புதிய பதிவுகள்2

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 2 weeks ago
அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையைதான் கூறி இருக்கிறார். நான் பேசி பழகிய அரசியல்வாதிகளில் உண்மையாகவே சித்தார்த்தன் ஒரு நேர்மையான நம்பகத்தன்மை உள்ள அரசிஅயல்வாதி என்று சொல்லுவேன். மற்றவர்களை போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராக தெரியவில்லை. இங்குள்ள அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் சுயநல வாதிகள். படம், பதவி, பணத்துக்காக எதையுமே செய்வார்கள். எனவே ஒருவருடைய கட்சியில் சிலர் செய்த தவறுக்காக இவரை இப்படி சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

3 months 2 weeks ago
மேலே குறிப்பிடட கூடடணியில் சங்கிகள் யாருமில்லை. சங்கிகள் இல்லாத கூடடணியை நீங்கள் கூறியது போல அரசு ஆதரிக்கிறது போல தெரிகிறது. அதாவது இந்திய இல்லாத கூடடணி.

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

3 months 2 weeks ago
நான் நினைக்கிறேன் அரசியல்செய்வதென்றால் இந்த உல்டா தமிழ் அரசியலை விட்டிவிட்டு தேசிய அரசியல் செய்வது சுமந்திரனுக்கு இலகுவாக இருக்குமென்று. எல்லாரையும்விட மேலான தகுதியும் உண்டு. எப்படி இருந்த போதும் இந்த பம்மாத்து தமிழ் அரசியலால் எதுவும் நடக்க போவதுமில்லை, சிங்களவன் கிராம சபைக்கு மேலாக எதுவும் தரப்போவதுமில்லை . எனவே சுமந்திரன் தேசிய அரசியலில் இணைந்து மக்களுக்கு மேலான சேவை செய்யலாம் என்பது எனது கருத்து. அது எல்லா இந மக்களின் உரிமையையும் பாதுகாப்பதாகவும் இருக்கும்.

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

3 months 2 weeks ago
உங்கள் விளக்கத்துக்கு நன்றி @island . இருந்தாலும் இன்னும் நம்மில் சிலர் அரசியயல் வாதிகளாகட்டும் , பொது சனங்களாகட்டும் தமிழ் ஈழம் கிடைக்கும் என்றல்லோவோ பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
நீங்கள் யாழின் அட்மின்தானே உங்களுக்கே தெரியும் என் கடந்தகால யாழின் நடவடிக்கைகள் இன்றுதான் செய்திகளையே இணைக்க தொடங்கினேன் முன்பு ஒன்றிரண்டு இன்று முதல் கொலம்பஸ் விட்டாயிற்று லீவு என்று இங்கு வந்தால் கண்ணுக்கு பட்டதை கேள்வி கேட்டது பிழை யாகி போட்டுது வேறு என்ன கிண்டிலை கொண்டாடவேண்டியதுதான் இந்த லீவிலும் நன்றி வணக்கம் .

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
இன்றுதான் இந்தக் கருத்தை பார்க்க முடிந்தது. ஏனெனில் எல்லாக் கருத்துகளையும் உடனடியாக வாசிக்க தக்களவு நேரம் கிடைப்பது இல்லை. அத்துடன் எழுதிய இத்தகைய கருத்து என்று / எப்ப எழுதினார் என்பதை வைத்து அதன் தரத்தையும் அதன் குரூரத்தையும் எடை போடத் தேவையில்லை. இத்தகைய கருத்தை எழுதியமைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பதிலாக, எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கேள்வி கேட்பதில் இருந்து உங்கள் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. நன்றி

செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்

3 months 2 weeks ago
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் ஆழமான இடமாகக் கருதப்படும் ஏடன் வளைகுடாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் சந்தேகிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 'மெர்லின் லுவாண்டா' எனப்படும் எண்ணெய்க் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணியாளர்கள் இந்தியா, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக பிரித்தானியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்போது 22 இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பல் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் உள்ள தங்கள் தளங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இது அமைந்தது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/marlin-luanda-attacked-by-houthi-1706551918

36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி

3 months 2 weeks ago
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர் மேலும், திங்கட்கிழமை முழுவதும் எதுவும் சாப்பிடாமலும் வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை அவர் விரதம் இருப்பதாகவும் நண்பர்கள் கூறியுள்ளனர். கொழும்பில் பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி உடல் கட்டுக்கோப்பு இந்நிலையில் ரிஷி சுனக் விரத காலத்தில் தண்ணீர் அல்லது பால் சேர்க்காத காபி மட்டுமே அருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உதவுவதால் அவ்வப்போது அவர் விரதம் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 2022 இல்,ஒரு நேர்காணலில்"நான் இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன், அதனால் பெரும்பாலான நாட்களில் என்னிடம் காலை உணவு எதுவும் இல்லை.” என ரிஷி சுனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/british-prime-minister-rishi-fasted-for-36-hours-1706555343

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

3 months 2 weeks ago
சும்மா உதார் விடாதிங்க சும்மின் பெறுமதியான ஒரு கருத்தை இங்கு சொல்லுங்க பார்ப்பம் ? முக்கிய கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு மறுத்த சுமந்திரன் ஐசிசி நீதி விசாரணை பொறிமுறை போன்றவற்றில், குறிப்பிட்ட சரத்தில் நாங்கள் கொண்டு வந்த விடயங்களில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனை அவர் வெளிப்படையாக கூறினார் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி தெரிவித்தார். எல்லோரும் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. மிக முக்கியான அந்த கடிதத்தில் அவர் கையெழுத்திடவில்லை. அவரைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த எம்.பிக்கள், விக்னேஷ்வரன் ஐயா உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/sumandran-refused-to-sign-the-letter-1706533224

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
நாகரீகமான சமூகம் ஒன்றில் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இவ்வாறு குரூரமாகவும் அருவருப்பாகவும் கருத்து பகிர்கின்ற ஒருவர் மீது நடவடிக்கைகள் எடுக்காது விடின், அது சமூகத்துக்கே இழுக்கு.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 2 weeks ago
கவர்ச்சி, நீளம் , அகலம் மட்டும் இருந்தால் போதாது....அதை எப்படி பயன் படுத்த வேணும் என சொல்லிக் கொடுக்க ஒரு ஆண்சிங்கம் தேவை...... அது மட்டுமில்லாமல் பெண்கள் எப்படி சிலிர்த்துக்கொண்டு வரணும் என்பதையும் அந்த ஆண்சிங்கம் செய்து காட்டியுள்ளது. 😎

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

3 months 2 weeks ago
பல வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இதைப் பற்றி யாழில் அல்லது முகநூலில் உரையாடிய நினைவு ஆனால் ஒரு பதிவையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது: https://www.newyorker.com/magazine/2015/05/04/the-apologizer

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
உண்மை நிலவரங்கள் தெரியாமலும் நேர்மையில்லாமலும் மேற்குலகின் ஊது குழல்களின் செய்திகளை நம்பி கருத்தெழுதுபவர்கள் எந்த முகத்துடன் இங்கு வந்து கருத்து, எப்படி எழுதுவார்கள்? 😎 விளையாட்ட விளையாட்டாய் பார்க்கணும் தம்பி என சொல்லிய பல திரிகள் இங்கு உண்டு 🤣

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

3 months 2 weeks ago
மனித உரிமைகள்,நீதி,நியாயம்,நேர்மை,யதார்த்தம் எதுவுமே இல்லாமல் உனக்கொரு நீதி எனக்கொரு நீதி எனும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கொடுமை என்னவென்றால் இங்கும் அதே கொள்கை.
Checked
Fri, 05/17/2024 - 12:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed