ஊர்ப்புதினம்

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி

3 months 2 weeks ago

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி

வெள்ளி, 28 நவம்பர் 2025 06:39 AM

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி

புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியதில், பயணிகள் உயிர் ஆபத்துக்குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது

இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள்.

நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://jaffnazone.com/news/52698

விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

3 months 2 weeks ago

விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Mano ShangarNovember 28, 2025 10:06 am 0

விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது.

இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/

இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை ! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு

3 months 2 weeks ago

இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு

Published By: Priyatharshan

28 Nov, 2025 | 07:23 AM

image

இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

* திடீர் வெள்ளப்பெருக்கு

* நிலச்சரிவு

* மரங்கள் சாய்வது/வீழ்வது

* கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை 

ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள்

* வவுனியா - செடிக்குளம் – 315 மிமீ

* முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ

* கண்டி – 223.9 மிமீ

* மன்னார், மடு – 218.5 மிமீ

* இரத்தினபுரி – 208 மிமீ

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

* அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்

* அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்

* வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்

586402990_1479804990170428_2994850456343

590152307_1479804880170439_4012643140811

590377688_1479805673503693_7954821149556

590559701_1479811363503124_5524145560739

https://www.virakesari.lk/article/231741

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

3 months 2 weeks ago

New-Project-210.jpg?resize=750%2C375&ssl

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News)

இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1454076

யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!

3 months 2 weeks ago

யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!

written by admin November 27, 2025

3-4.jpeg?fit=1170%2C658&ssl=1

 யாழ். பல்கலையில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

4-8.jpeg?resize=800%2C450&ssl=1

கொடிகாமம் துயிலுமில்லம்
Kodikam2.jpeg?resize=800%2C450&ssl=1 Kodikamam1.jpeg?resize=800%2C450&ssl=1

யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின்  தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

கோப்பாய் துயிலுமில்லம்!

Kopay1.jpg?resize=800%2C450&ssl=1 Kopay2.jpg?resize=800%2C450&ssl=1

யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

நல்லூர் நினைவாலயத்தில்

Nallur1.jpg?resize=800%2C533&ssl=1 Nallur2.jpg?resize=800%2C317&ssl=1

யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

எள்ளங்குளம் துயிலுமில்லம்

Elankulam1.jpg?resize=800%2C450&ssl=1

யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

சாட்டி துயிலுமில்லம்
3-3.jpeg?resize=800%2C600&ssl=1

யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி  துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று  (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

-தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.

Mannar2.jpeg?resize=800%2C450&ssl=1

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று  (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .

மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர்  ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


https://globaltamilnews.net/2025/223152/

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை  - 2025

3 months 2 weeks ago

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை  - 2025

தலைமைச்செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27.11.2025

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும்.

தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் ஈகத்துடன் தொடங்கி, இன்றுவரை வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் எமது நெஞ்சில் அணையாத தீச்சுடராக, அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றும் வாழ்கின்றார்கள். விடுதலையின் விதைகளாகவே தமிழீழத்தாயின் மடியில் இவர்களை விதைத்தோம். அவர்களை வரலாற்றுத்தாய் அரவணைத்துக்கொண்டாள். இந்த மானமறவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நிலங்களைத் துயிலுமில்லங்களாக உருவாக்கிப் போற்றி, வணங்கிவருகின்றோம். இத்துயிலுமில்லங்கள், உலக இராணுவ விதிகளைமீறிச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தமிழீழ மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் கொதிநிலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இருந்தும், இத்துயிலுமில்லங்களிலும் அதனை அண்மித்தும், சிங்கள இனவெறி அரசின் எண்ணத்திற்கு மாறாக, மாவீரர் நாளில் தாயகத்திலுள்ள தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை ஆழமாக நேசித்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை இவ்வேளை அன்புரிமையுடன் இறுகப்பற்றிக்கொள்கின்றோம். இவர்களிற்கான மதிப்பளிப்புகளைத் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வோடு முன்னெடுத்துவருகின்றோம் என்பதில் அகநிறைவடைகின்றோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில், இன்று நாம் ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 2009 இற்கு பின்னரான சமகால நிலமை, எமது விடுதலை நோக்கிய பயணத்தைப் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் சவால்கள் நிறைந்த காலமாக மாற்றமடைந்துவருகின்றது. எமது மாவீரர்கள் எந்த மண்ணிற்காகப் போராடினார்களோ, அந்த மண் தற்போதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவருவதோடு, தமிழர் பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் எண்ணிக்கை மாறாது பேணப்படுவதும், சிறிலங்காப் படைமுகாம்களை மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் விவசாய நிலங்களிலும் அமைத்திருப்பதும் மகாவலி அபிவிருத்தி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற சிறிலங்கா அரச கட்டமைப்புகளாவன, தொன்றுதொட்டுத் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், தமிழ் மக்களின் உடமைகள் என்பன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி பௌத்தமயமாக்கல் மூலம் திட்டமிட்ட முறையில் சூறையாடப்படுவதால் தமிழீழத்தின் குடிப்பரம்பல் அமைப்பு மாற்றப்பட்டு, தமிழர்களின் இருப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு என்பது இன்றும் சாத்தியமற்றதொன்றாகவே உள்ளது. ஏனெனில், புனையப்பட்ட கதையான மகாவம்ச மனநிலையில் ஆழ வேரூன்றியிருக்கும் சிங்கள இனவாதத்தின் கட்டமைப்புகளான சனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை, நீதித்துறை, பௌத்ததேரர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளும் இணைந்து எமது தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குத் தடையாகவுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் வலதுசாரிகள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் அனைவரும் இனவெறியாளர்களே. தமிழீழத்தில் வாழும் மக்களின் இன அடையாளத்தையோ ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதையோ சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தெளிவான திடமான பார்வையுள்ளவர்களாகவே இவர்கள் திகழ்கின்றார்கள். இதன் காரணமாகவே சர்வதேசக் குமுகாயகத்தினை நோக்கி, தமிழீழ மக்கள் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடாத்திவருகின்றார்கள். சர்வதேசச் குமுகாயத்தின் ஈடுபாட்டுடனான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு நிரந்தர நீதியான தீர்வே சிங்கள தேசத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் வழிவகுக்கும்.

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் வழக்கமான வலதுசாரித்துவ மேட்டுக்குடிச் சிங்கள ஆட்சித்தலைமைகளுக்குப் பதிலாக, புரட்சிகர இடதுசாரித்துவச் சிந்தனைகள் நிறைந்துள்ளதாகக் காண்பித்த ஜே.வி.பி. தலைமையிலான அரசானது, ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இவ்வரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக, தமிழ் மக்களிற்கான உரிமைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும்கூட சம உரிமை வழங்குவதன் பெயரால், ஒற்றையாட்சிச் சிந்தனைக்குட்பட்டு, இலங்கையர் என்ற சிங்களத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், இரண்டறக் கலக்கும் சூட்சுமமான சிந்தனையினை முன்னிறுத்தி, தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான உரையாடலைக்கூட மறுதலிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

ஜே.வி.பி அரசின் இந்த நடவடிக்கைபற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் இதே ஜே.வி.பியினர் தான், தமிழர் தாயகத்தினைச் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கூறுபோட்டவர்கள். அத்தோடு, தமிழின அழிப்புப் போரிற்குச் சிங்கள இளைஞர்களை இணைத்து, போரைத்தொடர சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிற்கு முட்டுக்கொடுத்தவர்கள். தற்போதும், சிங்களத் தேசிய பௌத்தமயவாத சிந்தனையை வலுவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துத் தம்வசம் வைத்திருக்கவே திட்டமிட்டுவருகின்றார்கள். 

இத்தகைய சிந்தனை உள்ளவர்கள், தமிழ் மக்களிற்கு நியாயமான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு, இதயசுத்தியுடன் செயற்படுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, தாயகத்தில் நிலவும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. சிங்களத் தேசியவாத பௌத்தமயவாதத்திற்குத் தற்போது தலைமை தாங்கும் ஜே.வி.பியானது, கிராம மட்டங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் இளையோரையும் மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. சுருங்கக்கூறின், சிறிலங்கா அரசானது தமிழீழத்தேசத்தை சிங்களத்தேசமாக மாற்றி, எமது விடுதலை வேட்கையை மடைமாற்றம் செய்து, விடுதலைச் சிந்தனைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையையே இலக்காகக் கொண்டு நகர்த்திவருகின்றது.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நாம், கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். எமது மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, எமது தமிழ்த்தேசிய உணர்வை ஆழமாக விதைக்கவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகின்றது.

அத்துடன், தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினைப் பல வடிவங்களில் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்திலுள்ள மாணவர், இளையோர், பொதுமக்கள் என்று அனைவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, மனிதப் புதைகுழிகளிற்கான நீதி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, நீதிக்கான மக்கள் போராட்டங்களைச் சிறிலங்கா அரசிற்குத் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பல்வேறு வழிமுறைகளில் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அறவழியிலான இப்போராட்டங்கள், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. புலம்பெயர் உறவுகள், எமது மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்து, நீதிக்கான குரலைத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். நாம் வாழும் தேசங்களிலுள்ள அதிகார மையங்களை நோக்கி, நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்து அனைவரும் செயற்படவேண்டும்.

எமது அன்பிற்குரிய இளையோர்களே!

தமிழீழத்திற்கான விடுதலைப்பயணத்தின் நாளைய சிற்பிகளே, தமிழீழத்தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக ஒவ்வொரு இளையோரும் தாம் வாழும் நாடுகளில் உணர்வுடன் முன்னெடுத்துவருகின்ற உரிமைக்கான, உறுதியான பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

புதிய பரிணாமத்தை அடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பங்களின் ஊடாக, எமது போராட்ட வரலாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். சிறிலங்கா அரசானது தனது திட்டமிட்ட சூழ்ச்சிகளால், நாம் கடந்துவந்த வரலாற்றுப் பாதைகளைத் திசைமாற்றி, நாம் பேணிப்பாதுகாத்து வந்த எமது வரலாற்று ஆவணங்களை அழித்து, உண்மைக்குப் புறம்பான கருத்துருவாக்கங்களைத் திரைப்படங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தவறாக வெளியிட்டு, எமது போராட்டப்பாதையை மடைமாற்றத் தொடர்ந்தும் முயற்சிசெய்துவருகின்றது. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தி, எமது இன அடையாளங்களையும் உண்மையான போராட்ட வரலாற்றையும் அதன் ஆவணங்களையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிற்குக் கடத்தும் பாரிய பொறுப்பானது உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட எமது இன அடையாளங்களைப் பாதுகாத்து, புரட்சிகரப்பயணத்தைத் தொடர்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது.

எமது அன்பிற்குரிய தேசியச் செயற்பாட்டாளர்களே!

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, நீண்ட நெடிய எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில் நீங்கள் செலுத்திவரும் பங்கு மிகவும் முக்கியமானது. ஆயுதப்போராட்டம் வீச்சோடு இருந்த காலத்தில், நம்பிக்கையும் அதி உச்ச உறுதியோடும் நீங்கள் செய்த தேசம் நோக்கிய செயற்பாடுகள் அளப்பரியவை. ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர், புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்து, தொடர்ந்து மனத்துணிவோடு உறுதிதளராத உங்களது செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்களுடைய இந்த உறுதிதளராத செயற்பாடுகள்தான், இன்றுவரை எமது மாவீரர்களின் இலட்சியமாகிய தமிழீழத்திற்கான பாதையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எவ் இடர்வரினும், எமது இலட்சியத்தை நாம் அடையும்வரை உங்களது உறுதிதளராத பயணத்தை மேலும் வீச்சோடும் வேகத்தோடும் தொடர்வது அவசியமானது. இதுவே, மாவீரர்களின் ஈகங்களிற்கு நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

எமது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களே!

தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான பற்றைக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், தார்மீக அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தேசத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறும் வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலைப்போராட்ட வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளிற்கு வெளிப்படையாக நீங்கள் தெரிவிற்கும் எதிர்ப்புகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் இவ் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்தும் வகையில் நீங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு, எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு மக்களிற்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பார்ந்த மக்களே!

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வகுக்கப்பட்ட, தமிழீழ விடுதலை என்னும் மாபெரும் சித்தாந்த இலட்சியத்தைத் தாங்கி, அவருடைய சிந்தனையின் வழிகாட்டலில் தொடர்ந்தும் கொள்கை வழுவாது உறுதியுடன் தமிழீழ விடுதலைப்போராட்டச் சக்கரம் நகர்ந்துவருகிறது.

இன்றைய காலப்பரப்பில், விடுதலைப்போராட்டத்தின் அடித்தளத்தையும், தேசியத்தலைவரின் சிந்தனையான இயங்குவிசையையும் சிதைத்து, அழித்துப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய தமிழின விரோதக்குழுக்கள் சிறிலங்கா அரசினாலும் பிராந்திய உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்குநிலை மரபைத் தடம்மாற்றி, அழிக்கமுனையும் சக்திகளும் தலைதூக்குகின்றன. விடுதலை அவாவுடன் போராடும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை விதைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட விடுதலைச் சிந்தனைத் தளத்திலிருந்து தமிழினத்தை விலகச்செய்து தமிழீழம் என்னும் கோட்பாட்டை அடியோடு அழித்து விடுவதே இவர்களின் சதித் திட்டமாகும். இந்த நாசகாரப் புலனாய்வு நடவடிக்கையை உணர்ந்து, இன்னும் வீரியமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமிதுவாகும். தமிழின விரோதிகளை தெளிவாக இனம்கண்டு, நிராகரித்துக் களையெடுக்கவேண்டும் என்னும் விடுதலை விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் கொண்டிருக்க வேண்டியது தாயக விடுதலைக் கடமையாகும்.

சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அரசியலும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணைச்சக்திகளும் பல தீர்வுகள், மாற்றங்கள், பொருண்மிய அபிவிருத்தி, நல்லிணக்கம் போன்ற சொற்களின் போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது தேசிய விடுதலையைப் புதைத்துவிட முயற்சிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுபோயுள்ள சிறிலங்கா அரசானது, புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு என்ற பெயரில் அணுகி, அவர்களைப் பயன்படுத்தித் தமிழினத்தின் விடுதலைச் சித்தாந்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு தேவையான புதிய படிமங்களைக் கட்டமைக்க முழனகிறது. இந்த அரசியல்-பொருளாதார, புலனாய்வுச் சதித்திட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது தமிழினத்தின் இருப்பிற்கு அத்தியாவசியமானாதாகும்.

அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிய மக்கள் போராட்டங்களை இன்னும் வீச்சோடு தொடர்வதும் சர்வதேச அரசியல் தளங்களில் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும் எமது விடுதலைப் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் ஆகும். மாவீரர்கள் தங்கள் உயிர்விதையால் கட்டியெழுப்பிய ஒளிரும் பாதையில், தமிழீழ விடுதலையை நோக்கிய எமது பயணம் தளராது தொடரும் எத்தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறியக்கூடிய மனோபலத்தைத் தேசியத்தலைவரின் சிந்தனையும் வழிகாட்டலும் எமக்குத் தரும். மாவீரர்களின் ஆன்மபலம் எம்மோடு என்றும் துணை நிற்கும்.

“நாம் விதைத்த இலட்சிய விதை, எமது வீரர்களின் இரத்தத்தால் வளர்கிறது. அது விருட்சமாகி எமது கனவை நனவாக்கும்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை, எப்போதும் தமிழினத்தை வழிநடத்தும் விடுதலை ஒளியாக நிலைத்திருக்கும்.

எமது சத்திய இலட்சியமான தமிழீழ விடுதலையினை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் பயணத்தில் உறுதிதளராது போராடும் தமிழினம், தனது இலட்சிய விடுதலையை அடைந்தே தீரும். தேசியத்தலைவரின் சிந்தனை சுட்டி நிற்கும் விடுதலைப்பாதையில், தமிழீழம் என்னும் இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக!

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

VHBxsq0RqehUMFLCnBpp.jpg

a4cXSyos7NVP80qiEzGI.jpg

7GY7ePsLzKmeYBK6WXAl.jpg

odwkXET08VKPS1a4rNrm.jpg

ZJ7YquvascD7jXHDcpco.jpg

https://www.thaarakam.com/news/5e3c1ac3-5de9-4fd2-807e-c8bb0dc9a3cb

கெஹலியவின் காலத்தில் தரமற்ற கண் சொட்டு மருந்தால் பார்வை இழந்த 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சு

3 months 2 weeks ago

27 Nov, 2025 | 01:07 PM

image

(செ.சுபதர்ஷனி)

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தால் பார்வையை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாட்டுக்கு ஆளான பாதிக்கப்பட்ட  17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மேற்படி இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு  விண்ணப்பித்த 69 பேர் பிரட்னிசோலோன்  கண் சொட்டு மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என  நிருபனமாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட  கண் சொட்டு மருந்துகளில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஊடகமொன்றில் வெளியாகியுள்ள செய்தித் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள  விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட கண் செட்டு மருந்துகளில் எவ்வித பிரச்சனையும் இல்லை என ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. முன்னாள் அமைச்சர் கெஹலிய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தை உபயோகித்து பார்வையை இழந்த மற்றும்   பார்வை குறைபாட்டுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சுகாதார அமைச்சால்  இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தரமற்ற மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு பெற சுகாதார அமைச்சுக்கு சுமார் 99 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.  அவர்களில் 17 பேருக்கு 14,700,000 ரூபா இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.  அவற்றுள் 69 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் உண்மைத் தன்மைத் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த குழுவின் அறிக்கைகமைய, மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள்  என இனங்காணப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது. 

https://www.virakesari.lk/article/231616

மோசமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமை - ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்

3 months 2 weeks ago

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்!

27 Nov, 2025 | 05:28 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நிலவும்  மழையுடனான  காலநிலை எதிர்வரும்  இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலையாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட  மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்ககளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராயும் வகையில் வியாழக்கிழமை (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு  ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால்,  நேற்று  பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.

பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.மேலும்,உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு, நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும்  அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும்  புதிய தரவுகளின் அடிப்படையில்  அனர்த்த சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறும் கடும் மழை ஏற்பட்டால் நீர்ப்பாசன கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அது தொடர்பில் மிக நெருக்கமாக ஆய்வு செய்யுமாறும்  ஜனாதிபதி  மகாவலி மற்றும் நீர்ப்பாசன  பணிப்பாளர் நாயகங்களுக்கு  அறிவுறுத்தினார்.

தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த  நிலைமைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கருத்துக்களை முன்வைத்ததோடு அவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.

https://www.virakesari.lk/article/231685

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 2 weeks ago

27 Nov, 2025 | 05:14 PM

image

இலங்கைக்குக் அருகில் வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த தாழ் காற்றழுத்தம், இன்று (27) சில நேரங்களுக்கு முன் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய சூறாவளிக்கு "டித்வா"(Ditwah) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் யேமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டது. யேமனில் உள்ள சொகோத்ரா தீவின் பிரசித்தி பெற்ற டிட்வா லகூனை குறிக்கும் இந்தப் பெயர், அப்பகுதியின் தனித்துவமான கடல்சார் மற்றும் கரையோர சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. ESCAP ‘புயல்கள் தொடர்பான குழு’ முன்பே அங்கீகரித்துள்ள நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சூறாவளிகளுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் யேமன் பரிந்துரைத்த பெயராக ‘டித்வா’, அந்த நாட்டு கரையோர மரபையும் கடல் வளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இதேவேளை, இலங்கையின் கடல் பகுதியில் குறித்த சூறாவளி நீடிப்பதாலும் மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலத்தின் ஒரு பாதி இலங்கையின் நிலப்பகுதியில் நீடிப்பதாலும் இதன் நகர்வு தற்போது வரை குழப்பமான நிலையில் உள்ளதாகவும் எங்கு கரையை கடக்கும் என்பது தற்போது பெரும் சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்திய வானிலை மையம் இது குறித்து இப்போது வரை கரைய கடக்கும் இடம் பற்றி தெரிவிக்கவில்லை ஆனால் நிகழ்வானது சென்னை வரை பயணிக்கும் போல் வரைபடத்தில் காண்பித்துள்ளனர்.

590306336_1559158868549428_5317527966519

https://www.virakesari.lk/article/231682

சீரற்ற வானிலை; நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிப்பு!

3 months 2 weeks ago

27 Nov, 2025 | 05:03 PM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில், 

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே 75 பிரதான வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளை சீரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீரற்ற வானிலை காரணமாக  மத்திய, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

அத்துடன், வடமத்திய, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள வீதிகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில்  பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், மலைப் பிரதேசங்களில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக  பாதிக்கப்பட்ட வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க 24 மணி நேர அவசரகால சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/231680

விடுதலைப் புலி பயங்கரவாதிகளை 'வீரர்கள்' போல் கொண்டாட அனுமதித்தமை அரசாங்கத்தின் கோழைத்தனம் – சரத் வீரசேகர

3 months 2 weeks ago

27 Nov, 2025 | 04:19 PM

image

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலிப்  பயங்கரவாதிகள் 'வீரர்கள்' போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில்,

நேற்றும் இன்றும் மாவீரர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்வைக் கண்டோம். பிரதேசங்கள் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், அதாவது விடுதலைப் புலிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் பாரிய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பிரபாகரனின் பிறந்த நாளில், நாட்டின் பிரிவினைக்காக, தனிநாடு கோரி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை 'வீரர்கள்' போல கொண்டாடுவதற்கு இடமளிப்பது அரசாங்கத்தின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அந்த பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. ஆனால், இந்த அரசாங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டது.

எந்தத் தாயும் தனது பிள்ளைப் பயங்கரவாதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருந்தாலும், வீட்டில் ஒரு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், குழுவாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்துவது பிரிவினைவாதத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கும் சமமாகும்.

தினகரன் பத்திரிகை இந்த 'புலிகளின் அரசியல்' பற்றி விரிவான பிரச்சாரத்தை வழங்குகிறது. நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன், மீண்டும் ஒரு போரைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? இத்தகைய செயல்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படுமா? இது மேலும் பிரிவினையைத் தான் உருவாக்கும். இவற்றை நிறுத்துவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கனடாவுக்குச் சென்று, கனடா தமிழ் காங்கிரஸ் நடத்திய நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசும்போது, கனடாவில் வீதியை மூடி போராட்டங்கள் நடத்திய டயஸ்போரா தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உலகின் ஒரே நாடற்ற இனம் தமிழர்கள் என்றும், அது தமக்கு ஒரு துரதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நாட்டிலும் ஒரு தனி நாட்டை அல்லது தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர் கூறுகிறார். இது மீண்டும் விடுதலைப் புலிகளுக்குத் தலைதூக்க இராசமாணிக்கம் பகிரங்கமாக அழைப்பு விடுப்பது போல் தெரிகிறது. அவர் ஒருமித்த நாட்டிற்கு (Unitary State) சத்தியப்பிரமாணம் செய்தவர் என்பதால், அவர் ஒரு தனிநாடு பற்றிப் பேசினால், அவரால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது.

எமது இராணுவம் 295,000 அப்பாவி தமிழ் மக்களை மீட்டே இந்தப் போரில் வெற்றி பெற்றது. அந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீண்டும் குடியேற்றினோம். 

தமிழ் மக்களுக்கு அன்பு காட்டுவதாகக் கூறும் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அப்போது உதவி செய்ய வந்தார்களா? 

இன்று வடக்கிலும் வெளிநாடுகளிலும் அமர்ந்துகொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இது தேசத்துரோகச் செயலாகும்.

மட்டக்களப்பு, வவுணதீவில் அண்மையில் தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டதைக் கண்டோம். இது பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றம் என்பதால், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தால் பிணை கிடைக்காது. ஆனால், அதைத் தவிர வேறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மட்டும் 528 பௌத்த நினைவுச்சின்னங்கள் / தொல்லியல் தளங்கள் உள்ளன. வேறு எந்தப் பகுதியிலும் இத்தகைய எதிர்ப்பு இல்லை. இந்தப் பகுதிகளில் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது, 'இவை எமது பூர்வீக நிலம்' என்று காட்டுவதற்கே. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசாங்கம் உடனடியாக இந்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியிருந்தார். 

https://www.virakesari.lk/article/231668

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

3 months 2 weeks ago

27 Nov, 2025 | 04:06 PM

image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/231666

குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி!

3 months 2 weeks ago

குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி!

வல்வெட்டித்துறையில்  தமிழீழத்  தேசியத்தலைவர்  மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடைமுகாமை முன்னெடுத்தமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இரத்ததானச் சங்கத்தின் ஊடாக இதுதொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கதலைவர் பா.வீரசுரேந்திரன் தெரிவித்ததாவது, வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தர்களது ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை ஊடாக முன்னெடுக்கப்பட்ட 83ஆவது இரத்ததான முகாம் நேற்று 26ஆம் திகதி புதன்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் தற்போது பெரும் குருதித்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை ஈடுசெய்வதற்கு பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தோம். ஆனால் இந்தப் பணிகளுக்கு புலனாய்வுத் துறையால் பெரும் நெருக்குவாரங்கள் வழங்கப்படுகின்றன. 

குறித்த இரத்ததான முகாம் ஆரம்பமானது முதல் வல்வெட்டித்துறை பொலிஸ் தரப்பு தொடங்கி புலனாய்வுப் பிரிவினர் வரை மாறிமாறி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எமக்கு மன உளைச்சலைத் தரும் வகையில் இந்தச்செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. கெடுபிடிகள் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படுமாக இருந்தால் அந்த நாளுடன் இரத்ததான சேவையில் இருந்து முற்றாக விலகிவிடுவேன்  என்றார்.

குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி!

இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை !

3 months 2 weeks ago

இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை !

27 Nov, 2025 | 05:45 PM

image

இலங்கைக்கு வரும் விமானங்கள் அவசர வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாவிட்டால் அவை இந்தியாவின் திருவனந்தபுரம் (Trivandrum) அல்லது கொச்சி (Cochin) விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அநுரா கருணாதிலக தெரிவித்தார்.

இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! | Virakesari.lk

உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல்

3 months 2 weeks ago

27 Nov, 2025 | 07:10 PM

image

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. 

உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர்.

IMG-20251127-WA0077.jpg

IMG-20251127-WA0081.jpg

IMG-20251127-WA0084.jpg

IMG-20251127-WA0074.jpg

IMG-20251127-WA0075.jpg

IMG-20251127-WA0071.jpg


உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல்  | Virakesari.lk

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய்

3 months 2 weeks ago

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய்

27 Nov, 2025 | 03:58 PM

image

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/231662

தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!

3 months 2 weeks ago

kajendrakumar.jpg?resize=700%2C375&ssl=1

தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!

ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது சபை விவாதத்தை ஆரம்பித்தார்.

https://athavannews.com/2025/1453961

சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

3 months 2 weeks ago

சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

27 Nov, 2025 | 11:54 AM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க  1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2025-11-27_at_11.43.27.jp

https://www.virakesari.lk/article/231605

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 2 weeks ago

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

27 Nov, 2025 | 10:41 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென  மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

WhatsApp_Image_2025-11-27_at_09.56.57.jp

WhatsApp_Image_2025-11-27_at_09.56.46.jp

https://www.virakesari.lk/article/231582

பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன!

3 months 2 weeks ago

பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன!

Published By: Digital Desk 1

27 Nov, 2025 | 08:31 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், எதிர்வரும் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள, 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பில் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைந்துள்ளன. 

கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றுள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான ‘PROTTOY’ 90.1 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக CAPTAIN MD TOUHIDUL HAQUE BHUIYAN கடமையாற்றுகின்றார்.

2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பில் இரண்டு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றது. 

அதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐNளு ஏஐமுசுயுNவு 262.5 மீற்றர் நீளம் கொண்டது அதன் கட்டளை அதிகாரியாக உயிவயin யுளாழம சுயழ  கடமையாற்றுகின்றார்.

அதேநேரம், மற்றுமொரு இந்திய போர்க்கப்பலான INS VIKRANT 149.2 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக captain Ashok Rao கடமையாற்றுகின்றார்.

மேலும், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்புடன் இணைந்து, கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, இந்த போர்க்கப்பல்களின் குழுவினர்களில் பங்கேற்புடன் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம், விளையாட்டு திட்டம், சர்வதேச உணவு கண்காட்சி, சர்வதேச இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் நகர அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp_Image_2025-11-27_at_07.35.24.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.35.23.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.35.20.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.35.19.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.35.14.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.35.10.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.35.06.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.34.51.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.34.34.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.34.32.jp

WhatsApp_Image_2025-11-27_at_07.34.30.jp

https://www.virakesari.lk/article/231562

Checked
Tue, 03/17/2026 - 22:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr