புதிய பதிவுகள்2

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

3 months 2 weeks ago
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்: பானிபூரி விற்ற சிறுவன் கிரிக்கெட்டில் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் மூர்க்கமாக விளையாடி தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய 290 பந்துகளில் 7 சிக்சர்கள், 19 பவுண்டரிகளை விளாசி 209 ரன்களை சேர்த்தார். தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் என அடித்து விளாசினார். இந்த இரட்டை சதத்தின் மூலம், டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இந்திய பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார். முன்னதாக யஷஸ்வி தனது முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த ஜூலை 2023இல் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 21 வயதே ஆன யஷஸ்வி புபேந்திர குமார் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். அந்தப் போட்டியில் அவர் 171 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல் ஐ.பி.எல். தொடரிலும் தனது சரவெடியான ஆட்டம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்தார். ஐபிஎல் போட்டியில் வளர்ந்து வரும் வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மிக உயர்தர ஆட்டங்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்படியாக பல சவால்களைக் கடந்து கிரிக்கெட்டில் சாதித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், களத்துக்கு உள்ளே மட்டுமல்ல, களத்துக்கு வெளியேயும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். எத்தகைய சவால்கள் வந்தாலும் சளைக்காமல் தனது இலக்கை அவர் அடைந்துள்ளார். யார் இந்த ஜெய்ஸ்வால்? பட மூலாதாரம்,GETTY IMAGES உத்தர பிரதேசத்தில் உள்ள பதோஹியை சேர்ந்தவர் ஜெய்ஸ்வால். மும்பைக்கு வந்து, மைதானத்தில் கூடாரம் போட்டு வாழ்ந்து, பானிபூரி விற்று தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த புகழ்பெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் யஷஸ்வி ஆட்டமிழக்காமல் 319 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 2019ல் ஜார்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில், ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை தனது 17 வயதில் அவர் பெற்றார். இதேபோல், 2020ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் யஷஸ்வி 400 ரன்களை குவித்திருந்தார். தொடர் நாயகன் வருதும் அவர் வசமானது. இதற்கான பலன் அதே ஆண்டில் கிடைத்தது. ஐபிஎல் தொடரில் தங்கள் அணியில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்துக் கொண்டது. 2022 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ஜெய்ஸ்வாலை 4 கோடி ரூபாய் சம்பளத்துடன் அணியில் தக்க வைத்துக் கொண்டது. முதல் தர கிரிக்கெட்டில் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஜெய்ஸ்வால் அமோல் மஜும்தார் மற்றும் ரஸ்ஸி மோடியின் சாதனையை சமன் செய்தார். ஜெய்ஸ்வால் 7 போட்டிகளில் 91 சராசரியுடன் இந்த மைல்கல்லை கடந்துள்ளார். ரஞ்சி கோப்பையின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் சதம் அடித்துள்ள அவர், துலீப் டிராபியின் காலிறுதியிலும் இரட்டை சதம் அடித்தார். திரும்பிப் பார்க்க வைத்த ஐபிஎல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் முதல் மூன்று வீரர்களில் ஜெய்ஸ்வாலின் பெயரும் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடரின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவித்தார். தொடக்க ஆட்டக்காரரான அவர், முதல் பந்தில் இருந்தே தனது தாக்குதலை தொடங்கி எதிரணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் ஜெய்ஸ்வாலின் பங்கு உள்ளது, ஆனால், இந்த ஆண்டு அவரது ஆட்டம் `வெறித்தனம்` ஆக இருந்தது. 1 சதம், 5 அரைசதம் உட்பட 625 ரன்களை அவர் குவித்திருந்தார். அவரது சராசரி 48.08 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 164ஆகவும் இருந்தது. மொத்தமாக 82 பவுண்டரிகள், 26 சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் விளாசி இருந்தார். இந்திய அணிக்காக விளையாட வீரர்களில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் வசம் உள்ளது. வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையையும் அவர் படைத்துள்ளார். முதன்முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு 2020ல் கிடைத்தது. அதன் பின்னர் அவரது ஆட்டத்திறன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை. 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்திருந்தார். அதன்பின், 2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்களையும், 2022 தொடரில் 10 போட்டிகளில் 258 ரன்களையும் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு சீசன்களிலும் , ஜெய்ஸ்வாலின் தொடக்கம் நன்றாகவே இருந்தது, ஆனால் விக்கெட்களை விரைவாக இழந்துவிடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், 2023 ஐபிஎல் தொடர் அவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றாலும் தனிஆளாக இருந்து 124 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். அவரது ஆட்டத்தை பார்த்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாயடைத்து போனார். ஆட்டம் முடிந்த பின்னர் தனது பேச்சில் ரோகித் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஜெய்ஸ்வால் இன்று மிகவும் மறக்கமுடியாத ஆட்டத்தை விளையாடினார். போட்டி முழுவதும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்கிருந்து இந்த பலம் வந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். பல மணி நேரத்தை ஜிம்மில் செலவிடுவதாக அவர் கூறினார். இதே ஃபார்மை அவர் தொடர வேண்டும். இது அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது, ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் நல்லது’’ என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பானிபூரி விற்று, பட்டினியாக தூங்கி சாதித்தவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளத்தின் கூற்றுபடி, "மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கூடாரம் போன்று ஜெய்ஸ்வால் மூன்று ஆண்டுகள் தங்கியுள்ளார். தொடக்கத்தில் பால் கடை ஒன்றில் அவர் தூங்கியுள்ளார். அதன்பின்னர் தூங்க இடம் இல்லாமல் கூடாரத்தில் தூங்கியுள்ளார். அப்போது அவருக்கு 11 வயதுதான். அவரின் கனவு முழுவதும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது மட்டுமே” ஜெய்ஸ்வாலின் தந்தை பதோஹியில் சிறியளவில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதை வைத்து தனது இரண்டு குழந்தைகளையும் பார்த்துகொள்வது என்பது அவருக்கு கடினமாக இருந்தது. அதோடு, ஜெய்ஸ்வாலும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பினார். எனவே, அவர் மும்பை செல்ல முடிவெடுத்தப் போது அவருடைய தந்தை குறுக்கே நிற்கவில்லை. மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால், வோர்லியில் உள்ள தனது உறவினர் சந்தோஷிடம் சென்றார். ஆனால், அவரது வீடு பெரிதாக இல்லாததால், ஜெய்ஸ்வால் அங்கு தங்க வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பால் கடையில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அதையும் பின்னர் விட வேண்டியதாயிற்று. எனவே அவர் முஸ்லிம் யுனைடெட் கிளப்பின் உரிமையாளர்களிடம் கேட்டு கூடாரத்தில் தங்க அனுமதி பெற்றார். ஆசாத் மைதானத்தில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் பானிபூரி விற்கும் வேலையை ஜெய்ஸ்வால் செய்து வந்தார். இதனால் அவருக்கு நல்ல பணம் கிடைத்தது. கிரிக்கெட் விளையாட பொருட்களை வாங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்கும் இந்த பணத்தை அவர் பயன்படுத்தினார். 11 வயதாக இருக்கும்போதே, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. இந்த கனவு அவருக்கு உந்துதலை கொடுத்தது. இதற்கிடையே, மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளர் சதீஷ் சமந்த், ஜெய்ஸ்வாலை உன்னிப்பாக கவனித்துவந்தார். ஜெய்ஸ்வாலுக்கு ஜ்வாலா சிங் நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவரின் வழிகாட்டுதலின் கீழ், ஜெய்ஸ்வால் தனது இலக்கை நோக்கி ஒரு வலுவான நகர்வை மேற்கொண்டார். மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் ஜெய்ஸ்வாலுக்கு வெறும் 17 வயதுதான். பட மூலாதாரம்,SOCIAL MEDIA தோனிக்கு வணக்கம் வைத்த ஜெய்ஸ்வால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஜெய்ஸ்வால் மகேந்திர சிங் தோனியை நோக்கி கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. அப்போது, சென்னை கேப்டன் தோனியும், ராஜய்ஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் டாஸ் போடுவதற்காக சென்றனர். டாஸ் போட்டு இருவரும் திரும்பியபோது, தோனியை பார்த்த ஜெய்ஸ்வால் அவரை கையெடுத்து கும்பிட்டார். தோனி அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்துவிட்டு சென்றார். ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த ரஹானே துலீப் டிராபி இறுதிப் போட்டியில் மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒரு தனித்துவமான நடவடிக்கையை கொண்டு வந்தார், நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதும், நீங்கள் களத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்பதை காட்டும் விதமாக இது இருந்தது. ரஹானே தனது அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார். கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் மேற்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியின் 5வது நாள் ஆட்டம் நடைபெற்றுகொண்டிருந்தது. எப்படியும் வென்று கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆசையில் மேற்கு மண்டலம் அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து மேற்கு மண்டல அணியை வலிமைப் பெற செய்த ஜெய்ஸ்வாலுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்தை கற்றுக் கொடுத்த முயன்றார் கேப்டன் அஜிங்க்யா ரஹானே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது தென் மண்டலம் 154/6 என்று இருந்தது. 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு அவர்கள் முன் இருந்தது. மேற்கு மண்டலத்தின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவை. பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு மண்டலத்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தனுஷ் கோட்டியன் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் பந்து வீசினர். இந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால், தென் மண்டல பேட்ஸ்மேன்களிடம் ஏதோ சொன்னது தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகார் அளித்தனர். மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுடன் நடுவர்கள் விவாதித்தனர். அமைதியாக இருக்குமாறு ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே அறிவுறுத்தினார். அவரும் ஏற்றுக்கொண்டார். சிறிது நேரத்தில் பேட்ஸ்மேனுக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரஹானே தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேற சொன்னார் ரஹானே. அவரும் கேப்டடன உத்தரவையடுத்து களத்தில் இருந்து வெளியேறினார். சில ஓவர்களுக்கு பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் களத்துக்குள் வந்தார். இந்த முறை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கிற்கு பதிலாக தூரத்தில் அவரை ஃபில்டிங் செய்ய வைத்தார் ரஹானே. வீரரை விட ஆட்டம் பெரியது என்பதையும், விளையாடும்போது ஒருவர் வரம்புகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் அன்று ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே புரிய வைத்தார். https://www.bbc.com/tamil/articles/ce5n403j275o

சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா!

3 months 2 weeks ago
சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை கொத்தணிக் கதைக் களங்களாகப் பல்கிப் பெருகிய பெருமையும் நடிக மணி வைரமுத்து அவர்களையே சாரும். இவ்வகை அரங்காடல், கதையாடல் என்பன வைரமுத்து அவர்களை இலங்கையின் தேசிய மகா கலைஞனாகவும் இனங்காட்டியது .பேராதனைப் பல்கலைகழகத்தில் சிங்கள நாடகப் பேராசான் சரத்சந்திரா முன்னிலையில் அரிச்சந்திரா மயான காண்டம் மேடையேற்றப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றுக் கொண்டது . யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1984 இல் நடிகமணி யவர்களை அழைத்து கைலாசபதி கலையரங்கில் மதிப்பளித்தும் 2004 இல் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது . இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் இவரது நாடகத்தை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியும் ஒலிப்பேழையாகவும் வெளியீடு செய்துள்ளது. லண்டன் BBC நிறுவனமும் இவரது நாடகத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நடிக மணியின் இசை நாடகத்தை புதிய பாய்ச்சலுக்கான பல ஆலோசனைகள் , உதவிகளையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறு பெருமை பெற்றுள்ள கலைஞனுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவரது 100 ஆவது அகவை வருடத்தை நினைவு கூரவும் சுவிஸ் நாட்டின் தலைநகரில் ஐரோப்பிய மதிப்பளிப்புக் கழக நிறுவுனர் வைகுந்தன் அவர்களில் தலைமையில் (28 .O1.2024 ) நிகழ்வு இடம்பெற்றது . இந்த நிகழ்வில் நடிக மணியவர்களின் பிள்ளைகள் உறவுகள் மற்றும் பலரும் பங்கு பற்றி நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர். பல் துறைக் கலைஞன் மயிலை இந்திரன் குழுவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் , கலைவளரி இரமணன் குழுவினரின் பண்டாரவன்னியன் நாடகம் என்பன மேடையேற்றப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டன. நடிகமணி நினைவுப் பேருரையை நானும் (க.அருந்தவராஜா) வழங்கியிருந்தேன் . யாழ் பல்கலைக்கழகத்தில் 1984 இல் நடிக மணியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் போது அங்கு ஒரு மாணவனாக இருந்து அந்த நிகழ்வை கண்டு களித்தவன் என்ற வகையில் இன்று 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரது மறைவுக்குப்பின் சுவிஸ் நாட்டில் அவருக்கான நினைவுரையை வழங்கியிருக்கிறேன். காலங்கள் தான் ஓடுகின்றனவே தவிர நினைவுகள் காலைவரை கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கின்றன. காலத்தால் மறக்கமுடியாத மகா கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்து இலங்கையின் இசை நாடக வரலாற்றில் மாபெரும் சொத்து .காலங்கள் கடந்தும் பேசப்படுவார் . அருந்தவராஜா .க ஜெனீவா. https://akkinikkunchu.com/?p=267459

76வது சுதந்திர தினம் கிழக்கில்

3 months 2 weeks ago
மட்டக்களப்பு மாநகரம் - சிங்கள மயமாக காட்சி Vhg பிப்ரவரி 03, 2024 இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் நாளை (04.02.2024 )திகதி மாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இலங்கையின் சுதந்திர தினம் https://www.battinatham.com/2024/02/blog-post_40.html

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்! - பேரணிக்கு அழைக்கின்றது யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

3 months 2 weeks ago
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு! kugenFebruary 3, 2024 இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய திருமலை நடராஜன் அவர்கள், 1957.02.04 ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை. தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரசுக்கும் அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும் போராடவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள எமது மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே என்பதை மீள வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுநிற்கிறேன். என்றுள்ளது. https://www.battinews.com/2024/02/blog-post_28.html

தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை

3 months 2 weeks ago
தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை லக்ஸ்மன் தமிழ்த் தேசியம் பலப்படுதலொன்றே காலத்தின் தேவை என்பதனை உணர்ந்துகொள்ள தலைப்படுதலை முக்கியப்படுத்தல் நடைபெறுவதாகயில்லை. தனிப்பட்ட கோப தாபங்களையும், வெப்புசாரங்களையும் காண்பிப்பதற்கான தருணம் இதுவல்லவென்பதை யாரும் உணரவுமில்லை. தமிழர்களின் தேசியம் என்பது உணர்வு ரீதியானதே! இந்த உணர்வினை சரியாகக் கைக்கொள்ளவும் கையாளவும் தெரியாதவர்களாகவும், அதனைப்பற்றி புரிந்து கொள்ள முயலாதவர்களாகவும் தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஜதார்த்தத்தினை உணராது நடந்து கொள்வதுதான் தற்போது தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முனைபவர்களின் நிலை. தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். அந்தத் தேர்வானது அக்கட்சிக்குரியதே. ஆனாலும், தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை இதிலிருந்து தொடங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்த்தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களிடம் பொதுவாக இருக்கிறது. இருந்தாலும் அது நடைபெறுமா என்பதுதான் புரியாத புதிர். இதற்கிடையில் பொதுச்செயலாளர் தெரிவு அமளிதுமளியில் முடிந்திருக்கிறது என்பதுடன் முற்றுப்பெறவுமில்லை. அந்த வகையில் இந்த எதிர்பார்ப்பைச் சீர் குலைக்கும் வகையில் இத் தெரிவு நிகழ்ந்துவிடக்கூடாது. தமிழ் மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதனை ஒவ்வொரு கட்சியிலுமிருக்கின்ற ஒரு சிலரே தீர்மானிக்கின்ற நிலைமைக்கப்பால் இம்முறை பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவு நடைபெற்றிருக்கின்றமையானது பாராட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், சுயநலன்களுக்கப்பால் மக்களுக்கான அரசியல் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை என்கிற விடயம் முதன்மைபெறுகிறது. அண்மைய காலங்களாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் எழுந்தாலும் அதனை மேவும் வகையில் போராட்ட ஆயுத இயக்கங்களாக இருந்து அரசியல் நீரோட்டத்துக்குள் இணைந்தவர்களையும் விமர்சிக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது. இது காலத்தின் தேவையற்றது என்பதும், இது மேலும் தமிழ் தேசிய அரசியலில் முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதும் மறக்கப்பட்டதனால் நடைபெறுவதாகவே உணர முடிகிறது. அதே நேரத்தில் அரசியல் தெளிவின்மை காரணமாகவும் இருக்கலாம். தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அனைவரும் ஒரே நோக்கத்திற்காகவே போராடத் தொடங்கியிருந்தனர். சகோதர இயக்க எதிர்ப்பு, படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பலனாக உருவான பல விரோதச் செயல்கள் பலராலும் மறக்கப்பட முடியாதவை என்பதனை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்தகால செயற்பாடுகளை, தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு வந்ததன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அது காலம் கடந்த முடிவு என்றாலும், அது நிகழ்ந்தது ஒரு மன நிலை மாற்றமே. இதனை அறியாதவர்கள் இன்றைய காலங்களில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவது வியப்பானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களுக்கான அரசியல் செயற்பாட்டுக்கானதாக ஆக்கி ஆரம்பத்தில் உதய சூரியனையே தேர்ந்தெடுத்திருந்தார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்திருந்தன. உதய சூரியன் சின்னத்தில் எற்பட்ட பிரச்சினையால், 1976களிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்த வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அதனை தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இது பெரும் முரண்பாடாக தொடர்ந்துகொண்டேஇருந்தது. இறுதியில் கடந்த வருடம் அக்கட்சி தனிவழி சென்றது. ஆனாலும் அவர்கள் இணைய வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வராமலில்லை. விடுதலைப் புலிகள் தங்களது கடந்தகால தவறுகளை மறந்து ஏனைய போராட்ட இயக்கங்களையும் இணைத்தே தமிழர்களின் தேசிய அரசியல் நடைபெறவேண்டும் என்ற நிலைக்கு வருவதற்கிடையில் பல பெரும் இழப்புக்களைத் தமிழர்கள் சந்தித்திருந்தார்கள். தேர்தல்கள் வரவிருக்கின்ற வேளையிலும் அதே போன்ற பல இழப்புகளைச் சந்தித்த பின்னர்தான் தமிழரசுக்கட்சி தன்நிலை உணரும் என்றால் அது ஒரு ஆபத்தான முடிவாகவே இருக்கும் என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டும். யுத்தம் உக்கிரமடைந்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதனையடுத்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினை தமிழரசுக்கட்சி சாதகமாக்கிக் கொண்டு தன்னுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தினை நடைமுறைப்படுத்தியதனால் உருவாகியிருக்கின்ற இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி வெளியேறியது. அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறியது. அவ்வாறு பார்த்தால் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஒற்றுமை தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய நடைமுறை காரணமாக குலைந்து போனது என்றே கொள்ளலாம். பின்னர் 2023இல் தமிழரசுக்கட்சி தனி வழி தேடிச் சென்றது. தமிழர்களின் அரசியல் சின்னமாக வீடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும் தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாக கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது. தமிழர்களின் அரசியலை பல கட்சிகளாக தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு சிதைந்து கொண்டிருக்கிறது. இது தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலாலேயே நிகழ்கிறது என்பதே உண்மை. தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது இதனை மறந்து தங்களுடைய வெப்புசார, கோபதாப மநோநிலைகளை காண்பித்து வருபவர்கள் சற்றே அமைதி கொள்வதே தமிழ்த் தேசியத்துக்காற்றும் பணியாக அமையும். இல்லையேல் தேவையற்ற விளைவுகளை தமிழர்கள் எதிர்கொள்ளவும் அனுபவிக்கவும் நேரலாம். இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ஒற்றுமை குறித்து விடயம் கவனத்திற்கு வருகிறது. தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ்., ஈரோஸ் என ஆயுத அரசியலுடனும் தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதற்கு தமிழர்களிடமில்லாததான ஒற்றுமையே காரணம். அதனைக் கட்டியெழுப்புவது முக்கியமானதாகும். தமிழரசுக்கட்சியின் விலகலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சின்னமற்றதானது. ஆந்த நிலையில் ஏற்கனவே பதிவிலிருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அறிவிக்கப்பட்டது. இதில். ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன தற்போதுள்ளன. ஈழத் தமிழர்களின் வரலாற்றி;ல் சின்னங்கள் மாறுவதும், கூட்டணிகள் அமைக்கப்படுவதும் குலைவதும், பிரிவதும் சேர்வதும் சர்வ சாதாரணமானது என்ற வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உருவாகியிருப்பதாகவே கொள்ளமுடியும். ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள்; எட்டிவிட்டது. இருந்தாலும் இதுவரை இனப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவில்லை. இது ஒரு காலம் கடத்தும் செயற்பாடாகவே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் மேலும் பிளவுகள் தேவையற்றதே. அத்தோடு உருவாகிவரும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்கள் வெறுக்கும், வேறு அரசியல்களுக்குள் சாய்கின்ற நிலை ஆபத்தானது என்பதனையும் தமிழர்களின் அரசியல் தரப்பினர் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே தமிழ்த் தேசியம் பலப்படுத்தப்படுத்தல் ஒன்றே காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இனியேனும் தமிழ்த் தேசிய அரசியலானது தமிழ்த் தேசியத்துக்கானது என்ற உணர்வு ஏற்பட்டு ஒற்றுமை உருவாகட்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியத்துக்கான-ஒற்றுமை/91-332548

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைத்து, அழித்துவிட உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் அழைப்பிற்கு வந்தவர்கள் ஓரளவிற்கு நடுநிலைமையுடன் நடந்துகொணடதுடன் அதற்குத் தேவையானளவு முக்கியத்துவத்தையும் தமது ஊடகங்களில் வழங்கியிருந்தனர். ஆனால், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய, ஆனால் பலம்வாய்ந்த குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுடனான தனிநாட்டுக்கான கோரிக்கையின் அஸ்த்திவாரத்தினை முற்றாகத் தவிடுபொடியாக்கிவிட மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் தாம் எடுத்துவரும் இரகசிய நடவடிக்கைகளை தேவநாயகத்தின் இந்த முயற்சி முறியடித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆகவே தமது இரகசியத் திட்டத்தினை துரிதப்படுத்தும் வேலைகளை அவர்கள் ஆரம்பித்தனர். மகாவலி அமைச்சில் செயற்பட்டு வந்த அதிதீவிர சிங்கள அமைப்பினால் இந்த இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இக்குழுவிற்கு திட்டமிடல்ப் பிரிவின் இயக்குநர் டி.எச். கருணாதிலக்கவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்கவின் செயலாளர் ஹேமப்பிரியவும் தலைமை தாங்கினர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சில் பணியாற்றிய ஏனைய உயர் அதிகாரிகள், சர்வதேச பிரசித்தி பெற்ற சிங்களக் கல்விமான்கள் ஆகியோரும் இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கிவந்தனர். தமது திட்டத்தினை செயற்படுத்த மலிங்க ஹேர்மன் குணரட்ணவை இக்குழுவினர் அமர்த்திக்கொண்டனர். அமைச்சகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எனும் பதவியும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது வீட்டில் என்னுடன் பேசிய ஹேர்மன் குணரட்ண, தமது இரகசியத் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்க முழு ஆதரவினையும் வழங்கியதாகக் கூறினார். ஜனாதிபதி ஜெயாரும் இத்திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கியிருந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனது நம்பிக்கைக்கான காரணங்களாக பின்வரும் இரு விடயங்களை அவர் முன்வைத்தார். "முதலாவது காரணம், எமது இரகசியத் திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய மூன்று முக்கிய மனிதர்களும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டவர்கள்". அவர் குறிப்பிட்ட அந்த மூன்று முக்கிய நபர்கள், ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தன, ஜெயார் தனது இன்னொரு மகனாக நடத்திவந்த அமைச்சர் காமிணி திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயாரினால் நியமிக்கப்பட்ட பண்டிதரட்ண ஆகியோராகும். இவர்கள் மூவரும் ஜெயாரிடமிருந்து எந்த விடயத்தையும் மறைப்பதில்லை என்று அறியப்பட்டவர்கள். ஹேர்மன் குணரட்ண கூறிய இரண்டாவது காரணம், மாதுரு ஓயா சிங்கள ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு ஜெயார் அறிவித்த அதே நாளான ஐப்பசி 6 ஆம் திகதி தனது வீட்டில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் தன்னிடம் கேள்விகேட்ட தாஸ‌ முதலாலிக்குத் காமிணி திசாநாயக்க வழங்கிய பதிலாகும். இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம். காமிணியிடம் பேசிய தாஸ முதலாளி, "மகாவலி அமைச்சின் இரகசியத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா?" என்று வினவியிருந்தார். அதற்குப் பதிலளித்த காமிணி, "ஜனாதிபதிக்கு இத்திட்டம் தெரியும் என்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்த ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பெருமளவு பணத்தினை அவர் வழங்க முன்வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். பண்டிதரட்ண 1983 ஆம் ஆண்டின் கறுப்பு யூலை இனக்கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒன்றில், பண்டிதரட்ண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இரகசியத் திட்டத்திற்கான மூலம் விதைக்கப்பட்டது. அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளுக்கு இத்திட்டம் தெரியாதவகையில் மிகவும் இரகசியமான முறையில் தீட்டப்பட்டது. இரகசியத் திட்டம் இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது, தமீழத்திற்கான அடிப்படையினை முற்றாக அழிப்பது. இதனை அடைவதற்கு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பினையும், ஒருமைப்பாட்டினையும் உடைக்கும் நோக்கில், தமிழர் தாயகத்தின் மாதுரு ஓயா, யன் ஓயா, மல்வத்து ஓயா ஆகிய நதிகளை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது. மாதுரு ஓயா விவசாயக் குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையே இருந்த நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்படும். யன் ஓயாக் குடியேற்றத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு கடுமையாகச் சிதைக்கப்படும். மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலத்தொடர்பை அறுத்தெறியும் மாதுரு ஓயா குடியேற்றத் திட்டம் திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினைச் சிதைக்கும் யன் ஓயாக் குடியேற்றம் புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் மல்வத்து ஓயா குடியேற்றம் இரகசியத் திட்டத்தின் முதலாவது கட்டம் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை விலத்தியே அமுல்ப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. "இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்க" எனும் தலைப்பில் தான் எழுதிய புத்தகம் தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் 1990 ஆம் ஆண்டு ஆவணி 26 ஆம் திகதி, இந்த இரகசியத் திட்டத்தினை முன்னெடுத்தவர் என்கிற வகையில் ஹேர்மன் ஒரு கட்டுரையினை வரைந்திருந்தார். என்னுடன் பேசுகையில் இத்திட்டத்தின் எல்லைகள் குறித்தும் குறிப்பிட்டார் ஹேர்மன். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் 50,000 சிங்களவர்களைத் தாம் குடியேற்றத் திட்டமிட்டதாகவும், இதன்மூலம் இப்பகுதிகளின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றிவிடுவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார். குணரட்ணவுடன் பேசும்போது அவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தனது திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும், அதற்காக அவர் நேர்மையாக உழைத்த விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டார் ஹேர்மன். "தமிழர்களுக்கென்று தனியான நாட்டினை உருவாக்கவே போராடுகிறோம்" என்று நான் பதிலளித்தேன். "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினையே நாம் அழித்துவிட்டால், அதன்பிறகு தமிழீழத்திற்காக நீங்கள் போராட முடியாது, இல்லையா?" என்று அவர் கேட்டார். பின்னர் சலித்துக்கொண்டே, "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினைச் சிதையுங்கள் என்று அவர்களே எங்களிடம் கூறிவிட்டு, பின்னர் சர்வதேசத்திற்குக் காட்ட எம்மை சிறையில் அடைத்து தம்மை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். குள்ளநரிக் கூட்டம்" என்று அவர் மேலும் கூறினார். குணரட்ண உடபட 40 மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் அரசால் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாத பொலீஸ் தடுப்புக்காவல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது நீணட தொடர்ச்சியான விசாரணைகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன. தொண்டைமானின் சுயசரிதையினை நான் எழுதியது குறித்து முன்னர் கூறியிருந்தேன். இதுதொடர்பான மேலதிகத் தகவல்களை சேகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் என்கிற ரீதியில், ஹேர்மன் குணரட்ணவைச் சந்திக்க தொண்டைமான் என்னை அனுப்பியிருந்தார். நான் அவரைச் சந்திக்க வருவது குறித்து தொண்டைமானின் செயலாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே குணரட்ணவிடம் தெரிவித்திருந்தமையினால், என்னுடன் ஒளிவுமறைவின்றி அவர் பேசினார். தான் எவ்வாறு கைதுசெய்யப்பட்டேன், தொண்டைமான் தன்னை எவ்வாறு பிணையில் விடுவித்தார் என்பது குறித்த பல தகவல்களை குணரட்ண என்னிடம் கூறினார். "காலை 4 மணியிருக்கும், எனது வீட்டுக் கதவினை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்துபார்த்தால் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்க அங்கு நின்றிருந்தார். எனது வீட்டைச் சுற்றிப் பல பொலீஸார் நிற்பதும் எனக்குத் தெரிந்தது. வீட்டில் எனது புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாதுரு ஓயா இரகசியத் திட்டத்திற்காகவே நான் கைதுசெய்யப்படுவதாக ரொனி என்னிடம் தெரிவித்தார். நான் உடனேயே, இக்கைது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று ரொனியிடம் கேட்டேன். உங்களைக் கைது செய்யச் சொல்லி என்னை அனுப்பியதே ஜனாதிபதிதான் என்று ரொனி பதிலளித்தார். அப்படியானால், காமிணி திசாநாயக்கவுக்கு இக்கைது பற்றித் தெரியுமா என்று நான் மீண்டும் கேட்டேன். நீங்கள் என்னுடன் பொலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், இவைகுறித்து விரிவாக அங்கே பேசலாம் என்று அவர் பதிலளித்தார். என்னைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் தள்ளி ஏற்றிய விதத்தினைக் கண்ட எனது புதல்விகள் நடுங்கிப் போயினர்" என்று குணரட்ண என்னிடம் கூறினார். பொலீஸ் நிலையத்திலிருந்து காமிணி திசாநாயக்கவையும், பண்டிதரட்னவையும் தொடர்புகொள்ள தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக குணரட்ண கூறினார். ஆனால், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிந்த நாட்களில் தனக்குப் பரீட்சயமான தொண்டைமானுடன் தன்னால் தொடர்புகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "எனது அவல நிலையினை அவரிடம் கூறினேன். எனது புதல்விகள் குறித்த எனது கவலையினைனை அவரிடம் கூறினேன். அதன்பின் உடனடியாக என்னைப் பிணையில் விடுவித்தார்கள். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலேயே ஜெயார் என்னை பிணையில் செல்ல அனுமதித்ததாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். நான் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படியிருந்தபோதும் அவர் எனக்கு உதவினார். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவர் கூறினார். இரகசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம், முதலாவது கட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இனப்பரம்பலினைப் பாவித்து இலங்கைக்கான புதிய மாகாண வரைபடத்தினை உருவாக்குவது. பின்வரும் நான்கு மாகாணங்களின் எல்லைகளை மீள உருவாக்குவது இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாகும். அம்மாகாணங்களாவன, வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியனவவாகும். இந்த நான்கு மாகாணங்களினதும் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஐந்தாவது மாகாணம் ஒன்றினை உருவாக்குவதே இதன் நோக்கம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய மாகாணம், வட கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மாவட்டங்களாவன, 1. வடக்கு மாகாணம் ‍: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு 2. வட மத்திய மாகாணம் ‍: வவுனியா, அநுராதபுரம், வலி ஓய (மணலாறு, முல்லைத்தீவு மாவட்டத்தை சிதைப்பதன் மூலம் புதிய மாவட்டமான வலி ஓய முல்லைத்தீவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்). 3. வட மேற்கு மாகாணம் ‍: மன்னார், புத்தளம், குருநாகலை 4. வட கிழக்கு மாகாணம் ‍: பொலொன்னறுவை, திருகோணமலை 5. கிழக்கு மாகாணம் ‍: மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைகளை இவ்வாறு மீள வரைவதன் மூலம் வட மாகாணம் மட்டுமே தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக விளங்கும். தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எஞ்சிய மாவட்டங்கள் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாக மாற்றப்படும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் தென் எல்லையாக மாங்குளம் அமைந்திருக்கும். குணரட்ண தனது இரகசியத் திட்டத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார். தனது புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அரச மேல் மட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைக்காது போனமையே என்று அவர் நம்புகிறார். நதிகளை அண்டி உருவாக்கப்படும் புதிய மாவட்ட எல்லைகள்

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
உங்கள் பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி ரஞ்சித். வன்னிக்கு நீங்கள் போன இடங்களை எல்லாம் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து பல வருடங்கள் ஆகின்றது. 2022 இல் கிளிநொச்சி, ஆனையிறவு ஊடாகப் போனபோது மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது. எங்கள் பெருமிதங்களையும் சேர்த்து எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்! ஆனாலும் ஊருக்குப் போய் முதியவர்களாக எஞ்சி இருக்கும் சொந்தங்களைக் கண்டு பேசியபோதும், பதின்ம வயதில் கிடைத்த நண்பர்களுடன் மனம்விட்டு உரையாடியபோதும் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவில்லை!

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை. எனது பதின்ம வயதுகளின்போது சோளங்கன் ரீமுக்கு விளையாடிய பிரபலமானவர்களை நன்கு தெரியும். ஒருவர் மிக நெருங்கிய நண்பன். 91 இலிருந்து இப்போதும் இலண்டனில் கோடை காலம் என்றால் ஒவ்வொரு ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுகின்றான்.! அவ்வளவு கிரிக்கெட் பைத்தியம்!

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
திம்புலாகலை பிக்கு - காவி உடையில் இனவாதப் பேய் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 8 ஆம் திகதி காலை என்னைத் தொடர்புகொண்ட உள்ளகத்துறை அமைச்சர் தேவநாயகத்தின் ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் என்னை அவசர விடயம் ஒன்றிற்காகச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அமைச்சரை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். தனது தொகுதியான கல்க்குடாவில் சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்துவிட்டதாகவும் இதுதொடர்பான தனது அதிருப்தியை தான் ஜெயாரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இச்செய்தியை டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் வெளியிடவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக்கொண்டார். கல்க்குடா அவரது வேண்டுகோள் எனக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியது. இதில் எனக்கிருக்கும் சிக்கலை அவருக்கு விளங்கப்படுத்தினேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை அரசுக்குச் சொந்தமான ஒரு ஊடகம் என்பதனையும், ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அது இயங்கிவருவதையும் அவருக்குப் புரியப்படுத்தினேன். பத்திரிக்கை ஆசிரியர் இவ்வாறான செய்தியொன்றினைப் பிரசுரிக்க விரும்பப்போவதில்லை என்பதுடன், அவ்வாறு பிரசுரிக்கப்படுமிடத்து அது ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதோடு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துவிடும். ஆகவே, அமைச்சர் தனது நிலைப்பாட்டினை பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினூடாக வெளிப்படுத்த முடியும் என்றும், அதனை என்னால் செய்தியாக்க முடியும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். அன்று மாலையே தேவநாயகம் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினை நடத்தினார். தனது தொகுதிற்குட்பட்ட வடமுனைப் பகுதியில் நடைபெற்றுவரும் முக்கியமான விடயம் தொடர்பாக நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவே பத்திரிக்கையாளர்களை தான் அழைத்ததாக அவர் குறிப்பிட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயகக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கமைய மாதுரு ஓயா பகுதியில் தமிழ் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விவசாயக் காணிகளில் தெற்கிலிருந்து வரும் சிங்கள விவசாயிகளை திம்புலாகல தேரை என்றழைக்கப்படும் சீலாலங்கார தேரை நீதிக்குப் புறம்பான முறையில் அடாத்தாகக் குடியமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டார். மாதுரு ஓயா குடியேற்றம் புரட்டாதி முதலாம் திகதி 700 சிங்களவர்களைத் தெற்கிலிருந்து அழைத்துவந்த திமுபுலாகலை தேரை, அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து விடுத்த வேண்டுகோளினை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் கூறினார் தேவநாயகம். 1974 ஆம் ஆண்டு இதே பகுதியில் அடாத்தாகச் சிங்களவர்கள் குடியேற முயன்றபோது பொலீஸாரின் உதவியுடன் அவர்களை அங்கிருந்து அரசாங்க அதிபரினால் அப்புறப்படுத்த முடிந்தபோதும், இப்போது பொலீஸார் அரசாங்க‌ அதிபருக்கு உதவ மறுப்பதோடு சிங்களக் குடியேற்றத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதாகக் கூறினார். நான் இந்த விடயம் பற்றி மேலும் தேடியபோது, அடாத்தான‌ இச்சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் இருப்பது தேவநாயகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதே மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்க என்பதுடன், அவரின் ஆசீருடன் இயங்கும் திம்புலாகலை தேரை அரசாங்க அதிபரை உதாசீனம் செய்துவருவதுடன், பொலீஸாரும் அமைச்சர் காமிணியின் சொற்படி நடப்பதையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. வடமுனைப் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாகக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பது முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பொது மேலாளர் ஹேர்மன் குணரட்ன என்பதும் எனக்குத் தெரிந்தது. மலையகத்தில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறைகளையடுத்து பல மலையகத் தமிழர்கள் வடமுனைப்பகுதியில் அரச காணிகளில் குடியேறிவருவதாக வேண்டுமென்றே வதந்தி ஒன்று பரப்பப்பட்டது. இதனை மகாவலி அபிருத்தியமைச்சர் காமிணி திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார் ஹேர்மன் குணரட்ன. இதனையடுத்து அப்பகுதிகளில் உடனடியாக சிங்களவர்களைக் குடியேற்றுமாறு காமிணி அவருக்கு உத்தரவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திம்புலாகலை தேரையினைத் தொடர்புகொண்ட ஹேர்மன், சிங்களவர்களை அப்பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கோரியதுடன், இக்குடியேற்றத்திற்கான அனைத்து உதவிகளையும் மகாவலி அபிவிருத்திச் சபையே வழங்கும் என்றும் உறுதியளித்தார். அமைச்சரினதும், அமைச்சின் மேலாளரினதும் உத்தரவாதத்தினையடுத்தே திம்புலாகலை தேரை சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்திருந்தார். மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து வடமுனையில் இடம்பெற்றுவந்த அடாத்தான சிங்களக் குடியேற்றம் தொடர்பான கடிதம் ஒன்றினை உள்ளக அமைச்சர் என்கிற ரீதியிலும், அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியிலும் அமைச்சர் தேவநாயகத்திற்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய கடிதத்தின் முதற்பகுதி, இப்பகுதியில் இடம்பெற்றுவரும் குடியேற்றங்கள் தொடர்பான சரித்திரத்தை விளக்கியிருந்தது. கடிதத்தின் இப்பகுதியை பத்திரிக்கையாளர்களுக்குப் படித்துக் காட்டிய அமைச்சர் தேவநாயகம், "இப்பகுதியில் மலையகத் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் குடியேறிவருவதாக திம்புலாகலை தேரை பரப்பி வரும் பொய்யான பிரச்சாரத்திற்கு இதன்மூலம் பதில் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மேலும் கள்ளிச்சேனை, ஊற்றுச்சேனை ஆகியன பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் என்றும் அக்கடிதத்தில் விரிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கமைய 1958 ஆம் ஆண்டிலேயே 685 ஏக்கர்கள் உயர் நிலக் காணிகளும், வயற்காணிகளும் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன் இப்பகுதிகளுக்கான நீர்ப்பாசணத் திட்டமும் நடைமுறையில் இருந்தது என்கிற விடயங்களும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. தொடர்ந்து பேசிய தேவநாயகம் நீர்ப்பாசண அமைச்சுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இத்திட்டத்தின் கீழ் 10 மலையகத் தமிழ்க் குடும்பங்களைத் தான் குடியமர்த்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 1977 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையடுத்து இன்னும் 48 மலையகத் தமிழ்க் குடும்பங்களை மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினூடாக இப்பகுதியில் தான் குடியமர்த்தியதாக அவர் கூறினார். மேலும், இப்பகுதியில் மீதமாயிருந்த காணிகளை இதேபகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த தமிழ் விவசாயிகளுக்குத் தான் வழங்கியதாகவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் மாதுரு ஓயா நீர்ப்பாசணத் திட்டத்தின் வலதுபுற அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்பட்ட‌ இன்னும் 600 ஏக்கர் காணிகளை 200 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் சுவீகரித்துக்கொண்டதாகவும், ஆனால் 1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்க கொண்டுவந்த காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் இக்காணிகள் இவர்களுக்கே சொந்தமாவதாகவும் கூறினார். மலிங்க ஹேர்மன் குணரட்ன‌ (இடது) ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மலையகத் தமிழர்களை கிழக்கு மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறுமாறு தூண்டிவருகின்றனர் என்பது அபத்தமான பொய்ப்பிரச்சாரம் என்றும் தேவநாயகம் கூறினார். மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டத்தில் தமிழர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே திம்புலாகல தேரை சிங்களவர்களை அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றிவருவதாக தேவநாயகம் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் தெரிவித்தார். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த காணிகளிலேயே சிங்களவர்களை பெளத்த பிக்கு தற்போது குடியமர்த்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். "தமிழருக்குச் சொந்தமான காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் குடியேற முயற்சிக்குமிடத்து, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இப்பகுதியில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நான் இதுகுறித்து ஜெனாதிபதிக்குத் தெரிவித்திருப்பதுடன், இன்னொரு இனக்கலவரம் ஏற்படுவதைத் தடுக்குமாறும் கோரியிருக்கிறேன். அவர் சரியான முடிவினை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
Checked
Tue, 05/21/2024 - 04:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed