Aggregator
நானும் ஊர்க் காணியும்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் - ஞானமுத்து சிறிநேசன்
20 MAR, 2025 | 04:01 PM
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்திலும் படை குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும்.
யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடிகிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளபோதும் நாங்கள் அபிவிருத்தி விடயத்தில் பின்நோக்கியே போகின்றோம். நாட்டில் குண்டு விழாமல் இருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய விடயமாக யுத்தம் உள்ளது. இதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், படையினரை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் நிதி உச்சயமாக இருந்தது.
இந்நிலையில் யுத்தம் முடிந்துவிட்டால் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறையும் என்றும் அந்த நிதியின் ஊடாக ஆக்கத்திறன் அபிவிருத்திகளுக்கு அதிகளவான நிதியை ஒதுக்க முடியும் என்றும் கூறினர். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ள போதும் கடந்த முறையை விடவும் இம்முறை துண்டுவிழும் தொகை 160 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்தியா மற்றும் பிரிட்டனில் படைகளின் எண்ணிக்கையுடன் அந்நாட்டு மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் எமது நாட்டில் காணப்படும் படையின் அளவு அதிகமாகவே உள்ளது. இங்கே முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்தில் படை குவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும் என்பதனை கேட்டுக்கொள்கின்றேன். யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு, செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடியுமாக இருக்கின்றது என்றார்.
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
பார்த்தீனியம்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இரசித்த.... புகைப்படங்கள்.
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”
இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!
வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார்
வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார்
20 Mar, 2025 | 08:58 AM
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை எனது தலைமையில் களமிறக்கியுள்ளேன். கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு தேர்தல் இதில் வெற்றிபெறும் வேட்பாளர் 900 மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு வீதியை புனரமைக்க முடியும் குறிப்பாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள அடிப்படை தேவைகளை செய்து முடிக்கமுடியும்.
அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என பிரச்சாரங்களை செய்வார்கள் இந்த காலங்களில் துரஸ்டவசமாக ஒட்டுக்குழுக்களாகவும் பயங்கரவாத கழுக்களாகவும் செயற்பட்டு பல கொலைகளை செய்த குழுக்கள் இந்த தேர்தல் காலத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர்.
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர்.
எனவே மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள் கடந்தகாலத்தில் புலிகள் இருந்தகாலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்தபோதுதான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாக, தாய் தந்தைகளாக, சகோதர்களாக இருக்கின்றோம் எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில் செயற்படவேண்டும் என்றார்.
வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார் | Virakesari.lk