விளையாட்டுத் திடல்

அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை

Sun, 23/04/2017 - 07:35
அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை
 

Rollins.jpg
பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவிக்காதமையினால் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு கழகம் அறிவித்துள்ளது.

https://globaltamilnews.net/archives/24800

Categories: merge-rss

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை

Fri, 21/04/2017 - 15:29
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 
 ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை
 
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பயின்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முடிவடைந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), யுவான்டஸ் (இத்தாலி), மொனாகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரையிறுதியின் முதல் லெக் இந்திய நேரப்படி மே 2-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்குகிறது. ஒரு போட்டியில் மொனாகோ - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மொனாகோவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறுகிறது.

201704211734272341_griezmann-s._L_styvpf

மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ரியல் மாட்ரிட்டிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறுகிறது.

2-வது லெக் மே 10-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகள், யுவான்டஸ் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு சொந்தமான மைதானத்தில் நடக்கிறது.

201704211734272341_dybala-s._L_styvpf.gi

இரண்டு போட்டிகளிலும் சேர்ந்து அதிக கோல்கள் அடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/21173411/1081179/UEFA-ChampionsLeague-Real-Madrid-to-face-Atletico.vpf

Categories: merge-rss

பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர்

Thu, 20/04/2017 - 13:35
பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர்

 

இங்கிலாந்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 18 வயதே ஆன இளம் வீரர் இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 
 
பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர்
 
இங்கிலாந்தின் சுர்ரே பகுதியைச் சேர்ந்தவர் பில்லி மாங்கர். கடந்த வாரம் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. டோனிங்க்டன் பார்க் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜே.எச்.ஆர். டெவ்லெப்மென்ட்ஸ் அணி சார்பாக பில்லி மாங்கர் பங்கேற்றார்.

எதிர்பாராத விதமாக இவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருடைய இரண்டு கால்களையும் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை பில்லி மாங்கரின் குடும்பம் மற்றும் அவரது கார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மருத்துவ செலவிற்காக சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பவுண்டு தேவைப்படும் என்ற சூழ்நிலையில், பார்முலா ஒன் சாம்பியன் லெவிஸ் ஹாமில்டன் மற்றும் ஜேன்சன் பட்டன் ஆகியோர் உதவியுடன் நிதி திரட்டப்பட்டது.

எதிர்பார்த்ததை விட அதிக நிதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20171033/1080958/Billy-Monger-Teenage-racing-driver-has-both-legs-amputated.vpf

Categories: merge-rss

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்

Thu, 20/04/2017 - 13:31
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்
 

ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் இரண்டு லெக்குகள் முடிவில் பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது யுவான்டஸ்.

 
 
 
 
 காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்
 
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதியின் 2-வது லெக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. 2-வது லெக் நேற்று பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 4-0 என யுவான்டசை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை பார்சிலோனாவிற்கு இருந்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.எஸ்.ஜி. அணிகெதிராக இதுபோன்றுதான் 4-0 என பின்தங்கிய நிலையில் இருந்து பார்சிலோனா, தனது சொந்த மைதானத்தில் 6-1 என பி.எஸ்.ஜி-யை வீழ்த்தியது.

இதுபோன்ற அதிசயம் நேற்றும் நடைபெறும் என பார்சிலோனா அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யுவான்டஸ் அணியின் அபாரமான ஆட்டத்தால் பார்சிலோனா அணியால் ஒரு கோல்கள் கூட அடிக்க முடியவில்லை. அதைபோல் ஒருகோலும் வாங்கவில்லை. இதனால் 2-வது லெக் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்றதால் இரண்டையும் சேர்த்து 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

201704201603360495_messi1-s._L_styvpf.gi

மற்றொரு ஆட்டத்தில் மொனாகோ 2-வது லெக்கில் டோர்ட்மன்ட் அணியை 3-1 என வீழ்த்தியது. முதல் லெக்கில் 3-2 என மொனாகோ வெற்றி பெற்றது. மொத்தத்தில் 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

201704201603360495_neymar-s._L_styvpf.gi

பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணியும், லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

201704201603360495_pique-s._L_styvpf.gif

அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்ற அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20160322/1080942/Juventus-beats-barcelona-and-entered-semi-final.vpf

Categories: merge-rss

புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ்

Thu, 20/04/2017 - 13:29
புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ்
 
 

மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

செரீனா

35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்னிஸ் தொடர்களில் இருந்து விலக உள்ளார்.

23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த செரீனாபடத்தின் காப்புரிமைAFP Image caption23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த செரீனா

எதிர்வரும் ஃபிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களும் செரீனா விளையாடாமல் போகும் தொடர்களில் உள்ளடங்கும்.

உலகின் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை அடுத்த வாரம் பெறவுள்ள செரீனா, தரவரிசை தொடர்பாக மகளிர் டென்னிஸ் குழுமத்தின் சிறப்பு விதியின்படி, குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குள் தனது முதல் தொடரை விளையாட தயாரானால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வார்.

செரீனா கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தி குறித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமைப்பு கருத்து வெளியிடுகையில், 'அவருக்கே சொந்தமாக போகும் ஒரு பெருமை மற்றும் மகிழ்ச்சி விரைவில் செரீனாவுக்கு கிடைக்கப் போகிறது. குழந்தை பிறக்கப் போகிறது என்ற இந்த உற்சாகமான அறிவிப்புக்கு வாழ்த்துக்கள்!' என்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது.

கவிதை வடிவில் திருமண நிச்சயத்தை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்

முன்னதாக , கடந்த ஆண்டின் இறுதியில் பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக , ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை செரீனா ஒரு கவிதை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒஹானியனும் தானும் முதலில் சந்தித்து கொண்ட ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகவும், தான் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் செரீனா தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sport-39651561

Categories: merge-rss

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...

Thu, 20/04/2017 - 11:48
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது     சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட்

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர்.

 
 
 
 
 ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட்
 
மெல்போர்ன், ஏப்.20-

இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது என்பதால் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக அந்த அணி கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது.

இதற்கேற்ற வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரின்போது காயத்தால் விலகிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20134704/1080908/Australia-announce-squad-for-Champions-Trophy-2017.vpf

Categories: merge-rss

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்?

Wed, 19/04/2017 - 21:04
சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்?  
National Selectors, Who would you pick?
singer-league-2017-728.jpg

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை சார்பாக விளையாடப்போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.

இத்தருணத்தில், முக்கியமான இத்தொடரில் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாட தகுதி உள்ள வீரர்களை பற்றி ஒரு விரிவான ஆய்வினை ThePapare.com மேற்கொள்கின்றது.

 

கடந்த காலங்களில் அதிவலுவான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியதற்கு பெயர் சொல்லப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்தது. எனினும், தற்கால நிலைமைகளை ஒப்பிடும்போது இறுதி 12 மாதங்களில் இலங்கை அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜோடியினை தேர்வு செய்வதில்  பிறழ்வினை சந்தித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.  குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் ஆறு தடவைகளுக்கு மேலாக இலங்கையின் ஆரம்ப வீரர்கள்  மாற்றப்பட்டிருக்கின்றனர்.

அணியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான ஆரம்ப துடுப்பாட்டத்திற்கு பொருத்தமான ஆறு வீரர்களினை நாங்கள் இந்த கட்டுரை மூலம் பார்க்கவுள்ளோம்.

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்களின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் முன்னாள் அபாயகர அதிரடி ஆரம்ப நாயகனான சனத் ஜயசூரிய இத்தொடரில், குறைந்தது மூன்று ஆரம்ப வீரர்களையாவது தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உபுல் தரங்க

Upul Tharangaதற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் விளையாடும் இலங்கை குழாத்தில் இருக்கும் வீரர்களில் அனுபவம் கூடிய ஒருவர் என உபுல் தரங்கவைப் பற்றி கூறுவதில்  மிகையேதும் இருக்க முடியாது.

இதுவரை 200 சர்வதேச போட்டிகளுக்கு மேலாக விளையாடியிருக்கும் தரங்க, 14 சதங்களுடன் 6000 ஓட்டங்களை எட்டியிருக்கின்றார்.

உபுல் தரங்க எப்படியும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் தொடரிற்கு தேர்வாளர்கள் மூலம் அணியில் வாய்ப்பைப் பெறுவார் என்பதும் உறுதியானது.

காயத்திலிருந்த இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சிற்கு பதிலாக, ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் அணித் தலைவராக செயற்பட்டிருந்த தரங்க, அத்தொடரினை இலங்கை வெல்வதற்கு பெரிதும் துணையாக இருந்தார்.

அதன் பின்னர் தென்னாபிரிக்காவுடன் 5-0 என இலங்கை வைட் வொஷ் செய்யப்பட்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தரங்க செயற்பட்டார். தொடர்ந்து, பங்களாதேசுடனான ஒரு நாள் தொடரில் இறுதியாக விளையாடிய இலங்கை, அதனை தரங்கவின் தலைமையில் 1- 1 என சமநிலைப்படுத்தியிருந்தமையும் நினைவு கூறத்தக்கது.

 

தரங்க இலங்கை அணிக்காக 13 போட்டிகளில் தலைவராக செயற்பட்டுள்ளதோடு, அதில் 7 போட்டிகளில் ஆரம்ப வீரராக களமிறங்கி 302 ஓட்டங்களினை விளாசியுள்ளார். இதில் தென்னாபிரிக்க அணியுடன் அதிரடியாக ஆடிப்பெற்ற 117 ஓட்டங்களும் அடங்கும்.

இங்கிலாந்து மண்ணில் 70 ஓட்டங்களிற்கு சற்று குறைந்த ஓட்ட சராசரியினை ஆரம்ப வீரராக களமிறங்கி பெற்றுக் கொண்டிருக்கும் உபுல் தரங்க, 2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியுடனான தொடரில் சனத் ஜயசூரியவுடன் சேர்ந்து ஆங்கிலேயப் பந்து வீச்சாளர்களை சிதறடித்ததை யாராலும் மறக்க முடியாது. அதே சிறப்பான ஆட்டத்தினை தரங்க இம்முறையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.  

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்குள் அஞ்சலோ மெத்திவ்ஸ் திரும்பி விடுவார் என்கிற காரணத்தினால், தலைமைப் பொறுப்பின் சுமை இல்லாமல் தரங்கவினால் இத்தொடரில் பங்கேற்று இலங்கை துடுப்பாட்டச் சக்கரத்தின் அச்சாணிகளில் ஒன்றாக செயற்பட முடியும்.

குசல் ஜனித் பெரேரா

தைரியம் மிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இளம் வீரர் குசல் ஜனித்Kusal Janith Perera பெரேரா, 2013ஆம் ஆண்டில் அறிமுகமாகியிருந்ததன் பின்னர், கடைசியாக தான் பங்குபற்றிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் தன்னால் எவ்வாறாக செயற்பட முடியும் என்பதனை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.

‘குட்டி சனத்’ என்னும் செல்லப் பெயர் மூலம் அனைவராலும் அழைக்கப்படும் குசல், 57 போட்டிகளில் ஆரம்ப வீரராக ஆடி 26.80 என்கிற ஒட்ட சராசரியினை வைத்திருக்கின்றார். எனினும், கடந்த 12 மாதங்களில் இலங்கை அணிக்காக குசல் பெரேரா ஒரு சதத்தினை மாத்திரமே பெற்றிருந்தார். அதுவும் அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த வருட ஜூன் மாதத்தில் பெறப்பட்டதாகும்.

தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தினை காட்டியிருந்த காரணத்திலும் உபாதை ஒன்று ஏற்பட்ட காரணத்தினாலும் பெரேராவிற்கு இலங்கை அணியில் கிடைத்திருந்த இடம் மறுக்கப்பட்டிருந்தது. எனினும், சில வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது T-20 போட்டியில் 77 ஓட்டங்களினை விளாசிய அவர், அப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற பெரும்பங்காற்றி தனது வழமையான ஆட்டத்திற்கு திரும்பியிருந்தார்.

இங்கிலாந்தில் 11 போட்டிகளினை விளையாடியிருக்கும் பெரேரா, அங்கே 11.72 என்னும் ஓட்ட சராசரியினை மாத்திரமே வைத்திருக்கின்றார்.  அத்துடன், இறுதியாக 2013இல் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்திலும் ஆடியிருந்த அவர் வெறும் 14 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்த பெரேரா 5 இன்னிங்சுகளில் 46 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றார். எனவே, தேர்வாளர்கள் இத்தொடரில் பெரேராவினை தெரிவு செய்வதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.  

 

நிரோஷன் திக்வெல்ல

Niroshan Dickwella‘டில் ஸ்கூப்’ ஆர்வம் காட்டியவர்களை ‘டிக் ஸ்கூப்’ என்னும் அற்புதமான துடுப்பாட்ட முறையை அறிமுகம் செய்து பலரையும் கவர்ந்திழுத்த நிரோஷன் திக்வெல்ல, தனது சிறப்பாட்டம் மூலம் கடந்த இரு மாதங்களாக அனைவராலும் அறியப்பட்டிருந்தார். 2014ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிரான போட்டியொன்றில் அறிமுகமாகியிருந்த திக்வெல்ல அப்போது பெரிதாக பிரகாசித்திருக்கவில்லை.

எனினும், கடந்த வருடத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்றிருந்த முக்கோணத்தொடர் மூலம் தனது மறுபிரவேசத்தினை இலங்கை அணிக்காக திக்வெல்ல மீண்டும் வழங்கியிருந்தார். அத்தொடரில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களினை குவித்த வீரராக திக்வெல்ல காணப்பட்டதோடு, 11 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 38 என்கிற ஓட்ட சராசரியினையும் வைத்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரிலும், T-20 தொடரிலும் இடது கையில் ஏற்பட்ட சிறு உபாதை காரணமாக அவருக்கு விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருந்தது.  திக்வெல்ல தற்போது பூரண சுகத்தை எட்டியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் எமக்கு  அறியக் கிடைக்கின்றது.

திரித்துவ கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரான நிரோஷன் திக்வெல்ல, நடைபெற்று வரும் மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட பெயரிடப்படவில்லை. எனினும், அவர் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அத்தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாடக் கூடியதாக இருக்கும் என சில வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இத்தொடரில் சிறப்பாக செயற்படுவது தேர்வாளர்களினை திக்வெல்லவின் பக்கம் ஈர்க்க பெரும்பாங்காற்றும் காரணிகளில் ஒன்றாக இருக்கும்.

திக்வெல்ல மற்றும் தரங்க ஜோடி, நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க அணியுனான நான்காவது ஒரு நாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் 100 ஓட்டங்களினைப் பெற்று இலங்கை அணிக்காக ஜொலித்திருந்தனர். அது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை அணி 10 ஓவர்களில் விரைவாகப் பெற்ற 100 ஓட்டங்களில் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கின்றது. NCC அணியின் ஆரம்ப வீரர்களான இந்த இருவரும் இங்கிலாந்திலும் கை கோர்க்க இலங்கை தேர்வாளர்கள் விடுவார்களா? காத்திருந்தே பார்க்க வேண்டும்.

தனுஷ்க குணத்திலக்க

எதிரணி பந்து வீச்சாளர்களினை தடுத்தாடும் ஆற்றல்Danushka Gunathilaka கொண்ட வீரர்களில் ஒருவரான
தனுஷ்க குணத்திலக்க, 2015இல் தனது ஆரம்பப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்தார். எனினும், தனக்கு தொடர்ந்தும் கிடைத்த வாய்ப்புக்களின் மூலம் ஓட்டங்கள் குவிப்பதனை குணத்திலக்க தவறவிட்டிருந்தார்.

இதுவரை 18 ஒரு நாள் இன்னிங்சுகளில் விளையாடியிருக்கும் குணத்திலக்க மூன்று அரைச் சதங்களுடன் 23.33 என்கிற ஓட்ட சராசரியினை வைத்திருக்கின்றார்.

பங்களாதேஷ் அணியுடனான தனது அண்மைய ஒரு நாள் தொடரில் 0,9,34 என்கிற ஓட்டங்களைப்பெற்றிருந்த அவருக்கு, குசல் பெரேராவின் மீள்வருகையினால் T-20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை.

 

SSC அணி வீரரான குணத்திலக்க, உள்ளூர் போட்டிகளிலும் இலங்கை A அணிக்காக தான் விளையாடியிருந்த போட்டிகளிலும் அதி சிறப்பாக செயற்பட்டிருந்தார். எனினும், இலங்கை அணியின் ஆரம்ப வீரராக விளையாடிய அவருக்கு சரியான முறையில் பிரகாசிக்க முடியாது போனது.

குணத்திலக்கவின் அதிசிறந்த களத்தடுப்பு சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை பெற துணையாக இருக்கும். எனினும், தேர்வாளர்கள் முன்வரிசை துடுப்பாட்டத்தில் நிலையாக நீண்ட நேரம் நிற்க கூடிய ஒருவரையே எதிர்பார்க்கவும் கூடும்.

இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளரான அசங்க குருசிங்க, அண்மைய தனது பேச்சுக்களில் குணத்திலக்க பற்றி அதிகம் பேசி இருப்பதோடு தடுமாறி வரும் இலங்கை ஆரம்பத்திற்கு நிரந்தர தீர்வாகவும் குணத்திலக்கவினை நோக்குகின்றார். எனவே, 26 வயதான குணத்திலக்கவினையும்  இங்கிலாந்திற்கான இந்த  சுற்றுப்பயணத்தில் எம்மால் எதிர்பார்க்க முடியும்.  

தனன்ஞய டி சில்வா

Dhananjaya De Silvaஅழகிய வலது கை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தனன்ஞய டி சில்வா இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டியொன்றில் ஆரம்ப வீரராக முதற்தடவையாக களமிறங்கி அதிக ஓட்டங்களினை குவித்த வீரர் என்னும் பெருமையினைக் கொண்டிருக்கின்றார்.

கடந்த வருட ஒகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அணியுடனான நான்காவது ஒரு நாள் போட்டியிலேயே சில்வாவினால் 77 ஓட்டங்கள் பெறப்பட்டு அச்சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. இதோடு சேர்த்து மேலும் இரண்டு அரைச் சதங்களுடன், 6 இன்னிங்சுகளில் ஆரம்ப வீரராக விளையாடி 50ஐ அண்மித்த சிறந்த ஓட்ட சராசரியினை தனன்ஞய டி சில்வா வைத்திருக்கின்றார்.

இலங்கை அணிக்காக பல துடுப்பாட்ட வரிசை இடங்களில் சில்வா விளையாடியிருந்த போதும், ஆரம்ப வீரராக வந்திருந்ததே அவருக்கு கைகொடுத்திருந்தது. தென்னாபிரிக்கா அணியுடனான தனது கடைசி ஒரு நாள் தொடரில் மத்திய வரிசையில் விளையாடியிருந்த சில்வா 5 இன்னிங்சுகளில் 51 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியுடனான தொடரில் வீரர்களுக்கு குடிபானங்கள் வழங்கும் வேலையினை மாத்திரமே தனன்ஞய டி சில்வா செய்திருந்தார்.  எனினும், இங்கிலாந்தில் நடைபெறும் தொடரில் சரியான வலது கை துடுப்பாட்ட வீரரான இவரினை இலங்கை தேர்வாளர்கள் தேர்வு செய்வதும், ஆரம்ப வீரராக வாய்ப்பு வழங்குவதையும் வரும் நாட்களிலேயே எம்மால் அறிய முடியும்.

சதீர சமரவிக்ரம

வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவரான சதீர சமரவிக்ரம, சிறந்த வலது  கைSadeera Samarawickrama
துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராய் இருப்பதோடு விக்கெட் காப்பாளராகவும் செயற்படக் கூடிய ஒருவர்.

கடந்த ஆறு மாதங்களாக அதி சிறப்பான ஆட்டத்தினை காண்பித்து வரும் சதீர, நடைபெற்று முடிந்த நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் போட்டி தொடரில் அதிக ஓட்டங்களினை குவித்த வீரராவர். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இலங்கை A அணியில் விளையாடிய இவர், அத்தொடரில் அபார ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்திருந்தார். அத்துடன், அண்மையில் இலங்கை இளையோர் அணி ஆசிய கிண்ணத்தினை கைப்பற்றுவதற்கும் இவர் பெரும்பாங்கற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயது மாத்திரமே பூர்த்தியான முன்னாள் ஜோசப் கல்லூரி மாணவரான சதீர சமரவிக்ரம, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் தற்போது நடைபெற்று வரும் மாகாண ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியிலும் அபார சதம் ஒன்றினை விளாசியிருந்தார். இப்படியான அபார துடுப்பாட்ட வீரர் ஒருவர் அணியில் இருப்பது எதிரணிப் பந்து வீச்சினை சமாளிக்க இலங்கை அணிக்கு அதி இலகுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  

 

இலங்கைத் தேர்வுக்குழாம், குறித்த தொடரில் விளையாடவிருக்கும் வீரர்கள் பற்றிய அறிவிப்பினை மேற்கொள்வதற்கு மாகாண அணிகளுக்கு இடையிலான இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியிருக்கும் இத்தருணத்தில் முதல் தடவையாக இலங்கை அணியில் இடம்பெற்று தனது கன்னி தொடரில் சாதிக்க சதீர சமரவிக்ரமவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் வாய்ப்பளிக்குமா? எதிர்ப்பார்த்து இருப்போம்.

மேலே நாம் காட்டிய இந்த வீரர்களில் இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களாக இவ்வருட சம்பியன்ஸ் கிண்ணத்தில் செயற்படும் தகுதி யாருக்கு உள்ளது?

http://www.thepapare.com

Categories: merge-rss

Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன்

Wed, 19/04/2017 - 20:04
Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன்

 

Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன்
 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது.

அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராகவும் முரளிதரன் வரலாற்றில் பதிவாகவுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது முரளிதரனுக்கு Hall of Fame விருது வழங்கப்படவுள்ளது.

சுழற்பந்து வீச்சால் 19 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்த முத்தையா முரளிதரன், 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இருவகை கிரிக்கெட்டிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி எட்ட முடியாத சாதனையாளராக முரளிதரன் திகழ்கின்றார்.

 

http://newsfirst.lk/tamil/2017/04/hall-fame-விருதிற்குப்-பாத்திரம/

Categories: merge-rss

ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட்

Wed, 19/04/2017 - 11:37
ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட்
 
 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி.

ronaldo

வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில்  2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின.

முதல் பாதியில் இரு அணியும் கோல் போடாமல் ஆட, இரண்டாவது பாதியில் லவன்டோஸ்க்கி பேயர்ன் அணியின் கோல் கணக்கை துவக்கிவைத்தார். இதற்குப் பதிலடியாக, நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்து சமன்செய்ய, அடுத்த சில நிமிடங்களில் ரியல் மாட்ரிட் வீரர் ராமோஸ் ஓன் கோல் போட்டுக் கொடுத்தார். 2-1 என பேயர்ன் முன்னிலையில் இருந்தபோதும், முந்தைய போட்டியின் கோல் காரணமாக, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

 இதையடுத்து விளையாடிய ரியல் மாட்ரிட் தரப்பில், ரொனால்டோ மேலும் இரண்டு கோல்களை அடித்தார். ரியல் மாட்ரிட் வீரர் அசன்சியோவும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இக்கட்டான ஆட்டத்திலும் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியுள்ளார், கிறிஸ்டியானோ ரொனால்டோ.  

http://www.vikatan.com/news/sports/86913-ronaldos-hatrick-makes-real-madrid-to-reach-semis.html

Categories: merge-rss

ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead

Wed, 19/04/2017 - 07:03
ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead
 
 

இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z  கிரிக்கெட்  ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் மகத்தான கிரிக்கெட் வீரர்கள் கோலி, ஸ்மித்.

இனி குழந்தைங்கள் இவர்களை பார்த்துத்தான் கிரிக்கெட் மீது மோகம் கொள்வார்கள், இவர்கள் தான் ரோல் மாடலாக பலருக்கும் விளங்கப்போகிறார்கள். இந்த இருவர் எடுக்கும் முடிவுகளை வைத்துத்தான் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு  கிரிக்கெட் வெவ்வேறு பரிமாணம் எடுக்கும். இவர்கள் தான் இனி தலைப்புச் செய்தி; இவர்கள் தான் இனி அட்டை படங்களை அலங்கரிக்கப் போகிறவர்கள்.  இருவரும் வெற்றியாளர்களாக நிற்கிறார்கள், ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறானவை. இருந்தும் இருவர் வாழ்விலும் சில சுவாரஸ்யமான ஒற்றுமைகளும் உண்டு. அவை என்ன? எதில் தனித்து தெரிகிறார்கள்? ஏன் இவர்கள் ஜாம்பவான்கள்?

கோலிக்கு  இப்போது வயது இருபத்தி எட்டு. அவரை விட 209 நாட்கள் இளையவர் ஸ்டீவன் ஸ்மித். இந்தியாவுக்கு மூன்று ஃபார்மெட்டிலும் கோலி கேப்டன். ஆஸிக்கு ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர்1 பேட்ஸ்மேன் ஸ்மித், டி20 தரவரிசையில் நம்பர்1 பேட்ஸ்மேன் கோலி. இவர்கள் இருவரும் களத்தில் நிற்கும் போது எதிரணி பவுலர்களுக்கு வயிறு கலங்கும்.இருவரும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டர்கள். இப்படி பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு. 

விராட் கோலி :-

விராட் கோலி  எட்டு வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்கியவர். கோலி தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை ஜெயித்தது இந்தியா. அந்த கோப்பை, இந்திய அணிக்குள்  நுழைய பாதைபோட்டுத் தர, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் நுழைந்தார். சேஸிங்கில் தள்ளாடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் இறங்கி  தோள்கொடுத்தார். ஆரம்ப காலகட்டங்களில் கம்பீரோடு கூட்டணி போட்டு சேஸிங்கில் அசத்தியதில், வெகுவிரைவிலேயே இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருமாறினார். சாதாரண பேட்ஸ்மேனில் இருந்து சூப்பர் பேட்ஸ்மேனாக மாறியது 2012ல். அந்த ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் ஐந்து சதம் விளாசி அசரடித்தார். அதே ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அட்டகாசமான ஒரு சதம் விளாசினார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முன்னணி பேட்ஸ்மேனாக மாறினார். 2014 இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அது கோலியின் வாழ்க்கையை திருப்பிப் போட்டது. அதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் லாயக்கில்லாதவர் என்றே விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

கோலியுடன் கம்பீர்

முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தோனி விலக, கேப்டன் பதவி தேடி வந்தது கோலியிடம். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து மிரள வைத்தார். அந்த போட்டியில் கடைசி நாளில் இந்தியா 364 ரன்கள் அடித்தால் வெற்றி  என இலக்கு வைத்தது ஆஸ்திரேலியா. எப்படியும் இந்தியா டிராவுக்காகத் தான் ஆடும் என எதிர்பாத்த நிலையில், கோலி தலைமையில் ஆக்ரோஷமாக ஆடியது இந்தியா. முரளி விஜய்யும், கோலியும் பார்ட்னர்ஷிப் போட்டு அடித்து ஆடினார்கள்.  இன்னும் 17 பந்துகள் விக்கெட் விழாமல் இருந்தால் மேட்ச் டிரா ஆகும் எனும் சூழ்நிலையில் 315 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்தியா ஜெயித்து விடும் என்ற சூழ்நிலையே நிலவியது. கோலியின் பாசிட்டிவ்வான அக்ரஸிவ் கேப்டன்சி அப்போதே பேசப்பட்டது. டிராவுக்காக ஆடாமல், வெற்றிக்காக ஆடி தோற்றார் கோலி. அதே தொடரில் தோனி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற, கடைசி டெஸ்ட் போட்டியை வழிநடத்தி மேட்ச்சை டிரா செய்தார் கோலி. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் கோலி அடித்த சதங்கள் நான்கு. ஆஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு  அயல்நாட்டு   வீரரரும் இப்படியொரு மகத்தான சாதனையைச் இதுவரைச் செய்ததில்லை. 

 கோலி மற்றும்  கம்பீர்

அதன் பின்னர், கோலி தொட்டதெல்லாம் சிக்ஸர்கள் தான். அந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியை ஏற்றார். கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்தியா தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருந்தது. கோலி கேப்டன்சியில் இலங்கை மண்ணில் 2-1 என தொடரை ஜெயித்தது இந்தியா. 9 ஆண்டுகளாக அயல்மண்ணில் தொடரை இழந்ததில்லை என வளைய வந்த  தென் ஆப்ரிக்க அணியை 3-0 என வென்று விரட்டியது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2-0 என வென்று சரித்திரம் படைத்தது. நியூசிலாந்தை 3- 0 என வாஷ்அவுட் செய்தது, இங்கிலாந்தை 4- 0 என வீழ்த்தி  டெஸ்ட் அரங்கில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்தது. இதோ ஆஸ்திரேலியாவையும் 2-1 என வீழ்த்தி, நாங்க தான் டெஸ்டில் கில்லி என உலகுக்கு அறிவித்திருக்கிறது. இப்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் இடம் நம்பர் 1 . 

கோலியின் ஆக்ரோஷ கேப்டன்சி

கடந்த ஜனவரியில்  லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டிலும் தோனி விலக, கோலி கேப்டன்சியில் ஒருநாள், டி20 தொடர்களை ஜெயித்திருக்கிறது இந்திய அணி. கடந்த 2 ஆண்டுகளில் கோலி தலைமையில் எந்தவொரு பார்மெட்டிலும் தொடரை இழக்காமல் புது சரித்திரம் படைத்திருக்கிறது இந்தியா. கேப்டனாக சாதித்த அதே சமயம், பேட்டிங்கிலும் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். தனது கேரியரில் உச்சபட்ச பார்மில் இந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் தான் இருந்தார். கடந்த ஆண்டு மட்டும் 37 சர்வதேச போட்டிகளில்  ஏழு சதம், மூன்று இரட்டைச் சதம் உட்பட 2595 ரன்கள் குவித்து வாயடைக்க வைத்திருக்கிறார் கோலி. கடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் நான்கு சதங்கள் விளாசி, 973 ரன்கள் குவித்தார். ஆண்டு முழுவதும், பந்துகளையும், பந்துவீச்சாளர்களையும் விரட்டியதில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஒன்று சேர்ந்து கோலி தான் பெஸ்ட் பிளேயர் எனச் சொல்லியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் கோலி ஆடிய ஆட்டத்தை முறியடிக்கும் வகையில், ஆடுவதற்கு இன்னொரு வீரர் பிறந்துதான் வர வேண்டும். 1998 சீஸனில் சச்சின் எப்படி மாணிக்கத்தில் இருந்து பாட்ஷாவாக மாறினாரோ, அதையொத்த நிகழ்வு தான் கோலிக்கும் கடந்த ஆண்டில் நடந்தது. 

ஸ்டீவன் ஸ்மித் : -

அப்பா ஆஸ்திரேலியா, அம்மா இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். வேதியியலில் பட்டம் பெற்ற பீட்டருக்கு, கிரிக்கெட் மீது கொள்ளை ஆர்வம். மகன் ஸ்மித் நான்கைந்து வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்க, கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டார். 1989இல் பிறந்த ஸ்மித் 1994/95 சீசனில் எட்டு வயதுக்குட்பட்டோருக்கான கிளப் போட்டிகளில் ஆட ஆரம்பித்து விட்டார். ஓரளவு பேட்டிங், அபாரமான சுழற்பந்து இப்படித்தான் பதின் வயதுகளில் கிளப்களில் கலக்கினார். 

ஏழாவது, எட்டாவது இடங்களில் இறங்கி பேட்டிங்கில் ஓரளவு ரன்களை அடிக்கக்கூடியவர், விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்ற அடையாளங்கள் பிக்பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்க உதவியது. அங்கே தன்னை நிரூபித்தார்  ஸ்மித். 2010 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. இதில் சாம்பியன் இங்கிலாந்து. ரன்னர் அப் - ஆஸ்திரேலியா. இந்த தொடரில் ஏழு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  ஸ்மித். தொடரில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது பவுலர் ஸ்மித் தான்.

ஸ்டீ வன் ஸ்மித்

இப்படி பவுலராக மிளிர்ந்த ஸ்மித், நல்ல பேட்ஸ்மேனாக மாறத் தொடங்கியது இந்தியாவுக்கு எதிராகத் தான். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. லெக் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால், பேக்கப்புக்கு ஆல்ரவுண்டர் கேட்டகிரியில் இவரை அணியில் சேர்த்தது ஆஸ்திரேலியா. ஆனால் ஆடும் லெவனில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த தொடரில் முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் சொதப்ப, நான்கு வீரர்களை கழட்டிவிட்டு அணியை மாற்றியமைத்தார் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். மொஹாலி டெஸ்டில் ஸ்மித் அணியில் இடம்பெற்றார். இது அவருக்கு ஆறாவது டெஸ்ட் போட்டி.  முதல் இன்னிங்ஸில் 251/7 என தத்தளித்த போது, ஸ்டீவன் ஸ்மித்தும், மிச்செல் ஸ்டார்க்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தனர். 185 பந்தில் 92 ரன் எடுத்து தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார் ஸ்மித். ஸ்டார்க் 99 ரன்னில் இஷாந்த் ஷர்மா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அந்த தொடர் ஸ்மித்தை ஒரு நல்ல பேட்ஸ்மேனாக அடையாளம் காட்ட, அடுத்தடுத்த தொடர்களில் கியரை மாற்றி முன்னேறினார்.

ஸ்டீ வன் ஸ்மித்

பவுலர் ஸ்மித் டூ நம்பர் 1 பேட்ஸ்மேன் :- 

 2014 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா சார்பாக எப்படி கோலி அந்த தொடரில் வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்தாரோ, அப்படி ஆஸ்திரரேலிய அணிக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் ஸ்மித். அடிலெய்டு டெஸ்டில் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து பிரம்மிக்க வைக்க, அதே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 162 எடுத்து நாட்அவுட் டாகவும், இரண்டாவது இன்னிங்ஸில் 52 நாட் அவுட்டாகவும் விளங்கினார்.

 கோலி ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அந்த அடிலெய்டு போட்டியில் நிரூபித்ததால், அதே தொடரில் தோனி ஓய்வுக்கு பிறகு கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார்.  அடிலெய்டு டெஸ்டில் இந்திய பவுலர்களை வெளுத்தது வாங்கிய ஸ்மித்துக்கு அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே, கிளார்க்கின் காயத்தால் கேப்டன் பதவி தேடி வந்தது. அந்த தொடரில், பிரிஸ்பேனில் 133, மெல்போர்னில் 192, சிட்னியில் 112 ரன்கள் அடித்து மிரளவைத்தார். நான்கு டெஸ்ட் போட்டியிலும் தலா ஒரு சதம். கோலி, ஸ்மித் இருவருமே அந்த தொடரில் நான்கு சதம் அடித்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. 

ஸ்டீ வன் ஸ்மித்

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கு பிறகு நடந்த ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா தொடரை இழக்க, நான்காவது டெஸ்ட் போட்டியோடு திடீரென ஓய்வு பெற்றார் கேப்டன் கிளார்க். கோலியை போலவே அயல் மண்ணில், நடந்த டெஸ்ட் தொடரில் பிரதான கேப்டன் ஓய்வு பெற, கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து பிரத்யேக கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஸ்மித். அதன் பின்னர் பேட்டிங்கில் ஏறுமுகம் தான். கடந்த ஆண்டு  ஐசிசி  டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசையில் முதலிடத்தில்  இருந்த டிவில்லியர்ஸை முந்தி முதல் இடம் பிடித்தார். ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இலங்கை மண்ணில் படுதோல்வியை சந்தித்தது, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் தொடரை இழந்தது. எனினும், தற்போது இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் எழுச்சி பெற்று அற்புதமாக ஆடியது ஆஸி.  குறிப்பாக ஸ்டீவன் ஸ்மித் மெச்சத்தக்க பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் நவீன பிராட்மேன். இலங்கை, இந்தியா போன்ற சூழல் ஆடுகளங்களோ, இங்கிலாந்து போன்ற ஸ்விங் ஆடுகளங்களையோ, தென் ஆப்ரிக்கா போன்ற பவுன்ஸ் களங்களோ, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஸ்லோ பிட்ச்களோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வேகப்பந்து ஆடுகளங்களோ எதுவாக இருந்தாலும் பின்னிப்பெடல் எடுக்கிறார் ஸ்மித். சம காலத்தில் அவரை மிஞ்சும் ஒரு பேட்ஸ்மேன் இல்லை என்பதே நிதர்சனம். ஆகவே, ஸ்மித்தும் கோலியும் அற்புதமான பேட்ஸ்மேன்கள் என்பது தெளிவு.  இந்த இருவரிடமும் இருக்கும் ஒரே மைனஸ், ஆடுகளத்தில் டென்ஷன் ஆவதும், தங்களது அணி ஜெயிக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் போர்குணம் தான். 

2017 பார்டர் கவாஸ்கர் கோப்பை  தொடரின் முன்பு வரை கோலியும், ஸ்மித்தும் நண்பர்களாவே இருந்தனர். ஆனால் இந்த தொடரில் இருவருக்கும் கடும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இருவருமே தனது அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதால் சில மோசமான செய்கைகளை செய்தனர். தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படும் இவர்கள், கேப்டனாக ஆடும் போது ஜென்டில்மென் கிரிக்கெட்டை குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். இனி அப்படிச் செய்யாதீர்கள் அணித் தலைவர்களே! 

இனி இருவரின் பெர்பார்மென்ஸை அலசுவோம். 

ஆண்டுவாரியாக இருவரின் பெர்பார்மென்ஸ் ஒப்பீடு :-

கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள், சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 50க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார் விராட் கோலி. 2009 ஆம் ஆண்டு கவனம் ஈர்த்த கோலி, அடுத்தடுத்த ஆண்டுகளில் சீராக ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை கிராஃப் பார்த்தாலே புரியும்.  அறிமுகமான முதல்  வருடத்தை தவிர மற்ற வருடங்களில் 38க்கு கீழ் சராசரி குறையவே இல்லை. 2015ல் சற்றே சுணக்கம் ஏற்பட்டாலும், மீண்டும் கடுமையாக பயிற்சி செய்து, உத்திகளை மாற்றி ஃபார்முக்கு வந்தார் கோலி. 2016ல் அவர் தொட்ட உயரம் இமாலய லெவல். 

 

ஸ்மித் ஆரம்ப கட்டங்களில் பேட்டிங்கில் எவ்வளவு மோசமாக இருந்தார் என்பதை கிராஃப் அப்பட்டமாக காட்டிக்கொடுத்து விடுகிறது. 2010ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர், முதல் மூன்று வருடங்களில் பெரிதாக சாதிக்கவில்லை. அதுவும் 2012 ல் படு மோசம். அப்போது சிறிது காலம் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, பவுலரில் இருந்து பேட்ஸ்மேனாக மாறிய ஆக்ஷன் பிளாக் நடந்து முடிந்தது. மீண்டும் அணிக்குள் நுழைந்தபோது ஒரே வருடத்தில் சராசரியை இரு மடங்காக உயர்த்தினார். அதற்கடுத்த வருடமே விர்ரென உச்சத்தில் போய் அமர்ந்தார். அதற்கடுத்த வருடங்களில் ஃபார்மை மெயின்டெயின் செய்தார். கிராஃபில் 2016ல் ஒரு சிறிய சரிவு தென்பட்டாலும், 53 ரன்கள் சராசரி என்பதே அட்டகாசம் தான். இதோ இந்த வருடம் மீண்டும் 60ஐ தாண்டுகிறார் ஸ்மித். கோலியை விட எந்தெந்த வருடங்களில் ஸ்மித் மிக சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை மேலே உள்ள  INTERACTIVE INFOGRAPHICல் மவுசை வைத்து நகர்த்திப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எந்த இன்னிங்ஸில் யார் பெஸ்ட் ? 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஸ்மித் அணி முதலில் பேட்டிங் செய்யும் போது அபாரமாக விளையாடுகிறார். நான்காவது இன்னிங்ஸில் சேசிங் செய்யும் போது சுமார் தான். இதற்கு அப்படியே நேரெதிராக இருக்கிறார் விராட் கோலி. எதிரணியின் ஸ்கோர் போர்டை பார்த்த பிறகு தான் சூடேறும். இரண்டாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ்களில் சூரப்புலி விராட் . 

 

விராட் முதல் இன்னிங்ஸ் பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் ஸ்மித் அணி எப்போதெல்லாம் முதலில் பேட் பிடிக்கிறதோ அப்போதெல்லாம் முன்னின்று பந்துகளை வேட்டையாடுவார். முதல் இன்னிங்ஸில் அவரது சராசரி 94. சமகாலத்தில் எந்தவொரு பேட்ஸ்மேனும் இப்படிச் சிறப்பாகச் செயல்பட்டதில்லை. ஸ்மித் சேஸிங்கில் சுமார் தான். கோலி சேஸிங்கில் தான்  டாப்.

எந்த இடத்தில் இறங்கினால் கோலி கில்லி? 

கோலிஸ்மித்

ஸ்மித்தும் சரி, விராட்டும் சரி மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் இறங்கும் போது நன்றாகவே ஆடியிருக்கிறார்கள். ஸ்மித் இதில் கோலியை விட முன்னிலையில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் கோலியும், ஸ்மித்தும் கிட்டத்தட்ட சம அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்கள். இதில் ஸ்மித் எளிதாக கோலியை தோற்கடித்து விடுகிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஸ்மித் 3,4,5 என எந்த இடத்தில் எந்த ஃபார்மெட்டில் இறங்கினாலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார். இந்தப் புள்ளியில் இருவரையும் ஒப்பீடு செய்தால், கோலியை முந்துகிறார் ஸ்மித். 

கேப்டனாக இருவரின் பேட்டிங் எப்படி? 

விராட் கோலி , ஸ்மித் இருவருமே 2015ம் ஆண்டில் இருந்து தான் முழு நேர கேப்டன் ஆனார்கள். கோலி இந்த ஆண்டு துவக்கத்தில் தான் மூன்று ஃபார்மெட்டுக்கும் கேப்டனாகியிருக்கிறார். ஸ்மித் இதில் கோலிக்கு முன்னோடி. கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இருவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது என்ற தகவல்களை படத்தில் பாரத்தால் தெரியும். 

கோலி Vs  ஸ்மித்

இங்கிலாந்து தொடருக்கு முன்பாகவே கோலி சில ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணிபுரிந்திருக்கிறார். கேப்டனாக ஆடிய 17 இன்னிங்ஸில் 5 சதமும், 4 அரைசதமும் விளாசி பிரமிக்க வைத்திருக்கிறார் கோலி. இதுவரையிலான ஃபெர்பார்மென்ஸ் அடிப்படையில் ஸ்மித், கோலி இருவரும் கேப்டனாக இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. எனினும் இந்த புள்ளிவிவரங்கள் வருங்காலத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

 

கோலி Vs  ஸ்மித்

அயல் மண்ணில் இருவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது? 

கோலிக்கு கங்காருக்கள் என்றால் இஷ்டம். அதுபோலவே ஸ்மித்துக்கும் புலிகள் என்றால் செம குஷி.  ஏன் என்பதை கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரியும்.

அயல் மண்ணில் இருவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது? 

கோலி மிகக்குறைவான சராசரியை இங்கிலாந்து மண்ணில் வைத்திருக்கிறார். ஸ்மித் இலங்கையில் சுமாருக்கு கீழ். தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து  உள்ளிட்ட நாடுகளில் ஸ்மித்தை விட சிறப்பான சராசரி வைத்திருப்பது கோலியே. அந்த வகையில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடிய ஆட்களில் ஸ்மித்தை விட பல படிகள் முன்னிலையிலேயே இருக்கிறார்  இந்தியாவின் ஆங்கிரி பேர்டு.

அணி வெற்றியடைந்த மற்றும் தோல்வியடைந்த போட்டிகளில் இருவரின் ஆட்டமும் எப்படி? 

இதிலும் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்கள் இடம்பிடித்த போட்டிகளில் சம்பந்தப்பட்ட அணி 60% வெற்றிகளை பெற்றுள்ளது.

கோலி Vs ஸ்மித்

வெற்றியடைந்த போட்டிகளில் கோலியின் ஆதிக்கம் அபாரமாக உள்ளது. இதுவரை அவரின்  35 சதங்கள் வெற்றியில் முடிந்துள்ளன. தோல்வியடைந்த போட்டிகளிலும் நிறைய அரைசதம் விளாசியிருக்கிறார் கோலி. ஸ்மித்தும் வெற்றியடைந்த  போட்டிகளில் நன்றாகவே விளையாடியுள்ளார். எனினும் அணி தோல்வியடைந்த போட்டிகளில் சுமாராகவே ஆடியிருக்கிறார். இப்படியொரு கோணத்தில் அணுகும் போது விராட் கோலி செமத்தியான டீம் பிளேயர் என்பது நிரூபணம் ஆகிறது. விராட் இந்த ஒப்பீட்டில் வின்னர். 

எதிர் அணிகளுக்கு எதிராக இருவரின் பெர்பார்மென்ஸ் : -

ஸ்மித் இந்திய மண்ணில் செம பேட்ஸ்மேன். கோலி ஆஸ்திரேலிய மண்ணில் தனி ஆவர்த்தனம் நடத்தும் பேட்ஸ்மேன்.ஏழு முக்கியமான எதிராணிகளில், ஐந்து அணிகளுக்கு எதிராக 50க்கும் மேல் சராசரி வைத்து அசரவைக்கிறார் கோலி. தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 40 களில் சராசரி வைத்திருக்கிறார். 

கோலி Vs ஸ்மித்

ஸ்மித் இந்திய அணியுடன் விளையாடுவது என்றாலே குஷி மோடுக்கு வந்துவிடுகிறார் என்பது புள்ளி விவரத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்திய அணியின் பந்துவீச்சை நார்நாராய் கிழித்திருக்கிறார் ஸ்மித். சராசரி 73 என்பதும், சதங்கள் 9 என்பதும் மிரட்சியடைய வைக்கின்றன. இந்தியாவைப் போலவே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களும் ஸ்மித்திடம் சின்னாபின்னமாகியிருக்கின்றனர். கோலியை போலவே இவரும் தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக 40 ரன்கள் என்ற அளவிலேயே சராசரி வைத்திருக்கிறார். இலங்கையுடன் மிக சுமாராகவே ஆடியிருக்கிறார் என்பது தெரிகிறது. இலங்கையுடனான ஸ்மித்தின் ஃபெர்பார்மென்ஸை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இருவரும் எதிராணிகளுடன் சிறப்பாகவே ஆடியிருக்கிறார்கள் என்பது தெளிவு. 

சொந்த மண்ணில் யார் கில்லி ? 

கோலி Vs ஸ்மித்

இதிலும் இருவரும் கில்லி தான். எனினும் மேட்ச் வின்னிங்ஸ் ஆடியது, அதிக தொடர் நாயகன் விருது வாங்கியது உள்ளிட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும் கோலி முன்னிலையில் இருக்கிறார். அதே சமயம் கோலியை விட அதிக சராசரி வைத்திருக்கிறார் ஸ்மித். 

டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்று பார்மெட்களில் யார் சிறந்தவர்? 

ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டிங் ஜாம்பவான். ஆனால் ஒருநாள் போட்டிகள், டி 20 போட்டிகளில் நல்ல பேட்ஸ்மேன். இவருக்கு அப்படியே நேர் எதிரானவர் கோலி. அவர் ஒருநாள்  போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மாஸ்டர் பிளேயர். டெஸ்ட் கிரிக்கெட்டில்  நல்ல பேட்ஸ்மேன். 

http://www.vikatan.com/news/sports/86853-who-are-the-best-batsman-and-best-captain-between-virat-and-smith.html

Categories: merge-rss

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்

Tue, 18/04/2017 - 17:12
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

 
 
 
 
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக்கில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

இந்த லீக் தொடர்களில் சிக்சர் மழை பொழிவதால் கெய்லுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 286 போட்டிகளில் 9937 ரன்கள் எடுத்திருந்தார். 63 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்னைக் கடக்கும் முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைக்கும் நோக்கத்தில் ஐ.பி.எல். சீசன் 2017-ல் களமிறங்கினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 32 ரன்னும், டெல்லிக்கெதிராக 6 ரன்னும், மும்பை அணிக்கெதிராக 22 ரன்களும் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கினார்.

201704182119251257_gayle-s._L_styvpf.gif

இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்திருக்கும்போது 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

டி20 போட்டிகளில் இந்த போட்டிக்கு முன்பு வரை 289 போட்டிகளில் 18 சதங்கள், 60 அரைசதங்கள் அடித்திருந்தார். இதில் 736 சிக்சர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.
 
Categories: merge-rss

2017 சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் குழு: ஐசிசி அறிவிப்பு

Tue, 18/04/2017 - 14:50
2017 சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் குழு: ஐசிசி அறிவிப்பு

 

 
கங்குலி. | கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக்.
கங்குலி. | கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக்.
 
 

4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது, இதற்கான வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.

பிரண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா ஆகியோர்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வர்ணனையில் அறிமுகமாகின்றனர். பாண்டிங், ஸ்மித் இருதரப்பு தொடரில் வர்ணனை செய்துள்ளனர், சாம்பியன்ஸ் டிராபியில் இதுவே முதல் முறை.

மேலும் சஞ்சய் மஞ்சுரேக்கர், சவுரவ் கங்குலி, இயன் பிஷப், ஷான் போலக், ஷேன் வார்ன், ரமீஸ் ராஜா, அதார் அலி கான், மைக்கேல் ஸ்லேட்டர், நாசர் ஹுசைன், மைக்கேல் ஆர்த்தர்டன், சைமன் டூல் ஆகியோர் உள்ளனர்.

ஜூன் மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி 17 நாட்கள் நடைபெறும். 2013-ல் தோனி தலைமையில் இந்தியா மேலும் ஒரு மகுடமாக கோப்பையை வென்றது, தற்போது அதைத் தக்கவைக்க போராட வேண்டும். விராட் கோலிக்கு இந்தப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் மார்க் நிகலஸ், ஹர்ஷா போக்ளே, டேவிட் லாய்ட் போன்றோர் இல்லாதது வர்ணனையில் ஆர்வத்தை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/2017-சாம்பியன்ஸ்-டிராபி-வர்ணனையாளர்கள்-குழு-ஐசிசி-அறிவிப்பு/article9647492.ece?homepage=true

Categories: merge-rss

பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

Mon, 17/04/2017 - 07:28
பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார்.

 
 
 செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்
 
சகிர் :

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர்.

முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். அவரை விட 6.6 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வதாகவும் (மெர்சிடஸ் அணி), முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 3-வதாகவும் வந்தனர்.

201704170947457091_Sebastian-vettel._L_s

போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 7-வது இடத்தையும், ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) 10-வது இடத்தையும் பிடித்தனர்.

இதுவரை நடந்த 3 சுற்று முடிவில் வெட்டல் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 61 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறார்கள். 4-வது சுற்று போட்டி ரஷியாவில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17094739/1080304/Polytheism-Formula-1-Car-Racing-Sebastian-vettel-champion.vpf

Categories: merge-rss

அடுத்த சீசன் ஆடப்போற சி.எஸ்.கேல இதெல்லாம் இருக்குமா? #CSKRewind

Mon, 17/04/2017 - 07:14
அடுத்த சீசன் ஆடப்போற சி.எஸ்.கேல இதெல்லாம் இருக்குமா? #CSKRewind
 
 

ஐ.பி.எல் தொடங்கி ஒரு வாரமாகியும் சுரத்தே இல்லாமல் இருந்த நம் ஊர் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதுதான் குஷி மோடிற்கு வந்திருக்கிறார்கள். காரணம், பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் கலந்துகொள்ள சென்னை அணிக்கு விடுத்துள்ள அறிவிப்பு. சென்னை அணியின் உரிமையாளர் 'அடுத்த சீசனிலும் கேப்டன் தோனிதான்' என அறிவிக்க, ரசிகர்களுக்கு டபுள் ஆம்லேட் சாப்பிட்ட திருப்தி. சரி, ஒரு பெரிய பிரேக்கிற்குப் பிறகு சென்னை அணி ஆட வருகிறது. ஆனால் முன்பு இருந்த சில விஷயங்கள் அடுத்த ஆண்டும் இருக்குமா? ரசிகர்கள் பழையபடி விசில் போடுவார்களா என்பது பற்றிய பதிவுதான் இது.

கிரிக்கெட்

'கேப்டன்' தோனி :

ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதன்முறையாக இன்னொரு கேப்டனின் கீழ் களமிறங்கி விளையாடி வருகிறார் தோனி. இதற்கே சென்னை ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்தார்கள். கூடுதல் சோகமாக ஃபார்ம் அவுட் வேறு. நான்கு ஆட்டங்களையும் சேர்த்தே 30 ரன்களைத் தாண்டவில்லை. இந்நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அழைப்பு. தோனிதான் மீண்டும் கேப்டன் என்றால் திரும்பவும் சேப்பாக்கம் அதிரத்தான் போகிறது. ஆனால் இத்தனை நாட்கள் இடைவேளைக்குப் பின் அதே பழைய சென்னை சிங்கமாய், கூல் கேப்டனாய் அவர் ஜொலிப்பாரா என்பதுதான் கேள்வி.

சீனியர் வீரர்கள் :

சென்னை அணியின் ஆஸ்தான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஹஸ்ஸி, பிக்பேஷ் தொடருக்குப் பின் விளையாடுவதில்லை. அதிரடிக்கும் ரன் வேட்டைக்காரர்கள் ஸ்மித், மெக்கல்லம் இருவரும் அடுத்த ஆண்டு 35 வயதைத் தொட்டுவிடுவார்கள். ஓய்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். தோனியும் அப்படியே. ஒருவேளை இந்த சீனியர் பிளேயர்கள் இல்லையென்றால் சென்னை அணி பழைய ஆவேசத்தோடு பந்தை பறக்கவிடுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. 

ராசி ரசாயனம் :

எவ்வளவு இக்கட்டான நிலைமையில் இருந்தாலும், 'வந்துட்டேன்னு சொல்லு' என மாஸாக எகிறி அடித்து செமி ஃபைனலில் நுழையும் ஒரே அணி சென்னைதான். ஃபேர்ப்ளே அவார்டும் பெரும்பாலும் சென்னைக்குத்தான். இத்தனைக்கும் காரணம், வீரர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி. சென்னை அணி ட்ரஸ்ஸிங் ரூமில் அவ்வளவு நெருக்கம் இருக்கும். ஆனால், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்தால் பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் செட்டாகவே சிலமணி நேரங்களாகும். இரண்டு ஆண்டுகள் பிரேக்கிற்குப் பின் வரும் வீரர்கள் அதே கெமிஸ்ட்ரியோடு விளையாடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லோக்கல் பாய்ஸ் :

இந்தியக் கிரிக்கெட் அணியில் அஸ்வின், விஜய் தவிர மற்ற வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. அதனால் சி.எஸ்.கேதான் அவர்களுக்கான ஏணியாக இருந்தது. விஜய் சங்கர், பாபா அபராஜித், பத்ரிநாத், அபினவ் முகுந்த், யோ மகேஷ் என எக்கச்சக்க வீரர்களை லைம்லைட்டிற்கு அழைத்து வந்தது சி.எஸ்.கே அணிதான். இப்போதைய தொடரில் சிதறிக் கிடக்கும் தமிழக வீரர்கள் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக களம் இறங்கினால் 'நம் ஊர் பசங்க கலக்குறாங்கப்பா' என கெத்தாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

தெறிக்க விடும் பவுலர்கள் :

சென்னை அணி பேட்டிங்கிற்குப் பெயர்போனதுதான். ஆனால் இக்கட்டான நேரங்களில் பவுலர்கள்தான் அதிகம் கைகொடுத்திருக்கிறார்கள். சீசனுக்கு ஒரு சென்னை அணி பவுலர், எதிரணிகளை டரியலாக்குவார். நெஹ்ரா, மோகித் சர்மா, சுதீப் தியாகி, ஹில்ஃப்னாஸ், பொலிங்கர், அல்பி மார்க்கெல், டிம் சவுதி என இந்த லிஸ்ட் மிகவும் பெரியது. இப்படியான பவுலர்கள் அடுத்த சீசனில் சென்னைக்கு மீண்டும் கிடைத்தால் 'தெறிக்கவிடலாமா?' எனக் கேட்டு கேட்டு பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கலாம்.

தரை லோக்கல் எனர்ஜி :

 

மற்ற அணிகளின் ரசிகர்களுக்கும் பிடித்தது சென்னை மைதானத்தில் நிலவும் கொண்டாட்ட மனநிலைதான். ஒரு பக்கம் சிவமணி ட்ரம்ஸ் அதிரடிக்க, மறுபக்கம் டப்பாங்குத்து காதைக் கிழிக்க, சென்னை நகரத்திற்கே சேப்பாக்கத்தில் இருந்துதான் எனர்ஜி சப்ளையாகும். போதாக்குறைக்கு பிராவோ, ஜடேஜா போன்ற ஜாலி கேலி வீரர்களும் தங்கள் பங்குக்குப் போட்டுத் தாக்குவார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் கழித்து ஓர் அணியாய் திரளும் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே அதே பழைய எனர்ஜியும் இருந்தால்... வேறென்ன ஃபைனலில் விசில் போடவேண்டியதுதான்.

http://www.vikatan.com/news/sports/86571-a-rewind-article-on-chennai-super-kings-team.html

Categories: merge-rss

தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு

Mon, 17/04/2017 - 07:01
தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு

 

 

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

chess-bg-small.jpg

 

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 

 

 

தெரிவுசெய்யப்பட்டவர்கள் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட மாணவர் விபரம் வருமாறு, 

8 வயதின் கீழ் ஆண்கள்

1 ஆம் இடம்- ச.மதுமிலன் - கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம். 

2 ஆம் இடம் - சி.தமிழ்குமரன் - கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம். 

3 ஆம் இடம் ரி.பினோஜன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

8 வயதின் கீழ் பெண்கள் 

1 ஆம் இடம்- பு.ந்ந்துஷா  - கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - பா.வட்ஷிகா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் நி.பம்ஷிகா - சோரன்பற்று சீ.சீ.த.க.பாடசாலை.

4 ஆம் இடம் - கே. லதுர்ஜிகா- மாசார் அ.த.க.பாடசாலை.

5 ஆம் இடம்- எஸ். ஜாதவி - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

10 வயதின் கீழ் ஆண்கள்

1 ஆம் இடம்- ஜே.பிறேம்டிலக்‌ஷன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - சி.மகிழன்பன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - கி.பானுஜன் - கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம். 

4 ஆம் இடம்- எஸ். கிருஷாந் - கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம். 

10 வயதின் கீழ் பெண்கள்

1 ஆம் இடம்- பு.கலையிசை  - கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - ஜே.யாழவி - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் பா.துளசிகா - கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம். 

4 ஆம் இடம்- எம். வைகா- கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

12 வயதின் கீழ் ஆண்கள்

1 ஆம் இடம்- கு. சங்கீர்த்தன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - சி.பிரணவன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - ரீ. நவீன ன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

4 ஆம் இடம்- எம். நித்திலன் - கிளிநொச்சி மகா  வித்தியாலயம். 

5 ஆம் இடம் - எஸ். நிதுஷன் - கிளிநொச்சி மகா  வித்தியாலயம். 

12 வயதின் கீழ் பெண்கள்

1 ஆம் இடம்- ஜே.கபீஷ்ணா  - இராமநாதபுரம் மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - மோ.வானதி - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - எம். மருணிதா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

4 ஆம் இடம் - ப.கிசோரிகா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

5 ஆம் இடம்- கே.மயூரதா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

6 ஆம் இடம்- கௌ. பிறையினி - பளை மத்திய கல்லூரி.

14 வயதின் கீழ் ஆண்கள் 

1 ஆம் இடம்- பா.கம்சிகன்  - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - ஈ.ஜதுர்ஷன் - இராமநாதபுரம் மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - ஆர். பிரதாபன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

4 ஆம் இடம் - வி.தர்ஷிகன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

5 ஆம் இடம்- சே. சிவகுமாரன் - வட்டக்கச்சி மத்திய கல்லூரி.

6 ஆம் இடம்- கே.கிசேரன் - பளை மத்திய கல்லூரி.

7 ஆம் இடம் - சி.கவிசாந் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

8 ஆம் இடம் - எம்.நோஜன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

14 வயதின் கீழ் பெண்கள் 

1 ஆம் இடம்- கௌ. தமிழிசை  - பளை மத்திய கல்லூரி.

2 ஆம் இடம்- க.றஜீனா - இராமநாதபுரம் மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - வி.றக்‌ஷிகா - புனித திரேசா பெண்கள் கல்லூரி.

16 வயதின் கீழ்ஆண்கள்

1 ஆம் இடம்- ஜே.பிரவிந்தன்  - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - சி.விக்னேஷ் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - எம். குயிலன் - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

4 ஆம் இடம் - த.இளங்கோபன் -கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

5 ஆம் இடம்- உ.ஹரிராம் - திருவையாறு மகா வித்தியாலயம். 

16 வயதின் கீழ் பெண்கள்

1 ஆம் இடம்- பி.மதுசனா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் -கெ.பிரம்மிகா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

3 ஆம் இடம் - எம். புகழினி - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

18 வயதின் கீழ் ஆண்கள்

1 ஆம் இடம்- எஸ். டனுஷியன் - அக்கராயன்  மகா வித்தியாலயம். 

2 ஆம் இடம் - சே.மயூரன் - வட்டக்கச்சி மத்திய கல்லூரி.

18 வயதின் கீழ் பெண்கள்

1 ஆம் இடம் - எஸ். கஜானி  - கிளிநொச்சி இந்துக் கல்லூரி.

16 வயதின் கீழ் பெண்கள்

1 ஆம் இடம்- பி.மதுசனா - கிளிநொச்சி மகா வித்தியாலயம். 

இம் மாணவர்கள் பங்குபற்றவுள்ள தேசிய மட்ட இளையோர் சதுரங்கப்போட்டிகள் சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட்டியலுக்கு ரேட்டிஙிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டிகள் கடந்த வருடம் முதல் முறையாக கிளிநொச்சியில் நடைபெற்றதுடன் 53 பேர் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டு அதில் ஒருவர் சர்வதேச சதுரங்கத் தரப்படுத்தல் பட்டியலில் இடம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/19084

Categories: merge-rss

அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி

Sun, 16/04/2017 - 20:08
அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி  
Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016) Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016)
singer-league-2017-728.jpg

இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி அவுஸ்திரேலியாவின் முன்னனி கழக அணியான சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் அணிக்கு விளையாடுவதற்காக ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையில் நாளை (17.04.2017) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகின்றார்.

யாழ்ப்பாணம் ஈவினையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி, தனது பள்ளிக்கல்வியை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தார். அங்கு வலைப்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்த இவர் மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை வலைபந்தாட்ட அணியின் நட்சத்திரமாக உருவெடுத்தார்.

உலகின் முதல்தர வலைபந்தாட்ட வீராங்கனையான இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் நாளை அவுஸ்திரேலியா நோக்கி விளையாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவரது முகாமையாளர் கோபிநாத் அவர்கள் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு வலைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் சிறந்த ஷூட்டர் (Shooter) விருதினைப் பெற்ற தர்ஜினி, கடந்த ஒரு வருடகாலமாக இலங்கை தேசிய அணி சார்பாக எந்தவொரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 10 வருடங்களிற்கு மேலாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக ஆடிவந்த தர்ஜினி கடந்த ஒரு வருடகாலமாக போட்டிகளில் பங்கெடுக்காது விலகியிருந்தமை இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் பெரும் சவாலாக இருந்த அதேவேளை பலரை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது.

இலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும் தற்போதைய புருனே அணியின் பயிற்றுவிப்பாளருமான திலகா ஜினதாஸ மற்றும் தர்ஜினியின் முகாமையாளரான கோபிநாத் ஆகியோரினது முயற்சினால் தர்ஜினிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இவரினுடைய இவ் ஆறு மாதகால பயணத்தின் போது, அவுஸ்திரேலியாவின் மெல்பெர்னிலிருந்து சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் (City west falcon) அணி மற்றும் சென். அல்பன்ஸ் வலைபந்தாட்டக் கழகம் (St. Albans Netball club) ஆகியவற்றிற்காக விளையாடவுள்ளார். அதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும் பயிற்றுவிப்பாளருமான நிக்ஹோலி றிச்சர்ட்சனின் பயிற்றுவிப்பின் கீழ் தன்னையும் தயார்படுத்தவுள்ளார்.

மேற்படி சுற்றுப்பயணம் தொடர்பாக தர்ஜினி சிவலிங்கம் Thepapare.com இற்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையில் “நான் அவுஸ்திரேலியாவின் முதல்தர கழகத்திற்கு விளையாட இருப்பதையிட்டும், அங்கு சிறந்த நிபுணரின் கீழ் பயிற்றுவிக்கப்படுவதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த திலகா ஜினதாஸ, கோபிநாத் மற்றும் ஆலோசனை வழங்கிய ஏனையோரிற்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னுடைய இலக்கு எப்போதும் இலங்கையின் வலைபந்தாட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதேயாகும். நான் ஆறு மாதகால பயிற்சியின் பின்னர் தாயகம் திரும்பி இலங்கை தேசிய அணிக்கு என்னால் இயலுமான பங்களிப்பை வழங்குவேன்” என உறுதியுடன் தெரிவித்தார்.

“இலங்கையிலிருந்து ஒரு வீராங்கனை வலைப்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களாக வலம்வரும் அவுஸ்திரேலிய கழகம் ஒன்றிற்கு விளையாடுவது இதுவே முதல் தடவை. தர்ஜினிக்கு தன்னார்வலர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இது போன்ற வாய்ப்பினை எதிர்காலத்தில் ஏனையோரிற்கும் உருவாக்கிக்கொடுக்க இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வேளை தர்ஜினிக்கு இலங்கை வலைபந்தாட்டத்தில் உரிய இடம் வழங்கும் அதேவேளை, இலங்கையின் வலைபந்தாட்ட வளர்ச்சி தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்” என்றார் தர்ஜினியின் முகாமையாளர் கோபிநாத்.

http://www.thepapare.com/

Categories: merge-rss

'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்!

Sat, 15/04/2017 - 09:03
'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்!
 
 

முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த ஆண்டு மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்திய புகாரில் சிக்கி, டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால், அவரது தடைக்காலம் பின்னர் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் முடிந்து, வரும் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைபெற உள்ள  'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார்.

மரியா ஷரபோவா

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, 'Porsche Grand Prix' தொடரில் வைல்டு கார்டுமூலம் தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை, டென்னிஸ் பிரபலங்கள் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், 'நான் எனது தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். என்னை மேலும் மேலும் தண்டிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? வீரர்கள் என்னைத் தொடர்ந்து விமர்சித்தால், அது சரியாக இருக்காது' எனப் பதில் அளித்துள்ளார். மேலும், மெல்டோனியம் ஊக்கமருந்து தடை குறித்து, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் என்னிடம் நேரடியாக எச்சரித்திருக்கலாம் எனவும் ஷரபோவா விமர்சித்துள்ளார்.

http://www.vikatan.com/news/sports/86492-grand-slam-champion-maria-sharapova-requests-co-players-to-stop-criticising-her.html

Categories: merge-rss

சென்னை அணிக்கு பிசிசிஐ அழைப்பு - மீண்டும் 'டாஸ் ' போடுகிறார் தோனி!

Sat, 15/04/2017 - 07:02
சென்னை அணிக்கு பிசிசிஐ அழைப்பு - மீண்டும் 'டாஸ் ' போடுகிறார் தோனி!
 

சூதாட்டப் புகார் காரணமாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட இரு அணிகளுக்கும், 2018-ம் ஆண்டு தொடருக்கான ‘Invitation To Tender for media rights -க்கு பிசிசிஐ  அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளன. 

dhoni_00238.jpg

சென்னை அணி, இரு முறை ஐபிஎல் சாம்பியன். ராஜஸ்தான் அணியும்  கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது. இந்த அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, புனே மற்றும் குஜராத் அணிகள் உருவாகின. கலைக்கப்பட்ட அணி வீரர்களில் பெரும்பாலானோர், நடப்புத் தொடரில் இந்த அணிகளுக்காக விளையாடிவருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, புனே அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும்பட்சத்தில்...  தோனி, சென்னை அணிக்குத் திரும்புவார். புனே, குஜராத் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் மாறி, பெயர் மாற்றத்துடன் மீண்டும் களம் இறங்கலாம். 

சென்னை அட்வெர்டைசிங் கிளப் விழாவில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் என். ஸ்ரீநிவாசன், ''2018-ம் ஆண்டு, தோனி தலைமையில் சென்னை அணி  புதிய உத்வேகத்துடன் களம் இறங்கும்'' எனப் பேசியிருந்தார். அதனால், சென்னை அணிக்கு மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்படுவது உறுதியாகிறது. சென்னை அணிக்கு தோனி கேப்டனாகும்பட்சத்தில், மீண்டும் தோனி 'டாஸ்' போட களம் இறங்குவார்.

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அண்மையில் நீக்கப்பட்டார். அந்த அணியின் உரிமையாளர் ஹர்ஸ் கோயங்கா, தோனியை நடத்தும்விதம் குறித்து அவரது மனைவி சாக் ஷி  'ட்விட்' வழியாக கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். அதில் ,' காலம் சக்தி வாய்ந்தது' என்று குறிப்பிட்டிருந்தார்.  அதன்படி, சென்னை , ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்கும் பட்சத்தில் புனே அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/sports/86481-bcci-set-to-welcome-the-suspended-chennai-super-kings.html

Categories: merge-rss

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்: ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது

Fri, 14/04/2017 - 18:41
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்: ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேனான மொகமது சேஷாத்தை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்துள்ளது.

 
 
 ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது
 
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக திகழந்து வருபவர் மொகமது ஷேசாத். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2010-ம் ஆண்டில் அறிமுகமான சேஷாத், 58 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமியில் ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டது. இந்த மாதிரியை சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட க்ளென்புடரால் (Clenbuterol) என்ற ஒருவகை ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

இதனால் மொகமது ஷேசாத் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. ‘‘இந்த தடை வரும் 26-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன் அவர் மேல்முறையீடு செய்து தனக்கெதிரான குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும்’’ என்று ஐ.சி.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14180627/1079954/Afghanistan-cricketer-Mohammad-Shahzad-suspended-after.vpf

Categories: merge-rss

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார

Fri, 14/04/2017 - 16:09
சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார  
ICC Champions Trophy Ambassador
singer-league-2017-728.jpg

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது.  

எதிர்வரும் ஜூன் மாதம்  1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு  இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து சார்பாக இயன் பெல்லும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா சார்பாக முறையே ஷேன் போண்ட், மைக் ஹஸ்ஸி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் விஷேட தூதுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான சம்பியன் கிண்ணத்தின் முதலாவது போட்டி நடைபெற சரியாக 50 தினங்களுக்கு முன்னர் முன்னணி வீரர்கள் அடங்கிய இந்த பெயர் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இத்தொடரிற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் தம்மிடையே 1774 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு, 48 சதங்களுடன் தம்மிடையே மொத்தமாக 51,906 ஓட்டங்களினையும் குவித்து 838 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டேவிட் றிச்சர்ட்சன் தூதுவர்கள் தொடர்பாக பேசும் போது,

“ சம்பியன் கிண்ணத்தொடர் ஆரம்பாக 50 நாட்களின் முன்னர் தலைசிறந்த வீரர்கள் குழாமொன்றினை சம்பியன் கிண்ணத்திற்கான விஷேட தூதுவர்களாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எமது இந்த நிகழ்ச்சித்திட்டம் மூலம் முன்னோடி வீரர்களான இவர்கள் இடையிலும் புதிய தலைமுறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடையில் இணைப்பு பாலம் ஒன்று உருவாகும் என நம்புகின்றோம். இன்னும் கிரிக்கெட்டினை மேலும் சிறந்ததாக மாற்றக்கூடிய வாய்ப்பும் உருவாகும்  என்றார்.

அத்துடன்,

தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த குழாம், ஐ.சி.சி இன் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக சம்பியன் கிண்ணத்தில் நடைபெற இருக்கும் 15 போட்டிகள் பற்றிய தமது கருத்துக்களையும், போட்டிகள் பற்றிய தமது அனுபவ ரீதியிலான கண்ணோட்டங்களினையும் வழங்கும். இவை அனைத்தையும் நிச்சயமாக  நாம் விரும்பி வாசிப்போம்என்றும் றிச்சர்ட்சன் தெரிவித்திருந்தார்.  

சம்பியன் கிண்ணத் தொடரில், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் பங்கேற்றிருக்கும் குமார் சங்கக்கார தனது கருத்தினை வெளியிட்டிருந்த போது,

“ இத்தொடரின் விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதையும், போட்டிகள் பற்றிய ஆய்வாளராய் செயற்படப்போவதையும் கெளரவமாகக் கருதுகின்றேன். அத்துடன் இந்த வாய்ப்பு எனக்கு கிட்டியமைக்காக சந்தோசமும் அடைகின்றேன். நான் பங்கேற்று ரசித்து விளையாடியிருந்த தொடரொன்றிற்காக நெருங்கி வேலை செய்வதிலும் மகிழ்ச்சி கொள்கின்றேன். அத்துடன் இத்தொடரிற்காக எனது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கவும் எதிர்பார்த்துள்ளேன் “ என்றார்.

மேலும்,“ இலங்கை இத்தொடரில்  எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் இளம் அணி. இத்தொடரினை இதே நிலமைகளுடன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து 2019இல் நடைபெற இருக்கும் ஐ.சி.சி உலகக் கிண்ணத்திற்காக சரியான வாய்ப்பாக எம் நாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் உறுதியோடு இருக்கின்றேன். “  

என்று குமார் சங்கக்கார சம்பியன் கிண்ணத்தில்  இலங்கை அணி பற்றிய தனது கருத்தினை  தெரிவித்திருந்தார்.

http://www.thepapare.com

 1 Person, machen Sport, Baseball und Text

 4 Personen, Personen, die lachen, Text

Categories: merge-rss