3 months 1 week ago

கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!
ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இவர்கள் அனைவரும் பெப்ரவரியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தனர்.
வருகை விசா முறையின் கீழ் பெறப்பட்ட சுற்றுலா விசாக்களில் அவர்கள் இலங்கைக்குள் நுழைந்தனர்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் அவர்கள் நாட்டில் தங்கியிருந்தனர்.
அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில், இந்தக் குழு இலங்கையில் இருந்து துபாய்க்குப் பயணம் செய்து, பின்னர் எகிப்துக்குள் நுழைந்து, இறுதியில் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும், தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள இந்தக் குழு வெலிசரா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்படி, நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அவர்கள் தடுப்புக் இருப்பார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
https://athavannews.com/2025/1426321
3 months 1 week ago
முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துகள்.;
3 months 1 week ago
சிறைச்சாலையில் தேஷபந்துக்கு விசேட வசதி! இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி நேற்று (24) முதல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டார். வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேஸ்பந்து தென்னகோன், அந்த உத்தரவினைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேஷபந்து தென்னகோன் கண்டி தும்பறை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு, வீட்டில் இருந்து உணவு எடுத்துவர அனுமதி கோரியிருந்தார். சிறைச்சாலைகள் திணைக்களம் குறித்த கோரிக்கையை பரிசீலித்து வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மூன்று வேளை உணவுக்கும் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426353
3 months 1 week ago
தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல். ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும், இதன்போது, வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுஇடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் உள்ள பிற வளாகங்கள் கள ஆய்வுக் குழுக்களின் பங்கேற்புடன் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426373
3 months 1 week ago

தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல்.
ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும், இதன்போது, வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுஇடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் உள்ள பிற வளாகங்கள் கள ஆய்வுக் குழுக்களின் பங்கேற்புடன் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1426373
3 months 1 week ago
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சந்தேகநபருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய, மனநல மருத்துவ அறிக்கையைக் கோருவதற்கான விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1426338
3 months 1 week ago

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சந்தேகநபருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய, மனநல மருத்துவ அறிக்கையைக் கோருவதற்கான விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
https://athavannews.com/2025/1426338
3 months 1 week ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனிக்காட்டுராஜா!
3 months 1 week ago
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார். அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது சட்டத்தரணி வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார். அதை ஏற்காத கூடுதல் அரச தரப்பு சட்டத்தரணி, சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் , கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார். நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர். திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார். https://athavannews.com/2025/1426351
3 months 1 week ago
நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்! தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார். அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு அவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 5 இலட்சம் இந்திய ரூபா நிதி உதவி வழங்கியது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார். 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் ரஜினிகாந்தின் வேலைக்காரன், பிளட்ஸ்டோன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராக நடித்தார். விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகியவை அவரது இறுதி நடிப்பு முயற்சிகளில் சில. படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் அவர் தோன்றினார். ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார். https://athavannews.com/2025/1426343
3 months 1 week ago

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!
தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார்.
அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர்.
அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.
பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார்.
அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு அவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 5 இலட்சம் இந்திய ரூபா நிதி உதவி வழங்கியது.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார்.

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பின்னர் ரஜினிகாந்தின் வேலைக்காரன், பிளட்ஸ்டோன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராக நடித்தார்.
விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகியவை அவரது இறுதி நடிப்பு முயற்சிகளில் சில.
படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் அவர் தோன்றினார்.
ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார்.
https://athavannews.com/2025/1426343
3 months 1 week ago
இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்! இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426302
3 months 1 week ago
போர்க்குற்றம் நடக்கவில்லை. நாங்கள் உள்ளூர் பொறிமுறை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் என்று சுமந்திரன் சொல்லியிருப்பாரே. வழமை போல் நடக்க இருக்கும்… ஐ.நா.வின் செப்ரெம்பர் திருவிழாவிற்கு, இப்பவே பந்தல் போட்டு காவடி எடுத்து பம்மாத்து காட்ட வெளிக்கிட்டினம். இத்தனை வருடமாக நடந்த ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு பிரயோசனமாவது இருந்ததா? அதனை ஏன்… நிறைவேற்ற முடியாமல் போனது என்று தமிழ் தரப்புகள் ஐ.நா.வை நோக்கி கேள்வி எழுப்பியதா? இறுதியாக நடந்த ஐ.நா. கூட்டத் தொடரில்…. அனந்தி சசிதரனைத் தவிர தமிழ் கட்சிகள் எதுவுமே கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. அதே நேரம் சிங்கள தரப்பு பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு தமது தரப்பு வாதங்களை முன் வைத்தது. நமது தமிழ் கட்சிகள்… தமக்குள் அடிபட்டு, வெள்ளைகாரனுடன் இருந்து படம் எடுத்து… உள்ளூர் பத்திரிகைகளுக்கு படம் காட்டத்தான் லாயக்கு. இனியாவது கொஞ்சம் திருந்துங்கள் என்று பார்த்தால்…. ஹ்ஹூம் சான்ஸே இல்லை. இன்னும் மக்களை பைத்தியக்காரர்களாகவே நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
3 months 1 week ago
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210052
3 months 1 week ago
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.virakesari.lk/article/210052
3 months 1 week ago
பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர்; பிரிட்டனின் தடை குறித்து அலி சப்ரி Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 11:06 AM பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார் பிரிட்டன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கருணா அம்மானிற்கு எதிராக விதித்துள்ள தடைகள் குறித்த தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐக்கிய இராச்சியம் எங்கள் யுத்த வெற்றி வீரர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இந்த விடயங்கள் எவையும் வெற்றிடத்தில் நிகழவில்லை. பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர். எங்களின் அரசியல்வாதிகள் சுயவிருப்பத்துடனோ அல்லது அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் கரங்களில் சிக்கிக்கொள்வது வருந்தத்தக்க விடயம். உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது. ஐக்கியம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை மறந்தால் அது எவ்வளவு தூரம் நன்றிகெட்ட தேசமாக இருக்கமுடியும்? இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும், இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. எங்கள் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாகயிருக்கவேண்டும். அனைத்து இலங்கையர்களும் இனமதமொழி பேதமின்றி கௌவரம் சமத்துவத்துடன் பரஸ்பர கௌரவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வெளிப்படையான அல்லது நயவஞ்சகமான அனைத்து வகையான பிரிவினை வாதத்தையும் எதிர்ப்பதற்கான எங்களின் கூட்டு தீர்மானத்தை நாங்கள் வலுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210126
3 months 1 week ago
'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனி கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் "தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார். சென்னை - மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக "எல்கிளாசிகோ" அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ் 'தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ் நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர். விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார். "தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்" என்கிறார் சுனில். தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார். மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார். "உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என விக்னேஷ் கூறியிருக்கிறார். இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர் 'மேலும் ஒரு சைனா மேன் பவுலர்' 10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜய்குமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார். விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜய்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,"நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்" எனக் கூறினார் "கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்." என கூறும் விஜய்குமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார். 10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய்குமார், ''தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்'' என்று கூறினார். உறுதுணையாக இருந்த பயிற்சி அரங்கங்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார். "விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும். இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது" என பயிற்சியாளர் விஜய்குமார் நினைவு கூர்கிறார். சைனா மேன் பவுலிங் என்றால் என்ன? பட மூலாதாரம்,VIGNESH PUTHUR / INSTAGRAM படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர். விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார் இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j0ddx30g1o
3 months 1 week ago
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் . மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன். உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். https://www.virakesari.lk/article/210123
3 months 1 week ago
Published By: RAJEEBAN
25 MAR, 2025 | 10:47 AM

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன்.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் .
மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்.
உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.
https://www.virakesari.lk/article/210123
3 months 1 week ago
சிறுமி…. கண்டோஸ் எடுத்து இருந்தால், அதனை பெற்றோருக்கு தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து…. கட்டி வைத்து, சிறுநீர் கழிக்கும் வரை… வயரால் தாக்கும் உரிமையை கடைக்காரருக்கு யார் கொடுத்தது. சிறுமி மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மீது பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.