புதிய பதிவுகள்2

தமிழ்நாட்டிற்கு தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டு - அதானி குழுமத்தின் பதில் என்ன?

1 day 9 hours ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) விற்ற நிலக்கரியில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சுமார் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஆதரங்களுடன் கூடிய புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை என அதானி குழுமம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்புகொண்டபோது, அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அதானி குழுமம் 2014ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் இருந்து சென்னைக்குக் கொண்டு வந்த 69,925 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி, தரம் குறைந்தது என்றும், ஆனால் அது உயர்தரக் கரி என்று சொல்லப்பட்டு, அதன் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு விற்கப்பட்டதாகவும் அந்தப் புலனாய்வு அறிக்கை சொல்கிறது. 'ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் திட்டம் (Organized Crime and Corruption Reporting Project)' என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை குறித்த செய்தியை பிரிட்டனை சேர்ந்த 'ஃபினான்ஷியல் டைம்ஸ்' பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், 2016-2017ஆம் ஆண்டே புலனாய்வு செய்து இந்த முறைகேட்டைக் கண்டறிந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை புதன்கிழமை (மே 22) வெளியானதில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அறிக்கை சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தோனீசியாவில் இருந்து 69,925 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சென்னை வந்த கப்பல், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களைச் சுற்றிக்கொண்டு வந்ததாக ஒசிசிஆர்பி (OCCRP) அறிக்கை கூறுகிறது. இந்தப் பயணத்தின்போது தரம் குறைந்த நிலக்கரி, உயர்தர நிலக்கரி என்று தகவல் மாற்றப்பட்டு, அதன் விலை மும்மடங்காகி, ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91.91 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 7,655 ரூபாய்) ஆனது என்று தெரிவிக்கிறது. இதற்கான தரவுகள், பல இடங்களில் இருந்து பெறப்பட்ட வங்கி ஆவணங்கள், இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், இந்தோனீசியாவில் அதானி குழுமம் நிலக்கரி வாங்கும் ஒரு முக்கிய நிறுவனம் கசியவிட்ட ஆவணங்கள், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து பெற்ற பல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அதானி குழுமம் வாங்கிய நிலக்கரி நிறுவனங்களுக்கிடையே கைமாறியபோது அதன் தரம் படிப்படியாக உயர்த்திக் காட்டப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தோனீசியாவை சேர்ந்த ஜோன்லின் என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு குறிப்பிடப்படவில்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து கசிந்த ஆவணங்கள் அந்த நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 28 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2,332 ரூபாய்) என்று தெரிவிக்கின்றன. இது அன்று ஜோன்லின் நிறுவனம் தரம் குறைந்த நிலக்கரியை இந்த விலைக்குத்தான் விற்றது என்ற தகவலுடன் பொருந்திப் போவதாகவும் ஒசிசிஆர்பி அறிக்கை கூறுகிறது. ஜோன்லின் நிறுவனம், 'அதானி குளோபல் பிடிஈ சிங்கப்பூர் என்ற நிறுவனத்திற்கு அளித்த விலைப் பட்டியலில் அந்த நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 33.75 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2,811 ரூபாய்) என்று தெரிவித்திருந்தது. மேலும் இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 'ஒரு கிலோவுக்கு, 3,500 கிலோ கலோரிகளுக்கும் குறைவானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தரம் குறைந்த (லோ கிரேட்) நிலக்கரி என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால், சுமார் ஒரு மாத காலத்திற்குப் பிறகு அதே நிலக்கரியில் இந்தத் தகவல்கள் அனைத்தும் மாறியிருந்தன, என்கிறது இந்த அறிக்கை. ஒரு யூனிட் நிலக்கரியின் விலை 91.91 அமெரிக்க டாலர்களாகி இருந்தது. அதேபோல் அதன் கலோரிஃபிக் மதிப்பு ஒரு கிலோவுக்கு 6,000 கிலோகாலரிகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. அதானி குழுமம் 2014ஆம் ஆண்டு வழங்கிய இரண்டு டஜன் நிலக்கரி டெலிவரிகளை ஆய்வு செய்து அவற்றிலும் இதே போக்கு இருப்பதை ஒசிசிஆர்பி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இறுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தரம் குறைந்த நிலக்கரியை, அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இழப்பின் அளவைக் கணித்தது எப்படி? பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM படக்குறிப்பு,இந்த முறைகேட்டை 2016-2017ஆம் ஆண்டிலேயே கண்டறிந்ததாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன். இந்த முறைகேட்டை 2016-2017ஆம் ஆண்டிலேயே கண்டறிந்ததாகக் கூறும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, 2016இல் பல தகவல் அறியும் உரிமை சட்டக் கோரிக்கைகள் மூலம் இதைக் கண்டறிந்ததாகக் கூறினார். "அதன்மூலம், நிலக்கரி இறக்குமதித் தரவுகள், டெண்டர் ஆவணங்கள், கொள்முதல் ஆவணங்கள் ஆகியவற்றைப் பெற்று, அவற்றிலுள்ள தகவல்களை இந்தோனீசிய சந்தை நிலவரத்துடன் ஒப்பிட்டோம்," என்கிறார் ஜெயராமன். அதோடு, தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனமும் (Tamil Nadu Newsprint & Paper Limited - TNPL) இதே நிலக்கரியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்தார். "அவர்களது தரவுகளையும் பெற்று விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி டிஎன்பிஎல் சொந்தமாக வாங்கிய நிலக்கரிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 70 அமெரிக்க டாலர்கள் என்ற விலையைக் கொடுத்தது. ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் கழித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதே நிலக்கரிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91 அமெரிக்க டாலர்கள் என்ற விலைக்கு அதானி குழுமத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கியது," என்றார். அதேபோல் இந்தோனீசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலக்கரி விலைகளையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்த முறைகேடு தெரிய வந்ததாகவும் ஜெயராமன் தெரிவித்தார். இந்தத் தரவுகளை வைத்துதான் இந்த முறைகேடுகளால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3,000 கோடி என்பதைக் கணித்ததாகச் சொல்கிறார் அவர். "சுங்கத்துறையின் தரவுகள் இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 4,000 கிலோகாலரிகள் என்கின்றன. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகமும் (Comptroller and Auditor General - CAG) இந்த நிலக்கரியில் மூன்றில் ஒரு பங்கு தரமற்றது என்று தெரிவித்திருக்கிறது," என்றார் ஜெயராமன். இதுகுறித்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ-க்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளித்ததாகவும், ஆனால் அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார் அவர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் பொதுத் துறையிலும், மின்சாரத் துறையிலும் புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் இன்னும் அரசு இதில் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது என்றும் கூறினார். அப்போதைய மின்துறை அமைச்சரின் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தக் குற்றச்சாட்டுகளை அப்போது தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதை நத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதனிடம் முன்வைத்தோம். "இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை," என்று கூறினார் நத்தம் விஸ்வநாதன். மேலும் பேசிய அவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் "நிலக்கரி கொள்முதல் குறித்த முடிவுகள் தனியொரு நபரால் எடுக்கப்படுவதில்லை, அது ஒரு குழுவால் எடுக்கப்படுபவை. அதனால் எந்தவொரு தனிப்பட்ட நபரும் இதற்குப் பொறுப்பாக முடியாது" என்றார். இதுபோன்ற முடிவுகளை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்துதான் எடுப்பார்கள் என்றும். தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் அவர், "இன்று நடக்கும் பல ஊழல்களை மறைக்க இதுபோன்ற பழைய விஷயங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் முகாந்திரமின்றி முன்வைக்கப்படுகின்றன," என்றார். அதானி குழுமத்தின் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமத்தின் பதிலை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அந்நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டது. அதற்கு அந்நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்துள்ளது. அதன்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் 'பொய்யானவை, மற்றும் அடிப்படையற்றவை' என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், அதானி குழுமம் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசாணை எண் 89இன் படி இந்த ஒப்பந்தம் நிலையான விலையின் அடிப்படையிலானது. வெளிப்படையான, போட்டி ரீதியான நடைமுறையின் மூலம் இந்த ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றது. அதன்படி, அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனவே, சந்தை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம், விலை உள்பட எந்த வகையான விநியோக அபாயங்களில் இருந்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டது,” எனக் குறிப்பிட்டுள்ளது. விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏதேனும் எதிர்மறையாக இருந்தால், அதை விநியோகிப்பவரே முழுமையாக ஏற்க வேண்டும் எனத் தனது பதிலில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதோடு, 7.2.2014 தேதியிட்ட அரசாணை 89இன் படி, மொத்த ஒப்பந்த அளவான 3.7 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில், 2.1 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஒப்பந்தத்தின்படி, “விநியோகிக்கப்படும் நிலக்கரியின் மொத்த கலோரிஃபிக் மதிப்பு, ஒரு கிலோவுக்கு 5,800 முதல் 6,700 கிலோ கலோரி (kcal/kg) இருக்க வேண்டும். நிலக்கரி காற்றில் உலர அனுமதிக்கப்பட்ட பிறகே அதன் தரம் கணக்கிடப்படுகிறது (air dried basis - ADB). மேலும், நிலக்கரி விநியோகிப்பவர் கலோரிஃபிக் மதிப்பு 5,800க்கும் குறைவாக உள்ள நிலக்கரியைக்கூட விநியோகிக்க முடியும். ஆனால், அதற்கு செலுத்தப்பட வேண்டிய தொகையில் இருந்து அதிகமான அபராதம் சரிசெய்யப்படும்,” என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் மற்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட தரம் குறைந்த நிலக்கரியை அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கியதாகக் கூறுவதும் தவறானது என விளக்கம் அளித்துள்ளது. நிலக்கரியின் தரம் அது விநியோகிக்கப்படும் ஆலைகளில் மட்டுமல்லாமல், அவை ஏற்றப்படும் துறைமுகம், இறக்கி வைக்கப்படும் துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளால் பல்வேறு நிலைகளில் சோதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அதானி நிறுவனம், இந்தச் சோதனை முறை சுயாதீனமானது மற்றும் வெளிப்படையானது எனத் தெரிவித்துள்ளது. எனவே, பல்வேறு நிலைகளில் இத்தகைய விரிவான தரச் சோதனை முறைகளைக் கடந்து விநியோகிக்கப்படும் நிலக்கரி, தரம் குறைந்தது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது மட்டுமல்லாமல், நியாயமற்றதும் அபத்தமானதும்கூட என அதானி குழுமம் கூறியுள்ளது. மேலும், அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமம், அந்த அமைப்பின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளித்துள்ளதாகவும் அத்துடன் அந்த விவகாரம் முடிவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு கூறுவது என்ன? அதானி குழுமம் மீதான இக்குற்றச்சாட்டுகள் குறித்தும், இதுகுறித்து தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற 'அறப்போர் இயக்கத்தின்' புகார் குறித்தும் விளக்கத்தைப் பெற தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. எனினும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானியின் கருத்தைப் பெறவும் பிபிசி தமிழ் முயன்றது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றும் பலனளிக்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் கட்டுரையில் சேர்க்கப்படும். https://www.bbc.com/tamil/articles/ckrrv31zknpo

இன்றைய வானிலை

1 day 9 hours ago
இன்றைய வானிலை 25 MAY, 2024 | 06:48 AM தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 கிலோமீற்றர் ஆக அதிகரித்தும் காணப்படும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார். https://www.virakesari.lk/article/184425

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

1 day 9 hours ago
SRH vs RR: பேட் கம்மின்ஸ் ஷாபாஸ், அபிஷேக்கை வைத்து போட்ட திட்டம் - சுழலில் சுருண்ட ராஜஸ்தான் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் “மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் சத்தத்தை நிசப்தமாக்குவதில் இருக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை.” உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக, 2023, நவம்பர் 18ஆம் தேதி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படிப் பேசினார். மறுநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தி மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் ரசிகர்களையும் நிசப்தமாக்கினார். “எங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வெல்ல உரிமை இருக்கிறது, அந்த நாட்களும் உள்ளன. அடுத்தடுத்து வெற்றி பெறுவோம்.” ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவிடம் தோற்றபோது 2024, மே 21ஆம் தேதி சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியது. பேட் கம்மின்ஸ் தான் கூறியதைச் செய்து காட்டும் பணியில் இறங்கிவிட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 2016, 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றிருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு கோப்பைக்காக பலப்பரிட்சை சன்ரைசர்ஸ் அணி நடத்தவுள்ளது. இதற்கு முன் 2016, 2017 எலிமினேட்டர் சுற்றுகளிலும் 2018ஆம் ஆண்டு 2வது தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது 5வது முறையாக கொல்கத்தா அணியை நாக்-அவுட்டில் சன்ரைசர்ஸ் சந்திக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹீரோ சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டம் பட மூலாதாரம்,SPORTZPICS சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனித்துவமான சுழற்பந்துவீச்சாளர்கள் யாருமின்றி பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ராஜஸ்தான் கதையை முடித்துள்ளார் கேப்டன் கம்மின்ஸ். இந்த ஆட்டத்தில் பந்துவீசிய ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மா இருவரும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீசிய அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், இருவரையும் சரியாகப் பயன்படுத்தி, ராஜஸ்தான் பேட்டிங் வரிசையை கம்மின்ஸ் உலுக்கிவிட்டார். ஷாபாஸ், அபிஷேக் இருவரின் பந்துவீச்சு மீதும் கம்மின்ஸ் வைத்திருந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்றினர். இருபது ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 9 ஓவர்கள் வீசினர். இதில் ஷாபாஸ், அபிஷேக் தலா 4 ஓவர்கள், மார்க்ரம் ஒரு ஓவர் 3 பேரும் சேர்ந்து 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் ஷாபாஸ், அபிஷேக் இருவரும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் மட்டுமே வழங்கினர். கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும், கிளாசனுடன் கூட்டணி அமைத்து ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்த ஷாபாஸ் அகமது ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இலக்கை அடைந்துவிட்டோம்' பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “2023ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருவதைப் பார்த்து வருகிறார்கள். எங்களின் இலக்கு இறுதிப் போட்டிதான் அதை அடைந்துவிட்டோம்." "எங்கள் பேட்டிங் வலிமை, பந்துவீச்சு திறமை எங்களுக்குத் தெரியும். அதேநேரம், எதிரணியின் பலத்தையும் குறைவாக மதிப்பிடவில்லை. இறுதிப்போட்டி நிச்சயம் கடினமானதாக இருக்கும்," என்று தெரிவித்தார். பொய்யான ராஜஸ்தான் கணிப்பு ராஜஸ்தான் அணி டாஸ் வென்றவுடன் சேப்பாக்கம் ஆடுகளத்தை தவறாகக் கணித்து இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அது மட்டுமல்லாமல் சேப்பாக்கத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவு 62 மீட்டராக சிறியதாக இருப்பதால் சேஸிங் செய்துவிடலாம், எளிதாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கலாம் என்று ராஜஸ்தான் அணியினர் கணித்தனர். ஆனால், எதுவுமே ராஜஸ்தான் அணி நினைத்தது போன்று நடக்கவில்லை. சேப்பாக்கத்தில் எதிர்பார்த்த அளவு நேற்று பனிப்பொழிவு இல்லாததால், பந்து காய்ந்தவாறே இருந்ததால் சுழற்பந்துவீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைத்தது. இதனால்தான் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் வீசும் பந்து நன்றாகச் சுழன்று, பேட்டர்களை திணறடித்தது. சேப்பாக்கத்தில் பனிப்பொழிவு நேற்று பெரிதாக இல்லாததால் ஆடுகளமும் வறண்டிருந்தது, பந்தும் காய்ந்திருந்ததால் சன்ரைசர்ஸ் அணி பெரிய அதிசயத்தை நிகழ்த்தியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்குக் காரணம் என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் அணியின் நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது கிளாசனின்(50) பொறுமையான பேட்டிங்கும், ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவின் பந்துவீச்சும்தான். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பையே உடைத்துவிட்டனர். குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு தங்களின் ஸ்கோரை டிபெண்ட் செய்ய உதவியது. அதிலும் இம்பாக்ட் ப்ளேயராக வந்த ஷாபாஸ் அகமது பேட்டிங்கில் 17 ரன்கள் சேர்த்து கிளாசனுடன் சேர்ந்து 45 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தார். அது மட்டுமல்லாமல் பந்துவீச்சில் ராஜஸ்தான் பேட்டர் ஜெய்ஸ்வாலை(41) செட்டில் ஆகவிடாமல் விக்கெட்டை வீழ்த்தி ஷாபாஸ் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 2022க்குப் பின் ஜெய்ஸ்வால் முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் தனது விக்கெட்டை நேற்று இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ரியான் பராக், அஸ்வின் இருவரது விக்கெட்டையும் ஷாபாஸ் வீழ்த்தி ஆட்டத்தின் துருப்புச்சீட்டாக இருந்தார். பட மூலாதாரம்,SPORTZPICS ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பின் ஐபிஎல் தொடரில் பந்துவீச வாய்ப்பு பெறாத ஷாபாஸ் நேற்றுதான் பந்துவீசினார். ஆனால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். அதேபோல அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் 4 ஓவர்களை முழுமையாக 2வது முறையாக நேற்றுதான் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதிரடி பேட்டரும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவையும் கம்மின்ஸ் நேற்று நன்றாகப் பயன்படுத்தினார். அபிஷேக் ஷர்மா ஓரளவுக்கு பந்துவீசக் கூடியவர் என்றாலும் அவர் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் முழு ஓவர்களையும் வீசியதில்லை. ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவை சிறப்பாகப் பயன்படுத்தி 4 ஓவர்கள் வீச வைத்து 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த கம்மின்ஸ் காரணமாக அமைந்தார். பேட்டிங்கில் இரு தகுதிச்சுற்றுகளிலும் ஜொலிக்காத அபிஷேக் நேற்று பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். இந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் ஆடிய அபிஷேக் ஷர்மா 482 ரன்கள் குவித்து, 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். “இந்திய அணியின் சொத்தாக மாறிவரும் அபிஷேக்கை எவ்வாறு தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். அபிஷேக், ஷாபாஸ் இருவரும்ம் பந்துவீச வந்த பிறகு 33 பந்துகளாக ராஜஸ்தான் அணி ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. 4 விக்கெட்டுகளையும் இழந்தது. கிளாசன் எனும் ‘கேம் சேஞ்சர்’ பட மூலாதாரம்,SPORTZPICS ஹென்ரிச் கிளாசன் இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறந்த பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும், ஃபினிஷராகவும் கிளாசன் இருக்கிறார். கிளாசன் நேற்று களமிறங்கியபோது, சன்ரைசர்ஸ் 99 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது கிளாசன் களமிறங்கி ஆங்கர் ரோல் செய்து, தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இருபது பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து நிதானமாக ஆடிய கிளாசன், சஹல் ஓவரை குறிவைத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வெளுத்து 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசன் அடித்த 50 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி கௌரவமான ஸ்கோரை பெறக் காரணமாக அமைந்தது. ஒருவேளை கிளாசன் ஸ்கோர் செய்யாமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள்கூட சுருண்டிருக்கலாம். ஆகவே, கிளாசனின் ஆட்டம்தான் கேம் சேஞ்சராக இருந்தது. ராஜஸ்தான் செய்த தவறுகள் பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணி, ஆடுகளத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி சேஸிங் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டது. தொடக்கத்தில் டிரென்ட் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸை சுருட்ட வாய்ப்பை ஏற்படுத்தியும் அதைப் பயன்படுத்தவில்லை. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால்(42), துருவ் ஜூரெல்(56) தவிர வேறு எந்த பேட்டர்களும் பங்களிப்பு செய்யவில்லை. ராஜஸ்தான் பந்துவீச்சைப் பொருத்தவரை டிரென்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, ஆவேஷ்கான் ஆகியோர் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்து சன்ரைசர்ஸ் அணியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. அந்தத் தருணத்தை இறுகப் பிடித்திருந்தால், நிச்சயம் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கும். ஆனால், அதன் பிறகும் 55 ரன்கள் சேர்க்கவிட்னர். 'ஆடுகளத்தை தவறாகக் கணித்தோம்' பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “எங்களின் பந்துவீச்சாளர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பனிப்பொழிவு இருக்கும் என நாங்கள் கணித்துவிட்டோம். ஆனால், 2வது இன்னிங்ஸில் விக்கெட் வேறுவிதமாகத் திரும்பிவிட்டது." "எங்களுக்கு எதிராகத் தரமான சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தினர். அனைவருமே சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். இந்திய அணிக்கு செறிவு, திறமை மிகுந்த இளைஞர்கள் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார். சேஸிங்கில் சிறப்பாக ஆடக்கூடிய ராஜஸ்தான் அணி நேற்று சொதப்பியது. ஜாஸ் பட்லருக்கு பதிலாக வந்த காட்மோர் குறிப்பிடத்தக்க வகையில் ஆடவில்லை. கேப்டன் சாம்ஸன் போட்டியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தவறான ஷாட்டை அடித்து 10 ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். நம்பிக்கை நாயகன் ரியான் பராக் 6 ரன்னில் ஷாபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் துருவ் ஜூரெல் மட்டுமே 35 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். https://www.bbc.com/tamil/articles/c9xxlzy32k8o

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 10 hours ago
யாழ்ப்பாணத் தமிழர்களை அரசியலில் இருந்து ஒதுங்கவைத்திருப்பது இன்றைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்தான் என்று நான் எழுதும்போது, நான் அவர்களைத் துரோகிகள் என்று கூறுகிறேன் என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்வது? முள்ளிவாய்க்காலில் இனவழிப்பிற்கு நீதிகேட்டு அழும் தமிழர்களையும், நாகவிகாரையில் வேடிக்கை பார்க்கும் தமிழர்களையும் நான் ஒப்பிட்டால், நான் அவர்களைத் துரோகிகளாகப் பார்க்கிறேன் என்று நீங்கள் நினைப்பது உங்களின் விருப்பம், அதிலும் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. தமிழர்களாக ஒன்றிணையுங்கள், சேர்ந்தே போராடலாம் என்று நானழைப்பது உங்களைப்பொறுத்தவரையில் அவர்களை நான் துரோகிகளாக பார்க்கிறேன் என்று பட்டால், மன்னித்துக்கொள்ளுங்கள், அது எனது நோக்கமில்லை. மேய்ப்பாரின்றி அநாதைகளாக நிற்கிறோம். இதுதான் எனது ஆதங்கம். முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு நேராகவே எழுதலாம், மூன்றாம் மனிதர் போன்று ஏன் பொதுவாக எழுதுகிறீர்கள்?

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 10 hours ago
இது எல்லாம் நாடகத்துக்காக குருமாரை வலிந்து வரவைப்பதால்..நடப்பது.. தயிட்டி விகாரைக்கு சிங்களவன் பஸ்சில் ஏற்றி வரப்படுகிறான்..அவனுக்கு காசும் சாப்பாடும் குடிபானமும் கொடுக்கப்படுகிறது..ஆமியின் உசாரில் தமிழனை வெருட்டவும் செய்கிறான்.. ஆரியகுளத்திலோ..வெளிநாட்டுக்காசில்..வயிறுவளர்ப்போர்..உடுப்பையும் ..செல்வாக்கைய்ம் காட்ட வருகின்றனர்..இவையின் சோடனைகளை சோக்காட்ட ..காணோளி வர்ணணை யாளர் இருக்கினம்..இன்னொரு சாரார் இலவசம் சாப்பாடுமட்டும் பெற வருகினம்...இங்கு இன உணர்வு அரசபலத்தால் மழுங்கடிக்கப்படுகிறது...என்ன செய்வது ..தமிழனின் விதி..

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 10 hours ago
எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்: தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம், பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம், பின் போராட போன சக தமிழ் இயக்கங்களை துரோகிகள் என்றோம், பின் சக போராளிகளையே துரோகிகள் என்றோம். இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்.. ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.

ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்.

1 day 14 hours ago
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், "யாழ்ப்பாணம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தச் சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இன்று இங்கு வந்தமைக்குத் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். இன்று திறந்து வைக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்குக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் ஒரு நல்ல முதலீடாகும் எனச் சுட்டிக்காட்டலாம். மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகின்றேன். ஜனாதிபதி விசேட கவனம் முன்னதாக இந்தச் சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 2005 இல் உங்கள் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நான் வாழ்த்துகின்றேன். இந்த முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்பதுடன், இந்த விஜயத்தின்போது வடக்குக்கு அவர் ஆற்றி வரும் அனைத்துப் பணிகளையும் பாராட்டுகின்றோம்." - என்றார். https://tamilwin.com/article/president-development-of-north-and-east-1716595304 இதைவிட ஜனாதிபதியை யாராலும் புகழ முடியாது. நிச்சயம் அமைச்சர் பதவி கொடுக்கத் தான் வேண்டும்.

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

1 day 14 hours ago
தமிழர்கள் முன்வைத்த நான்கம்சக் கோரிக்கையினை முற்றாக நிராகரித்த அரசாங்கமும், பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக முடிவெடுத்த தமிழர்களும் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் தான் முதலாவது கட்டப் பேச்சுக்களுக்கு அனுப்பிய குழுவையே ஹெக்டர் ஜயவர்த்தனவின் தலைமையில் ஜெயார் அனுப்பிவைத்தார். தமிழர் தரப்பில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டெலோ அமைப்பின் மோகனுக்குப் பதிலாக கொழும்பு நீதிமன்றத்தில் தங்கத்துரையின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா கலந்துகொண்டார். சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா ஆவணி 12 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. தாம் தயாரித்துக் கொண்டுவந்த அறிக்கையினை ஹெக்டர் படித்தார். " அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எமது புதிய ஆலோசனைகளை உங்களுக்கு முன்வைக்குமுன், இலங்கையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் மக்கள் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அமைப்புக்கள் முன்வைத்த நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவது எனது கடமை" என்று அவர் ஆரம்பித்தார். இலங்கையரசின் இந்த ஆரம்ப அறிக்கையே தமிழர் தரப்பினை சினங்கொள்ள வைத்தது. பேச்சுக்களில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பிரதிநிதிகள் இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று முதலாம் கட்டப் பேச்சுக்களில் தான் முன்வைத்த வாதத்தினை ஹெக்டர் மீளவும் எழுப்பினார். முதலாம் கட்டப் பேச்சுக்களின்போது , தனது தரப்பே இலங்கையிலிருக்கும், தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் வாதிட்டிருந்தார். ஹெக்டரின் இந்த கூற்றிற்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழர் தரப்பு வெளிநடப்புச் செய்ய எத்தனித்தவேளை, "இங்கு வந்திருக்கும் தமிழர் தரப்பை அரசியல் தீர்விற்காக பேச்சுக்களில் ஈடுபடக்கூடிய தரப்பாக தன்னால் ஏற்றுக்கொள்ளவியலும்" என்று சமாளித்திருந்தார். ஹெக்டரின் இந்த சமாளிப்பு அதிதீவிர சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்பினைச் சம்பாதித்திருந்தது. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வில் அவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளும் இடம்பெறவேண்டும் என்கிற கோரிக்கையினை ஹெக்டர் தனது நீண்ட ஆரம்ப உரையினூடாக முற்றாக நிராகரித்தார். முதலாவதாக, இலங்கைத் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். தமிழர்களைத் தனித்துவமான தேசிய இனம் என்று அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தனிநாடொன்றிற்கு உரியவர்கள் என்பதனையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடும் என்று அவர் கூறினார். அரசால் அதிகபட்சமாக செய்யக்கூடியது, இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் கூட்டங்களில் தமிழர்கள் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டம் என்று ஏற்றுக்கொள்வது மட்டும் தான் என்று கூறினார். மேலும், இலங்கையில் வாழும் இனக்குழுமங்களில் ஒன்றான தமிழர்கள் எதிர்நோக்கும் உரிமைப் பிரச்சினைகள் குறித்து தனது குழு பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "அரசியற்சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான ஆணைக்குழுவொன்றினை எம்மால் உருவாக்க இயலும். தேவையென்றால், சிறுபான்மையினருக்குத் தேவையானளவு பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான சபை ஒன்றையும் எம்மால் ஏற்படுத்தித் தர முடியும்" என்றும் கூறினார். இரண்டாவதாக, தமிழரின் தாயகம் என்று ஒரு பிரதேசம் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையினையும் தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் கூறினார். தமிழர்களின் தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டால், இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான பிரதேசமொன்றினை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்துவிடும் என்றும், இதனை ஒருபோதும் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். தமிழர்களின் இந்தக் கோரிக்கை நாட்டின் எல்லாவிடங்களும், எல்லாப்பகுதிகளும் நாட்டில் வாழும் அனைத்து இனமக்களுக்கும் பொதுவானவை எனும் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்றும், தாம் விரும்பிய நாட்டின் எப்பகுதியிலும் குடியேற முடியும் என்கிற தனிமனித உரிமைக்கு அது முரணானது என்றும் அவர் வாதிட்டார். மேலும், தமிழர்களுக்கான தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், நாட்டில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குடியேற்றத்திட்டங்கள் இதனால் பாதிப்படைந்துவிடும், நிறுத்தப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார். வேண்டுமானால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் குடியேற்றங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரமுடியும், ஆனால் ஏனைய இனங்களும் இப்பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மூன்றாவது கோரிக்கையான தமிழர்களின் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை அவர் அடியோடு நிராகரித்தார். காலணித்துவ ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் கூட்டத்திற்கு மட்டுமே இந்த சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாடு பாவிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடுகளில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு சுய நிர்ணய உரிமையினை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் கிடையாது என்று அவர் கூறினார். இறுதியாக, தமிழ் மக்களின் பிரஜாவுரிமை குறித்து கோரிக்கை முன்வைக்க தமிழர் தரப்பினருக்கு இருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்து அவர் கேள்வியெழுப்பினார். சர்வகட்சி மாநாட்டில் அரசாங்கம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையினைக் கொடுக்க ஆவன செய்யும் என்று கூறியிருக்கிறதே? இந்திய வம்சாவளி மக்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் இதுகுறித்து அரசு பேசிக்கொள்ளும், நீங்கள் அதுகுறித்துக் கேள்விகேட்கமுடியாது என்று அவர் கூறினார். தனது ஆரம்பப் பேச்சினை பின்வரும் அதிரடி அறிவிப்புடன் ஹெக்டர் ஜெயவர்த்தன நிறைவுச் செய்தார். "திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தம் பின்வரும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே நிறைவேற்றப்படும், 1. எல்லா ஆயுத அமைப்புக்களும் தமது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும் 2. இலங்கையில் இயங்கும் அனைத்து ஆயுத அமைப்புக்களும் தமது ஆயுதங்களையும், தளபாடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். 3. இலங்கையிலும், அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பயிற்சி முகாம்களையும் உடனடியாக மூடிவிட வேண்டும். 4. சாதகமான சூழ்நிலை இருந்த காலத்தில் இன்று அகதிகளாக்கப்பட்டிருப்போர் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்களோ, அந்த இடங்களுக்கு அவர்கள் இடைஞ்சலின்றி திரும்ப ஆவன செய்யப்பட வேண்டும். 5. அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு, ஒவ்வொரு இன மக்களும் தமது மதத்தைச் சுதந்திரமாக வழிபட அனுமதியளிக்கப்படவேண்டும் என்பதுடன், வன்முறையில் பாதிக்கப்பட்ட மத வணக்கத் தலங்கள் திருத்தியமைக்கப்படும். 6. அரசாங்கம் முன்வைக்கும் முன்நிபந்தனைகளை ஆயுத அமைப்புக்கள் ஏற்றுகொண்டாலன்றி அவர்களின் குற்றச்செயல்களுக்கான பொதுமன்னிப்பு என்பது தரப்பட மாட்டாது. இவற்றின் அடிப்படையில் மட்டுமே எந்த இணக்கப்பாடும் அமையவேண்டும் என்பதுடன், நாட்டில் அமைதியும் ஏற்படுத்தப்பட முடியும்" என்று பேசி முடித்தார். லோரன்ஸ் திலகர் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்த நிபந்தனைகளை நேரடித் தொலைபேசியூடாக கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் தங்கியிருந்த பாலசிங்கத்திடம் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் லோரன்ஸ் திலகர் அறியத் தந்தார். இதனை சேலம் பயிற்சி முகாமில் இருந்த பிரபாகரனிடமும், ஏனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமும் பாலசிங்கம் தெரியப்படுத்தினார். இதனையடுத்து பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவது என்று போராளிகளின் தலைவர்களால் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனைச் செய்வதற்கு சரியான தருணத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 14 hours ago
ஈழப்பிரியனுடன் ஒரு பகிடி விடுவதற்காகவே அதை எழுதியிருந்தேன்.....மற்றபடி எந்தக் கடவுளும் எந்த நோயையும் கொடுப்பதில்லை .......👍...எங்கள் ஊரில் இப்படியான சில நோய்களை அம்மாளாச்சி கொடுப்பதாக சொல்வார்கள். ஓரு வெருட்டல் தான்....😀

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 14 hours ago
இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது. ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை வரவேற்றவர்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 14 hours ago
இது நேற்று தையிட்டியில் தமிழர்களின் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவமும், பிக்கு ஒருவனும் அமைத்துவரும் விகாரையினை எதிர்த்துப் போராடும் ஒரு சில தமிழ் மக்கள். ஒரு அரசியற் கட்சியையும், சில பத்து மக்களையும் தவிர இது ஒரு பிரச்சினையாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கேட்டால், "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால், இப்போராட்டங்களுக்கு ஆள்த்திரட்டவும் சிரமப்பட வேண்டி வரும்" என்று எச்சரிக்கைகள். இந்த மக்களை நீங்கள் திரட்டத் தேவையில்லை. தாமாக தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் இன்னமும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் உண்மை. நாக விகாரையில் வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டமெங்கே, இந்த மக்கள் எங்கே?

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 16 hours ago
நாவற்குழியில், திருகோணமலையில், தையிட்டியில் இதே இராணுவம் தான் விகாரையினைக் கட்டியது. நாவற்குழி விகாரைக்கு முதன்முதலான சமய அனுட்டானங்களை ஆரம்பித்து வைத்தவனே சவேந்திர சில்வாதான். இன்று, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமித்து நிற்கும் எல்லா இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலீஸ் முகாம்களுக்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடாத்தாக விகாரைகளைக் கட்டிவருவதும் அதே இராணுவம்தான். மாங்குளத்தில் கட்டப்பட்ட விகாரையினைச் சுற்றிச் சிங்களக் கிராமமும், நாவற்குழியில் சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரண சிங்கள வியாபாரிகளும், மக்களும் இல்லாததால்த்தான் இராணுவம் பண்டிகை நடத்தியது, மென்பானம் கொடுத்தது என்று எழுதுகிறீர்களே? ஆக்கிரமிப்பை நடத்துவது இராணுவம். அதன்பின்னரே சாதாரண மக்களும், வியாபாரிகளும் கொண்டுவந்து இறக்கப்படுவார்கள். வடக்குக் கிழக்கு பூகோள இணைப்பை உடைத்தெறிய‌ மணலாற்றில் 80 களில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், அந்த இராணுவ முகாம்களைச் சுற்றி மென்மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். முகாம்களுக்கு சிங்கள மக்கள் பாதுகாப்பு, சிங்கள மக்களுக்கு முகாம்கள் பாதுகாப்பு என்று அன்று அரசு திட்டமிட்டுக் குடியேற்றம் செய்தது, இன்றும் அப்படித்தான். உங்களுக்குப் புரியாது. எழுதினால், என்னை மனநலம் குறைவானவன் என்று எழுதுகிறீர்கள். ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 16 hours ago
இதுதான் அடிப்படை. இது பலருக்குப் புரிவதில்லை. அறைக்குள் இருக்கும் யானையினைப் பார்க்க பலருக்கு முடிவதில்லை. கேட்டால் தீவிரக் கண்ணாடி போட்டுப் பார்க்கிறோம் என்று எங்களைக் கூறுகிறார்கள். சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுப்பெற்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகிடைத்து, தமிழர்கள் கெளரவமாகவும், சுயமரியாதையாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலை வரட்டும். பின்னர் இரு சகோதர இனங்களாக, இரு சமத்துவ இனங்களாக அவன் வெசாக்கை எமது தாயகத்திலும், நாம் எமது பொங்கலை அவனது தாயகத்திலும் கொண்டாடலாம்.
Checked
Sun, 05/26/2024 - 14:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed