3 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 60 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சம் என்பது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு மட்டுமே, வேறு எதுவும் இல்லை!' அத்தியாயம் 22: வசபா மன்னர் [வசபன் / king Vasabha] பல புத்த கட்டிடங்களையும், நீர்ப்பாசனப் பணிகளையும் கட்டினார். அவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். வசபாவின் மகன் திஸ்ஸன் [வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் / Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I, also known as Gajabahuka Gamani] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவன், பிரபல சேர (இன்றைய கேரள) மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் இந்திர விழாவில் பங்கேற்க தமிழகம் சென்றார். அவர் திரும்பியவுடன் பத்தினி வழிபாட்டைக் இலங்கைக்கு கொண்டுவந்து, பத்தினி கண்ணகியைப் போற்றும் வகையில் பெரஹெரா விழாவைத் [Perahera festival] தொடங்கினார். சயாமிலிருந்து [தாய்லாந்து / Thailand அல்லது முன்னர் சயாம் / Siam ] வந்த துறவிகளின் தூண்டுதலின் பேரில் 1775 கி.பி.க்குப் பிறகுதான் புத்தரின் பல் தாது [Buddha’s tooth relic] திருவிழாவுடன் தொடர்புடையது. பதினெட்டு நூற்றாண்டு பழமையான பத்தினி வழிபாடு மற்றும் பெரஹெரா திருவிழாவுடன் ஒப்பிடும் போது, இந்த பிக்குகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை மிக சமீபத்தில் தான் உருவாக்கினர். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் பெரஹெரா விழா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிய இராச்சியத்தின் தமிழ் மன்னன் சயாமிலிருந்து (தாய்லாந்து) இந்த துறவிகளை அழைத்தார் என்றும் மற்றும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் துறவிகள் தான் பெரும்பாலும் அடுத்தடுத்து இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளில் கொடூரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது அண்மைய வரலாற்று உண்மை. கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகுவின் [Gajabahukagamani or Gajabahu I ] மாமனார் மகல்லக்க நாகன் [Mahallaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கஜபாகுவின் மகன் பதிக திச்சன் [Bhatika Tissa] இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன் பின், பதிக திச்சனின் இளைய சகோதரர் திஸ்ஸ (கன்னிததிஸ்ஸ / Kanittha Tissa) பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது இளைய சகோதரர் குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuda Naga or Kunchanaga] தனது சகோதரனைக் கொன்று ஓராண்டு ஆட்சி செய்தார். முதலாம் சிறிநாகன் [Sirinaga] குஞ்சநாகாவை தோற்கடித்து பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகன் அபயா [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் [22 - 37. The son of Sirināga, the royal lord called Abhaya, .... 38. ... This king governed twenty-two years.] அவரது இளைய சகோதரர் திச்சன் [திஸ்ஸாக / Tissaka] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [22 - 39. His younger brother, known as king Tissaka, ... 45. This royal ruler governed twenty-two years.] . திஸ்ஸாகவின் மகன் இரண்டாம் சிறிநாகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [46. Tissa’s own son, known by the name of Sirināga, reigned full two years over the Island.]. ஆனால், மகாவம்சத்தில், முதலில் திஸ்ஸாக [Tissaka] வையும் அடுத்ததாக அபயா [Abhaya] வையும் ஆட்சி செய்ததாக கூறுகிறது? இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தந்தை இறந்த பின் ஒரு வருடம் ஆட்சி செய்தார். முதலாம் சங்க திச்சன் [Sangha Tissa I] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இவன், விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் ஆவான். அதன் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதி [Siri Sangha Bodhi I, also known as Siri Sanghabodhi] இரண்டு ஆண்டுகளும், அதன் பின் மற்ற அமைச்சரான கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் அல்லது அபய மேகவன்னா [Gothabhaya, also known as Meghavannabhaya, Gothakabhaya, Abhaya Meghavanna and Goluaba,] பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவருடைய மகன் ஜெத்ததிஸ்ஸ [சேட்டதிச்சன் / Jettha Tissa I also referred to as Detu Tiss, Kalakandetu Tissa, and Makalan Detu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். சேட்டதிச்சனின் தம்பியான மகாசேனன் [Mahasena, also known in some records as Mahasen] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது ஆட்சியில் ஒருவித மத மோதல்கள் நடந்தன. உதாரணமாக, மகாசேனன் மற்றும் முதலாம் சேட்டதிச்சன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர். சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் சங்கமித்ரர் முதலாம் சேட்டதிச்சனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான். இன்னும் ஒன்றையும் கவனியுங்கள் இங்கு சங்கமித்ரர், தமிழ் பேசும் ஆண் புத்த பிக்கு, இவரின் பெயர் பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா வுடன் தொடர்பு படுகிறது. அந்த நேரம் தமிழர்களும் மகாயான பௌத்த தழுவியவர்கள் என்பதும் வெள்ளிடை மலை. இதை இலங்கையில், வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்று இன்று ஈடுபடும் முழுக்க முழுக்க சிங்கள நபர்களைக்கொண்ட ஆய்வாளர்களுக்கு புரியாதது எனோ? அல்லது அவர்களுக்கு சரியான நேர்மையான அறிவு இல்லையா ? யாம் அறியேன் பராபரமே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மகாசேனன் மாதிரி, சைவக் கோயில்களை இடித்து அழிப்பதில் மட்டும், பச்சை, நீலம் அல்லது சிவப்பு கொடிகளை ஏந்தினாலும், கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மொத்தம் 105 பக்கங்களில், அத்தியாயம் 18 முதல் அத்தியாயம் 22 வரை உள்ள சுமார் 16 1/2 பக்கங்களில் மட்டுமே மொத்தம் 61 மன்னர்களில் 54 மன்னர்கள் பற்றி, அதாவது சுமார் 89 சதவீத மன்னர்கள் பற்றி பேசுகிறது. மீதமுள்ள, ஆரம்ப ஆட்சியாளர்கள், நாம் முன்பே விளக்கமாக கூறியது போல, கண்டுபிடிக்கப்பட்ட மன்னர்களாக இருக்க வேண்டும்? எனவே தான் அதற்கான கதைகளை சோடிப்பதற்காக, பல பக்கங்களை எடுத்துள்ளார்கள் போலும்? மேலே காட்டப்பட்டுள்ள அரசர்களில் பெரும்பாலோர், பெயர்களின் அடிப்படையில், ஏற்கனவே விவரிக்கப்பட்ட வாறு, தமிழர்களுடன், தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு உடையவர்களாகவே தெரிகிறது. மேலும் தீபவம்சத்தின் பெரும்பாலான பக்கங்கள் வரலாற்றை விட, நம்பிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால்த் தான் மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை "ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவுகள்" என்று அழைக்கிறார். இது பௌத்தத்திற்கு ஆதரவானதே தவிர, என்றும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் அல்லது அதற்குப் பிறகு, பெரும்பாலான மிகவும் பேராசை கொண்ட துறவிகளும் அரசியல்வாதிகளும், இந்த விசுவாசப் பதிவை, விஷமிகுந்த தமிழர் விரோதமாக மாற்றினார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு அடியெடுத்து கொடுத்தது, இதன் பின் 150 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மகாவம்சமாக இருக்கலாம்? Part: 60 / Appendix – Dipavamsa / 'The Dipavamsa is just an ancient Buddhist historical record & nothing else!' Chapter 22: The king Vasabha constructed many Buddhist buildings, and irrigation works. He ruled forty four years. The son of Vasabha, Tissa, ruled for three years. His son, Gajabahukagamani, ruled twenty two years. He went to Tamilnadu to participate in the Indra Vill(zz)a festival on the invitation of the famous Chera (present day Kerala) king Senggutuvan. He brought the Pattini cult on his return and initiated the Perahera festival to honour the Pattini, Kannagi. Buddha’s tooth relic came to be associated with festival only after 1775 A. D. on the instigation of the monks who came from Siam. These monks formed the Malwatte and the Askiriya Chapters of very recent origin when compared with the eighteen century old procession of the Pattini worship, and the Perahera festival. Perahera festival is first recorded in the Tamil Epic Silappthikaram. Ironically, the Tamil king of Kandyan kingdom invited these monks from Siam (Thailand) and the monks of the Malwatte and the Askiriya Chapters played diabolical role in the anti Tamil pogrom perpetrated by the successive Sri Lankan Governments. Mahallakanaga, father in law of Gajabahukagamani, ruled for six years. His, Gajabahu’s, son, Bhatutissa, ruled for twenty four years. Younger brother of Bhatutissa, Tissa (Kannithatissa), ruled for eighteen years. His son Khujjanaga ruled for two years after the death of his father. His younger brother Kunjanaga put his brother to death and ruled for one year. Sirinaga defeated Kunjanaga and ruled for nineteen years. His son Abhaya ruled for twenty two years. His younger brother Tissaka ruled for twenty two years. His son Sirinaga ruled for two years. His son Vijayakumara ruled for one year after death of his father. Samghatissa reigned for four years. The king Samghabodhi reigned for two years. Abhaya Meghavanna ruled for thirteen years. His son Jetthatissa ruled ten years. Mahasena, the younger brother of Jetthatissa, ruled for twenty seven years. Some sort of religious conflict took place in his reign. About 16 pages and a half page, from the Chapter 18 to the Chapter 22, out of the 105 pages speaks about 54 kings out of 61 kings, about 89 percent of the kings. The rest, the purported initial rulers, must be invented kings. Quite a large proportion of the kings, as shown above, are Tamils. The most of the pages of the Dipavamsa are devoted to the Faith than to the history. That is why the translator, Hermann Oldenberg, calls the Dipavamsa as “An ancient Buddhist Historical Records”. It is pro Buddhism, but not anti Tamil. Avaricious and greedy monks and the politicians of the twentyieth century and afterwards without any compunction turned this record of Faith into venomous anti Tamil hatred. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 61 தொடரும் / Will follow துளி/DROP: 1934 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60] https://www.facebook.com/groups/978753388866632/posts/32744509148530976/?