Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 283 online users.
» 0 Member(s) | 280 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,626
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
Posted by: Vaanampaadi - 01-08-2006, 02:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை</b>

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது அவருடன் சென்ற தூதுக்குழுவில் விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுக்கும் ஒருவரும் இடம் பெற்றிருந்ததாகவும் அதன் காரணத்தினால் ஜனாதிபதியின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறுவதாக இணையத்தள செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவுடன் பயணம் செய்த (விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுப்பவரென்று சந்தேகிக்கப்படும்) அந்த நபர் முன்றுநாள் விஜயத்தின் போது ஜனாதிபதி நடத்திய முக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்றதாக இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு வட்டாரங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றன. இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் என்ற வகையிலேயே அந்தநபர் ராஜபக்‌ஷவுடன் பயணம் செய்ததாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது அந்த நபரின் சகல தொலைபேசி உரையாடல்களையும் தாங்கள் ஒலிப்பதிவு செய்ததாகவும் சில தகவல்களை அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வட்டாரங்களுக்கு கொடுத்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள் என்று அந்த இணையத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளின் எச்சரிக்கையை ஊர்ஜிதம் செய்த பாதுகாப்பு அமைச்சு வட்டாரம் ஒன்று, மேலதிக விபரங்களைத் தர மறுத்துவிட்டது என்று அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakural.com/New%20web%20site...y/08/news-2.htm

Print this item

  கோப்பாயில் கைக்குண்டுத் தாக்குதல்
Posted by: Vaanampaadi - 01-08-2006, 02:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>கோப்பாயில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 படையினர் படுகாயம் </b>
[ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 18:36 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
யாழ். கோப்பாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 2 சிறிலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்.


கோப்பாயில் யாழ். - பருத்தித்துறை வீதியில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் சார் அலுவலகம் அருகே சுற்றுக்காவல் பணியில் நின்று கொண்டிருந்த படையினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 2 படையினர் படுகாயமடைந்தனர். இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் போது தாக்குதலை மேற்கொண்டோர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் அவர்கள் தப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கோப்பாயில் அனைத்து வாகனப் போக்குவரத்துக்களும் 2 மணி நேரத்துக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டது. இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே கோப்பாய், நல்லூர் ஆகிய இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் வெள்ளைக் கொடிகளை கட்டாயப்படுத்தி வீடுகளில் கட்ட வைத்துள்ளதாக முறைப்பாடுகள் கூறப்பட்டது தொடர்பில் யாழ். நீதிபதி சிறிநிதி நந்திசேகரன் விசாரணை நடத்தினார்.

பொதுமக்கள் தாங்களாகவே வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்றியதாக தம்மிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி கூறியதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.


Puthinam

Print this item

  SLA informant shot dead in Point Pedro
Posted by: Vaanampaadi - 01-08-2006, 02:47 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>SLA informant shot dead in Point Pedro</b>

[TamilNet, January 08, 2006 12:52 GMT]
Sinnarasa Rasaiah, 47, from Vinayaga Mudaliyar (VM) Road in Point Pedro town, and owner of a bakery, was shot and killed at 3.30 pm.m Sunday by unknown gunmen who forced entry into the bakery located within 100 meters of the Sri Lanka Army (SLA) 52-4 Brigade Head Quarters within the High Security Zone (HSZ) encompassing the Point-Pedro harbor, sources said. Residents allege that Rasaiah was a military informant.
Point Pedro Police has taken the body to the Point Pedro General Hospital in Manthikai for postmortem examinations.

The brazen killing within the HSZ, the third murder to take place in the last two days, has shocked the residents of the town. Tension prevails in Point Pedro town and suburbs.

Iyathurai Baskeran, 27, an LTTE supporter displaced from Kudathanai was found shot to death in Katkovalam Saturday, and on Thursday night Mathan, an EPDP supporter was found stabbed to death in Thumapalai, Point Pedro.



Tamilnet

Print this item

  கடற்கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்...
Posted by: தூயவன் - 01-08-2006, 02:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)



<b>கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்...</b>

<span style='color:darkblue'>
கடற்கரை உப்புக்காற்றில்

கரைந்து போன எதிர்காலம்...

மாணவர் சமூகம் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி தொடருகின்றது.

\"சகோதரர்களே!

உங்களின் அகால மரணம்

எங்களுக்கு மனரணம்

அந்த இறுதித் துடிப்பு

சிந்திய உதிரத்துளி

சல்லடையாகிப் போன

கபால ஓடுகள்

கடற்கரைக் காற்றில்

கரைந்து போன எதிர்காலம்

மறக்காது இவற்றை

எங்கள் திருமலை சமூகம்.

2006 ஆம் ஆண்டு பிறந்து இரண்டாம்நாள் மாலை வேளையில்இ வழமை போன்று கடற்கரையோரக் காந்தி சிலை அருகே கூடுகின்றார்கள். கலந்துரையாடுகின்றார்கள். சிரித்துப் பேசி மகிழ்கின்றார்கள். பேரினவாத வடிவில் யமன் வந்தான். முதலில் மூன்று சக்கரங்களில்இ நான்கு சக்கரங்களில். திருகோணமலை கல்விச் சமூகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் ஐந்து இளம் குருத்துக்கள் துப்பாக்கிக் குண்டுகளால் பிடுங்கி எறியப்பட்டன.

அந்தக் கடைசி நிமிடங்களில்...

"அப்பாஇ ரவுண்டஅப் செய்துள்ளார்கள். வீதியில் முழங்காலில் நிற்க வைத்துள்ளார்கள்"- செல்போனில் மகன் தகவல் அனுப்புகின்றார். அதேநேரத்தில் தந்தையும் போனில் மகன் எங்கே நிற்கிறார் என்பதையறிய முயற்சிக்கின்றார். ஒரே நேரத்தில் இருவரும் முயற்சித்தனர். இது தகவல் பரிமாற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இறுதியில் மகனின் மரணமே அவருக்கு செய்தியாகக் கிடைக்கிறது.

"அம்மாஇ கடற்கரைக்குப் போய்விட்டு வருகின்றேன். அப்பாஇ கடற்கரைக்குப் போய்விட்டு வருகின்றேன்"- வழமை போன்று தான் ஐவரும் புறப்பட்டுச் சென்றனர். ஒரே ஆண்டில் (1985) பிறந்தவர்கள். வெவ்வேறு திகதிகளில் பிறந்தாலும் ஒரே ஆண்டில் (2006) ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் மறைந்தனர்.

அவர்கள் பிறந்த திகதிகள் வருமாறு: த.சிவானந்தா 06.04.1985இ ம.ரஜிகர் 22.09.1985இ யோ.ஹேமச்சந்திரன் 04.03.1985இ லோ.றொஹாந்த் 07.04.1985இ ச.சஜேந்திரன் 16.09.1985.

ரஜீஹரின் வீடு டைக் வீதியில்இ சிவானந்தாவின் வீடு வன்னியா ஒழுங்கையில்இ ஹேமச்சந்திராவின் வீடு சுங்கவீதியில்இ றொஹாந்தின் வீடு சிவன் வீதியில்இ சஜேந்திரனின் வீடு வித்தியாலயம் ஒழுங்கையில்.

இவ்வைந்து வீடுகளில் மாத்திரமல்லஇ திருகோணமலையில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட சொந்த இழப்பாகவே இவர்களின் மரணத்தை திருகோணமலைச் சமூகம் கருதியது.

அறிந்தவர்களும் அறியாதவர்களும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பறி கொடுத்தவர்களை அனைத்து வாழ்நாளில் என்றுமே ஈடு செய்ய முடியாத இப்பேரிழப்பை எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போன்றீர்கள் என்று கண்ணீர் உகுத்தனர். சிங்களஇ இஸ்லாமிய மக்களும் சென்று அஞ்சலி செய்தனர்.

கல்வியில் மாத்திரமல்ல.விளையாட்டுத்துறையிலும் சாதனை நிலை நாட்டியவர்கள் அவர்கள். வீட்டில் ரஜீஹரின் பூதவுடல் முன்னால் வரிசையாக ஒன்றல்லஇ இரண்டல்லஇ பதினெட்டுக்கு அதிகமான வெற்றிக் கிண்ணங்கள்இ பதக்கங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மறைந்த ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் பல சாதனைகள். கணினி யுகத்திலே புகுந்தவர்கள் அவர்கள். படிக்கும் காலத்திலேயே தங்களின் திறமையை வெளிப்படுத்தியவர்கள்.

மூன்றாம் திகதி திருகோணமலை ஆஸ்பத்திரியில் மரண விசாரணை நடத்தியது. ஆஸ்பத்திரியை மொய்த்தது கூட்டம். ஆவேசமாகக் காணப்பட்டது. ஒருவர் சட்டையைத் திறந்து மார்ப்பைக் காட்டி ஹஎன்னைச் சுடுங்கள்' என்றார். காவலுக்கு நின்றவர்களில் ஒருவர் தலையைக் குனிந்து கொண்டார்.

நான்காம் திகதி முழுவதும் மாணவர்களின் பூதவுடல்கள் அவரவர் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. நகரம் வெறிச் சோடிக் காணப்பட்டது. நகரமே இறப்பு வீடாகத் தெரிந்தது.

ஐந்தாம் திகதி வியாழக்கிழமை காலை திருகோணமலையின் வரலாறு காணாத நிகழ்வு ஆரம்பமானது. ரஜிஹர்இ ஹேமச்சந்திரன்இ சிவானந்தா ஆகியோரின் பூதவுடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை வந்தடைகின்றன. பின்னர் சஜேந்திரன்இ றோஹாந்த் ஆகியோரின் பூதவுடல்கள்இ வித்தியாலய வீதிஇ சிவன் வீதி ஆகிய இடங்களிலிருந்து கல்லூரி மைதானத்தை வந்தடைகின்றன. ஐந்து பூதவுடல்களும் அடங்கிய சவப்பெட்டிகள்இ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலின் கீழ் வைக்கப்படுகின்றன. பூதவுடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் மக்கள் அஞ்சலிக்காக திறக்கப்படுகின்றன.

வருண பகவானும் கண்ணிர் சிந்த ஆரம்பிக்கின்றான். (இளம் சிட்டுக்கள் மீளாத்துயரிலில் கோணேசப் பெருமானைப் பார்த்த வண்ணம் ஆழ்ந்திருக்கும் காட்சி. தலைமாட்டில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் அருள்பாலிக்கும் காட்சி. கற்ற இந்துஇ கிறிஸ்தவஇ இஸ்லாமிய மதப் பெரியார்கள்) மீளாத் துயில்இ பார்ப்பவர்களை வாய்விட்டு அலற வைத்தது. ஒவ்வொரு பூதவுடலைச் சுற்றி வர நின்று கொண்டிருந்த பெற்றோர்இ உறவினர்கள்இ நண்பர்கள் மட்டுமல்லஇ திருகோணமலையே அழுதது. வானமும் தனது பங்கை அளித்ததுஇ முதலில் தூறலாகஇ பின்னர் பெரிய மழையாக - மதப் பெரியார்கள்இ மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இரங்கலுரை நிகழ்த்தினர். மாணவர் மீது மேற்கொள்ளப்பட்ட படையினரின் கொடூரத் தாக்குதலை வன்மையாக் கண்டித்தனர். தமிழ் மாணவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கல்லூரி அதிபர் எம்.இராஜரத்தினம் அஞ்சலி நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. சுவாமி விபுலானந்தா அடிகளார் அதிபராக இருந்த கல்லூரிஇ இக்கல்லூரி அதன் வரலாற்றில் இவ்வாறான சோகத்தைச் சந்தித்தது இல்லை. அண்மைக்காலமாக தேசியப் பரீட்சைகளில் தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை கல்லூரியின் மாணவர்கள் ஈட்டி வந்துள்ளனர்.

ஐந்து மாணவர்களும் இக் கல்லூரியில் 2004இ 2005 ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் திறமையான சித்திகளைப் பெற்றவர்கள். ஐவரும் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்கள். அவர்கள் வளர்ச்சிக்காக பெற்றோர்இ பாடசாலைஇ கல்விச் சமூகம் செய்து வந்துள்ள சமூகத்திற்கு நல்ல முதலீடாக மாற்றம் பெறும் வேளையில்இ அவர்கள் நம்மத்தியிலிருந்து பலாத்காரமாகப் பிரித்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். நான் ஒரு துர்ப்பாக்கியசாலியாக இங்கு நிற்கின்றேன்" கண்கள் குளமாகக் கூறுகின்றார் அதிபர் இராஜரத்னம். இம்மாணவர்களின் உயிர்த்தியாகம் எமது சமூகத்திற்கு நிச்சயம் விடிவைக் கொண்டு வந்தே ஆகும் என்றும் அவர் கூறினார்.

வரலாறு காணாத சனசமுத்திரம் கல்லூரி மைதானத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம்இ கடற்படைத்தள வீதி வழியாக திருமலை பஸ் நிலைய சுற்று வளைவுக்கு சென்றுஇ பின்னர் அங்கிருந்து பிரதான வீதி ஊடாக மடத்தடிக்குச் சென்றுஇ ரயில் நிலைய வீதியாக ஏகாம்பரம் வீதியை அடைந்துஇ திருகோணமலை இந்து மயானத்தை அடைகிறது. வித்துடல்கள் புதைகுழிக்குள்இ ஹஆராரோ' பாடிய தாய்மார்கள் கதறிஇ ஹஉன்னை வளர்த்தேன் ஊருக்கு நல்லது செய்ய' என்ற தந்தையர்கள் அரற்ற ஒவ்வொன்றாக வைக்கப்படுகின்றன.

"முதலீடுகள்' புதைக்கப்படுகின்றன; விடிவு தெரிகின்றது.
</span>
தகவல்: தினக்குரல்

Print this item

  ஈழத் தமிழருக்காக தமிழகத்தின் நிலைப்பாடு மாறியது எப்படி?
Posted by: adsharan - 01-08-2006, 10:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

இராணுவத்தின் கொடூரப்பிடிக்குள் நசியுண்டு தினமும் பிணவாடையிலேயே கண்விழிக்கும் தமிழர் தாயகம், தனக்காக குரல்கொடுக்க எவருமில்லையா என்ற ஏக்கத்துடனுள்ளபோது, தாய்த் தமிழகத்தின் அண்மைய அரவணைப்பு சற்று ஆறுதலடைவேயே செய்துள்ளது.

இங்கு எம்மீது பேரிடியாய் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜங்களுக்கான எதிர்ப்புகள் அல்லது இரத்தக்கொதிப்பு தற்போது தாய் நாட்டிலிருந்து உடனுக்குடனேயே வரத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, கடந்த திங்கள் இரவு திருகோணமலையில் 5 அப்பாவி மாணவர்களை படைகளால் நடுத்தெருவில் படுக்கவைத்து ஈவிரக்கமின்றி காதுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற கண்டன பேரணியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

`விடுதலைச் சிறுத்தைகள்' அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் "எங்கள் தங்கை தர்ஷிசினிக்கு வீர வணக்கம்"( புங்குடுதீவில் கடற்படைகளால் குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட பின் கிணற்றில் வீசப்பட்ட சகோதரி), " எங்கள் ஐயா பரராஜசிங்கத்திற்கு வீர வணக்கம்" , "திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வீர வணக்கம்" போன்ற கோஷங்கள் ஓங்கி ஒலித்ததுடன் "சிங்கள அரசுக்கு இந்தியா உதவிவழங்கக் கூடாது" , "தமிழினத்தை அழிக்கும் சிங்கள இன வெறியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்காதே" "மற்றும் தமிழீழத்தை அங்கீகரி " ஆகிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தை நடாத்த சென்னை பொலிஸாரால் ஒரு மணி நேரமே வழங்கப்பட்டிருந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் (வி.சி.) அமைப்பின் செயலாளர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் ( பா.ம.க.) துணைத் தலைவர் சீ.ஆர். பாஸ்கரன், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ( ம.தி.மு.க) நிர்வாக உறுப்பினர் வழக்கறிஞர் அதியமான், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்களான சீமான், புகழேந்தி தங்கராசு, தமிழர் இயக்க தலைவர் தியாகு, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி சு.பத்மநாதன், தமிழ் மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழன்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான உணர்ச்சிக் குமுறல்கள் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில், அதாவது மாவீரர் வாரத்தையொட்டியதாக ஆரம்பமாகியிருந்தது. ஆரம்பத்தில் சுவரொட்டிகளூடாக வெளிப்படத் தொடங்கிய இக் கொதிப்புகள், இந்திய அரசின் ஆட்சிப்பீடத்தை நோக்கிய ஆதங்க கடிதங்களாயும் பின்னர் மகாநாடாயும் மாறி, கருத்தரங்கமாகவும் கண்டனப் பேரணிகளாகவும் வந்துள்ளன. இவை ஒரு சில வாரங்களில் மாத்திரம் இடம்பெற்ற பரிணமிப்புகளே.

இதைவிட, " ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு ஒப்பான தமிழினப் பணி வேறெதுவுமில்லை " என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழகத்தின் முதுபெரும் கல்வியாளருமான வா.செ. குழந்தைசாமி' ஈழத் தமிழர் பாதுகாப்பு மகாநாடு நடாத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில், "ஈழப்பிரச்சினை தொடர்பாக தங்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டம் பற்றிய செய்திகளை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டேன். இலங்கைத் தமிழருக்கு நியாயம் செய்ய உதவுவதை ஒத்த தமிழினப்பணி வேறெதுவுமில்லை. அயல் நாட்டுடன் நல்லுறவு என்ற பெயரில் தமிழர்கட்கு எதிரான இலங்கை இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இந்திய அரசு துணை போய்விடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் இம் முயற்சிக்கு தமிழினம் தலை வணங்கி நன்றி சொல்லும். இந்தத் தமிழர் நலம் விளையும் எண்ணற்ற தமிழ் உள்ளங்களோடு நானும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சென்னையில் கடந்த வியாழனன்று `ஈழத் தமிழர் உரிமை - சமாதான விழித்தீர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கமொன்றும் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமைவகித்த தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவியும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரஸ்வதி கருத்துத் தெரிவிக்கையில்;

" சமாதான காலத்திலும் கூட ஈழத்தமிழர்களுக்கான மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதுமின்றி அவர்கள் மீது வன்முறைகளும் திணிக்கப்பட்டுள்ளன. சமாதானத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்கள்தான். 2001 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள் தம்பி பிரபாகரன் போர்நிறுத்தத்தை அறிவித்தார். அப்போது அவர் வலுவற்ற நிலையில் ஒன்றும் இருக்கவில்லை.

வரலாற்று சிறப்புமிக்க ஆனையிறவுப் போரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தை தகர்த்த கையோடுதான் இராணுவ சமநிலை நின்று, போர் நிறுத்தத்தை அறிவித்தார் தம்பி பிரபாகரன். 4 ஆண்டுகளாக சமாதான பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் இலங்கை அரசு எதையும் சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தமிழர்கள்மீது வன்முறையையே அது கட்டவிழ்த்து விட்டுள்ளது" என அவர் முழங்கியுள்ளார்.

அதேபோல், அங்கு உரையாற்றிய கவிஞர் இன்குலாப், "இலங்கையில் புத்த மதம் என்பது சிங்கள மதம். அது இனங்களை ஒன்றிணைக்கப் பயன்படவில்லை. மத அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது. அந்த பாகிஸ்தானிலிருந்துதான் வங்கதேசம் பிரிந்தது. மதத்துக்கு இனங்களை ஒன்றிணைக்கக் கூடிய சக்தியில்லை .

ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இந்தப் போருக்கு முதலில் தமிழர்கள் முகம் கொடுத்தார்கள். இனி சிங்கள மக்கள் முகம் கொடுப்பார்கள்." என்றார்.

இக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையைப் பார்க்கும் போது தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி கல்வியியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மனிதவுரிமை ஆர்வலர்கள், தமிழினப் பற்றாளர்கள், கலைஞர்கள் என அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு அல்லது அரவணைப்பு கருத்துக்கள் நீண்டகாலத்தின் பின் வரத் தொடங்கியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் நாட்டின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து கடந்த சில வாரங்களாக இத்தகைய உணர்வுகள் வெளிப்படுவதற்கான காரணத்தை அண்மையில் சென்னை சென்று திரும்பிய தகைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி விளக்குகையில்,

" ஈழத்திலே தமிழ் மக்களை சிங்கள அரசு அடக்குகிறது. தமிழர்களுக்கு பாதகமாக அது நடக்கிறது. சிங்கள அரசு இந்தியாவின் ஆதரவுடனேயே இவ்வாறு நடந்துகொள்கிறதென்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதாவது, சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த எண்ணம் எழுந்துள்ளதைக் காண முடிகிறது.

இதற்கு பல காரணங்களிருப்பினும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் இந்திய விஜயம், அவர்கள் அங்கு வெளியிட்ட ` புலி விரோத' கருத்தக்களுமே தமிழ்நாட்டு மக்களின் கொதிப்புக்கு தூபமிட்டுள்ளது என்பது எனது கருத்து. இதையோர் பெரும் எழுச்சியெனக் கூற முடியாவிட்டாலும் தற்போது அங்கு ஏற்பட்டிருப்பது பிரக்ஞை (தமிழுணர்வு) என்று கூறலாம் இதில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோபாலசாமியின் தொழிற்பாடு முக்கிய பங்கு வகித்துள்ளது" என்றார்.

வை.கோ., இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் தமிழீழத்தின் பிந்திய நிலைவரத்தை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் அதிலுள்ள யதார்த்தம் மிக்கதும் உணர்வுள்ளதுமான கருத்துக்கள் அங்குள்ள ஏனைய தமிழின பற்றாளர்களை முழு மூச்சுடன் தமது கருத்துக்களை வெளிப்படுத்த உசுப்பி விட்டுள்ளதாக நோக்கர்களால் தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கியிருந்த போதும் சரி, அவர் தனது பயணத்தை ஆரம்பிக்க முன்னும், பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னும் சரி தமிழகம் அவரை விட்டு வைக்கவில்லை. பேரினவாதத்துக்கு எதிரான தனது ஆத்திரத்தை அது உறுதியாக வெளிப்படுத்தியது.

குறிப்பாக, மகிந்த இந்திய மண்ணில் கால் வைக்கக் கூடாதென தமது உச்சக்கட்ட கொதிப்பை வெளிப்படுத்தியதுடன் இலங்கைக்கு உதவினால் தமிழகம் இன்னோர் காஷ்மீராக மாறுமெனவும் எச்சரித்தது.

எமது பிரச்சினைகள் விடயத்தில் மிக நீண்டகாலமாகவே ` உறங்கு நிலை' யிலிருந்த தமிழகம், தற்போது விழித்துக்கொண்டுள்ளதன் தார்ப்பரியம் என்னவென விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரனை கேட்ட போது:

"தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான தொப்புள்கொடி உறவு என்றுமே இருந்துதான் வருகிறது. இந்த உறவை அரசியல் சக்திகளே அடக்கியும் முடக்கியும் வந்துள்ளன. இதனால் அங்கு நீறு பூத்த நெருப்பாகயிருந்து கொண்டிருந்த உணர்வு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அதுவும் நீண்டகால வரலாற்று அவதானிப்பின் பின்னரேயே இவ்வாறன கருத்துக்கள் திரளுகின்றதை நீங்கள் பார்க்கலாம்.நாம் 4 ஆண்டு காலமாக கடைப்பிடித்த பொறுமை, பாரிய விட்டுக் கொடுப்புகள். மாறாக, இலங்கை அரசு எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன் முறை, தற்போது மகிந்த எம் மீது பாரிய போரைத் திணிக்க முற்படுவது போன்ற பல்வேறு விடயங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள் தற்போது தமது தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அதே சமயம், டில்லியில் மாத்திரமன்றி இந்தியா முழுவதும் எமக்கு எதிரான பல குழுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் யாரென்பது எமக்கு நன்றாக தெரியும்" என்றார்.

தமிழகத்தில் திரளுகின்ற ஈழத் தமிழர்கள் குறித்த கருத்துக்கள் இரு தளங்களிலுள்ளன. ஆனால் அவை ஒரே மேடையில் வெளிப்படுகின்றன.

கம்யூனிச கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஈழத் தமிழர்களை சிங்கள அரசு துன்புறுத்துகிறது. எனவே, இந்தியா இலங்கைக்கு உதவக் கூடாதெனவும் சமாதான முயற்சிகளில் இந்தியாவை இழுத்து தமக்கேற்ற விதத்தில் தீர்வுகளை திணிக்க இலங்கை முற்படுவதாகவும் அந்தப் பொறிக்குள் இந்தியா சிக்கிவிடக் கூடாது, ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக செயற்படக் கூடாதென குரல் எழுப்புகின்றனர்.

இக் கருத்துக்கு மேலதிகமாக திராவிடர் கழகங்களைச் சேர்ந்தவர்களும் தமிழுணர்வை உரத்த குரலில் கூறுபவர்களும் தமிழீழத்தை அங்கீகரி, விடுதலைப் புலிகளை அங்கீகரி எனத் தெரிவிக்கின்றனர்.

சிலர் சற்று அடக்கியும் மற்றவர்கள் உரத்தும் ஒரே மேடையிலேயே முழங்கி வருகின்றனர். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறனுக்கு புலிகள் குறித்து பேசக் கூடாதென நீதிமன்ற தடையுள்ளது. மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தியா இலங்கையின் சமாதான முயற்சிகளுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாதென்றிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணா நிதி செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் தமது கொள்கை எனவும். ஆனால், ஈழத் தமிழர் பாதிக்கப்படக் கூடாதென்ற தமது கொள்கையில் எதுவித மாற்றமுமில்லையென மாற்றமில்லாமல் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா' மகிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டதன் மூலம் தனக்கு ஏற்படவிருந்த அரசியல் சிக்கலிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. சில மாதங்களில் மாநில தேர்தல் அங்கு நடைபெறவுள்ளது.

தமிழீழ அரவணைப்பில் தனக்கெதிரான கட்சிகள் (தி.மு.க.தலைமையிலான கூட்டணி) முழு மூச்சாக ஈடுபட்டுள்ள வேளையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் தேர்தலில் அது தனக்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். மக்கள் மனங்களில் ` தமிழின விரோதி' என்ற தோற்றம் ஏற்பட்டுவிடுமென்ற அச்சத்திலேயே ஜெயலலிதா இச் சந்திப்பை தவிர்த்தாரெனவும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான முரண்பாடும் ( சோனியா - ஜெயலலிதா முரண்பாடு) இதற்கான நெருடலை ஏற்படுத்தியிருக்கலாமெனவும் தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க, தமிழகத்தின் அடிப்படைப்பலம் கிடைத்தால் 2007 இல் தமிழீழம் மலர்வது சாத்தியமென அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தெரிவித்திருக்கிறார்.

` புலி ஆதரவு அரசியல் ' தமிழ் நாட்டில் இருந்தபோது பல குழப்பநிலை அங்கு ஏற்பட்டது என்பது உண்மை . ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் நிலை வேறு. ஈழ விடுதலைப் போராட்டத்தை நீண்டகாலமாக அவதானித்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தர்க்கரீதியான வெளிப்பாடாகவே அங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இது எமக்கு பெரும் வெற்றியே. விடுதலைப் புலிகளின் கடந்த 4 ஆண்டுகால காய்நகர்த்தல் களிலிருந்து கனிந்த வெற்றியே இது.

" சிறிலங்கா நீ ஆனா, எல்.ரீ.ரீ.ஈ. நானான எனக் காதலி பாட "ஐயையோ வாயைக்கொஞ்சம் மூடு" என காதலன் `நடுங்கும்' சினிமா பாடல் தமிழகத்திலிருந்து வந்து சொற்பநாட்களுக்குள்ளேயே தமிழகம் தன் வாயைத் திறந்துவிட்டது.

திறந்துள்ள இவ் வாயை மூட பேரினவாதிகள் கடும் பிரயத்தனமெடுப்பார்கள் என்பது திண்ணம். அதற்கு வழமைபோல் இந்தியாவுக்கு `புலிப் பேதி'யை கொடுப்பார்களென்பதும் தமிழகத்திலுள்ள `புலி விரோதி' களுக்கு தூபமிடுவார்களென்பதும் வரலாறு சொல்லும் பாடம்.

எனவே, இந்தியாவுக்கு ` புலிப் பேதி ' கொடுத்து தமிழகத்தின் வாயை மூட பேரினவாதிகள் முற்படுகின்றபோது இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நோய்க்கான நிவாரணியை வழங்குவதற்கு தமிழர் தாயகத்திலுள்ள பொது அமைப்புகள் தயாராக வேண்டும்.

சிங்களம் டில்லிக்கு புலியைக் காட்டினால், நாம் `வலி'யைக் காட்ட வேண்டும்.

http://www.thinakural.com/New%20web%20site...8/Article-6.htm

Print this item

  Colombo gets support from US, LTTE from Tamil Nadu
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:24 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (3)

<b>Colombo gets support from US, LTTE from TN</b>
PK Balachandran

Colombo, January 7, 2006|17:11 IST

With the ceasefire in Sri Lanka in danger of being broken, the government and the LTTE are seriously looking for support from overseas for their respective cases.

While the Rajapaksa regime seems to have the backing of the United States, the LTTE is counting on increasing support across the Palk Strait in Tamil Nadu.

The LTTE is also reasonably sure that New Delhi will remain neutral thanks to the influence of Tamil Nadu. This was stated recently by the LTTE's ideologue, KV Balakumaran, in an interview to the Voice of Tigers radio.

Rice's assurance to Lanka

According to the State Department spokesman Sean MacCormack, the Secretary of State Condoleezza Rice told the visiting Sri Lankan Foreign Minister Mangala Samaraweera in Washington on Friday, that the United States "remained committed to working with Sri Lanka to defeat terrorism and to promote peace."

"She also lauded the Sri Lankan government for its restraint in the face of the Tamil Tigers' provocations," MacCormack said.

The Tamil Tigers were listed as a foreign terrorist organisation in the US and the Bush administration "viewed them as such," he added.

The US spokesman however added that the Secretary of State reiterated to the Sri Lankan minister, Washington's hope that talks with the LTTE on strengthening the ceasefire could resume "soon".

Samaraweera told an interviewer that Rice had promised to do "whatever possible" to kick start the peace process in Sri Lanka.

"War is not an option," the Lankan minister assured.

DMK commits itself to Lankan Tamil cause

The Sri Lankan Tamil papers reported on Saturday that the Dravida Munnetra Kazhagam (DMK) chief, M Karunanidhi, told the visiting Sri Lankan Tamil leader, P Chandrasekharan, that the people of Tamil Nadu would not be "silent spectators" when the Tamils of Sri Lanka were being persecuted.

Chandrasekharan is the head of the Malayaga Munntra Munnani (MMM) a radical pro-LTTE party of Indian Origin Tamil plantation workers.

Karunanidhi said that he associated himself "fully" with the resolution passed at a public meeting in Chennai on December 30, 2005, which warned New Delhi against rendering any military assistance to the "Sinhala chauvinist" Mahinda Rajapaksa government in Sri Lanka.

The DMK chief, whose party is a member of the ruling coalition in the Central government in New Delhi, assured Chandrasekharan that he would urge the Central government to put pressure on the Sri Lankan government to shed its extremist posture and take a moderate stand on the Tamil issue.

The senior-most Tamil Nadu leader further said that he approved of the recent move by all the Tamil groups in Sri Lanka, including the LTTE, to work together in view of the common challenges they were facing.

Sri Lankan President Mahinda Rajapaksa is viewed in Tamil Nadu as a Sinhala hardliner, whose government is also depending for its survival on Sinhala extremist elements who decry any political concessions to the Tamil minority.

Kilinochchi thanks TN for support

Meanwhile, the Union of Peoples' Organisations in Kilinochchi, the headquarters of the LTTE, said in a letter to the leaders of Tamil Nadu that they were very happy to see that there was so much support for them in their "Mother land".

The letter, addressed to MDMK leader Vaiko, PMK leader Dr Ramadoss, Dravida Kazhagam leader K Veeramani, and Tamil National Movement leader P Nedumaran, thanked them for lending support to the cause of a separate "Tamil Eelam".

The pro-LTTE civil society group said that the Sri Lankan government was trying to sideline the Western countries and inveigle India into the conflict to set the Tamils of Sri Lanka against the Tamils of Tamil Nadu and break the umbilical chord, which was uniting them.

No plan for defence pact with SL says Pranab

Sri Lankan papers reported on Saturday that India had given up the idea of signing a Defence Cooperation Agreement (DCA) with Sri Lanka because of pressure from the Tamil Nadu parties.

Daily Mirror quoted Indian Defence Minister Pranab Mukherji as telling the media in Chennai on Thursday: "It is the stated policy of the central government not to interfere in the affairs of other countries and the government still stands by it."


http://www.hindustantimes.com/news/7598_15...00500020009.htm

Print this item

  மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

<b>இனவெறிப்படையின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள் -மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை-</b>
Sunday, January 08 - 06:29:45

(நமது நிருபர்)
உங்களது கைகளுக்குள் கை;குண்டையோ அல்லது துப்பாக்கி யையோ திணித்து விட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்க புயலாகப் புறப்படுங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டப் பொங்கி எழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்களே! யுவதிகளே!! சற்றுச் சிந்தியுங்கள்!!! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டு ள்ள அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:-

அண்மைக் காலமாக தமிழர்கள் மீதான தாக்குதலையும், படுகொலையையும் சிங்கள இனவெறிப் படைகள் தமிழர் தாயக மெங்கும் திட்டமிட்டுச் சூட்சுமமாக நடாத்தி வருகின்றது. அப்பாவித் தமிழ் மக்களைக் கைது செய்து சுட்டுக் கொன்று விட்டு அவர்களது கைகளுக்குள் கைக்குண்டைத் திணித்துப் புலியெனக் கூறியும் வருகின்றது.

அதற்கு எடுத்துக் காட்டாக கோரகல்லி மடுவில் கடந்த 05.01.2006 இராஜகுமார்-பூவேந்தன் என்னும் இளைஞன் அந்நியப் படையான ஒரு சிங்களச் சிப்பாய் பரிசோதனை எனும் பெயரில் இறங்கி நடக்க விட இன்னுமொரு கொலை வெறிபிடித்த சிப்பாய் இவ்விளைஞனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவனின் கைக்குள் கைக்குண்டைத் திணித்துவிட்டு பற்றைக்குள் இழுத்து தூக்கியெறிந்து விட்டு புலியெனக் கதைகூறிய சம்பவம் நாம் அறிந்ததே.

அந்த வகையில் முறக் கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான், வாழைச்சேனை வந்தாறுமூலை போன்ற இடங்களில் கைது செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களாகவே காணப்படுகின்றனர்.

எனவே, எமது அன்பான இளைஞர், யுவதிகளே! நீங்கள் அனைவரும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நேரமிது. அன்னியனின் கையில் அகப்பட்டு அநியாயமாக நீங்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கலாமா? சற்றுச் சிந்தியுங்கள்!!

அப்பாவிகளான உங்களைப் பிடித்து ஈவிரக்கவின்றிச் சுட்டுக் கொன்றுவிட்டு உங்களது கைகளுக்குள் கைக்குண்டையோ அல்லது துப்பாக்கியையோ திணித்துவிட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள்.

http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=4869

Print this item

  முருகனை சந்திக்கிறார் அரித்திரா?
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:26 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

ராஜிவ் கொலை வழக்கு கைதி முருகனை சந்திக்கிறார் அரித்திரா?
வேலுõர்: ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் ஆயுள் தண்டனை கைதி நளினியை அவரது மகள் அரித்திரா நாளை (ஜன.9) சந்திப்பார் என தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவரது மனைவி நளினி வேலுõர் பெண்கள் சிறையில் உள்ளார். இவர்களின் மகள் அரித்திரா(15) இலங்கையில் வசித்து வருகிறார்.

சிறையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க அரித்திரா தமிழகம் வர முயன்றார். இலங்கை அரசு அரித்திராவுக்கு கடந்த ஓராண்டாக விஸா கொடுக்க மறுத்து வந்தது. தனது மகளுக்கு இலங்கை அரசு விஸா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலுõர் மத்திய சிறையில் கடந்த டிச.15ம் தேதி முதல் முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரித்திராவுக்கு விஸா வழங்க ஏற்பாடு செய்தது. இலங்ககை அரசும், அரித்திராவுக்கு விஸா வழங்கியது. விஸா கிடைத்த தகவலை தொடர்ந்து வேலுõர் சிறையில் உள்ள முருகன் பத்து நாள் இருந்த தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

விஸா பெற்றதால் அரித்திரா வேலுõர் சிறையில் இருக்கும் தனது பெற்றோரை எந்த நேரத்திலும் சந்திக்க வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அரித்திரா தனது பாட்டி மற்றும் தாய் மாமா பாக்கியநாதன் ஆகியோருடன் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை (ஜன.9) வேலுõர் சிறையில் இருக்கும் தனது பெற்றோரை, அரித்திரா, தனது பாட்டி மற்றும் பாக்கியநாதனுடன் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் துõக்கு தண்டனை கைதியை சந்திப்பதற்காக முன் கூட்டியே அதற்கான அனுமதியை அரித்திரா பெற்று இருப்பதாகவும் சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

Dinamalar

Print this item

  தலாய்லாமாவை அழைப்பதைத் தவிருங்கள்
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>தலாய்லாமாவை அழைப்பதைத் தவிருங்கள்: மகிந்த வேண்டுகோள்- புத்த ஜயந்தி குழு நிராகரிப்பு </b>
[ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 05:38 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கைக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை அழைப்பதைத் தவிர்க்குமாறு சிறிலங்காவின் புத்த ஜயந்தி குழுவினருக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் மகிந்தவின் தூதுவர், புத்த ஜயந்தி 2550- விழாக் குழுவினருடன் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார்.

தலாய்லாமாவை அழைப்பதன் மூலம் சீனாவுக்கும் சிறிலங்காவுக்குமான உறவு பாதிக்கும் என்று மகிந்தவின் தூதுவர் விளக்கியுள்ளார்.

ஆனால் மகிந்த ராஜபக்சவினது வேண்டுகோளை புத்த ஜயந்தி குழுவினர் நிராகரித்துள்ளனர்.

தலாய்லாமாவை அழைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். புத்த மதத்தை ஏற்றுள்ள சிறிலங்காவுக்கு திபெத்திய புத்த மதத் தலைவரின் வருகையானது பெருமை சேர்க்கக் கூடியது என்று மகிந்தவின் தூதுவருக்கு புத்த ஜயந்தி குழுவினர் பதில் அளித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவுக்கான சீன தூதரக அதிகாரி சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பின் போது தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைப்பதை மறு பரிசீலனை செய்யுமாறு சீன அரசாங்கம் சார்பில் அந்த அதிகாரி மகிந்தவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

சீன அதிகாரியுடனான சந்திப்பையடுத்து மகிந்த ராஜபக்ச தனது தூதுவரை அனுப்பியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்காவுக்கான சீனத் தூதரகப் பேச்சாளர், தலாய்லாமா விடயத்தில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. ஆகையால் புத்த ஜயந்தி குழுவினருடன்தான் இது பற்றி பேச வேண்டியுள்ளது என்றார் அவர்.

தலாய்லாமாவை அழைப்பதற்கு ஜே.வி.பி.யும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சீனா அரசாஙக்த்திற்கு எதிராக உலகப் புகழ் பெற்ற புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது என்பதால் அவரை அழைக்க ஜே.வி.பி. தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தலாய்லாமா, புத்த காயாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க உள்ளார். அந்நிகழ்வில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.


Puthinam

Print this item

  CHRONOLOGY-War and peace: S.Lanka's civil war
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:05 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>CHRONOLOGY-War and peace: S.Lanka's civil war</b>
07 Jan 2006 04:21:07 GMT

Source: Reuters


Jan 7 (Reuters) - Suspected Tamil Tiger rebels attacked and sank a small naval boat before dawn on Saturday in the latest in a series of attacks on the military that have raised fears of a return to a two-decade civil war.

Following is a chronology of key incidents in Sri Lanka's civil war, in which over 64,000 people have been killed since it erupted after an anti-Tamil riot in 1983.

1983-84

India trains and funds Tamil groups, including the Liberation Tigers of Tamil Eelam (LTTE), fighting for a separate Tamil state in the island's north and east.

1987

July - India and Sri Lanka sign pact creating regional councils to give Tamils in the northeast limited autonomy. Indian troops arrive to enforce the pact that was endorsed by the LTTE and other Tamil rebel groups. Indian presence eventually grows to more than 100,000.

Oct - The LTTE reneges on the accord and begins three years of battles that kill more than 1,000 Indian troops.

1988

Dec - Ranasinghe Premadasa is elected president after promising to send Indian troops home and begin talks with LTTE.

1990

June - Talks fail as LTTE overruns police stations in east.

1991

May - Suspected Tiger suicide bomber kills former Indian Prime Minister Rajiv Gandhi.

1993

May - Premadasa is killed by a LTTE suicide bomber.

1995

Jan - Government of President Chandrika Kumaratunga and rebels agree to stop fighting and talk.

April - Truce ends when rebels blow up two navy vessels.

1996

Jan - Tiger suicide bombers blow up central bank building, killing more than 100 and wounding about 1,400.

1997

Oct - United States declares LTTE a terrorist group. LTTE bombs World Trade Centre in Colombo, killing 15.

1998

Jan - Sri Lanka outlaws the LTTE after suicide attack on country's holiest Buddhist shrine, the Temple of the Tooth.

1999

Dec - Kumaratunga survives LTTE suicide bomb attack, loses one eye, spurring a sympathy vote analysts say helped her win reelection two days later.

2000

May - Erik Solheim, Norway's special envoy for peace, begins talks with Sri Lankan leaders.

2002

Feb - Government and LTTE sign Norwegian-brokered ceasefire, laying groundwork for direct peace talks.

Dec - Tigers give up demand for a separate state and agree to work with government toward devolution of power.

2003

April - Tigers pull out after six rounds of talks, saying not enough done to rebuild war-hit Tamil areas.

2005

Aug - Foreign Minister Lakshman Kadirgamar assassinated by suspected rebel snipers.

Nov - Former Prime Minister Mahinda Rajapakse elected president after Tigers torpedo chances of candidate seen best placed to reach peace deal by enforcing boycott.

Dec - Mine attacks by suspected Tigers kill 39 soldiers.

2006

Jan - Suspected Tigers attack and sink a small naval boat.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL130687.htm

Print this item