துதல், புனர்வாழ்வு பெறுவதற்கான வதிவிட வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுக்கும் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற முக்கிய பரிந்துரைகள் இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள் இருக்கும் தாய்மார் மற்றும் சிறைக்கைதிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிரான தேசியப் பொறிமுறையைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது குடும்பங்களின் ஸ்திரத்தன்மைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் பாரிய சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகச் சட்ட அமுலாக்கத்திற்கும் புனர்வாழ்வுக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் ஊடகங்களின் பொறுப்புமிக்க செய்தி அறிக்கையிடல் ஆகியவற்றை இந்த தேசிய மூலோபாயத்தின் முக்கிய அங்கங்களாக உள்வாங்குவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், இலங்கை பொலிஸ், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-03-14_at_10.55.44.jp

WhatsApp_Image_2026-03-14_at_10.55.45__1

WhatsApp_Image_2026-03-14_at_10.55.45.jp

WhatsApp_Image_2026-03-14_at_10.55.46.jp

https://www.virakesari.lk/article/240928

‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

3 days 13 hours ago

nnnn.jpg?resize=750%2C375&ssl=1

‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் ‘அரச சுபநேரக் குழுவை’ கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை.

இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழுவின் உறுப்பினர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (10) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டது.

இதற்கிடையில், ஜோதிடர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று அரச சுபநேரக் குழுவை உடனடியாக மீளச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், அரச சுபநேரக் குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்காவிடின், தமது கட்சியின் தலையீட்டின் மூலம் மக்களுக்கான புத்தாண்டு சுபநேர பத்திரத்தை முன்வைப்பதாக ‘சர்வஜன அதிகாரம்’ அறிவித்திருந்தது.

இதற்கமைவாக, ‘சர்வஜன அதிகாரம்’ அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், உறுதியளித்தபடி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு, பெபிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவென் ரஜமகா விகாரையின் பரிவேணாதிபதி பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (14) அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ‘சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் குறித்த பிரிவெனாவுக்குச் சென்று பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரை சந்தித்தனர்.

இதற்கிடையில், பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் 17 ஜோதிடர்கள் இன்று சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவுக்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, அனைவரினதும் இணக்கப்பாட்டையடுத்து குறித்த புத்தாண்டு சுபநேர பத்திரம் வெளியிடப்பட்டது.

https://athavannews.com/2026/1468407

அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபை அனுசரணை - நடவடிக்கை எடுக்க அமைச்சர் லால்காந்தவிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து

3 days 14 hours ago

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து

Published By: Vishnu

13 Mar, 2026 | 08:16 PM

image

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டசெயலகத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரசேசெயலாளர் பிரிவிலுள்ள திரிவச்ச குளம் என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.

இலங்கையின் சட்டத்தின்படி காடுகளை அழிப்பதெனில் உரிய அனுமதிகளைப் பெறப்படவேண்டும். ஆனால். திரிவச்சகுளம் பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.

மகாவலி அதிகாரசபை தனது ஆளுகைக்குட்பட்ட இடம் என உரிமைகோரும் பகுதியிலேயே இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மகாவலி அதிகாரசபையின் ஆதரவோடுதான் திரிவச்சகுளம் பகுதியில் இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் மண்வெட்டிப்பிடி வெட்டும்போது, காடழிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நான்குவருடங்கள் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இங்கு பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இத்தகைய பாரிய சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்தோடு இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள தமிழ்மக்களின் பூர்வீக திரிவச்சகுளத்தின் கீழான வயல்நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் பத்துப்பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு பகிர்ந்தளிக்கும் அத்துமீறல் செயற்பாட்டிலும் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக குறித்த தமிழ் மக்களின் பூர்வீக திரிவச்சகுளம் வயல் நிலங்களுக்கு அருகாகவுள்ள பாரிய அடர்வனங்களும் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடு தொடர்பில் நான் நேரடியாகப் பார்வையிட்டதுடன், குறித்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையிடம் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் அங்கு சட்டவிரோதமாக காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்களுக்கெதிராக இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சட்டவிரோத செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டநடவடிககை எடுக்கப்படவேண்டும்.

இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபை பாரிய சட்டவிரோத செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்கின்றது.

எனவே அமைச்சர் லால்காந்த இவ்வாறு சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்ட மகாவலி அதிகாரசபைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விடயத்தில் தற்போதய அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுமெனவும், உரியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த விடயத்தில் மகாவலி அதிகாரசபை மரணதண்டனைக்குரிய பாரிய குற்றச்செயலைச் செய்துள்ளது. பாரிய மரங்கள், பாரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு காடழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்களும் எம்மிடமுள்ளன.

எனவே இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/240905

சர்வதேச தாய்மொழி தினம் 2026 - பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி

3 days 14 hours ago

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்புமாகும் - பிரதமர்  

13 Mar, 2026 | 05:29 PM

image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று (13) கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வு 'மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்' (Languages Unite: Diverse Voices, Shared Humanity) எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை சாரணர் சங்கம் மற்றும் இலங்கை பெண் சாரணர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் குறும்படப் போட்டித் தொடர்களில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் இதன்போது பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழி, அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நினைவூட்டும் வலிமையானதொரு நாளாக அமைகின்றது.

இந்த உலகளாவிய நினைவுகூரலானது பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தொலைநோக்கு சிந்தனையுடனான முயற்சியினால் உருவானதாகும். பங்களாதேஷின் இந்த முன்னெடுப்பானது, ஒரு தேசிய நினைவுகூரலை மனிதகுலத்தின் மொழிசார் பாரம்பரியத்தைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக மாற்றியுள்ளது.

இலங்கையின் மொழிப் பன்முகத்தன்மை எமது பல்லினப் பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பன்முகத்தன்மையானது முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலாகப் பார்க்கப்படாமல், மதிக்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்படவேண்டிய ஒரு பலமாகப் பார்க்கப்படவேண்டும்.

நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம். ஒருவருக்கொருவர் தமது சொந்த மொழிகளில் செவிமடுக்கும்போது, ஒருவருக்கொருவர் மனிதநேயத்தை உறுதிப்படுத்துகிறோம். பிளவுகள் எளிதில் வேரூன்றக்கூடிய இக்காலகட்டத்தில், மொழிப் பன்முகத்தன்மை மீதான மரியாதை, ஒத்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு பாலமாக அமையும்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள டிஜிட்டல் யுகத்தில், இணையவெளியில் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இன்று அழியும் நிலையில் உள்ளன. 

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியான ஆக்கபூர்வமான முயற்சிகள் இல்லையெனில், பல மொழிகள் மௌனமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும்.

பல்லினத்தன்மை, கலாசாரப் புரிதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட அர்ப்பணிப்புகளுடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Andalib Elias, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர சரண், இலங்கை பெண் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், இராஜதந்திரிகள், இலங்கை சாரணர் மற்றும் பெண் சாரணர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

7Q8A5860.jpg

7Q8A5900.jpg

7Q8A5903.jpg

7Q8A5920.jpg

7Q8A5922.jpg

7Q8A5930.jpg

7Q8A5971.jpg

7Q8A5974.jpg

7Q8A5993.jpg

7Q8A5983.jpg

7Q8A5999.jpg

https://www.virakesari.lk/article/240885

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் உலக வங்கி கூடுதல் கவனம் - தென்னாசியாவுக்கான உப தலைவர்

3 days 15 hours ago

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் - உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர்

13 Mar, 2026 | 04:21 PM

image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார்.

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது எனவும் தனது இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்தில் எவ்வாறான வளங்களும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கான உலக வங்கியின் உதவிகள் பிரதான 5 துறைகளின் கீழ் அமையவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்கள் தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

IMG-20260313-WA0025.jpg

IMG-20260313-WA0027.jpg

IMG-20260313-WA0026.jpg

https://www.virakesari.lk/article/240890

Checked
Tue, 03/17/2026 - 19:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr