Aggregator

குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்

3 months 2 weeks ago
இதை சரி செய்ய வேண்டியது அரசா?மக்களா? அரசில் இருந்து கொண்டே இயலாமையை மக்கள் முன் வைத்தால் மக்கள் என்ன செய்வார்கள்?

குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்

3 months 2 weeks ago
சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N. Vedanayagam) தெரிவித்துள்ளார். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி(Kilinochchi) கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று(16.03.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். போர்ச் சூழல் அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அரசாங்கத் தொழில்கள் இன்று பொதுமகன் அரச திணைக்களத்துக்குச் சென்றால் அரசாங்க அதிகாரிகள் பந்தடிப்பதுபோன்று அலைக்கழிக்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர். போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றினார்கள். இன்று அப்படியல்ல. கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. மக்களுக்கான சேவை இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை.” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/northern-province-governor-vedanayagam-speech-1742117936

குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்

3 months 2 weeks ago

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N. Vedanayagam) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி(Kilinochchi) கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று(16.03.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போர்ச் சூழல்

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். 

கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். 

குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர் | Northern Province Governor Vedanayagam Speech

இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. 

அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. 

அரசாங்கத் தொழில்கள் 

இன்று பொதுமகன் அரச திணைக்களத்துக்குச் சென்றால் அரசாங்க அதிகாரிகள் பந்தடிப்பதுபோன்று அலைக்கழிக்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர்.

போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றினார்கள். இன்று அப்படியல்ல. கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன.

குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர் | Northern Province Governor Vedanayagam Speech

தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன.

மக்களுக்கான சேவை

இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை.

குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர் | Northern Province Governor Vedanayagam Speech

ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு.

ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை.” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/northern-province-governor-vedanayagam-speech-1742117936

குரங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலங்களுக்கு சிறுத்தை சிறுநீர் தெளிப்பது தொடர்பில் கவனம்..

3 months 2 weeks ago
குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாகுபடி நிலங்களில் தெளிப்பதன் மூலம், எலிகள் மற்றும் குரங்குகளின் வரவை குறைக்க முடியும் என்றும், இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க, வனத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான எல்லையில் நாய்களை நிறுத்துவது விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. https://madawalaenews.com/16778.html

குரங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலங்களுக்கு சிறுத்தை சிறுநீர் தெளிப்பது தொடர்பில் கவனம்..

3 months 2 weeks ago

குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது.

விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாகுபடி நிலங்களில் தெளிப்பதன் மூலம், எலிகள் மற்றும் குரங்குகளின் வரவை குறைக்க முடியும் என்றும், இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க, வனத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான எல்லையில் நாய்களை நிறுத்துவது விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது.

https://madawalaenews.com/16778.html

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வதுஇது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு...” - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

3 months 2 weeks ago

16 MAR, 2025 | 11:53 AM

image

உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சி எங்களை திரைப்படங்களை மொழி எல்லைகள் கடந்து ரசிக்கும்படி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு, பவன் கல்யாண் கடந்த 2017-ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிவில் பவன், “வட இந்திய அரசியல்வாதிகள் நம் கலாச்சார பன்முகத்தன்மையை புரிந்து உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய கருத்தையும், இன்றையும் கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை கனிமொழி விமர்சித்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/209354

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வதுஇது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு...” - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

3 months 2 weeks ago
16 MAR, 2025 | 11:53 AM உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சி எங்களை திரைப்படங்களை மொழி எல்லைகள் கடந்து ரசிக்கும்படி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு, பவன் கல்யாண் கடந்த 2017-ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிவில் பவன், “வட இந்திய அரசியல்வாதிகள் நம் கலாச்சார பன்முகத்தன்மையை புரிந்து உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய கருத்தையும், இன்றையும் கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை கனிமொழி விமர்சித்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/209354

அமெரிக்க புயலில் பலர் பலி.

3 months 2 weeks ago
தற்போது நான் நிற்கும் வடகரோலினாவை நோக்கி புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிற்பகல் 5-6 மணிவரை அகோர தாண்டவமாடும் என்று வானிலை ஆராச்சியாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லை

3 months 2 weeks ago
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கிறார். மேலும் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி, தென்பகுதி ஆழ்கடல் பன்னாட் கல மீன்பிடி மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய ஒன்றாகவும் வடக்கு மீனவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்கே பரந்த ஆழ்கடல் இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டுமான வசதிகள் முக்கியமாக பலநாட் கலங்களுக்கான முதலீட்டு வசதியின்மை, துறைமுகம் , பயிற்சி, மற்றும் உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளமை குறித்தும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வடகரையோரத்தில் அடுக்கடுக்காக படைமுகாம்களை வைத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் ஊடுருவலையோ போதைவஸ்து கடத்தலையோ அவர்களால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பது குறித்தும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் திணறிப்போயிருந்த அரசு சார்பிலே கடற்றொழில் அமைச்சர் வடக்கு மீனவர்களின் நம்பிக்கையை காப்போம் எனவும் வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் எனவும் ஒப்பாரி வைத்திருக்கிறார். தவிர அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, இந்தியாவை நோக்கி வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பின் எல்லை தாண்டி மேற்கொள்ளும் சட்டபூர்வமற்ற மீன்பிடியினை தடுக்க உதவ வேண்டுமெனவும் மன்றாடியிருக்கின்றார்.வடக்கு என்.பி.பி. தமிழ் உறுப்பனர்களோ, வன்னி உறுப்பினர்களோ வாய் பிளந்து கொட்டாவி விடும் நிலைதான். மீனவர் துன்பம் குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவினுடைய நிலைப்பாடு புரியாத ஒன்றல்ல, அவர்களை நம்பமுடியாது. எமது கோரிக்கை நாம் சிறிலங்கா அரசிடம் கோருவது என்னவெனில், அரசு வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் முதலில் உள்ளூர் இழுவைமடித் தொழில் தடையினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுதான். 2017 ல் இழுவைமடி உள்ளூரில் தடையென சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் இதுவரை அது அமுற்படுத்தப்படவில்லை. முதலில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல தடவைகள் இது குறித்து பேசியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே நிலைமை உள்ளது. மேலும் கண்டல் கிளைகளையும் மரக்குற்றிகளையும் வெட்டி கடற்பகுதிகளில் அதனை அமிழ்த்தி மீனை ஒருங்குசேர விட்டு வெடிகளை அதன் மீதும் பவளப்பாறைத் தொடர்கள் மீதும் வீசி எறிந்து மீன்களை வேட்டையாடுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையில் படையினர் பார்த்திருக்க டைனமெட் வெடி வைத்து மீன்களைக் கொல்லும் நாசகார செயற்பாடுகளையும், கடலில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கிலான கம்பிப்பொறி வலைகளை அகற்றி சிற்றளவு மீன்பிடியாளர்களின் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் சொந்த இடம் திரும்பி தமது மீன்பிடிச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து வரும் தென்பகுதி மீனவர்களை படையினரின் உதவியுடன் நிரந்தர குடியிருப்புக்களை அமைப்பது, அவ்விடங்களில் பிக்குகளை கொண்டு விகாரைகளை அமைப்பது போன்ற இழிவான, அருவருப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது வெறுக்கத்தக்கது.ஏற்றுக் கொள்ளவும் முடியாதது. மேலும், கரையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படை முகாம்களால் மீனவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம்.தேசிய பாதுகாப்புக்கென பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்து படையினரை நிலைகொள்ள வைப்பதைத் தவிர தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கஞ்சாக்கடத்தலைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லையே? மனித புதைகுழிகளும் பெளத்தர்களே இல்லாத இடங்களிலும் படைமுகாம்களிலும் துப்பாக்கி முனையிலே விகாரைகளை கட்டி அருவருப்பை ஊட்டியதும் தவிர, காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் எவற்றையும் வடக்கில் காணோம். தேசப்படத்தில் மட்டுமே சர்வதேச கடல் எல்லை வடக்கிலே பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னார் குடா ஆகிய பாரம்பரிய கடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் வசமே உள்ளன. இதை ஊடறுத்தே 1974, 76 களில் இந்திய – இலங்கை எல்லைக்கோடு வரையப்பட்டது. கச்சதீவு அன்றைய பாரதப் பிரதமரின்( இந்திரா காந்தி) ஆலோசனையின் பிரகாரம் இலங்கை பிரதமரின் ( சிறிமாவோ) விருப்பிற்கிணங்க இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆயினும் ஐம்பது வருடங்களாக கச்சதீவில் வடக்கு தமிழர் அடைந்த நன்மை எவையுமே இல்லை. இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன. எல்லாமே ஒன்றுதான். கச்சதீவும் ஐந்து மைல் சுற்றாடல் பரப்பு கடல் பகுதியும் மீனவர்களுக்காக குத்தகைக்குத் தேவையென ஓர் கோரிக்கை இந்திய தரப்பில் (பேராசிரியர் சூரியநாராயன்) ஓர் கருத்து முன்னர் முன்வைக்கப்பட்டது. பாக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பது வடக்கு கடலில் சவப்பெட்டிகளை மிதக்க விடுவதற்குச் சமம். புதுக்கோட்டை நாகபட்டின மீனவர்களின் தளமாக பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியும், இராமேஸ்வர மீனவர்களின் பகுதிகளாக பாக்கு குடா கடலும், தூத்துக்குடி மீனவர்களுக்கான பகுதியாக மன்னார் குடாக்களும் பறிபோயுள்ளன. ஏறத்தாழ வடக்கு கடல் முழுவதும் பறிபோயுள்ளது. இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லைக்கோடு தேசப்படத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் அந்த எல்லைக் கோடானது வடக்கு கரையோரமாக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.சர்வதேச கடற் சட்டம் இங்கு செல்லுபடியாகாத ஓர் விடயமாகவே உள்ளது. இந்திய மீனவர்களுக்கு கச்சதீவு அமைவிடம் எது, எல்லைக்கோடு எது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் தெரியாது என்பதே இந்தியாவின் நிலை. https://thinakkural.lk/article/315964

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது; யாழ். பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர்

3 months 2 weeks ago
16 MAR, 2025 | 02:12 PM (எம்.நியூட்டன்) கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார். சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினரீக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இது கவலையான விடயமாக உள்ளது. கணித விஞ்ஞான துறையில் மாணவர்கள் தெரிவு செய்வது குறைவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. சில தவறான கண்ணோட்டமோ தவறான புரிதலோ என்பது புரியாதுள்ளது. கணித விஞ்ஞான துறைகளை விட கலைத்துறையில் வேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையும் காணப்படுகிறது. ஆனால் கணித விஞ்ஞான துறையில் வேலை இல்லை என்று கூறுவதில்லை. படித்து முடிந்த கையோடு ஆக குறைந்தது. ஒரு வருடம் காத்திருக்க வேண்டிவரும் அதற்குள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைத்துவிடும் அல்லது மேற்படிப்புக்கு செல்லலாம். கணித, விஞ்ஞான துறைக்கு தற்போதும் ஆசிரியர்கள் பற்றாகுறையாகவே உள்ளது. மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தல்களை, தயார்படுத்தல்களை செய்தால் அந்த துறையில் மாணவர்களை முன்னேற்றமடைய செய்யலாம். எனைய துறையைப்போல் வேலையில்லா போராட்டம் வேலையில்லா பிரச்சினைக்குள் சிக்குப் படதேவையில்லை என்பது எனது கருத்தாகும். கணித விஞ்ஞான துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே சட்டத்தரணி இ. செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையை நீண்டகாலமாக நடாத்திவருகிறார். அரசாங்கமும் இந்த துறையை ஊக்கப்படுத்திவருகிறது. தற்போது இப்போட்டியில் பலமாணவர்கள் பங்குபற்றிவருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. இது தொடரவேண்டும். இதேவேளை பல்கலைக்கழகங்களுடாகவோ அல்லது வேறு நிறுவனங்களுடாககவோ புத்தாக்க போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றிலும் மாணவர்களை ஊக்கத்தோடு பங்குபற்றவைக்க வேண்டும். சில் புத்தாக்க போட்டிகளில் ஒரு சில பாடசாலைகளே பங்குபற்றுகின்றன கிரமங்களில் உள்ள பாடசாலைகள் இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளன குறிப்பாக தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளது. இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தடைகள் காணப்பட்டால் ஏற்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை சீர்செய்து கொள்ளலாம். தற்போதைய சூழலில் குறிப்பாக 2009 ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞான தூறையில் 65 வீதமனா மாணவர்கள் தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்களே கல்வி கற்கிறார்கள். தமிழ் மாணவர்களின் வீதம் குறைந்துகொண்டு செல்கிறது என்றார். https://www.virakesari.lk/article/209359

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது; யாழ். பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர்

3 months 2 weeks ago

16 MAR, 2025 | 02:12 PM

image

(எம்.நியூட்டன்)

கணித விஞ்ஞான துறையில் தமிழ்  மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார்.

சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை (15)  தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினரீக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கணித விஞ்ஞான துறையில் தமிழ்  மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இது கவலையான விடயமாக உள்ளது.  கணித விஞ்ஞான துறையில்  மாணவர்கள் தெரிவு செய்வது குறைவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. சில தவறான கண்ணோட்டமோ  தவறான புரிதலோ என்பது புரியாதுள்ளது. 

கணித விஞ்ஞான துறைகளை விட கலைத்துறையில் வேலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையும் காணப்படுகிறது.  ஆனால் கணித விஞ்ஞான துறையில்  வேலை இல்லை என்று கூறுவதில்லை.

படித்து முடிந்த கையோடு ஆக குறைந்தது. ஒரு வருடம் காத்திருக்க வேண்டிவரும் அதற்குள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ  வேலை கிடைத்துவிடும்  அல்லது மேற்படிப்புக்கு செல்லலாம்.

கணித, விஞ்ஞான துறைக்கு தற்போதும் ஆசிரியர்கள் பற்றாகுறையாகவே உள்ளது. மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தல்களை, தயார்படுத்தல்களை செய்தால் அந்த துறையில் மாணவர்களை முன்னேற்றமடைய செய்யலாம். 

எனைய துறையைப்போல் வேலையில்லா போராட்டம் வேலையில்லா பிரச்சினைக்குள் சிக்குப் படதேவையில்லை என்பது எனது கருத்தாகும்.

கணித விஞ்ஞான துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே சட்டத்தரணி இ. செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில்  மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையை நீண்டகாலமாக நடாத்திவருகிறார். அரசாங்கமும் இந்த துறையை ஊக்கப்படுத்திவருகிறது.

தற்போது இப்போட்டியில் பலமாணவர்கள் பங்குபற்றிவருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. இது தொடரவேண்டும். இதேவேளை பல்கலைக்கழகங்களுடாகவோ அல்லது வேறு நிறுவனங்களுடாககவோ புத்தாக்க போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றிலும் மாணவர்களை ஊக்கத்தோடு பங்குபற்றவைக்க வேண்டும்.

சில் புத்தாக்க போட்டிகளில் ஒரு சில பாடசாலைகளே பங்குபற்றுகின்றன கிரமங்களில் உள்ள பாடசாலைகள்  இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளன குறிப்பாக தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவாகவுள்ளது. 

இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவதற்கு  தடைகள் காணப்பட்டால் ஏற்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை சீர்செய்து கொள்ளலாம். 

தற்போதைய சூழலில் குறிப்பாக 2009 ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞான தூறையில் 65 வீதமனா மாணவர்கள் தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்களே கல்வி கற்கிறார்கள். தமிழ் மாணவர்களின் வீதம் குறைந்துகொண்டு செல்கிறது என்றார்.

IMG_20250315_130812.jpg

IMG_20250315_113725.jpg

IMG_20250315_112158.jpg

IMG_20250315_114741.jpg

https://www.virakesari.lk/article/209359

பவர் பேங்குகளுக்கு எதிராக விமான நிறுவனங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேவின் பட்லர் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஒரு பவர் பேங்க்-ஆல் தீ விபத்து ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28, 2025 அன்று ஏர் பூசன் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. இதில் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மார்ச் 14 அன்று, விசாரணையில் பவர் பேங்க் செயலிழந்திருப்பது தெரியவந்ததாகக் கூறியது. அதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் பவர் பேங்க் இருந்தது. அங்குதான் முதலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. தாங்கள் கண்டுபிடித்த பவர் பேங்க்கில் தீப்பற்றியதற்கான தடயங்கள் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், பவர் பேங்கின் பேட்டரி ஏன் சேதமடைந்தது என்று தெரியவில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு இடைக்கால விசாரணை அறிக்கை மட்டுமே. விமானத்தின் இறுதி விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' யார்? பின்னணி தகவல்கள் பூமிக்கு வரும் விண்கலத்தின் வேகம் 39,000 கிலோமீட்டரில் இருந்து சில நிமிடங்களில் 800 கி.மீ.யாக குறைவது எப்படி? வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் ஆதரவுக் குழு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சியா? 2016 முதல் தடை உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, செக் இன் உடைமைகளுடன் (விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒப்படைக்கும் உடைமைகள்) பவர் பேங்குகளை எடுத்துச் செல்ல பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளன. பவர் பேங்குகளில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும், அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்ட அறிவுரைகளின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானத்தின் செக் இன் உடைமைகளுடன் எந்தவித லித்தியம்-ஐயன் பேட்டரிகளையும் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. தென் கொரியாவில் ஏர்பஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, ஏர் பூசன் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. பயணிகள் விமானத்தின் உள்ளே இருக்கைகளுக்குக் கொண்டு செல்லும் உடைமைகளில் பவர் பேங்க்குகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. பவர் பேங்குகள் அதிக வெப்பமாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - எப்போது திரும்புவார்?7 மணி நேரங்களுக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ்: மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன?13 மார்ச் 2025 பாகிஸ்தான்: கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்பு, 33 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை13 மார்ச் 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தென் கொரியாவில் விமான விபத்துக்கான காரணம் குறித்த இடைக்கால விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பவர் பேங்க் காரணமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது அதே நேரத்தில், சீனா ஏர்லைன்ஸ் மற்றும் தாய் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் இதே போன்ற விதிகளை அமல்படுத்துகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விலைக்குறைவான விமான சேவை பிரிவான ஸ்கூட், ஏப்ரல் 1 முதல் விமானங்களில் பவர் பேங்க்குளைப் பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை செய்ய உள்ளது. நாட்டில் விமானங்களில் ஏறும் பயணிகள், கையில் எடுத்து செல்லும் பேட்டரிகள் மற்றும் சார்ஜர்களை இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் வைக்காமல், தங்களுடன் வைத்துக்கொள்ளுமாறு பிப்ரவரி 28 அன்று, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. லித்தியம் பேட்டரிகளால் கப்பல்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. மார்ச் 2017 இல், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து பெய்ஜிங்குக்குச் சென்ற விமானத்தில் ஒரு பெண்ணின் ஹெட்ஃபோன்கள் வெடித்தன. இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. தனது ஹெட்ஃபோன்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்த அந்தப் பெண், உடனடியாக அவற்றைக் கழற்றி தரையில் வீசினார். விபத்துக்குப் பிறகு, லித்தியம் அயன் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. முன்னதாக, சிட்னியில் ஒரு விமானத்தில் உடைமைகள் வைத்திருந்த பகுதியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர் உடைமைகளில் வைக்கப்பட்டிருந்த லித்தியம் அயன் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஜியோ, ஏர்டெல் ஒப்பந்தம் - இணைய வேகம், கட்டணம் எவ்வளவு இருக்கும்?12 மார்ச் 2025 ரூ.13,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை: வட கொரிய ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி?12 மார்ச் 2025 பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?12 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லித்தியம் அயன் பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை குப்பைக் கிடங்குகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 700க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுற்றுச்சூழல் சேவைகள் சங்கம் 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை தூக்கி வீசப்படும் லித்தியம் பேட்டரிகளால் ஏற்படுகின்றன. லித்தியம் அயன் பேட்டரிகள் சேதம் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ வெடிக்கக்கூடும். இந்த பேட்டரிகள் பவர் பேங்குகளில் மட்டுமல்ல, பல் துலக்கும் பிரஷ்கள், பொம்மைகள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czed0xky599o

பவர் பேங்குகளுக்கு எதிராக விமான நிறுவனங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?

3 months 2 weeks ago

பவர் பேங்குகளுக்கு எதிராக விமான நிறுவனங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கேவின் பட்லர்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தென் கொரியாவில் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஒரு பவர் பேங்க்-ஆல் தீ விபத்து ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28, 2025 அன்று ஏர் பூசன் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. இதில் மூன்று பேர் லேசான காயமடைந்தனர்.

தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மார்ச் 14 அன்று, விசாரணையில் பவர் பேங்க் செயலிழந்திருப்பது தெரியவந்ததாகக் கூறியது. அதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் பவர் பேங்க் இருந்தது. அங்குதான் முதலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

தாங்கள் கண்டுபிடித்த பவர் பேங்க்கில் தீப்பற்றியதற்கான தடயங்கள் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், பவர் பேங்கின் பேட்டரி ஏன் சேதமடைந்தது என்று தெரியவில்லை.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு இடைக்கால விசாரணை அறிக்கை மட்டுமே. விமானத்தின் இறுதி விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

2016 முதல் தடை

உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, செக் இன் உடைமைகளுடன் (விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒப்படைக்கும் உடைமைகள்) பவர் பேங்குகளை எடுத்துச் செல்ல பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளன.

பவர் பேங்குகளில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.

இந்த பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும், அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்ட அறிவுரைகளின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானத்தின் செக் இன் உடைமைகளுடன் எந்தவித லித்தியம்-ஐயன் பேட்டரிகளையும் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

தென் கொரியாவில் ஏர்பஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, ஏர் பூசன் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. பயணிகள் விமானத்தின் உள்ளே இருக்கைகளுக்குக் கொண்டு செல்லும் உடைமைகளில் பவர் பேங்க்குகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

பவர் பேங்குகள் அதிக வெப்பமாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,தென் கொரியாவில் விமான விபத்துக்கான காரணம் குறித்த இடைக்கால விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பவர் பேங்க் காரணமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது

அதே நேரத்தில், சீனா ஏர்லைன்ஸ் மற்றும் தாய் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் இதே போன்ற விதிகளை அமல்படுத்துகின்றன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விலைக்குறைவான விமான சேவை பிரிவான ஸ்கூட், ஏப்ரல் 1 முதல் விமானங்களில் பவர் பேங்க்குளைப் பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை செய்ய உள்ளது.

நாட்டில் விமானங்களில் ஏறும் பயணிகள், கையில் எடுத்து செல்லும் பேட்டரிகள் மற்றும் சார்ஜர்களை இருக்கைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் வைக்காமல், தங்களுடன் வைத்துக்கொள்ளுமாறு பிப்ரவரி 28 அன்று, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

லித்தியம் பேட்டரிகளால் கப்பல்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன.

மார்ச் 2017 இல், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து பெய்ஜிங்குக்குச் சென்ற விமானத்தில் ஒரு பெண்ணின் ஹெட்ஃபோன்கள் வெடித்தன.

இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. தனது ஹெட்ஃபோன்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்த அந்தப் பெண், உடனடியாக அவற்றைக் கழற்றி தரையில் வீசினார்.

விபத்துக்குப் பிறகு, லித்தியம் அயன் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

முன்னதாக, சிட்னியில் ஒரு விமானத்தில் உடைமைகள் வைத்திருந்த பகுதியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டதால் விமானம் நிறுத்தப்பட்டது.

பின்னர் உடைமைகளில் வைக்கப்பட்டிருந்த லித்தியம் அயன் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லித்தியம் அயன் பேட்டரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லித்தியம் அயன் பேட்டரிகள் கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை

குப்பைக் கிடங்குகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 700க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுற்றுச்சூழல் சேவைகள் சங்கம் 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை தூக்கி வீசப்படும் லித்தியம் பேட்டரிகளால் ஏற்படுகின்றன.

லித்தியம் அயன் பேட்டரிகள் சேதம் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ வெடிக்கக்கூடும். இந்த பேட்டரிகள் பவர் பேங்குகளில் மட்டுமல்ல, பல் துலக்கும் பிரஷ்கள், பொம்மைகள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czed0xky599o

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 பதில்கள் No Question Team1 Team 2 No Result Tie Prediction 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB No Result Tie KKR 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR No Result Tie RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI No Result Tie CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG No Result Tie LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS No Result Tie GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR No Result Tie KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG No Result Tie LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB No Result Tie CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI No Result Tie GT 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH No Result Tie DC 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK No Result Tie CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR No Result Tie KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS No Result Tie LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT No Result Tie GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH No Result Tie KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI No Result Tie MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC No Result Tie CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR No Result Tie RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG No Result Tie KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT No Result Tie GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB No Result Tie MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK No Result Tie CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR No Result Tie GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC No Result Tie DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR No Result Tie CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT No Result Tie LSG 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS No Result Tie SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB No Result Tie RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI No Result Tie MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK No Result Tie CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR No Result Tie KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR No Result Tie RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH No Result Tie MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS No Result Tie PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC No Result Tie GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG No Result Tie RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB No Result Tie RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK No Result Tie CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT No Result Tie GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC No Result Tie LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI No Result Tie MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR No Result Tie RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH No Result Tie CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS No Result Tie KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG No Result Tie LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB No Result Tie DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT No Result Tie GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR No Result Tie KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS No Result Tie CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI No Result Tie RR 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH No Result Tie GT 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK No Result Tie CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR No Result Tie KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG No Result Tie LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC No Result Tie DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT No Result Tie GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK No Result Tie KKR 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC No Result Tie DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB No Result Tie RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR No Result Tie SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI No Result Tie MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT No Result Tie GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR No Result Tie RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH No Result Tie SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG No Result Tie GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC No Result Tie MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS No Result Tie RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR No Result Tie KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK No Result Tie GT 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH No Result Tie SRH 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT GT KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) GT #3 - ? (2 புள்ளிகள்) KKR #4 - ? (1 புள்ளி) RR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! RCB 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sanju Samson 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yashasvi Jaiswal 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! - நிலாந்தன்

3 months 2 weeks ago
ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன் adminMarch 16, 2025 சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும். இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது. ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா? அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார். அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான். 2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன? பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும். ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார். இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது. எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா? மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார். இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. https://globaltamilnews.net/2025/213515/

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! - நிலாந்தன்

3 months 2 weeks ago

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன்

adminMarch 16, 2025

ranil-wickremesinghe-al-jazeera.jpg

சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும்.

இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது.

ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று.

ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா?

அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான்.

2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன?

பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும்.

ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார்.

இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது.
எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா?

மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார்.

இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை.

https://globaltamilnews.net/2025/213515/

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - நிராகரித்தார் ரணில்

3 months 2 weeks ago
16 MAR, 2025 | 02:56 PM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜேவிபியினர் நாடாளவிய ரீதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அக்காலப்பகுதியில் மிக முக்கியமான பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன அமைச்சர்களிடம் ஒப்படைத்தார். பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பொருளாதார ரீதியில் முக்கியமான பல கட்டமைப்புகள் காணப்பட்டன. இந்த பகுதிகளை பாதுகாப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்தினார்கள். பாதுகாப்பு படையினரை உள்வாங்குவதற்காக கைவிடப்பட்ட கட்டிடங்கள், இலங்கை உரஉற்பத்தி கூட்டுத்தாபனத்தின் கைவிடப்பட்ட வீடுகளை பாதுகாப்பு படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் பல ஊழியர்கள் அந்த வீடுகளில் வசித்து வந்தனர். இந்த பயங்கரமான காலப்பகுதியில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. அதன் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். பிரதிபாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண என்னை தொடர்புகொண்டு எவரும் வசிக்காத நிலையில் உள்ள வீடுகளை பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் அவர்களின் பாதுகாப்பிற்காக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து அந்த வீடுகளின் நிர்வாகி களனி பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி நளின் தெல்கொடவிடம் அந்த வீடுகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்தது. 1994 இன் பின்னர் ஜனாதிபதி சந்திகா குமாரதுங்க பந்தலந்த பகுதியில் காணப்பட்ட சித்திரவதை முகாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆணைக்குழுவை நியமித்தவேளை, பல தனிநபர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டனர். நானும் சாட்சியாக அழைக்கப்பட்டேன். அவ்வேளை நான் எதிர்கட்சிதலைவராகயிருந்தேன். அரசியல் நோக்கங்களிற்காகவே பட்டலந்த ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது, எனினும் ஆனால் அந்த நோக்கம் வெற்றியளிக்கவில்லை. வீடுகளை வழங்கும் பணியை பொலிஸ்மா அதிபர் ஊடாகவே முன்னெடுத்திருக்கவேண்டும் ஆனால், நான் அதனை வழங்கியமை தொடர்பிலேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/209363

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - நிராகரித்தார் ரணில்

3 months 2 weeks ago

16 MAR, 2025 | 02:56 PM

image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது  குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜேவிபியினர் நாடாளவிய ரீதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அக்காலப்பகுதியில் மிக முக்கியமான பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பொருளாதார ரீதியில் முக்கியமான பல கட்டமைப்புகள் காணப்பட்டன.

இந்த பகுதிகளை பாதுகாப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்தினார்கள்.

பாதுகாப்பு படையினரை உள்வாங்குவதற்காக கைவிடப்பட்ட கட்டிடங்கள், இலங்கை உரஉற்பத்தி கூட்டுத்தாபனத்தின் கைவிடப்பட்ட வீடுகளை பாதுகாப்பு படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் பல ஊழியர்கள் அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.

இந்த பயங்கரமான காலப்பகுதியில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. அதன் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார்.

பிரதிபாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண என்னை தொடர்புகொண்டு எவரும் வசிக்காத நிலையில் உள்ள வீடுகளை பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் அவர்களின் பாதுகாப்பிற்காக  வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த வீடுகளின் நிர்வாகி களனி பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி நளின் தெல்கொடவிடம் அந்த வீடுகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்தது.

1994 இன் பின்னர் ஜனாதிபதி சந்திகா குமாரதுங்க பந்தலந்த பகுதியில் காணப்பட்ட சித்திரவதை முகாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆணைக்குழுவை நியமித்தவேளை, பல தனிநபர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டனர். நானும் சாட்சியாக அழைக்கப்பட்டேன். அவ்வேளை நான் எதிர்கட்சிதலைவராகயிருந்தேன்.

அரசியல் நோக்கங்களிற்காகவே பட்டலந்த ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது, எனினும் ஆனால் அந்த நோக்கம் வெற்றியளிக்கவில்லை.

வீடுகளை வழங்கும் பணியை பொலிஸ்மா அதிபர் ஊடாகவே முன்னெடுத்திருக்கவேண்டும் ஆனால், நான் அதனை வழங்கியமை தொடர்பிலேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/209363