புதிய பதிவுகள்2

"சமாதானம்" [அந்தாதிக் கவிதை]

1 day 11 hours ago
"சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இ‍தை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

1 day 11 hours ago
Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 06:17 PM முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார். நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா, வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட்டங்கள், கேப்பாபிலவு மண்மீட்பு போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஸ்ரீநாத் பெரேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மயிலத்தனை மாதவனை தமிழ் பண்ணையாளர்களை சமீபத்தில் சந்தித்திருந்தார். உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில் இல்லை என தெரிவிக்கும் அவர் ஜேவிபி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை சிறிதளவும் புரிந்துகொள்ளவில்லை அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கேள்வி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ளீர்கள்? இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றீர்கள் அங்கு எவ்வாறான உணர்வுகளை கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றீர்கள்? பதில்- கடந்த வருடம் இளைஞர்கள் பலர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது உட்பட பல்வேறு ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுவது மிகவும் சாதகமான விடயம். பரந்தன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நான் இதனை அவதானித்தேன். திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட விடயம் தமிழ்மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. சமூக ஊடகங்களில் நான் அவதானித்த விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உணர்வுகள் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என தமிழர்கள் கருதுகின்றனர். இந்த துன்புறுத்தல்கள் வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் கருதுகின்றனர். தமிழ் மக்களின் உணர்வுகள் கடினமாகியுள்ளமை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வெளிப்படும் என கருதுகின்றேன். நான் கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன். தங்கள் உறவுகளைஇழந்த குடும்பத்தவர்களின் துயரம் வேதனை ஒவ்வொரு வருடம் மனதை வருத்தும் விதத்தில் வெளிப்படும். இந்த வருடமும் அதேபோன்ற வேதனையான துயரமான உணர்வுகளே வெளிப்படப்போகின்றன. கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் தனிமையில் வாழும்போது அவர்களிடமிருந்து வெளிவராத உணர்வுகள் அனைவரும் ஒன்றிணையும் போது திடீரென வெடித்துக் கிளம்பும் கண்ணீராக கதறல்களாக. தற்போது வடக்குகிழக்கில் காணப்படும் நிலைமை மாற்றமடையும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்த நிலை மாறாது. 2 திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டமைக்கு உடனடியாக நீங்கள் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டனம்வெளியிட்டிருந்தீர்கள்-? பதில்- இது மிகவும் மோசமான செயல் என்னவென்று சொல்ல முடியாத செயற்பாடு- எவரும் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொள்ளக்கூடாது. முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? அதில் என்ன உள்ளது? அது ஏன் தவறு ? போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக அவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குகின்றனர். இது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமில்லை. அவர்கள் இதன் மூலம் மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைகூருகின்றனர். இதில் என்ன தவறு உள்ளது ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான விதத்தில் இந்த விடயத்தை கையாள்கின்றனர். 3 திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு தென்பகுதியிலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்- திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எங்களை போன்ற சில குழுக்கள் மாத்திரம் எதிர்ப்பை வெளியிட்டன. எதிர்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. மலையக அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல் வெளிப்பட்டதை நான் அவதானிக்கவில்லை. 4 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடும் பகுதிகளிற்கு தென்னிலங்கையிலிருந்து தொடர்ச்சியாக சென்று வருபவர்களில் நீங்களும் ஒருவர் - அவர்களின் போரட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து நீங்கள் அவர்களின் போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை வெளியிட்டு வந்துள்ளீர்கள் - காணாமல்போனோர் அலுவலகம் உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழு போன்றவை குறித்த உங்கள் அவதானிப்பு என்ன? பதில்- எந்த நம்பிக்கையும் இல்லை. காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா? எதுவும் வெளிவரவில்லை. மரணச்சான்றிதழ் வழங்குவது இழப்பீடு வழங்குவது குறித்து மாத்திரம் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் காணாமல்போனவர்களின் உறவுகள் உங்களிடம் பணம் கேட்கவில்லை நீதியைதான் கோருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை தான் அவர்கள் கேட்கின்றனர். காணாமலாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு இது தொடர்பில் எவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இது தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் எதனையும் செய்யவில்லை. உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில்இல்லை. அரசாங்கம் அதற்கு தயாரில்லை. நடந்து முடிந்த சம்பவங்களிற்கு பொறுப்பான ஆளும் வர்க்கமும் ஒடுக்குமுறை அரசாங்கமும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இவ்வகை ஆணைக்குழுக்களை பயன்படுத்த முயல்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை விட இது எந்த வகையில் சிறந்தது என்பது எனக்கு விளங்கவில்லை. 5 சில வாரத்திற்கு முன்னர் நீங்கள் மயிலத்தனைமடு சென்றிருந்தீர்கள்? மயிலத்தனைமடு கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் தற்போது பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். தங்கள் கால்நடைகளிற்கு உணவு வழங்குவதற்காக அவர்கள் மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்தி வந்தார்கள். பெண் ஆளுநர் - பதவியேற்ற பின்னர் அந்த நிலத்தை கைப்பற்றி சிங்கள விவசாயிகளிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். அவர்களின் போராட்டம் 200நாட்களை கடந்து நீடிக்கின்றது அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் துணிச்சலுடன் அர்ப்பணிப்புடன் போராடுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கூட வலுவான விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என நான் கருதுகின்றேன். கேள்வி- எதிர்வரும் தேர்தல்களில் ஜேவிபி தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளதே? பதில்- ஜேவிபி தற்போது சிங்கள பௌத்த வாக்காளர்களின் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது அவர்கள் தற்போது வடக்குகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் ஆதரவை பெற முயல்கின்றனர். இந்த பகுதிகளில் அவர்களிற்கு மிகக்குறைந்த ஆதரவே காணப்படுகின்றது அனுரகுமார திசநாயக்க இந்த பகுதிகளில் தனது ஆதரவை அதிகரிக்க முயல்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கப்போகின்றன. இதன் காரணமாக அனுரகுமார திசநாயக்க தமிழ்மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றார். ஆனால் அவர் தமிழ் மக்களிற்கு எதனையும் வழங்க முன்வரவில்லை. நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவோம் அபிவிருத்தி செய்வோம் என மாத்திரம் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை அவர் புரிந்துகொள்ளவில்லை. தேசியஇனப்பிரச்சினைக்குபொருளாதார அபிவிருத்தி மூலம் மாத்திரம் தீர்வை காணமுடியாது. தங்கள் பகுதிகளை தங்கள் நாளாந்த வாழ்க்கையை நிர்வகிப்பதற்கான உரிமையை தமிழ் மக்கள் கோரிநிற்கின்றனர். இதற்கான தீர்வு குறித்த விடயத்தில் அனுரகுமார திசநாயக்க அமைதியாக காணப்படுகின்றார். 13வது திருத்தம் குறித்தும் அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய 13 வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்து 24 மணிநேரத்தில் டில்வின் சில்வா அதனை முற்றாக எதிர்த்தார். நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார். இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் -ஜேவிபி சிறிய அளவு அதிகாரப்பகிர்விற்கு கூட தயாரில்லை . ஆரம்பத்திலிருந்து இதுதான் அவர்களின் கொள்கை . அவர்கள் அதிகாரங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமாட்டார்கள் இதேவேளை ஜேவிபி தமிழ் வர்த்தகர்களின் ஆதரவை பெற முயல்கின்றது. சோசலிஸ கட்சி என்ற நிலையிலிருந்து அவர்கள் சீர்திருத்த பூர்ஸ்வா கட்சியாக மாறிவிட்டனர். அவர்களிடமிருந்து தமிழர்களிற்கு எந்த தீர்வும் கிடைக்காது. கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுடன் கைகோர்ப்பது குறித்து கருத்துதெரிவித்திருந்தீர்கள்? பதில்- தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு காலத்திற்கு காலம் பெரும்பான்மை சமூகம் ஏதோ சில தீர்வுகளை முன்வைக்க முயன்றுள்ளது. இடதுசாரிகள் என்ற அடிப்படையில் நாங்கள்அதனை ஆதரிக்கவில்லை. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை ஏற்றுக்கொள்வதிலேயே அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தங்கியுள்ளது. எனினும் இலங்கையை ஆண்ட எந்த முதலாளித்துவ கட்சிகளும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவர்களின் அரசியல் அடிப்படை என்பது சிங்கள பௌத்த பேரினவாதமாகும். இடதுசாரிகள், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கின்றார்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பதும் அதற்காக போராடுவதும் பெரும்பான்மை சமூகத்தினர் அதனை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் ஒரு வகையான இடதுசாரிகளிற்கான ஒரு புனித கடமை. தமிழ் மக்களின் போராட்டத்தை தென்பகுதியின் வர்க்க போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கவேண்டும். நாங்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எந்த முதலாளித்துவ கட்சியும் இதனை செய்யப்போவதில்லை. https://www.virakesari.lk/article/183790

எனது பயண நினைவுகளின் தொகுப்பு

1 day 11 hours ago
இந்த சங்குப்பிட்டி பாலம், இரவில் விளக்குகள் எரியும் பொழுது அழகாக இருக்கும். ஆனால் இப்பொழுது வீதியோர சோலர் மின் விளக்குகள் எரிவதில்லை. 2023 தை மாதம் வந்த பொழுது இவை ஒழுங்காத்தான்இருந்தன (ஒன்றிரண்டு பழுதடைந்தாலும் கூட) ஆனால் இம்முறை ஒன்றுமே எரியவில்லை.. அப்பொழுதுதான் தெரிய வந்தது பழுதடைந்தது, களவு எடுத்துக்கொண்டு போனது, பாராமரிப்பு இல்லை என.. சோலர்களை தனிநபர் ஒருவர்தான் வழங்கியிருந்தார் எனக் கூறினார்கள்( உண்மையா என தெரியாது) ஆனால் அங்கே இருப்பவர்களும் கொஞ்சம் அக்கறை காட்டலாம் தானே.. ஊருக்குப் போய் வரும் சந்தர்ப்பங்களில் சில நடவடிக்கைகளைப் பார்க்கையில் கவலையாகவும் ஒருவித விரகத்தியையும் ஏற்படுத்துவது உண்மை.. அதனால்தான் அப்படி எழுதினேன்.. மற்றப்படி அங்கே வாழ்பவர்களின் நடவடிக்கைகளில் அதிகம் மூக்கை நுளைப்பதில்லை

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

1 day 11 hours ago
பொது சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கட்டுரை என்பதால் இங்கு இணைப்பை தருகின்றேன்.

பொதுத்தேர்தலில் மோடி தோல்வியடையக் கூடுமா?

1 day 11 hours ago
13 MAY, 2024 | 10:28 AM சஷி தரூர் இந்திய பொதுத்தேர்தல் அதன் இரண்டாவது மாதத்தில் பிரவேசித்திருக்கும் நிலையில், மிகவும் சம்பிரதாயபூர்வமான எதிர்பார்ப்புகள் தலைகீழாகப் போய்விட்டன. பெரிய மாறுதல் எதுவும் சாத்தியமில்லை என்று நம்புகின்ற அறிஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வசதியான வெற்றியைப் பெறுவார் என்று நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால், ஏழு கட்ட தேர்தலில் ஏற்கெனவே இரு கட்டங்கள் நிறைவடைந்து, சுமார் 190 தொகுதிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை ஏற்கெனவே பதிவுசெய்துவிட்ட நிலையில் இனிமேலும் நிலைவரம் அவ்வளவு சுலபமானதாக தோன்றவில்லை. வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வருகின்ற மக்களிடம் கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற கணிப்புகளை (Exit Polls) சகல ஏழு கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவடையும் வரை வெளியிடக்கூடாது என்று இந்தியாவின் சுயாதீனமான தேர்தல்கள் ஆணைக்குழு தடைசெய்திருக்கிறது. (இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஜூன் முதலாம் திகதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 வெளியாகும்) ஆனால், பாரதிய ஜனதா கட்சி நினைக்கின்ற மாதிரி நிலைவரம் இருக்கப் போவதில்லை என்பதை வாக்காளர்களின் உணர்வுகள் பற்றிய உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் உறுதியாக வெளிப்படுத்துகின்றன. மூன்றாவது தடவையாகவும் பாரதிய ஜனாதாவுக்கு வாக்களிப்பதற்கான போதுமான காரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. தொழில் வாய்ப்புக்களைப் பெருக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் 2014ஆம் ஆண்டில் மோடியைப் பதவிக்கு கொண்டு வந்தவர்களுக்கு மீண்டும் அவருககு வாக்களிப்பதற்கு காரணம் இல்லை. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மிகவும் அண்மையில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்தாக தோன்றுகின்ற போதிலும், உண்மையான வேலையில்லாத் திண்டாட்ட வீதம் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றதையும் விட மிகவும் அதிகம் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. மேலும், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்களில் 80 சதவீதமானவர்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் குடும்பங்களின் கொள்வனவுச் சக்தியும் சேமிப்புகளும் தகர்ந்து போயிருக்கின்றன. தங்களது நல்வாழ்வை அரசாங்கம் போதுமானளவுக்கு பாதுகாக்கவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். கடுமுயற்சி எடுத்து தன்னைச் சுற்றி கட்டியெழுப்பியிருககும் தனிநபர் வழிபாடு காரணமாக மோடி மிகுந்த செல்வாக்கு கொண்டவராக விளங்குகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரது வேட்பாளர்களை ஆதரிப்பதில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவதாக இல்லை. மோடியின் நடத்தை அவரின் அச்சவுணர்வு அதிகரிப்பதை காட்டுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான அவரின் எச்சரிக்கைகள் இப்போது நேரடித் தாக்குதல்களாக தீவிரமடைந்திருக்கின்றன. எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் மீதான தாக்குதல்களையும் மோடி கடுமையாக தீவிரப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனம் முஸ்லிம் லீக்கின் முத்திரையைக் கொண்டிக்கிறது என்று அவர் கூறுகிறார். இந்துக்களின் தனிப்பட்ட சொத்துக்களை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிமக்களுக்கு பிரித்துக்கொடுத்துவிடும் என்று கூட கடந்தமாதம் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் அவர் கூறினார். காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மோடி முழுவதுமான தவறான முறையில் வியாக்கியானம் செய்கின்றபோதிலும், உண்மையில் அந்த விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் என்ற சொல்லே கிடையாது. சொத்துப்பகிர்வு என்று அதில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. முஸ்லிம்களை இந்தியர்கள் அல்ல ஊடுருவல்காரர்கள் என்றும் அதிகமாகப் பிள்ளைகளைப் பெறுபவர்கள் என்றும் அவர் இகழ்ச்சி செய்கிறார். ஆத்திரமூட்டும் வகையிலான மோடியின் பேச்சக்கள் அவரின் பதவிக்கு இழிவை ஏற்படுத்துகின்றன. ஒரு பிரதமர் நாட்டின் சகல குடிமக்களுக்கும் சேவை செய்பவராக இருக்கவேண்டும். ஆனால் அவர் இந்தியாவின் 20 கோடி முஸ்லிம்களையும் வெள்ப்படையாக அவமதிக்கிறார். பாரதிய ஜனதாவின் வேறு தலைவர்களும் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் பிரசாரங்களையே செய்கிறார்கள். இது அந்த கட்சியினர் மத்தியில் அதிரித்துவரும் நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட்டால் ஷரியா சட்டம் இந்தியாவுக்கு வரும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை உதாரணமாகக் கூறலாம். மத அடிப்படையில் வாக்காளர்களை துருவமயப்படுத்தும் முயற்சி பாரதிய ஜனதாவினால் ஏற்கெனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதன் தர்க்கம் எளிதானது. அதாவது முஸ்லிம்களை பிசாசுகளாகக் காட்டினால் இந்திய சனத்தொகையில் 80 சதவீதத்தினராக இருக்கும் இந்துக்களில் அரைவாசிப் பேரையாவது அவர்களின் மற்றைய வேறுபாடுகளை மறக்கச்செய்து பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் செய்து இன்னொரு தேர்தல் வெற்றியைப் பெறலாம் என்பதே. ஆனால் இந்த தந்திரோபாயம் முற்றுமுழுதாகப் பயன்தரக்கூடியதல்ல. அதனால் பாரதிய ஜனதா பெரும் எண்ணிக்கையான எதிரணி அரசியல்வாதிகளை தனது அணியில் சேர்த்துக்கொள்கிறது. ஊழல் குற்ச்சாட்டுகளுக்கு உள்ளான எதிரணி அரசியல்வாதிகளை மிரட்டி தன்பக்கம் பாரதிய ஜனதா பலவந்தமாக இழுக்கிறது. அவர்களும் வளக்குகளில் சிக்குவதை தவிர்ப்பதற்காக பக்கம் மாறிவிடுகிறார்கள். பாரதிய ஜனதா கறைபடிந்த அரசியல்வாதிகளை சுத்தப்படுத்தும் ஒரு சலவை இயந்திரம் என்பது இப்போது தேசிய அளவில் ஒரு பகிடியாக மாறிவிட்டது. பல்வேறு எதிர்ககட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதிலும் பாரதிய ஜனதா முனைப்புக் காட்டுகிறது. அவற்றில் ஒன்று ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி. அந்த கட்சி சில வருடங்களுக்கு முன்னர் மோடி அரசாங்கத்துக்கு எதிராக ரோக்சபாவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தது. அதன் தலைவர்கள் மோடியை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். இப்போது திடீரென்று அதுவெல்லாம் மறக்கப்பட்டுவிட்டது. கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் பிஜு ஜனதாதள் கட்சியையும் மேற்கு இந்திய மாநிலமான பஞ்சாபில் அகாலி தள் கட்சியையும் தன்பக்கம் இழுக்க பாரதிய ஜனதா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த இரு கட்சிகளும் முன்னைய கூட்டரசாங்கத்தில் பாரதிய ஜனாவை கைவிட்டு வெளியேறியவை. பாரதிய ஜனதாவின் அழைப்பை அவை உதாசீனம் செய்துவிட்டன. கட்சிகளை தன்பக்கம் இழுக்கும் முயற்சிகள் பயனளிக்காத பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக அங்சுறுத்தும் காரியங்களில் பாரதிய ஜனதா இறங்கிவிடுகிறது. டில்லியிலும் பசஞ்சாபிலும் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதைய விசாரணை ஒன்றின் அங்கமாக நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக உள்ள தலைவர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். ஆனால், அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் பிரசாரங்களின் தொடக்கக் கட்டத்தில் அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ராகுல் காந்தியின் ஹெலிகொப்டரில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகக் கூறி அதை சோதனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவையெல்லாம் பரந்தளவு மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறும் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி செய்கின்ற காரியங்கள் அல்ல. மாறாக, வெற்றி தனது கையைவிட்டு நழுவுகிறது என்று அஞ்சுகின்ற கட்சி செய்யக்கூடிய காரியங்கள். 2019 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆறு மாநிலங்களில் சகல லோக்சபா தொகுதிகளிலும் மூன்று மாநிலங்களில் ஒரு தொகுதியைத் தவிர ஏனைய தொகுதிகளிலும் இரு மாநிலங்களில் இரு தொகுதிகளைத் தவிர எனைய தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்த மாநிலங்கள் சகலவற்றிலும் அந்த கட்சி பின்னடைவைக் காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் சொற்ப எண்ணிக்கையான தெ்குதிகளில் தோல்வியடைந்தாலும் கூட, ஒட்டுமொத்தத்தில் பெரும்பான்மையை இழக்கவேண்டிவரும். அதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2019ஆம் ஆண்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்னதாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது ஜாய்ஷ் ஈ முஹமட் என்ற பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமியத் இயக்கம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் பாரதிய ஜனதாவுக்கு கைகொடுத்தது. இந்த தடவை இந்திய வாக்காளர்களை திசைதிருப்பக்கூடிய எந்தவொரு இல்லாத நிலையில் கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற ஒரு வெற்றியை மீண்டும் சாதிக்கமுடியும் என்று பாரதிய ஜனதா நம்பிக்கை வைக்கமுடியாது. பாரதிய ஜனதா வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றாததால் மக்கள் பெரும் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன. https://www.virakesari.lk/article/183377

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

1 day 12 hours ago
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 04:50 PM வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆளுநர் தெரிவித்தார். காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும் ஆளுநர் கூறினார். மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், ஆளுநர் கேட்டுக்கொண்டார். வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார். https://www.virakesari.lk/article/183799

சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்று சிஐடியினர் விசாரணை

1 day 12 hours ago
Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 03:49 PM சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்ற சிஐடியினர் விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர் திருகோணமலையில் உள்ள தனதுதாயாரின் வீட்டிற்கு சிஐடியினர் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்று காலை 10 மணியளவில் மூன்றாவது தடவையாக எந்த முன் அனுமதியுமின்றி CIDயினர் திருகோணமலையில் உள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டார்கள். இங்கு கொழும்பில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள் என் சார்ந்தவை அதை கடந்து செல்ல என்னால் முடிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் இரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டைச் சென்று தட்டினார்கள். புலானாய்வுப் பிரிவினருக்கு எனது விபரங்கள் முழுமையாகத் தெரிந்தும் தொடர்ச்சியாக எனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது. என்னைப் பற்றிய என் குடும்பம் பற்றிய விபரங்களை அம்மாவிடம் கேட்டுள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக இப்படியான மோசமான அத்துமீறல்/ உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. வரும் திங்கட்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன். https://www.virakesari.lk/article/183793

வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்

1 day 13 hours ago
என்ன விலை கொடுத்தாவது அரசாங்கம் அம்மையாரின் விஜயத்தை முடக்க முயற்சி பண்ணும்.

எனது பயண நினைவுகளின் தொகுப்பு

1 day 13 hours ago
தங்கச்சியின் ஊர் மருதங்கேணி போல இருக்கு. இங்கு இந்த ஊர் பெயரிலேயே ஒரு கள உறவு இருக்கிறார். கல்லோ கல்லோ @Maruthankerny உங்க ஊர் படங்கள் தான் வாங்க சார். பாலத்தில் விளக்குகள் எரியவில்லை என்றால் மக்கள் என்னம்மா செய்வார்கள்?

டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல்

1 day 13 hours ago
ஏன் தமிழ் மொழியில் இறைவனை வழிபட்டு செய்ய முடியாது? உலகயே ஆண்ட மொழிக்கு ஓர் வழிபாட்டு முறை இல்லையா? பல கேள்விகளுக்கு பதில் பாருங்கள்.... https://www.facebook.com/story.php?story_fbid=7114182321944764&id=100000591990201&mibextid=jmPrMh&rdid=cX0EgcI4VWWyd4jq மேலுள்ள முகப் புத்தக காணொளியை பார்த்தால் புரிதல் கூடும். டென்மார்க் நாட்டிலுள்ள வேல்முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு நடாத்துவதற்காக, இலங்கையின் திருக்கோணமலையிலிருந்து வந்து வேல்முருகன் கோயிலில் தங்கியிருந்த தம்பிரான் சாமிகள் மீது இரவில் வன்முறைத் தாக்குதல். தமிழில் வழிபாடு நடாத்துவதா எனக் கொதித்தெழுந்த ஆரிய அடிமைகளினதும் சாதியத் திமிர் பிடித்தவர்களுமான சிலரின் கைங்காரியமே இது. தமிழில் வழிபாடு நடாத்துவதா எனத் தமிழர் எனச் சொல்லிக் கொள்ளும் சிலருக்கே சினம் வந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர் எனில் என்ன சொல்வது! இங்கு தமிழ் வழிபாடு மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மட்டுமல்ல, இதனைக் கண்டும் பேசா மடந்தைகளாக ஐரோப்பாவில் வாழும் அனைத்துத் தமிழருமே இதற்குப் பொறுப்பு. உலகு எங்கும் இந்துத்துவாவும் அதன் உடன்பிறப்பான வன்முறையும் பல்கிப் பெருகுகின்றது . இந்துத்துவா என்பது தமிழரிடையே உள்ள ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியின் உயிருக்கே ஒரு நாள் உலை வைக்கும். விழித்துக் கொள் தமிழா! 🙏தமிழா தமிழில் வழிபடு, தமிழால் வழிப்படு🙏 வட்சப் குழுவில் வந்தது, இதன் உண்மைத் தன்மை அறியேன்.
Checked
Sun, 05/19/2024 - 00:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed