புதிய பதிவுகள்

ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி

41 minutes 39 seconds ago
ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்தேன். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லையென்றும் அத்தகைய அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே உரித்துடையது என்பதை நினைவுகூறுகின்றேன். அத்துடன் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு தெரிவித்தாலும் வாக்கெடுப்பின்போது அக்கருத்திற்கு பெரும்பான்மை கிடைத்ததாலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு மதிப்பளிக்கின்ற தலைவர் என்றவகையில் தான் அந்த முடிவுக்கு உடன்பட்டேன். பாராளுமன்றத்தை கலைத்தல், ஒத்திவைத்தல், பிரதமரை நீக்குதல், புதிய பிரதமரை நியமித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கவில்லை. நாட்டின் உயர் பதவியில் இருக்கும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே தான் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணம் தாய் நாட்டின் நன்மை கருதி மிக உன்னத எண்ணத்தினால் மேற்கொள்ள்பட்டது என்றும் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் எவ்வித எண்ணமும் தனக்கு இருக்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த சிக்கலான அரசியல் நிலைமைகளை தீர்த்துக்கொள்வதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்று தான் நம்பியதாகவும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 155 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகளின் மூலம் ஏற்படும் முடிவை நாடும் உலகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் 155 இலட்சம் வாக்காளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் வர்த்தமானியை வெளியிட்டோம். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சுயேட்சை ஆணைக்குழுவை நிறுவக்கூடியது சிறந்த அம்சமாக அமைந்தாலும் அதன் மறுபுறம் பாரிய அரசியல் சீர்குலைவு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி ஊழலின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் அந்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள தேவையான இலஞ்ச ஆணைக்குழுவின் குறித்த சுற்றுநிரூபத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பாராளுமன்றத்தை கால வரையின்றி ஒத்திவைத்தல். தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அமைச்சரவைகளை பிரிக்கும்போது அறிவியல் அடிப்படையை பின்பற்றாமை, மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மற்றும் அதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தாமை மற்றும் பிக்கு சமூகத்தை இழக்கும் நிலையை தோற்றுவித்தல், இராணுவ வீரர்களை சிறைப்படுத்தல் போன்ற தொலைநோக்கற்ற பல செயற்பாடுகளை கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வந்ததாக தான் மனவருத்தத்துடன் காலங்கழித்ததாகவும் அண்மையில் மேற்கொண்ட அரசியல் முடிவுகளுக்கு அவ்வாறான நிலைமைகளே தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார். மேலும் யார் எவ்வகையான அறிக்கைகளை வெளியிட்டாலும் கடந்த சில வாரங்களாக தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளும் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவுகள். தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக கருத்துத் தெரிவிக்கும் நபர்கள், தன்னை சிறையில் அடைத்தாலும் உன்னத எண்ணத்தினால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன்னால் எடுக்கப்பட்ட சரியான முடிவுகள் கல்லில் செதுக்கிய எழுத்துக்களாக வரலாற்றில் பொறிக்கப்படும். கடாபியை போன்று தன்னையும் இழுத்து சென்று கொலை செய்ய வேண்டும் என்று அண்மைக் காலங்களில் சில பேச்சாளர்கள் தெரிவித்துள்ளதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், ஜே.ஆர்.ஜெயவர்தன காலம் முதல் அதன் பின் ஆட்சியமைத்த எந்தவொரு தலைவருக்கும் அவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் முன்வைத்ததில்லை என்றும் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் இன்று தனக்கு அவ்வாறான சொற்பிரயோகங்கள் முன்வைக்கப்படுவதற்கான காரணம் தான் நாட்டில் உருவாக்கிய சுதந்திரமும் ஜனநாயகமும் என்று நினைவுகூர்ந்தார். அத்துடன் இவ்வாறான சம்பவங்களுடன் பிரச்சினைகளின்றி நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தனது குறிக்கோள் என்றும் சிக்கல்களை தோற்றுவிப்பதால் நாடு பின்னடைவை எதிர்நோக்கும் என்றும், எதிர்கால நாட்டுக்கு ஊழலற்ற பொறிமுறை ஒன்று அவசியம் என்றும் தெரிவித்தார். தோல்வியடைந்த கண்ணெதிரே அழிக்கப்பட்ட அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டை நேசிக்கும் கலாசாரத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் மரியாதை அளிக்கும் அரசியல் பொறிமுறையொன்றின் ஊடாகவேயாகும் எனவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/46485

அந்த 7 நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்..

1 hour 41 minutes ago
'எனது காதலி உங்களது மனைவியாகலாம். உங்களது மனைவி எனக்கு ஒருபோதும் காதலியாக முடியாது' 1980களின் முற்பகுதியில் கே. பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்த அந்த ஏழுநாட்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் தீர்க்கமாகச் சொல்லி விட்டு வெளியேறும் வார்த்தைகள்தான் இவை. 'இன்னும் ஏழு நாட்களுக்குள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து, அந்தக் காலஅவகாசம் முடிவடையும் தறுவாயில், பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு பற்றிய செய்தி கிடைத்தவுடன், ஏனோ பாக்கியராஜின் கிளைமேக்ஸ் வசனங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அவ்வசனங்களை இலங்கை அரசியலில் எதற்கு உவமானமாகச் சொல்ல முடியும் என்பது, அரசியல் அறிவுள்ள வாசகர்களுக்கு புரியும். அந்த ஏழு நாட்கள் திரைக்கதையின் படி பாக்கியராஜ் காதலித்த பெண்ணை வேறொருவர் திருமணம் முடிக்கின்றார். முதலிரவிலேயே அவள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றார். காரணத்தை அறிந்த கணவர், தனது மனைவியை அவளது முன்னாள் காதலனுடன் சேர்;த்து வைக்க முயற்சிக்கின்றார். உச்சக் கட்ட காட்சியில் இருவரையும் நேரெதிரே சந்திக்க வைத்து நீங்கள் சேர்ந்து வாழுங்கள் நான் விலகிக் கொள்கின்றேன் என்கிறார் ராஜேஷ். கதாநாயகனுக்கு அதுவிருப்பமில்லை. எனவே வேண்டுமென்றே...அப்படியென்றால் தாலியை அகற்றுங்கள் என்கின்றார் கதாநாகயன். ஆனால் நடிகையான அம்பிகாவோ தனது தாலியைக் கழற்ற மறுக்கின்றார். கணவரும் சம்பிரதாயத்தை அறுத்தெறிய தயங்குகின்றார். 'திருமண உறவுக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கின்றது சேர். அந்த சம்பிரதாயத்தை அறுத்தெறிந்து விட்டு வாழ முடியாது என்று தனது முடிவுக்கு காரணத்தை சொல்லி விட்டு, ஆரம்பத்தில் கூறிய வார்த்தைகளை கூறியவராக, பாக்கியராஜ் தனது பெட்டியுடன் தொலைதூரம் செல்கின்றார். விடாப்பிடி அரசியல் அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தின் மேற்குறிப்பிட்ட மூன்று கதாபாத்திரங்கள் போல இலங்கை அரசியலின் பிரதான கதாபாத்திரங்கள் அமையவில்லை. தனது மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் செயற்பட்ட கணவன் போலவோ,சம்பிரதாய வரண்முறைகளை மீறாத மனைவி போலவோ அல்லது காலநியதியை ஏற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்த கதாநாயகன் போலவோ நமது நாட்டின் அரசியல் கதாபாத்திரங்கள் அமையவில்லை. ஆயினும் (பிந்திய சம்பவங்களின்படி), நீதிமன்றத் தீர்ப்பு அப்படியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியது எனலாம். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் யதார்த்தங்களைப் புரிந்தவராக, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி வெளியேறிச் செல்வது – ஏனோ 'அந்த ஏழுநாட்கள்' திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், சம்பிரதாய நியதிகளுக்காக தனது காதலியையும் அவரது கணவனையும் விட்டுச் செல்லும் பாக்கியராஜை நினைவுபடுத்திற்று. நாட்டு மக்களுக்கு இந்த நெருக்கடிகள் வேண்டாம் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன், கரு ஜயசூரியவை அல்லது சஜித் பிரேமதாசவை நியமித்துக் கொள்ளுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க நினைக்கவில்லை. நான்தான் இந்தப் பிரச்சினையின் துரும்புச் சீட்டாக இருக்கின்றேன் எனக்கு பதவியில்லாவிட்டாலும் பரவாயில்லை நாட்டில் ஸ்திரத்தன்மை வரட்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ ஒதுங்கிக் கொள்ளவில்லை. ரணில் செய்த தவறுகளால்தான் ஆத்திரத்தில் இப்படிச் செய்து விட்டேன். ஆனால் விளைவுகள் மக்களைத் தாக்குகின்றன என்ற அடிப்படையில் ஜனாதிபதி சிறிசேனவும் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போர், எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்ற பொதுஜனப் பெரமுணவின் உட்பிரவேசத்தையடுத்து மிகத் தீவிரமடைந்திருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கினாலும், எந்திரன் திரைப்பட ரோபோ போல, மஹிந்த, மைத்திரியின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இந்நிலையில், மூன்று கட்சிகளுக்கு இடையிலான அதிகார வெறி என்பது, இப்போது மைத்திரி – மஹிந்த – ரணில் ஆகியோருக்கு இடையிலான கௌரவ யுத்தமாக உருவெடுத்திருக்கின்றது இந்தப் பின்னணியில் நாட்டு மக்களின் நலன், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைகள் குறித்து பிரதான தலைமைகளோ ஆட்சியதிகாரத்திற்காக கயிறிழுப்பவர்களோ கவலைப்படுகின்ற மாதிரி தெரியவில்லை. இன்று ஆளுக்காள் குற்றம் சுமத்துகின்ற ஜனாதிபதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆணை வழங்கினார்கள் என்பதை கடந்த மூன்று வருடங்களாக இருவருமே உணர்ந்து அதற்கேற்றாற்போல் வெளிப்படையாகவே செயற்பட்டார்கள் என்பதை அவர்களால் கூட அடித்துக் கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. அதுபோல, இன்னும் ஆட்சிக் கனவுடன் இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மஹிந்த தரப்பும் இன்னும் படித்து முடியவில்லை என்றே தோன்றுகின்றது. இந்தக் கட்டத்திலேயே உயர்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மாலை வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பொன்றை அறிவித்திருக்கின்றது. ஏகமனதான தீர்ப்பு இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஒரு பாராளுமன்றத்தின் காலம் நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்றும், அதன்படி இவ்வருடம் நவம்பர் 9ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தல் சட்டமுரணானது என்றும் பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுடன் தொடர்புபட்ட மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் கூட, சில விடயங்களுக்கு முடிவு கிடைப்பதற்கான ஒரு கதவை இந்த தீர்ப்பு திறந்து விட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, நவம்பர் 09ஆம் திகதியிடப்பட்ட 2096ஃ70ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்தாகியுள்ளதுடன், அத்திகதிக்கு முன்பிருந்த பாராளுமன்றம் மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் மீதான வழக்கின் மேற்படி தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளமை ஜனநாயகம் மற்றும் நீதியின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவை பற்றிய நம்பிக்கையை பரவலாக பொதுமக்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன், நியாயம் என்பது நிறைவேற்றதிகாரத்திற்கு எதிரானதாக இருந்தாலும் அதனை அடித்துச் சொல்வதற்கு நீதியரசர்கள் தைரியம் பெற்றிருப்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் தமிழர்களும் என்ன நினைக்கின்றார்கள், அவர்கள் எவ்வாறான அரசியற் சூழலை வேண்டி நிற்கின்றார்கள் என்ற கவலை முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளில் 99 சதவீதமானோருக்கு கிடையாது. அவர்கள் தமது 'கல்லாப் பெட்டிகளிலும்' 'அரசியல் வியாபாரத்திலுமே' குறியாக இருக்கக் காண்கின்றோம். முஸ்லிம்களி;ன் நிலை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பௌத்த சிங்கள மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓரளவுக்கேனும் காரியம் சாதிப்பதில் குறியாக இருக்கின்றது. இந்த முறை ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விடயத்திலும் ஏதோ எழுத்து மூல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தமிழ் எம்.பி. ஒருவர் கூறியிருக்கின்றார். அப்படியாயின் தமிழ் சமூகமும் தப்பிப் பிழைத்துவிடலாம். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிகமாக பாதிக்கப்படப் போவது மூன்றாவது பெரும்பான்மையினமான முஸ்லிம்கள்தாம். இதற்கு காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் போக்காகும். தாம் சார்ந்து நிற்கின்ற பெருந்தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு, துதிபாடிக் கொண்டு இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பண்புதான் முஸ்லிம்களின் அபிலாஷைகள் நிறைவேறாமல் போனதற்கு அடிப்படைக் காரணமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு போல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் ஒன்றைத்தானும் நிறைவேற்றிக் கொள்ள முஸ்லிம் கட்சிகள் இம்முறையும் எழுத்துமூல உடன்பாடு கண்டதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இம்முறையும் முஸ்லிம்கள் கறிவேப்பிலைதான். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அதாவுல்லாவும், றவூப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அந்த ஆட்சியாளரை சரிகண்டு பல நகர்வுகளுக்கு ஆதரவளித்ததுடன் அதற்கு காரணங்களையும் சொன்னார்கள். அதேபாணியிலேயே இன்று ஜனநாயகம் என்ற அடிப்படையில் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவை எந்த நிபந்தனையுமின்றி ஆதரிக்கின்றன. தேசிய காங்கிரஸ் தலைவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக கடிதம் எழுதுகின்றார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்ற போது நிறைவேற்று அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ இந்தளவுக்கு உச்சமாக பயன்படுத்தவில்லை. அவ்வாறே பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார் என்றாலும், முஸ்லிம்களின் ஜனநாயகத்தையும் இன,மத உரிமையையும் நிலைநாட்டுவதற்கு இந்தளவுக்கு எம்.பி.க்களின் ஆதரவுப் பலத்தை நாடியவருமல்ல. சுருக்கமாக சொன்னால், பெருந்தேசிய அரசியலிலும்; முஸ்லிம் அரசியலிலும் இருக்கின்ற 'சுளகுகள் எல்லாம் தனக்கு தனக்கென்று வரும்போது படக்குபடக்கென' அடித்துக் கொள்வதைக் காண்கின்றோம். சரியாகப் பார்த்தால் இந்த அரசியல் அதிகாரப் போர் என்பது நாட்டு மக்களின் நலனை நாடுகின்ற செயற்பாட்டாளர்களின் பார்வையில் உண்மையில் ஒரு தர்ம யுத்தம் என்றே சொல்ல வேண்டும். இந்நிலைமையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு தீர்ப்பிற்காக வியாக்கியானம் செய்யும் நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்திற்கே உள்ளதென சட்டமறிந்தோர் கூறுகின்றனர். அந்த அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சந்தோசத்தை, யாருக்கு வயிற்றுவலியை ஏற்படுத்தியிருந்தாலும் அதை விமர்சிக்க முடியாது. அது நீதிமன்றத்தை அவமதிக்கின்ற குற்றமாகக் கூட அமையலாம். எழும் கேள்விகள் எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும் அந்த புள்ளியிலிருந்து பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் கூறிவந்தனர். அரசியலமைப்பின் மொழிமெயர்ப்பு; பற்றியெல்லாம் பெரும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் கடைசியில் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி செயற்படவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பெழுதியிருக்கின்றது. வழக்கமாக உயர்நீதிமன்ற நீதியரசர் குழாத்தின் தீர்ப்புக்கள் 4இற்கு 3 அல்லது மூன்றிற்கு 2 என்ற அடிப்படையிலேயே அதிகமாக எட்டப்படுவதுண்டு. ஆனால் இந்த வழக்கில் நீதியரசர்கள் குழாத்திலிருந்த 7 நீதியரசர்களும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து, இது அரசியலமைப்பு முரணான நடவடிக்கை என தீர்த்திருக்கின்றனர் என்பது கவனிப்பிற்குரியது. அப்படியாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின்) சட்ட ஆலோசர்கள் அவரை பிழையாக வழிநடாத்தியிருக்கின்றார்களா என்ற கேள்விக்கும், இலங்கையின் அரசியலமைப்பை உயர் மட்டத்தில் இருக்கின்ற சட்டமறிந்தோரே விளங்கிக் கொள்ளாதநிலையில் சாதாரண மக்களின் நிலை என்ன என்பதும் நம்முன்னே விரிகின்ற வினாக்களாகும். எது எப்படியிருப்பினும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்படுவதே இப்போதிருக்கின்ற ஒரேயொரு தெரிவாகும். அப்படிப் பார்த்தால், பாராளுமன்றம் வெள்ளிக்கிழமையிலிருந்தே பழைய நிலைக்கு திரும்பியிருக்கின்றது. பாராளுமன்றம் கலைத்தது தவறு என்பதால், வர்த்தமானி வெளியிடப்பட்டதில் இருந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்ட காலம் வரைக்கும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நடைமுறைகள், பிரேரணை நிறைவேற்றங்கள் சட்ட அந்தஸ்துடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிவரும் என்று விடமறிந்தோர் சுட்டிக்காட்டுகி;ன்றனர். மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. ஆயினும் பாராளுமன்றக் கலைப்பு சட்டமுரண் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும் பெரும்பான்மைப் பலத்தை கொண்டிருக்கின்ற ஒருவரை நியமிப்பதே சம்பிரதாயமாக இருப்பதாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.முன்னணி ஜனாதிபதியை நோக்கி கோரிக்கை விடுத்துள்ளது. அதுவே இப்போது நடந்திருக்கின்றது. ஜனாதிபதியின் கருத்து ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாராக நியமிக்கவே மாட்டேன் மீPண்டும் ஒரு தடவை பழைய பல்லவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததும் தவறு என்றும் நீதிமன்றம் உத்தரவிடும் சாத்தியமிருக்குமாயின், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் வழிசென்று, மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை அல்லது அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முன்வருவராயின் இன்னும் அவர்மீதான மதிப்புக்குறைவதை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதனை உணர்ந்தே அவர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்தியுள்ளார். ஆனால் இவ்விடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது நான்கரை வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பு முரணானது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை, நீதி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிக்காட்டுவதுடன் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கருத முடியும். ஆயினும், ரணில் விக்கிரமசிங்கவோ ஐக்கிய தேசியக் கட்சியோ நீதியான, ஜனநாயக பூர்வமான கட்சி என்பது இத்தீர்ப்பின் அர்த்தமல்ல. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போதே யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர், பள்ளிவாசல்கள் படுகொலைகள் இடம்பெற்றன. ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்த வேளையில்தான் அண்மையில் திகண கலவரங்களும் நடந்தேறின. எனவே, சுதந்திரக் கட்சியைப் போலவே ஐ.தே.க.வும் முற்றுமுழுதாக சிறுபான்மையினரின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் கட்சியல்ல. நிலைமை இவ்வாறிருக்க, உயர்நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தாக்கம் செலுத்தாமல் செயற்பட்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதே ஜனநாயகத்தின் பெயரால் பாராட்ட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அவர் மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதுடன், மறுபுறுத்தில் ரணிலை நியமிக்கமாட்டேன், அவர் நாட்டுக்கு பொருத்தமற்றவர் என்று மைத்திரி தொடர்ச்சியாக கூறி வருகின்ற கருத்தின் உள் அர்த்தத்தையும் பாரதூரத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது விடயத்தில் உண்மைகண்டறியும் ஆய்வொன்றை நாட்டு மக்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உண்மை கண்டறிதல் இலங்கையின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குப் பிடித்தவர், அவரது நன்மதிப்பைப் பெற்றவர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட முடியும் என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை. அந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை மதிப்பதுடன், பிரதமர் பதவி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும் செயற்பட வேண்டிய தார்மீக கடமையை ஜனாதிபதி போன்றோர் கொண்டிருக்கின்றனர். அதனை ஜனாதிபதி வேறுவழியில்லாமல் போன கடைசிக் கட்டத்திலாவது செய்திருக்கின்றார். அதேபோன்று இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுப்பை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் போது அந்த நெகிழ்ச்சிப் போக்கை அவரும் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் வேறு சில ஆட்சியாளர்கள் போல தான் பதவியாசை பிடித்தவன் இல்லை என்பதை உலகுக்கு காட்டுவதற்காகவேனும் அவர் அக் கட்சியில் இருக்கின்ற வேறு ஒருவருக்கு பிரதமர் பதவி கிடைக்க (எதிர்காலத்திலாவது) வழிவிட்டுக் கொடுக்கலாம். ஏனென்றால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றோரைப் போலவே ஐ.தே.க. தலைவருக்கும் சமபங்கு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஓக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புதிதாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தன் மூலம் நாட்டின் அரசியலில் அடுத்தடுத்து பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த நாட்டின் பிரதமராக பதவி வகிக்க ரணில் தகுதியற்றவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி அப்படியான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். அந் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மேற்கொண்ட இரவுநேர மூலோபாய புரட்சியின் தொடர் நிகழ்வான இழுபறிகளுக்கு தீர்வாக ஏதாவது அபூர்வம் நடந்து விடாதா என மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். இப்பின்னணியில் இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்திருந்த நிலையில், இன்னும் ஏழு நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி அறிவித்தார். அதன்பிறகு அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது உண்மையே ஆனாலும் அது தீர்வுக்கு நேரடிக் காரணமாக அமையவில்லை. இதற்கு சமாந்திரமாக, உயர்நீதிமன்றம் சுமார் பல நாட்களாக மேற்படி மனுக்கள் மீதான பரிசீலனை, விசாரணைகளை மேற்கொண்டு நாட்டில் இப்பிரச்சினை தொடங்கி 47ஆவது நாளில், தீர்ப்பை அறிவித்திருக்கின்றது. எனவே, எல்லோரும் அதனை மதித்து செயற்படுவதே பக்குவப்பட்ட அரசியலுக்கு அழகாகும். ஆனபோதும், இலங்கையில் அரசியல் குழப்பங்களும் அதிகார இழுபறிகளும் நீதிமன்ற தீர்ப்பினாலோ அல்லது விட்டுக் கொடுப்புக்களின் மூலமாகவோ, அடுத்த தேர்தல் வரைக்கும் முடிவுக்கு வரப் போவதில்லை என்பது வேறுகதை! - ஏ.எல்.நிப்றாஸ் வீரகேசாி - 16.12.2018 (வீரகேசாி கட்டுரையுடன் பிரதமா் பதவியேற்பு பற்றிய தகவல் புதிதாக உட்சோ்க்கப்பட்டுள்ளது) https://www.madawalaenews.com/2018/12/hhhh_16.html

CIA & MI6 ஆகிய புலனாய்வு அமைப்புக்களுடன் மோதினாராம் கம்மன்பில

1 hour 44 minutes ago
கரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் மோதவில்லை எனவும் அமரிக்காவின் CIA மற்றும் பிரித்தானியாவின் MI6 போன்ற புலனாய்வு துறைகளுடன் மோதினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்த போது கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாடுகளின் தூதுவர்கள் தற்போது சுகமான நித்திரையில் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்தமை தாய் நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி னவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் http://www.jaffnamuslim.com/2018/12/cia-mi6.html

இனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை

2 hours 19 minutes ago
இனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். 2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது. படத்தின் காப்புரிமை EMMANUEL DZIVENU/JOYNEWS அகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் மத்தியப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் சிலை புதன்கிழமை அன்று நீக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை உறுதிசெய்த பல்கலைக்கழக நிர்வாகம், சிலையை இடம் மாற்றிய சம்பவத்துக்கு வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. "காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவதே அவரது சிலை வைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம். ஆனால், அவர் இதுபோன்ற (இனவெறி கொண்டவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது) விடயங்களுக்கு ஆதரவானவர் என்றால், அவரது சிலை எங்களது வளாகத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்." படத்தின் காப்புரிமைEMMANUEL DZIVENU/JOYNEWS Image caption காந்தியின் சிலை அகற்றப்பட்ட இடத்தில் நிற்கும் மாணவர்கள். 20ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர்களில் காந்தியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதற்காக அவர் அறியப்படுகிறார். காந்தி தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள மக்களுக்காக போராடினாலும் கூட, கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் இனவெறி மிக்க வார்த்தையை (கஃபீர்ஸ்) பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை "மேலானவர்கள்" என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: https://www.bbc.com/tamil/global-46563262

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

2 hours 34 minutes ago
கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம் காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

அவுஸ்திரேலிய முருங்கைகாய்

3 hours 25 minutes ago
அது மரபணு மாற்றபட்ட மரக்கறி வகை என்று ஒருவருடங்களுக்கு முன்பு நவம்பர் குளிர்கால நேரம்களில் அவுசில் இருந்து இறக்குமதியாகின்ற பொழுது இங்குள்ள இங்கிலாந்து https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports உணவு அமைப்பு எரிக்க சொல்லி உத்தரவிட்டது காரணம் இறக்குங்க ஒவ்வொரு முருங்கைக்காயிலும் அது மரபணு மாற்றம் செய்யபட்ட உணவு என்று லேபில் ஓட்டனும் இறக்கியவர் நம்ம தமிழ் ஆள் வேண்டாம் சோலி என்று எரிப்பதுக்கு காசை கட்டி விட்டு வந்துவிட்டார் அதன் பின் அவுஸ் முருங்கைக்காய் இந்தபக்கம் தலை வைத்து படுப்பதில்லை . உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு முருங்கைக்கையை உங்கள் போர்ட் கெல்த் ஆட்களுக்கு அனுப்பி விட விலாவாரியாக ஆராய்ந்து மெயில் அனுப்புவார்கள் அநேகமாக இலவச சேவையாக இருக்கும் . Bacillus thuringiensis ஒருவகை கிருமி இயற்கை கொள்ளி பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு இயற்க்கை அமைத்த வில்லன் மனிச மூளை வேறுவிதமாக சிந்திக்கும் Bacillusலிருந்து குறிப்பிட்ட மரபணுவை விதைகளில் கலந்துவிட அன்று தொடங்கியது தலையிடி அப்படியான உணவுகள் உணவுகால்வாயில் புற்று நோயை கொண்டு வருது என்று ஒரு பகுதி கொடிகட்ட அமெரிக்காவின் மான்செண்டோ போன்ற விதை கொம்பனிகள் இல்லை என்று வாதிட கொள்ளுபாடு தொடர்கிறது இங்கு இங்கிலாந்து சட்டம்கள் நஞ்சை நஞ்சென்று எழுதி வித்தால் விக்கலாம் gmo மரக்கறி வகைகள் பைக்கட்டில் ஒரு மூலையில் சிறிய எழுத்துகளில் இது gmo உணவு என்று பிரிண்ட் பண்ணி வியாபாரம் செய்யலாம் . gmo பயிர்கள் இயற்க்கை சுற்று வட்டத்தை பாதிக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது அதனால் மூன்றாம் உலகநாடுகளை நோக்கி வலுக்கட்டாயமாக தள்ளி விடுகிறார்கள் சொல்லப்படும் காரணம் பாரிய விளைச்சல் . ஆதாரம் வேண்டுவோர் . https://www.bbcgoodfood.com/howto/guide/what-gmo-food http://www.marklynas.org/2013/04/time-to-call-out-the-anti-gmo-conspiracy-theory/ https://thetruthaboutcancer.com/dangers-gmo-foods/

இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை!

3 hours 56 minutes ago
இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை! In விளையாட்டு December 16, 2018 2:29 pm GMT 0 Comments 1041 by : Benitlas தாய்லாந்தில் நடைபெற்ற உலக உடல்கட்டமைப்பு (ஆணழகர்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் வெற்றி பெற்று உலக சாம்பியனாக முடி சூடியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4’ம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் 2’ம் இடத்தையும் பெற்ற அவர், தற்போது உலக சாம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைத்-தமிழனின்-மற்றும/

கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று

4 hours 36 minutes ago
கருணாநிதியை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.. உணர்ச்சி வசப்பட்ட சோனியா ! சென்னை: கருணாநிதியை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான பொதுக்கூட்டம் நடந்தது.இந்த விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசியதாவது,இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர். அண்ணா மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றி அரசியல் செய்தவர் கருணாநிதி. திராவிட அரசியலின் ஊற்றுக்கண் கருணாநிதி. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மகிழ்ச்சியடைகிறேன். கருணாநிதி பொது வாழ்க்கை தமிழகத்தின் வரலாறாக உள்ளது. தமிழகத்தின் முதல்வராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி.கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்து தமிழகத்தை மொத்தமாக மாற்றியவர்.அவர் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோற்றது இல்லை. இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது. கருணாநிதிக்கு தமிழ் மீது பெரிய ஆசை இருந்ததுதமிழை வளர்க்க அவர் பெரிய பாடுபட்டார். அவர் அற்புதமான பேச்சாளர்.அவரின் எழுத்திற்கு முன் எதுவும் சாத்தியமில்லை. தமிழ் மீதான ஆசையால் அவர் பல படைப்புகளை இயற்றி இருக்கிறார்.நாளும் பொழுதும் தமிழை வளர்க்க கருணாநிதி பாடுபட்டார் கருணாநிதி கையில் தமிழ் விளையாடியதை பார்த்து வியக்கிறேன். தமிழ் மீது தனியாக தாகம் கொண்டவர் கருணாநிதி. பல்லாயிரக்கணக்கான சிறு, குறு கதைகளை எழுதியவர் கருணாநிதி. 7000 கடிதங்களை கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்கு எழுதினார்அவரின் வாழ்க்கையில் தமிழ் செம்மொழி ஆனதுதான் பெரிய மகிழ்ச்சி.அண்ணாவின் வழியில் செயல்பட்ட சமூக சீர்திருத்தவாதி கருணாநிதி. அரசு வேளைகளில் பெண்களுக்கு இடஓதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவர் கொண்டு வந்த சட்டம். கூட்டாச்சி தத்துவத்திற்கு அவர் கொடுத்த மதிப்பு.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் செய்த் நன்மைகள். அவர்களுக்காக அவர் கொண்டு வந்த இடஒதுக்கீடு. பாராளுமன்ற நிகழ்வுகளிலும், மரபுகளிலும் நம்பிக்கை கொண்டவர். அவர் மதசார்பற்ற அரசியல்வாதி. அவர் எப்போதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டு இருந்தார்.மாநில உரிமைகளுக்காக இறுதி வரை போராடிய மாபெரும் போராளி கருணாநிதி. கருணாநிதியை நாங்கள் வாழக்கை வரை மறக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பாக அவர் கொடுத்த ஆதரவை நாங்கள் எப்போதும், எந்த காலத்திலும் மறக்க மாட்டோம்.எப்போதெல்லாம் தேசிய அரசியலில் பிரச்சினை வந்ததோ அப்போது கருணாநிதி ஆலோசனை கேட்பேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி அளித்த ஆதரவை மறைக்க மாட்டேன்அவரின் காலத்தை போலவே அவருக்கு அடுத்த இந்த காலத்திலும் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதவாத சக்திகளை ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும். தமிழக அரசியலை 60 ஆண்டுகாலம் ஆட்டிப்படைத்தவர் கருணாநிதி. https://tamil.oneindia.com/news/chennai/we-won-t-forget-karunanidhi-our-lifetime-says-sonia-gandhi-dmk-function-336686.html டிஸ்கி : 2009 ஆம் ஆண்டு செய்த உதவி ? ரொம்பவே உணர்ச்சி வசப்படுறார் போல ..🤔

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்

4 hours 56 minutes ago
ரொம்ப அவசரம்.நம்புறீங்களா?ஏதாவது அவசரமாக கொடுக்க நினைத்தாலும் என்ன தான் கொடுக்கப் போகிறார்கள்.சேர் பொன் இராமநாதன் போன்றோர்களை தோழில் சுமந்து சிலை வைத்து அதே இடத்தில் தமிழ் தலைவர்களை அடித்து துரத்தியவர்கள்.எழுத்திலே வந்தால்க் கூட நடைமுறையில் வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காணி பொலிஸ் கல்வி அதிகாரமுள்ள எந்த தீர்வையும் தரவா போகிறார்கள்?

அவுஸ்திரேலிய முருங்கைகாய்

5 hours 3 minutes ago
நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்படி கொழுத்து இருக்குதே" என்று கேட்டேன். அதற்கு அவா, 'இது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த முருங்கைகாய்கள்... கொண்டு போய் சாப்பிட்டு பாருங்கள்.. நல்லா இருக்கும்' என்றார். இது என்னடாப்பா புதுசா இருக்கு... அவுசில் இருந்து Lamb வரும், கங்காரு இறைச்சி வரும், சில நேரங்களில் Cheese கூட வரும், ஆனால் முருங்கைக்காய் கூட வருமா என்று ஆச்சரியமாக இருந்தது. "உண்மையாகவா அக்கா.. இது அவுசில் இருந்து வந்ததா.." என மீண்டும் கேட்டேன். "ஓம் தம்பி.... இப்ப தமிழ் கடைகளுக்கு அவுசில் இருந்து முருங்கைகாய்கள் வருகுது..விலை கொஞ்சம் கூட..ஆனால் நல்லம்" என்று மீண்டும் நற்சான்றிதழ் கொடுத்தார். நானும் ஆறு டொலருக்கு ஒரு இறாத்தல் (1 lbs) வாங்கிக் கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டு பார்க்க, சுவை நல்லா இருந்தது. காய் நிறைய சதையும், கொஞ்சம் இறுகியும் (thicK ஆக) இருந்தது. ஒட்டி மீன் கறிக்கு சரியான தோதாக இருந்தது. ஒரு பெரும் வெட்டு வெட்டினேன். எனக்கு இது தொடர்பாக கொஞ்சம் விபரங்கள் வேண்டும். எப்ப இருந்து அவுசில் மற்ற நாடுகளுக்கும் அனுப்பக் கூடியவாறு முருங்கைகாய் பயிரிடத் தொடங்கிச்சினம்? இப்படி கொழுத்து போவதற்கு ஏதும் இரசாயன பசளைகள் போடுகின்றனரா? அல்லது இது ஒரு GMO உணவா (மரபணு மாற்றம் செய்த உணவா)? அவுஸ் உறவுகள் அல்லது இது தொடர்பாக மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பதில் தருகின்றவர்களுக்கு பாக்கியராஜின் படங்களின் பாட்டு பரிசாக கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.

5 hours 23 minutes ago
மேலதிகமாக தகவல்களை தந்தமைக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி ரகு. ஒரு காலத்தில் நீங்களும் அதிபராக இருந்ததை அறிந்து நல்ல சன்தோசம்.

நாட்டுக் கோழிச்சாறு

5 hours 38 minutes ago
நாட்டுக்கோழிச் சாறு கர்ப்பிணிகளுக்கு வருகிற உடல் அலுப்பைப் போக்கும். பொதுவாக குழந்தைப் பெற்றப் பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மீண்டும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது வழக்கம். ஆனால், இன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாட்டுக் கோழிச்சாறு தேவையானவை: நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது) சின்னவெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 1 சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் (தட்டி வைக்கவும்) பட்டை - அரை இஞ்ச் அளவு மிளகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: சோம்பு, மிளகு இரண்டையும் தட்டி பொடித்து வைக்கவும். நாட்டுக் கோழியை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து மூடி போட்டு 25 நிமிடங்கள் வேகவைக்கவும். பிரஷர் நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கோழித்துண்டுகளை மசாலா செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். கலவை முக்கால் பதம் வதங்கியதும், எடுத்து வைத்த சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் சீரகத் தூள், தட்டி வைத்துள்ள சோம்பு மற்றும் மீதமுள்ள மிளகு சேர்த்து 2 அல்லது, 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். https://www.vikatan.com/news/health/144712-country-chicken-recipes-for-pregnant-women.html
Checked
Sun, 12/16/2018 - 20:12
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed