ஊர்ப்புதினம்

2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு!

2 months 1 week ago

2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Published By: Digital Desk 1

11 Jan, 2026 | 10:03 AM

image

இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வருடம் ஏழு முக்கிய பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின்படி, இந்த ஆண்டின் முதல் பரீட்சையானது 2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும். இது 2026 ஜனவரி 11ஆம் திகதி நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர பரீட்சையின் (General Certificate Of Education Advanced Level)மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும்.

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஒகஸ்ட் 9ஆம் திகதியும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும்.

2027ஆம் ஆண்டு, முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை(GIT) 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும்.

இந்த வருடத்தின் இறுதி தேசிய பரீட்சையான 2026 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு உயர்தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையை வருட இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சைகள் நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/235715

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை

2 months 1 week ago

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை

10 Jan, 2026 | 05:55 PM

image

(எம்.நியூட்டன்)

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள்.

அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே வருகின்ற 04.02.2026 அன்றைய நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடாத்தும் பேரணியில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றோம்.

  • வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

  • தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

  • தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும்.

  • இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்த விகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

  • பயங்கரவாதத் தடைச்சட்டம்" என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்கு முறைகளை நிறுத்தி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

  • கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யப்பட வேண்டும்

  • வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி "கரிநாள்" போராட்டம் 04.02.2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெறும்.

இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புக்களும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புக்கள், வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், பட்டதாரிகள் சங்கம், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கடல்த் தொழிலாளர் சங்கங்கள், விவசாயக் கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம் - என்றனர்.

https://www.virakesari.lk/article/235698

அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்பும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது - ஜனாதிபதி

2 months 1 week ago

அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்பும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது - ஜனாதிபதி

10 Jan, 2026 | 04:03 PM

image

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாவதகம, மல்லவபிட்டிய, இப்பாகமுவ மற்றும் கணேவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் ரிதீகம, தொடம்கஸ்லந்த இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்றது. இன்த நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட  'Rebuilding Sri Lanka' திட்டத்தின்  பிரதான திட்டமாக, இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில், அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்றவர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்க இந்த இழப்பீடுகள் வழங்கப்படுகிறது.

அனர்த்தத்திற்குப் பிறகு நாடும் மக்களும் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது என்று சிலர் கூறினாலும், தற்போது சேதமடைந்த அனைத்து வீதிகளையும் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து, தொடர்பாடல், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுத்து மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக இரவும் பகலும் உழைத்த அரச அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டுவதாகவும், அந்த அனர்த்ததை எதிர்கொள்வதில் அரச பொறிமுறை நாட்டிற்கும் மக்களுக்கும் அதன் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வண, இகுருவத்தே தர்மகீர்த்தி ஸ்ரீ சோபித விமலஜோதிதான தேரர் மற்றும் ரிதீகமவைச் சேர்ந்த திரு.  திருமதி. டி.பி. அபேரத்ன ஆகியோரால் வழங்கப்பட்ட காணி மற்றும் நிதி நன்கொடைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

அண்மைய காலங்களில் ஏற்பட்ட மிகப் பாரிய பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் சந்தித்தோம். நாடு விரைவாக மீள முடியாது என்று பலர் கூறினர். ஆனால் இப்போது அனர்த்தத்தால் சேதமடைந்த அனைத்து வீதிகளையும் மீண்டும் திறந்துள்ளோம். தொடர்பாடல், மின்சாரம், நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக நமது அரசியல்வாதிகள், குறிப்பாக அரச அதிகாரிகள், கடுமையாக உழைத்தனர். இந்த நாட்டு மக்களுக்கு நமது அரச பொறிமுறை பற்றி நல்ல புரிதல் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் இந்த அனர்த்தத்தின் போது, நமது அரச அதிகாரிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வளவு அரப்பணிபபுடன் செயற்படுகிறார்கள் என்பதை நிரூபித்தனர். பல அதிகாரிகள் இரவும் பகலும் உழைத்தனர். மக்களும் அதற்காக முன்வந்தனர். அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, நாங்கள் கணிசமான அளவிற்கு மீண்டு வந்துள்ளோம்.

ஆனால் இந்தப் பேரழிவு நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நாட்டின் பொருளாதாரம் இதற்கு முன்பு ஒரு பாரிய நெருக்கடியைச் சந்தித்தது என்பதை இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். அந்த நெருக்கடியின் விளைவுகளை நாம் அனைவரும் எதிர்கொண்டோம். மின்சாரம், எரிபொருள், எரிவாயு, பால் மா போன்றவை கிடைக்கவில்லை. முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. அத்தகைய பொருளாதார நெருக்கடி இயற்கை பேரழிவால் உருவாகவில்லை.

மேலும் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி கிராமங்களில் வசிக்கும் நமது தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் தவறுகளினால் ஏற்பட்டது அல்ல. ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளிடம் பரவலாக காணப்பட்ட ஊழல், இலஞ்சம், முறைகேடு மற்றும் தவறான முடிவெடுகளை எடுத்தல் போன்றவற்றால் நமது நாட்டு மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எங்களை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தனர். மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன.  மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், ஊழல்வாதிகளையும் 

மோசடிக்காரர்களையும் தண்டித்தல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் அந்த இலக்குகளில் முக்கியமானவை ஆகும்.

அனைவரும் வாழ்வதற்கு போதுமான வருமான ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முக்கிய காரணியாக அமையும். அந்த இலக்கை நோக்கி நாம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளோம்.

அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாம் இப்படி ஒரு பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு வலிமை இருக்கிறது. அதற்காக இந்த ஆண்டு  50,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் மட்டுமே அந்த வலிமை வரும்.

நமது கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை இதை விட சிறப்பாக இருக்க வேண்டும். சரியாக உணவு உண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தலைமுறை தலைமுறையாக நல்ல வீடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டு மக்கள் இப்படி வாழக்கூடாது. 70-80 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரும் மனிதனாக வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே, இந்தப் பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும்  முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். கடந்த 76 ஆண்டுகளில் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் இருந்தால், அது இந்த அரசாங்கம்தான். அதனால்தான் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டன. இவ்வளவு பாரிய தொகை இதற்கு முன்பு ஒதுக்கப்பட்டதில்லை.

நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, முதலில் அனைவருக்கும் நல்ல வருமான ஆதாரத்தை வழங்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியையும் வழங்க வேண்டும். நம் கிராமங்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை வெல்வதற்கான ஒரே வழி கல்விதான் என்பதை நாம் அறிவோம். நம் தாய்மார்கள் மற்றும் தந்தையர் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் நமது கல்வி முறை நல்ல பலனைத் தருவதில்லை. இந்தக் கல்வி முறை நம் பெற்றோருக்கு ஒரு சுமையாக உள்ளது. இது பிள்ளைகளுக்கு துயரமாகவும்  உள்ளது.

இலங்கையில் 50க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட சுமார் 1150 பாடசாலைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை பாடசாலைகள் ஆக இருக்காது. பிள்ளைகள் இலக்கிய விழாவையோ அல்லது விளையாட்டு விழாவையோ நடத்த முடியாது. அந்தப் பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, நல்ல, அதிக பிள்ளைகளைக் கொண்ட, பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் ஒரு புதிய பாடசாலை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

கிராமப் பாடசாலையைப் பழைய பாடசாலையாகப் பாதுகாப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த இந்தக் கல்வி முறை மாற வேண்டும். அப்படியானால், நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் ஊடகங்கள் மூலம் பரப்பத் தொடங்கியுள்ளன.

இலவசக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த முறையும் அவ்வாறுதான். இது ஒரு சிறந்த கல்வி சீர்திருத்தம், நம் பிள்ளைகளைப் பராமரிக்கும் கல்வி. நம் பிள்ளைகளை உலகத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய கல்வி முறை.

மேலும், நம் பிள்ளைகள் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற வழிவகுக்கும் ஒரு கல்வி முறை. இயந்திரங்களை உருவாக்கும் அல்லது கருணை, ஆன்மீகம் அற்ற பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, மதத் தலைவர்களை அறியாத பிள்ளைகளை உருவாக்கும் கல்வி அல்ல. அத்தகைய கல்வியினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.

இந்தக் கல்வி முறை கருணை, மனப்பாங்கு மற்றும் இரக்க குணம் கொண்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு கல்வி முறையாகும். யார் என்ன சொன்னாலும், அந்தக் கல்வி சீர்திருத்தங்கள் நமது கிராமங்களில் உள்ள அப்பாவி பெற்றோரின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கும். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடடுவோம்.

நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதை உங்களுக்கு கூறுகிறோம். நாம் கல்வியை அழிக்கிறோம் என்று இங்கே உள்ள யாராவது நம்புகிறீர்களா? நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாம் தூரப்பிரதேச கிராமங்களில் பிறந்தோம். கல்வியின் மூலம் குறிப்பிட்ட இடம் நமக்குத் கிடைத்ததால் இன்று இந்தப் பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இல்லையெனில், எங்கள் குடும்பப் பின்னணி, எங்கள் கிராமப் பின்னணி எங்களை இங்கு கொண்டு வந்திருக்காது. கல்விதான் எங்களுக்கு வழி வகுத்தது. எனவே, தொலைதூர கிராமங்களில் பிறந்த நாம் முன்னேறுவதற்கு கல்வி வழி வகுத்தால், அந்தக் கல்விக்கு அழிவுகரமான பாதையை நாம் அமைக்க மாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம்.

கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க ஆகியோருடன் மாகாண மக்கள் பிரதிநிதிகள், குருநாகல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0459aeef-02b5-46f6-8b30-0cc3094348f4.jpg

bd613a41-f64f-454a-9c79-170c5cb5e901.jpg

f34e57fe-410c-4a50-92db-e610be4fc999.jpg

405dda47-b0bd-44f4-b482-eeb9a9a7b422.jpg

a35496d2-ef72-47a2-9e15-a876eea389e0.jpg

86913866-c3b5-4d36-a0c9-67408c87a1b0.jpg

https://www.virakesari.lk/article/235687

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்!

2 months 1 week ago

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்!

10 Jan, 2026 | 02:37 PM

image

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் வெள்ளிக்கிழமை  (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர்.

இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர்.

இந்த நிலைக்கு தீர்வாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  எம். எச். எம். ஆஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட கிளினிக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி  வெள்ளிக்கிழமை  (09) வைபவ ரீதியாக  ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  எம். எச். எம். அஸாத் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்ஷன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர்  எம்.எச்.எம்.ஆஸாத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

mannar_hospital__6_.jpg

mannar_hospital__2___1_.jpg

mannar_hospital__5_.jpg

https://www.virakesari.lk/article/235680

இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்! - புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

2 months 1 week ago

இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்! - புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Jan 10, 2026 - 03:37 PM

இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்! - புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார். 

"இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில் சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட "இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கை அண்மையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. 

இலங்கையின் நெருக்கடிக்குப் பின்னரான மீட்சிக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மற்றும் வறுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் கொள்கைக் கட்டமைப்பை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது. 

இந்நிகழ்வில் மேலதிக கருத்துக்களைத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் திருமதி இவெட் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்: 

"எமது நாட்டில் அத்தகையதொரு உறுதியான நிலையை உருவாக்க எம்மால் இதுவரை முடியவில்லை. எனவே, அரசாங்கம் தலையிட்டு தனியார்த் துறையையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். தற்போது நாம் ஆங்காங்கே சில விடயங்களைச் செய்கிறோம். அதனாலும் பல நல்ல விடயங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்து, எம்மால் நன்கு நிர்வகிக்கக்கூடியதாகவும், பின்த் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமைத்துக்கொண்டால், இதனை விடச் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். அரசாங்கத் தரப்பில் அந்தச் செயல்திட்டத்திற்கு இரண்டு குழுக்களை அல்லது ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது போன்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைத்துள்ளோம்."

https://adaderanatamil.lk/news/cmk855hb903r6o29n9yzzk7g0

வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு!

2 months 1 week ago

வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு!

Published By: Digital Desk 1

10 Jan, 2026 | 03:43 PM

image

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

சவுதி பிரதிநிதிகள் குழுவில் சிரேஷ்ட நிபுணர் முஹமட் அல்-மசூத், சிரேஷ்ட கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சின் செயலாளர் கபில பெரேராவும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை, டித்வா புயலின் தாக்கம் மற்றும் பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சவுதி அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

சவுதி மேம்பாட்டு நிதியம் ஏற்கனவே இலங்கை முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக இதன்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிகமாக, டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் குறிப்பாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் சவுதி பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

திட்ட செயல்படுத்தல் மற்றும் காலக்கெடு குறித்த மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/235669

காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.

2 months 1 week ago

காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.

சனி, 10 ஜனவரி 2026 06:30 AM

காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.

காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான 10ஆம் திகதி ஆகிய இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது

WhatsApp-Image-2026-01-10-at-11-39-100_1

https://jaffnazone.com/news/54120

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!

2 months 1 week ago

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!

10 Jan, 2026 | 02:05 PM

image

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு  எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  

https://web.facebook.com/profile.php?id=61567246753629

https://www.virakesari.lk/article/235661

விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்

2 months 1 week ago

விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. 

நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். 

குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர். இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். 

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர்.


https://adaderanatamil.lk/news/cmk7p3rpo03qqo29npq6qq4wu

திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது

2 months 1 week ago

திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது

2026 ஜனவரி 09 , பி.ப. 09:00

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R

image_f7da12003e.jpg

image_63ad15a9b4.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_e79bdb86a6.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_2eedf89698.jpgimage_809cf376ee.jpgimage_757af25553.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_d84d5a4efc.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_535189f9ca.jpgimage_e448f36d57.jpgimage_0b8c0bc21a.jpgimage_b633d9f365.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_610bad1f29.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_dae015aea7.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_6e9b99c0c4.jpgimage_9e6defcc4a.jpg

image_077ad79085.jpg

 https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814

இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்

2 months 1 week ago

images-5.jpg?resize=288%2C175&ssl=1

இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்.

கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2026/1459245

வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

2 months 1 week ago

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

Jan 10, 2026 - 11:07 AM

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. 

தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. 

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். 

குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

-வவுனியா தீபன்-

https://adaderanatamil.lk/news/cmk7vicnv03qwo29nud96yvrj

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா

2 months 1 week ago

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

Jan 10, 2026 - 07:00 AM

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. 

அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார்.

2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmk7moi8a03qmo29nsw0hd480

செங்கலடியில் பாரிய கொள்ளை

2 months 1 week ago

செங்கலடியில் பாரிய கொள்ளை

Jan 9, 2026 - 07:22 PM

செங்கலடியில் பாரிய கொள்ளை

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர். 

கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களைச் சேதப்படுத்தியதுடன், காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கடையிலிருந்த கண்காணிப்புப் பதிவுக்கருவி திருடப்பட்ட போதிலும், அந்தச் சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான CCTV கெமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmk6xr19803qao29noxw128gf

இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம்

2 months 1 week ago

09 Jan, 2026 | 05:26 PM

image

இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (09)  சமர்ப்பித்தனர்.

இலங்கையில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின அடையாளங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, கிறிஸ்தவ சமூகத்தின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு நோக்குகிறோம் என்பதை ஜனாதிபதிக்கு இக்கடிதம் மூலம்  விளக்கியுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் இத்தகைய விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது பரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இது சமூகத்திற்கும், குடும்பக் கட்டமைப்பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.

விவிலிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையில் இவ்வாறான போக்குகள் மனிதர்களுக்கு எவ்விதமான இடையூறுகளை விளைவிக்கும் என்பதை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள், இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், வரும் நாட்களில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது குறித்து மேலதிக விளக்கங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | Virakesari.lk

கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது!

2 months 1 week ago

09 Jan, 2026 | 05:22 PM

image

(செ.சுபதர்ஷனி)

கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததன் பின்னர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானி இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தமையை அறிந்துள்ளார்.

இந்நிலையில் சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வான்பரப்பில் பறந்ததன் பின்னர் மேற்படி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. யு.எல் 229 என்ற இந்த விமானம், வியாழக்கிழமை மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்தது. விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார். உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கமையச் செயற்பட்ட விமானி  இரவு 9.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதன்போது குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றித் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலமாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது! | Virakesari.lk

குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு

2 months 1 week ago

09 Jan, 2026 | 05:18 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் அண்மைகாலமாக   பிறப்பு வீதம்  குறைவடைந்துள்ள  நிலையில், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின்  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். 

குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்குதல் என்ற தலைப்பில் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும்.

இதனால் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு | Virakesari.lk

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி

2 months 1 week ago

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி

Jan 9, 2026 - 01:32 PM

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி

'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், 

தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 - 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது. 

2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 'எமக்கு ஒரு வீடு' திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. 

யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20 + 15 + 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். 

அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். எமது தற்போதைய வாழ்க்கை தரத்திலேயே இறக்கக் கூடாது. தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு செல்ல முற்பட வேண்டும். 

இன்று 26 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான பல அடிப்படை உரிமைகள் உள்ளன. சிறந்த வருமான வழி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, நல்லதொரு இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmk6l91pm03pto29n1m1hqmrb

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!

2 months 1 week ago

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!

Jan 9, 2026 - 10:37 AM

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. 

கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmk6ezwoc03pmo29n070u1n1n

மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.!

2 months 1 week ago

மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.!

ஜனவரி 09, 2026

AVvXsEiIJUetequr2q-Bg7bKDldxhmSP0CoPfxu3Vnty3udsoxYSI8DJwJmFq3ePVrCQ0OUCRJpqK4FqULiC1DsHuM5-dMiIg0wZRy4dRA4fLOSNY-K9rU-g-iNvQ04-HUZxtDSaYkDMMr4OtSWVO749lGJ2cziLEKzidF5iBrJGw-06Xe651fo6_wbFW_M2euOz

இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

https://www.battinatham.com/2026/01/blog-post_09.html

Checked
Wed, 03/18/2026 - 07:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr