விளையாட்டுத் திடல்

உமர் அக்மலுக்கு போட்டித் தடை

Tue, 03/10/2017 - 06:08
உமர் அக்மலுக்கு போட்டித் தடை

 

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான உமர் அக்மல், அவ்­வ­ணியின் பயிற்­சி­யாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச ­மான மொழியில் வசை ­பா­டினார் என்றும் தேசிய கிரிக்கெட் அக­ட­மியின் வச­தி­களைத் தான் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை விதித்தார் என்றும் ஊட­கங்கள் மூல­மாக குற்­றஞ்­சாட்­டி­யதால் அவர் போட்டித்தடைக்கு உள்­ளா­கி­யுள்ளார்.

umar-akmal-mike-arthur.jpg

அத்துடன் ஒரு மில்­லியன் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது. 

http://www.virakesari.lk/article/25239

Categories: merge-rss

இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்!

Mon, 02/10/2017 - 18:21
இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்!

 

 
dhawan-pujara1xx

 

அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இலங்கை அணி. 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள்.

இவை அனைத்தும், 37 நாள்களில் முடியவுள்ளன!

நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 6 அன்று டெல்லி-யில் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது. 

தர்மசாலாவில் டிசம்பர் 10 அன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17 அன்று மூன்றாவது போட்டியுடன் ஒருநாள் தொடர் நிறைவடைகிறது. 

டிசம்பர் 20 அன்று கட்டாக்கில் முதல் டி20 போட்டி தொடங்கி டிசம்பர் 24 அன்று மும்பையில் 3-வது டி20-யுடன் இலங்கையுடனான தொடர் நிறைவுபெறுகிறது. இந்திய, இலங்கை அணிகள் 5 நாள்களில் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளன. 

இலங்கையில் நடைபெற்ற மூன்று டெஸ்ட்டுகள், 5 ஒருநாள், 1 டி20 என அனைத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. அதேபோல இந்தமுறையும் 9-0 என இந்திய அணி வெற்றி பெறுமா?

போட்டி அட்டவணை

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: நவம்பர் 16 - 20, கொல்கத்தா

2-ம் டெஸ்ட்: நவம்பர் 24 - 28, நாகபுரி 

3-ம் டெஸ்ட்: டிசம்பர் 2 - 6, டெல்லி 

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: டிசம்பர் 10, தர்மசாலா 

2-ம் ஒருநாள்: டிசம்பர் 13, மொஹலி

3-ம் ஒருநாள்: விசாகப்பட்டினம்

டி20 தொடர்

முதல் டி20: டிசம்பர் 20, கட்டாக் 

2-ம் டி20: டிசம்பர் 22, இந்தூர்

3-ம் டி20: டிசம்பர் 24, மும்பை

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/02/sri-lanka-set-for-packed-india-tour-2783139.html

Categories: merge-rss

உலக சாதனை படைத்தார் சுழல் மன்னன் ஹேரத்

Mon, 02/10/2017 - 15:39
உலக சாதனை படைத்தார் சுழல் மன்னன் ஹேரத்

 

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனையை படைத்தார்.

268719.4.jpg

39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 84  டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 153 இன்னிங்ஸ்களில் விளையாடி 23, 835 பந்துதுகளை வீசி 11, 128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக கொடுத்து 400 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரங்கன ஹேரத்திற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் டானியல் வெற்றேரி 362 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

268718.jpg

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் 188 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 ஆவது இடத்திலுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரங்கன ஹேரத்  40 ஓவர்கள் பந்து வீசி 93 ஓட்டங்களைக் கொடுத்து 12 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

2 ஆவது இன்னிங்ஸில் 21.4 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து  4 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25225

Categories: merge-rss

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா T20 தொடர் செய்திகள்

Mon, 02/10/2017 - 08:14
ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள்: இந்திய அணியில் நெஹ்ரா, கார்த்திக், தவண்
 
nehra

டி20 அணியில் ஆஷிஷ் நெஹ்ரா.   -  படம்.| ஏ.பி.

அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஷிஷ் நெஹ்ரா கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் ஆடினார்.

மீண்டும் ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பில்லை. ரஹானே, பவுலர் ஷர்துல் தாக்குர் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை.

அணி விவரம்:

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராகுல், பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, அக்சர் படேல்.

 

http://tamil.thehindu.com/sports/article19783946.ece?homepage=true

Categories: merge-rss

சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி

Sun, 01/10/2017 - 13:53
சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி
ft-1-696x464.jpg Courtesy - Getty Images
 

 

 

ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது.

நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர் சிடி அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ (Sergio Aguero) பயணித்த கார் விபத்திற்குள்ளாகியதால் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. ஸர்ஜீயோ அக்வேரோ மூலம் இதுவரை மென்சஸ்டர் சிடி அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 6 கோல்கள் பெறப்பட்டுள்ளது. அத்துடன் முன்களத்தில் விளையாடும் இவரின் சிறப்பாட்டத்தின் மூலம் மென்சஸ்டர் சிடி அணி 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று, 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

செல்சி அணியின் அரங்கத்தில் போட்டி நடைபெற்றிருந்தாலும் போட்டியில் மென்சஸ்டர் சிடி அணியின் ஆதிக்கமே கூடுதலாக தென்பட்டது. போட்டியின் 3 ஆவது நிமிடத்தில் செல்சி கழகம் முதல் வாய்ப்பை பெற்றது. மத்தியகள வீரரான கன்டே (Kante) மூலம் வலது பக்கத்திலிருந்து மென்சஸ்டர் சிடி அணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை அல்வாரோ மொராடா தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

அதனைத் தொடரந்து போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் மென்சஸ்டர் சிடி அணியின் மத்தியகள வீரர்களான டி பூரூனே (De Bruyne) மூலம் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோலைப் பெறுவதற்கான முயற்சியும், மீண்டும் டேவிட் சில்வா (David Silva) மூலம் 11 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையிலிருந்து கோலைப் பெறுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது.

போட்டியின் 25 ஆவது நிமிடத்தில் செல்சி அணி வீரர்களால் தொடர்ந்து முயற்சிகள் பெனால்டி எல்லையில் எடுக்கப்பட்டது. எனினும் அனைத்து முயற்சிகளையும் மென்சஸ்டர் சிடி அணியின் பின்கள வீரர்கள் தடுத்தனர்.

அதன் பின்னர் பந்தை தமது ஆதிக்கத்தில் முதல் பாதி நிறைவு பெறும் வரை கூடுதலான நேரம் வைத்திருந்த மென்சஸ்டர் சிடி அணியால் போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் ஸனே (Sane) மூலம் பெனால்டி எல்லையினுள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற சில்வா, எதிரணியின் பின்கள வீரரால் விடுக்கப்பட்ட சவாலையும் தாண்டி கோலை நோக்கி உதைந்தார். எனினும் கோல் காப்பாளர் சிறப்பாக செயற்பட்டு பந்தை தட்டி விட்டார்.

மீண்டும் சிறப்பாக செயற்பட்ட செல்சி அணியின் கோல் காப்பாளர், மென்சஸ்டர் சிடி அணிக்கு போட்டியின் முதல்பாதி நிறைவுறுவதற்கு 1 நிமிடத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட கோணர் வாய்ப்பின் போது, மென்சஸ்டர் சிடி அணி வீரரான பெர்னான்டீனியோ (Fernandinho) ஹெடர் மூலம் கோல் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை சிறப்பாக பாய்ந்து தடுத்தார். அம்முயற்சியுடன் போட்டியின் முதல்பாதி எந்த வித கோலுமின்றி நிறைவுற்றது.

முதல் பாதி: மென்சஸ்டர் சிடி 0 – 0 செல்சி

இரண்டாம் பாதியில் கோல் பெறும் முயற்சி கூடுதலாக மென்சஸ்டர் சிடி அணியின் மூலமே எடுக்கப்பட்டது. எனினும் இரண்டாம் பாதியின் முதல் முயற்சியை செல்சி அணி எடுத்தது. போட்டியின் 61 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து ஹஸார்ட் (Hazard) உதைந்த பந்தை கோல் மென்சஸ்டர் சிடி அணியின் கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்தரர்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் மென்சஸ்டர் சிடி அணியின் வீரர் சில்வா மூலம் பெனால்டி எல்லையில் மேற்கொண்ட முயற்சி பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

சில்வாவின் முயற்சி தடுக்கப்பட்டாலும் 2 நிமிடங்கள் கழிந்ததன் பின் டி பூரூனே தனது அணிக்கான கோலை பெற்றுக் கொடுத்தார். சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் கப்ரீயல் ஜீஸஸ் (Gabriel Jesus) பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து, பெனால்டி எல்லையின் மத்தியகளத்திற்கு வழங்கிய பந்தை டி பூரூனே கோலாக்கினார்.

அதன் பின்னரும் 80 ஆவது நிமிடத்தில் எந்த வித பின்கள வீரருமின்றி பெறப்பட்ட பந்தை கப்ரீயல் ஜீஸஸ் கோலை நோக்கி உதைந்தார். எனினும் சிறப்பாக செயற்பட்ட செல்சி அணியின் பின்கள வீரர் தனது தலையால் பந்தை தட்டி விட்டார்.

 

10 நிமிடங்கள் கழிந்ததன் பின் செல்சி அணிக்கு போட்டியின் இறுதி வாய்ப்பு ப்ரீ கிக் மூலம் கிட்டியது. வலது பக்க கோணரிற்கு அருகிலிருந்து பெப்ரீகாஸ் (Febrigas) உள்ளனுப்பிய பந்தை கிரிஸ்டன்ஸன் (Christansan) தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்து கோல் கம்பங்களைத் தாண்டிச் சென்றது. அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 3 நிமிட மேலதிக நேரத்துடன் போட்டி நிறைவுற்றது.

மென்சஸ்டர் சிடி அணியின் டி பூரூனே மூலம் பெறப்பட்ட கோலினால் தனது சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடி அணியிடம் செல்சி அணி தோல்வியைத் தழுவியது.

முழு நேரம்: மென்சஸ்டர் சிடி 1 – 0 செல்சி

மேலும் சில போட்டி முடிவுகள்

டொடன்ஹாம் 4 – 0 ஹடர்ஸ்பீய்ல்ட் (Huddersfield)

பர்னமவுத் (Bournemouth) 0 – 0 லயஸ்டர் சிடி

வெஸ்ட் பூரும் 2 – 2 வொர்ட் பூர்ட் (Watford)

வெஸ்ட்ஹாம் 1 – 0 ஸுவன்ஸி சிடி (Swansea City)

ஸ்டோக் சிடி 2 – 1 ஸவுதம்டன்

மென்சஸ்டர் யுனைடட் 4 – 0 கிரிஸ்டல் பலஸ்

http://www.thepapare.com/

Categories: merge-rss

பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில

Sun, 01/10/2017 - 13:10
பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில
 
 
பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில
 Share
 •  
 •  
 •  
 •  
 •  

பிரான்ஸ் தமி­ழர் கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் வடக்கு மாகாண ரீதி­யாக நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் சில யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றன. அவற்­றில் சில­வற்­றின் முடி­வு­கள்:

காலை 8 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து புங்­கு­டு­தீவு நச­ரேத் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­தது.

காலை 8.45 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து மயி­லங்­காடு ஞான­மு­ரு­கன் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. கோல்­கள் எவை­யும் பதி­வு­செய்­யப் படா­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­தது.

காலை 9.30 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் விடத்­தல்­தீவு யூனி­யன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து வேலணை துறை­யூர் ஐய­னார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 2:0 என்ற கோல் கணக்­கில் ஐய­னார் அணி வெற்­றி­பெற்­றது.
காலை 10.15 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கிளி­நொச்சி ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கில்­லறி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 2:0 என்ற கோல் கணக்­கில் கில்­லறி அணி வெற்­றி­பெற்­றது.

முற்­ப­கல் 11 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கிளி­நொச்சி லக்­கிஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இந்த ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் அணி 3.0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.
முற்­ப­கல் 11.45 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து மன்­னார் டில­சா­ல­குடி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. கோல்­கள் எதுவும் பதிவு செய்­யப்­ப­டா­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­தது.

http://newuthayan.com/story/33645.html

Categories: merge-rss

அமுல்படுத்திய 24 மணிநேரத்தினுள் விதிமுறையை மீறிய கிரிக்கெட் வீரர் (காணொளி)

Sat, 30/09/2017 - 06:04
அமுல்படுத்திய 24 மணிநேரத்தினுள் விதிமுறையை மீறிய கிரிக்கெட் வீரர் (காணொளி)

 

 

சர்வதேச கிரிக்கெட் சபை அமுல்படுத்திய மாற்றப்பட்ட புதிய ஆட்ட விதிமுறைகளை மீறிய முதலாவது வீரர் என்ற ‘பெருமையை’ குவீன்ஸ்லாந்து அணி வீரர் மார்னஸ் லாபுஷானியா பெற்றார். புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருபத்து நான்கு மணிநேரம் ஆவதற்குள் அந்த விதிமுறை மீறப்பட்டது கவனிக்கத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளான குவீன்ஸ்லாந்து புல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் நேற்று (29) ஜே.எல்.டி. ஒருநாள் கோப்பைக்கான போட்டியில் விளையாடின. 

 

இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குவீன்ஸ்லாந்து புல்ஸ் அணியின் மார்னஸ், பந்து கையில் இல்லாத நிலையிலேயே பந்தை எறிவதுபோல் பாசாங்கு செய்தார். இதனால், துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சற்றுத் தடுமாற்றமடைந்தனர்.

இது குறித்து நடுவர்கள் இருவரும் பேசி, மார்னஸின் செய்கைக்கு அவ்வணிக்கு அபராதம் விதிக்கும் வகையில் எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்களை அளித்தனர்.

புதிய விதிமுறைகளின்படி, ஆட்டத்தின்போது ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களை உடனடியாக களத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரமும் நடுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25116

Categories: merge-rss

கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets

Fri, 29/09/2017 - 18:48
கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets

கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! 

கிரிக்கெட்

 


பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடலாம்' என நினைத்து, பந்தை சிங்கிள் தட்டிவிடுவார். யூனிஸ் கானுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகாத காரணத்தால், மறுமுனையில் நின்ற அவர் ரன்னை நிராகரித்துவிடுவார்.  மைதானத்தின் மையத்தில் நின்ற இன்சமாமுக்குப் பின்னால் இருக்கும் ஸ்டம்பை நோக்கி சுரேஷ் ரெய்னா பந்தை விட்டெறிவார். என்ன செய்வதென அறியாத இன்சாமம், ரன் அவுட்டுக்கு எறிந்த பந்தை ஸ்டோக் வைத்துவிடுவார். `Obstruction the field' என்ற முறையில் நடுவர்கள் `அவுட்' வழங்கிவிடுவார்கள். இது ஒரு பரிதாபம். 

இரண்டாவது சம்பவம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் ஸ்டீவ் ஹார்மின்சன் வீசிய பந்தை `ஓங்கி அடிச்சா, ஒன்ரை டன் வெயிட்டுடா' என்ற தொனியில் அடிப்பார். அதுவோ, நேராக ஹார்மின்சன் கையிலேயே போய் சிக்கிவிடும். வழக்கம்போல் பாதி கிரவுண்டு வரை வாக்கிங் வந்துவிடுவார் இன்சமாம். அதில் சுதாரித்த ஹார்மின்சன், பந்தைப் பிடித்துப் `பாஞ்சு அடிச்சா பத்தரை டன் வெயிட்டுடா' என்ற வேகத்தில் ஸ்டம்ப்பை நோக்கி அடித்துவிடுவார். பயந்துபோன இன்சாமம், `எறியறாய்ங்க. ஆனா, எங்க இருந்து எறியறாய்ங்கன்னு தெரியலையே!' என்ற சோகத்தில் பெவிலியன் திரும்பிவிடுவார். `இதுக்குமேல தாங்க முடியாது குருநாதாஆஆஆ...'
 

இந்த ரகத்தில் நிகழ்ந்த விக்கெட், உலகமே அறிந்த ஒன்று. இந்த விக்கெட்டுக்கு `மேஜிக் பந்து' என்ற தனிப்பட்ட பெயரே உள்ளது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரில் ஷேன் வார்னே, ஆன்ட்ரூ ஸ்டார்ஸுக்கு பந்து வீசுவார். ஒருநாள் முழுக்க பந்து வீசி சேதமடைந்த காரணத்தால், மைதானத்தின் மூலையில் பந்து குத்தியவுடன், ஆஸ்திரேலியாவில் பிட்ச்சான பந்து, இங்கிலாந்தில் இருக்கும் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸைப் பதம்பார்த்துவிடும். `என்னடா பித்தலாட்டம் இது!' என்ற ரகத்தில் அனைவரின் முகத்தையும் பாவமாகப் பார்க்கும் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், குழப்பம் நிறைந்த முகத்துடன் பெவிலியன் திரும்பிவிடுவார். `ஸ்பின்னா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்?'  

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் நிதானமாக ஆடிய மிஸ்பா உல் ஹக், 242 பந்துகளுக்கு 82 ரன்கள் என்ற நிலையில் இருப்பார். அப்போது `சிங்கிள் அடிக்கலாம்' என்ற எண்ணத்தில் ஆஃப் சைடு தட்டிவிடுவார். அந்தப் பக்கம் ஃபீல்டிங் நின்ற தினேஷ் கார்த்திக் விரைந்து வந்து பந்தை எடுத்து மிஸ்பாவை நோக்கி எறிவார். தன் காலைக் கவ்வ வருகிறது என்று பயந்த மிஸ்பா, சடாரென தாவுவார். அதுவோ, நேராக ஸ்டம்பில் அடித்து பைஸ் தெறித்துவிடும். லாங் ஜம்ப் தாவி தன் கால்களைக் காப்பாற்றிக்கொண்ட மிஸ்பா, விக்கெட்டைப் பரிதாபமாகப் பரிகொடுத்துவிடுவார். `எய்மிங் பண்றார்... பந்து போகுது... ஜஸ்ட் மிஸ் இல்லை, எக்ஸாட் ஹிட்டு!' 

 

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் சங்ககரா 99 ரன்களை அடித்துவிட்டு, 100 ரன்களைப் பெறுவதற்காக சிங்கிள் அடித்துவிட்டு மெதுவாக ஓடி `ஒரு ரன்னை எடுத்துவிட்டோம்' என்று நினைத்து 100 ரன்களைக் கொண்டாடிக்கொண்டிருப்பார். மறுமுனையில் முத்தையா முரளிதரனோ சங்ககரா 100 அடித்துவிட்ட குஷியில் பந்து இன்னும் கீப்பர் கைக்கு வராமலேயே பேட்டை கிரீஸில் மட்டும் வைத்துவிட்டு சங்ககராவுக்கு வாழ்த்து தெரிவிக்க வருவார். சுதாரித்த நியூஸிலாந்து கீப்பர் மெக்கல்லம், தயவுதாட்சண்யம் பார்க்காமல் முரளிதரனை ரன் அவுட் செய்துவிடுவார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இலங்கைக்கு அதுதான் கடைசி விக்கெட். `வாழ்த்து சொல்ல வந்தது ஒரு குத்தமா?' என நினைத்த முரளிதரன், முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு பெவிலியன் திரும்பிவிடுவார். பிறகு நடந்த பிரஸ் மீட்டில் இதுகுறித்து மெக்கல்லம் விவரித்துக் கூறி மன்னிப்பும் கேட்பார். டோன்ட் ஃபீல் ப்ரோ!

 

 

 

 

http://www.vikatan.com/news/sports/103639-funny-wickets-in-cricket.html

Categories: merge-rss

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்

Fri, 29/09/2017 - 18:17
இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்
New committee to revive srilanka cricket
 

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் உதவியைப் பெற்றுக்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் தலைவர்களான அநுர தென்னகோன், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் லக்ஷ்மன் எதிரிசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

எனினும், இக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான குமார் சங்கக்காரவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தனவுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவினால் எதிர்வரும் 3 மாதங்களில் கிரிக்கெட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான அறிக்கையை சமர்பிக்கவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினைப் பிடித்து பல கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கி பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக விளங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி அதிகாரிகளும் பல அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தோல்வி, ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் இந்திய அணியுடனான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தமை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கான விசேட செயலமர்வொன்றை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு முடிவுசெய்தது. இதற்காக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் மில்டன் அமரசிங்க, கொழும்பு பல்கலைக்கழக பேராசியர் ரஞ்சித் பண்டார, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி லக்ஷ்மன் எதிரிசிங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழுவொன்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இடம்பெற்ற இவ்விசேட சம்மேளனம், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த சம்மேளனத்தின் பிறகு தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை கொழும்பு பல்கலைக்கழக பேராசியர் ரஞ்சித் பண்டாரவினால் நேற்று முன்தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் ஹேமக அமரசூரிய மற்றும் அரவிந்தி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எனவே, குறித்த அறிக்கையை ஆராய்ந்து, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்காக நீண்ட கால திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து மனிதவள ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொடுக்கமாறு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது.

அதன்படி முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட இவ் விசேட ஆலோசனைக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Categories: merge-rss

பயர்ன் முனிச் அணியின் பயிற்றுவிப்பாளர் அதிரடியாகப் பதவி நீக்கம்

Fri, 29/09/2017 - 11:36
பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர்

 

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்துக்கான மோதலில் , ஜேர்மனிய கழகமான பயர்ன் மூனிச் , பாரிஸ் கழகத்திடம் படு தோல்வியைச் சந்தித்த நிகழ்வினை  அடுத்து , பயர்ன் மூனிச் கழக பயிற்சியாளர்  கார்லோ அன்செலோட்டியை  பதவி நீக்கம் செய்துள்ளதாக  கழகம் அறிவித்துள்ளது .

பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர்

ஏற்கனவே இந்த ஜெர்மன் கழகம்  நேற்று வியாழனன்று , ஒர் அவசர கூட்டத்தை ஒழுங்குபடுத்தி , கார்லோவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது . இந்த லீக் கிண்ணத்துக்கான போட்டிகள் இறுதிக் கட்டத்துக்குள் நுழையும் தறுவாயாக இருந்தும் , கழகம் இவரைப் பதவி நீக்கி இருக்கின்றது . 

பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர்

3-0 என்ற கணக்கில் இந்தக் கழகம் பாரிஸ் கழகத்திடம் தோற்றுள்ளது , கடந்த21வருட காலத்தில் சந்தித்த படுமோசமான தோல்வி என்று சொல்லப்படுகின்றது    தமது முதல் ஆறு உள்ளூர் போட்டிகளில் இந்தக் கழகம் ஆறு புள்ளிகளை இழந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது

https://news.ibctamil.com/ta/football/Carlo-Ancelotti-sacked-by-Bayern-Munich

பயர்ன் முனிச் அணியின் பயிற்றுவிப்பாளர் அதிரடியாகப் பதவி நீக்கம்  
Bayern Munich manager Carlo Ancelotti sacked
 

ஜேர்மன் நாட்டின் முன்னணிக் கால்பந்துக் கழகமான பயர்ன் முனிச்சின் பயிற்றுவிப்பாளராக கடந்த பருவகாலம் முதல் செயற்பட்டு வந்த கார்லோ அன்ஸலோட்டி (Carlo Ancelotti) பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற பரிஸ் செய்ண்ட் ஜெய்ன்ட் (PSG) மற்றும் பயர்ன் முனிச் அணிகளுக்கிடையிலான UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான போட்டியில் PSG அணியிடம் பயர்ன் முனிச் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கையை பயர்ன் முனிச் நிர்வாகம் எடுத்துள்ளது.

கார்லோவின் பதவி நீக்கம் தொடர்பிலான செய்தியை பயர்ன் முனிச் கழகம் தமது வலைத்தளத்தில் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளது.

 

58 வயதை அடைகின்ற கார்லோ அன்ஸலோட்டி, இத்தாலிய நாட்டை சேர்ந்தவர். இவர் இறுதியாக ஏ.சி மிலான் (AC Milan) கழகத்திற்காக விளையாடினார். எனினும், கூடுதலான காலம் எ.ஸ் ரோமா (AS Roma) கழகத்துடன் இணைந்தே தனது விளையாட்டை இவர் மேற்கொண்டார். .

2016 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதி கார்லோ அன்ஸலோட்டி, பயர்ன் முனிச் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக அவ்வணியை பொறுப்பேற்றார். அவரது பயிற்றுவிப்பின் கீழ் இதுவரை 60 போட்டிகளில் விளையாடியுள்ள பயர்ன் முனிச் அணி, 48 போட்டிகளை வென்றுள்ளது. அதேநேரம், இவரது பயிற்றுவிப்பின் கீழ் பயர்ன் முனிச் அணி 2016/2017 பருவகாலத்திற்கான ஜேர்மன் சம்பியன் கிண்ணத்தையும், 2016/2017 மற்றும் 2017/2018 பருவகாலங்களுக்கான ஜேர்மன் சுபர் கிண்ணங்களையும் (Germar Super Cup) இரு தடவைகள் வென்றுள்ளது.

மேலும், வெவ்வேறான கழகங்களின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி 3 தடவைகள் UEFA சம்பியன் கிண்ணத்தை வென்றது மட்டுமின்றி, நான்கு தடவைகள் தனது அணியை இறுதிப் போட்டிவரை கொண்டுசென்ற பயிற்றுவிப்பாளர்கள் பட்டியலில் இவரின் பெயரை மட்டுமே காண முடியும்.

இவர் தனது பயிற்றுவிப்பு காலத்தில் கூடுதலான காலம் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கழகமாக ஏ.சி மிலான் கழகம் திகழ்கிறது. அவர் அக்கழகத்தின் பயிற்றுவிப்பாளராக 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை செயற்பட்டுள்ளார்.

 

பயர்ன் முனிச் அணியின் தலைவரான கார்ல் ஹென்ஸ் ரும்மேகிஜ் (Carl Hens Rummenigge), கார்லோ அன்ஸலோட்டியின் பதவி நீக்கம் பற்றி அக்கழகத்தின் வலைத்தளத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

‘பருவகாலத்தின் ஆரம்பம் முதல் எமது அணியின் அடைவுகள் நாம் எதிர்பார்த்த விதத்தல் அமையவில்லை. பரிஸ் அணியுடனான போட்டியில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவானது. எனவே, கார்லோவுடனான நீண்ட நேர உரையாடலின் பின் எமது முடிவை தெரியப்படுத்தினோம்.

எம்முடன் கார்லோ இணைந்து செயற்பட்டதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். எனினும், அவருடைய முயற்சிகள் பலனளிக்காதது வருத்தமாய் உள்ளது. கார்லோ எனது சிறந்த நண்பன். இதன் பின்னரும் அது அவ்வாறே காணப்படும். எனினும் கழகத்தின் நலவிற்காக எம்மால் இந்த முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.’ என்றார்.

பயர்ன் அணியின் நிர்வாகமானது கார்லோ அன்ஸலோட்டியை மட்டுமின்றி அவருடன் உறுதுணையாக செயற்பட்ட உதவிக் குழாத்தின் அங்கத்தவர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. அத்துடன் இடைப்பட்ட காலத்தின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அன்ஸலோட்டியுடன் உதவிப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட வில்லி ஸக்னோலை (Willy Sagno) நியமித்துள்ளது.

http://www.thepapare.com/

Categories: merge-rss

டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை

Thu, 28/09/2017 - 20:55
டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை
realmadri.jpg
டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை
 

UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் டோர்ட்மன்ட் (Dortmund) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது.

UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது கட்டப்போட்டியில் டோர்ட்மன்ட் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள், டோர்ட்மன்ட் அணியின் மைதானமான இடூனா பார்க் (Iduna Park) அரங்கில் மோதின.

பன்டஸ்லிகா (Bundesliga) கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விளையாடிவரும் டோர்ட்மன்ட் அணி, இப்பருவகாலத்தின் ஆரம்பம் முதல் விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது. அதேவேளை கடந்த வருட லா லிகா மற்றும் UEFA சம்பியன் கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் அணியானது, டோர்ட்மன்ட் கழகத்தின் அரங்கில் இறுதியாக நடைபெற்ற 7 போட்டிகளில் எந்தவொரு போட்டியையுமே வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போட்டியானது இரு அணிகளுக்கும் சவாலான ஓரு போட்டியாகவே அமைந்திருந்தது.

ரியல் மெட்ரிட் அணியின் முக்கிய வீரர்களான மார்சலோ மற்றும் பென்சமா ஆகிய வீரர்கள் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. மேலும், டோர்ட்மன்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக இப்பருவகாலம் முதல் செயற்படும் பீடர் போஸ் (Peter Bosz), இப்போட்டியில் டோர்ட்மன்ட் அணியின் முன்களம் மற்றும் மத்திய களங்களில் மாற்றங்களை செய்திருந்தார்.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் வேகமான பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் பின்களத்திலிருந்து டோர்ட்மன்ட் அணியின் மத்திய களத்தின் வலது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற கர்வஹால், பந்தை டோர்மன்ட் அணியின் பெனால்டி எல்லை வரை கொண்டு சென்று வலது பக்கத்தினுடாக கோலை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் பந்து இலகுவாக கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

மீண்டும் விரைவாக செயற்பட்ட ரியல் மெட்ரிட் அணிக்கு, போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் ஈஸ்கோ மூலம் டோர்ட்மன்ட் அணியின் பின்களத்தினூடாக பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற ரொனால்டோ, சுயநலம் பாராமல் இடதுபக்கம் வழியாக கரத் பேய்லை நோக்கி பந்தை வழங்கினார். பந்தை கோலை நோக்கி செலுத்த முற்பட்டபோது டோர்ட்மன்ட் அணியின் பின்கள வீரர் லுகாஸ் பிஸ்ஸேக் (Lucasz Pizczek) மூலம் சிறந்த முறையில் அது தடுக்கப்பட்டது.

 

 

அதனைத் தொடர்ந்து சுதாகரித்துக் கொண்ட டோர்ட்மன்ட் அணிக்கு, ரியல் மெட்ரிட் பின்களத்தில் விடப்பட்ட தவறை பயன்படுத்திய அபயம்ன்பர்ங் (Aubameyang), பந்தை பின்களத்திலிருந்து பெற்று பெனால்டி எல்லையின் வலது பக்கத்திற்கு வழங்கினார். பந்தை பெற்ற யார்மலன்கோ (Andriy Yarmalenko) பந்தை உள்ளனுப்பிய போதும், எந்தவொரு வீரராலும் தலையால் முட்டி கோலாக்க முடியவில்லை. எனினும் கோல் கம்பங்களிற்கு அருகிலிருந்த முன்கள வீரரான பிலிப் (Philip) பந்தை கோலை நோக்கி உதைந்த போது பந்தானது ரியல் மெட்ரிட் அணியின் கோல் காப்பாளர் மூலம் தடுக்கப்ட்டது.

போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் கர்வஹால் மூலம் டோர்ட்மன்ட் அணியின் மத்திய களத்திலிருந்து பெனால்டி எல்லையின் இடது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை, ரியல் மெட்ரிட் அணியின் முன்கள வீரரான பேய்ல், பந்து தரையில் பட முன்னரே தனது இடது பாதத்தால் கோல் கம்பத்தின் வலது பக்க மூலையை நோக்கி உதைந்து கோலாக்கினார்.

பேய்லின் மூலம் பெறப்பட்ட கோலினால் ரியல் மெட்ரிட் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டியில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து முயற்சிகளைக் கைவிடாத டோர்ட்மன்ட் அணிக்கு போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற அபயம்ன்பர்கினால் ரியல் மெட்ரிடின் தடுப்புச் சுவரை தாண்டி தனது அணிக்காக கோலைப் பெற முடியவில்லை.

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 0 டோர்ட்மன்ட்

கோட்ஸே மூலம் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலைக்கு வழங்கப்பட்ட பந்தை, யர்மலன்கோ தலையால் முட்டி அபயர்ம்ன்பர்கிற்கு வழங்கினார். பந்தை எதிரணி வீரர் ஒருவர் தட்டி விட்டாலே போட்டி சமநிலை பெறும் என்ற நிலையிலிருந்த போது விரைவாக செயற்பட்ட வரானே (Raphaël Varane), எதிரணி வீரரை நோக்கி வந்து கொண்டிருந்த பந்தை கோல் கம்பத்தின் மிக அருகிலிருந்து தடுத்தார்.

அதனை தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரியல் மெட்ரிட் அணி பந்தை அதிகளவு நேரம் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. அதன் பலனாக 49 ஆவது நிமிடத்தில் டோர்ட்மன்ட் அணியின் பின்கள வீரர்களால் இடது பக்கத்தில் விடப்பட்ட இடைவெளியினுடாக ரியல் மெட்ரிட் அணியின் மத்தியகள வீரர் டோனி குரூஸ் (Toni Kroos) பந்தை பின்களத்தினுடாக பெனால்டி எல்லைக்குள் வழங்கினார். பந்தை பெற்ற பேய்ல் பந்தை தரைவழியாக பெனால்டி எல்லையிலிருந்த ரொனால்டோவிற்கு வழங்க, ரொனால்டோ சிறந்த முறையில் பந்தை கோலை நோக்கி உதைந்து ரியல் மெட்ரிட் அணிக்கு 2 ஆவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்

அதனை தொடர்ந்து 3 நிமடங்களின் பின்னர் கஸ்ட்ரோ (Castro) மூலம் மத்திய களத்தின் இடதுபக்கத்திலிருந்து ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையின் இடதுபக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை அபயர்ம்ன்பர்க் கோலாக்கினார். 60 ஆவது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை கஸ்ட்ரோ தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தவறியதால் டோர்ட்மன்ட் அணியின் சிறந்ததொரு வாய்ப்பு தவறவிடப்பட்டது.

அதனைத் தெடார்ந்து கோட்ஸே மூலம் மீண்டும் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையின் இடதுபக்க மூலைக்கு வழங்கப்பட்ட பந்தை அபயர்ன்ம்பர்க் பெற்றபோதும், அதனை கோலாக்கும் முயற்சியில் தோல்வியுற்றார். போட்டி எதிரணியின் பக்கம் செல்வதை உணர்ந்த ரியல் மெட்ரிட் அணிக்கு போட்டியின் 75 ஆவது நிமிடத்தில் ஈஸ்கோ மூலம் சற்று ஆறுதலளிக்கப்பட்டது. சிறந்த முறையில் பின்கள வீரர்களை தாண்டிச் சென்ற ஈஸ்கோ, பெனால்டி எல்லையில் கோல் கம்பத்தின் வலதுபக்க மூலையுடாக பந்தை கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் மூலம் ரியல் மெட்ரிட் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. மொட்ரீக் (Luka Modric) மூலம் வலதுபக்கத்தினுடான பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற ரொனால்டோ, பந்தை பெனால்டி எல்லை வரை கொண்டு சென்று சிறந்த முறையில் கோலாக்கினார். இதன் மூலம் ரொனால்டோ இப்போட்டியில் இரு கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். மீண்டும் முயற்சியெடுத்த டோர்டமனட் அணிக்கு, 82 ஆவது நிமிடத்தில் அபயர்ன்ம்பர்க் தலையால் முட்டி ஓரு கோலைப் பெற முயன்ற போதும் கோல் காப்பாளரால் பந்து தடுக்கப்பட்டது. அதுவே இறுதி முயற்சியாகவும் அமைந்தது. மூன்று நிமிட மேலதிக நேரத்துடன் போட்டி நடுவரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 3 – 1 டோர்ட்மன்ட்

இவ்வெற்றியின் மூலம் ரியல் மெட்ரிட் அணி டோர்ட்மன்ட் அணியின் அரங்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது மட்டுமின்றி, அவ்வணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது அணிக்காக விளையாடிய 400 ஆவது போட்டியும் இதுவாகும் அத்துடன் 400 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ மொத்தம் 411 கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் சில போட்டி முடிவுகள்

செவில்லா 3 – 0 மரீபூர் (Maribor)                    

நெபோலீ 3 – 1 பெயனூர்ட் (Feyenoord)          

பெஸிக்டாஸ் 2 – 0 லிப்ஸீக்

மென்செஸ்டர் சிடி 2 – 0 ஸக்தார் டோனெடேஸ்க் (Shakhtar Donetsk)

போர்டோ 3 – 0 மோனோகோ

லிவர்பூல் 1 – 1 ஸ்பார்டக் மொஸ்க்வா (Spartak Moskva)

டொடென்ஹாம் 3 – 0 அபோயில் (Apoel Nicosia)

http://www.thepapare.com

Categories: merge-rss

சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு )

Thu, 28/09/2017 - 13:38
சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு )

 

 

மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்தார்.

kumar-sangakara.jpg

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இங்கிலாந்து பிராந்திய கழகமான சரே பிராந்திய கழகத்துடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளார். சரே பிராந்திய அணிக்காக சங்கக்காரா கடந்த மூன்று வருடங்களாக விளையாடிய நிலையில், முதற்தரப் போட்டிகளில் இருந்து குமார் சங்ககார முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

 

இந்நிலையிலேயே குமார் சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சங்கா மேலும் தெரிவிக்கையில்,

“இதையிட்டு நான் நிச்சயம் வருந்துகிறேன், சந்தேகமேயில்லாமல்! ஆனால் எனது முடிவு நல்ல முடிவு என்றே நம்புகிறேன்! மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் மிகச் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன.

 

“சில வேளைகளில், ‘இன்னும் சிலகாலம் விளையாடலாமோ’ என்று சில வீரர்கள் எண்ணுவார்கள். ஆனால், அவர்களது எண்ணத்தைச் செயற்படுத்திய பிறகுதான், ‘முன்னதாகவே விலகியிருக்கலாம்’ என்று எண்ணத் தோன்றும். அவ்வாறான உணர்வுக்கு இடம் கொடுக்க நான் விரும்பவில்லை.”

” சரே அணியின் தலைவர், மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். சரே அணி கடந்த மூன்று வருடத்தில் எனக்கு உதவியாக இருந்துள்ளது. எனது சொந்த நாட்டில் நான் எப்படி இருந்தேனோ அதே போன்ற நிலையினை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இங்கு உருவாக்கி தந்திருந்தார்கள் “. 

 

” நான் அதிக முதற்தரப்போட்டிகளில் விளையாடியதில்லை. சரே அணிக்காக விளையாடியது சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது.”  

“ இளம் வீரர்கள், சிரேஷ்ட வீரர்கள் கலந்து விளையாடுவது நல்ல அனுபவமாகவும், இங்கிலாந்தில் வீரர்கள், ரசிகர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள் என்பதனையும் இங்கே வந்து அறிந்துகொண்டேன்.”

 

 

“ கிரிக்கெட்டின் தொடர் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இங்கே நான் பெற்ற சதங்களை விட, விளையாடிய அனுபவம் சிறந்தது” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக 2015ஆம் ஆண்டு அறிவித்த சங்கக்கார, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 

தற்போது முதற்தரப் போட்டியில் இருந்து விலகியிருக்கும் சங்கா, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச இ-20 போட்டிகளில் விளையாடுவார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தி!

சரே மற்றும் சமர்செட் அணிகளுக்கிடையில் கடந்த 22ஆம் திகதி நிறைவடைந்த போட்டியுடன் குமார் சங்கக்கார இங்கிலாந்தில் இருந்து விடைபெறுகின்றார். 

குமார் சங்ககாரா இறுதியாக விளையாடிய போட்டியிலும் சதமடித்து நிறைவு செய்துள்ளார்.

சமர்செட் அணியுடன் 157 ஓட்டங்களையும், 35 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொண்டார். 2017 ஆண்டு தொடரில் குமார் சங்கக்கார 1,442 ஓட்டங்களை 110 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இந்த பருவகாலத்தில் மட்டும் 8 சதங்களை அவர் பெற்றுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 545 ஓட்டங்களை 77 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 20-20 போட்டிகளில் 120 ஓட்டங்களை 30 என்ற சராசரியில் பெற்றுள்ளார். குமார் சங்ககாராவின் சேவையை பாராட்டி சரே அணி குமார் சங்ககாராவுக்கு வாழ்நாள் கழக அங்கத்துவம் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25042

Categories: merge-rss

குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள்

Thu, 28/09/2017 - 10:03
குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள்
 
 
குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள்
 1
 •  
 •  
 •  
 •  
 •  

தேசிய மட்ட குத்­துச் சண்­டைப் போட்­டி­யில் வட­மா­கா­ணத்­துக்கு ஒரு வெள்ளி பதக்­கம், 6 வெண் கலப் பதக்­கங்­கள் என மொத்­த­மாக 7 பதக்­கங்­கள் கிடைத்­தன.

43ஆவது தேசி­ய­மட்ட இரு ­பா­லா­ருக்­கு­மான குத்­துச்­சண்­டைப் போட்டி மாத்­தறை அக்­கு­ரல்ல குருப்­பிட்­டிய உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.

வெள்­ளிப் பதக்­கத்தை 69 கிலோ எடைப் பிரி­வில் வி.நிகா­லஸ், வெண் க­லப் பதக்­கத்தை 56 கிலோ எடைப் பிரி­வில் செந்­தூ­ரன், 75 கிலோ எடைப் பிரி­வில் ரமேஷ், 81 கிலோ எடைப் பிரி­வில் கேச­வன், 91 கிலோ எடைப் பிரி­வில் நிகா­சன் ரூப­ராஜ் ஆகி­யோ­ரும் பெண்­கள் பிரி­வில் 60 கிலோ எடைப் பிரி­வில் எம்.பிரி­யந்தி 67 கிலோ எடைப் பிரி­வில், கே.பிர­சாந்­தினி ஆகி­யோ­ரும் பெற்­ற­னர். கடந்த ஆண்டு 9ஆவது இடத்­தில்­இருந்த வட­மா­கா­ணம் இந்த வரு­டம் எட்­டா­வது இடத்­தைப் பிடித்­தது.

http://newuthayan.com/story/32759.html

Categories: merge-rss

சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

Thu, 28/09/2017 - 05:54
சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்.ஜி, யுவுான்டஸ் அணிகள் வெற்றி பெற்றன. அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

 
 மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி
 
ஐரோப்பிய நாடுகளில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடைபெறும்.

நேற்று 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என செல்சியா வெற்றி பெற்று அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 40-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிரிஸ்மான் கோல் அடித்தார். அதன்பின் செல்சியாவின் மொராட்டா 59-வது நிமிடத்திலும், 94-வது நிமிடத்தில் பாட்ஷுயாயி கோல்அடிக்க செல்சியா வெற்றி பெற்றது.

201709280926445344_1_atledica-s._L_styvp

மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 4-1 என சிஎஸ்கேஏ மாஸ்கோ அணியை வீழ்த்தியது. லூகாகு இரண்டு கோல்கள் அடித்தார்.

யுவான்டஸ் 2-0 என ஒலிம்பியாகோஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் - பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 3-0 என வெற்றி பெற்றது. பார்சிலோனா ஸ்போர்ட்டிங் சிபி அணியை 1-0 என வீழ்த்தியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/28092639/1110350/Champion-League-manchester-united-psg-won-atletico.vpf

Categories: merge-rss

இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம்

Wed, 27/09/2017 - 17:47
இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம்

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர்.

 
 
இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்துள்ளனர். இந்த மைதானம் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள மைதானங்களுக்கு பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டுவர். கிரிக்கெட் வீரர்களில் கவாஸ்கர், சச்சின் மற்றும் கங்குலியின் பெயர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மைதானத்திற்கு இந்திய வீரரின் பெயர் வைக்க இருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும். வெளிநாடுகளில் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் டாரன் சாமி ஆகிய இருவரின் பெயர்களில் மட்டுமே மைதானங்கள் உள்ளன. மூன்றாவதாக கவாஸ்கரின் பெயரில் மைதானம் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘என் பெயரை மைதானத்திற்கு வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு விளையாட்டுத்துறையில் உள்ளவர்களின் பெயரை வைப்பதே முறையாகும். இத்துறையில் விளையாட்டு வீரர்களை தவிர பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் பல மைதானங்கள் தொடங்கப்பட வேண்டும்' என அவர் கூறினார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 125 டெஸ்ட் போட்டி (10122 ரன்கள்) மற்றும் 108 (3092 ரன்கள்) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/27181551/1110277/Cricket-stadium-in-USA-to-be-named-after-Sunil-Gavaskar.vpf

Categories: merge-rss

யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde

Tue, 26/09/2017 - 19:51
யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde
 
 

கடந்த சனிக்கிழமை இரவு ப்ரோ கபடி பார்த்துவிட்டு சேனல்களை மாற்றியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் Presentation Ceremony நடந்துகொண்டிருந்தது. கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் பரிசளிப்பு விழா. பெரும்பாலும் பார்த்துப் பழகிடாத முகங்கள். அப்போதுதான் ஒரு விருதை வாங்கிக்கொண்டு போன ஒரு வீரன், மீண்டும் இன்னொரு விருதினை வாங்கிச் சென்றான். பிஞ்சு முகம். 18-19 வயது இருக்கும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, "The young promising player of the Tournament award goes to...Shubhang Hegde" - என்று வர்ணனையாளர் சாரு அறிவித்ததும், அதே இளம் வீரன் மூன்றாவது விருதை வாங்க வருகிறான். அந்த ஃபைனலின் Promising young player விருதையும், ஆட்டத்தின் சிறந்த பெளலருக்கான விருதையும் கூட அவன்தான் வென்றிருந்தான். 

Shubhang Hegde

 

ஸ்டுவர்ட் பின்னி, மனீஷ் பாண்டே, ஸ்ரீநாத் அரவிந்த் ஆகிய இந்திய வீரர்கள் நிறைந்த பெலகாவி அணியில் இப்படியொரு ஆளா? அவன் ஸ்பின்னர் என்று சாரு தெரிவித்திருந்ததால் எனக்குள் ஒரு ஆர்வம். அவனைப்பற்றி கூகுள் செய்தேன். விக்கிபீடியா பக்கம் இல்லை. எந்த கிரிக்கெட் இணையத்திலும் அவர் Profile இல்லை. கடந்த வருடம் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை கிளிக் செய்தேன். முதல் வரியே தூக்கிவாரிப்போட்டது. அவனுக்கு அப்போது வெறும் 15 வயது. ஆம், கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் இந்த சீசனில் தன் சுழற்பந்துவீச்சால் சுழன்றடித்த 16 வயது சூறாவளிதான் அந்த சுபாங் ஹெக்டே!


'சரி, அந்தப் பையன் அப்படி என்னதான்பா பண்ணான்?'. ஆவல் மேலிட,  Hotstar-ல் அந்த இறுதிப் போட்டியைப் பார்த்தேன். அவ்வப்போது 'இந்த சீசனின் சிறந்த அணி' என்று 11 சிறந்த வீரர்கள் கொண்ட அணியை டிஸ்ப்ளே செய்து கொண்டிருந்தனர். அதிலும், அந்தச் சிறுவனின் முகம். ஆம், சிறுவன்தான். 16 வயதுக்காரனை சிறுவன் என்றுதானே சொல்ல முடியும்! ஆட்டத்தின் 4-வது ஓவர். பவர்பிளே வேறு. எந்த சலனமும் இன்றி பந்தைக் கையில் வைத்திருந்தான் ஹெக்டே. ரோனித் மோரே பேட்டிங். Left arm orthodox. ஷார்ட் லெங்த்தில் வீசப்பட்ட பந்து, அற்புதமாக டர்ன் ஆகி ஆஃப்-சைடில் வெளியே சென்றது. அடுத்த பந்தும் அப்படியே. அதுவரை ஆஃப் சைடு பந்துகளை விளாசிக் கொண்டிருந்தார் தாஹா. இந்த முறை பந்து டர்ன் ஆகவில்லை. பேட்ஸ்மேனின் கணிப்புக்குக் கொஞ்சமும் இடம் தரவில்லை. ஃபுல் பால். ஸ்டிக் லெங்த். இரு பேட்ஸ்மேன்களுக்கும் எப்படி வீச வேண்டுமென்று தெளிவான பிளான். அந்த பிளானை எக்சிக்யூட் செய்ததில் அவ்வளவு பெர்ஃபெக்ஷன். 

தன் இரண்டாவது ஓவரை வீச வருகிறார். மீண்டும் மோரே. இறங்கி வந்து அடிக்க முயல்கிறார். முதல் ஓவரில் ஆனது போலவே ஒரு அற்புத டர்ன். ஸ்டம்பிங். அடுத்து 4 'டாட் பால்கள்'. கடைசிப் பந்தில் விக்கெட். மெய்டன் மற்றும் இரண்டு விக்கெட்டுகள். ஃபைனலில் தடுமாறுகிறது பிஜாபுர் புல்ஸ். போட்டுத் தாக்கிவிட்டான் அந்தப் பதினாறரை வயதுச் சிறுவன். "மிகவும் அக்ரசிவான பந்துவீச்சு. பவர்ப்ளே ஓவர்களில் எவ்வளவு தைரியத்துடன் பந்து வீசுகிறார். அற்புதமான பவுலிங். நினைவு கொள்ளுங்கள் இந்த வீரனுக்கு 16 வயது தான் ஆகியுள்ளது"- இடது கை சுழற்பந்து ஜாம்பவான் வெட்டோரி கமென்டர் பாக்சில் அமர்ந்து ஹெக்டேவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். மெய் சிலிர்க்கிறது. வெட்டோரியின் குரலைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒருவகையான எண்ண ஓட்டம். ஏன்..? "வெட்டோரிதான் என் ரோல் மாடல்" என்று ஹெக்டே கூறியதாக அந்தக் கட்டுரையில் படித்த ஞாபகம். ஆம்... ஓராண்டுக்கு முன்புதன் ரோல் மாடலாகக் கூறிய வீரரே இப்போது அவனை மைக் பிடித்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தச் சிறுவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் வாழ்க்கையாக நினைப்பவனுக்கு அதைத்தவிர வேறென்ன வேண்டும்?

அவன் பந்துவீசியபோது அவனுக்குள் இருந்த தன்னம்பிக்கை வியப்பு! எங்கு ஃபீல்டர் இருக்க வேண்டும் என்று கேப்டனிடம் தெளிவாகக் கூறுகிறான். அடிக்கப்படும் பந்துகள் ஃபீல்டர் நிற்கும் திசை தவிர எங்குமே போகவில்லை. அவ்வளவு தெளிவான ஃபீல்டு பிளேஸ்மென்ட். பவுலிங்கில் அவ்வளவு தெளிவு. நான்கு ஓவர் முடிவில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள். வர்ணனையில் அமர்ந்திருந்த மைக் ஹஸ்ஸி, வெட்டோரி, சாரு, இந்தி நடிகர் சுனில் ஷெட்டி வரை அனைவரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்த ஒரு போட்டியினால் மட்டும அல்ல. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அந்தச் சிறுவன் இதைத்தான் செய்துள்ளான். 8 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். எகானமி வெறும் 6.31 தான். அதனால் தான் போட்டி முடிந்ததும் அத்தனை விருதுகள். ஒருநாள் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பான் என்ற நம்பிக்கை. ஆனால் யாராக?

Shubhang Hegde


போட்டியின் போது சுபாங்  ஹெக்டே பவுலராக அடையாளப்படுத்தப்பட்டான். 2017 கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் கூட 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டிருந்தான். ஆனால் அந்தக் கட்டுரையில் அவன் 'ஆல் ரவுண்டர்' என்று பார்த்ததாக ஞாபகம். ஆம், 2016-ல் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் டிவிஷன் போட்டிகளில் 4 சதங்கள் அடித்திருந்தான் ஹெக்டே. அதிகபட்சமாக 191. பேட்டிங்கிலும் அவன் கில்லாடி. "நான் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக விரும்புகிறேன்" என்று சொல்லியிருந்தான். அவனது ரோல் மாடல் வெட்டோரியைப் போலவே! 

சச்சினும், டிராவிட்டும் கூட அவனுக்குப் பிடித்த வீரர்கள். பேட்டிங்கை விட பவுலிங் சிறப்பாக இருப்பதனால், அனைவரின் பார்வையும் அவனது பவுலிங்கின் மீது மட்டும் படுவதைப் போன்ற உணர்வு. விஜய் மெர்சென்ட் 'Under-16' தொடரில் 5 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் அள்ள, 'சிறந்த பவுலர்' என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களுக்கு, வலைபயிற்சியில் பந்துவீசியுள்ளான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் Trials-ல் பங்கேற்று வெட்டோரியின் கண்முன் பந்துவீசியிருக்கிறான். அப்போது அவனைத் தேர்வு செய்யாத வெட்டோரி, வர்ணனையின்போது நிச்சயம் வருந்தியிருப்பார். இப்படித்தான் கர்நாடகா பிரீமியர் லீகிலும் அவனது பேட்டிங்கை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லையோ என்று சந்தேகம் எழுகிறது.

"1984-ல் இருந்து பயிற்சியளித்து வருகிறேன். சுபாங்கைப் போல் ஒரு ஆல்ரவுண்டரைப் பார்த்தது இல்லை" என்று பிரமிக்கிறார் அவனது பயிற்சியாளர் இர்ஃபான் சேத். அந்த ஆல்ரவுண்டர் அப்படியே ஆல்ரவுண்டராக வளர வேண்டும். தலைசிறந்த ஆல்ரவுண்டராக கிரிக்கெட் உலகை ஆள வேண்டும். அதுவே அவனுக்கான வெற்றி. அதுவே, "உன் தோல்விகளை நேசி. அது உனக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்" என்று கூறிய அவரது தந்தைக்கான வெற்றி. அவனது தந்தை சமாரத் ஹெக்டேவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

 

பயிற்சியாளர் சொன்னதுபோல சுபாங் ஹெக்டே ஒரு மாபெரும் திறமைசாலி. இளம் பொக்கிஷம். 16 வயதுதான் ஆகிறது. இரண்டு மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தால், நிச்சயம் இந்திய அணியில் அவனுக்கு இடம் உறுதி. ஆனால், அடுத்த குல்தீப்பாகவோ, ஓஜாவாகவோ அவன் அணிக்குள் நுழையக்கூடாது. ஏன் அடுத்த ஜடேஜாவாகக்கூட நுழையக்கூடாது. ஒரு சர்வதேச ஜாம்பவானைப் போல்... அவன் ரோல் மாடல் வெட்டோரியைப் போல்... இல்லை இல்லை வெட்டோரிக்கும் மேல்!

http://www.vikatan.com/news/sports/103365-16-year-old-shubhang-hegdes-rise-in-cricket.html

Categories: merge-rss

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது

Tue, 26/09/2017 - 18:11
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவர் பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரான பென் ஸ்டொக்ஸ், பிரிஸ்டலில் உள்ள இரவு விடுதியொன்றில் ஒருவரை தாக்கிக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ள நிலையில், பென் ஸ்டொக்ஸ் கைதாகியுள்ளார்.

பென் ஸ்டொக்ஸூம் அவருடன் இருந்த இங்கிலாந்து அணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸூம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நாளை (27) இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ஆஷஸ் கிண்ணத் தொடருக்கான குழாமை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்து பெயரிடவுள்ள நிலையில், பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/09/இங்கிலாந்து-கிரிக்கெட்-2/

Categories: merge-rss

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்

Tue, 26/09/2017 - 17:15
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்
Feature-image-5-1068x650.jpg
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்
 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது.

 

கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்துடன், டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரன் அவுட், பிடியெடுப்பு மற்றும் துடுப்பாட்ட மட்டைகளின் எடை ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பு மட்டைகளின் அளவுகள்

Bat sizesபோட்டிகளின்போது வீரர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறுபட்ட அளவுகளைக் கொண்ட துடுப்பு மட்டைகளுக்குப் பதிலாக ஒரே தரத்திலான ஒரே அளவுகளைக் கொண்ட துடுப்பு மட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன்படி 40 மில்லி மீற்றர் தடிப்பத்தையும் மற்றும் 67 மில்.மீற்றர் அகலத்தையும் கொண்டதாக புதிய துடுப்பு மட்டைகள் இருக்கும்.   

ஓடும் போது ஆட்டமிழப்பு (ரன்அவுட்)

New cricket rules to be introduced from 28th Septemberவீரரொருவர் ஓடும்போது ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்கும் போது, அவர் எல்லைக் கோட்டுக்கு வெளியே துடுப்பு மட்டையை வைத்த சந்தர்ப்பத்தில் அது ஒரு தடைவ எல்லைக் கோட்டை தொட்டு மீண்டும் மேலே உயர்ந்தால் அதனை ஆட்டமிழப்பு அல்ல என அறிவிக்க முடியும்.  

சிவப்பு அட்டை

Red Cardபோட்டியின் போது மைதானத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் கிரிக்கெட் வீரர்களை சிவப்பு அட்டை காண்பித்து மைதானத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், அவ்வாறு நடந்துகொண்ட குற்றத்திற்காக மேலதிக (போனஸ்) புள்ளியொன்றை வழங்கவும் நடுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய டி.ஆர்.எஸ் முறை (DRS)

DRSடி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி LBW ஆட்டமிழப்பிற்கு கேட்கப்படும் வேண்டுகோள், இனிமேல் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அதாவது, LBW மீதான வேண்டுகோள் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது.  

அதேபோல, டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்கு மேல் கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது. இதன்படி ஒரு இன்னிங்ஸிற்கு 2 ரிவ்யூக்கள் மாத்திரமே அணியொன்றுக்கு வழங்கப்படும்.

 

வீரர்களின் நடத்தை விதிகள், நடுவரின் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) மற்றும் வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பாட்ட மட்டைகளின் அளவுகள் மீதான புதிய விதிகள் என்பன ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்துதான் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. எனினும், செப்டம்பர் 27ஆம் திகதி பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அந்த தினத்திலிருந்து புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.சி.சி தீர்மானித்துள்ளது.

ஆனாலும் தற்போது நடைபெற்றுவருகின்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் T-20 தொடரில் இப்புதிய விதிகள் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்புதிய கிரிக்கெட் விதிமுறைகள் அனைத்தும் எம்.சி.சியின் சட்டக்கோவையிலும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Categories: merge-rss

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்!

Tue, 26/09/2017 - 12:37
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்!

 

dhoni_srinivasan1
Ads by Kiosked
 

 

ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 

2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம். 

ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில், இரண்டு வருடங்களாக ஐபிஎல்-லில் இல்லாததால் சிஎஸ்கே என்கிற பிராண்டுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. அணி வீரர்களைத் தக்கவைக்க அனுமதித்தால் தோனியை நிச்சயம் தக்கவைத்துக் கொள்வோம். 2015-ல் அணியில் பணியாற்றிய அனைத்து பயிற்சியாளர்களையும் மீண்டும் அழைக்கவுள்ளோம் என்றார். 

ஐபிஎல் நிர்வாகக் குழு விரைவில் சந்தித்து ஏலம் தொடர்பான முடிவுகளை எடுக்கவுள்ளது. புணே, குஜராத் அணிகளின் வீரர்களை ஏலத்தில் விடுவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவேண்டும். மேலும் ஐபிஎல்-லில் இடம்பெறும் அனைத்து வீரர்களுக்குமான பொதுவான ஏலம் நடைபெறப்போகிறதா அல்லது ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுமா என்றும் அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும். 

எல்லாம் சரி. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில், தோனி சென்னை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதா?

கொஞ்சம் கஷ்டம்தான் என்கிறார் முன்னாள் வீரரான நிகில் சோப்ரா. ஏனாம்?

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகவுள்ள முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக தோனி இருப்பார். ஐபிஎல்-லில் தன்னுடைய தலைமைப் பண்பை தோனி நிரூபித்துள்ளதால் அவரைத் தேர்வு செய்யவே எல்லா அணிகளும் ஆர்வம் காண்பிப்பார்கள். இந்திய வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பதும் ஓர் அணிக்குச் சாதகமான விஷயம். எனவே தோனியைத் தங்கள் பக்கம் இழுக்க அணிகள் கடும் முயற்சி செய்வார்கள் என்று சிஎஸ்கே அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

 
 

ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகை பெற்ற முதல் ஐந்து வீரர்களின் பட்டியல். இந்தமுறை தோனி ரூ. 16 கோடியை விடவும் அதிகம் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை பெற்ற வீரர்கள்

வீரர் ஏலத்தொகை அணி வருடம் யுவ்ராஜ் சிங் ரூ. 16 கோடி டெல்லி 2015 விராட் கோலி ரூ. 15 கோடி ஆர்சிபி 2017 பென் ஸ்டோக்ஸ் ரூ. 14.5 கோடி புணே 2017 யுவ்ராஜ் சிங் ரூ. 14 கோடி ஆர்சிபி 2014 தோனி ரூ. 12.5 கோடி புணே 2016

 

 
 
 
 

http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/26/expert-predict-massive-bidding-war-if-ms-dhoni-enters-ipl-2018-auction-2780171.html

Categories: merge-rss

மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல்

Tue, 26/09/2017 - 07:15
மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல்

 

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
 
மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல்
 
மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன் சான்டியாகோ பிளோர்ஸ் மோராவும் ஒருவர்.

இவன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகனாக இருந்துள்ளார். அவரை ஒரு ஐடியாலாஜியாக வைத்து வளர்ந்துள்ளார்.

இதுகுறித்து சான்டியாகோ பிளோர்ஸின் அம்மா ரொனால்டோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறுகையில் ‘‘எனது மகன் உங்களுடைய தீவிரமான ரசிகனாக இருந்தான். எங்கேயும் உங்களுடைய பெயரைத்தான் எழுதுவான். இறப்பதற்கு முன்பாக பள்ளிக்கூட நோட்டில் சான்டியாகோ பிளோர்ஸ் மோரா கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று எழுதியிருந்தான்.

எனது மகனுடைய கனவே உங்களை சந்திக்க வேண்டும் என்பதுதான். உங்களை பார்க்க வரவேண்டிய எனது மகன், தற்போது கடவுளோடு சென்றுவிட்டான். நாங்கள் பண உதவியோ, புகழோ அல்லது கவனத்தை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. ஒரே விஷயம், கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகன் குறித்து அறிய வேண்டும் என்பதுதான். ஏனென்றால், துரதிருஷ்டவசமாக அவனது கனவு நிறைவேறவில்லை.

இந்த அம்மாவின் கடிதம் சமூக இணையத்தளங்கள் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கவனத்திற்கு சென்றது.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக அணிந்து விளையாடும் தனது ஜெர்சியில் ‘‘பாசமிகு எனது நம்பர் ஒன் ரசிகன் சான்டியாகோவிற்காக’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/25215910/1109906/Cristiano-Ronaldo-pays-touching-tribute-to-young-fan.vpf

Categories: merge-rss