Aggregator
கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம்
கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம்
( இணையத்தள செய்திப் பிரிவு )
கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24) அனுப்பியுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில்,
இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன?
போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வரும் கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கூட்டு மனித புதைக்குழி தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு மக்கள் போராட்ட முன்னணி பதில்களை எதிர்பார்க்கிறது.
1. இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
2. இதுவரை தோண்டி முடிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பில், எந்தளவு பாரிய புதைகுழிகளுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது?
3. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகள் எவை?
4. இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? மேலும் இது தொடர்புடைய காலக்கெடு மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் எவை? தனிநபர்கள் யாவர்?
5. இதற்கான காலக்கணிப்புக்காக (கார்பன் 14 சோதனைகள் போன்றவை) மாதிரிகள் சிறப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அந்த நிறுவனங்கள் எவை? மேலும், அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெறும் திகதிகளைக் குறிப்பிட முடியும?
இது தொடர்பாக தடயவியல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை?
7. இது தொடர்பாக ஒரு இடைக்கால நீதி செயலமுறை திட்டமிடப்பட்டிருந்தால், அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை விளக்க முடியுமா?
8. மனித எலும்புக்கூடுகள் தவிர வேறு ஏதேனும் சான்றுகள் (கலைப்பொருட்கள், அணிகலனகள் ஆடைகள் போன்றவை) இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால் அவை எவை?
9. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அந்த ஆதாரங்களை அடையாளம் காண வாய்ப்பு வழங்கப்படுமா?
குற்றவியல் அரசுகளின் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாகக் கருதப்படும் பல பாரிய மனிதப புதைகுழிகள் இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவற்றில் எதிலும் குறைந்தபட்ச நீதி அல்லது உரிய செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முந்தைய அரசாங்கங்கள் அந்த செயல்முறைகளை வேண்டுமென்றே புறக்கணித்து தாமதப்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அந்த விசாரணைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று பாரபட்சமின்றி முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு / குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த செயல்முறை முடிவடைய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தாமதமாகி வரும் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை தாமதமின்றி முடிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தால் அவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம் | Virakesari.lk
தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட கடல் எல்லைகள் - மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட கடல் எல்லைகள் - மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
24 Nov, 2025 | 03:29 PM
![]()
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்!”
“கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”
“மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள், தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் இருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர் எனக் கூறினர்.
தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட கடல் எல்லைகள் - மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிமல் ரத்நாயக்க
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிமல் ரத்நாயக்க
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தேவை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி.
ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக மக்கள் பயப்படுகிறார்கள் இன்னொருவருக்காக முன்வருவதற்கு. ,
அதனால் பேருந்துத் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, முச்சக்கரவண்டி துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, செம்மஞ்சல் நிறம் சிவப்பு பக்கத்திற்குச் செல்லாமல் பச்சை பக்கத்திற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
கருத்து படங்கள்
யாழ்ப்பாணத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்க கட்டுமானம் ஆரம்பம்
தமிழ்நாட்டின் தென்காசியில் பஸ் விபத்து : 6 பேர் பலி, 28 பேர் காயம்!
Published By: Digital Desk 1
24 Nov, 2025 | 02:25 PM
![]()
இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டின் தென்காசியில் பஸ் விபத்து : 6 பேர் பலி, 28 பேர் காயம்!
நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இராணுவ தளபதி பலி
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இராணுவ தளபதி பலி
24 Nov, 2025 | 02:39 PM
![]()
லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகரான ஹாரெட் ஹ்ரெய்க் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஹெய்தம் அலி தபதாபாயும் ஒருவராவார்.
மேலும் குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது 2024 நவம்பர் மாதம் இடைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் கொன்ற மிகப்பெரிய ஹிஸ்புல்லா தளபதி எனக் குறிப்பிடப்படுகிறது.
தெற்கு லெபனானிலும், பாலஸ்தீன அகதி முகாம்களிலும் இஸ்ரேல் தினசரி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images
24 நவம்பர் 2025, 01:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்:
அந்தமான் கடல் பகுதி
நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது

சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது?

கனடா சென்ற பிறகு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஏன் 'காணாமல் போகிறார்கள்'?

'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள்

உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா?
End of அதிகம் படிக்கப்பட்டது
"இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா.
மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார்.
மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி,
நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்.
தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் கனமழை
நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர்.
குற்றாலம் அருவி
தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு