| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 499 online users. » 0 Member(s) | 496 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,301
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,630
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச |
|
Posted by: வினித் - 12-31-2005, 12:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச: அம்பலப்படுத்துகிறது பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் </span>
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு முன்பாக எச்சரித்திருந்தார் என்ற உண்மையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பற்றி வழங்கிய செவ்வியில் "ராஜபக்ச போர்ப் பறை சாற்றுகிறார்" என்று கூறியிருந்தார்.
செப்டம்பர் 6ஆம் நாள் "டெய்லி மிரர்" பத்திரிகையில் செய்தி வெளியானதும், அப்போதைய பிரதமரான ராஜபக்ச, கொழும்பில் உள்ள ஜோசப் பரராஜசிங்கத்தின் இல்லத்திற்கு தொலைபேசி செய்து, பரராஜசிங்கத்துடன் பத்திரிகையில் வெளியான செய்தி பற்றி விவாதித்துள்ளார்.
அத்துடன் முடியுமானால் இந்த கூற்றைத் திரும்பப் பெறுமாறும் பரராஜசிங்கதிடம் வேண்டியுள்ளார். கொள்கைப் பற்றும் நேர்மையும் கொண்ட பரராஜசிங்கம், ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு செவிசாய்காத நிலையில், ராஜபக்ச 'தேர்தல் முடிவடைந்ததும் எனது உண்மை நிலையை நீங்கள் யாவரும் அறிவீர்கள்' என்று பரராஜசிங்கத்திடம் கூறியுள்ளார்.
இந்த கூற்று இரட்டைக் கருத்து கொண்ட காரணத்தினால் பரராஜசிங்கம் இவ்விடயத்தை தனது நெருங்கிய சாகாக்களுடனும், தமிழர் மனித உரிமை மையத்தின் பிரதிநிதிகளுடனும் பகிர்ந்துள்ளார்.
மேலும் வாசிக்க: http://www.eelampage.com/?cn=22990
|
|
|
| வணக்கம் நண்பர்களே! |
|
Posted by: eezhanation - 12-31-2005, 12:28 PM - Forum: அறிமுகம்
- Replies (45)
|
 |
வணக்கம் என் இனியவர்களே களம் எனக்கு புதிதல்ல ஆயினும் களத்திற்கு நான் புதியவன் என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி....இனி எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்...
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி
|
|
|
| றீபிசி அறசியல் கழந்துறையாடல்,,,, |
|
Posted by: Danklas - 12-31-2005, 11:13 AM - Forum: புலம்
- Replies (14)
|
 |
றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன?
எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,,
ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல்லுற காமெடிகளை கேளுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், அல்லது வானொலியை நிறுத்துங்கள்,, புலத்திலே இப்படிப்பட்ட ஒரு வானொலி மட்டுமா இருக்கிறது?
தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் அங்கே போய் கதைத்தால் போல் என்ன நன்மை கிடைக்கிறது? சோமுராஜன் தன்னுடைய அடிவருடி நேயர்கள் வரும்பொழுது எதாவது கதைக்கிறானா? சிங்க் சக் போடுறான், அதுவே ஒருவர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவா கதைக்க வெளீக்கிட்டால் உடனே குறுக்க புகுந்து பொறுங்க, பெறுங்க எண்டு இடையில் ஒரு கருத்தாளனது கருத்தை கேட்காமல் குழப்பி எங்கேயோ நடந்த பழையவற்றை தூசு தட்டி நியாப்படுத்த முனைகிறான்,, நடுநிலமை ரீதியில் ஜனநாயகம் கதைக்கிறம் எண்டு புலம்புற சோமுராஜன் இப்படி தனது வாத நியாங்களை கதைக்கிறதெண்டால் அதற்கென பிறிம்பான ஒரு நிகழ்ச்சியில தனியாக அல்லது ஜெயதேவனோடு புலம்பலாமே? அறசியல் கறந்துயாடல் எண்டு போட்டு, ஒரு பக்க கருத்துக்களை கேட்பதும்,அதுக்கு அமாம் போடுவதும், மற்றவரது கருத்துக்களை கேட்காமல் குழப்புவது அல்லது இனைப்பை துண்டிப்பதுவும் என்ன நிகழ்ச்சி? :evil:
இதனைப்பற்றி கதைப்பதற்கு காரணம், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் வீனாக நேரத்தை செலவழித்து அதில் கலந்துரையாடி நீங்கள் கண்டதுதான் என்ன? இப்படிப்பட்ட வானொலியில் ஒரு நேயராக கலந்துகொள்கிறது, உங்களை நீங்களே முட்டாள் ஆக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவே,,,,அங்கே வந்து கதைப்பவர்களது கருத்துக்களை கேட்க்கும் பொழுது ஆத்திரம் தான் வரும்,,, ஆனால் அதை நிறுத்திவிட்டால் நாய்கள் ஊளையிடுறது கேட்காது, அதனால் எங்கள் வேலைகளை நாங்கள் பார்க்கலாம் என்று சொல்வதற்கு,,
அந்த வானொலியில் இடம்பெறுகிற கருத்துக்களில் ஒரு சின்ன உதாரணம்,,,அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சகோதரி தர்சினியின் கொலையை நீமோ எண்ட நா** நியாப்படுத்துகிறது,, இலங்கை கடற்படையோ இலங்கை அரசோ எந்த வித மறுப்பு அறிக்கையும் விடுக்காத பொழுது இந்த நா*** எப்படி அதை இவர்கள் தான் செய்திருபார்கள் எண்டு கருத்துக்களை முன்வைக்கலாம்? இப்படி சொல்லும் பொழுது பல மனிதர்களுக்கு கோவம் வரும் அப்பொழுது ஒன்றை செய்யுங்கள்,,,, வானொலியை நிப்பாட்டிப்போட்டு பார்க்க வேண்டிய வேலையை பாருங்கள்... 
சூரியனை பார்த்து நாய் குரைத்தால் போல,, சூரியனுக்கு நட்டமா???
|
|
|
| ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் தமிழகத்தில் பெரும் உணர்வெ |
|
Posted by: adsharan - 12-31-2005, 07:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
தானாடாவிட்டாலும் சதை ஆடும்'' என்பார்கள். அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்காக உரிமையோடு குரல் எழுப்பத் தயாராகிவிட்டது தமிழகம்.
சென்னையில் நேற்றுமுன்தினம் பேரெழுச்சியோ டும் , உணர்வோடும் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அங்கு ஆற்றப்பட்ட உரைகளும் அதைத்தான் எடுத்தி யம்புகின்றன.
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு தொப்புள் கொடி உறவு போன் றது என்பார்கள்.
அதனால் தான் ஈழத்திலிருக்கும் தமது தசைக்காகத் தமிழகத்திலுள்ள தமிழர்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
ஈழத் தமிழரின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முகிழ்ந்து பெரு விருட்சமாக வளர்ச்சிபெறுவதற்கான உரம் 1983 மத்தியில்தான் இடப்பட்டது. அந்த உரத்தை வழங்கி, விடுலைப் போராட்டத்துக்கு உணர்வூட்டி, உறையுள் அளித்து, வழிப்படுத்தி, வலுப்படுத்திய பெருமை தமிழகத்துக்கே உண்டு. இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியில் தொடங்கி, தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் வரை பல பெருந்தகைகளின் வழிப் படுத்தலில் பரந்து, வளர்ந்த விடுதலைப் போராட்டம் இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கின்றது.
இடையில் சில கசப்புணர்வுகள், துன்பியல் நிகழ்வு கள் காரணமாகவும்
தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை கேவலப்படுத் திய சில தமிழக ஆட்சியாளர்களின் கெடுபிடிப் போக் கின் காரணமாகவும்
ஈழத் தமிழர்களுக்கான குரல் தமிழகத்தில் உரிய முறையில் ஒலிக்க முடியாதபடி இக்கட்டு நேர்ந்தது.
அப்படி இக்கட்டு விளைவித்தோரே இன்று ஈழத் தமி ழர்களுக்கும் அவர்களது விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் திரண்டுவரும் ஆதரவு கண்டு தமது போக்கை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
தன்னுடைய அரசியல் இலக்குக்காக ஆரம்பத்தில் ஈழத் தமிழர்களின் உரிமைப்போரையும் அதற்காகத் தம்முயிரைத் தியாகம்செய்து போராடும் விடுதலைப் புலிகளையும் மெச்சி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பின்னாளில் மிக மோசமாக தீவிரமாக புலி எதிர்ப்பு வாதத்தில் குதித்தார். அவரே இப்போது, தமிழகத்தில் வளர்ந்துவரும் ஈழத் தமிழர் ஆதரவு உணர்வுக்கு அஞ்சி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது மாநிலத்தில் வரவேற்புக் கொடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் சூழல் உருவாகியிருக்கின்றது.
இன்னும் ஆறு மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர் தல் நடைபெற இருக்கிறது. ஈழத் தமிழரை அடக்கி ஒடுக்கிவரும் தென்னிலங்கைச் சிங்கள அரசின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தச் சமயத்தில் தமிழகத்தில் தாம் வரவேற்புக் கொடுப்பதோ, அவரைச் சந்தித்துப்பேசுவதோ மாநிலத்தில் தமக்கு எதிரான உணர் வலைகளை எழுப்பித் தம்மைப் பெரிதும் பாதித்துவிடும் என்ற உண்மையை உணர்ந்துகொண்ட தமிழக முதல் வர் ஜெயலலிதா, மெல்ல ராஜபக்ஷவின் தமிழக வரவை வெட்டிவிடச் செய்துவிட்டார்.
ஈழத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுவோரை "பொடா' சட்டத்தைக்காட்டி அடக்கி, மிரட்டி, சிறையில் அடைத்துவந்த ஜெயலலிதா அரசு, அந்தச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு பெருகிவரும் ஆதரவுகண்டு அடங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் வாளாவிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கருத்து நிலைப்பாடு மீண்டும் தமிழகத்தில் உணர்வெழுச்சி பெறுவது, புதுடில்லி அரசுக்கும் சில யதார்த்தங்களை உணர்த்தியிருக் கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கும் தனது நீண்டநாள் திட்டத்துக்கு இலக்குக்கு இந்தியாவின் புதுடில்லி அரசுத் தலைமை, இரண்டு கரத்தால் உதவிகளை அள்ளி வழங்கும், ஆதரவு தரும் என்றெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு கனவுகளோடு அங்குசென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலும் வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலைமை ஏற்பட்டதற்கு இலங்கை விவகாரம் தொடர்பான தமிழக மக்களின் உணர்வு நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயங்களை உணர்ந்து, அதற்காக உரத்துக் குரல் கொடுக்கும் தமிழக மாநில மக்களின் உணர்வு நிலைப்பாட்டுக்கு மாறாக அதை மீறி போக முடியாத புதுடில்லித் தலைமை, அந்த மக்களின் அவர்களின் தலைவர்களின் கருத்துகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் செவிமடுத்து இலங்கை விடயத்தில் தனது கொள்கைப் போக்கை வகுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதனால்தான் "வெறுங்கை யோடு மீண்டான் இலங்கை வேந்தன்' என்ற இராமாயணப் பாணியில் நாடு திரும்பும் நிலைமைக்கு உள்ளாகியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.
நேற்றுமுன்தினம் சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறிய ஒரு கருத்து வெகுவிரைவில் நிதர்சனமாகும் என்ற உறுதியை நம்பிக்கையை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் உணர்வெ ழுச்சி தந்திருக்கிறது.
அது ஐ.நா. சபையில் விரைவில் தமிழீழக் கொடியும் பறக்கும் என்ற எதிர்வு கூறல்தான்
http://www.uthayan.com/editor.html
|
|
|
| என்னை அழித்து விடுவாயா? |
|
Posted by: jcdinesh - 12-30-2005, 09:14 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
என்னை அழித்து விடுவாயா?
முதல் வார்த்தையில் என் இதயத்தை
துடி துடிக்க வைத்தாய்!!!
ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை
சாகடித்தாய்!!!!
தென்றல் காற்றாக என் மனதுக்குள்
நுழைந்து விட்டாய்!!!!!
உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!!
உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!!
நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில்
இருப்பதாகவே உணர்கின்றேன்...!!!
உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு..
கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!!
பிரியமானவளே.........!!!!
என்னை ஏற்றுக் கொள்வாயா?
இல்லை என்னை அழித்து விடுவாயா?
>>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
|
|
|
| நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் |
|
Posted by: கீதா - 12-30-2005, 09:07 PM - Forum: சினிமா
- Replies (42)
|
 |
<img src='http://img413.imageshack.us/img413/3185/goldentamiljana37kz.jpg' border='0' alt='user posted image'>
நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் மும்பையில் ஜன.6ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜொடியாக அறிமுக மானவர் லைலா. மும்பையைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலா இயக்கிய நந்தா பிதாமகன் தரணி இயக்கிய தில் படங்களின் மூலம் பிரபலமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளிலும் நடித் துள்ளார். இவர் நடித்த கண்ட நாள் முதல் படம் சமீபத்தில் வெளியானது.
ஆரம்பத்தில் பிசியாக நடித்து வந்த லைலாவுக்கு இடையில் வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது லைலா குடும்பத்தார்திருமண ஏற்பாடுகளை தொடங்கினர். இதற்கிடையே பி.வாசு இயக்கத் தில் அஜீத்துடன் பரமசிவன் மோகன்லாலுடன் ஒரு படம் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே ஒத்துக்கொண்டார் லைலா. வேறுபட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மெஹதியுடன் திருமணம் நிச்சயமானதை ரகசியமாக வைத்திருந்தார் லைலா. இது குறித்து அவர் மும்பையிலிருந்து தினகரன் நிருபருக்கு அளித்த பேட்டி„
எல்லா பெண்களின் வாழ்க் கையிலும் வரவேண்டிய மங் களகரமான நாள் எனக்கும் வரப்போகிறது. சந்தோஷமாக இருக்கிறேன். மெஹதியை 8 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். பெற்றோர் ஆசிர் வாதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது. மெஹதி மும் பையைச் சேர்ந்தவர். அவரை முதன் முறையாக பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. எனக்கு வரப்போகும் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என நினைத் தேனோ அத் தனை குணங்களும் கொண்ட வராக அவர் இருக்கிறார். மும்பையில் ஜனவரி 6ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடை பெறும். தேன் நிலவுக்கு ஆஸ்திரியா செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இப்போது அஜீத்துடன் பரமசிவன் படத்தில் நடித்து முடித்துள்ளேன். வீண் பழி சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் அஜீத்துக்கு துணையாக இருக்கும் கேரக்டர் எனக்கு. மோகன்லாலுடன் நடிக்கும் மலையாளப்படத்தில் எனக்கு வலுவான கேரக்டர்.
விருதுக்குரிய படமாக அது இருக்கும். இது தவிர வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் லைலா.
திருமண ஏற்பாடுகளை அவரது தந்தை செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனக்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் லைலா திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்.
http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&
|
|
|
| சுட்டியின் மனததைக் கவர்ந்த சுட்ட கவிதைகள் |
|
Posted by: suddykgirl - 12-30-2005, 08:40 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
ஏங்குகின்றேன்!
உன்னை எப்பொழுது
கண்டேனோ
அன்று முதல் நான்
என்னிடம் இல்லை
உன்னால் பசிஇ
உறக்கம் ஏன் நிதானத்தை
கூட இழந்தேன்!
எனக்குள் நானே
சிரித்துக் கொள்கின்றேன்!
எனக்குள்ளே ஏதேதோ
பேசுகின்றேன்
இதெல்லாம் உன்னாலடா!
நான் எதற்கும்
ஏங்கியதில்லை
உன்னனக் கண்ட பின்
நீ எனக்கு கிடைக்க
வேண்டும் என
ஏங்குகின்றேனடா!
உண்மையில்
காதல் என்பது
ஒரு நோய்
அது எப்போ வரும்இ
போகும் என
புரியாது
என்னுள்வந்துவிட்டது
அந்தநோய்!
என்னை
குணமாக்குவாயா?
நீ எனக்கு
கிடைப்பாயா?
சொல்லடா சொல்!!! :roll: :roll: :roll:
(சுட்டது)
நன்றி
லங்காசிறி.கொம்
|
|
|
| ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும் |
|
Posted by: வினித் - 12-30-2005, 06:51 PM - Forum: தமிழீழம்
- Replies (30)
|
 |
ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும், சில அபத்தக்கோடுகளும் நியாய விசாரிப்புக்களும்-பரணி (பிரான்ஸ்)-
<b>காலத்திற்கு காலம் ஈழ விடுதலைப் போராட்டம் எதிரிகள் தவிர்ந்து ஏதோ ஒரு வகையில் வேறு சில குறுக்கீடுகளையும் விரும்பாத சில அந்நிய தலையீடுகளையும் சந்தித்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை அது தன்னை ஒரு விரும்பாத் தலையீட்டிற்கு எதிராக தயார்ப்படுத்த வேண்டியுள்ளது</b>.
<b>ஆம் இந்தியா ஈழப் போராட்டத்திற்கெதிராக சில வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கத் தொடங்கிவிட்டது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு, புத்தர் சிலை, பிக்குகள் உண்ணாவிரதம், ஜே.வி.பி. வெளியேற்றம் என்று இலங்கை அரசியற் களத்தின் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. இந்த சுவாரசியங்கள் சுரத்திழக்கும் ஒரு தருணத்தில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</b>
இந்தியாவிற்கு ஈழம் என்றைக்குமே நேச சக்திதான். இதை எத்தகைய வழிகளில் எல்லாம் உரைய முடியுமோ ஈழத்தமிழினம் அத்தகைய வழிகளிலெல்லாம் உரைந்தாயிற்று.
<b>இந்திய கொள்கை வகுப்பாளர்களின்(?) ஒற்றை அறம் பாதுகாப்பு ஒப்பந்தமாக வடிவமெடுத்து ஈழத்தமிழினத்தை ஒருவித கிலிக்குள் தள்ளியுள்ளது.
[b]ஈழப் போராட்டம் மீதான இந்தியத் தலையீடு காலத்திற்குக் காலம் உருமாறி பல பரிமாணங்களாக விரிவடைவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதன் மைய விசையாய் வெளிவிவகாரக் கொள்கை என்ற கருத்தமைவு ஒழுங்கமைக்கப்படுகிறது.</b>
இந்தியா ஈழப்போராட்டத்தில் ஏன் தலையிடுகிறது. எதன் அடிப்படையில் எவ்வாறு தலையிடுகிறது என்பதை ஆராய்வதற்கு முன்பாக வெளியுறவுக் கொள்கை என்ற பதம் குறித்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.
<b>வெளிவிவகாரக் கொள்கை (குழசநைபn Pழடiஉல) பற்றி சாதாரண மொழியில் சொல்வதானால் ஒரு நாடு பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் பொதுவான சில நடைமுறைகள் என்று குறிப்பிடலாம். தமது சொந்த உள்நாட்டு நலன்களைப் பொறுத்து உலக நாடுகள் வெளிவிவகாரக் கொள்கைகளை வகுக்கின்றன. இதற்கு இந்தியாவும் விலக்கல்ல.</b>
வர்த்தகம், ஏற்றுமதி, தொடர்பாடல், பிராந்திய மேலாதிக்கம் போன்ற பல நோக்கங்களுக்காக வெளிவிவகாரக் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினாலும் தேசிய நலனை முன்னெடுப்பதே அதன் முக்கிய பாகமாகிறது. தேசிய நலனென்பது ஒரு நாட்டின் தற்பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார விருத்தி, பிராந்திய செல்வாக்கு போன்ற முக்கிய கூறுகளால் கட்டமைக்கப்படுகிறது.
தேசிய நலனின் முக்கிய அங்கமான தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியபடியே நகர்கிறது வெளிவிவகாரக்கொள்கை. தேசியப்பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் நிறைவான அரசியல், பொருளாதார, இராணுவ (தரை, கடல், வான்) பலத்தில் தங்கியுள்ளது.
இப்போது நாம் முக்கியமான பேசுபொருளுக்கு வருவோம். இந்தியாவி;ன் தேசியப் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் என்ன குந்தகம் விளைந்தது என்று இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா அவதிப்படுகிறது.?
இந்த வினாவிற்கு விடைகாண நாம் சற்று வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை தேசிய நலன் தொடர்பானதாக உள்ளபோதும் அது வேறுசில புறக்காரணிகளால் உருமாறும் வாய்ப்புக்களும் உள்ளது.
<b>இந்திய தேசிய நலனின் சில தோற்றுவாய்களையும் வரலாற்றின் போக்கில் அதை மாற்றியமைக்கும் சில புறக்காரணிகளையும் ஆராய்வதன் ஊடாக ஈழப்போராட்டம் மீதான இந்தியத் தலையீட்டை புரிந்து கொள்வோம்.</b>
1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசு ஈழப் போராட்டம் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறது. சிறந்த வெளியுறவுக் கொள்கைக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றாளர்களால் மேற்கோள் காட்டப்படும் இந்த முடிவு பின்னாளில் சில அகப்புறத்தாக்கங்களின் விளைவாய் புரட்டிப்போடப்பட்டது வரலாறு.
ஒரு நாட்டின் வெளிநாடுகளினுடனான உறவுகள் பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சகத்தி;னூடாக மட்டுமே நடைபெறுகிறது. இந்த அமைச்சை நிர்வகிப்பதும் கொள்கைகள் வகுப்பதும் அந்நாட்டு இராஜதந்திரிகளும் புலனாய்வுத்;துறையினருமே.
இந்திய வெளியுறவுத்துறை . சமகால, அரசியல், சமூக பிராந்திய நலன்களுக்கேற்ப வெளியுறவுத்துறை தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஆட்சியில் இருப்பவர்களால் கட்டுப்படுத்த முடியாதவாறு அரசியல் தலையீடுகளற்று சுதந்திரமாக இயங்குகிறது வெளிவிவகார கொள்கை வகுப்பாக்கம். ஆனால் விதிவிலக்காக எண்பதுகளில் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளை தீர்மானிக்கும் ஒரு தனிச்சக்தியாக முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி விளங்கினார்.
தெற்காசிய வல்லரசான இந்தியா
தெற்காசியப் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு காரணங்களின் சிறப்பால் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக திருகோணமலைத் துறைமுகம் விளங்குகிறது. ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் திருகோணமலைத் துறைமுகத்தை தனது பாதுகாப்பிற்குள் கொண்டுவர திட்டமிட்டார் இந்திரா காந்தி.
<span style='font-size:30pt;line-height:100%'>1971 இல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக டீகோகார்சியா தீவிலிருந்து அமெரிக்க கடற்படை புறப்பட்டு வந்ததும் இந்தியாவிற்கு ஆதரவாக சோவியத் கடற்படை புறப்பட்டு வந்தது. அமெரிக்க கடற்படை நெருங்குவதற்குள் டாக்கா துறைமுகத்தை இந்திய அரசு கைப்பற்ற முனைந்தது. டீகோசியாத் தீவிலிருந்து வருவதற்கும், திருகோணமலையிலிருந்து வருவதற்குமிடையிலான நேரக் கணக்குகளையும் மனதில் வைத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இந்திய அரசு கண் வைத்தது.</span>
<b>அத்துடன் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான தொன்மை வரலாற்றையும் அதன் நிமித்தமான சமகால தமிழக அரசியல் பின்விளைவுகளையும் மனதில் வைத்து ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார் இந்திரா காந்தி;. 1983 இல் ஈழப் பிரச்ச்pனை தொடாபான பாராளுமன்ற விவாதத்தின்போது பின்வருமாறு பதிலளித்தார் இந்திரா காந்தி.</b>
<b>'இலங்கையின் ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் இந்தியா எப்போதுமே மதிக்கின்றது. மற்ற நாடுகளில் எழும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் இந்தியா எப்போதுமே தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் அண்டை நாடான இலங்கையில் அங்குள்ள மக்களுக்கும இந்திய மக்களுக்கும் வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் வரலாற்றுக் காலம் தொட்டு நெருங்கிய உறவு உண்டு. குறிப்பாக இரு நாடுகளிலும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உறவு மிகவும் வலுவானது இறுக்கமானது. எனவே இலங்கையில் நடக்கும் துயரமான நிகழ்வுகள் யதார்த்தமாக இந்தியாவைப் பாதிக்கச் செய்யும். அவ்வாறு பாதிக்கும் போது இலங்கையில் நடக்கும் இனக்கலவரங்களைக் கண்டு இந்தியா ஒரு போதும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது."</b>
இதன் விளைவாய் ஈழப் போராட்டம் புதிய பாதையில் நகரத்தொடங்கியது. ?
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த ஜே.ஆர் அரசு, தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வந்ததுடன் இந்தியா தொடர்பான கடும்போக்கைத் தளர்த்தி மென்மையான போக்காளர்களாக தம்மை அடையாளப்படுத்துகிறது. இதனால் இந்திய மத்திய அரசு ஈழப் போராட்டம் தொடர்பான தனது போக்கில் சில மாற்றங்களை புகுத்துகிறது. விளைவாய் ஈழப் போராட்டம் இந்தியாவின் இடையூறுகளை சந்திக்கத் தொடங்குகிறது.
<b>இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்வோம். ஈழப் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்ததற்கான முக்கிய காரணம், அதன் தற்பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார விருத்தி, பிராந்திய செல்வாக்கு போன்ற முக்கிய கூறுகளை திடப்படுத்திக் கொள்வதற்காகத்தான். அத்துடன் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எம்.ஜிஆர் தலைமையிலான தமிழக அரசின் ஈழ விடுதலை ஆதரவையும் மனதில் வைத்துத்தான் இந்தியா ஈழப் போராட்ட ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இந்திரா காந்திக்கு ஈழத்தமிழர் தொடர்பாக இந்திய அரசியற்களத்தையும் தாண்டி ஒரு மென்போக்கான தன்மை இருந்ததையும பல தருணங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் பிராந்திய நலன்களும் அவை சார்ந்த ஒற்றை அறமும் ஈழ மக்களின் அவலத்தை புறந்தள்ளியது</b>.
இந்திய அரசின் கொள்கை மாற்றத்தால் இந்திய புலனாய்வுத்துறையின் முழுக்கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் ஈழப்போராளிகள்.
<span style='font-size:25pt;line-height:100%'>இலங்கை புலனாய்வுத்துறையுடன் கை கோர்க்கிறது இந்திய புலனாய்வுத்துறையான றோ. அந்த இணைப்பின் தொடர்ச்சியாய் தமிழகத்திலிருந்து நாடு கடத்தபடுகிறார் அன்ரன் பாலசிங்கம். புலிகளிடமிருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார் பிரபாகரன். அன்று தலைவர் பிரபாகரன் சக போராளிகளிடம் கூறிய புகழ்பெற்ற சொல்லாடல்தான் பின்நாளில் சுதுமலை பிரகடனமாய் வெளிவந்தது. </span>
<b>ஒரு வலுக்குறைந்த நாடு குறிப்பாக, தரைப்பரப்பு பொருளாதார பலம் போன்றவற்றில் சிறிய நாடு பிராந்திய மற்றும் அனைத்துலக மட்ட நிகழ்ச்சிகளை தமக்கு சாதகமாய் திருப்பிவிட இயலாது. உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அமைவாக தமது வெளியுறவுக்கொள்கையை உருவாக்க வேண்டிய நிலையிலுள்ளதாக வெளிவிவகாரக் கொள்ளகையின் ஒரு சரத்து அறிவுறுத்துகின்றது. ஜே.ஆரின் நரித்தந்திரமும் இதற்கமைய இந்தியாவுடனான வெளியுறவுக்கொள்கையில் மாற்றத்தை கொண்டுவருகிறது. வேறு வழியில்லாமல் இந்திரா காந்தி உண்மை நடப்பு (சுநயடளைஅ) நிலையிலிருந்து, உண்மை நடப்பும் இலட்சியவாதமும் கலந்த இரட்டை நோக்கு (சுநயடளைவ ஐனநயடளைவ னுiஉhழவழஅல) வெளிவிவகாரக் கொள்கையை கையிலெடுக்கிறார். ஈழப் போராட்டம் இறுகத் தொடங்குகிறது.</b>
<b>அத்துடன் ஜே.ஆர் தனது நரித்தந்திரத்தின் மூலம் புலனாய்வுத்துறையினூடாக தமிழ்நாட்டில் சில அசம்பாவிதங்களை நடத்தி புலிகளையும் தமிழக மக்களையும் பிரிக்கும் தந்திரத்தை தொடங்குகிறார். துரோகிகளுக்கும் துரோகங்களுக்கும் பஞ்சமில்லாத ஈழத்தமிழ்ச் சமூகம் ஈழப் போராட்டத்திற்காக ஆயுதம் தரித்த தலைமைகள் சிலவற்றில் இருந்தும் அது வெளிக்கிளம்பிய போது அதிர்ச்சியடைந்தது. இலங்கைப் புலனாய்வுத்துறையும், றோவும் இதைத்தமக்கு சாதகமாக்கி தமிழகத்தில் ஒரு குறிப்பான சலசலப்பை தோற்றுவித்தார்கள். ஈழப் போராளிகளையும் தமிழக மக்களையும் பிரி;த்தெடுத்தார்கள். இந்த துரோகிகளும் புலனாய்வுத்துறையினரும் சேர்ந்து நடாத்திய விளையாட்டில் எல்லாப்பழியும் புலிகளின் மேல் விழுந்தது. அந்நாட்களில் ஆயுதம் தரித்த அனைத்துப் போராளிகளையும் தமிழக மக்கள் புலிகள் என்றே அழைத்து வந்தது எதிரிகளுக்கு வசதியாகப் போய்முடிந்தது.</b>
<b>இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் வரை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த ஈழம் தொடர்பான வெளியுறவுக் கொள்கை அவர் மரணத்துடன் ஒரேயடியாக சிங்களத்தின் பக்கம் சாயத்தொடங்கியது. ஒரு தனிமனிதராக முடிவுகளை எடுக்கும் பலம் மிகுந்த சக்தியாக இருந்த இந்திராவின் மரணத்துடன் வெளியுறவுச் செயற்பாடுகள் அதிகாரிகளின் கைக்கு மாறியது. ஒற்றை அறம் பேசும் இந்துத்துவ பார்ப்பனிய கருத்தியலை விதைக்கும் புலனாய்வு அதிகாரிகள் ஈழப் போராட்டத்திற்கு எதிரான முழுநிலைப்பாட்டை எடுத்து இலங்கை, இந்திய ஒப்பந்தம் வரை கொண்டு வந்து விட்டார்கள்.</b>
தவறான வெளிவிவகாரக் கொள்கை அதை முன்னெடுக்கும் நாட்டை ஆபத்தான பாதையில் இட்டுச் செல்லும் என்பதுடன் அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் ஆபத்தையும் பிற நெருக்குதல்களையும் சந்திக்க வேண்டிவரும் என்பதை மறந்து ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது பின்நாளில் இந்திய வெளியுறவுக் கொள்கையையும் அரசியல் கட்டமைப்பையும் கலைத்துப் போட்ட வரலாறு எல்லோரும் அறிந்ததே. ஈழப்போராட்டம் வேறொரு பரிமாணம் அடைந்ததும் இக்காலகட்டத்தில்தான்.
இந்தியா எந்த வெளியுறவுக் கொள்கைக்காக ஈழப் போராட்டத்;தை நசிக்கியதோ, அதே வெளியுறவுக் கொள்கையின் ஒரு சரத்தின் ஊடாகவே தலைவர் பிரபாகரன் இராஜதந்திரக் காய்களை நகர்த்துகிறார். 1989-1990 இல் போர் நிறுத்தப் பிரகடனத்தையும் பேச்சுக்களுக்கான உடன்பாட்டையும் தலைவர் அறிவித்தவுடன் இந்திய அரசும் படைகளும் புறந்தள்ளப்பட்டன. சிறிலங்கா அரசால் அழைக்கப்பட்ட இந்தியப் படையினரை சிறிலங்காவாலேயே வெளியேற்ற வைத்தார் தலைவர் பிரபாகரன்.
பிரபாகரன் மிக இராஜதந்திரமான முறையில் தற்காலிகமாகவேனும் தனது கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்;. நவீன இராஜதந்திரத்தில் வெளியுறவுக்கொள்கை தொடர்பாக அரசியல் நகர்வு அல்லது நடவடிக்கையில் புதிய திருப்பமாக அமையும் கொள்கை முன்னெடுப்பை னுநஅயசஉhந என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியப் படையை வெளியேற்றுவதற்காக தலைவர் பிரபாகரன் னுநஅயசஉhந ஐ நிகழ்த்தினார்.
<b>ஒரு வெளியுறவுக் கொள்கையின் சரத்துடன் உள்நுழைந்த இந்திய அரசை வேறொரு வெளியுறவுக் கொள்கையின் சரத்து மூலம் தேசியத் தலைவர் வெளியேற்றினார். தெற்காசிய அரசியல் இராஜதந்திர வட்டாரம் அப்போது ஆசியாவின்; தலைசிறந்த ராஜதந்திரி ஒருவரை அடையாளம் கண்டு கொண்டது. ஈழப் போராட்டம் வேறொரு பரிமாணத்திற்குள் தன்னை பொருத்திக் கொண்டது.</b>
<b>காலச்சக்கரம் சுழல்கிறது அவமானத்துடனும் தோல்வியுடனும் வெளியேறிய இந்தியா நீண்டகாலம் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தது. இந்திய மத்திய அரசின் ஆட்சி மாற்றங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், பொருளாதாரப் பின்னடைவுகள் போன்ற பல காரணங்களால் இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்தியத் தலையீடு மீண்டும் மெல்ல நகர்ந்து பரவி பாதுகாப்பு ஒத்துழைவு ஒப்பந்தம் வரை வந்து நிற்கிறது.</b>
மத்தியில் காங்கிரஸ் பதவியிலிருப்பதும் எல்லைச் சண்டைகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுக்கள் நடைபெறுவதும் புரிந்துணர்வு உடன் படிக்கைக்கு பிறகு இலங்கைக்கு வந்து போகும் நோர்வே, யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளினதும் அக்கறையும் இந்தியாவை ஈழம் தொடர்பான தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
<span style='font-size:30pt;line-height:100%'>ஒரு பிராந்திய வல்லரசு தனது பாதுகாப்பில் அக்கறை கொள்வது இயல்பானது. ஆனால் தீயசக்திகளை சரியான முறையில் இனங்கண்டு தீர்க்கமான வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந்தியா பழைய குருடி கதவைத்திறவடி நிலையில் தான் இன்னும்............ </span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>இந்திய புலனாய்வு நிறுவனமான றோ ஈழத்தில் ஒரு நிழல் தலையீட்டை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அதற்கான ஆதாரம் பல புலிகள் வசம் சிக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. நேரடித் தலையீட்டிற்காக தருணம்; பார்த்துக் காத்து நிற்கிறது இந்திய அரசு.</span>
இத் தருணத்தில் இந்திய அரசு பழைய சம்பவங்கள் சிலவற்றை மீட்டுப்பார்க்க வேண்டும்;.
[b]மீண்டும் ஒருமுறை தவறான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து இந்திய அரசியல் கட்டமைப்பையும,; பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்துவது அரசியல் விவேகமில்லை. புலிகள் என்றைக்குமே ஒரு நேசசக்தியென்பதை மறந்து விடவேண்டாம். இதை இந்திய அரசு ஏற்காமல் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதற்கெதிராக திரும்புவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதை நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஆலோசனை ஒன்றை வழங்குவதைத் தவிர ஈழத்தமிழர்களிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை. </b>
<b>எமக்குத் தெரியும் உலக வெளியுறவுக் கொளi;ககள் அறம், நீதி, உண்மையை வைத்து வகுக்கப்படுவதில்லை. மாறாக பிராந்திய நலன் சுயபாதுகாப்பு போன்ற குறுகிய வட்டத்தில் நின்று வரையப்படுபவை. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்திற்கு அதன் அரசு மட்டுமன்றி சில புறக்காரணிகள், தனிநபர்கள், நிறுவனங்கள் எல்லாம் பங்கு கொள்வதையும் அறிவோம். இந்திய இந்துத்துவ ஒற்றை அறம் எமக்கு சார்பானதாக என்றும் இருக்கப்போவதில்லை என்பதும் எமக்குத்தெரியும.; 'தேசிய நலனுடன் ஒத்துப்போகும் வரை உடன்படிக்கைகள் மதிக்கப்படுகின்றன" என்றார் நெப்போலியன். ஈழத்தமிழ்த் தேசியத்திற்கு எதுவித சேதமும் இல்லாத வரை நாமும் அதை மதிப்போம்.</b>
'நான் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட எப்போதும் தயாராக உள்ளேன். அதை முறிக்காமல் விலக எனக்குத் தெரியும்" என்றார் கிட்லர்.
நிலையற்ற குழப்பம் நிறைந்த ஒரு சிங்கள தலைமையுடன் ஒப்பந்தத்தை எழுதுவது கத்திமேல் நடப்பதற்கு ஒப்பானது. எந்தக் கணத்திலும் தமது பதவிக்கதிரைகளுக்காக திருத்தவாதம் (சுநஎளைழைnளைஅ) ஐ சிங்களம் பிரயோகிக்கலாம் அப்போது மீண்டும் முகத்தில் கெட்டியாக கரிபூசிக்கொண்டு இந்தியா வந்தவழியே திரும்பவேண்டி நேரிடலாம்.
இந்த அரசியல் சாத்தியங்களுக்கும் அப்பால் இந்த ஒப்பந்தம் மீது பிரபாகரன் எத்தகைய எதிர்வினையை நிகழ்த்தப்போகிறார் என்று ஒருவராலும் வாசிக்க முடியவில்லை. எல்லோருடைய கணிப்பீட்டையும் போல் அவர் அதை இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எதிர்கொள்ளப்போவதில்லை என்றே தெரிகிறது. அவருக்கே உரிய தனித்துவத்துடன் மிகவும் நுட்பமான முறையில் இராஜதந்திர முறையில் காய்களை நகர்;த்தக்கூடும். அப்போது தெற்காசியாவில் அதிசிறந்த ஒரு இராஜதந்திர நிகழ்வை உலகம் மீண்டும் ஒரு முறை தரிசிக்க கூடும். அவர் மீண்டும் ஒரு னுநஅயசஉhந நிகழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எல்லோரும் ஒப்பந்தம் குறித்த கதையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது பிரபாகரன் மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறார். ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட முடியாமல் போவதற்கான சாத்தியங்களையே பிரபாகரன் தனது இராஜதந்திர மௌனத்தின் மூலம் நிகழ்த்திக்கொண்டிருப்பதாக தெற்காசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
<b>எல்லாவற்றையும் மீறி இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் எத்தகைய தலையீடுகளானாலும்; அதை சரியான முறையில் எதிர்கொள்ளும் சாணக்கியம் நிறைந்த தீர்க்கமான தெளிவான தலைமை தமிழீழத்தில் தோன்றி நீண்ட நாட்களாகி விட்டது. இதை எதிரிகளும் அந்நிய சக்திகளும் பல பாடங்களை கற்று தெளிந்தபின்னும் மறந்துபோனது ஆச்சரியமளிக்கிறது.</b>
<b>கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி நடைபெற்ற இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிதியைப் பங்கிடும் திட்டமான பொதுக்கட்டமைப்புக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. (பின்பு சொல்லியதை மாற்றியது வேறு கதை) இத்திட்டம் புலிகளை பலப்படுத்தப் போவதாக ஓலமிட்டது. அந்தக் கணத்தில் மனிதநேயம், மனித விழுமியம், உண்மை, அறம், நீதி எல்லாம் இந்திய அரசால் சாகடிக்கபட்டது. வீடிழந்து, சொந்தங்களைப் பறிகொடுத்து நிர்க்ககதியாய் நின்றவர்களுக்கு உலக தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் பணத்தை கொடுக்காதே என்று சொல்லுமளவுக்கு அதன் ஒற்றை அறம் இருக்கிறது.</b>
இறுதியாக ஒன்றை மட்டும் ஈழத் தமிழினம் சொல்லிக்கௌ;ள ஆசைப்படுகிறது.
ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை போராடி 1961 ஜனவரி 17 மடிந்தான் விடுதலை வீரன் பாடரிஸ் லுமும்பா. அந்த சிறிய தேசத்தின் அழிவுக்கும் அந்த விடுதலை வீரனின் படுகொலைக்கும் சூத்திரதாரிகளாக ஐ.நா தொடக்கம் பல மேற்குலக நாடுகள் வரை பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஏன்? கொங்கோவின் விடுதலை உலக காலனியத்திற்கெதிரான விடுதலையாகிப் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாய் கொங்கோவை ஆக்கிரமித்திருந்த பெல்ஜிய அரசிற்கு பல உதவிகளை செய்து பாட்ரிஸ் லுமும்பா படுகொலைக்கு துணை நின்றன. மனித விழுமியங்கள் உடைந்து சிதறுகின்றன நம் கண்முன்னே. அடிமைப்பட்டு அல்லலுறும் அந்த கொங்கோ மக்களின் மேல் யாருக்கும் பரிதாபம் வரவில்லை. மாறாக அரச பயங்கரவாதத்திற்கு (ளுவயவந வுநசசழசளைஅ) துணைபோனது உலகம். இன்றைய உலக ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது... இதை ஈழத்தமிழினம் சரியாக புரிந்துவிட்டது.
பாடரிஸ் லுமும்பா தான் கொல்லப்படுவதற்கு முன்பாக தனது மனைவிக்கு எழுதிய இறுதிக்கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
<b>'....அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவனாகவும் உயிர் வாழ்வதைவிட தலைநிமிர்ந்தபடி அசைக்க முடியாத பற்றுடனும் என் நாட்டின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் மரணமடைவதையே நான் விரும்புகின்றேன். வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா. விலோ வொசிங்டனிலோ புருஸ்ஸல்ஸிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக காலனியாதிக்கத்திடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆப்பிரிக்கா தன் சொந்த வரலாற்றை தானே எழுதும். அது சகாராப் பாலைவனத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதை சொல்லும் வரலாறாக இருக்கும்...</b>"
<b>ஆம், அந்த விடுதலை வீரனின் அரசியல் விருப்ப ஆவணத்தைப்போல் தமிழீழமும் இறுதி இலட்சியத்தை அடையும்வரை குறுக்கேவரும் எத்தகைய மாபெரும் சக்தியையும் எதிர்த்து போராடும். செய்யும் அல்லது செத்து மடியும். அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவர்களாகவும் உயிர்வாழ்வதை விட தலை நிமிர்ந்தபடி அசைக்க முடியாத பற்றுடனும் தமிழீழத்தின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் மடிவதையே விரும்புகிறது.</b>
<span style='font-size:30pt;line-height:100%'><b>வரலாறு ஒரு நாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு புதுடில்லியிலோ கொழும்பிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் அடக்குமுறையாளர்களிடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். தமிழீழம் தன் சொந்த வரலாற்றைத் தானே எழுதும்.</b></span>
நன்றி:MODERN DIPLOMACY
|
|
|
|