புதிய பதிவுகள்2

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

14 hours 29 minutes ago
நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு 🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.

மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்

16 hours 37 minutes ago
மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி குறுக்கு வழிகளை நாடுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த 346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே. இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம், வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள் அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில் 99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன. இதில் மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது. மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது. 1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள் விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம். அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா? அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா? அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா? இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..? https://arangamnews.com/?p=10587

தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும்

16 hours 44 minutes ago
திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர் பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35 பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://www.supeedsam.com/198438/

முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

16 hours 47 minutes ago
முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு March 28, 2024 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அரவிந்தன் பதிவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டியே அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். https://www.ilakku.org/ex-militant-detained-for-3-days-and-ordered-to-be-interrogated/

ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

16 hours 49 minutes ago
ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் March 28, 2024 உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது. டிசெம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம். பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர். டிசெம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கி.மீ. (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹேவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹேவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீற்றர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது. https://www.ilakku.org/sri-lankans-participating-in-the-russo-ukraine-war/

திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள்

16 hours 53 minutes ago
திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் Vhg மார்ச் 28, 2024 திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27-03-2024) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4445 குடும்பங்களை திட்டம் என்ற நோக்கில் விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம். அதேபோன்று சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்படி எங்களை மக்களுக்கு தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது. மேலும் திருவண்ணாமலையில் பௌத்த மக்களுக்கு இடம்பெற்று வரும் நிகழ்ச்சி நிரல்களும்மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும் எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம். திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடம் அளிக்க மாட்டோம் எனவும் திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி இதன் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தப்பிக்குகளுக்கு வலுவூட்டும் விதத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். https://www.battinatham.com/2024/03/blog-post_160.html

ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள்

17 hours ago
ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள் (செல்வன்) ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணறு போராடத் தயாராகும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,பப்பாசி போன்ற தோட்டங்களை அவர்களின் கிணற்று நீரினை பயன்படுத்தி செய்கை பண்ணிவருகின்றார்கள். இந்தநிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச குடிநீர் திட்டத்திற்காக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஒட்டுசுட்டான் நீர்ழங்கல் விநியோகத்திட்ட அலுவலக காணிக்குள் அனுமதியற்ற முறையில் 300அடி ஆழத்தில் நிலத்தடி நீரினை உறுஞ்சி ஏனைய பிரதேச மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் விநியோகத்திட்ட அலுவலகம் அமைக்கும் போது பேராற்றில் இருந்து நீரினை கொண்டுவந்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தே நீர்வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் அலுவலகம் அமைந்த காணிக்குள் 300 அடி அழம் கொண்ட நிலத்தடி நீரினை உறுஞ்சும் குழாய் கிணறுஅமைக்கும் பணிகள் அண்மை நாட்களாக நடைபெற்று வந்ததை அறிந்த கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26.03.2024 ஒன்று கூடியபோது அங்கு கிராம சேவையாளர் மற்றும் பொலீசார் வருகைதந்து மக்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். எவரின் அனுமதியும் இன்றி நிலத்தடி நீரினை உறுஞ்சும் இந்த செயற்பாட்டிற்கு அருகில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இந்த குழாய் கிணறு அமைக்கு நடவடிக்கையினை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள். பொலிசாரின் பிரசன்னத்துடன் குழாய்கிணறு அமைக்கும் இயந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் அரச மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின்னர் முடிவிற்கு வருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.(ஏ) https://newuthayan.com/article/ஒட்டுசுட்டானில்_பாரிய_குழாய்க்_கிணறு;_போராடத்_தயாராகும்_மக்கள்

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

17 hours 29 minutes ago
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் - அமைச்சர் டக்ளஸ்

18 hours 31 minutes ago
28 MAR, 2024 | 09:56 AM வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற்றில் நிறைவு செய்யப்படாத வீடுகளுக்காக பதிவு செய்தவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீடு கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179870

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

18 hours 34 minutes ago
தேனி: தினகரன் - தங்கதமிழ்செல்வன் உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவதே. அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தவர். தேனி மக்களவைத் தொகுதி எம்.ஜி.ஆர் காலம் முதலே அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொகுதியில் இம்முறை அமமுக, திமுக இடையேயான போட்டியாக பார்க்கப்படுவதன் பின்னணி என்ன? தேனி தொகுதியில் அதிமுகவின் நிலைமை என்ன? திமுக - அமமுக உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?நாடாளுமன்றத் தேர்தல் தேனி மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய தேனிக்கு நேரடியாக சென்றது பிபிசி தமிழ். தேனி தொகுதியில் பலமான கட்சி எது? தேனி நாடாளுமன்ற தொகுதி, முன்பு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது அதில் பெரியகுளம்,தேனி, போடிநாயக்கனூர்,கம்பம், ஆண்டிபட்டி, சேடபட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இதி்ல் 1952 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் சரிபாதியாக அதாவது 7 முறை அதிமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக, சுதந்திர கட்சி, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறது. பின்னர் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகள், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES 2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி்யில் அதிமுக வெற்றது. இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி,கேஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 1,44,050 வாக்குகளைப் பெற்றார். அதிமுக பணத்தை வாரி வழங்கி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேனி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். திமுக - அமமுக உக்கிர போட்டி தேனி மக்களவை தொகுதி இம்முறை கவனம் பெற முக்கிய காரணம் பாஜக கூட்டணியின் சார்பில் அங்கு களமிறங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இவரை எதிர்த்து இந்தியா கூட்டணியி்ல் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை அமமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து மூன்றாமிடம் பிடித்தார். 2019 தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேனி மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது உள்ளார். டிடிவி தினகரன், கடந்த 1999-ல் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2009-ல் அதிமுக, 2019-ல் அமமுக என இருமுறை களம் கண்டு தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் தங்க தமிழ்செல்வனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது. மேலும் முன்பு இரட்டை இலை சின்னத்தில் நின்ற இருவரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து தற்போது வெவ்வேறு சின்னங்களில் களம் காண உள்ளனர். தேனியின் அதிமுக வேட்பாளராக 40 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய வி டி நாராயணசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுகிறார். ஆனால் தேனி தொகுதியில் டிடிவி தினகரனா? தங்கதமிழ்செல்வனா? என இருமுனைப் போட்டியாகவே பார்க்கப்படுவதாக தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் அதிமுக எப்படி இவர்களை தாண்டி வாக்காளர்களை ஈர்க்கும் என அனைவரும் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. தேனி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மாவட்டம் விவசாயம் அது சார்ந்த பணிகள் பிரதானமாக உள்ளன. இந்த தொகுதி வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், கடந்த முறை வென்ற எம்.பி எதை செய்தார், எதை செய்யத் தவறினார் என்பதை அறிந்து கொள்ள அந்த தொகுதியைச் சேர்ந்த பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது. ‘கட்சிக்குதான் வாக்கு, வேட்பாளருக்கு இல்லை’ கட்சி அடிப்படையிலேயே வாக்கு அளிப்போம் என்கிறார் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயி பெ. முத்து காமாட்சி. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது."தேர்தலில் எங்களது பகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனக் கவனித்து வாக்கை செலுத்துவேன். எனக்கு 40 வயது ஆகிறது. நான் உதயசூரியன் சின்னத்திற்கு தான் வாக்கைச் செலுத்தி வருகிறேன். ஏனென்றால் எனது பகுதியில் உள்ள திமுகவினர் எங்களது பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்கள். டிடிவி தினகரன் மீண்டும் இந்த முறை தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரிய வரும்", என கூறினார். தன்னுடைய வாக்கு அதிமுகவிற்கு கிடையாது, என்கிறார் 78 வயதான செல்வராஜ். "நான் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலிருந்து அதிமுகவின் கட்சியின் உறுப்பினராக உள்ளேன். அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி் தலைமை பொறுப்பேற்றவுடன் அங்கிருந்து விலகி விட்டேன். நான் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தான் வாக்கு செலுத்த உள்ளேன். ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்திற்கு பாலங்கள், சாலைகள் என வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது ஓ.பி.எஸ், டிடிவி தினகரனும் இணைந்து இருப்பதால் அவருக்கு தான் என் ஆதரவு." ‘அதிமுகவுக்கு அறிமுகம் தேவையில்லை’ அதிமுக வேட்பாளர் வெளியே தெரியவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் எளிய மனிதரான நாராயணசாமிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் உள்ளது என்கிறார் தேனி பஜாரில் நகைப்பட்டறை வைத்திருக்கும் சிதம்பரம். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது,"தேனி நாடாளுமன்ற தொகுதியில் தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வேட்பாளராக வெளியில் தெரியலாம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து போட்டியிட்டாலும் அதிமுகவிற்கான வாக்குகள் அப்படியே தான் இருக்கும், அது எங்கேயும் சிதறிவிடாது," எனத் தெரிவித்தார். "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எவ்வளவோ திட்டங்களை தேனிக்கு செய்து இருக்கலாம். அவர் செய்யத் தவறிவிட்டார். குறிப்பாக சுருளிப்பட்டியில் திராட்சை உலர்த்தும் தொழிற்சாலை, பெரியகுளத்தில் மாம்பழம் கூலிங் செய்யும் தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்" என்றார் சிதம்பரம். தங்கதமிழ்ச்செல்வன் பல கட்சிகள் மாறி இருப்பதால் அவருக்கு வாக்களிக்க மக்கள் யோசிப்பார்கள் என பிபிசியிடம் பேசியவர்களில் சிலர் தெரிவித்தனர். "தற்போதைய நிலவரப்படி, திமுக - அமமுக இடையே போட்டி இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக வேட்பாளர் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கினால் தேனி தொகுதியில் நிச்சயம் மும்முனை போட்டி இருக்கும்", என்கிறார் வியாபாரியான சிதம்பரம். மகளிர் வாக்கு யாருக்கு? தன் கணவர் சொல்லும் கட்சிக்கே இதுவரை வக்களித்து வந்துள்ளேன். இம்முறையும் அப்படியே செய்வேன், என்கிறார் தேனி அரப்படிதேவன்பட்டியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அபர்ணா. "நாங்கள் தேர்தலை பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது. எங்கள் தொகுதியில் டிடிவி தினகரன், தங்கதமிழ் செல்வன் போட்டியிடுவதாக எனது தந்தை கூறினார். தேர்தல் சமயத்தில் என் கணவரோ, அப்பாவோ எந்த வேட்பாளர் நம் தொகுதிக்கு நல்லது செய்வார்கள் என்று என்னிடம் சொல்வார்கள். அதை வைத்து என் வாக்கை செலுத்துவேன்," என தெரிவித்தார். தேனி தொகுதியில் பல்வேறு பெண்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர்களின் கருத்தும் அபர்ணாவை கருத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது. தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் யார்? தேர்தல் களத்தில் என்ன செய்கிறார்கள்?26 மார்ச் 2024 'தலைவி' கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டி - சினிமா முதல் அரசியல் வரை என்ன சாதித்தார்?25 மார்ச் 2024 ‘மீண்டும் போட்டியிட விரும்பினேன்’ பட மூலாதாரம்,P.RAVINDHRANATH /FACEBOOK "தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட விரும்பினேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும், மூத்த தலைவர்களின் விருப்பத்தாலும் டி.டி.வி. தினகரன் போட்டியிட வழிவிட்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்", என்கிறார் தேனி தொகுதி எம்பியான ஓ.பி ரவீந்திரநாத். "தேனி நாடாளுமன்றத் தொகுதிக்காக கடந்த 5 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் 550 கோடி ரூபாயில் மதுரை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில்பாதை திட்டம் முடிக்கப்பட்டது மிக முக்கியமான திட்டம். இது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது." என்றார் அவர். திமுக vs அமமுக தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த 2 முறை நல்லாட்சி கொடுத்த மோதி மூன்றாவது முறையாக வரவேண்டுமென நாங்கள் சேர்ந்து கூட்டணியில் நிற்கிறோம். மோதி தலைமையிலான ஆட்சிக்கு அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து சென்றால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வருவார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ் செல்வன் கடந்த முறை அமமுகவில் நின்று போட்டியிட்டவர். எனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெறுவார். தேனியில் அதிமுக வேட்பாளர் யாரென்று கூட மக்களுக்குத் தெரியாது”, எனக் கூறினார் "ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். எனவே ஓ.பி.எஸ் ராமநாதபுரத்திலும், டி.டி.வி. தினகரன் தேனியிலும் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் தரப்பு வெற்றி உறுதியாகியுள்ளது" என்று ரவீந்திரநாத் தெரிவித்தார். தினகரன் கூறுவது என்ன? தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பரப்புரைகளில் " கடந்த 15 ஆண்டுகளாக வனவாசம் சென்றது போல நான் தேனி மாவட்டத்தை விட்டு சென்றாலும் மீண்டும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன். இந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தற்பொழுது நமக்கு ஜெயலலிதாவிற்கு பதிலாக நரேந்திர மோதி கிடைத்திருக்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல் என்பதால் அவரது கூட்டணியில் போட்டியிடும் எனக்கு உங்களது வாக்கினை செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஸ்டாலினை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அவர் பிரதமர் ஆகிவிட முடியுமா?", என கேள்வியை முன் வைக்கிறார், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமமும் எனக்கு நன்றாகத் தெரியும் மக்களின் தேவையை நான் நிறைவேற்றுவேன் என பொதுவான பிரச்சாரமே”, செய்கிறார். தங்கதமிழ்செல்வன் பிரசாரம் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் தனது பரப்புரைகளில் டி.டி.வி தினகரை குறிவைத்து விமர்சனத்தை முன்வைக்கிறார். “தேனியில் எனக்கு எதிராக ஒருவர் போட்டியிடுகிறார் அவர் இந்த மாவட்டத்தை சேராதவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவர், இன்று மீண்டும் வந்திருக்கிறார். அவர் மீது இருக்கும் வழக்கிலிருந்து தப்பிக்க பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றால், அவரை எளிதில் நீங்கள் தொடர்பு கொள்ள இயலாது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றி வெற்றியை வசப்படுத்தியவர்.. அதேபோல தேனியிலும் செய்துவிடலாம் என நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.“ அதிமுக வேட்பாளர் கூறுவது என்ன? அதிமுக தரப்பில், மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவில் சார்பாக போட்டியிட்டு விலகிச் சென்றவர்கள் என்ற பரப்புரை முன்வைக்கப்படுகிறது. “தேனியில் இந்த முறை போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள். மக்கள் உண்மையான அதிமுக யார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்,” என்று கூறி அதிமுக வேட்பாளர் வி டி நாராயணசாமி வாக்கினை சேகரிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/ckrxej0dlzpo

சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்

18 hours 38 minutes ago
இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்பு தொடரும் - பிரதமர் தினேஷிடம் சீன ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: DIGITAL DESK 3. 28 MAR, 2024 | 09:38 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் சீ சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179866

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

18 hours 41 minutes ago
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை! நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297373
Checked
Thu, 03/28/2024 - 22:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed