இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது
June 26, 2025

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய நாளில் சித்திரவதையினால் பாதிப்பட்டவரகளுக்கு அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றிவரும் உளநல ஆலோசகர் மற்றும் உளச்சமூகப்பணியாளர் நிலவனுடன் இன்றைய சந்திப்பை மேற்கொள்கின்றேன்.
அமுதன் :- இன்று இனப்படுகொலை என்று பேசப்படும் இந்த வார்த்தையின் விளக்கத்தை தருவீர்களா அத்தோடு இலங்கையில் இனப் படுகொலையானது எவ்விதம் நடந்தேறியது?
நிலவன்:- ரஃபேல் லெம்கின்னின் கூற்றுப்படி, ‘இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை அழிப்பது. பொதுவாக, இனப்படுகொலையின் அர்த்தம் ஒரு தேசத்தை உடனடியான அழிப்பது அல்ல. அதன் மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகக் கொல்லும் போது மட்டுமே இப்படி அர்த்தம் கொள்ள முடியும். மாறாக இனப்படுகொலை என்பது ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்தழிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டையே குறிக்கிறது’. ‘இத்தகைய செயற்பாடுகள் ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ குறிவைக்கலாம்’ என இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சாசனம் மேலும் தெளிவு படுத்துகிறது. ஆகவே இன அழிப்பு என்பதன் வரைவிலக்கணம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொது அடையாளத்தையும் அவர்களை முழுமையாகவோ அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளையும் குறிப்பிடுகிறது.
உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இன அழிப்பினை அரங்கேற்றி இருக்கின்றன. இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனம் இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை பின்வருமாறு வரையறை செய்கின்றது: ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது. ஒரு இனத்திற்கு அல்லது குழுமத்திற்கு வலிந்தும் திட்டுமிட்டும் பாரிய உடல் – உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது. இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காத வகையில் (இன விருத்தியைத் தடுக்கும் வகையில்) கொடுமைகளைப் புரிதல். பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை, அடையாளங்களை அழித்தல். இன அழிப்பு நடவடிக்கைகளாக கருதப்படுபவை எவை என்பதை எடுத்துரைக்கும் சட்ட அடிப்படையிலான விளக்கங்களாக மேற்கூறப்பட்டவை உள்ளன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவது பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாதச் சிங்களத் தலைமைகள் பாரிய எண்ணிக்கையில் நிகழ்த்திய படுகொலைகளை மட்டும் குறிப்பதல்ல இனப்படுகொலை. திட்டமிடப்பட்ட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்காக கட்டமைக்கப்பட்ட வகையில்தமிழர்களின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்குரிய மூலோபாயத் திட்டங்களை வகுத்து, படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது. கல்லறைகள், நூலகங்கள், சுவடிக்காப்பகங்கள், மற்றும் இன அழிப்பின் பௌதீக சாட்சியங்கள் உட்பட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படு கொலைதான்.
ஈழத்தில் தமிழின அழிப்பு என்பது காலனித்துவக் காலம் (1948 வரை): இலங்கை ஒற்றையலகு அரசாகப் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப் பட்டு, சிங்களப் பெரும்பான்மையின் ஆட்சி நிறுவப்படுகிறது. இலங்கையில் இனவாதத்தின் தொடக்கம். தமிழ் மக்களின் வாழ்வில் பல ஆண்டுகளாக மாறி மாறி பதவிக்கு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து இன்றுவரை நடாத்தப்பட்டே வருகின்றது. 1956, 1958, 1961, 1974, 1979, 1981, ஜுலை 1983,1989,1990, 1995, 1997, 2000, 2009 என தமிழர்களுக்கு எதிராக வெடித்த இனக்கலவரங்கள் மற்றும் இன அழிப்பு போர் கலகத்தில் ஈடுப்பட்டிருந்த சிங்களவர்களுக்கு வெளிப்படையாக தமிழர்களை சித்திரவதை, பழிவாங்கும் வாய்ப்பை வழங்கியிருந்தது.
இலங்கைத் தீவில் 2006 மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பின் கொடுரயுத்தம் உக்கிரமடைந்து தமிழர் என்ற இனம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஒரு சிறிதும் இன்றி முற்றிலுமாக துடைத்தழிப்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்பட்டு 2008 -2009 மே மாதம் வரை நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொன்றழித்து, பாரிய இனப் படுகொலையை அரங்கேற்றின. வேதியல் ஆயுதங்கள் (Chemical Weapons), நச்சுக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (Cluster bombs) என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து நாசகார ஆயுதங்களையும் பேரினவாத அரசு போரில் பயன் படுத்தியுள்ளது. இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல் இணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து பெற்ற புள்ளி விபரங்களில் இருந்து பெறப்பட்டதையும் ஆதாரங்களுடன் நிறுவித்திருந்தார்.மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களின் இந்த கூற்று, போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய விவாதங்களுக்கு உட்பட்டது.
அமுதன் :- இலங்கையில் இனவழிப்பை சிங்களப் பேரினவாதம் எவ்வாறு மேற்கொண்டது என்பதை விளங்கப் படுத்தவும் ?
நிலவன்:- சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் மீதான அழிப்பினை மிக நுட்பமாகத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்துள்ளனர். தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தாயகப் பிரதேசங்களை அபகரித்து சிங்களவர்களின் பரம்பலை அதிகரிப்பதன் மூலம், தமிழர்கள் சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கத்தை வேரூன்றச் செய்வதே பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கம். தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு திட்டமிட்ட குடியேற்றம் கருவியாய் கைக் கொள்ளப்பட்டது.
1949 இல் மலையகத் தமிழர் குடியுரிமைப் பறிப்பிலிருந்து இன்றைய முட்கம்பி வேலி வதைமுகாம்கள் வரை தொடர்கின்றது பௌத்த – சிங்கள இன மேலாதிக்கத்தின் தமிழின அழிப்பு. 1956 இல் ‘சிங்களம் மட்டும்’ (Sinhala Only) சட்டம் மூலம் தமிழ் மக்களின் மொழி உரிமையைப் பறித்தது. மொழியுரிமை பறிப்பு என்பது இனத்துவ அடையாளம், சமூக பண்பாட்டு வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் சூட்சும் கொண்டதாகும். 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக் கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலை ஆகும். 1970இல் கல்வித் தரப்படுத்தல் சட்டமாக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப் பெண்களைப் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழக உள்நுழைவுக்கு தெரிவாக முடியுமென்ற பாரபட்ச நிபந்தனை கல்வித் தரப்படுத்தல் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. 1972 ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்பட்டது. 1981 இல் நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பென்பது, தமிழ்க் கல்விச் சமூகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட இன அழிப்பு நோக்கம் கொண்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளை அடுத்து தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் – கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும், வடக்கில் – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் அடுத்தடுத்து எண்ணிலடங்காத படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. 1985 இல் திருகோணமலையில் ‘நிலாவெளிப் படுகொலைகள்’, அதே ஆண்டு ‘கந்தளாய்ப் படுகொலை’, 1990 இல் ‘திரியாய்ப் படுகொலை’, 1987 இலும் 1991 இலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட மட்டக்களப்பு ‘கொக்கட்டிச்சோலைப் படுகொலை’, 1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை, அதே ஆண்டு நடந்தேறிய ‘வந்தாறுமூலைப் படுகொலை’, ‘சத்துருக்கொண்டான் படுகொலை’, 1990 இல் அம்பாறையில் ‘வீரமுனைப் படுகொலை’ இவ்வாறு படுகொலைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோரமான முறையில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. இப்படியே இன்னும் இந்தப் பட்டியல் நீண்டு செல்லுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை.
வடக்கும் கிழக்கும் இணைந்த தொடர்ச்சியுடைய நிலப்பரப்பைக் கொண்ட தமிழர் தாயகம் கோட்பாட்டை உடைப்பதும், வடக்கு – கிழக்கு மக்கள் தம்மை ஒரு தேசமாக (Nation) அடையாளப்படுத்துவதை முறியடிப்பதுமே சிங்களத்தின் மூலோபாயம். நிர்வாகம் மற்றும் நில அமைவிடம் ஆகிய இரு நிலைகளிலும் தமிழர் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிப்பதே இனவாதத்தின் இலக்கு ஒரு இனத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் சட்ட ஏற்பாடுகளே . சிறிலங்கா அரசு, தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாரிய மனிதப் பேரவலங்களையும், சமூகச் சிதைவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவம் எனலாம்.
அமுதன் :-ஈழதேசத்தில் சிங்களப் பேரினவாதம் மேற் கொண்ட இனவழிப்பு பற்றிய விபரங்களை பதிவு செய்ய முடியுமா?
நிலவன்:- தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையானது. முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் எனப் பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மை இடத்துக்கு வருகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றி கொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகும்.
நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறு கால கட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு, இனச் சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தமிழ் இன அழிப்பு மறுப்பை தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப் படுத்தப் பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இலங்கை பௌத்த சிங்கள அரச பேரினவாதம் தமிழர்களை திட்டமிட்டு பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்பட்ட தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வன் புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள். கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்கு மூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை முதலிய தரப்புக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.. அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்பு முகாம்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய் வாளர்களினாலும் சித்திரவதை நடைபெறும் தளங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களிற்கு நடைபெற்ற உடல், உள, பாலியல் , சித்திரவதைகளையும் வன்கொடுமைகளையும் அந்நேரத்தில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகள்.
அமுதன் :- இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்ட அங்கீகாரம் தமிழர்களை வஞ்சிக்கும் வகையில் எவ்வாறு செயற்படுகிறது?
நிலவன்:- பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற பெயரில் தமிழர்களைக் கைது செய்வது இலங்கை அரசின் சட்ட அங்கீகாரம் கொண்ட நடைமுறையாகும். இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிபதியின் முன் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 1979-ல் கொண்டு வரப்பட்ட தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்படி, கைது செய்யப்படும் எந்த நபரையும் மூன்று மாதத்திற்கு நீதிபதியிடமும் தெரிவிக்காமல் தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம். மூன்று மாதத்திற்கு பிறகும் அமைச்சரின் பரிந்துரைப்படி, காவலில் வைத்திருப்பதை புதுப்பிக்கலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது. சட்ட சரத்துக்கள் மூலம் மனித வதைகளைச் செய்ய பயங்கரவாதத் தடைச் சட்டம் இடமளிக்கின்றது.
நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படாமலும், சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமலும் அவர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் அடைத்திருக்கிறார்கள். ஒரே ஒருவர் மீது மட்டுமே குறிப்பிட்ட குற்றம் செய்ததாக வழக்கு போடப்பட்டு, மற்ற யாவரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து விசாரணைக் கைதிகளாகவே சித்திரவதை செய்திருக்கின்றனர். ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறைகளைக் கடந்து தமிழர்களின் வாழ்வியலை கேள்விக்குள்ளாக்கி கொலைகளையும் செய்யும் துணிவினைக் கொடுத்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக நடைபெறும் கொடுமைகள் சாட்சிகளற்று இரகசியமான முறையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. கடத்தல்கள், தடுப்புகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இந்த மீறல்கள் எவ்வளவு முறையான மற்றும் பரவலானவை என்பதை நிரூபிக்கின்றன.
இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவங்கள் தானே . சித்திரவதைகளையும், ஆட்கடத்தல்களையும் உண்மையில் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரச படைக் கட்டமைப்பில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு, அரசியல் விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
அமுதன் :- இலங்கையில் நடந்தேறிய தமிழினச் சித்திரவதைகளை சில தரவுகளின் ஊடாக குறிப்பிட்டுக் காட்ட முடியுமா?
நிலவன்:- தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையோடு .முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றிகொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பானது திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகும்.
நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு, இன சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தமிழ் இன அழிப்பு மறுப்பைத் தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப்படுத்தப் பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இலங்கை பௌத்த சிங்கள அரச பேரினவாதம் தமிழர் மீதான திட்டமிட்ட பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்பட்ட தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள். கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்குமூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை முதலிய தரப்புக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.. அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்பு முகாம்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் சித்திரவதை நடைபெறும் தளங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்களிற்கு நடைபெற்ற உடல், உள, பாலியல் , சித்திரவதையும் வன்கொடுமைகளையும் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகள்.
அமுதன் :- இலங்கை ஆட்சியாளர்களாகிய அரசியல் வாதிகளின் கபடமுகமான செயற்பாடு எவ்வாறு இருந்திருக்கிறது…?
நிலவன்:- இலங்கை இராணுவத்தரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை புரிந்தது என்று புகைப்பட ஆதாரங்கள் வெளிவருகின்றன. ஆனால் நீதி கிடைக்குமா?
தமிழர்களை 77 ஆண்டுகளாக ஒடுக்கிய சிங்கள-பௌத்த வன்முறையின் அதே கட்ட மைப்புகளினால் தான் இன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சர்வதேசத்திடம் ஒரு முகம், தமிழ் மக்களிடம் ஒரு முகம், இராணுவத்திடம் ஒரு முகம் என்று பல்வேறு முகங்களை இலங்கையின் ஆட்சியாளர்கள் நன்றாகவே கடைப்பிடித்து வருகின்றார்கள். இலங்கை அரசு ஒருபோதும் வன்முறையற்றதாக இருந்தது இல்லை. இனப்படுகொலை, மற்றும் இன அழிப்பு உச்ச கட்டத்தை அடைந்த போர் வரை தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழிப்பதன் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டு செயற் படுத்தப்பட்டது.
2009 இல் தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை வேண்டுமென்றே மறைக்கும்செயல். ஆனால் இது ஒரு சம்பவம் அல்ல – இது பல தசாப்தங்களாக அரசால் மேற் கொள்ளப்பட்ட இன அழிப்புகளின் உச்சக்கட்டமாகும். தமிழர்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமாக சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் இலங்கை அரசு தனது முழு இராணுவ பலத்தையும் பயன்படுத்தி பொதுமக்களைப் படுகொலை செய்தது. பாதுகாப்பு வலையங்கள் கொலைக் களங்களாக மாறியது. 165,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர். பொதுமக்களுக்கான “பாது காப்பு வலையங்கள்” என்று அழைக்கப் பட்ட வலையங்களுக்குள் மக்கள் கூட்டமாக அழைத்துச் செல்லப் பட்டனர், ஆனால் அதன் மீது இலங்கை இராணுவம் இடை விடாமல் குண்டுகளை வீசியது. மருத்துவமனைகள் மீது ஷெல் வீசப்பட்டன, பெண்கள் பாலியல் வன் கொடுமை செய்யப் பட்டனர், சரணடைந்த தமிழர்கள் நேரடியாகச் சுட்டுக் கொல்லப் பட்டனர். குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் பாரிய கிடங்குக்குள்… இசைப்பிரியா தொடங்கி முக்கிய தளபதிகளை நிர்வாணமாக்கி கொலை செய்த காட்சிகள் தற்போதும் சமூகவலைத்தளங்களின் உலாவருகின்றன.
இலங்கையின் இராணுவ முப்படையினரும் அரசு மற்றும் சர்வதேச சமூகத்தால் பாதுகாக்கப்பட்ட இனவழிப்பு குற்றவாளிகள். 2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் முழு உயர் கட்டளை மையங்களும் தமிழ் இனவழிப்புக் குற்றவாளிகளால் ஆனது, அவர்கள் பொறுப்புக் கூறப்பட வேண்டும். உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகள் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டனர். புகைப்பட ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் அதற்கு சான்றாகும். சாவடைந்தவர்களை பாலியல் வன்புணர்வு செய்யுது தமிழ் பெண்களை இழிவுபடுத்தவும் அவர்களின் அடையாளத்தை அழிக்கவும் இராணுவம் வேண்டுமென்றே பாலியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதை அவை உறுதிப் படுத்துகின்றன.
இலங்கை அரசு எப்படியும் திட்டமிட்ட அழிப்புக் குற்றத்தை ஒப்பு கொள்ளாது. மழுப்பும் நடவடிக்கையையே கையாண்டு கொண்டே காலப்பயணத்தில் மறக்கடிக்க வைக்கும் திசை திருப்பும் செயலிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது. தமிழ் இனப்படு கொலையை மறுக்க, சிதைக்க மற்றும் நிராகரிக்க மேற்கொள்ளப்படும் இலங்கையின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பொறுப்புக் கூறலைத் தவிர்ப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், தற்போதைய அடக்குமுறை நிலையைப் பேணுவதற்கும் இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக் கையாகும்.
சர்வதே நாடுகள் இலங்கையை ஒரு இனப்படுகொலை நாடாக அல்லாமல் ஒரு கூட்டாளியாகக் கருதி வருகிறது. இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கவும் அவர்களின் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவும் காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவும் மனிதப் புதைகுழிகள் குறித்து சுயாதீன விசாரணைகளை அனுமதிக்கவும் இலங்கை அரசிற்கும் இராணுவத்திற்கும அழுத்தம் கொடுக்காது சித்திரவதை முகாம்களை கொத்தடிமை மையங்களாகவும் சிங்கள அரசு நடத்தலாம் என்பதற்குச் சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கின்றது. ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும். இதையெல்லாம் சர்வதேச சமூகம் செய்யதவறுமாயின் இத்தகைய மனித உரிமை மீறல்களை சிங்கள பௌத்த பேரினவாத அரசு தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கும் விதமாகவே சர்வதேசத்தின் செயல்பாடுகள் அமையும் நிலமையாகக் காட்டும்.
அமுதன் :- இலங்கையில் சித்திரவதைகள் இதுவரை காலமும் எவ்வாறு அரங்கேறின என்பதன் உண்மைத் தன்மை என்ன ?
நிலவன்:- கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகளின்போது சித்திர வதைக்கு உள்ளாகின்றனர். விசாரணைகளின்போது நிர்வாணமாக்குதல், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இரும்புக் கம்பிகளால் தாக்குதல், தடி,தடித்த வயர் போன்றவற்றால் அடித்தல், சூடான இரும்புக்கம்பி, எரியும் சிகரட்டால் சுடுதல், மின் அழுத்தியால் சுடுதல், சிகரெட்டுகள், சூடாக்கப்பட்ட உருக்குக் கம்பியால் உடல்களில் சூடு வைத்தல். விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல்களில் கட்டித் தூக்குதல், மூட்டுக்கள் வலிக்குமாறு கைகளைப் பின்புறமாகக் கட்டி தூக்குதல்,தலைகீழாகக் கட்டித்தொங்க வைத்து அடித்தல், பெற்றோல் நிறம்பிய பொலித்தீன் பையால் தலையை மூடி மூச்சுத் திணறவைத்தல், தலையைத் தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணறவைத்தல் போன்ற சித்திர வதைகள் பிரபலியமானவை.
பெண் சந்தேக நபர்களுக்கு பாலியல் வதைக் கூட்டு வன்புணர்வு என்பனவும் ஆண்களுக்கு பாலியல் வதைகள் பாலுறுப்புக்களில் புண்விளைவித்தல் விபரிப்பதற்கு முடியாத அளவுக்கு இடம் பெற்றுள்ளது. நெகிழிப் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைப்பது, பூட்சுக் காலினால் மிதிப்பது, சிகரெட்டினால் உடலின் அனைத்து இடங்களிலும் சூடு வைப்பது, கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுவது மற்றும் இரும்புக் கம்பிகளை பிறப்புறுப்பில் திணிப்பது, , ஆண்குறிகளில் உலோக வயர்கள் திணித்தல் , பல சமயங்களில் ஐஸ்கட்டிகள், மதுபான போத்தல் முகப்புக்களை மல வாசல் துவாரத்தினுள் புகுத்ததல் . ஆண்கள், பெண்கள் எனப் பாராமல் வாய்வழி வன்புணர்ச்சி, அந்தரங்க உறுப்புகளைச் சிதைப்பது என நினைத்துப் பார்க்கவே அச்சம் தரும் வகையில் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.
இதைவிடக் குறடுகளைப் பயன்படுத்தி கால்நகங்களைப் பிடுங்குதல், நகத்தின் சதைக்கு இடையில் ஊசிகள் புகுத்தல் யோனி துவாரத்தில் மிளாகாய்த்தூள் தடவுதல் , மூச்சுத் திணறித்துடிக்கும் அளவுக்கு நீரில் அமிழ்த்தல் . மின்சார வயர்களை உடல் மீது வைத்துக் குறிப்பிட்ட நபர் மரணிக்கும் அளவு மின்சாரத்தை அவர்களது உடலில் பாய்ச்சுதல் , பட்டினிபோடுதல், சிகிச்சையளிக்காமல் தவிக்கவிடுதல், இருட்டறையில் போடுதல் போன்றவைகளும் இவற்றுள் அடங்கும். மிகவும் பயங்கரமான பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆண், பெண் என்ற வேறுப்பாடு இன்றி நடந்துள்ளது. மலவாசலிலும் யோனியிலும், ஆண்குறியிலும் செய்யப்பட்ட சித்திரவதைகள் மரணவலியுடையது என வார்த்தைகளினால் சொல்ல முடியாத சித்திரவதைக்கு உள்ளாகிய பலர் குறிபிட்டார்கள் என்பது உண்மையின் சான்றே.
அமுதன் :- தடுப்பு முகாம்களின் பரவலாக்கமும் பாதிப்பும் கைதானவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை விளைவித்தன?
நிலவன்:- இலங்கையில் தடுப்பு முகாம்கள் வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமன்றி, இலங்கை முழுவதிலும் உள்ள அத்தனை இராணுவ முகாம்களும், ஏதோ ஒரு காலகட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் முகாம்களாகவே இருந்தன. ஒவ்வொரு இராணுவ முகாமிலும் பின்புறமாக ஒரு இடத்தில் விசாரணைக் கூடம் இருக்கும். கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைத்திருக்கும் இடங்களிலும் இருக்கும். இது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
25இற்கும் மேற்பட்ட தடைமுகாம்களும் 10 இரகசிய முகாம்களும், பூசா, போஹம்பர, வெலிக்கட, 04ம் மாடி, 06ம் மாடி, மிகுந்தலை இராணுவ முகாம் போன்ற இடங்களிலும் அச்சுவேலி – அச்செழு இராணுவ முகாம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஜோசப் இராணுவ முகாம், வவுனியா குறிசுட்ட குளத்திற்கு அருகில் இருந்த ஒரு இராணுவ தளம், அருகில் இருந்த இன்னொரு கடற்படைத்தளம், தற்காலிக தடுப்பு நிலையங்களாகத் தொழிற்பட்ட புனர்வாழ்வு நிலையங்களான – செட்டிக்குளம் முகாம், வவுனியாவில் ஒரு முன்னைய தொழில் நுட்பக் கல்லூரி, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி, பம்பைமடுக் கல்லூரி, வவுனியா பூந்தோட்ட முகாம், முன்னைய கல்வி நிறுவனம் , வவுனியா இராம நாதன் (மெனிக்பாம்) இரும்பைக் குளம் மகளிர் கல்லூரி, திருகோணமலை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, புதுக்கடை பொலிஸ் நிலையம், கொழும்பு, கல்முனை, கடவத்தை, பொலிஸ் நிலையம், கொழும்பு குற்றவியல் புலனாய்வு திணைக்கள நிலையம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களம், பூசா தடுப்புமுகாம் (காலி). அடங்கலாக 48 சித்திரவதை முகாம்கள் அமைந்திருந்தன. இதுபோன்று இன்னும் பல இடங்கயில் இரகசியமாக இருந்துள்ளது.
வெலிக்கடயில் மாத்திரம் 1000- 1500மேற்பட்ட போராளிகள் அடைக்கப் பட்டிருந்தார்கள். விசரனையில் இருந்து தரம் பிரிக்கப் பட்டவர்கள் பொலனறுவை, திருகோணமலை இரகசிய தடுப்புமுகாம், மிகுந்தலை, யோசப் முகாமிற்கும் அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, இராணுவத்தினரின் தமிழ் ஆயுத ஒட்டுக் குழுக்களும் தமிழ் ஆயுத அரசியல் கட்சிகளில் உள்ள ஒருசிலரும் பயன்படுத்தப் பட்டார்கள். ஈ.பி.டி.பி கருணா, பிள்ளையான் குழுவில் உள்ளவர்களும் போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் பணியிலும் விசாரணைகளையும் சித்திரவதை செய்வதிலும் ஈடுபட்டடார்கள். வட்டுவாகல் பாலம், ஓமந்தை, தாண்டிக்குளம், மெனிக்பாம், இடம் பெயந்த மக்கள் தங்கவைக்கப்பட்ட பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம் உட்பட ஏனைய தடுப்பு முகாம்களிலும் இராணுவத்திற்கு ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்ட இவ்வியக்கங்கள் தலையாட்டிகளாகக்கூட காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் செயற்பட்டார்கள்.
அமுதன் :- இலங்கையில் நடந்தேறிய படுகொலைகள் சித்திரவதைகள் சம்பந்தமான சில தடயசான்று பகிரும் விடயங்களைப் பகிர முடியுமா?
நிலவன்:- சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும் 60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன.
ஜோசப்முகாமின் தளபதியாகத் தற்போது மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல்களான போனிவிகா பெரேரா, சுமேதா பெரேரா, கமல் குணரத்ன மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் ஜோசப்முகாமின் தளபதியாக2009 இற்குப் பின்னர் இருந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பின் உள்ளிருந்து ஐந்தாவதுP இக்கு கிடைத்த தகவலின் படி லெப்டினன்ட் ஜெனரல் கிருசாந்திடி சில்வா என்பவர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டுள்ளார். இதன்போதே பல போராளிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்கள். உயிர் தப்பியவர்களின் சாட்சியப் படி, கட்டளைத்தளபதி கெ.சி. வேலகெதர என்பவர் திருகோணமலையில் உள்ள இரகசிய முகாமின் கடற்படை புலானாய்வு அதிகாரியாக 2010 வரை இருந்துள்ளார்.
பின்னர் கட்டளைத்தளபதி ரணசிங்க என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர்தளபதி டி.கெ.பி. திசநாயக்க, தளபதி சம்பத் முனசிங்க, ரணசிங்க ஆராய்ச்சிகே, கெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க பிடிகே சுமித்ரணசிங்க போன்றோர் 28 மக்கள் காணாமல் போனதற்கு காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்தது பலருக்குத் தெரியாத விடையமாக உள்ளது.
இலங்கை இராணுவம், இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வுப் பிரிவு, தேசியப் புலனாய்வு பணியகம், குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), அரசுடன் இணைந்த தழிழர்களைப் படுகொலை செய்த மக்கள் ஜனநாயகக் கட்சி Eelam People’s Democratic Party (EPDP), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் The People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), ( 2004 காலப்பகுதியில் கருணா குழு பிள்ளையான் குழு, அரசாங்க முகவர்களும் இணைந்து செய்த சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமில்லை. இவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்கு மூலங்களிலும், வெற்றுத் தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை அரங்கேற்றினார்கள்.
அமுதன் :- சித்திரவதை முகாம்களில் பாதிக்கப் பட்டவரின் வார்த்தைகள் எவ்வாறானதாக இருந்தது?
நிலவன்:- இலங்கையில் உள்ள முகாமிலிருந்து சித்திர வதைக்கு ஆளான போராளிகள் சொற்களால் வடிக்க முடியாத கொடூரங்களை அனுபவித்துள்ளார்கள். பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களாக போராளிகள் காணப் படுகின்றார்கள். சித்திரவதை முகாம்களில் இருந்த பலர் மன நோய்களிளால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். வதை முகாம்களில் இருந்து தப்பியுள்ளவர்களில் பலர் இன்று வடக்கு கிழக்கில் உள்ள மனநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
அங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் ஒவ்வொன்றும் சட்டத்திற்கு புறம்பானது, மனித உரிமைகளை கேள்விக்கு உட் படுத்துவதாகும். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வது, இனத் துவேசத்தைத் தீர்த்துக் கொள்ள முன்பே தயாரிக்கப்பட்ட சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த குற்ற வாக்குமூலங்கள், மற்றும் சில கோப்புகள் அவர்கள் கைவசம் இருந்திருக்கின்றன. விசாரணை மேற் கொள்கிறேன் எனும் பெயரில் இந்த சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள். ஒவ்வொரு நாளும் இவர்களிடம் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து, உண்மையைச் சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி, அவர்களின் மீது பாலியல் ரீதியான வன்புணர்வுகளை செய்து, மரணத்தை விட வேதனையான இழிசெயல்களை இலங்கையின் விசாரணை அதிகார வெறியர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட தகவல்களையோ, அல்லது குற்ற வாக்குமூலத்தையோ பெறுவதற்காகச் சித்திரவதைப் படுத்தப்பட்ட கைதிகளின் நிலை கொடூரமாக இருந்தது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களிலும் வெள்ளைத் தாள்களிலும் சித்திரவதை செய்து கையொப்பமும் வாங்கியுள்ளனர். போராளிகளை வைத்து புலிகளுக்கெதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், போராளிகளிடமிருந்து பல பெய்யான தகவல்களை தாங்களே வழங்கி அத் தகவல்களைப் போராளிகளிடம் இருந்து பெறுவது போன்று காணொளிப் பதிவுகளைப் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வோர் நாளும் தமது விசாரணையின் போது போதிய தகவல்களை வழங்காதோரை அல்லது தாங்கள் சொல்லும் விடயங்களைச் செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகமான சித்திரவதைகளைச் செய்து கொலை செய்வதும் இந்த முகாம் அதிகாரிகளின் பொறுப்பாக இருந்துள்ளது.
அமுதன் :- இலங்கையின் தீவிரவாதத் தடுப்புச் சட்டமும் பாலியல் கொடுமைகளும் எவ்வாறு இணைந்து காணப்பட்டது…? நீங்கள் சந்தித்த பாலியல் சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட துணைநாடிகள் தொடர்பில் கூற முடியுமா ?
நிலவன்:- சுற்றிவளைப்புகளிலும், தேடுதல்களிலும், கொல்லப்பட்டவர்கள் போக, பிடித்துச் செல்லப் பட்டவர்களில் பல ஆயிரம் பேர் மீண்டு வரவேயில்லை. எனினும் பெரும்பாலானவர்கள் மீண்டு வந்தனர் என்பதில் சந்தேகமில்லை.மீண்டு வந்தவர்களும், மீளவராதவர்களும், இராணுவ முகாம்களில் விசாரணை என்ற பெயரில், சித்திரவதை செய்யப்பட்டனர். இராணுவ விசாரணை என்பது சித்திரவதையோடு இணைந்த ஒன்றுதான். இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ தடுத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு முகாம்களின் பின்னாலும் சித்திரவதைகள் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கும்.
சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்தித் தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்தக் கொடுமைகள் அனைத்தும் நிரூபிக்கின்றன.
சம்பவம் 1
சித்திரவதைக்கு உட்படுத்த பட்டவரின் பெயரை மற்றும் அவர் வாழ்விடத்தை குறிப்பிடுவது தொழில் நிலைக்குப் பொருத்தமற்றது இருப்பினும் சில பாதிக்கப்பட்டவர்களின் வயது பால் சம்பவங்கள் போன்றவற்றை குறிப்பிடுகின்றேன். ஒரு தமிழ் இளைஞன் 23வயது நிறைந்தவன் இலங்கை விசேட புலனாய்வு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு 25 நாள் ரகசிய தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு பல சித்திரவதைகளின் பின்னர் விடுதலை செய்யப் பட்டான்.
இராணுவ ரகசிய முகாமில் இனத் துவேசத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் “ உப தமிழ் கொட்டியா (நீ தமிழ் புலி ) , தமிழ் பள்ளா ( தமிழ் நாய்” , “தமிழ் பறையர்”, இன்னும் சிங்கள மொழியில் வழமையில் உள்ள துர்வசனங்களை அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மூடிய அறை கதவினைத் திறக்கும் போது சற்று வெளிச்சம் உள்தெரியும். அறை முழுவதும் இரத்த வடையாகவே இருந்தது. அதே நேரம் பெற்ரோல் மணம் மூக்கை அரித்துக் கொண்டிருந்தது சுவர்கள் முழுவதும் இரத்தக் கறைகள் சிதறிக் கிடந்தன. அடிப்பதற்கான உலோகக்கம்பிகள், எசிலோன் பைப்புகள் பொல்லுகள், நீரில் அமிழ்த்தி சித்திரவதை செய்வதற்கான தண்ணீர் நிறைத்த பீப்பாய்கள், என எல்லாமே இருந்தன.
கைகளைப் பின்புறாமாக கட்டினார்கள். கண்கள் கட்டப் பட்டேன். ஆடையை அவிழ்த்து ஒட்டுத் துணியும் இல்லாமல் என்னை அம்மணம் ஆக்கினார்கள். சிங்கள அதிகார வெறியர்கள் என்மீது சிறுநீரைக் கழித்தார்கள். தொங்கவிடும் கம்பத்தில் தலை கீழாகத் தொங்க விடப்படும் போது அவர்கள் சொல்வதை செய்ய மறுக்கும் போதும் தலைப் பகுதியை அந்த தண்ணீர் பீப்பாக்கள் உள்ளே விட்டார்கள். தலை கீழாகத் தொங்க விடப்பட்டு ஒருவர் பின் ஒருவராக என் வாயினில் அவர்களின் ஆணுறுப்பைத் திணித்தார்கள். எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை.
தாகம் எடுக்க தண்ணீர் கேட்டபோது அவர்களின் சிறுநீரை என்னை வலுக் கட்டாயமாகக் குடிக்க வைத்தார்கள். உணவுகள் தரையில் கொட்டப்பட்டு நாய் போல நக்கிச் சாப்பிட சொன்னார்கள். தரையில் இருந்த இரத்தக்கறைகள் இருந்த இடத்தினையும் நக்க வைத்தார்கள். இப்படி மனரீதியாகப் பலவீனப்பட்டு அவர்கள் சற்தேகத்தின் பேரில் என்மேல் சுமத்தும் பெய்யான குற்றச் சாட்டால் வாழ்க்கை வெறுத்துப்போய் வலிய சித்திரவதைகளை விட அவற்றை ஏற்றுக் கொள்லாம் என்னும் மன நிலைக்கு தள்ளி இருந்தார்கள். கடவுளிடம் மரணத்தைக் கெஞ்சிக் கேட்கிற அளவு அங்கு கொடுரமான சித்திரவதைகள் நடந்தது என அவன் கூறினான். அந்த செயலுக்குப் பின் இனித்தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக நாளந்தம் சித்திரவதைகளின் பின்னர் ஏற்பட்ட மனவடு நோயில் பாதிக்கப்பட்ட ஒருவனாக உளவள நிலையத்திற்கு வந்தான். “உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்.
சம்பவம் 2
2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் சந்தேகத்தின் பேரில் கைது செய்து 35 நாட்கள் வதை முகாமில் தடுத்து வைத்து தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி 25 வயது இளைஞன் கூறுகையில்.
புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக இந்த வெறியர்கள் சந்தேகித்தார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஒரு இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றார்கள். அந்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய்கள் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அவர்கள் சொல்வதைச் செய்ய சிங்கள அதிகார வெறியர்கள் ஆண் பாலுறுப்புகளை கடுமையாக தாக்கினார்கள். பிடித்து நசுக்கினார்கள். கம்புகளை கொண்டு ஆண்குறிகளைத் தாக்கினார்கள். ஓரினச்சேர்கைக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தினார்கள். ஒருவர் பின் ஒருவராக அவன் வாயினில் அவர்களின் ஆணுறுப்பை திணித்துள்ளனர். வாய்மூலமான பாலுறவுக்கு உட்படுத்திக் கொண்டே இருந்திருந்தார்கள்.
விசாரணைகளின் போது நிர்வாணமாகவே வைக்கப்பட்டேன். அவர்கள் கூட்டாக பல முறை செய்த வன் கொடுமைகளை வார்த்தைகளினால் சொல்லமுடியாது. கொடுமை என்ன வென்றால் வாய் மற்றும் மலவாசல் வழிய அவர்கள் உறவு கொண்டார்கள். தாங்க முடியாமல் நகர்ந்ததால் சிகரெட்டால் வெறித்தனமாகப் பின் முதுகில் சூடு வைத்தார்கள். மலவாசல் வழியாக பெரிய இரும்புக் கம்பி மற்றும் போத்தலைச் செருகினார்கள். பின்புறத்திலிருந்து இரத்தம் வழிந்து. அது கொடுமையான வலியை ஏற்படுத்தியது.
மயங்கி விழுந்து கண் விழித்த போது உட்காரக்கூட முடியாத அளவிற்கு பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் கொட்டியது. சிங்கள அதிகார மிருகங்கள் மயக்க நிலையில் ஓரினச் சேர்க்கை வன்புணர்ச்சி செய்தார்கள். எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை. நிர்வாணமான உடல்களைப் படம் பிடித்து, ஒளிப்பதிவு செய்தார்கள். அந்த செயலுக்குப் பின் இனி, தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக அந்த இளைஞன் உளவளத் துணைக்கு வந்திருந்தான். இது ஒரு வகையில் உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதைகளாக மட்டும்தானே இருக்க முடியும்.
சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே பயங்கதவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்த கொடுமைகள் அனைத்தும் நிரூபிக்கின்றன. கொடூர சித்திர வதையினால் பல மரணமான சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளன.
சம்பவம் 3
வதை முகாமில் 3வருடங்கள் தடுத்து வைத்து தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி 24 வயது இளைஞன் கூறுகையில். 2009ம் ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் அன்று வட்டுவாகலில் பாலம் நோக்கி இராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் ஊன்று கோல் உதவியுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு சென்று கொண்டிருக்கும் போது இராணுவத்தின் துப்பாக்கி ரவைகளுக்கு மக்கள் இரையாகிக் கொண்டிருந்தார்கள். வட்டுவாகல் பாலம் நோக்கிச் செல்லும் வழிகளில் ஓரே பிணங்களும், மணங்களும் இலையானின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரின் தோட்டாக்களும் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தன.
சன நெரிசலில் குழந்தைகள் முதியவர்கள் என்னைப் போன்று இயலாதவர்கள் என்று பலரும் இருந்தனர். என்னால் கையில் ஊன்று கோல் ஊன்றிச் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. காரணம் எனது உள்ளங் கைகள் காயமாகி விட்டன. வலிக்கு மேல் வலிகளைப் பொறுத்து கொண்டு வட்டுவாகல் பாலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். மீண்டும் சில காட்சிகள் அப்பாலத்துக்கு அருகாமையில் இராணுவத்தினரின் கண்ணி வெடியில் சிலர் சிக்கித் தங்கள் அவயங்களையும் உயிரையும் இழந்து பரிதாபநிலையை அடைந்தனர். இராணுவத்தினரால் சந்தேகிக்கப் படுபவர்கள் மீதான சித்திரவதைகள் அங்கிருந்தே அரங்கேறத் தொடங்கின. பாலத்தினூடாகச் செல்லும் போது பிணங்கள் மிதந்தன. தாகம் நேர்ந்தது பிணங்கள் மிதந்த தண்ணீரையும் அருந்தினோம்.
நாங்கள் இராணுவத்தினரால் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டோம். அங்கு இரு நாட்கள் தங்க வைக்கப்பட்டோம். பசி தாகம் எம்மை ஆட்கொண்டது. குப்பைத் தொட்டியில் சாப்பாடு போடுவது போல் இராணுவத்தினர் சாப்பாடு தண்ணீர் போன்றவற்றைகக் கொண்டு வந்து எறிவார்கள். அதில் கூடுதலான பகுதி தரையில் விழுந்து யாருக்கும் உதவாமலே போனது. மலசலகூட வசதிகள் இருக்க வில்லை, பல தொற்று நோய்கள் பரவின. ஆண், பெண் என்று இல்லாமல் அனைவரும் வெளியே கழிவுகளைக் கழிக்க வேண்டிய ஒரு நிலைக்கு உள்ளாகினோம். இனவெறி பிடித்த சிங்களப் படையினர் வெள்ளைக்கொடியோடு வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் அவர்களுடன் வந்த போராளிகளையும் எல்லோரது கண் முன்னிலையிலும் அழைத்து சென்று அடித்தும், சித்திரவதை செய்தும், சுட்டுக் கொள்ளப் பட்டார்கள். பெண் போராளிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள்.
2009ம் ஆண்டு வைகாசி மாதம் 20ம் நாள் அன்று இராணுவத்தின் தனியான வெள்ளை வேன் மற்றும் பஸ்களின் மூலம் போராளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் ஏற்றப்பட்டனர். என்னையும் அத்துடன் சிலரையும் பஸ்சில் ஏற்றி ஓமந்தைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் ஓமந்தையில் தடுத்து வைத்தனர். அங்கு போராளிகள் வேறு மக்கள் வேறு உதவியாளர்கள் வேறு என்று பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு பஸ்ஸில் என்னுடன் 60ற்குமேல் போராளிகள் ஏற்றப்பட்டு ஓமந்தை மத்திய கல்லூரியின் தடுப்புக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கு எங்களைத் தரையில் இருக்க வைத்து எங்களுடைய விசாரணை ஆரம்ப கட்டமாகவே அங்கிருந்து தொடங்கியது. பின்னர் எங்களுடைய தனிப்பட்ட அறிக்கைகள் எல்லாம் முடிந்தவுடன் பாடசாலையின் வகுப்பறை ஒன்றில் 20-25 பேர் வரையில் அடைக்கப்பட்டோம். அந்த நேரம் எங்களுக்குச் சரியான உடைகள் கூட இருக்கவில்லை. குளித்து விட்டு அதே உடையைக் கழுவி உலர வைத்த பின் அணிந்தோம். அடிக்கடி விசாரணைகள், மிரட்டல்கள், சித்திரவதைகள், என்று நாளுக்கு நாள் அனுபவித்தோம். விசாரணையின் போது நீர் ஒரு போராளியா ? எங்கு ஆயுதங்கள் இருக்கின்றதன என்று எல்லாம் கேட்கப்பட்டு நாங்கள் மறுக்கின்ற வேளையில் தடியடி, உடலை அம்மணப் படுத்தல், மிளகாய் சாக்கில் தலையை விட்டுத் தண்ணீரை ஊற்றுதல், உதைத்தல், எச்சில் துப்புதல், அறைதல் போன்ற செயற்பாடுகள் இன்னும் சொல்ல முடியாத உடல் உள பாலியல் ரீதியான சித்திரவதைகளையும் அரங்கேற்றினார்கள். பலரின் பால் நிலை உறுப்புக்களையும் சேதப் படுத்தினார்கள். இவ்வாறான சித்திர வதைகளுக்கு எவரும் விதிவிலக்கல்ல. அனைவரும் அங்கே நரக வாயிலைக் கண்டோம். பின்னர் கை அடையாளங்கள் எடுக்கப்பட்டு போராளிகள் என்று முத்திரை குத்தப் பட்டோம். எவ்வாறாவது வெளியில் போக வேண்டும் எனும் நோக்கம் எம்முள் இருந்தது.
அரசின் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகள், பெரும்பாலும் ஊர் அடங்கிப் போன பின்னர், இரவு அங்கு விசாரணைகள் தொடங்கும், நள்ளிரவு தாண்டியும் அந்த விசாரணைகள் தொடரும். இது தான் வடக்கு கிழக்கில் இருந்த இராணுவ முகாம்களில் நாளாந்தம் நடந்தது. இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டவர்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள், எவ்வாறு விசாரணை செய்யப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. விசாரணைகளின், பின்னர் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப் பட்டனர்.
அமுதன் :- புனர்வாழ்வு, தடுப்பு முகாம்களில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலதை ஆதாரப் படுத்த முடியுமா தங்களால்?
நிலவன்:- விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்ற ஆண் மற்றும் பெண்கள் சட்டத்துக்கு முரணாக சிறிய சுதந்திரம் கூட இன்றி தடுத்து வைக்கப் பட்டார்கள். எனினும் இந்த செயற்பாடுகளை புனர்வாழ்வு என்ற பெயரில் அரசாங்கம் மறைத்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகளை இராணுவப் பேச்சாளர் 2010ஆம் ஆண்டு பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார். அவர்களில் பெரும் பாலானவர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர்கள் ஆகையால் அவர்களைத் துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண் காணிப்பகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓரிரு தினத்திலேயே… இராணுவப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வென்ற பெயரில் சித்திரவதைச் சிறை முகாம்களை அமைத்து அங்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு கடுமையான சித்திரவதைகளைச் செய்துவரும் சிங்களக் காடைய ராணுவத்தினர் 2011-03-22 அன்று ஒரு போராளியின் மரணத்துக்கு காரணமாகவோ அல்லது இந்த கொலையையே திட்டமிட்டு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற போராளியே தான் சிகிச்சை பெற்று வந்திருந்த அறையில் 22.03.2009 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை மர்மமான முறையில் மரணித்திருந்தார். வெலிக்கந்தை சிறை முகாமில் ஒரு போராளி மர்மமான முறையில் மரணம்?அல்லது கொலையா? என்ற சந்தேகம் இன்றுவரை நிலவுகின்றது.
வவுனியா 4ம் கட்டை தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் இயங்கி வந்த இந்தப் பயிற்சி முகாமில் 2009 ஆம் ஆண்டு மே இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலர் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு மாதம் வரை இருந்து பின்னர் சுகவீனம் காரணமாக புலிகளினால் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இந்த இளைஞர் ஓமந்தை முகாமில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாமில் பல மாதங்களாக இருந்து வந்த இளைஞர் ஒருவர் 21.04.2011 திங்கட்கிழமை அன்று காலையில் தற்கொலை செய்து கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசீர்வாதம் நியூஸ்டன் என்ற இவ்விளைஞர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துத்தார்கள். ஆறு சகோதரர்களுடன் பிறந்த இவரது குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை, என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவரது இரண்டு சகோதரிகள் தமது கணவன்மாரை இழந்திருந்தனர். இவர் புனர்வாழ்வு பெற்று வந்த முகாமில், 38 அடி ஆழமுடைய பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப் பட்டது. தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காவல் துறையில் பணியாற்றிய குடும்பத் தலைவர். மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது40) என்ற குடும்பத் தலைவர். 12.11.2014 இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆயுததாரிகள் அவரை அழைத்து சென்று சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து படையினரிடம் சரணடைந்த இவர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப் பட்டார். அன்று முதல் உயிரிழக்கும் வரை சுயதொழில் ஈடுபட்டு வந்தார்.
வடக்கில் நீண்டகாலமாக வன்முறைச் சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டமையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வன்மையாகக் கண்டித்திருந்தார். இச்சம்பவமானது கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதையே எடுத்துக்காட்டியுள்ளது. இந்நாட்டில் இன்று நீதி தோற்றுப்போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் இடம்பெற்று வருகின்றன.
2015ம் ஆண்டுக்கானவரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி தனது உரையின் போது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதுடன் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதாக கூறினார். ஆனால், அதன் பின்னர் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஏனைய போராளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாது போயுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறன. இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றானர். புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்தும் படைத் தரப்பினரால் கண்காணிக்கப்பட்டே வருகின்றார்கள்.
அமுதன் :- புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விடயத்தில் அரசு மற்றும் ஐ.நாவின் செயற்பாடுகள் எவ்விதம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நிலவன்:- புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் எனக் கூறும் எண்ணிகையில் பல குழப்பங்கள் காணப்படுகிறது. சமூகத்தில் இணைக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற 12195 மேற்பட்டவர்கள் எனக் கூறுகின்றது அவர்கள் பெயர் விபரங்களை அரசு வெளியிட வேண்டும். அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதென்பது இலகுவானதொரு காரியமல்ல. இதனை உரிய முறையில் கையாள வேண்டும். வெறும் உடல் மருத்துவ பரிசோதனை மட்டும் போதுமானதொன்றாகக் கூற முடியாது. இதற்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவும் வேண்டும். அவர்களுக்கு சிறப்பான உளவியல் மருத்துவம் சார்ந்த மருத்துவ பரிசோதனையும், அவர்களின் உளவியல் நிலைமைக்கு ஏற்ற வகையிலான உளவியல் மருத்துவமும் அவசியம். இதனைச் செய்யத் தவறினால் சமூகம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாயம் ஏற்படலாம் என்பதில் எதுவித அய்யமுமில்லை. அரசப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தங்களுக்கு விஷ ஊசி அல்லது ரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டது எனப் போராளிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராளிகள் குறித்த ஒரு வெளிப்படையான செயற்பாடு இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதைப் போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாகக் கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
அமுதன் :- அன்று தொடங்கி இன்றுவரை… போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச செயற்பாடுகள் தமி இனப் பரப்பில் எவ்வாறு காணப்படுகிறது?
நிலவன்:- சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தமிழர்கள் முன்னெடுத்த அரசியல் அகிம்சை ஆயுதம் தாங்கிய போர் வரலாற்றில் தனித்துவமானது . இதற்குச் சிங்கள அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனப் பெயர் சூட்டி, ஓர் இனத்தையே கருவறுப்பதுதான் சிங்களத்தின் திட்டமாக 2009 முள்ளிவாய்க்கால் அரசப் படு கொலைகளுக்குப் பின்னர் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனம் கொண்டது. போரின் போது மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை யுத்தத்தில் பாதிப்பேரை மொத்தமாகக் கொன்றும், மீதிப்பேரை சிறுகச் சிறுகக் கொல்லும் சிங்கள இனப் பயங்கர வாதத்தின் கோரப்பசி இன்னமும் அடங்க வில்லை. இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமில் இருந்த சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகளைக் கூறிட வார்த்தைகள் இல்லை. சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளைத் தடுப்பு முகாம்களில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களினாலும் உடல் உளப் பாலியல் என மிகக் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தார்கள்.
அறிவியலின் பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி இன்று சித்திரவதையை உடலியல் சார்பிலிருந்து உளவியலுக்கு நகர்தியுள்ளது. இதற்காக மருத்துவ ரீதியில் இரசாயன கலப்புக்களை உடலினுள் செலுத்தி சித்திரவதை செய்யும் முறைமையினை காட்டலாம். போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றோம் என்ற பெயரில் பல சித்திரவதை முகாம்கள் நிறுவப்பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து இப்போது சமூகத்திலும், அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.. போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகளில் இதுவரை 250ற்கு மேல் பலர் புற்றுநோய்க் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள்.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் இறுக்கமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். .சித்திரவதை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். உளவியல் பாதிப்புக்கும் உள நெருக்கீடு மிக்க உடல் உபாதைகள் கொண்ட நடைமுறைக்கும். இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மிக மோசமான மன உளைச்சலுக்கும் அச்ச உணர்வுக்கும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
இறுதி முச்சுவரை விடுதலைக்கான தியாகம் என்ற கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டிருந்தார்கள். அந்த கொள்கைக்காகத் தமது உயிர்களையே ஆயுதமாக்குவதற்கு பக்குவப் படுத்தப் பட்டவரகள். யுத்தத் ஆயுத மௌனிப்பின் போது அங்கேயே செத்திருக்கலாம் ஏன் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் அல்லது இராணுவத்தின் தடுப்புக்குள் சென்றோம் என்று தாழ்வுச்சிக்கல் சார்ந்த மன உணர்வுகளில் ஆழ்ந்து ஆற்றாத் பெருந் துயருடன் வாழ்கிறார்கள்.இந்த ஊசி மருந்து விடயம் என்பது மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லதொரு விவகாரமாகும். அவர்களுக்கு மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தவல்ல உளவியல் பாதிப்பினை இன்றும் ஏற்படுத்தி உள்ளது.
அமுதன் :- புனர்வாழ்வு பெற்ற பலரின் இன்றைய வாழ்வின் மனநிலையினை உங்கள் பார்வையில் குறிப்பிட முடியுமா?
நிலவன்:- இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. நான்காம்கட்ட ஈழப்போரி சரணடைந்தவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் சிறையிலேயே இருக்கின்றனர் சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், ஆனால் அந்த சித்திரவதையின் பின்னர் உயிர் தப்பிப் பிழைத்தவர்களை மனரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தடுப்பு முகாம்களில் எந்தக் காரணமும் இல்லாமல் பலரை நீண்ட காலமாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதை. பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
அரசின் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகள், காவல்கள், விசாரணைகளின், பின்னர் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட போரளிகளில் பலர் மர்மமான முறையில் சாவடைகின்றார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சாவுகளை தமிழ் அரசியல் குழுக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது. இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆய்வுகள், போன்றன மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு இடையிலும் தமிழர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் சிங்கள பவுத்த பேரின வாதத்தோடு தமிழர்கள் இனியும் இணைந்து வாழ முடியாது என்பதை சர்வதேச சமூகம் இனியாவது ஒத்துக் கொண்டு, தமிழர்களுக்கான தீர்வு என்னவென்று தெரிந்துகொள்வதற்கு தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
அமுதன் :- பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் நிவர்த்தி செய்ய வேண்டிய சில வாழ்வியல் நிலைப் பாடுகள் பற்றி கூறுங்கள்?
நிலவன்:- இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட ‘தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதை‘ குறித்து உளவளம் பாதிக்கப்பட்டு உளக் காயங்களுக்கு உள்ளானோர் உரிய சிகிச்சை பராமரிப்பின்றி சமூகத்தில் வாழ்கின்றார்கள். உளப்பாதிப்பு பற்றிய அரச கட்டுமானங்களின் தேவைகள் மதிப்பீடு உணரப்பட்டு சமூக நிறுவன உருவாக்கங்கள் போதியளவு நடைபெறவில்லை. உள வளத்துணையுடன் கூடிய சமூக பொருளாதர பராமரிப்பு என்பன போதிய அளவில் மேற் கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொதுமக்களிடமும் விழிப்புணர்வுகள் மிகவும் குறைவு . உளக்காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற அறிவு சமூகத்தில் இல்லை.
இலங்கையில் நடந்த இந்த சித்திரவதைகள் எல்லாம் சட்ட ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்தவிதமான நீதி, நியாயங்களும் கிடைக்காமலேயே போய்விட்டது. அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதைப் போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாக கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும் தொடர்ந்து தமிழராய் ஒன்றிணைந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்
நன்றி நிலவன்… நன்றி அமுதன்…
https://www.uyirpu.com/?p=19620