Aggregator

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

3 months 2 weeks ago
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம் Dec 10, 2025 - 01:16 PM ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்த உதவியானது "திட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதில் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmizphl5j02lfo29nbu2c92bv

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

3 months 2 weeks ago

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

Dec 10, 2025 - 01:16 PM

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இந்த உதவியானது "திட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது. 

தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmizphl5j02lfo29nbu2c92bv

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

3 months 2 weeks ago
நான் முன்பு வேலை செய்த இடத்தில், சில துருக்கிகள்... கைகழுவும் இடத்தில், சிறுநீரக உறுப்பை கழுவும் போது அம்பிட்டு, நிவாகத்திடம் இருந்து எச்சரிக்கை பெற்றவர்கள். பழக்க வழக்கம் இல்லாத காட்டு மிராண்டிகள்.

'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?

3 months 2 weeks ago
தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன் - விஜய் 09 Dec, 2025 | 05:08 PM 'தமிழகத்தை போலவே புதுச்சேரியை புதுச்சேரி மக்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக எம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்து மட்டும் தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன்' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், திரை நட்சத்திரமான விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் களம் காணும் இக்கட்சி தொடர்ந்து மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு பிறகு, 72 நாட்கள் கழித்து தமிழகத்தின் அண்டை பகுதியான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் இக்கட்சி தொடங்கியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறையின் கடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மக்கள் சந்திப்பு ஆக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் வழக்கம் போல் திட்டமிட்டதை விட எதிர்பாராத வகையில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் முன்னிலையில் விஜய் பேசியதாவது, ஒன்றிய அரசு தான் தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் பார்க்கிறது. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... அவர்கள் நம் உறவு தான். 1977 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர் 1974 ஆம் ஆண்டில் புதுச்சேரி ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் எமக்கானவர். அவரை தவற விடாதீர்கள் என தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க இயலுமா...!? தமிழக மக்களைப் போலவே புதுச்சேரி மக்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக எம்மைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்திற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன். அது எனது கடமையும் கூட.‌ புதுச்சேரி அரசு தமிழகத்தில் உள்ள திமுக அரசை போன்றது அல்ல. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும்.. அந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. இதற்காக புதுச்சேரி முதல்வருக்கு எம்முடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழகத்தை ஆளும் திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் நூறு சதவீதம் கற்றுக் கொள்வார்கள். அதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். புதுச்சேரி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து. ஏமாற்றி விடுவார்கள். மீன் பிடிக்கச்செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படு மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும். வெற்றி நிச்சயம்'' என்றார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் பெயரை உச்சரித்து அவருடைய ரசிகர்களையும் அபிமானிகளையும் கவர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் எம்ஜிஆர் என்ற அஸ்திரம் தான் பொருத்தமானது என்பதை உறுதியாக விஜய் பற்றி கொண்டிருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232888

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

3 months 2 weeks ago
Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - 56 மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார். அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். Tamilmirror Online || சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

3 months 2 weeks ago

Editorial   / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0     - 56

messenger sharing button

facebook sharing button

print sharing button

email sharing button

image_dcc0767252.jpg

மு.தமிழ்ச்செல்வன்


கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக   செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த
ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி  தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து  மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார்.

அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில்  அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே  பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று  வருகின்ற  சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும்   தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட
கொலையாகவே  காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tamilmirror Online || சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

3 months 2 weeks ago
தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும். தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார். எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார். அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார். இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன. ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். 51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார். இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. 240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/232873

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

3 months 2 weeks ago

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM

image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும்.

தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.

எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார்.

அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார்.

இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார்.

sharujan_taking_runs_with_his_partner.jp

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு  போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன.

ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார்.

இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. 

https://www.virakesari.lk/article/232873

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

3 months 2 weeks ago
18 வயது வரை இலவசக் கல்வி தருவது, தெருக் கூட்டுவது, கான் கழுவுவது, தண்ணீர், மின்சாரம் வினியோகிப்பது போன்ற விடயங்களோடு அரசாங்கங்கள் மக்கள் சமூக ஊடகங்களில் endless scroll செய்யாமலிருக்கக் காவலும் இருக்க வேண்டுமென்கிறீர்களா😂? எப்படி இதைச் செய்யலாம்? இலங்கையில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அல்கோரிதம் வழியாக சமூகவலை ஊடகங்கள் பரப்பும் முட்டாள் தனங்களைக் கட்டுப் படுத்த இயலாது. Information is your responsibility என்பதன் படி பாவனையாளர்களே தங்களை உசாராக வைத்துக் கொள்ள வேண்டியது தான் வழி. இந்தச் சுய பொறுப்பை, வேறு யாரிடமும் ஒப்படைத்து விட்டு endless scroll செய்து கொண்டிருக்க முடியாது என நினைக்கிறேன்.

வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

3 months 2 weeks ago
Janu / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0 - 40 பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமனசிறி குணதிலக்க Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

3 months 2 weeks ago

Janu   / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0     - 40email sharing button

பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள்  இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து  வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சுமனசிறி குணதிலக்க

image_04c59eef84.jpg

image_e5feb497da.jpg

 

 

Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்

3 months 2 weeks ago
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:11 - 0 - 41 கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை மறுத்துள்ளது. அந்தக் குட்டி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் கசுன் ஹேமந்தா தெரிவித்தார். காணாமல் போன ஊர்வன இலங்கையில் உள்ள ஒரே மஞ்சள் அனகொண்டா குட்டி என்று கூறினார். “தெஹிவளை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். கன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார். அடைப்பின் பூட்டு சேதப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், விசாரணைகளின் போது, பாம்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து தப்பியிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஒரு பகுதியை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். “விலங்கு திருடப்பட்டதா அல்லது அது தானாகவே தப்பித்ததா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நடந்து வரும் காவல்துறை விசாரணை மற்றும் துறை அளவிலான விசாரணைகளில் இருந்து உறுதியான பதில் கிடைக்கும்” என்று ஹேமந்தா குறிப்பிட்டார். காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பாம்புக் குழுவில் ஒன்றாகும். மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகள் அடங்கிய இந்தப் பாம்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அது காணாமல் போகும் வரை, அந்தக் குட்டி ஊர்வன பூங்காவின் காட்சிப்படுத்தப்படாத இடத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்றார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

3 months 2 weeks ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர். இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10) ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார். Tamilmirror Online || கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

3 months 2 weeks ago

image_0a4ce9e13c.jpg

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார்.

மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர்.

 இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10)  ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார்.

Tamilmirror Online || கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்

3 months 2 weeks ago
10 Dec, 2025 | 01:30 PM நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள் மெப் நடைமுறைக்கான முன்னோட்டம் இடம்பெறும் என்றும் Google Map செயலியை பார்த்து பாதுகாப்பாக பயணித்தை தொடர முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப் | Virakesari.lk

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்

3 months 2 weeks ago

10 Dec, 2025 | 01:30 PM

image

நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது.

வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள் மெப் நடைமுறைக்கான முன்னோட்டம் இடம்பெறும் என்றும் Google Map செயலியை பார்த்து பாதுகாப்பாக பயணித்தை தொடர முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்  | Virakesari.lk

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

3 months 2 weeks ago
இது தேர்தலில் தோற்று (சில சமயங்களில் தோற்றபின்னர் "பின் கதவால்" - அ+து தேசியப் பட்டியலில் உள்ளே வந்த) யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், சசிகலா ரவிராஜ், மாம்பழம் கட்சியின் தலைவர்போன்றோருக்கும் பொருந்தும் என்கிறீர்கள்😂?