ஊர்ப்புதினம்

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

1 month 1 week ago

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

Feb 8, 2026 - 12:27 PM

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பதாரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில், வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் 253 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 135 சதவீதத்தாலும், மத்திய மாகாணத்தில் 116 சதவீதத்தாலும், ஊவா மாகாணத்தில் 108 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

47 வருடங்களாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்விப் புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் அவசர அனர்த்த உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்கள் இப்போது தமது பிரதேச செயலகங்கள் ஊடாக இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlddx3v70010356npt038g61

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் ராஜபக்ஷர்கள் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

1 month 1 week ago

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷர்கள் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

08 Feb, 2026 | 12:36 PM

image

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா? வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர கால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் சொல்வதற்கு முரணாக செயற்படுகிறார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது.

அமைச்சரின் பங்களாவில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது, விசாரணைகள் தினசரி இடம்பெறுவதால் சாட்சியாளர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் முன்னிலையாகுவதற்கு கடினமாக உள்ளது, அதேபோல் பிரதான சூத்திரதாரி இல்லாமல் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்கள்.

ஏதேனும் வழக்குத் தொடர்பில் நாளாந்தம் விசாரணைகளை முன்னெடுப்பதில் தவறேதும் உள்ளதா என்பதை நீதியமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என சபையில் இருந்த நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் நாளாந்தம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தான் விதிமுறை,சட்டத்தரணிகள் பகிரங்க நீதிமன்றில் முன்னிலையாகுவார்கள். அமைச்சரின் பங்களா என்று குறிப்பிட்டாலும் அதுவும் அரச சொத்துதான்.

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். இதற்கு புதிய நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிக்க முடியாது. அரச கட்டடங்கள், பங்களாக்களையே பயன்படுத்த முடியும். இன்னும் ஐந்து,ஆறு நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும்.

வழக்கு விசாரணைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்படும்.எதிர்க்கட்சியின் உறுப்பினர் நீதிக்காகவும், உண்மைக்காகவும் பேசவில்லை. குற்றவாளிகளுக்காகவே முன்னிலையாகியிருந்தார். பேசினார் என்றே எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது.வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது.

அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா?

வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது. யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார் என்பதையும் அறிவார்கள்.

அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சானி அபேசேகர, ரவி செனவிரத்ன மற்றும் ஏனைய விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகவே எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.

இவர்கள் படுகொலையாளிகளின் பைகளில் இருந்துக்கொண்டு பேசுகிறார்கள்.குண்டுத்தாக்குதல் படுகொலையாளிகளுக்காக முன்னிலையாகும் கீழ் நிலைக்கு எதிர்க்கட்சியினர் விழுந்துள்ளார்கள். இவர்களின் நிலைமை கவலைக்குரியது என்றார்.

https://www.virakesari.lk/article/238144

கடன்சுமை காரணமாக யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

1 month 1 week ago

யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

08 Feb, 2026 | 10:05 AM

image

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை (06)  வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/238121

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

1 month 1 week ago

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

Published By: Digital Desk 1

08 Feb, 2026 | 09:20 AM

image

தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238117

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

1 month 1 week ago

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

Published By: Digital Desk 1

07 Feb, 2026 | 01:45 PM

image

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது.

'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது.

மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் 'INS GHARIAL' போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2026-02-07_at_13.32.18.jp

WhatsApp_Image_2026-02-07_at_13.32.19__1

WhatsApp_Image_2026-02-07_at_13.32.19.jp

WhatsApp_Image_2026-02-07_at_13.32.20.jp

https://www.virakesari.lk/article/238075

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

1 month 1 week ago

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்

தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது.

அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர்  கட்டியமைத்தார்? 

மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது.

மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. 

அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/54835

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

1 month 1 week ago

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

sumanthiran-721x470.webp

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது.

கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது.

கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது.

இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://akkinikkunchu.com/358888/

தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!

1 month 1 week ago

தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. 

இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளதாகவும், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmlbz0812000k356np5y299h9

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!

1 month 1 week ago

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!

adminFebruary 7, 2026

01-2.jpg?fit=1170%2C780&ssl=1

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும்.

இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள்.

இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும்.

பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன

இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://globaltamilnews.net/2026/228569/

அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 1 week ago

அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Vishnu

07 Feb, 2026 | 05:53 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க  அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற  முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற  பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

அவசரகால சட்டம் தொடர்பான  அரசாங்கத்தின்  தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது.

இப்போது கூட தையிட்டியில் நாங்கள்  போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும்  கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும்  கிழக்கும்  பாதிக்கப்பட்டுள்ளன.

பேரிடர்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும்,  இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன.

கடந்தகால  ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம்,  இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா?

இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல்  ஹேய்சர்  விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது.

இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238037

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

1 month 1 week ago

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Feb 6, 2026 - 09:30 PM

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlb2mzj0000g356nm8c6opol

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

1 month 1 week ago

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

Published By: Digital Desk 3

06 Feb, 2026 | 05:19 PM

image

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/237980

அம்மணிகளே உங்களை நம்பித்தான் எதிர்கால இ.போ.ச இயங்கும் போல! பார்த்து கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

1 month 1 week ago

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

Feb 6, 2026 - 04:10 PM

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையில், அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தெரிவிக்கையில்:

"குறித்த ஆசிரியர் வழமையாகவே மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி எனது பெற்றோரை இழுத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியவர், எனது கன்னம் மற்றும் செவிப்பகுதிகளில் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் எனது தலையைப் பிடித்து மேசையில் மோதியதுடன், முழங்கையால் முதுகுப் பகுதியிலும் பலமாகத் தாக்கினார். வலியின் உச்சக்கட்டத்தால் எனக்குத் தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே நிலையிலேயே நான் இருந்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியர் முன்னரும் பல மாணவர்களை இவ்வாறே மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நானுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

https://adaderanatamil.lk/news/cmlar78ol000a356ngjyrq2g4

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

1 month 1 week ago

articles2FJ0dad6HCQMmnhM1QWxvv.jpg?resiz

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாங்கள் துறைமுகங்களை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் இப்போது அது நல்ல விடயம், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதேவேளை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும், போதைப்பொருள் இருந்த கொள்கலன்களும் வெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அவை தொடர்பில் உங்களிடம் விசாரணை இல்லை. எங்களைத் தான் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கின்றீர்கள். நீங்கள் பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தை இணைத்து அரசியல் வழிவாங்கல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தால் அதிகாரிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் என்றாலும் அது அவ்வாறு இல்லை. நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை.

அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது.

சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார்.

https://athavannews.com/2026/1463495

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்

1 month 1 week ago

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்

February 5, 2026

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.ilakku.org
No image previewதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமை...
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின்

மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!

1 month 1 week ago

மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!

Vhg பிப்ரவரி 05, 2026

AVvXsEiSBT-2Tq6vxSKoYc68wacZNgzIDodb9Gm-4FUZZfzTejqFFfXnrDtRzRaRo-c5hRTwtOIVE1YXHpX-9p9iOrPjwM43li-Wka_oPwEV91ViXktS0qJRHf_g8x9wTovrXxmrcgkF0LRrPj-H-YCeDd7KTuktJ5y1dS2EGL7MdlN2UGuY5XlK7zA_G-HDspQd

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று, குறித்த நபர் அவரது வயலில் இருந்தபோது குழுவாகச் சென்ற நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் உள்ளனர்.

இதில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.02.2026)ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (05.02.2026)ஆம் திகதி  உயிரிழந்தவரின் சடலத்தை சுமந்தவாறு அவரது உறவினர்கள் மரணித்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சத்தில் உதவாத அயலவர்கள்

 சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வந்தாறுமூலை பொது மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

https://www.battinatham.com/2026/02/blog-post_170.html

நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை

1 month 1 week ago

நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை

06 Feb, 2026 | 12:55 PM

image

இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும். இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும்.

முக்கியமாக 'பழம் தின்னும் வௌவால்கள்' (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும்.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை. தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும்.

https://www.virakesari.lk/article/237974

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

1 month 1 week ago

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

adminFebruary 6, 2026

Global-1.png?fit=940%2C788&ssl=1

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.  பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார்.

சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா்  அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது.

கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://globaltamilnews.net/2026/228485/

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

1 month 1 week ago

1-1.jpeg?resize=750%2C375&ssl=1

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2026/1463439

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

1 month 1 week ago

Court.jpg?resize=750%2C375&ssl=1

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது அதை நிறைவேற்றுவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனவரியில் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அனுமதிக்கும் தற்போதைய சட்ட விதிகளை நீக்குவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது. நீண்டகாலமாக பொதுமக்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்த இந்த சலுகையை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1463455

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr