புதிய பதிவுகள்2

இந்திய விமானப்படையின் 2016-ல் மாயமான விமானம்: பாகங்கள் கண்டுபிடிப்பு

3 months 2 weeks ago
2016-ல் மாயமான விமானம்: சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிப்பு 13 JAN, 2024 | 09:37 AM கடந்த 2016-ம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது மாயமானது. அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் டிராக்கிங் பார்வையில் இருந்து மறைந்தது. இந்த சூழலில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சொனார்’ டெக்னிக் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன. கடந்த 2016, ஜூலை 22-ம் தேதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. An-32 விமானம்: பல்வேறு உலக நாடுகள் தங்களது ராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/173834

ஜனாதிபதி சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 11:50 AM உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார். இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 12 நாட்கள் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/173851

இலங்கை: அம்பாறை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்; 1,70,000 மக்கள் பாதிப்பு

3 months 2 weeks ago
படக்குறிப்பு, இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று 12ஆம் தேதி விடுத்த அறிக்கையின்படி, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மொத்தம் 53,641 குடும்பங்களைச் சேர்ந்த 178,312 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 50,996 குடும்பங்களைச் சேர்ந்த 169,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு தொகையினர் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் ஆரம்பித்துள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்குகின்றனர். அதேவேளை சமூக ஆர்வலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத்தலங்களின் நிருவாகிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளும் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளைச் சமைத்து வழங்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் சீற்றமான பருவநிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று (12) காலை வரையில் 2401 குடும்பங்களைச் சேர்ந்த 7173 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 15,792 குடும்பங்களைச் சேர்ந்த 50,777 நபர்கள் தமது இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து - உறவினர்கள் மற்றும் அண்டை வீடுகளில் தங்கியுள்ளனர் என, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டமையாலும், அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முற்றாகத் திறந்து விடப்பட்டுள்ள சேனநாயக்க குளக் கதவுகள் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்க குளம் (சேனநாயக்க சமுத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது) 1949ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவால் நிர்மாணிக்கப்பட்டது. நெல் விவசாயத்துக்கான நீரைத் தேக்கி வைத்து வழங்குவதற்காக இந்தக் குளம் உருவாக்கப்பட்டது. அம்பாறையில் இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ள போதும், அதன் சில பகுதிகள் மொனராகல, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் உள்ளன. சேனநாயக்க குளத்தில் 05 கதவுகள் உள்ளன. அதில் 110 அடி உயரம் வரையில் நீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனாலும் 104 அடி உயரத்தை எச்சரிக்கை மட்டமாக (Warning Level) குறிப்பிடுகின்றனர். அதாவது குளத்தின் 104 அடி உயரத்துக்கு நீர் நிரம்பும்போது, குளத்தின் கதவுகளைத் தேவைக்கேற்ற வகையில் திறந்து விடுவார்கள். ஆனால் தற்போது குளத்தில் 111.8 அடி உயரம் வரை - நீர் நிரம்பியிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் நேற்று (12) பிபிசி தமிழிடம் தெரித்தார். ”இதன் காரணமாக குளம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. குளத்தின் அனைத்துக் கதவுகளும் தொடர்ச்சியாகத் திறந்து விடப்பட்டுள்ளன, மொனராகல மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளமும் 3 நாட்களில் சேனநாயக்க குளத்தை 50 அடியளவுக்கு நிரப்பியது. இதனால் அசாதாரண சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. குளத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள போதும், பிற பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் - குளத்தில் தொடர்ச்சியாகச் சேர்வதால், குளத்தின் நீர் மட்டம் குறையாமல் உள்ளது,” என றியாஸ் விவரித்தார். இவ்வாறு சேனநாயக்க குளத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து விடும்போது, 1 விநாடினுக்கு 6,000 கன அடி (6000 cubic feet per second) நீர் வெளியேறுவதாகவும் அவர் கூறினார். 6000 கன அடி நீர் என்பது 169901.1 லிட்டருக்கு சமனானது. சேனநாயக்க குளத்திலிருந்து வெளியேறும் நீர் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியை அடைவதற்கு 9 மணித்தியலங்கள் எடுக்கும் எனவும் றியாஸ் குறிப்பிடுகின்றார். சுமார் 13 வருடங்களுக்குப் பின்னர் சேனநாயக்க குளத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இவ்வாறான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியை அடுத்துப் பெய்த மழையால் – இதுபோன்றதொரு வெள்ளம் ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக - சேனநாயக்க குளத்தின் அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டமையாலும் இவ்வாறானதொரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது,” என பிரதிப் பணிப்பாளர் றியாஸ் குறிப்பிட்டார். சேனநாயக்க குளத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் கன அடி நீரை சாதாரணமாகத் தேக்கி வைக்க முடியும் என்றும், ஆனால் தற்போது குளத்தில் 8 லட்சத்து 1500 ஏக்கர் கன அடி நீர் உள்ளதாகவும் அவர் கூறினார். பாதிப்புகள் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்திலிருந்து பெருமளவான நீர் திறந்து விடப்பட்டுள்ளமையாலும் அம்பாறை மாவட்டத்தின் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோன்று ஆறுகள், நீர்ப்பாசன (Irrigation) பகுதிகள் மற்றும் விவசாய இடங்களின் ஒதுக்குப் பகுதிகளை (Reservation area) ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களும் வசிப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் றியாஸ் குறிப்பிடுகின்றார். ”நெல் பயிர்களும் கணிசமான அளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து - மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்தவர்களும், தற்போதைய வெள்ளத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் றியாஸ் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அனுமதியின்றி நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்களில்கூட - வெள்ளம் புகுந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். வெள்ளத்தில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் - களியோடை ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, அந்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகின்றமையால் பல்கலைக்கழககத்தின் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 3,000 மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமீஸ் அபூக்கர் தெரிவித்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த 4 மாணவர்கள் தொடர்ச்சியாக பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர்களின் சொந்த இடத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால், அவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். ”நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தின் பாதுகப்பற்ற பகுதிகளாக அடையாளம் கண்டிருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றோம். ஆனால், பொறியியல் பீட கட்டடத்தின் கீழ்பகுதியில் எதிர்பாராத விதமாக வெள்ளம் புகுந்தமையால், அங்கிருந்த சில உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழப்புகள் குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்,” எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார். இந்த நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அறிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், எதிர்வரும் 16ஆம் தேதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் எனக் கூறியிருந்தது. ஆனால், நேற்று (12) காலை எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, எதிர்வரும் 22ஆம் தேதி பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கூறினார். ஆறு பீடங்களைக் கொண்ட தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் 8100 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். படக்குறிப்பு, இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், சில நாட்களில் வடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமை எப்போது வழமைக்குத் திரும்பும்? அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்து, நிலைமை எப்போது வழமைக்குத் திரும்பும் என, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் றியாஸிடம் பிபிசி தமிழ் வினவியது. இதற்கு அவர் பதிலளிக்கையில் இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், சில நாட்களில் வடிந்துவிடும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். ”ஆனால் எதிர்வரும் 16ஆம் தேதிக்குப் பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும். அப்போது மீண்டும் கடுமையான தொடர் மழை பெய்தால், இவ்வாறான அனர்த்த நிலை மீண்டும் உருவாகலாம்,” எனவும் றியாஸ் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c28ylzvwrnro

போராட்ட வரலாறு என்பது இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது - அருட்தந்தை மா.சத்திவேல்

3 months 2 weeks ago
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது - அருட்தந்தை மா.சத்திவேல் 13 JAN, 2024 | 11:03 AM ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று சனிக்கிழமை (13 ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அப்போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்த போராளிகளின் அரசியல் சிந்தனை, அதற்கான அவர்களின் உழைப்பு உயிர் தியாகம் என்பவற்றோடு அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என்றே கூறலாம். அவ் வரலாறு ஆவணப்படுத்தப்படுவதோடு அடுத்த சந்ததிகளுக்கு உரிய வகையில் கடத்தப்படவும் வேண்டும். அதுவே சமூக விழிப்பிற்கும், வாழ்வுரிமை போராட்டத்திற்கும் சக்தியாவதோடு அதனை மையமாக வைத்து மக்கள் திரள்வதற்கும் வழிவகுக்கும் . அந்த வகையில் மலையக தொழிலாளர் வரலாற்றில் 200 வருட வாழ்வோமே போராட்ட வரலாறு தான். இவ் வரலாற்றுக்கு உரியவர்களை நினைவேந்தல் செய்வது காலத்தின் கட்டாயமாகும். மலையக தியாகிகள் நினைவு கூறப்படல் வேண்டும் எனும் பேரார்வம் எழுச்சி கொண்டுள்ள சூழ்நிலையில் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சிந்தனை, அது தொடர்பான அவர்களின் ஈடுபாடு, விடுதலை வேட்கை, காலச் சூழ்நிலை என்பன மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு தியாகிகள் தினம் அடையாளப்படுத்தப்படல் வேண்டும். இன்றைய மலையக தமிழர்களின் முன்னோர் உழைப்பிற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட போது கடல் பிரயாணத்தில், காடுகள் நிறைந்த பாதையில் நடந்து வருகையில் காட்டு மிருகங்களின் தாக்கத்திற்கும், அரவங்களின் தீண்டுதலுக்கும் உட்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். அதேபோன்று நோய் மற்றும் பட்டினி காரணமாக மரிக்கும் தருவாயில் இருந்தோர் வரும் பாதையிலேயே கைவிடப்பட்டு அனாதரவாக மரித்துள்ளனர். மலைப்பாங்கான குளிர் பிரதேசத்தில் காலநிலை தாக்கம் காரணமாகவும் நோயற்ற காலத்தில் முறையான வைத்திய வசதிகள் இன்றியும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இவையெல்லாம் இயற்கையான மரணம் அல்ல. அன்றைய பிரித்தானிய முதலாளித்துவ ஏற்றுமதி பொருளாதாரம் இவர்களை கொலை செய்தது என்றே கூறல் வேண்டும். அத்தோடு பெரும் தோட்டங்களை உருவாக்க காடுகளை அழித்த போது இயற்கையின் சீற்றத்திற்கும் வன விலங்குகளின் தாக்கத்திற்கும் உள்ளாகி மரணத்தை தழுவிய நூற்றுக்கணக்கானோர் கௌரவமான முறையில் அடக்கம் செய்யப்படாது பள்ளங்களில் தள்ளப்பட்டதாகவும், மலைகளில் ஆங்காங்கே புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றது. இவர்களும் கொல்லப்பட்டவளாக கருதுதல் வேண்டும். மலையகத்தின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தொழிலாளர் வர்க்கத்தின் இரத்தம் தோய்ந்துள்ளதோடு மலையகம் எங்கும் அவர்களின் புதைக்கப்பட்ட உடல்களின் எச்சங்களும் இருக்கின்றன. தொடர்ந்து நாட்டின் இனவாத அரக்கனும் பல்வேறு காலகட்டங்களில் மலையக மக்களை கொலை செய்திருக்கின்றான். வாழ்வு தேடி வன்னி சென்றோரையும் இனவாதம் விட்டு வைக்கவில்லை. இதனை விட மலையகத்தவர்கள் விடுதலை இயக்கங்களில் போராளிகளாகவும் உயிர் தியாகமாகி உள்ளனர். ஏதோ ஒரு வகையில் இவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களே. இந்த வரிசையில் தொழிலாளர்களின் உரிமை, தொழிற்சங்க உரிமை, மொழி உரிமை, நில உரிமை போன்றனவற்றிற்காக நடந்த போராட்டங்களின் போது பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிர் துறந்தவர்களும் உண்டு. அத்தோடு தொழிற்சங்க பகை காரணமாகவும் சகோதர கொலைக்கு உட்பட்டவர்களும் உள்ளனர். மலையக தியாகிகளின் வரலாற்றில் தூக்குத் தண்டனைக்கு உட்பட்டு தூக்கு கயிற்றினை மாலையாக ஏற்று தொழிலாளர்களுக்கு ஒளியாகி, வெள்ளைக்கார துரைமாரை உயிர் அச்சம் கொள்ளவும், அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்களை அச்சத்துக்கு உட்படுத்தவும் வித்திட்ட வேலாயுதம் வீராசாமி இருவரின் தியாக வரலாறு விசேட அடையாளத்தை தமதாக்கிக் கொண்டுள்ளது. முல்லோய தோட்ட சம்பவத்தை(1940) தொடர்ந்து அனைத்து தோட்ட துறைமார்களும் தொழிற்சங்கங்களின் உருவாக்கத்தை முளையிலேயே அகழ்ந்து அகற்றுவதற்கும், தொழிலாளர் ஒன்று திரண்ட சக்தியாக எழுவதை தடுக்கவும் தடுப்பதற்கும் பல்வேறு ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டப் போது முல்லோயா தோட்டத்திற்கு அண்மையில் ஸ்டெலன் பேர்க் (கந்தலா) தோட்டத் தொழிலாளர் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தில் சக்தி பெற தொடங்கினர். இதனை அறிந்த அத்தோட்ட அதிகாரியான சி.ஏ.ஜி போப் துறை தொழிலாளரை அடக்குவதில் தீவிரம் காட்டியதோடு தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுக்க அடக்கு முறைகளை கையாண்டார். அதற்கு எதிராக கிளர்ந்த தொழிலாளர்களில் தீவிர சிந்தனை கொண்ட சிலர் மறைமுகத் திட்டம் தீட்டி துறையின் பிரயாணங்கள் என்பவற்றை உன்னிப்பாக அவதானித்து ஒரு நாள் அவர் அடுத்த தோட்டத்திற்கு இரவு வேளையில் உணவு விருந்துக்கு சென்று திரும்பும் போது வழிமறித்தோரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பத்தோடு தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட வீராசாமி, வேலாயுதம் எனும் இருவர் 1942 பெப்ரவரி மாதம் முறையே 27ம் 28ம் திகதிகளில் தூக்கில் இடப்பட்டனர். இவர்கள் இறுதியாக எழுதிய கடிதத்தில் "உலக தொழிலாளர் வர்க்கம் நீடூழி வாழ வேண்டும்"என நமது வேட்கையை வெளிப்படுத்தி உள்ளனர். மலையக மக்களின் வரலாறு முழுவதும் தியாகமே அடங்கியுள்ளது. அந்த வகையில் மலையக தியாகிகள் என அடையாளப்படுத்தப்படுபவருடைய வாழ்க்கை வரலாறு, அவர்களின் போராட்டம், அரசியல் நோக்கம் என்பன மக்களை சென்றடைவதற்கு முறையான வேலை திட்டம் அவசியம். அதுமட்டுமல்ல அவர்கள் தொடர்பான மீள் வாசிப்பும் எழுத்துரு பெற்று மக்கள் மத்தியிலே கொண்டு செல்லப்படலும் வேண்டும். அதுவே மலையக சமூக விழிப்பிற்கு வழிவகுக்கும். மலையக தமிழர்கள் இனமாகவும் தொழிலாளர் வர்க்கமாகவும் ஒடுக்கு முறைக்கும் இன அழிப்பிற்கும் உள்ளாகி வரும் சூழ்நிலையில் மலையக மக்களை அரசியல் மையப்படுத்தி அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்வதற்கு சரியான உகந்த நினைவு நாளை தெரிவு செய்து நடத்தப்படுதல் சாலச் சிறந்ததாகும். https://www.virakesari.lk/article/173843

நாமல் ராஜபக்ஷவுக்கு அரச இல்லத்தை எவ்வாறு வழங்க முடியும்? - அனுரகுமார

3 months 2 weeks ago
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது - செஹான் சேமசிங்க Published By: VISHNU 12 JAN, 2024 | 10:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை . மேலதிக மானியம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தெளிவில்லாமல் இருப்பது கவலைக்குரியது. டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான 0.73 வீத பங்குகள் தேசிய சேமிப்பு வங்கி வசமுள்ளது. இந்த பங்குகளை திறைசேரிக்கு சொந்தமாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களையும், பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தும் வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி உலகை வலம் வருவதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிக மானியம் குறைநிரப்பு பிரேரணை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஜனாதிபதி உலக நாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் நாட்டின் கடன் நிலை ஸ்தீரமடைந்துள்ளது. பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஜனாதிபதியின் பங்களிப்பு இன்றியமையாதது. வெளிநாட்டு சுற்று பயணங்களுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அடிப்படையற்றது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதியின் செலவினங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/173797

செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை

3 months 2 weeks ago
செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் - மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தி Published By: RAJEEBAN 13 JAN, 2024 | 09:31 AM செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் தொடர்பில் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற பணிகளில் இலங்கையர்களை இஸ்ரேல் வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சமீபத்தில் சந்தித்தவேளை மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் தீர்மானம் குறித்து வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் செங்கடலில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன ஏனைய நாடுகள் அவ்வாறு செயற்படவில்லை என மேற்காசியநாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/173833

ஏமனுக்குள் அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல்

3 months 2 weeks ago
ஏமன்: ஹூத்திகள் அமெரிக்காவின் தாக்குதலை எப்படி எதிர்கொள்வார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹூத்தியின் ரேடார் தளத்தை அமெரிக்கா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏமனில் உள்ள ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமெரிக்கா ராணுவம் இரண்டாவது முறையாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் உள்ள ஹூத்தியின் ரேடார் தளத்தை அமெரிக்காவின் டோமாஹாக்(Tomohawk) ஏவுகணைகளைக் கொண்டு சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்தத் தாக்குதல் இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு நடந்துள்ளது. செங்கடலைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்காவின் கடற்படை போர்க் கப்பலால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று(வெள்ளிக்கிழமை) ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து வந்த ட்ரோன்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியிருந்தது. இன்று(சனிக்கிழமை) காலை நடத்தப்பட்ட தாக்குதல், நேற்று எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சிதான் என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. மேலும், செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்களைத் தாக்கும் ஹூத்திகளின் திறனைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு, ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் முன்னதாக, செங்கடலில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து, அமெரிக்க போர்க்கப்பல் மூன்று ஆள்ளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவினர் ஏமனில் இருந்து குறிவைப்பதால், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகளுக்குத் தொடர்புடைய கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை உதவியதாக அமெரிக்க ராணுவம் கூறியது. இரண்டு கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன, ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கடந்த காரம் கூறியது. ஆனால், ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இரண்டு இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். ஆனால், அந்தக் கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக்குழுவினர் 2014இல் நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததில் இருந்து ஏமனின் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இது உள்நாட்டுப் போரைத் தூண்டியது. காஸாவில் இரான் ஆதரவுடைய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருவதால், ஹூத்திகள் செங்கடலில் உள்ள இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்களை சமீபகாலமாகக் குறிவைத்து வருகின்றனர். பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு, ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படம் 'ஹூத்திகள் சுதந்தரமான எண்ணம் கொண்டவர்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய நிகழ்வுகள், காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையே நடக்கும் மோதல்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்றும், அந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே இருக்கும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் பிபிசியின் சர்வதேச செய்தி ஆசிரியர் ஜெர்மி போவன் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஹூத்திகள் உடனடியாக பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஜெர்மி போவன் கூறியுள்ளார். "ஏமனில் உள்ள ஹூத்திகளுடன் நான் சிறிது காலம் இருந்துள்ளேன். அவர்கள் மிகவும் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் அமெரிக்கர்களுடன் மோதலை விரும்புவார்கள். அவர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். என்ன நடக்கிறது என்பது ஹூத்திகளுக்கும் இரானின் இஸ்லாமிய குடியரசுக்கும் தெரியும்," என்கிறார் அவர். தாக்குதலுக்கு அஞ்சுமா ஹூத்தி ஆயுதக்குழு? பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE படக்குறிப்பு, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஏமனின் தலைநகரான சனாவையும், செங்கடல் கடற்கரை உட்பட நாட்டின் பெரும் பகுதிகளையும் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில், செளதி அரேபியா ஒரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒரு கூட்டணியை அமைத்து, ஹூத்திகளுடன் சண்டையிட்டது. ஆனால், அது முடியவில்லை. ஏமனின் உள்நாட்டுப் போரில் தலையிடுவது என்பது அந்த நாட்டின் சட்டபூர்வமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் நிறுவுவதாகும். அதற்காக, ஹூத்திகளை வெளியேற்ற வேண்டும் என்றும் செளதி கூறியது. "ஆனால், தலையீடு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, நான் மிகவும் மூத்த சௌதிகளுடன் பேசினேன், அவர்கள் இரானின் ஹூத்திகளுக்கு பின்னால் இருந்து செயல்படுவதைத் தடுப்பதற்காகவே இதைச் செய்ததாக் கூறினர். ஏமன் சௌதி அரேபியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது," என்றார் ஜெரெமி போவன். அமெரிக்காவின் தாக்குதலை ஹூத்திகள் எப்படி எதிர்கொள்வார்கள்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹூத்தி ஆயுதக்குழுவினருக்கு இரான் நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஹூத்திகளின் திறனில் 2015 முதல் செளவுதி மேற்கொண்ட தொடர் குண்டுவீச்சு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்றார் ஜெரெமி போவன். "ஏமன் ஒரு மலை நாடு. குண்டுவீச்சுக்கு ஆளான அவர்களின் அனுபவத்தைப் பொறுத்தவரை, அவர்கள் பல விஷயங்களை மறைக்க முயன்றிருக்கலாம். ஹூத்திகளுக்கு இரான் வழங்கிய ஆயுதங்களை இயக்க உதவுவதற்காக ஏமனுக்கு ஆலோசகர்களையும் பயிற்சியாளர்களையும் அனுப்பியிருக்கலாம். மேலும் அவர்களும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வழிகளைப் பற்றி யோசித்திருப்பார்கள்," என்றார் ஜெரெமி போவன். இரான், ஹூத்தி ஆயுதக் கிடங்கை மேம்படுத்திய விதத்தை, அவர்கள் ஏமனில் இருந்து சுடும் ஆயுதங்களைப் பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம், என்றார் ஜெரெமி போவன். "அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மிகவும் அதிநவீனமானவை, மிகவும் ஆபத்தானவை, எனவே அதிக அச்சுறுத்தல் கொண்டவை. கடந்த மாதம் ஹூத்திகள் ஒரு வணிகக் கப்பலைக் கைப்பற்றியபோது, அவர்களின் தாக்குதலின் வீடியோவில் நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதைக் காட்டியது. நாம் அடிக்கடி டிவியில் பார்க்கும் படங்களைவிட அவை மிகவும் வலிமையானவை," என்றார் ஜெரெமி. பிராந்தியம் முழுவதும் ஆதரவாளர்களைக் கொண்ட ஹூத்திகள், கப்பல்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த முடிந்தால், அவர்கள் மேற்கு நாடுகளுக்கு அடிபணியவில்லை என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு முறைமுகமாகச் சொல்வார்கள். ஹூத்திகள், அமெரிக்கா சொல்லும்படி செய்யாவிட்டால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து மேலும் பதிலடி கொடுக்கப்படுவதும் உறுதிதான் என்றார் ஜெரெமி. செங்கடலில் நடக்கும் தாக்குதல்களுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி ஆயுதக் குழுவினர் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி ஆயுதக்குழுவினர் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்தத் தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி ஆயுதக்குழுவினர் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி ஆயுதக் குழுவினர் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன? பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித் தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர் விமானங்கள், குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்குத் தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார். சைப்ரஸில் இருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின. இந்தத் தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ஆம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர்செய்ய இந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தன. ஹூத்தி ஆயுதக்குழுவினர் எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டியது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனைத் தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “உலக மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்கச் செய்யவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன,” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தைத் தணித்து நிலைமைகளைச் சீராக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cd1e9j66qdvo

யாழ் கடற்பரப்பில் 25 இந்திய மீனவர்கள் கைது!

3 months 2 weeks ago
யாழ். பருத்தித்துறை கடலில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை! Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 09:02 AM யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். டிசம்பர் 9 ஆம் திகதி கைதாகிய இந்திய மீனவர்களின் நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாளர் நிஷாந் நாகரட்ணம் மன்றில் முன்னிலையாகி படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக சேர்க்க முடியும். இது 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில், வெளிநாட்டு படகுகளுக்கான சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மன்றுரைத்திருந்தார். சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டத்தரணி நிஷாந் நாகரட்ணம் 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் தொடர்பில் மன்றுரைத்த விடயதானங்களை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் குறித்த விண்ணப்பத்தை இன்று கட்டளையாக்கி உத்தரவிட்டார். இதன் போது படகின் உரிமையாளரை முதலாவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டு அவருக்கான அழைப்பாணை இலங்கை நீதித்துறை ஊடாக அனுப்புவதற்கும் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை. நீரியல் வளத்துறையால் 12 மீனவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மூன்று குற்றச்சாட்டுகளையும் மீனவர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்கும் தலா ஆறுமாத சாதாரண சிறை தண்டனை என்னும் அடிப்படையில், 18 மாத சாதாரண சிறை தண்டனை விதித்த பருத்துத்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை அதனை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார். https://www.virakesari.lk/article/173830

வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம் பழைய எலுவாங்குளம்

3 months 2 weeks ago
13 JAN, 2024 | 02:34 PM இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் பழைய எலுவாங்குளம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் மன்னார் வீதியின் பழைய எலுவாங்குளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பழைய எலுவாங்குளம் பிராதன வீதியிலிருந்து கலா ஓயா பாலம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பெற்றுள்ளது. அத்துடன் பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த 600 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. https://www.virakesari.lk/article/173869

கருத்துக்களில் மாற்றங்கள் [2024]

3 months 2 weeks ago
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

3 months 2 weeks ago
பிற்போக்கு அரசகுடும்பம் புருனே நாட்டு அரசனின் மகன் தனக்கு பிடித்த அரச குடும்பத்தை சேராத பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார் நேற்றைய செய்தி. அந்த உரிமை கூட ஈழ தமிழர்களுக்கு கிடையாதோ 😟

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
திருப்பித் தாக்குதலின் ஆரம்பம் தம்மீதான தாக்குதல்களுக்குத் தமிழர்கள் பதிலளிக்க ஆரம்பித்தது 1984 ஆம் ஆண்டின் வைகாசியில் நடந்தது. பொலீஸ் புலநாய்வாளர்கள் சிலரைக் கொல்வதுடன் இது ஆரம்பமாகியது. வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கருகில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் புலநாய்வாளர் சார்ஜண்ட் நவரட்ணம் இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி அவர் புலநாய்வு செய்துவந்தார். இரு நாட்களுக்குப் பின்னர் பொலீஸ் கொன்ஸ்டபிள் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். சீலனின் மறைவிடம் குறித்த தகவல்களை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இவரே. பிரபாகரனின் துணைத் தளபதியாக சீலன் செயற்பட்டுவந்தார். இராணுவத்தினரிடம் அகப்படப் போகும் நிலையில் தன்னைச் சுடும்படி தனது தோழர்களிடம் வற்புறுத்தி மரணமுற்றிருந்தார். சீலனின் துணிவை பிரபாகரன் மெச்சினார், அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிட்டார். "திருப்பித் தாக்கும்" நடவடிக்கைகள் ஆனியில் இன்னும் வேகம் பெற்றன. இராணுவம் மற்றும் பொலீஸார் மீதான தாக்குதல்கள், சமூக விரோதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள், உளவாளிகளை களையெடுத்தல், ஆயுதங்களையும் பணத்தையும் கைப்பற்றுதல் ஆகிய வடிவங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்த மாதத்திலேயே இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு, லலித் அதுலத் முதலி மீது காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டடத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் முயற்சி என்பன இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவங்களை முக்கியமானவையாகக் கருதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சின் செயலாளரான டக்கிளஸ் லியனகேயயை உடனடியாக விசேட பத்திரிக்கை மாநாடொன்றினைக் கூட்டுமாறு கோரியது. இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் இயங்கிவந்த இலங்கை வங்கிக் கிளையின் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வைகாசி 31 ஆம் திகதி டொயோடா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆயுதம் தரித்த நான்கு இளைஞர்கள் சீமேந்துப் பைகளைக் கொள்வனவு செய்யப்போவதாக பாசாங்குசெய்துகொண்டே காசாளரின் அறைக்குள் நுழைந்தனர். காசோலையொன்றினைக் காசாக்குவது போல அவர் அருகில் சென்று அவரது நெஞ்சுப் பகுதியில், ஆயுதத்தை வைத்து மிரட்டி 2 லட்சம் ரூபாய்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனம் அவ்விடத்திற்கருகில் அநாதரவாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது. அதே நாள் இரவு, உடுவிலைச் சேர்ந்த ராமலிங்கம் பாலசிங்கம் என்பவர் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் கிடந்த காகிதத் துண்டொன்றில் "இவர் ஒரு சமூக விரோதி" என்று எழுதப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்த‌ செய்தியொன்றினை வெளியிட்ட டெயிலி நியூஸ் பத்திரிக்கை 4 இலிருந்து 5 வாரங்களில் நிகழ்த்தப்பட்ட 30 ஆவது மின்கம்பத் தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது. மறுநாளான ஆனி 1 ஆம் திகதி கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சென்ற இரு ஆயுதம் தரித்த இளைஞர்கள் அங்கிருந்த 75,000 ரூபாய்கள் பணம் மற்றும் பருவகாலச் சீட்டுக்களை எடுத்துச் சென்றனர். ஆனி 2 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குச் சென்ற ஆயுததாரிகள் அங்கிருந்த 25,000 ரூபாய்கள் பணத்தினை எடுத்துச் சென்றனர். இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு மற்றையவர்கள் இவ்வாறான சிறிய கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதனூடாக ஜெயவர்த்தனவுக்கும் அவரது இராணுவத்திற்கும் தலையிடியினை ஏற்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை தனது நன்றிக்கடன் ஒன்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் அவர் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலையினை இரண்டாவது முறை உடைத்து, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நிர்மலா நித்தியானந்தனை மீட்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. 1983 ஆம் ஆண்டு, புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சிறையுடைப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பெண்கைதிகளின் கட்டடத்தில் தடுத்து வைக்கப்படிருந்தார். தந்தை செல்வாவின் சாரதியான வாமதேவனிடம் நிர்மலாவை பத்திரமாக வெளியே அழைத்துவரும் பணி அன்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வாமதேவனோ அவசரத்தில் அதனை மறந்துவிட்டு, தனியாகத் தப்பி வந்திருந்தார். நிர்மலாவின் கணவரான நித்தியானந்தன் முதலாவது சிறையுடைப்பில் தப்பி வெளியேறி, சென்னைக்கு வந்து புலிகளுடன் இணைந்திருந்தார். விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையான "விடுதலைப் புலிகள்" இற்கு ஆசிரியராக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாண பல்க்லைக்கழகத்தில் பொருளியற்றுரை விரிவுரையாளராக இணைந்துகொள்வதற்கு முன்னர் அவர் தினகரன் தமிழ்ப் பத்திரிக்கையின் நிருபராகச் செயற்பட்டு வந்தார். நித்தியானந்தன் தம்பதிகளை மீள ஒன்றுசேர்த்துவிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். நிர்மலாவுக்கு அவர் மிகவும் கடமைப்பட்டிருந்தார். பயங்கரவாதிகளுக்கு உதவியது, அடைக்கலம் கொடுத்தது, ஊக்கம் அளித்தது, தகவல்களை மறைத்தது உட்பட பல குற்றங்களுக்காக நிர்மலா நித்தியானந்தன் 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக இராணுவ அதிகாரி சரத் முனசிங்கவினால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டுப் படுகாயமடைந்தவரும், பிரபாகரனின் நெருங்கிய தோழருமான சீலனுக்கு தனது இல்லத்தில் வைத்து சிகிச்சையளித்தமையே அவர் செய்த குற்றமாகும். ஆகவே, இதற்கான பிரதியுபகாரமாக எப்படுபட்டவாது நிர்மலாவை சிறையிலிருந்து மீட்பதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனியின் மூன்றாவது வாரத்திற்குள் நிர்மலாவை மீட்கவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருந்தது. நிர்மலாவுக்கெதிரான வழக்கு ஆனி மாத்தத்தின் மூன்றாம் வாரத்தில் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை கொழும்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஆகவே, முதலாவது சிறையுடைப்பில் செயற்பட்ட பரமதேவை இம்முறையும் தன்னுடன் செயற்படுமாறு பிரபாகரன் பணித்தார். முதலாவது சிறையுடப்பு நிகழ்ந்தபோது பரமதேவா புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்திருக்கவில்லை. ஆனாலும், முதலாவது சிறையுடைப்பில் தப்பிச் சென்ற புலிகளுக்கு ஆதரவானவர்களான நித்தியானந்தன், மதகுரு சிங்கராயர், மதகுரு சின்னராசா, ஜயகுலராஜா மற்றும் ஜயதிலகராஜா ஆகிய அணியினருடன் இவரும் ஒன்றாகவே தப்பிச் சென்றிருந்தார். சென்னைக்குச் சென்றவுடன் அவரும் புலிகளுடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயுதவழிப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ராமலிங்கம் பரமதேவாவும் ஒருவர். 1975 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறவிருந்த குடியரசு தினத்திற்கான கொடியேற்றலினைப் பகிஷ்கரித்து, அந்நாளினை கரிநாளாகவும், இரங்கல் நாளாகவும் கடைப்பிடிக்குமாறு தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி கோரியபோது பரமதேவா ஒரு மாணவனாக இருந்தார். ஆகவே, தான் கல்விகற்ற பாடசாலையில் கொடியேற்றல் நிகழ்வைப் பகிஷ்கரிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். இதற்காக பாடசாலையிலிருந்து அவர் நிர்வாகத்தினரால் விலக்கப்பட்டார். வன்முறையற்ற, ஜனநாயகவழிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட எத்தனித்த பரமதேவாவை அதிகாரம் வெளியே தள்ளியபோது, அவர் வன்முறையுடன் கூடிய பகிஷ்கரிப்பினைச் செய்யத் திட்டமிட்டார். இருவருடங்களுக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு அவர் குண்டுத் தாக்குதல் ஒன்றினை முன்னின்று நடத்தினார். இதனையடுத்து அவரை பொலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தலைமறைவான பரமதேவா மட்டக்களப்பின் முதலாவது ஆயுத அமைப்பான தமிழீழ விடுதலை நாகங்கள் என்றும் பின்னாட்களில் நாகங்கள் என்றும் அழைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டார்கள். இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கியது. நாகங்கள், குண்டெறிதல், கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டு பரமதேவாவும் அவரது தோழர்களும் செங்கலடியில் அமைந்திருந்த மக்கள் வங்கிக் கிளையினைக் கொள்ளையிட்டார்கள். ஆனால், அவர்களைத் துரத்திச் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பரமதேவாவைப் பிடித்துக் கொண்டார். இருவரும் பொதுவீதியில் கட்டிப் புரண்டனர். இரண்டாவது பொலீஸ்காரர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். குண்டுகள் அவரது வலதுகரத்தைத் துளைத்துச் சென்றன. கைதுசெய்யப்பட்ட பரமதேவா 1981 ஆம் ஆண்டு, எட்டு ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறைப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய பரமதேவா மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தே அவர் தப்பிச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிர்மலாவை சிறையிலிருந்து மீட்டுவரும் பிரபாகரனின் திட்டத்திற்கு பரமதேவா பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி பரமதேவாவும் அவரது சகாக்களும் இரு வாகனங்களில் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்களுள் இருவர் சிறைக்காவலர்கள் அணியும் சீருடையில் இருந்தனர். இன்னுமொருவர் கைதிகள் அணியும் ஆடையினை அணிந்திருந்தார். மீதிப்பேர் இராணுவச் சீருடையில் இருந்தனர். மாலை 7:15 மணியளவில் அவர்கள் சிறைச்சாலையினை அடைந்தார்கள். சிறைச்சாலையின் வெளிப்புற வாயிலில் காவலாளிகளின் சீருடையில் இருந்தவர்கள் தட்டினர். கொழும்பிலிருந்து கைதியொருவரைத் தாம் கொண்டுவந்திருப்பதாகவும், அவரை உள்வாங்கிக்கொள்வதற்காக கதவினைத் திறக்குமாறும் கோரினர். இதனையடுத்து உள்ளிருந்த காவலாளிகள் கதவினைத் திறக்க, சீருடையில் இருந்த புலிகளும், கைதிபோன்று காட்சியளித்த உறுப்பினரும் உள்ளே நுழைந்தனர். நடப்பதுபற்றிச் சந்தேகம் கொண்ட சிறைக் காவலாளி ஒருவர் உடனேயே வாயிற்கதவினைப் பூட்டினார். ஆனால், புலிகள் உள்ளேயிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டனர். சிறையறைகளின் திறப்புக்களை வைத்திருக்கும் காவலாளியைப் புலிகள் தேடியபோது, அவர் ஓடி ஒளித்துக்கொண்டார். ஆகவே உள்ளிருந்த இரண்டாவது கதவினை உடைத்துக்கொண்டு பெண்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி புலிகள் ஓடிச் சென்றனர். இவர்களுக்காகக் காத்திருந்த நிர்மலாவும், இவர்கள் ஓடிவருவதைக் கண்டதும், "நான் இங்கிருக்கிறேன்" என்று கூச்சலிட்டார். அவரது சிறைக்கதவினை உடைத்த புலிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அரசாங்கம் அதிர்ந்துபோனது. ஆறு மாதங்களில் ஒரே சிறைச்சாலை இருமுறை போராளிகளால் உடைக்கப்பட்டிருந்தது. மறுநாள் மாலை, 1984 ஆம் ஆண்டு ஆனி 11 ஆம் திகதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டக்கிளஸ் லியனகே பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டினார். தப்பிச் சென்றவர்களை மீளக் கைதுசெய்வதற்காக முப்படைகளும் இணைந்த பாரிய தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் தரை மற்றும் கடல்வழி மூலம் இராணுவத்தினரும் கடற்படையினரும் சல்லடை போட்டுத் தேடிவருவதாகவும் கூறினார். ஆனால் அவர்களின் தேடுதல்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இரு வெளியக இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று அதிவிரைவாக நிர்மலாவை தமிழ்நாட்டிற்குக் காவிச் சென்றது. தமது முதலாவது பத்திரிக்கையளர் நிகழ்வில் புலிகள் தாம் பாதுகாப்பாக விடுவித்துக் கொண்டுவந்த நிர்மலாவை பத்திரிக்கையாளர்களுக்குச் சென்னையில் காண்பித்தனர். தான் தப்பிவந்த விபரங்களை பத்திரிக்கையாளர்களிடம் விபரித்த நிர்மலா, திகில் நிறைந்த கடல்வழிப் பயணம் குறித்தும் பேசத் தவறவில்லை.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months 2 weeks ago
இலங்கை தமிழருக்கு பலமுறை தீர்வுகள் கிடைத்துள்ளது ஆனாலும் தமிழன் தலைகீழாக. கட்டி தொங்க விட்டு அடித்து கொல்லப்படுகிறான் ..அதுவும் காவல்துறை என்றழைக்கப்படும். பொலிஸாரினால் செல்வா-பண்டா ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை செல்வா- டல்லி ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை இப்படி பல ஒப்பந்தம்கள் கடந்த காலங்களில் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே இவையெல்லாம் தமிழருக்குகான தீர்வுகள் இல்லை நடைமுறை படுத்தப்படாத எந்தவொரு ஒப்பந்தமும். பேச்சுவார்த்தையும். தமிழருக்குகான தீர்வுகள் இல்லை அவை குப்பைகள் பழைய கடுதாசிகள். பழைய பேப்பர் கழிவு பேப்பர் அவற்றை தீர்வு என்று அழைப்பது. முட்டாள் தனம் இப்போது சுரேன் எழுதிய இமயமலை பிரகடனம் சுரேனிடம் மட்டுமே உண்டு மற்றைய அனைவரும் கிழித்து குப்பையில் போட்டு விட்டார்கள் ஆகவே அது தீர்வு இல்லை இந்த பிரகடனத்தின் மூலம் இதுவரை இலங்கை மக்கள் சமனாக நடத்தப்படவில்லை என்று இதன் பிரதிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களை அறியாமலேயே எற்றுக்கொண்டு உள்ளார்கள்
Checked
Mon, 04/29/2024 - 22:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed