புதிய பதிவுகள்2

வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்

10 hours 59 minutes ago
யுத்தம் நடந்த காலத்தில் நடந்த உண்மைகளை யாரும் நேர்மையாக எழுதினால் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பின் ஆதரவாளர்களும் அதை ரசிக்கப்போவதில்லை என்பதுடன் அவர்களை அது கோபப்படுத்தும். இருதரப்பும் தமது வீரப்பிரதாபங்களை மட்டுமே பீற்றிக்கொள்ளும். இவர்களை எல்லாம் கடந்த, ஓரளவுக்காவது மக்களை நேசிக்கும் அரசியலாளர்கள் உருவாகும் போதே இனவாதம் ஒழிந்து காத்திரமான அதிகாரப்பகிர்வு ஏற்படலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படியான நிலைக்கான சாத்தியக்கூறுகள் கூட தெரியவில்லை.

குமாரசாமி அண்ணையுடன்... தமிழ்சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.

11 hours 6 minutes ago
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர் நேற்று வந்து இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளாமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார். பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️

கிளிநொச்சியில் 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

11 hours 16 minutes ago
Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 05:34 PM “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 04 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1,700 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார். இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/184460

யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்

11 hours 19 minutes ago
போன மாதம் நான் ஊரில் நின்ற போது, மந்திகை ஆஸ்பத்திரியில் பணி புரியும் ஒரு இளம் வைத்தியருடன் கதைத்திருந்தேன். சில காலம் முன் வரை தங்களின் குழுவில் எட்டு வைத்தியர்கள் வேலை செய்ததாகவும், ஆனால் இப்பொழுது மூன்று வைத்தியர்கள் மட்டுமே அந்தக் குழுவில் இருப்பதாகவும் சொன்னார். அதனால் தாங்க முடியாத வேலைச் சுமை என்றார். எல்லோரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு சென்று விட்டதாகச் சொன்னார். இந்த இளம் வைத்தியரும் IELTS பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார். இது அங்கே மருத்துவ துறையில் இன்றிருக்கும் மிகப் பெரிய பிரச்சனை.

யாழில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

11 hours 22 minutes ago
யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் வாங்கிய ரோல்ஸில் துருப்பிடித்த கம்பித் துண்டொன்று காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த 21ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால் கடைகளில் உணவுகளைக் கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/302386

வடக்கு ஆளுநர் மூத்த அதிகாரிகளை வெறுக்கிறார் - ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் எம்பி காட்டமான கடிதம்

11 hours 27 minutes ago
Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 03:47 PM வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர ஜிஏக்கள் ஓய்வு பெற்று சுமார் 03 மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. கூடுதல் GAக்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளனர். தகுதியான தமிழ் சிறப்பு தர SLAS அதிகாரிகள் நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அதிகாரிகளின் நியமனங்களை அரசியல் தடுக்கக் கூடாது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் 04 செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுகாதாரம், கல்வி மற்றும் மகளிர் விவகார அமைச்சகங்கள். ஆனால் கிரேடு 1 அதிகாரிகள் செய்கிறார்கள். கல்வி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளை விவசாய அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படுகின்றார். திரு. குகநாதன், திரு. ஸ்ரீ, திருமதி. எலிலரசி மற்றும் திரு. அருள்ராஜ் போன்ற மூத்த சிறப்பு அதிகாரிகளும், அரசியல் காரணங்களுக்காக, GAக்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு, பறிக்கப்படுகிறார்கள். முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு மூத்த SLAS அதிகாரிகளை நியமிப்பதை கெளரவ கவர்னர் வெறுக்கிறார். அதற்கு பதிலாக அவர் அந்த பதவிகளை நிர்வகிக்கும் இளைய கூட்டாளிகளை விரும்புவதாக தெரிகிறது. இதனால் இந்த சிரேஷ்ட SLAS அதிகாரிகளின் பெறுமதியான சேவைகளை பொதுமக்கள் இழக்கின்றனர். நிரந்தர உத்தியோகத்தர்களை GAக்கள் மற்றும் செயலாளர்களாக விரைவில் நியமிக்க மாண்புமிகு உங்களது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/184453

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

11 hours 29 minutes ago
இப்போது ஒரு கேள்வி வருகிறது எமது நிலத்தை ஆக்கிரமித்து புத்த மதத்தை புகுத்துகின்றார்கள் என்றும் ஒரு குரலும் போராட்டமும் அங்கே இருந்து வருகிறது இல்லையா? அந்த அபலக்குரலுக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம் அல்லவா? அந்த அபலக்குரலுக்கு அங்குள்ளவர்களின் இச்செயல் சாதகமானதாக இல்லையா? இப்போது இதில் எதை நாம் ஆதரிப்பது???????

காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்

11 hours 32 minutes ago
இதில் இருக்கும் நாடுகள், இடங்கள் மற்றும் மனிதர்களின் பெயரை மாற்றி விட்டால், அப்படியே எங்களுக்கு நடந்தத அதே கதை தான் இது. எத்தனை அமைப்புகளும், நிறுவனங்களும் இன்னும் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.........'நம்பிக்கை இழந்து விட்டார்கள்' என்று ஒரு கட்டுரை வந்திருந்தது, வேறு என்ன தான் செய்வது, யார் மீது நம்பிக்கை வைப்பது.......😌

மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்

11 hours 33 minutes ago
சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்தது ஏன்? படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட ரம்யா (இடதுபுறம்), பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை, கீழ் தளத்தின் ஷன் ஷேடில் சிக்கியிருந்த காட்சி (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 31 நிமிடங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் யாரோ எங்கோ பகிர்ந்த வெறுப்பு கருத்துகள் சென்னையில் மாடியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் உயிரை பறித்துள்ளது. சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் வெங்கடேஷ் (37), இவரது மனைவி ரம்யா (33). ஐ.டி துறையில் பணியாற்றி வந்த இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளன. கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரம்யா உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராத விதமாக நான்காவது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அருகில் குடியிருந்தவர்கள் ஜன்னல் கம்பியில் நின்றபடி, பெரும் போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகத்தில் பரவியது. பகிரப்பட்ட வீடியோக்களில், குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்ததற்காக அவரது தாயைக் குற்றம்சாட்டி வெறுப்பு கருத்துகளை பலரும் பதிவிட்டிருந்தனர். இதுபோன்ற இணையவழி தொல்லையால் (Cyber bullying) ரம்யா மன ரீதியில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளார். இந்த மன உளைச்சலில் இருந்து மீள, கோவையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த ரம்யா, அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறியும் பிபிசி தமிழ் முயற்சியில், ரம்யா மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழி தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மன உளைச்சல் (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதீத மன உளைச்சல் தான் தற்கொலைக்கு காரணம்! படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட ரம்யா வழக்கு விசாரணை அதிகாரியான காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், ‘‘ரம்யா அதீத மன உளைச்சலில் இருந்ததால் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார்,’’ என்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘குழந்தை விழுந்த சம்பவத்தால் வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதியினர் மன விரக்தியில் இருந்துள்ளனர். மன அமைதிக்காக கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரம்யா குடும்பத்துடன் வந்துள்ளார். ஆனாலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையாமல் அவர் அதீத மன அழுத்தத்தில் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். ரம்யா குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் இவை தெரியவந்துள்ளன,’’ என்கிறார் ஆய்வாளர் ராஜசேகரன். குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் அதாவது மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்த (Postpartum Depression) பாதிப்பில் ரம்யா இருந்ததாகவும், குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிறகு மன உளைச்சல் அதிகரித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ரம்யாவின் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார். ‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பின் மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,’’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு,சென்னையில் குழந்தை மீட்பு ரம்யாவின் உலகம் எத்தகையது? ‘ரம்யா தைரியமான பெண் அவர் தற்கொலை முடிவை எடுப்பார் என நாங்கள் நினைக்கவில்லை என, நம்மிடம் பேசிய ரம்யாவின் சித்தப்பா கூறினார். தனது பெயர் வெளியிட வேண்டாமென்பதை நம்மிடம் கேட்டுக் கொண்ட அவர், ‘‘ரம்யா குடும்பத்திலும், உறவினர்களிடமும் அதீத அன்பு கொண்டவர். சிறு வயது முதலே தைரியமாக இருப்பவர். குடும்பத்தில் யாருக்கு பிரச்னை என்றாலும் தீர்வு சொல்லக்கூடிய பக்குவம் உள்ளவர். மாற்று சாதியை சேர்ந்தவரை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அனைத்தும் நன்றாக சென்ற நிலையில் ரம்யா தற்கொலை செய்வார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை,’’ என்கிறார் அவர். ரம்யாவின் தந்தை அரிசி வியாபாரம் செய்பவர். அவர்களின் குடும்பமே அதிக கடவுள் பக்தி உடையது. குழந்தை மீட்கப்பட்ட பின் ரம்யாவின் தந்தை கெடா வெட்டி சிறப்பு பூஜையே நடத்தியுள்ளார் என்கிறார் ரம்யாவின் சித்தப்பா. மேலும் தொடர்ந்த அவர், ‘‘எங்கே யாரோ பதிவிட்ட வெறுப்பு கருத்துக்கள் எங்கள் மகள் உயிரை பறித்துள்ளது. ஏதாவது சம்பவம் நடந்தால் இனியாவது அனைவரும் சம்பவத்தில் நடந்த நன்மைகளை குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு மன ஆறுதல் தரும் வகையில் பேச முன்வர வேண்டும். வெறுப்பு கருத்துகளால் யாருக்கு என்ன பயன்? பாதிப்பு தான் அதிகமாகிறது’’ என வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தார். ‘யாரென்றே தெரியாதவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும், யார் மீது வழக்கு தொடுப்பது?’ என்கிறார் ரம்யாவின் சித்தப்பா. ‘எந்த தாயும் குழந்தையை பாதிப்பில் விடமாட்டார்கள்’ ‘சைபர் ஃபுல்லியிங்’ காரணமாக ரம்யா தற்கொலை செய்தது தொடர்பாக சில பெண்களிடம் நாம் பேசினோம். நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த விமலா, ‘‘எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. எந்த தாயும் தன் குழந்தையை ஆபத்தான சூழலில் விடமாட்டார். சிறிதாக காயம் ஏற்பட்டாலே பதறிப்போவார்கள், அது தான் தாய்மை உணர்வு. குழந்தை மாடியில் இருந்து விழுந்த போது மனரீதியில் ரம்யா மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு ஆதரவாக, மன உறுதி கொடுப்பது போல் தான் அனைவரும் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரின் தாய்மை குறித்து பலரும் விமர்சித்ததை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது,’’ என்றார். நம்மிடம் பேசிய மற்றொரு பெண்ணான அமுதா, ‘‘அப்படி ஒரு சம்பவத்தில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது மிகப்பெரிய விஷயம். உயிருடன் அந்த குழந்தை தாய்க்கு மீண்டும் கிடைத்தது வரம். ஆனால், அந்த தாயின் மனநிலையை பாதிக்கும் வகையில் பதிவிடப்பட்ட கருத்துகளால் இன்று அந்த குழந்தைக்கு தாய் இல்லாமல் போய்விட்டது. உண்மையில் குழந்தை பிறந்து அதை வளர்க்கும் போது தாய்மார்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். இப்படியான சூழலில் வெறுப்பு கருத்துகள் அவரை அதிகம் பாதித்திருக்கும்,’’ என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்தே ரம்யா அதிக மன உளைச்சலில் இருந்ததாக புகாரில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பின் தீவிரம் என்ன? "பிரசவத்திற்கு பிறகு பெண்களில் 3 சதவீதம் பேர் தான் மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்” என்கிறார், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையின் இயக்குநர் கலைவாணி. நம்மிடம் பேசிய இயக்குநர் கலைவாணி, ‘‘இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பிரசவத்துக்கு பிறகான பதற்றம் (Postpartum Blues) எனப்படும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பிரசவித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி, மயக்கம், குழந்தையை வளர்ப்பு தொடர்பான பயம், வறுமை, குடும்ப ஆதரவு போன்ற பல எண்ணங்கள் மனதில் தோன்றி, அவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பிரசவத்துக்கு பிறகான பதற்றம் (Postpartum Blues) என அழைக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் `போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ பாதிப்பு இருந்தால் அது, மகப்பேற்றுக்கு பிறகான மன இறுக்கம் (Postpartum depression) என அழைக்கப்படும். இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் அதிகபட்சமாக 1 –2 சதவீதம் பேருக்கு தான் இத்தகைய பாதிப்பு ஏற்படும். பிரசவித்த தாய்மார்கள் இரண்டு வாரத்திற்கு மேல், சோர்வாக, மன உளைச்சலில் தனிமையாக இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடமும், மனநல மருத்துவரிடமும் ஆலோசனை பெற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த பாதிப்பை கண்டறிந்து மனநலத்தை காக்க முடியும்,’’ என்கிறார் அவர். மன இறுக்கம் தீவிரமடைந்தால் தாய் தன் குழந்தையை கொலை செய்யும் அளவிற்கான சம்பவங்களும், தாய் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளதாகவும், அந்த அளவிற்கு இது தீவிர மன உளைச்சலை தரும் எனவும் தெரிவிக்கிறார் மருத்துவர் கலைவாணி. இந்தியாவில் மகப்பேறுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பு கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத குறைபாடுகளில் ஒன்றாகும் என சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ரம்யாவின் உயிரைப் பறித்த பலவித மன அழுத்த பாதிப்புகள்! படக்குறிப்பு,மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி ரம்யா ‘இணையவழித் தொல்லை, பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் மட்டுமின்றி அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்கிறார், கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி. நம்மிடம் பேசிய அனிஷா, ‘‘ஒருவரை மையப்படுத்தி அவரை தவறான முறையிலோ, குற்றம்சாட்டியோ அல்லது அவரின் சமூக அடையாளத்தை கொச்சைப்படுத்தும் படி விமர்சிப்பதை ‘இணையத் தொல்லை’ (Cyber Bullying) என்கிறோம். இது நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அதிகரிப்பதுடன், இதனால் மன நலம் பாதிப்போரும் அதிகரித்து வருகின்றனர்’’ என்கிறார் அவர். நம்மை அதிகம் பாதிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதை அடிக்கடி நினைத்து பார்த்து நாம் மனவிரக்தி அடைவதையும், நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொள்வதையும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) என அழைக்கப்படுகிறது. தற்கொலை செய்த ரம்யாவும் இந்த பாதிப்பையும் எதிர்கொண்டிருப்பார் என்கிறார் அனிஷா. அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தம் ( Post Traumatic Stress) மேலும் தொடர்ந்த அனிஷா, ‘‘ரம்யா தைரியமான பெண் என அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தாலும், குழந்தை மீட்கப்பட்ட சந்தோஷத்தை விட ரம்யா குறித்தான மோசமான கருத்துகள் அவரை மிகவும் பாதித்துள்ளது. இது அவரது தற்கொலைக்கான காரணமாக அமைந்திருக்கும்,’’ என்கிறார் அவர். அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் மனநல ஆலோசகர் அனிஷா விளக்குகிறார். ‘‘ரம்யாவிற்கு நடந்ததைப்போல சம்பவம் நடந்தால், சில வாரங்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தன் மன உறுதியை அதிகப்படுத்தி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களிடம் அதிகம் பேசுவது இந்த பாதிப்பில் உள்ளோரின் மனநிலையை பலப்படுத்த உதவும். யாரேனும் இப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அவர் உடனடியாக மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி, அவர்களை கண்காணித்து அவர்களின் மனநலத்தை பாதுகாப்பது மட்டுமே அவரை காப்பதற்கான தீர்வு,’’ என்கிறார் மனநல ஆலோசகர் அனிஷா. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய இணைய பயனாளர்களில் 38% பேர் ‘சைபர் ஃபுல்லியிங்’ செய்பவர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்! இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ‘சைபர் ஃபுல்லியிங்’ பாதிப்பை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், சமீப நாட்களாக சாமானிய மக்களும் இந்த பாதிப்பை எதிர்கொள்வதும், அதனால் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. ரம்யாவிற்கு முன்னரும் இந்தியாவில் சில மாநிலங்களில், ‘சைபர் ஃபுல்லியிங்’ காரணமாக சிலர் தற்கொலை செய்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயின் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பிரியன்சு யாதவ், பலவித மேக்கப் அணிந்து ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வந்தார். 2023 நவம்பர் மாதம் அவர் பெண் வேடம் அணிந்து ரீல்ஸ் வெளியிட்ட போது, பலரும் பிரியன்சுவை கிண்டல் செய்து வெறுப்பு கருத்துக்களை பகிர்ந்தனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த முதல் மாற்றுப்பாலின உடற்கட்டமைப்பாளராக (bodybuilder) இருந்தவர் பிரவீன் நாத். இவர் 2021 மாநில அளவிலான bodybuilding போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதுடன், மிஸ்டர் கேரளா போட்டியிலும் வென்றிருந்தார். மிஸ் மலபார் அழகுப்போட்டியில் வெற்றி பெற்றிருந்த மாற்றுபாலினத்தை சேர்ந்த ரிஷானா ஐசு திருமணம் செய்தார். இவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால், மனமுடைந்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். ‘சைபர் ஃபுல்லியிங்’ இந்தியாவில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது. தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளை நாம் சேகரித்த போது, இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான இணைய வழித்தொல்லை, (சைபர் ஃபுல்லியிங்) சம்பவங்கள் தொடர்பாக 2022ம் ஆண்டில் மட்டுமே 9,821 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2018ம் ஆண்டி 8,986 வழக்குக்கள் பதிவாகியிருந்தன. இந்தியாவில் பத்தில் நான்கு இணைய பயனாளர்கள் ‘இணையவழித் தொல்லை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த இணைய பயனாளர்களில் 38 சதவீதம் பேர் ‘இணையவழித் தொல்லை’ செய்வதாகவும், இதில் இளைஞர்கள் தான் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர். சிலர் ‘இணையவழித் தொல்லை’, ‘பப்ளிக் ஷேமிங்’கில் ஈடுபடுவது ஏன்? சமூக வலைதளத்தில் ‘சைபர் ஃபுல்லியிங், பப்ளிக் ஷேமிங்’ செய்வது ஒருவித மனநோய் என்கிறார், கோவை குமரகுரு கல்லூரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் தாரணி. இதை விளக்கிய உதவிப்பேராசிரியர் தாரணி, ‘‘சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நிரூபிக்க நினைத்து தான், எது நடந்தாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு மற்றும் கருத்துகளை பகிர்கின்றனர். ஒரு சம்பவம் தொடர்பாக அல்லது ஒரு நபர் தொடர்பாக கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு கருத்துகளை பகிர்வதை பாராசோஷியல் உறவு (Parasocial Relationship) என்கிறோம். ஒருவர் மீது கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் தன் இருப்பை பதிவு செய்ய நினைத்து தான் பலரும் ‘சைபர் ஃபுல்லியிங்’, ‘பப்ளிக் ஷேமிங்’ செய்கின்றனர், இது ஒரு வித மனநோய்,’’ என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘இணையவழித் தொல்லை’ குறித்து சட்டம் சொல்வது என்ன? சமூக வலைதளங்களில் இணையவழித் தொல்லைகளால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென விளக்கியுள்ளார், கோவை மாவட்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அருண். நம்மிடம் பேசிய அருண், ‘‘சமூக வலைதளங்களில் ‘சைபர் ஃபுல்லியிங், பப்ளிக் ஷேமிங்’ போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும், அவதூறு வழக்கு பதிய முடியும், பெண்களாக இருந்தால் பெண் வன்கொடுமை சட்டத்திலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அது தெரிந்த நபர்கள் மூலம் நடந்திருந்தால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும், அறிமுகம் இல்லாத நபர்கள் என்றால் அவர்கள் மீது புகார் கொடுத்தாலும், குற்றவாளியின் சமூக வலைதள கணக்கை கண்டறிந்து, அவர்களின் ஐ.பி முகவரி (Internet Protocol), அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இவர்களுக்கு அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். ‘இணையவழித் தொல்லை, பப்ளிக் ஷேமிங்’ போன்றவை ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தாலோ, ஒருவரின் சமூக அந்தஸ்தை குறைத்தாலோ, அவதூறு வழக்கு மட்டுமின்றி, தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கும்’’ என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/ce55yxdz7gdo

யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்

11 hours 36 minutes ago
இவர்களுக்கு தங்களின் பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலுள்ள குறை நிநைகளையே தீர்ப்பதற்கு முடியவில்லை...அதற்குள் யாழ்ப்பாணத்திற்கு போய் விட்டார்கள்..தம்புள்ள என்று தான் நினைவு .அங்குள்ளை வைத்தியசாலையில் கறள் பிடித்த பெட் தானாம் இருக்கிறது..அந்த கறள் பிடித்த நோயளார் காவும் பெட்டில் எந்தப் பெரிய வலியோடு வந்தாலும் கர்ப்பிணி பெண்களும் போக வேணும்..மொத்தமாக 3 பெட் தான் உள்ளதே.இது நேரில் பார்த்த ஒரு உறவினர் சொன்னது..உடனுமே ஒரு பெட் வாங்கிக் கொடுக்கபட்டும் இருக்கிறது.இதை எல்லாம் தீர்த்து வைக்க முடியாத ரணில் ஏன் யாழ்ப்பாணம் போனார்.

காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்

11 hours 41 minutes ago
பட மூலாதாரம்,FAMILY HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், அமைரா மதாபி பதவி, பிபிசி அரபு சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒருபுறம் காஸாவில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மறுபுறம் 13,000த்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலரும் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், பல மனிதநேய சேவை குழுக்களும், அவர்கள் வலுக்கட்டாயமாக இங்கிருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அப்படியாக தொலைந்தவர்களில் ஒருவரான முஸ்தஃபாவை, அவரது சகோதரர் அகமது அபு துக் பல மாதங்களாக தேடி வருகிறார். போரிலிருந்து தப்பிப்பதற்காக தெற்கில் உள்ள நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தில் இவர்களது குடும்பம் தஞ்சம் புகுந்துள்ளது. ஆனால் இவர்களது பக்கத்து வீடு தீயில் எரிவதாக கேள்விப்பட்ட முஸ்தஃபா தங்களது வீட்டின் நிலை குறித்து பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால், அதற்கு பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. "எங்களால் முடிந்த வரை அவரை தேடினோம்" என்கிறார் அகமது. இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்பு வீடுகள் இருந்த இடத்தில், தற்போது எரிந்த குப்பைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எங்கள் பகுதி முழுவதும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு, பல மாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன." ஆம்புலன்ஸ் டிரைவரான முஸ்தஃபாவின் உடலை எங்கெங்கோ தேடியும் பலனில்லை. காஸாவில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்த உடல்கள் தொடங்கி அருகில் இருந்து குழிகள் உட்பட அனைத்து இடத்தில் தேடியும் முஸ்தஃபாவின் உடல் கிடைக்கவே இல்லை. மருத்துவமனைக்கு வரும் ஏதாவது ஒரு அவசர ஊர்தியிலாவது அவரை கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் தங்கள் குடும்பம் இருப்பதாக கூறுகிறார் அகமது. காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐத் தாண்டியுள்ளதாகக் கூறுகிறது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அடிப்படையிலானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர் தொடங்கியதற்கு பிறகு காஸா மக்கள் மற்றும் ஹமாஸ் வீரர்கள் உட்பட 13,000 பேர் எந்தவித தடயமும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக, யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. 10,000 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனரா? முஸ்தஃபாவைப் போலவே காணாமல் போன ஏராளமான நபர்களின் குடும்பங்கள் கடந்த ஏழு மாதங்களாக அவர்களது நிலை குறித்து எந்த தகவலும் இன்றி தவித்து வருகின்றனர். அக்டோபர் 7, 2023இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய முன்னறிவிப்பற்ற தாக்குதலில் 1200 பேர் இறந்தது மட்டுமின்றி 252 பேர் பணையக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். போர் தொடங்கியதற்கு பிறகு காஸா மக்கள் மற்றும் ஹமாஸ் வீரர்கள் உட்பட 13,000 பேர் எந்தவித தடயமும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக, ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும் யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. அதிகாரப்பூர்வ பாலஸ்தீன பாதுகாப்பு சேவையின் ஒரு பகுதியாக காஸாவில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்பு பிரிவு, காணாமல் போனவர்களில் 10,000 பேர் வரை இடிபாடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று கூறுகிறது. ஐ.நா. மதிப்பீட்டின்படி, காஸாவில் 37 மில்லியன் டன் இடிபாடுகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழ் பல உடல்கள் புதையுண்டுள்ளன. இது தவிர, காஸாவில் சுமார் 7,500 வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆங்காங்கே உள்ளன. இது நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலாக உள்ளது. சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ள உடல்களை மீட்பதற்கு தன்னார்வலர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களிடம் சாதாரணமான உபகரணங்களே உள்ளதால் அவர்களால் மீட்புப்பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதைத்தாண்டி, இந்த முறை காஸாவில் மோசமான வெப்பநிலை நிலவுவதால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் பிணங்களில் இருந்து ஏதாவது தொற்று நோய் பரவலாம் என்றும் அச்சுறுத்தல் நிலவுகிறது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களை மீட்க உதவிக்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அனுபவம் உள்ள நாடுகளின் சர்வதேச உதவியை கோரியுள்ளது சிவில் பாதுகாப்பு அமைப்பு. இஸ்ரேலிய ராணுவம் கைது செய்துள்ளதா? அப்துல் ரஹ்மான் யாகி தனது குடும்பத்தை இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கான சவாலான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். மத்திய காஸாவில் உள்ள டெய்ர் அல்-பாலா பகுதியில் இவரது குடும்பத்தின் மூன்று அடுக்கு மாடி வீடு இருந்தது. பிப்ரவரி 22 ஆம் தேதி, இந்த வீட்டின் மீது ஏவுகணை விழுந்த போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் அந்த வீட்டிற்குள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து 17 பேர் மட்டுமே இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டதாகவும், அதிலும் கூட முகங்கள் மோசமாக சிதைந்திருந்ததால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார் யாகி. மேலும், "வீட்டில் இருந்த பெரும்பாலான குழந்தைகளின் உடல்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார் அவர். இதுபோன்று சிக்கியுள்ள உடல்களை மீட்க உதவிக்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அனுபவம் உள்ள நாடுகளின் சர்வதேச உதவியை கோரியுள்ளது சிவில் பாதுகாப்பு அமைப்பு. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, காஸாவுக்குள் கனரக இயந்திரங்களை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் தர சர்வதேச அமைப்புகளையும் அது கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அதன் மீதான எந்த ஒரு பதிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போனதாகக் கருதப்படும் நபர்கள் அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று நம்புகிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International). இதைத்தான் 'அரச அமைப்புகளால் காணாமல் ஆக்கப்படுவது' என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.. யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மதிப்பீட்டின்படி, காஸாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் அவர்களது குடும்பத்தினருக்குக் கூட தெரியாமல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை காவலில் வைத்திருக்கும் நாடு அந்த நபரின் அடையாளம் மற்றும் அவரது இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கண்டிப்பாக அவரை சார்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது. அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு பிறகு, இதுபோன்ற தடுப்பு காவல் மையங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் வருவதையும் தடை செய்துள்ளது இஸ்ரேல். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை சந்திக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இதுவரைஅனுமதி கிடைக்கவில்லை" என்று செஞ்சிலுவை சங்கம் கூறுகிறது. 'வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள்' காசாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை அதிகாரி ஹிஷாம் முஹன்னா பேசுகையில், அந்த அமைப்பு "தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களை சந்திக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இதுவரைஅனுமதி கிடைக்கவில்லை" என்று கூறினார். அதேபோல் இஸ்ரேலிய பணயக்கைதிகளை சந்திக்கவும் ஹமாஸிடம் அனுமதி கிடைக்கவில்லை என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையிடம் பிபிசி கருத்து கேட்ட நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் சதனது எக்ஸ் பக்கத்தில், “ஹமாஸால் கடத்தப்பட்ட பணையக்கைதிகள் குறித்து எந்த தகவலும் இஸ்ரேலுக்கு கிடைக்காத நிலையில், இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் வீரர்கள் குறித்து செஞ்சிலுவை சங்கமும் எந்த தகவலையும் சேகரிக்க கூடாது” என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். மத்திய காஸாவின் மற்றொரு நகரமான அல்-ஜவைடாவில் உள்ள மற்றுமொரு குடும்பம், காணாமல் போன தங்கள் இரண்டாவது மகனான முஹம்மது அலியைத் தேடி வருகிறது. "வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில்" தங்களது மகனும் இருக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களது மகன் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் காவலில் இருப்பதாக யாரோ சொல்லும் வரை , முஹம்மது அலியின் தாயார், தனது மகனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவனைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியாக முஹம்மது அலியை பார்த்தவர்கள் அவர் உயிரோடு இருந்ததாகவும், அதற்கு பின் என்ன ஆனது என்று எந்த ததகவலும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான இணையவழி படிவத்தை உருவாக்கியுள்ளது. நம்பிக்கையில் தொடரும் தேடல் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, வடக்கு காஸாவின் ஜபாலியாவில் உள்ள பள்ளியில் தஞ்சம் அடைவதற்காக டிசம்பர் 23 அன்று அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து முகமதுவைக் காணவில்லை. ஆனால் அந்த பள்ளிக்குள் நுழைந்த இஸ்ரேலிய வீரர்கள், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற உத்தரவிட்டதாக முகமதுவின் மனைவி அமானி அலி கூறுகிறார். மேலும், முகமதுவைத் தவிர அனைத்து ஆண்களும் அன்று இரவே திரும்பிவிட்டதாகவும், ஆனால் முகமது மட்டும் திரும்பவில்லை என்றும் கூறுகிறார் அவரது மனைவி. அவருக்கு என்ன நடந்தது, எங்கு சென்றார் என்று யாருக்குமே தெரியவில்லை. தனது கணவர் இறந்துவிட்டதாக கருதுவதா அல்லது இஸ்ரேலிய படையின் காவலில் இருக்கிறார் என்று நினைப்பதா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அமானி கூறுகிறார். இருப்பினும், இஸ்ரேலிய படைகளால் கைப்பற்றப் பட்டிருந்தால் அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறுகிறார். ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான இணையவழி படிவத்தை உருவாக்கி, அக்டோபர் 7க்குப் பிறகு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உறுதியான பதிவு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதிலிருந்து, சரியான தகவல் கிடைக்கும் வரை காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து அவர்களை தேடிக்கொண்டிருக்கும். https://www.bbc.com/tamil/articles/cz9949zelm7o

சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!

11 hours 42 minutes ago
குசால் குமார் என்ற சாஸ்திரியாரின் பெயர் அசத்தலாக இருக்கின்றது. இந்தப் பெயரில் யாராவது யாழ் களத்திற்கு வந்து விடப் போகின்றார்கள்...........🤣.

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!

11 hours 47 minutes ago
அவர் பாட்டிற்கு அமைதியாக இருக்கிற விமல் வீரவன்சவை அமெரிக்கா வம்புக்கு இழுக்கின்றது........🤣.

வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்

11 hours 55 minutes ago
பல உண்மைகள் வரும், வரும் என்பார்கள். கோதாவின் புத்தகத்தில் வெளி நாடுகளின் சதி என்று வந்தது போல, ஏதாவது பொத்தாம் பொதுவான விசயங்கள் மட்டுமே இதிலும் இருக்கும். உண்மைகள் இவர்களின் புத்தகங்களில் வந்தால், இவர்கள் போர்க் குற்ற விசாரணைகளுக்கு போக வேண்டி இருக்குமே.......சரத்திற்கு கொஞ்ச காசு வரும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

12 hours ago
உங்கள் தெரிவுகளின்படி USA சுப்பர் 8 க்கு தெரிவாகாது, இதற்கு உங்கள் தெரிவுகளின்படி NZ அல்லது BAN ஐ பதிலாகத் தரவேண்டும். உங்கள் தெரிவுகளின்படி OMA சுப்பர் 8 க்கு தெரிவாகாது, இதற்கு உங்கள் தெரிவுகளின்படி AFG அல்லது SA ஐ பதிலாகத் தரவேண்டும்.

யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்

13 hours 6 minutes ago
அது மட்டுமில்லை..அதனுள் தமிழர் போகமுடியாது...ஏனெனில் ஆமி சொல்லும் அதற்குள் கண்ணி வெடி இருக்கு என் றூ..

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

13 hours 11 minutes ago
யார் என்ன தான் சொன்னாலும் விடுதலை தேசியம் என்பது மக்கள் மனங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இதைப்பற்றி ஊரில் கதைக்க எனக்கும் பயம்.அங்குள்ளவர்களுக்கும் பயம். திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மனநிலை இது தான். அதையும் மீறி சாந்தனின் இறுதி ஊர்வலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாவீரர்தினங்களின் போது தம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறார்கள்.
Checked
Sun, 05/26/2024 - 02:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed