Yarl Forum
முருகனை சந்திக்கிறார் அரித்திரா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: முருகனை சந்திக்கிறார் அரித்திரா? (/showthread.php?tid=1559)



முருகனை சந்திக்கிறார் அரித்திரா? - Vaanampaadi - 01-08-2006

ராஜிவ் கொலை வழக்கு கைதி முருகனை சந்திக்கிறார் அரித்திரா?
வேலுõர்: ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் ஆயுள் தண்டனை கைதி நளினியை அவரது மகள் அரித்திரா நாளை (ஜன.9) சந்திப்பார் என தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவரது மனைவி நளினி வேலுõர் பெண்கள் சிறையில் உள்ளார். இவர்களின் மகள் அரித்திரா(15) இலங்கையில் வசித்து வருகிறார்.

சிறையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க அரித்திரா தமிழகம் வர முயன்றார். இலங்கை அரசு அரித்திராவுக்கு கடந்த ஓராண்டாக விஸா கொடுக்க மறுத்து வந்தது. தனது மகளுக்கு இலங்கை அரசு விஸா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலுõர் மத்திய சிறையில் கடந்த டிச.15ம் தேதி முதல் முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரித்திராவுக்கு விஸா வழங்க ஏற்பாடு செய்தது. இலங்ககை அரசும், அரித்திராவுக்கு விஸா வழங்கியது. விஸா கிடைத்த தகவலை தொடர்ந்து வேலுõர் சிறையில் உள்ள முருகன் பத்து நாள் இருந்த தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

விஸா பெற்றதால் அரித்திரா வேலுõர் சிறையில் இருக்கும் தனது பெற்றோரை எந்த நேரத்திலும் சந்திக்க வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அரித்திரா தனது பாட்டி மற்றும் தாய் மாமா பாக்கியநாதன் ஆகியோருடன் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை (ஜன.9) வேலுõர் சிறையில் இருக்கும் தனது பெற்றோரை, அரித்திரா, தனது பாட்டி மற்றும் பாக்கியநாதனுடன் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் துõக்கு தண்டனை கைதியை சந்திப்பதற்காக முன் கூட்டியே அதற்கான அனுமதியை அரித்திரா பெற்று இருப்பதாகவும் சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

Dinamalar


- Mathuran - 01-08-2006

தகவலுக்கு நன்றி வானம் பாடி.