ஊர்ப்புதினம்

ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒரு பிள்ளையை வளர்ப்பதே எமது தேசிய இலக்காகும் - சரோஜா சாவித்ரி போல்ராஜ்

2 months 1 week ago

ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒரு பிள்ளையை வளர்ப்பதே எமது தேசிய இலக்காகும் - சரோஜா சாவித்ரி போல்ராஜ்

Published By: Vishnu

08 Jan, 2026 | 01:53 AM

image

“தேசிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட ஒரு சட்டகத்தின் வழிகாட்டலில், இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தை (Early Childhood Development programme) நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.”

முன்பிள்ளைப்பருவ சிறுவர்களிடையே சமூக மற்றும் நடத்தை ரீதியான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறுவர் சுகாதார மேம்பாட்டுத் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, புதன்கிழமை (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

WhatsApp_Image_2026-01-07_at_21.27.4555.

இத்திட்டம் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

WhatsApp_Image_2026-01-07_at_21.27.4444.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட 12 அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படுகிறது.

WhatsApp_Image_2026-01-07_at_21.27.444.j

இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், ஜனவரி 10ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

WhatsApp_Image_2026-01-07_at_21.27.45.jp

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்பாடுசார் கற்றல் அணுகுமுறை (Activity-based learning) மற்றும் கற்றலுக்கு அத்தியாவசியமான கருவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் சிறுவர்களிடையே  ஒத்துணர்வு (Empathy) மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், ஒழுக்க மேம்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற பண்புகளை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

WhatsApp_Image_2026-01-07_at_21.27.43.jp

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷண, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (தூய்மையான இலங்கை) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடவிதான ஒருங்கிணைப்பு மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) திருமதி உதார திக்கும்புர மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பத்துவந்துடாவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/235481

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

2 months 1 week ago

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

07 Jan, 2026 | 05:22 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தித்வா  புயல்  தாக்கத்தால்  ஏற்பட்ட  சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை  செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில்   இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது  சர்வதேச  நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று  ஐக்கிய மக்கள்  சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07)  நடைபெற்ற  கொழும்பு துறைமுக நகர பொருளாதார  ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் தெரிவித்ததாவது,

தித்வா புயலால் ஏற்பட்ட  பாதிப்பில் இருந்து  விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச  நன்கொடையாளர்   மாநாட்டை  நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம்.

சர்வதேச  நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான  கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

சட்டத்தின் பிரகாரம் இலங்கையை  மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை.  இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.  ஏற்பட்ட  சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை  செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில்   இலங்கையை  கட்டியெழுப்பும்   நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு  அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல்  அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/235467

இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

2 months 1 week ago

இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

07 Jan, 2026 | 02:38 PM

image

"அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு,  இறப்பர் அபிவிருத்தி திணைக்களம்,  மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது

நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.

https://www.virakesari.lk/article/235438

ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்

2 months 1 week ago

Editorial   / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0     - 22

messenger sharing button

facebook sharing button

linkedin sharing button

email sharing button

image_bf9ce6cf13.jpg

எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும்,  சர்வதேச சட்டத்தையும்,ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி,  வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

 இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை(6) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச சட்டத்தில்  நாடொன்றை அபகரிப்பதற்கும்(Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime Change) அறவே இடமில்லை

லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய  பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட  சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்தபோதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும்.

ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன.

இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும்  போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

இப்போது அது வெளிப்படையாகவும் வெட்கமின்றியும் பிற நாடுகளின் வளங்களின் மீது உரிமையையும், ஆதிக்கத்தையும் கோருகிறது. ஆனால் சர்வதேச சட்டத்தின் படி, இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அவை வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானதாகும்.

இவ்வாறான முன்னேற்றங்கள், தடையின்றி தொடர அனுமதிக்கப்படுமானால்  மனிதகுலம் முழுவதற்கும் இழிவை ஏற்படுத்தும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதற்கான அடிப்படை நோக்கமான மற்றொரு உலகப் போரைத் தவிர்ப்பதைப் பாதிக்கும் வகையில், உலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்

இந்த மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் சம்பவங்களை நாம் எந்தவிதமான தயக்கமுமின்றி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு  வழியாக பரஸ்பரம் கலந்து ரையாடலும், ஒத்துழைப்புமே இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் அநீதிகளை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

சர்வதேச சமூகமானது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒருதலைப்பட்சத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவதற்காக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Tamilmirror Online || ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்

செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்

2 months 1 week ago

Editorial   / 2026 ஜனவரி 07 , பி.ப. 04:53 - 0     - 32

image_fcbd7dedbd.jpg

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு  நீதவான்  முன்னிலையில் புதன்கிழமை (07) அன்று  ஆஜர்படுத்தப்பட்டனர்.

 புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

 Tamilmirror Online || செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்

யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்

2 months 1 week ago

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பல இளைஞர்கள் இணைந்து ஒரு பாரிய படலப் பட்டத்தை (கூட்டுப் பட்டம்) நீண்ட தொடுவைக்கயிறு (வடம்) மூலம் வானில் ஏற்ற முயற்சித்தனர்.

அப்போது வீசிய பலத்த காற்றினால் பட்டத்தின் விசை அதிகரித்து, வடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடுதியாக வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

கீழிருந்த ஏனைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு, வடத்தை மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தி அந்த இளைஞரை பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

இதேவேளை, கடந்த முறைகளிலும் பட்டத்துடன் பறந்த இளைஞன் பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


Tamilmirror Online || யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்

சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

2 months 1 week ago

Editorial   / 2026 ஜனவரி 07 , பி.ப. 02:11 - 0     - 78email sharing button

image_a87fa4f463.jpg

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.

 சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால், அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால கூறினார்.

தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருவதாகவும், விசாரணையை ஓர் ஆழமான விசாரணை என்று விவரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில விவரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார்.

Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு விஜயம்!

2 months 1 week ago

07 Jan, 2026 | 02:26 PM

image

இந்திய இராணுவத் தளபதி (Chief of the Army Staff) ஜெனரல் உபேந்திர திவேதி  இலங்கைக்கு இன்று புதன்கிழமை (7) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பல மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு விஜயம்! | Virakesari.lk

இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

2 months 1 week ago

07 Jan, 2026 | 02:38 PM

image

"அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு,  இறப்பர் அபிவிருத்தி திணைக்களம்,  மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது

நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.

 இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! | Virakesari.lk

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

2 months 1 week ago

Published By: Digital Desk 3

07 Jan, 2026 | 04:30 PM

image

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது.

ஆனாலும் கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகரும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும், வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது.

அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.

அத்துடன் இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்த அவர் துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார். 

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா | Virakesari.lk

நுரை தள்ளும் காத்தான்குடி கடல் !

2 months 1 week ago

Published By: Digital Desk 3

07 Jan, 2026 | 04:57 PM

image

காத்தான்குடி கடல் இன்று புதன்கிழமை (07) காலை முதல் வித்தியாசமாக வெள்ளை நிற நுரையைத் தள்ளி வருவதை அவதானிக்க முடிகிறது.

அண்மையில் வடக்கில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்ததை போல இப்போது காத்தான்குடி கடலிலும் நுரை அலைகளூடாக வெளியேறி வருகிறது.

சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை. ஆனால் தற்போது வருகின்ற அலைகளூடாக இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக பறப்பதையும், அதிகளவிலான நுரைகள் கரையோரத்தில் தேங்கி இருப்பதையும் காணமுடிகின்றது.

பஞ்சு போன்ற மென்மையான குறித்த நுரைகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதுடன் காற்றினூடாக குறித்த நுரைகள் மேல்நோக்கி பறப்பதையும் அவதானிக்க முடிகின்றது. 

இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது,

இவ்வாறு அலைகளூடாக நுரைகள் வருவதில்லை. இதை வரலாற்றில் முதல் தடவையாக வருகிறது நாம் அறிந்தவரை பல நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு நுரை தள்ளியதாக அனுபவசாலிகள் சொல்லியதை நாம் கேட்டிருக்கிறோம் என தெரிவிக்கின்றனர்.

20260107_100135.jpg

20260107_100135.jpg

நுரை தள்ளும் காத்தான்குடி கடல் ! | Virakesari.lk

இவ்வாண்டின் முதல் நான்கு நாட்களில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2 months 1 week ago

07 Jan, 2026 | 05:36 PM

image

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 33,076 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தின் முதல் நான்கு  நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,065ஆகும்.

அத்துடன், ரஷ்யாவிலிருற்து 3,948சுற்றுலாப் பயணிகளும்,ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,914சுற்றுலாப் பயணிகளும்,  ஜெர்மனியிலிருந்து 2,862சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,790சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 1,658  சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 1,137 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த  2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,362,521 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் நான்கு நாட்களில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை! | Virakesari.lk

நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை!

2 months 1 week ago

நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை!

Jan 7, 2026 - 04:16 PM

நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (08) சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் விரித்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தற்போது பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 700 கிலோமீற்ற தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வடமேற்கு திசையில் நாட்டின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

எனவே வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை நாளை (8) முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்று (7) முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதையும் மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmk3w7ugo03neo29nmzwz46ao/documents/WEatger.pdf

https://adaderanatamil.lk/news/cmk3w7ugo03neo29nmzwz46ao

கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்!

2 months 1 week ago

கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்!

Jan 7, 2026 - 01:53 PM

கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்!

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இந்தச் செயன்முறையை விரைவாக நிறைவுசெய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது. 

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் பின்னரும், இருதரப்பு கலந்துரையாடல்கள் மூலமாகவும், நிலுவையிலுள்ள கடன்களை மறுசீரமைப்பதன் ஊடாக இலங்கைக்கு கடன் நிவாரண நடவடிக்கையொன்றை வழங்க ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 

நிதி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசின் சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) அவர்களும் கையெழுத்திட்டனர். 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ள மதிப்பிடப்பட்ட கடன் தொகை சுமார் 188 மில்லியன் யூரோக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடிவதுடன், ஜேர்மன் அரசாங்கம் நீண்ட காலமாக வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியையும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmk3r45o903n6o29nn4elbpql

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

2 months 1 week ago

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

Jan 7, 2026 - 11:41 AM

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmk3meze703mwo29nrsx9yq7y

வாகரையில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

2 months 1 week ago

வாகரையில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

புதன், 07 ஜனவரி 2026 05:25 AM

வாகரையில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு வாகரை, சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.

இதன் போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் விவசாயச்செய்கையில் ஈடுபட்டிருந்த நபரொருவர், வயலைச்சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டிய போது மர்மப்பொருட்கள் தென்படுவதைக்கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச்சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப்பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

குறித்த வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாகவும், அவர்களாலேயே இவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

https://jaffnazone.com/news/54028

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து !

2 months 1 week ago

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து !

By SRI

January 7, 2026

MediaFile%20(60).jpeg

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.

https://www.battinews.com/2026/01/blog-post_953.html

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

2 months 1 week ago

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். 

இச்சந்திப்புகளின் போது பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. 

மேலும் தனது விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, புத்தல இராணுவ யுத்தக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிலுநர்களையும் சந்திக்கவுள்ளார். 

அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmk3n265403mxo29nqx4v2a5d

எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு!

2 months 1 week ago

எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்திய சாலைப் பணிப்பாளரால் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரனும் எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆயிராகினர்.

இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட இணக்கப்பட்டின் அடிப்படையில் வழக்கு முடிவுறும் வரை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செயற்படுவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

https://www.samakalam.com/எம்-பி-அர்ச்சுனாவுக்கு-ந/

நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!

2 months 1 week ago

Julie-Chung.jpg?resize=750%2C375&ssl=1

நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!

அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியதை முடித்துக்கொண்டு, எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தூதர் ஜூலி சுங் (Julie Chung ) இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதர் ஜூலி சுங் 2022 பெப்ரவரியில் கொழும்பில் தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார்.

2023 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024 இல் அமெரிக்க அமைதிப் படை தன்னார்வலர்களின் மீள் வருகை மற்றும் ஃபுல்பிரைட் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களால் இலங்கையில் ஜூலி சுங்கின் பதவிக்காலம் குறிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

2022 ஒக்டோபரில் அதன் புதிய LEED தங்கம் சான்றளிக்கப்பட்ட வசதிக்கு தூதரகம் நகர்வதையும் அவர் மேற்பார்வையிட்டார்.

இது இலங்கையில் நிலையான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தோ-பசிபிக் எதிர்காலத்திற்கான நவீன கூட்டாண்மையை உருவாக்குவதில் அமெரிக்காவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தூதர் சுங்கின் தலைமையின் கீழ், அமெரிக்க தூதரகம் இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை முன்னெடுத்ததாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான அமெரிக்காவின் ஆதரவு மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பல அமெரிக்க விவசாயத் துறை தொகுப்புகள் மற்றும் மிக அண்மையில் 2025 டிசம்பரில் தித்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மனிதாபிமான ஆதரவை வழங்கியது ஆகியவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1458648

Checked
Wed, 03/18/2026 - 07:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr