Aggregator

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

3 months 2 weeks ago
செவ்வந்தி… மாலதீவுக்கு சென்று விட்டதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதே மாதிரி ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கருதப்படுபவரும், முஸ்லீம் மதத்துக்கு மாறியவருமான புலேந்தினி என்ற பெண்ணையும் பல வருடங்களாக தேடுகின்றார்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒளிப்பதில்…. பெண்கள் கெட்டிக்காரர் போலுள்ளது. ஆண்கள்தான்… சூடு ஆற முதல் அம்பிட்டு விடுகின்றார்கள்.

பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

3 months 2 weeks ago
நல்ல செயல். இது நிச்சயம் மாணவர்களை தவறான வழியில் செல்ல விடாமல், கல்வியில் முன்னேற ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

3 months 2 weeks ago
கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி! கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இன்று (17) கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். விசாரணை சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவை சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர் கடமை தவறியதால் இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபரான அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேக நபரின் தொலைப்பேசி அழைப்புகளின் பதிவை அழைக்கவும் காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். இதன்படி, கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். https://ibctamil.com/article/jailer-ganemulla-sanjeewa-murder-case-arrested-1742216032

பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

3 months 2 weeks ago

'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,JAYARAJ S

படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 17 மார்ச் 2025, 05:55 GMT

    புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்

அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார்.

"நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு."

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,SHEIK HASAN K

ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன.

துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது.

"செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ்.

"அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க."

அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,GOVARTHANAN L S

படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது

'அப்பா ஒரு ஹீரோ'

அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M

படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார்

"அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி.

அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்."

அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,MUKESH

படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600

தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

"மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,SARAN R

படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது

கடின உழைப்பும் சொற்ப வருமானமும்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார்.

"புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ்.

அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,MUKESH K

படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது

"அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது."

இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ்.

இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,KEERTHI S

படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி

தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

"அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி.

"அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்."

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,SHEIK HASAN K

படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர்

இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார்.

"நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார்.

வேலை செய்யும் அம்மாவின் கைகள்

வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர்.

"இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,RASHMITHA T

படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்‌ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

"வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்‌ஷ்மிதா.

சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo

பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

3 months 2 weeks ago
'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார். "நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு." பட மூலாதாரம்,SHEIK HASAN K ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன. துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது. "செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ். அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன? இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் அன்று ஓய்வறியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் இன்று பேரமைதி - தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? "அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க." அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GOVARTHANAN L S படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது 'அப்பா ஒரு ஹீரோ' அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார். பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார் "அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி. அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்." அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது. பட மூலாதாரம்,MUKESH படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600 தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். "மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார். பட மூலாதாரம்,SARAN R படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது கடின உழைப்பும் சொற்ப வருமானமும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார். "புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ். அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர். 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்14 மார்ச் 2025 கோவையில் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?13 மார்ச் 2025 பட மூலாதாரம்,MUKESH K படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது "அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது." இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ். இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது. பட மூலாதாரம்,KEERTHI S படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார். "அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி. "அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்." பட மூலாதாரம்,SHEIK HASAN K படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர் இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார். "நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார். வேலை செய்யும் அம்மாவின் கைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர். "இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார். பட மூலாதாரம்,RASHMITHA T படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்‌ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார். "வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்‌ஷ்மிதா. சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

3 months 2 weeks ago
வன்கொடுமைக்கு ஆளான பெண் வைத்தியரின் தொலைபேசி கண்டுபிடிப்பு அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரால் திருடப்பட்ட ஐபோன் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் மறைந்திருந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக கல்னேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புகைப்படங்கள் கல்னேவ காவல் பிரிவில் உள்ள நிதிகும்ப யாய மற்றும் மஹாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் பகுதியில் இரண்டு காவல் குழுக்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சந்தேகபர் பெண் வைத்தியரின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக எடுத்து, மிரட்டி, அதன் கடவுச்சொல்லைப் பெற்று பின்னர் அதே தொலைபேசியிலிருந்து அவரது புகைப்படங்களை எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்திருந்தது. நீதிமன்ற உத்தரவு இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேகநபரால் திருடப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்த தொலைபேசி தற்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/stolen-phone-of-anuradhapura-hospital-doctor-found-1742218055

அமெரிக்க புயலில் பலர் பலி.

3 months 2 weeks ago
''இப்படி ஒன்னு நடந்ததே இல்ல’’ - US-ஐ உலுக்கிய Tornadoes; குறைந்தது 32 பேர் பலி. என்ன நடந்தது? அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை கொடிய சூறாவளிகள் தாக்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. தெருக்களில் கார்கள் கவிழ்ந்து கிடக்கின்றன. மசோரியில் மட்டும் குறைந்தது 12 பேர் உயிரழந்துள்ளனர். கான்சஸில் 8 பேர் உயிரிழந்தனர்.

சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனை

3 months 2 weeks ago
சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனைவாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: envato.com) வெளியீடு : 17 Mar 2025 07:39PM சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை, சென்ற மாதம், 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து சென்ற மாதம் கிட்டத்தட்ட 1,600 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆகின. நகரச் சீரமைப்பு ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. சென்ற மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு பிப்ரவரியைப் போல் சுமார் 10 மடங்கு. மாத அடிப்படையில் சென்ற மாதம் 45.4 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது. ஜனவரியில் சுமார் 1,100 வீடுகள் விற்கப்பட்டன. ஆதாரம் : CNA

அமெரிக்க புயலில் பலர் பலி.

3 months 2 weeks ago
உலகம் மீண்டும் சுழல்காற்று வீசலாம் - விழிப்பு நிலையில் அமெரிக்கர்கள்வாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: DAVID CRANE / AP) அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் மேலும் சுழல்காற்று, ஆலங்கட்டி மழை, காட்டுத்தீ ஆகியவற்றை எதிர்கொள்ள விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். 39 முறை வீசிய சுழல்காற்றால் பெருமளவு உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. தற்போது வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ, பென்சில்வேனியா (West Virginia, Ohio, Pennsylvania) ஆகிய பகுதிகளில் மேலும் சுழல்காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்குச் சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். புயல் வடக்கில் உள்ள நியூயார்க் (New York) மாநிலத்திலிருந்து தெற்கில் உள்ள புளோரிடா (Florida) மாநிலம் வரை புரட்டிப்போட்டது. இதனால் 300,000க்கும் அதிகமானோர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. இதற்கிடையில், ஆக்லஹோமாவில் (Oklahoma) பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்துள்ளது. காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 300 கட்டுமானங்கள் தீக்கிரையாகியுள்ளன. பலர் தங்கள் வீடுகளை இழந்தும் மின்சாரமின்றியும் தவிக்கின்றனர். ஆதாரம் : CNA

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி தேர்தல்களில் பெரிய வெற்றியை பெறுமா?

3 months 2 weeks ago
16 MAR, 2025 | 03:31 PM டி.பி.எஸ். ஜெயராஜ் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்." கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான ஆள் அமைச்சர் சந்திரசேகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையை சேர்ந்தவராக இருந்தாலும், சந்திரசேகரிடம் யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகாரங்களை யேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவரே யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இந்த இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாகும். சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தேர்தல்களில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குறிப்பாக ஊடகங்களுடன் பேசும்போது வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாக தெரிகிறது. தேர்தல் வெற்றி மீதான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு சாசுவதமாக பீறியெழும். அது வழமையாக எதிர்பார்க்கப்படுவதே. நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற இயலாத வேட்பாளர்களும் கூட தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். யதார்த்தமாக நோக்கும்போது தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக தாங்கள் வெற்றி பெறுமாட்டார்கள் என்று எந்த வேட்பாளரும் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட பலர் தங்களுடன் போட்டியிட்டவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது வாக்குகள் எண்ணும் செயன்முறைகளில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த பின்புலத்தில் பார்க்கும்போது, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சந்திரசேகர் எதிர்வு கூறுவதைப் போன்று உண்மையில் பெரிய வெற்றியை பெறுமா அல்லது அவரது நம்பிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சந்திரசேகர் இவ்வாறு கூறியிருந்தால், அவர் கேலி செய்யப்பட்டிருப்பார். தேசிய மக்கள் சக்தி போன்ற சிங்கள ஆதிக்கத்திலான ஒரு தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது நம்பமுடியாதது. ஆனால், கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலைவரத்தை முற்றாக மாற்றிவிட்டது. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் திருப்பமாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது. போனஸ் ஆசனம் ஒன்றுக்கும் அது உரித்துடையதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. அதற்கு அங்கு 80, 830 ( 24. 85 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசியவாத கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தி கூடுதல் வாக்குகளைப் பெற்றது. இந்த கட்சிகளுக்கு முறையே 63, 327 ( 19.47 சதவீதம்), 22,513(6.92 சதவீதம் ), 27, 986 (8.60 சதவீதம்) வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பி.க்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகள் கருணானந்தன் இளங்குமரனுக்கே கிடைத்தன. அவருக்கு 32, 102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தென்மராட்சி பிராந்தியத்தின் உசனை சொந்த இடமாகக் கொண்ட இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஊழியரான அவர் தற்போது யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கிறார். ஐந்து வருடக்களாக தேசிய மககள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்துவரும் இளங்குமரன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்கினார். யாழ்ம்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டாவதாக தெரிவான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவுக்கு 20, 430 விருப்பு வாக்குகள் கிடைத்தன. முப்பது வருடங்களுக்கும் கூடுதலான காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் அண்மையில் பிரதி் பணிப்பாளராக ஓய்வு பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினரான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனுக்குை17, 579 விருப்பு வாக்குகள் கிடைத்தன யாழ்ப்பாணத்தில் அவர் நன்கு பெயர்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ரஜீவன் அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட அவர் அநுரா குமாரவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டார். சந்திரசேகர் யாழ்ப்பணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் சிற்பி அதன் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரேயாவார். அவர் ஜே.வி.பி.யின் மத்தியகுழுவிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான அவர், இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில் அமைச்சராக இணைத்துக் கொள்ளப்ட்டார். ஜே.வி.பி.யின் அமைப்பாளர் என்ற வகையில் சந்திரசேகர் யாழ்ப்பாணத்தில் பல வருடக்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்வாக்குமிக்க யூரியூபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்ட அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விவசாயிகள், மீனவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போன்ற யாழ்ப்பாணச் சமூகத்தின் பல பிரிவினரையும் அணிதிரட்டிய அவர் தேசிய மக்கள் சக்தியின் அணிகளுக்குள் அவர்களை இணைத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சந்திரசேகர் பரவலாக்கினார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அவர்களில் இலட்சிய நோக்குடன் கூடிய சில படித்த இளைஞர்களும் அடங்குவர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பட்டியலை அநுராாகுமார, பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் ஆலோசனை கலந்து சந்திரசேகர் இறுதி செய்தார். முன்னதாக, 2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அநுரா குமாரவுக்கு சுமார் 27,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை சுமார் மூன்று மடங்காக அதிகரித்தது. இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன? தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு இந்த கட்சிகள் சகலதிலும் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்தும் வாக்குகள் வந்து சேர்ந்தன என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில் ஒரு கணிசமானவை பெண்களினாலும் இளைஞர்களினாலும் போடப்பட்டவையாகும். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மிகவும் கூடுதலான தபால்மூல வாக்குகள் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டின. மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் ' திசைகாட்டி ' முதலாவதாக வந்தது. ஏனைய கட்சிகளினால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( தமிழரசு கட்சி ), சாவகச்சேரி ( சுயேச்சைக்குழு 17) ஆகியவையே அந்த தொகுதிகளாகும். அநுரா குமார திசாநாயக்க அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் முதலாவதாக வந்தார், ஆனால் 42.31 சதவீதமான வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவதாக வந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற வேட்பாளரினால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறமுடியாத சந்தர்ப்பமாக 2024 ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அதனால் ஏனைய வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அநுரா 55.89 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு தடுமாற்றமானதாக இருந்த போதிலும், பிறகு ஒரு அரசியல் அதிசயம் நிகழ்ந்தது. அநுரா தனது கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தலைமை தாங்கி முன்னெடுத்தார். ஜனாதிபதியாக அவர் நாடுபூராவும் பயணம் செய்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார். அலை திரும்பியது. நாட்டை ஒரு அநுரா அலை சூழ்ந்து கொண்டது. பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்தது. அநுரா அலை தமிழ்த் தேசியவாத கோட்டையான யாழ்ப்பாணம் அநுரா அலையின் கீழ் சென்றது. 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியைக் குதூகலிக்க வைத்தன. யாழ்ப்பாண வெற்றி ஒரு மகுடச்சாதனை என்று பல தலைவர்கள் வர்ணித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண முடிவுகள் ஒரு அணிகலனாக அமைந்தன. அதை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியவாதத்தின் முடிவு என்றும் கூட சில அவதானிகள் எதிர்வு கூறினர். இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினால் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்று அமைச்சர் சந்திரசேகர் அதிவிசேடமான நம்பிக்கையைக் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் பதின்மூன்று பிரதேச சபைகள் இருக்கின்றன. எல்லாமாக பதினேழு உள்ளூராட்சி சபைகள். பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்ததால், உள்ளூராட்சி தேர்தல்களில் ஒரு முற்றுமுழுதான வெற்றி சாத்தியம் என்று தோன்றலாம். தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்று தெரிகிறது. அதற்கு ஆதரவு பெருகியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால், யாழ்ப்பாண மக்கள் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு வாக்களிக்க விரும்புவர். அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் வடக்கிற்கு ஓரளவு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறது. நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் 'வண்டிலில்' தொங்கிக் கொண்டுபோவது சிறந்தது என்று விளங்கிக்கொள்வர். வல்வெட்டித்துறை அநுரா அலை யாழ்ப்பாணத்தில் தணிந்துவிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உணருகின்றன. அநுரா அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயம் அதற்கு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள். வல்வெட்டித்துறையிலும் மிருசுவிலிலும் இடம்பெற்ற வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாதாரண மக்கள் அநுரா மீது தன்னியல்பாகவே அன்பை வெளிப்படுத்தினார்கள். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று இந்த தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வல்வெட்டித்துறை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைலர்களின் சொந்த ஊராகும். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதத்தின் தொட்டில் என்று வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. அந்த ஊரில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தமை உண்மையில் அதன் செல்வாக்கு வளருவதன் ஒரு அறிகுறியாகும் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன. உறுதிமொழியும் செயற்பாடும் தேசிய மக்கள் சக்திக்குள் நம்பிக்கை நிலவுகின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தல்களில் யாழ்ப்பாண மக்களின் போதுமான ஆதரவை கட்சியினால் பெறக்கூடியதாக இருக்குமா என்று சந்தேகமும் இருக்கிறது. உறுதிமொழிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வெளியே இதற்கு பிரதான காரணமாகும். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது பொதுவில் தேசிய மக்கள் சக்தியும் குறிப்பாக அநுராவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கையாளப்படும், இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் அவற்றுக்கு உரித்தானவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும், பாதுகாப்பு படைகளின் முகாம்களும் வீதிச்சோதனை நிலையங்களும் குறைக்கப்படும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் வீதிகளும் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன. இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வீதிச்சோதனை நிலையங்களும் முகாம்களும் மூடப்பட்டன. ஒரு சில வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டன. முக்கியமான எந்த காரியமும் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செயதல், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகளை திருப்பிக் கையளித்தல் போன்ற விவகாரங்களில் நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னோக்கிய செயற்பாடு எதையும் காணக்கூடியதாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதியமைச்சர் இப்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கம் கூறுகிறது. இன்னொரு கசப்பான விடயம் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பானதாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. ஆனால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டம் இப்போது பின்போடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ அல்லது மாகாணசபைகள் பற்றியோ எந்த குறிப்பும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அவரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பவைக்க இயலுமாக இருந்தது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களில் அத்துமீறில் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்திய மீனவர்களின் படகுகள் வருவதையும் அவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்துவதாக 2024 தேர்தல் பிரசாரங்களின்போது சந்திரசேகரும் அநுரா குமார திசாநாயக்கவும் விசேடமாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், இதுவரையில் அர்த்தமுடைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திய படகுகள் பெரும் எண்ணிக்கையில் வந்து வடபகுதி கடலில் தொடர்ந்து இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்திய மீனவர்களை இடைக்கிடை கைதுசெய்து அவர்களி்ன் படகுகளையும் கைப்பற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்கிறது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு 'மனிதாபிமான அடிப்படையில்' அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 'சட்டவிரோத மீன்பிடியை' முடிவுக்கு கொண்டுவருவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி வளர்ந்து வருவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகலாம். வடபகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கரையோரப்பகுதி மக்களிடம் தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களன வாக்குக் கேட்கச் சென்றபோது அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அந்த மக்கள் முத்துக்கு நேரே கூறினார்கள்."நாங்கள் இந்த தடவை ஜே.வி.பி.க்கே வாக்களிக்கப் போகிறோம். ஏனென்றால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி ஜே வி.பி.யே என்று நாம் நம்புகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் பலர் இப்போது ஏமாற்றமடைந்து விட்டார்கள். "கதையே தவிர காரியம் எதுவும் இல்லாத" ஒரு கட்சியாக ஜே வி.பி. இப்போது பலராலும் நோக்கப்படுகிறது. இது தவிர, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் நடத்தைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் காணப்படுகிறது. யாழ்ப்பாண வெற்றியை தங்களது கிரீடத்தில் உள்ள அணிகலன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கொக்கரித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான மூவரும் செயற்திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது அபூர்வம். அவ்வாறு அபூர்வமாகப் பேசுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி எதையும் கூறுவதை காணமுடியவில்லை. அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களால் சந்திக்க முடியாமல் இருக்கிறது. அவர்களிடம் மக்கள் பிரச்சினை கிளப்பும்போது "இந்த விவகாரத்தில் எமது கட்சியின் தலைமைத்துவம் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும்" என்று ஒரு பதிலை கைவசம் வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் திசைகாட்டிக்கு வாக்களித்த மக்கள் சலிப்படைந்து போகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆனால், இந்த அதிருப்திப் போக்கு ஒரு தொடக்கமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு தொடக்கமாக இருந்தால் வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரும்பவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த அதிருப்தி ஆழமானதாக வளருமானால் யாழ்ப்பாணத்தில் உள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் அமைச்சர் சந்திரசேகரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வெறும் பகற்கனவாக மாத்திரமே இருக்க முடியும். இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருக்கிறது என்ற உண்மையை கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். செல்வாக்கான இடத்தை தேடியோடும் அருவருப்பான பேர்வழிகளுக்கு அது ஒரு காந்தம் போனறு இருக்கும். அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் விரும்புவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியில் இணைகின்ற அல்லது ஆதரிக்கின்ற அந்த சந்தர்ப்பவாத பேர்வழிகளினால் பெருமளவில் வாக்குகளைக் கொண்டுவர முடியுமா என்பது மிகவும் சந்தேகமே. எண்கணிதக் காரணி எண்கணிதக் காரணியை கருத்தில் எடுக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களில் அரைவாசியைக் கைப்பற்றியதன் மூலமாக தேசிய மக்கள் சக்தி மிகச்சிறந்த வெற்றயைப் பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் நான்கில் ஒரு பங்கிற்கு சமமானது மாத்திரமே. அநுரா அலை தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைக் கவர்ந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்குமே சென்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெரும்பாலானவறனறை "தமிழ்த் தேசியவாத அமைப்புகள்" என்று வகைப்படுத்த முடியும். அதனால், தமிழ்த் தேசியவாத கட்சிகளினாலும் குழுக்களினாலும் ஒரு வகையான ஐக்கியத்தை ஏற்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூட்டணிகளாக தேர்தலில் களமிறங்க முடியுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்க முடியும். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசாயவாத கட்சிகளும் கூட்டணிகளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் உயர்வான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கிறது. தவிரவும், தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சி ஒன்று முதலாவதாக வந்தது குறித்து குறிப்பிட்ட சில வட்டாரங்கள் கவலைப்படுகின்றன. தமிழ்த் தேசியவாத கட்சிகள் அதனால், தமிழ்த் தேசியவாதக்கட்சிகள் திருப்பித்தாக்கி அநுரா அலையைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது. இது தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளினால் எந்தளவு ஐக்கியத்தைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு கூட்டங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இதுவரையில் அவற்றினால் பயன் கிட்டவில்லை. ஐக்கியம் சாத்தியமாகாமல் போனாலும் கூட, தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்குவதைத் தவிர்த்து தேசிய மக்கள் சக்தியை தனியொரு இலக்காகக் கொண்டு தாக்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்துகொள்ள முடியும். மேலும், தமிழ்த் தேசியவாத கட்சிகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமானால் புதிய, நடைமுறைச் சாத்தியமானதும் கற்பனைத் திறனுடையதுமான கொள்கைகளை அவை வகுக்க வேண்டும். பழைய கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படும் பயன்விளைவுகளைத் தராது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுத்துக்கான அவாவேயாகும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க வேண்டுமானால் இந்த முதன்மையான காரணியை கருத்தூன்றிக் கவனத்துக்கு எடுக்கவேண்டும். தங்களது தற்போதைய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளினால் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து வாக்காளர்களை கவரக்கூடியதாக இருக்குமா என்பதை தமிழ்த் தேசியவாத கட்சிகள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும். உள்ளூராட்சி தேர்தல்முறை உள்ளூராட்சி சபைகளுக்கென்று தேர்தல் முறையொன்று இருக்கிறது. 60 சதவீதமான ஆசனங்கள் வட்டாரங்கள் மூலமாகவும் 40 சதவீதமான ஆசனங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலமும் தெரிவு செய்யப்படுவதே அந்த முறையாகும். இந்த தேர்தல் முறையின் விளைவாக 2018 பெப்ரவரி தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளினால் உள்ளூராட்சி சபைகளில் ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அது 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்ட 48 உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் மாத்திரமே பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபை ஒன்றில் கூடுதலான வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பானமைப் பலத்தை பெறமுடியாத சூழ்நிலை தோன்றுவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்டக் கூடியதாக இருக்கும். https://www.virakesari.lk/article/209374

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி தேர்தல்களில் பெரிய வெற்றியை பெறுமா?

3 months 2 weeks ago

16 MAR, 2025 | 03:31 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

"தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்."  கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13)  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான ஆள் அமைச்சர் சந்திரசேகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையை சேர்ந்தவராக இருந்தாலும், சந்திரசேகரிடம் யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகாரங்களை  யேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவரே யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிருவாக  மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இந்த இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாகும். சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல்களில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குறிப்பாக  ஊடகங்களுடன் பேசும்போது வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாக தெரிகிறது. தேர்தல் வெற்றி மீதான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு  சாசுவதமாக பீறியெழும். அது வழமையாக எதிர்பார்க்கப்படுவதே. நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற இயலாத வேட்பாளர்களும் கூட தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். யதார்த்தமாக நோக்கும்போது தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக தாங்கள் வெற்றி பெறுமாட்டார்கள்  என்று எந்த வேட்பாளரும் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட பலர் தங்களுடன் போட்டியிட்டவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது வாக்குகள் எண்ணும் செயன்முறைகளில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

இந்த பின்புலத்தில் பார்க்கும்போது, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சந்திரசேகர் எதிர்வு கூறுவதைப் போன்று உண்மையில் பெரிய வெற்றியை பெறுமா அல்லது அவரது நம்பிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சந்திரசேகர் இவ்வாறு கூறியிருந்தால், அவர் கேலி செய்யப்பட்டிருப்பார். தேசிய மக்கள் சக்தி போன்ற சிங்கள ஆதிக்கத்திலான ஒரு தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது நம்பமுடியாதது.

ஆனால், கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலைவரத்தை முற்றாக மாற்றிவிட்டது. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் திருப்பமாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது.  போனஸ்  ஆசனம் ஒன்றுக்கும் அது  உரித்துடையதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. அதற்கு அங்கு 80, 830 ( 24. 85 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசியவாத கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தி கூடுதல் வாக்குகளைப் பெற்றது. இந்த கட்சிகளுக்கு முறையே  63, 327 ( 19.47 சதவீதம்), 22,513(6.92 சதவீதம் ), 27, 986 (8.60 சதவீதம்)  வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பி.க்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகள் கருணானந்தன் இளங்குமரனுக்கே கிடைத்தன. அவருக்கு 32, 102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தென்மராட்சி பிராந்தியத்தின்  உசனை சொந்த இடமாகக் கொண்ட  இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஊழியரான அவர் தற்போது யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கிறார். ஐந்து வருடக்களாக தேசிய மககள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்துவரும் இளங்குமரன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்கினார்.

யாழ்ம்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டாவதாக தெரிவான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவுக்கு 20, 430 விருப்பு வாக்குகள் கிடைத்தன. முப்பது வருடங்களுக்கும் கூடுதலான காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் அண்மையில் பிரதி் பணிப்பாளராக ஓய்வு பெற்றார். 

தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினரான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனுக்குை17, 579 விருப்பு வாக்குகள் கிடைத்தன யாழ்ப்பாணத்தில் அவர் நன்கு பெயர்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ரஜீவன் அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட அவர் அநுரா குமாரவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டார்.

சந்திரசேகர்

WhatsApp_Image_2025-03-16_at_1.22.32_PM.

யாழ்ப்பணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் சிற்பி அதன் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரேயாவார். அவர் ஜே.வி.பி.யின் மத்தியகுழுவிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான அவர், இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு  அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில் அமைச்சராக இணைத்துக் கொள்ளப்ட்டார்.

ஜே.வி.பி.யின் அமைப்பாளர் என்ற வகையில் சந்திரசேகர்  யாழ்ப்பாணத்தில் பல வருடக்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்வாக்குமிக்க யூரியூபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்ட அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  விவசாயிகள், மீனவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போன்ற யாழ்ப்பாணச் சமூகத்தின்  பல பிரிவினரையும் அணிதிரட்டிய அவர்  தேசிய மக்கள் சக்தியின் அணிகளுக்குள்   அவர்களை இணைத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சந்திரசேகர் பரவலாக்கினார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அவர்களில் இலட்சிய நோக்குடன் கூடிய சில படித்த இளைஞர்களும் அடங்குவர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பட்டியலை  அநுராாகுமார, பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் ஆலோசனை கலந்து சந்திரசேகர் இறுதி செய்தார். முன்னதாக,  2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  அநுரா குமாரவுக்கு சுமார் 27,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை சுமார் மூன்று மடங்காக அதிகரித்தது.

இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன?  தமிழரசு கட்சி,  தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு இந்த கட்சிகள் சகலதிலும் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்தும் வாக்குகள் வந்து சேர்ந்தன என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில்  ஒரு  கணிசமானவை பெண்களினாலும் இளைஞர்களினாலும் போடப்பட்டவையாகும்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த  மிகவும் கூடுதலான தபால்மூல வாக்குகள் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டின. மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும்  பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் ' திசைகாட்டி ' முதலாவதாக வந்தது. ஏனைய கட்சிகளினால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( தமிழரசு கட்சி ), சாவகச்சேரி ( சுயேச்சைக்குழு 17) ஆகியவையே அந்த தொகுதிகளாகும்.

அநுரா குமார திசாநாயக்க

WhatsApp_Image_2025-03-16_at_1.22.32_PM_

அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் முதலாவதாக வந்தார், ஆனால் 42.31 சதவீதமான வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவதாக வந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற வேட்பாளரினால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறமுடியாத சந்தர்ப்பமாக 2024 ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அதனால் ஏனைய வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அநுரா 55.89 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார்.

அநுராவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு தடுமாற்றமானதாக இருந்த போதிலும், பிறகு ஒரு அரசியல் அதிசயம் நிகழ்ந்தது. அநுரா தனது கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தலைமை தாங்கி முன்னெடுத்தார். ஜனாதிபதியாக அவர் நாடுபூராவும் பயணம் செய்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார். அலை திரும்பியது. நாட்டை ஒரு அநுரா அலை சூழ்ந்து கொண்டது. பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்தது.

அநுரா அலை

தமிழ்த் தேசியவாத கோட்டையான யாழ்ப்பாணம் அநுரா அலையின் கீழ் சென்றது. 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில்  மூன்று ஆசனங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியைக் குதூகலிக்க வைத்தன. யாழ்ப்பாண வெற்றி ஒரு மகுடச்சாதனை என்று பல தலைவர்கள் வர்ணித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண முடிவுகள் ஒரு அணிகலனாக அமைந்தன. அதை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியவாதத்தின்  முடிவு என்றும் கூட சில அவதானிகள் எதிர்வு கூறினர்.

இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினால் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்று அமைச்சர் சந்திரசேகர்  அதிவிசேடமான  நம்பிக்கையைக் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் பதின்மூன்று பிரதேச சபைகள் இருக்கின்றன. எல்லாமாக பதினேழு உள்ளூராட்சி சபைகள். பாராளுமன்ற தேர்தலில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து  தொகுதிகளில் எட்டு தொகுதிகளில்  தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்ததால், உள்ளூராட்சி தேர்தல்களில் ஒரு முற்றுமுழுதான  வெற்றி சாத்தியம் என்று தோன்றலாம்.

தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்று தெரிகிறது. அதற்கு ஆதரவு பெருகியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால், யாழ்ப்பாண மக்கள் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு வாக்களிக்க விரும்புவர். அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் வடக்கிற்கு ஓரளவு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறது. நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் 'வண்டிலில்' தொங்கிக் கொண்டுபோவது சிறந்தது என்று விளங்கிக்கொள்வர்.

வல்வெட்டித்துறை 

அநுரா அலை யாழ்ப்பாணத்தில் தணிந்துவிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உணருகின்றன. அநுரா அண்மையில்  யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயம் அதற்கு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள். வல்வெட்டித்துறையிலும் மிருசுவிலிலும் இடம்பெற்ற வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாதாரண மக்கள் அநுரா மீது தன்னியல்பாகவே அன்பை வெளிப்படுத்தினார்கள். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று இந்த தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

வல்வெட்டித்துறை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைலர்களின் சொந்த ஊராகும். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதத்தின் தொட்டில் என்று வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. அந்த ஊரில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தமை  உண்மையில் அதன் செல்வாக்கு வளருவதன் ஒரு அறிகுறியாகும் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உறுதிமொழியும் செயற்பாடும்

தேசிய மக்கள் சக்திக்குள் நம்பிக்கை நிலவுகின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தல்களில் யாழ்ப்பாண மக்களின் போதுமான  ஆதரவை கட்சியினால் பெறக்கூடியதாக இருக்குமா என்று சந்தேகமும் இருக்கிறது. உறுதிமொழிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வெளியே இதற்கு பிரதான காரணமாகும். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது பொதுவில் தேசிய மக்கள் சக்தியும் குறிப்பாக அநுராவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கையாளப்படும், இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் அவற்றுக்கு உரித்தானவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும், பாதுகாப்பு படைகளின் முகாம்களும் வீதிச்சோதனை நிலையங்களும் குறைக்கப்படும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் வீதிகளும் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன.

இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வீதிச்சோதனை நிலையங்களும் முகாம்களும் மூடப்பட்டன. ஒரு சில வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டன. முக்கியமான எந்த காரியமும் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செயதல்,  காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகளை திருப்பிக் கையளித்தல் போன்ற விவகாரங்களில் நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னோக்கிய செயற்பாடு எதையும் காணக்கூடியதாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதியமைச்சர் இப்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கம் கூறுகிறது.

இன்னொரு கசப்பான விடயம் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பானதாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று  கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும்  என்று தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. ஆனால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டம் இப்போது பின்போடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ அல்லது மாகாணசபைகள் பற்றியோ எந்த குறிப்பும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அவரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பவைக்க இயலுமாக இருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களில் அத்துமீறில் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்திய மீனவர்களின் படகுகள்  வருவதையும் அவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்துவதாக 2024 தேர்தல் பிரசாரங்களின்போது சந்திரசேகரும் அநுரா குமார திசாநாயக்கவும் விசேடமாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். 

ஆனால்,  இதுவரையில் அர்த்தமுடைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திய படகுகள் பெரும் எண்ணிக்கையில் வந்து வடபகுதி கடலில் தொடர்ந்து இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்திய மீனவர்களை இடைக்கிடை கைதுசெய்து அவர்களி்ன் படகுகளையும் கைப்பற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்கிறது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு 'மனிதாபிமான அடிப்படையில்' அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 'சட்டவிரோத மீன்பிடியை' முடிவுக்கு கொண்டுவருவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி வளர்ந்து வருவது  தேசிய  மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகலாம். வடபகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கரையோரப்பகுதி மக்களிடம் தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களன  வாக்குக் கேட்கச் சென்றபோது அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அந்த மக்கள் முத்துக்கு நேரே கூறினார்கள்."நாங்கள் இந்த தடவை ஜே.வி.பி.க்கே வாக்களிக்கப் போகிறோம். ஏனென்றால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி ஜே வி.பி.யே என்று நாம் நம்புகிறோம்"  என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் பலர் இப்போது ஏமாற்றமடைந்து விட்டார்கள். "கதையே தவிர காரியம் எதுவும் இல்லாத" ஒரு கட்சியாக ஜே வி.பி. இப்போது பலராலும் நோக்கப்படுகிறது.

இது தவிர, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் நடத்தைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் காணப்படுகிறது. யாழ்ப்பாண வெற்றியை தங்களது கிரீடத்தில் உள்ள அணிகலன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கொக்கரித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான மூவரும் செயற்திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது அபூர்வம். அவ்வாறு அபூர்வமாகப் பேசுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி எதையும் கூறுவதை காணமுடியவில்லை. அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களால் சந்திக்க  முடியாமல் இருக்கிறது. அவர்களிடம் மக்கள் பிரச்சினை கிளப்பும்போது "இந்த விவகாரத்தில் எமது கட்சியின் தலைமைத்துவம் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும்" என்று ஒரு பதிலை கைவசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் திசைகாட்டிக்கு வாக்களித்த மக்கள்  சலிப்படைந்து போகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆனால்,  இந்த அதிருப்திப் போக்கு ஒரு தொடக்கமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு தொடக்கமாக இருந்தால்  வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரும்பவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த அதிருப்தி ஆழமானதாக வளருமானால்  யாழ்ப்பாணத்தில் உள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் அமைச்சர் சந்திரசேகரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வெறும் பகற்கனவாக மாத்திரமே இருக்க முடியும்.

இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருக்கிறது என்ற உண்மையை கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். செல்வாக்கான இடத்தை தேடியோடும் அருவருப்பான பேர்வழிகளுக்கு அது ஒரு காந்தம் போனறு இருக்கும்.  அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் விரும்புவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியில் இணைகின்ற அல்லது  ஆதரிக்கின்ற அந்த சந்தர்ப்பவாத பேர்வழிகளினால் பெருமளவில் வாக்குகளைக் கொண்டுவர முடியுமா என்பது மிகவும் சந்தேகமே.

எண்கணிதக் காரணி

எண்கணிதக் காரணியை கருத்தில் எடுக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களில் அரைவாசியைக் கைப்பற்றியதன் மூலமாக தேசிய மக்கள் சக்தி மிகச்சிறந்த வெற்றயைப்  பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் நான்கில் ஒரு பங்கிற்கு சமமானது மாத்திரமே. அநுரா அலை  தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைக் கவர்ந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்குமே சென்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெரும்பாலானவறனறை "தமிழ்த் தேசியவாத அமைப்புகள்" என்று வகைப்படுத்த முடியும்.

அதனால், தமிழ்த் தேசியவாத கட்சிகளினாலும்  குழுக்களினாலும் ஒரு வகையான ஐக்கியத்தை  ஏற்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூட்டணிகளாக தேர்தலில் களமிறங்க முடியுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்க முடியும். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசாயவாத கட்சிகளும்  கூட்டணிகளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் உயர்வான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கிறது. தவிரவும், தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சி ஒன்று முதலாவதாக வந்தது குறித்து குறிப்பிட்ட சில வட்டாரங்கள் கவலைப்படுகின்றன.

தமிழ்த் தேசியவாத கட்சிகள்

அதனால், தமிழ்த் தேசியவாதக்கட்சிகள் திருப்பித்தாக்கி அநுரா அலையைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது. இது தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளினால் எந்தளவு ஐக்கியத்தைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு கூட்டங்களும்  கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இதுவரையில் அவற்றினால் பயன் கிட்டவில்லை. ஐக்கியம் சாத்தியமாகாமல் போனாலும் கூட, தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்குவதைத் தவிர்த்து தேசிய மக்கள் சக்தியை தனியொரு இலக்காகக் கொண்டு தாக்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்துகொள்ள முடியும்.

மேலும், தமிழ்த் தேசியவாத கட்சிகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமானால் புதிய, நடைமுறைச் சாத்தியமானதும் கற்பனைத் திறனுடையதுமான கொள்கைகளை அவை வகுக்க வேண்டும். பழைய கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றிக்  கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படும் பயன்விளைவுகளைத் தராது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுத்துக்கான அவாவேயாகும் என்பதை  நினைவிற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க வேண்டுமானால் இந்த முதன்மையான காரணியை கருத்தூன்றிக் கவனத்துக்கு எடுக்கவேண்டும். தங்களது தற்போதைய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளினால் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து வாக்காளர்களை கவரக்கூடியதாக இருக்குமா என்பதை தமிழ்த் தேசியவாத கட்சிகள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்முறை 

உள்ளூராட்சி சபைகளுக்கென்று தேர்தல் முறையொன்று இருக்கிறது. 60 சதவீதமான ஆசனங்கள் வட்டாரங்கள் மூலமாகவும் 40 சதவீதமான ஆசனங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலமும் தெரிவு செய்யப்படுவதே அந்த முறையாகும். இந்த தேர்தல் முறையின் விளைவாக 2018  பெப்ரவரி  தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளினால் உள்ளூராட்சி சபைகளில் ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அது 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்ட  48 உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் மாத்திரமே பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. 

அதனால் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபை ஒன்றில் கூடுதலான வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பானமைப் பலத்தை பெறமுடியாத சூழ்நிலை தோன்றுவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்டக் கூடியதாக இருக்கும்.

https://www.virakesari.lk/article/209374