Aggregator

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

4 days ago
ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு! காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர். https://athavannews.com/2025/1437647

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

4 days ago

New-Project-1-9.jpg?resize=600%2C300&ssl

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர்.

 https://athavannews.com/2025/1437647

இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

4 days ago

30 JUN, 2025 | 02:11 PM

image

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் IND-TN-10-MM-773பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கைகள் படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும் நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218838

இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

4 days ago
30 JUN, 2025 | 02:11 PM சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் IND-TN-10-MM-773பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள் படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும் நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218838

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு

4 days ago
இசைப்பிரியா பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என கோரும் முறைப்பாடு - அதிகாரிகள் உடனடியாக செயற்படவேண்டும் என சட்டத்தரணி வேண்டுகோள் 30 JUN, 2025 | 01:23 PM இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தனது முறைப்பாடு தற்போது பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். எனது முன்னுரிமை வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகும்.என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கு முன்னோக்கி நகரும்போது உங்கள் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218832

வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

4 days ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 29 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் "போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்." 'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது. அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார். வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார். நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது. இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம் "இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது." இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல். ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன. "போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். "1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள். 'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது. அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்." இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார். 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்." இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது. வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை. ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்) அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள். "சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார். இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன. மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர். "மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. "முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார். இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது. வாஸ்கோவின் இரண்டாவது பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம் இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது. இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர். "வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது." இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம். அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார். "அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்." "அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்." இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார். வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன. "வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்." "ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார். வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது. 'பிரித்தாளும் சூழ்ச்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம் அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது. "அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்." அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர். ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார். "நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா) இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர். "இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. 'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது. ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார். கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo

வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

4 days ago

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 29 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

"போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்."

'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.

அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார்.

வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார்.

நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது.

இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம்

"இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது."

இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல்.

ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன.

"போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

"1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார்.

வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள்.

'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது.

அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்."

இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார்.

'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்."

இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா?

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது.

வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன.

வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை.

ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்)

அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள்.

"சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார்.

இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன.

மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர்.

"மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

"முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார்.

இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது.

வாஸ்கோவின் இரண்டாவது பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம்

இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது.

இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர்.

"வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது."

இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம்.

அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்.

"அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்."

"அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்."

இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார்.

வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன.

"வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்."

"ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார்.

வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது.

'பிரித்தாளும் சூழ்ச்சி'

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது.

"அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்."

அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார்.

"நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா)

இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர்.

"இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர்.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது.

ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார்.

கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo

யாழ். மயிலிட்டிக்கு சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்குமாறு கோரிய மக்கள்

4 days ago
30 JUN, 2025 | 12:49 PM கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். https://www.virakesari.lk/article/218827

யாழ். மயிலிட்டிக்கு சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்குமாறு கோரிய மக்கள்

4 days ago

30 JUN, 2025 | 12:49 PM

image

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

அதேவேளை,  இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள  காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

34__4_.jpg

34__2___1_.jpg

34__3___1_.jpg

https://www.virakesari.lk/article/218827

ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே லாட்டரியில் 'பல கோடி ரூபாய் பரிசு' - நார்வேயில் என்ன நடந்தது?

4 days ago
பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES கட்டுரை தகவல் தனாய் நெஸ்தா குபேம்பா பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது. யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொகைக்கு மாறாக, அதிகபட்ச தொகையை வென்றிருப்பதாக வெள்ளிக்கிழமை தவறான தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது," என்று நார்ஸ்க் டிப்பிங் என்ற அந்த நிறுவனம் தெரிவித்தது. தவறான தகவல் அனுப்பப்பட்டதால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை அந்த நிறுவனம் பிபிசிக்கு அளிக்க மறுத்துவிட்டது. நார்ஸ்க் டிப்பிங் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருந்த சக்ஸ்டுயென் மன்னிப்பு கேட்டதோடு, ஒரு நாள் கழித்து தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய நாணயமான யூரோவை நார்வீஜியன் க்ரோனெர் பணமாக மாற்றுகையில் தவறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில், அவர்கள் வென்ற பணத்தைக் காட்டிலும் கூடுதலாக பணத்தை வென்றதாக குறிப்பிட்டிருக்கிறது. அவர்கள் வென்ற பணத்தை நூறால் வகுப்பதற்கு பதிலாக, நூறால் பெருக்கி வரும் தொகையை வென்றுவிட்டதாக மக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து யூரோ பணமாக வாங்கி, அதனை நார்வீஜியன் க்ரோனெராக மாற்றி பரிசு வென்றவர்களுக்கு அளிப்பது நார்ஸ்க் டிப்பிங் நிறுவனத்தின் வழக்கம். பரிசுத்தொகையை குறிப்பிடுவதில் ஏற்பட்ட தவறு சனிக்கிழமை மாலை திருத்தப்பட்டுள்ளது. தவறாக யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் உறுதி செய்தது. "இந்த அறிவிப்பால் பலர் ஏமாற்றம் அடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பலரும் எங்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் எனக்கு புரிகிறது," என்று கூறி சக்ஸ்டுயென் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஏமாற்றமடைந்த மக்கள் முன்வைத்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் சிலர் இந்த தகவல் கிடைத்தவுடன் சுற்றுலா செல்ல இருப்பதாகவும், தங்களின் வீடுகளை புனரமைக்கப் போவதாகவும், சொந்தமாக வீடு வாங்கப் போவதாகவும் அவரிடம் கூறியதாக குறிப்பிட்டார். "அவர்களிடம் மன்னித்துவிடுங்கள் என்பதைத் தவிர வேறெதுவும் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் இது சிறிய ஆறுதல் என்று எனக்கு தெரியும்," என்றும் அவர் கூறினார். பெண் ஒருவர், நார்வீஜியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனுக்கு (NRK) அளித்த பேட்டியில், அவருக்கு 1.2 மில்லியன் க்ரோனெர் (இந்திய மதிப்பில் 10,180,685.60 ரூபாய்) பணத்தை வென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மையில் சிறு தொகையை மட்டுமே அவர் பரிசாக வென்றிருப்பதாக அவர் கூறினார். நோர்ஸ்க் டிப்பிங் நிர்வாகக் குழுவினர் அதனை நிர்வகிக்கும் கலாசாரத் துறை அதிகாரிகளை சனிக்கிழமை சந்தித்தனர். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சக்ஸ்டுயென் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 2014-ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "சில இடங்களில் கோட்டை விட்டு விட்டோம். இது என் பொறுப்பு," என்று அவர் அறிவித்துள்ளார். நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது வருத்தம்தான் என்றாலும் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். கலாசாரம் மற்றும் சமத்துவத் துறை அமைச்சர் லுப்னா ஜாஃப்ரே நார்வீஜியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனிடம் பேசும் போது, "இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது. அதுவும், நோர்ஸ்க் டிப்பிங் நிறுவனத்தில் கூடவே கூடாது. ஏனென்றால் இந்த நாட்டில் அந்த நிறுவனம் பிரத்யேகமாக இந்த சேவையை வழங்கி வருகிறது," என்று குறிப்பிட்டார். "கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்த நிர்வாகக் குழு தீவிரமாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனம் விமர்சனத்திற்கு உள்ளாவது இது ஒன்றும் முதல்முறையல்ல. "கடந்த சில மாதங்களில் சில தீவிரமான பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது," என்று கூறும் அந்த நிறுவனம், கடந்த ஆண்டும் பல தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டதாக குறிப்பிடுகிறது. ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் நுகர்வோரால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20pxrlq121o

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

4 days ago
ஜனநாயகம் என்ற பெயரில் குழப்பம் விளைவிக்கும் றௌடிகளையெல்லாம் அணைத்துச் செல்லாமல் ஏற்பாட்டாளர்கள் இனி வரும் காலங்களில் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த நிகழ்வில் சர்ச்சை கிளப்பிய றௌடிகளுக்கு உண்மையில் மக்களிடம் ஆதரவு இருக்கிறதா என்று அறிய அவர்கள் சுயாதீனமாக இனி வரும் தேர்தல்களில் நின்று பார்க்கலாம்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 days 1 hour ago
2ம் லெப். மாலதி வீரவணக்க நினைவாலயம் கோப்பாய் 2004 அவர் வீரச்சாவடைந்த இடத்திலேயே இது கட்டப்பட்டது.

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

4 days 1 hour ago
அப்ப இனி எமக்குப் பயமில்லை...அமெரிக்கா எங்கடை பக்கம்..சொந்தம்

முஸ்லிம்கள் பக்க நியாயப்பாடுகள் : முஸ்லிம்களின் அவல நிலை என்ன?

4 days 1 hour ago

முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும்.

அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும்.

  • நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு)

  • https://noolaham.net/project/121/12037/12037.pdf

இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன.

வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்புக்கோரியுருந்ததாக, எல்லாம் எரித்தழிக்கப்பட்ட பின்னர்(!!), குறிப்பிட்டுள்ளார். மேலும் எரித்தழிக்கப்பட்டமைக்கும் வருத்தமின்றி இதில் நியாயம் எழுதப்பட்டுள்ளது.

இன்னூலில் 1985இல் எரியூட்டப்பட்ட அம்பாறை காரைதீவு பற்றி மன்னிப்போ இல்லை வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது நடப்பதற்கு முன்னர் "தமிழர்கள் செய்த" ஓரிரு நிகழ்வுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தாக்குதல் தொடர்பில் மூச்சுக்கூட இல்லை.

பின்னாளில் ரெலோ, புளட், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்திய ஏவல் படைகளின் நாச செயல்களும் இதில் எழுதப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் புலிகளால் செய்யப்பட்டதென்று 12 கொலைகளும் (உள்வீட்டுச் சிக்கல்களால் 6 முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் 6 முஸ்லிம் காவல்துறையினர்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை வாசிப்பதன் மூலம் அக்கலத்திய அவர்தம் நிலைப்பாடுகளை நாம் அறிய முடியும். எனினும் இதில் முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 1985ம் ஆண்டு காரைதீவு அழிப்பு, 1990களிற்குப் பின்னர் சம்மாந்துறையில் நடந்த பல படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் மூச்சுக் கூட விடவில்லை. இன்னும் சொல்லப்போல் வீரமுனை ஊரை எரித்தமைக்குக்கூட இதில் நியாயப்பாடுகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான செய்தியாகும்.

சம்மாந்துறையில் 1990இல் நடந்த சில படுகொலைகள்:

  • 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன.

  • வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌.

  • 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌.

  • 1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன.

  • 12.08.90 சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌. மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர்

  • 19.08.90 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர். (இவர்களில் அடையாளம் காணப்பட்டோரில் எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருந்தனர்.)

  • 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 

சம்மாந்துறையில் 1998இல் நடந்த படுகொலைகள்:

  • 06.01.98 வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவற்றை வரலாறாக்கிவிட்டு இரு இனமும் அரசியலுக்கு அப்பாலும் 1960இற்கு முன்பிருந்தது போன்று ஒன்றாக சமயபேதமின்றி தமிழராக வாழ வேண்டும் என்பது எனது அவா.

முஸ்லிம்களின் தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி மேலும் அறிய:

முஸ்லிம்கள் பக்க நியாயப்பாடுகள் : முஸ்லிம்களின் அவல நிலை என்ன?

4 days 1 hour ago
முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும். அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும். நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு) https://noolaham.net/project/121/12037/12037.pdf இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்புக்கோரியுருந்ததாக, எல்லாம் எரித்தழிக்கப்பட்ட பின்னர்(!!), குறிப்பிட்டுள்ளார். மேலும் எரித்தழிக்கப்பட்டமைக்கும் வருத்தமின்றி இதில் நியாயம் எழுதப்பட்டுள்ளது. இன்னூலில் 1985இல் எரியூட்டப்பட்ட அம்பாறை காரைதீவு பற்றி மன்னிப்போ இல்லை வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது நடப்பதற்கு முன்னர் "தமிழர்கள் செய்த" ஓரிரு நிகழ்வுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தாக்குதல் தொடர்பில் மூச்சுக்கூட இல்லை. பின்னாளில் ரெலோ, புளட், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்திய ஏவல் படைகளின் நாச செயல்களும் இதில் எழுதப்பட்டுள்ளது. சம்மாந்துறையில் புலிகளால் செய்யப்பட்டதென்று 12 கொலைகளும் (உள்வீட்டுச் சிக்கல்களால் 6 முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் 6 முஸ்லிம் காவல்துறையினர்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை வாசிப்பதன் மூலம் அக்கலத்திய அவர்தம் நிலைப்பாடுகளை நாம் அறிய முடியும். எனினும் இதில் முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 1985ம் ஆண்டு காரைதீவு அழிப்பு, 1990களிற்குப் பின்னர் சம்மாந்துறையில் நடந்த பல படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் மூச்சுக் கூட விடவில்லை. இன்னும் சொல்லப்போல் வீரமுனை ஊரை எரித்தமைக்குக்கூட இதில் நியாயப்பாடுகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான செய்தியாகும். சம்மாந்துறையில் 1990இல் நடந்த சில படுகொலைகள்: 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன. வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌. 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌. 1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன. 12.08.90 சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌. மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர் 19.08.90 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர். (இவர்களில் அடையாளம் காணப்பட்டோரில் எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருந்தனர்.) 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. சம்மாந்துறையில் 1998இல் நடந்த படுகொலைகள்: 06.01.98 வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவற்றை வரலாறாக்கிவிட்டு இரு இனமும் அரசியலுக்கு அப்பாலும் 1960இற்கு முன்பிருந்தது போன்று ஒன்றாக சமயபேதமின்றி தமிழராக வாழ வேண்டும் என்பது எனது அவா. முஸ்லிம்களின் தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி மேலும் அறிய:

முஸ்லிம்கள் பக்க நியாயப்பாடுகள் : முஸ்லிம்களின் அவல நிலை என்ன?

4 days 1 hour ago

முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும்.

அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும்.

  • நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு)

  • https://noolaham.net/project/121/12037/12037.pdf

இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன.

வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்புக்கோரியுருந்ததாக, எல்லாம் எரித்தழிக்கப்பட்ட பின்னர்(!!), குறிப்பிட்டுள்ளார். மேலும் எரித்தழிக்கப்பட்டமைக்கும் வருத்தமின்றி இதில் நியாயம் எழுதப்பட்டுள்ளது.

இன்னூலில் 1985இல் எரியூட்டப்பட்ட அம்பாறை காரைதீவு பற்றி மன்னிப்போ இல்லை வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது நடப்பதற்கு முன்னர் "தமிழர்கள் செய்த" ஓரிரு நிகழ்வுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தாக்குதல் தொடர்பில் மூச்சுக்கூட இல்லை.

பின்னாளில் ரெலோ, புளட், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்திய ஏவல் படைகளின் நாச செயல்களும் இதில் எழுதப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் புலிகளால் செய்யப்பட்டதென்று 12 கொலைகளும் (உள்வீட்டுச் சிக்கல்களால் 6 முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் 6 முஸ்லிம் காவல்துறையினர்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை வாசிப்பதன் மூலம் அக்கலத்திய அவர்தம் நிலைப்பாடுகளை நாம் அறிய முடியும். எனினும் இதில் முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 1985ம் ஆண்டு காரைதீவு அழிப்பு, 1990களிற்குப் பின்னர் சம்மாந்துறையில் நடந்த பல படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் மூச்சுக் கூட விடவில்லை. இன்னும் சொல்லப்போல் வீரமுனை ஊரை எரித்தமைக்குக்கூட இதில் நியாயப்பாடுகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான செய்தியாகும்.

சம்மாந்துறையில் 1990இல் நடந்த சில படுகொலைகள்:

  • 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன.

  • வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌.

  • 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌.

  • 1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன.

  • 12.08.90 சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌. மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர்

  • 19.08.90 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர். (இவர்களில் அடையாளம் காணப்பட்டோரில் எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருந்தனர்.)

  • 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 

சம்மாந்துறையில் 1998இல் நடந்த படுகொலைகள்:

  • 06.01.98 வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவற்றை வரலாறாக்கிவிட்டு இரு இனமும் அரசியலுக்கு அப்பாலும் 1960இற்கு முன்பிருந்தது போன்று ஒன்றாக சமயபேதமின்றி தமிழராக வாழ வேண்டும் என்பது எனது அவா.

முஸ்லிம்களின் தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி மேலும் அறிய:

செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்

4 days 1 hour ago
அனுர ஒரு சிக்னல்..காட்டினால்....போதுங்க.... போதுங்க... உள்ளகப் பொறிமுறையே வேண்டாமென்பார்..அதைவிட..நம்ம உள்ளூராட்சி சபை விசாரித்தாலே போதும் என்பார்..

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

4 days 2 hours ago
என்ரை குஞ்சு,தங்கம் மெதகொட சாமி! இஸ்ரேல் ஆசியாவிலதான் இருக்கு சாமி 😎