ஊர்ப்புதினம்

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 month ago

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

11 Feb, 2026 | 03:22 PM

image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை.

தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது.

இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/238391

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை

1 month ago

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை

11 Feb, 2026 | 06:43 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுடன் அவ்வாறு அனுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் சாதகமான முறையில் ஆராய்ந்து பார்த்த பின்னர், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐராேப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்கும் ஐராேப்பிய வெளிக்கள செயற்பாட்டு சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பாவோலா பம்பலாேனி, இலங்கைக்கான ஐராேப்பிய ஒன்றியத்தின் தூதுவர் காமென் மொரேனோ, ஐராேப்பிய ஆணைக்குழுவின் அபிவிருத்தி மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான செயற்பாட்டு குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தென்னாசியா போன்ற துறைகளில் பதில் பிரதானி ஜேன் ஹொஸ்கின்ஸ், கொழும்பு ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ குழுவின் அரசியல் துறை தலைவர் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் கலிஜா அகிசேவா ஆகியோரும்

ஐரோப்பிய வெளிக்கள நடவடிக்கை சேவையின் ASIAPAC.6 பிரிவின் இலங்கைக்கான அதிகாரி ஏன் வென்ஹவுட், ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் கொழும்பு மேம்பாட்டு தலைவர் ஜொஹான் ஹெசே, ஐராேப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக அதிகாரி பீடர்ஸ் தியடோர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/238422

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

1 month ago

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

Feb 12, 2026 - 07:48 AM

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார்.

இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmlitscqb0003356nw9h8gvla

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

1 month ago

குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..!

11 Feb, 2026 | 05:18 PM

image

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் .

நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர்.

குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20260211-WA0166.jpg

IMG-20260211-WA0168.jpg

IMG-20260211-WA0173.jpg

https://www.virakesari.lk/article/238418

“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்

1 month ago

“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்

11 Feb, 2026 | 03:30 PM

image

“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல என்றும் அவர் கூறினார்.

“இந்த நாட்டில் பெரும்பான்மை பௌத்த மக்கள் வாழ்கிறார்கள். நாங்கள் சிங்கள பௌத்தர்கள். அதனால் பௌத்த தர்மத்திற்காகவும், பௌத்த கலாசாரத்திற்காகவும் நிற்பது தவறு அல்ல. அதே நேரத்தில், இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும், அனைத்து கலாசாரங்களையும் பாதுகாக்க நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்” என அவர் வலியுறுத்தினார்.

இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நாடாக இருந்தாலும், அதுவே அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் திறன் கொண்டது என்றும், அதனால் தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நான் சிங்களன், நான் பௌத்தன். அதே சமயம், பிற மொழிகள், மதங்கள், கலாசாரங்களையும் பாதுகாக்க நான் செயல்படுகிறேன். ஒருவர் தன் மதத்தையும் கலாசாரத்தையும் நம்பினால்தான் மற்றவர்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“தன் அடையாளம், தன் நாடு, தன் இனம், தன் மதம் ஆகியவற்றை மறந்து முன்னேற முடியும் என்று யாராவது நினைத்தால், அவருக்கு உண்மையான அடையாளம் இருக்காது. முதலில் ‘நான் யார்’ என்பதை ஏற்றுக்கொண்டு, அதில் நம்பிக்கை கொண்டால்தான் மற்றவர்களை பாதுகாக்க முடியும். தன் மதத்தை தைரியமாக வெளிப்படுத்தும் மனஉறுதி இல்லாதவர், பிற மதங்களை ஒருபோதும் பாதுகாக்க மாட்டார்” என்றார்.

தன்னை பௌத்தர்களுக்காகவும், நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதை இனவாதமாக கூறுவது தவறு என்றும், தான் இனவாதி அல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

அரசாங்கத்தை விமர்சித்த அவர்,

“தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். என்னை சிறையில் அடைத்து தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா, அல்லது வெளியே வைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா என்பதையும் அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த இரண்டுக்கிடையில் குழப்பத்தில் இருந்து என்னை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எது நடந்தாலும் எனக்கு அது ஒன்றுதான்” என்றார்.

மக்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்களின் தேவைகள் அடிப்படையில் தீர்மானம் எடுப்பார்கள்; JVPயின் தேவைகளின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

எரிபொருள் விலை உயர்வு, வாழ்வாதார செலவுகள் அதிகரிப்பு, கடலில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், உர மானியம் வழங்கப்படாமை, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சரை விமர்சித்த அவர்,

“டிக் டொக் பார்க்கும் வேலையை நிறுத்தி, மருத்துவர்களின் பிரச்சினைகளையும் மருந்து பற்றாக்குறையையும் கவனிக்க வேண்டும். நோயாளிகள் பெரும் அவலத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் நேரம் கழிப்பதைவிட சுகாதாரத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இறுதியாக, “இந்த நாட்டில் உண்மையான தலைவர்களின் பற்றாக்குறை உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இறுதியில் மக்கள் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இல்லையெனில், தலைமை இல்லாத பொம்மை அரசியல் உருவாகும் அபாயம் உள்ளது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238393

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

1 month ago

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

11 Feb, 2026 | 01:43 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துச் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது நாளாந்தச் சம்பளத்தை அதிகரித்து வழங்கியமைக்காகத் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள், " ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தங்களை நேரில் சந்தித்த ஒரே அரச தலைவரும் ஆவார் ” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஒரே தேசமாக ஒன்றிணைவோம்” தேசியப் பிரசாரத்தின் மத்திய மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சமூகப் பிரச்சினையாகக் கருதப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான விழிப்புணர்வு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊடாக இந்த இலக்கை அடைய ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியாவில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்காற்றிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கௌரவம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

629479572_1474736024655673_9415172027934

631239899_1474735997989009_5535941705644

631501697_1474736091322333_1036760978331

633797485_1474736177988991_5710021188484

https://www.virakesari.lk/article/238378

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர்

1 month ago

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர்

11 Feb, 2026 | 02:46 PM

image

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார்.

அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய காலத்திற்கேற்ற உதவிகளுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதமர், இயற்கை அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் மிக முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சூறாவளிக்குப் பின்னரான மீட்சிப் பணிகளின் போது, குறிப்பாக நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கு மேலும் உதவத் தயாராக இருப்பதை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பையும் இதன்போது வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பதில் பணிப்பாளர் நாயகம் செல்வி சோனா ஸ்ரேஸ்தா (Ms. Sona Shrestha), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடத் தூதுக்குழுவின் செயற்பாட்டுத் தலைவர் சோல்பொன் மம்பெடோவா (Ms. Cholpon Mambetova), பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  சமந்த பண்டார, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர்  ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். 

WhatsApp_Image_2026-02-11_at_12.10.35_PM

WhatsApp_Image_2026-02-11_at_12.10.35_PM

WhatsApp_Image_2026-02-11_at_12.10.34_PM

https://www.virakesari.lk/article/238385

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

1 month ago

New-Project-6-5.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது.

https://athavannews.com/2026/1464258

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

1 month ago

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

10 Feb, 2026 | 04:56 PM

image

(எம்.மனோசித்ரா)

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.

இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 - 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ளது.

இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனை அரசியல் மயமாக்கி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/238334

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

1 month ago

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

Feb 11, 2026 - 09:36 AM

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடைங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் வீதிகள் புனர் நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பான விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன. 

மேலும் மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. 

எதிர்வரும் காலத்தில், இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம். 

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத் தலைவர்கள், நகர சபைத் தலைவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இதன்மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம். 

இந்த அரசியல் தலைவர்களும், நிர்வாக தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

அத்துடன் மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். 

சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். 

அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. 

இந்நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. 

இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். 

இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. 

எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். 

அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும். 

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். 

இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். 

சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார். 

எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். 

இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என தெரிவித்தார்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmlhic48c0001356nml5v2w2k

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

1 month 1 week ago

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

10 Feb, 2026 | 06:45 PM

image

(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல் வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/238349

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை

1 month 1 week ago

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை

10 Feb, 2026 | 05:34 PM

image

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் வடபகுதி கம்யூனிஸ்ட் இயக்க முக்கியஸ்தர் எம்.ஏ.சி.இக்பால் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், எம். ஏ. சி. இக்பால், பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றp

நிகழ்வில்  பிரதம பேச்சாளரான சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் "இலங்கை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள்" என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுயினரையும் காண்கிறீர்கள்.

_DSC1030.JPG

_DSC0989.JPG

_DSC0998.JPG

_DSC1025.JPG

_DSC1005.JPG

_DSC0991.JPG

( படப்பிடிப்பு ; எஸ்.எம். சுரேந்திரன்) 

https://www.virakesari.lk/article/238338

SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

1 month 1 week ago

bimal-rathnayake.jpg?resize=750%2C375&ss

SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம்.

நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம்.

இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும்.

எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும்.

மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளார்.

டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம்.

ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம்.

மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம்.

திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம்.

இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் நாடாளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம்.

மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை.

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர்.

இவ்வீதியானது 550 இலட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்து கேள்வி கோரல் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.

குறித்த ஒப்பந்தத்தை 385 இலட்சம் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரர் எடுத்துள்ளார்.

இதன் மூலமாக 165 இலட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம். மொட்டுக்கட்சி அரசோ அல்லது SJP அரசாங்கமாக இருந்திருந்தால் குறித்த 165 இலட்சம் ரூபாயும் பைகளிற்குள் சென்றிருக்கும்.

இதேபோன்று வடக்கு மாகாண சபையிலும் பெரிய மாற்றமென்பதற்கு இல்லை. குறிப்பாக கடந்த மாகாண சபையிலே இரு அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் நீக்கியிருந்தார்.

இனவாதம் இல்லாத அரசினை உருவாக்குவோம் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

நீங்கள் தமிழர் என்பதால் இந்த அரசினால் அநீதி இழைக்கப்பட்டு உள்ளதா என கேட்கிறேன்.

பல வருட காலமாக இந்நாட்டிலே ஒரு பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அதனை தீர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

பெரும்பாலான பிரச்சினைகள் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என்ற ரீதியில் இல்லை.

குறிப்பாக பணம் இருந்தால் மூவினத்தவர்களும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பணம் இல்லை எனின் இது கஷ்டமாகும். வாக்குறிதி வழங்கிய விடயங்களை ஒவ்வொன்றாக அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்தோம், அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம்.

இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது.

குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படி இருக்கின்றார், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை.

நாம் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த விடயத்தில் இவர்கள் மேற்கொண்ட செயலினால் தரம் 06 இற்கான வகுப்பினை இவ்வருடம் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. இருந்த போதும் நாம் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தோம்.

நாம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசினை அமைத்துள்ளோம்.

கடந்ந நாட்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர்களை ஆசிரியர்களாக உற்வாங்குவதற்கான பிரமானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திலே படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம்.

60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்

ளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம்.

குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது.

மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது. குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது.

ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும்.

இது வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது.

இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும், அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது.

இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை.

சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது.

நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள்.

அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்ஷக்கள், ஐக்கிய மக்கள் சக்தியினரே.

குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள். இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.

இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை.

கொழும்பு, காலியிலும், பருத்தித்துறையிலும் இருந்து வலைப்பந்து விளையாட்டு போல் இனவாத விளையாட்டை விளையாடுவார்கள்.

இதன் மூலமாக அவர்களிற்கு ஒரு செய்தி உள்ளதுடன், அவர்களிடம் ஏமாந்து வாக்கும் போடப்படும்.

தெற்கில் இனவாதம் இல்லாமல், வடக்கிலும் இனவாதம் இருக்காது. ராஜபக்ஷ சரியான பசியுடன் உள்ளார். அவர்களின் உணவு இல்லை. கம்மன்பில, வீரவன்ச ஆகியோருக்கு இனவாத உணவு இல்லாமல் மெலிந்துள்ளனர்.

அமைச்சு பதவி இன்றி வாக்குகள் இன்றி தற்போது இவர்கள் இனவாதம் எங்குள்ளது என தேடுகின்றனர். இவர்களை போன்றவர்களே யாழிலும் உள்ளதுடன், அவர்களிற்கு அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டது.

அத்தோடு வடக்கில் உள்ள இவர்களும் இனவாதத்தை தேடி திரிகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இனவாத உணவை வழக்கம்போவது இல்லை.

அவர்களிற்கு இரண்டை தெரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளது.

ஒன்று இனவாதம் இல்லாமல் அப்படியே இல்லாமல் போவது. இரண்டாவது இந்த நாட்டிலே ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கத்தக்க வகையில் அவர்கள் செய்வதன் மூலம் அவர்கள் தப்பிக்கொள்வார்கள்.

தற்போது இனவாத செயற்பாட்டை தேடுபவர்கள் இரு பக்கமும் இருந்து குரைக்கின்றனர் என தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1464113

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

1 month 1 week ago

MediaFile-4-1.jpeg?resize=750%2C375&ssl=

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன.

இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://athavannews.com/2026/1464095

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

1 month 1 week ago

New-Project-22.jpg?resize=600%2C300&ssl=

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர்.

https://athavannews.com/2026/1464002

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

1 month 1 week ago

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். 

இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். 

திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். 

'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmlg78yf80006356nyj0z1hcm

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

1 month 1 week ago

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

Feb 10, 2026 - 10:53 AM

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. 

ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். 

பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. 

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

1 month 1 week ago

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

Published By: Vishnu

10 Feb, 2026 | 02:49 AM

image

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார்.

அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238270

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

1 month 1 week ago

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

https://adaderanatamil.lk/news/cmlg7sx2h0002356nx3h9i10t

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

1 month 1 week ago

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

Published By: Vishnu

10 Feb, 2026 | 02:45 AM

image

(நா.தனுஜா)

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர்.

அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.

இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது.

இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்குப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது.

அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238269

Checked
Wed, 03/18/2026 - 01:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr