3 months 1 week ago
எங்கட சட்ட மேதைகள் ஒருவருக்கொருவர் அரசியல் குழிபறிப்பதில் நேரத்தை விரயமாக்குவதில் மட்டுமே வல்லவர்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
3 months 1 week ago
யார் அவர்?
3 months 1 week ago
இதுவரை எங்கள் சட்ட மேதைகளே மறந்துவிட்ட ஒரு காரியம். சிங்கள மக்களாலே நமக்கு நடந்த அனிஞாயங்கள் வெளிகொண்டுவரப்படவேண்டும். இவருக்கு முள்ளிவாய்க்கால் படுகொலை காணொளிகளை காட்டுங்கள்.
3 months 1 week ago
தமிழரசுக்கட்சிக்குள் இப்போ இருப்பவர்கள் மக்களுக்காகவோ இந அபிமானத்துக்காகவோ உழைக்க வந்தவர்களல்லர். கட்சியிலுள்ள பெலயீனத்தை வைத்து தங்களை தக்க வைக்கவும் மக்களை ஏமாற்ற வந்தவர்களுமாகும். மக்களின் உணர்வுகளின் மேலேறி பதவிகளை பெற வந்த குள்ள நரிகள். அவர்களுக்கு கொள்கை, இலட்சியம், நீதி, நிஞாயம் என்பதெல்லாம் வெறும் சொற்களே. சுமந்திரனுக்கு கட்சிக்குள் நுழையும்வரை அதன் கொள்கைகள் எல்லாம் தெரியாது. உள்நுழைக்கப்பட்டதும் அதை சிதைப்பதிலும் பதவியை பெறுவதிலும் கண்ணாக இருந்தார் காரியமாற்றினார். கட்சியை வெளியுலகில் தூற்றி அதை நிறைவேற்ற துடித்தார். அன்று தான் செல்லும் வெளிநாடுகளிலெல்லாம் விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டவர், இன்று அவருடனேயே ஒப்பந்தம் செய்துள்ளார், கொள்கைகளை தனது சுய நலத்திற்காக பிரட்டியவர். இப்போ கட்சிகள் கொள்கைகளை மறுத்து செயற்பட்டதாக புலம்புகிறார். அநிஞாயங்களை தட்டிக்கேட்க துணிவில்லாமல் மௌனம் காத்த சிவஞானம் தனக்கேற்ற காரணங்களை காட்டி தன்னை நிஞாயப்படுத்துவதிலும் வெளிக்கிட்டுள்ளார். சாணக்கியன் சிங்களக்கட்சியில் போட்டியிட்டு தோற்று, தமிழ் மக்களின் உணர்வில் சவாரி செய்ய வந்தவர். இவர்களே தலைமைத்துவ போட்டிக்கு அடிபடுகின்றனர். இவர்களை விட்டு வெளியேற்ற மக்களால் மட்டுமே முடியும். பதவிக்காக வரும் சோம்பேறிகளையும், துரோகிகளையும் வீட்டுக்கு அனுப்பி தங்கள் உணர்வுகளை பாதுகாக்க வேண்டும். இல்லையேல் துரோகிகளின் கூடாரத்தை மாற்ற வேண்டும்.
3 months 1 week ago
செந்த நாய் நாட்டை விட்டு ஓடி விட்டதாக செய்திகள் ( மேற்கை தவிர) சொல்கின்றன.
3 months 1 week ago
வடக்கில் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் தமிழ்ப் பிரதேசங்களிலும் தனக்கு இராணுவபாதுகாப்பு தரப்படவேண்டும் என்று கேட்டு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை பெற்றவர், தமிழரை துடிக்க துடிக்க கொன்ற படையின் பாதுகாப்போடு எப்படி அந்த மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற முடியும்? எதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மக்களுக்கு இவர் தலைவராக வேண்டும்? வேறு இளிச்ச வாய் கூட்டம் கிடைக்கவில்லையா? இவருக்கு அதிஷ்டம் கொடுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்களா? இதற்கும் சுமந்திரனின் அபிமானிகளால் பதில் தர முடியுமா?
3 months 1 week ago
இப்படி சொன்னால் தமிழ்நாட்டைத் தான் பரந்த, சர்வதேச தொல்லியல் சமூகம் தவறான கண்ணோடத்தில் பார்க்கும. இந்திய தொல்லியல் துறை, தொல்லியல் துறை சார் விடயங்களை கேட்க, தமிழ்நாடு அரசியல் கதைப்பது. இந்திய அஅமைச்சர் கூட, விஞ்ஞான பூர்வ தன்மை அல்லது ஆதாரங்கள் போதாது (உண்மையில் அவருக்கு இந்திய தொல்லியல் துரையின் அமைச்சர் மட்டத்தில் அறிவுறுத்தல் ) என்று கருத்து சாரப் பட துறை சார் சமபந்தமாகவே சொல்லி இருந்தார். அப்படி இல்லை போதிய அளவு ஆதாரம் இருக்கிறது என தமிழ் நாடு தொல்லியல் துறை துறைசார் மதிப்பீ ட்டை கொண்டு இருக்குமாயின், வேறு சர்வதேச துறை சார் நிபுணத்துவத்தை நாடி இருக்கிறோம் அல்லது அதை போன்ற வேறு எதாவது துறை சார் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
3 months 1 week ago
ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற சுமந்திரன், போர் முடிந்தபின்னும் மக்களுக்கெதிராக ஆயுதம் பாவித்த டக்கிலஸிடம் ஆதரவுதேடிப்போன சிவஞானத்தை ஏன் தடுக்கவில்லை? சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஷ்டம்என்று சொன்ன சுமந்திரன், புலிகளைச்சாட்டி நான் வாக்கு கேட்க்கவில்லை என்று சொன்ன சுமந்திரன், தமிழரோடு வாழாதவர், அவர்களின் இன்னல்களில் பங்கெடுக்காதவர், இன்றும் புலிகளை நேசிக்கும் மக்களின் தலைவனாக வர துடிப்பது ஏன்? தமிழருக்கு நடந்த கொடுமைகளை ஜெனிவா சென்று எடுத்துரைக்க பின்னடித்த சுமந்திரன், எப்படி அவர்களுக்கு விடுதலையை வேண்டிக்கொடுப்பார்? மன்னாரில் மனிதப்புதைகுழி தோண்டும்போது நானும் அங்கே சமூகமளித்திருந்தேன் என்று சொன்ன சுமந்திரன், அது கிடப்பில் போடப்பட்ட போது அதை வெளிக்கொணருவதற்கு என்ன செய்தார்? பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதுதான் அந்த மக்கள் சார்ந்து அவரது பொறுப்பா? இதற்கு பிறகும் இலங்கையில் நடந்தது இனவழிப்புதான் என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று வாதாடுகிறார். எங்கோ இருக்கிற கனடா அமைச்சர் துணிந்து, இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான், அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று உரத்து சொல்லி வருவதோடு அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக தடைகளை அறிவிக்கிறது. அது எப்படி கனடாவால் முடிந்தது? தமிழருக்கு நடந்த, நடக்கிற கொடுமைகளை வெளிக்கொணர, எடுத்துச்சொல்ல விரும்பாதவர், அந்தப்பிரச்சனையில் இலங்கைக்கு கால அவகாசம் வாங்கிக்கொடுப்பதற்கு அமெரிக்கா விரைய அவசியமென்ன? சுமந்திரனின் அனுதாபிகள் இதற்கு விளக்கம் தருவார்களா?
3 months 1 week ago
வசி கேட்டு கொண்ட படி, போட்டியில் முதலாவது ஆளாக பாஸ்மார்க் 40 ஐ எடுத்துள்ளார் வாதாவூரான். நாளை இன்னும் சிலரும் ஆத்தா நான் பாசாகிட்டேன் என சொல்ல போகிறனர், அதேபோல் மீதி சிலர் ஆடு மேய்க தயாராகின்றனர் 🤣.
3 months 1 week ago
நீங்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது. இனிங்ஸ் முடியாவிட்டாலும், 4ம் கேள்விக்கான விடை கிடைத்த விட்டதுதான். ஆகவே முடிவுகளை அறிவிக்கிறேன். சட்டசபையில் உறுப்பினர் கந்தப்பு எழுப்பிய நிலையியல் கட்டளை பிரச்சனையால் ஒரு திடீர் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தபப்பட்டது. இன்னும் ஒரு நாளைக்கு தன் பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை என அவர் அசந்திருந்த வேளையில், தீடீரென நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் சுவி தன் பதவியை இழக்க, நேற்றைய துணை முதல்வர், இன்று முதல்வாராகி தன் சபதத்தை பூர்த்தியாக்கி கொண்டார். வாதவூரான் 40 🪑 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 பிரபா 20 நுணாவிலான் 10 செம்பாட்டான் 00 🐥
3 months 1 week ago
வாழ்த்துக்கள்! வெற்றி வீரப்பேச்சுகளை புறந்தள்ளி பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு விசுவாசமாக உழையுங்கள். அவர்கள் மிகவும் விரக்தியடைத்துள்ளார்கள் தமது அரசியற் தலைமைகளின் செயல்களால். மக்களுக்கு தலைவனாக விரும்புகிறவர், தெரிந்துகொள்ளப்பட்டவர்; அவர்களுக்கு சேவையாளராக இருக்கட்டும், இருக்கவேண்டும். அப்போதே அந்த பதவி நிலைக்கும்.
3 months 1 week ago
இனியாவது தமிழ் மக்களை உசுப்பேத்தி ஏமாற்றி கொண்டு மறு பக்கத்தால் தாங்கள் ஊழல் மோசடிகள் செய்து கொள்ளை அடித்து கொண்டு இருக்காமல் மக்களுக்கு தேவையான பலன் தரகூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்
3 months 1 week ago
இன்னும் இரண்டாம் முறை ஆட்டம் முடியவில்லை. விடை தென்னாபிரிக்காதான். ஆனால் முடியவேணுமோ இல்லையோ. எல்லாத்தையும் கூட்டி நாளைக்குப் போடுவார்.
3 months 1 week ago
4 வது கேள்விக்கான புள்ளிகளை காணவில்லை?
3 months 1 week ago
இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாட்டின் வான் பாதுகாப்புப் படை இரண்டு இஸ்ரேலி போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், "இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானியை கைது செய்யப்பட்டுள்ளார், அவர் ஒரு பெண்" என்றும் கூறப்பட்டுள்ளது. சில ஈரானிய ஊடகங்களில் இஸ்ரேலிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகளுக்கு பிறகு, இஸ்ரேலின் படைத்துறை இது உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளது -bbc.com
3 months 1 week ago
மைதானத்தில் இருந்து கோசானின் நேரடி ஒளிபரப்பப் பார்க்கலாமே😁
3 months 1 week ago
கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:06 AM (நா.தனுஜா) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 11,981 வாக்குகளைப்பெற்று 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3,894 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 3,894 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சைக்குழு 1 மற்றும் சுயேட்சைக்குழு 2 என்பன முறையே 1967, 1286, 809, 1174 வாக்குகளைப்பெற்று தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. இந்நிலையில் அப்பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (12) நடாத்தப்பட்டது. இதன்போது 6 ஆசனங்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் 2 ஆசனங்களைக்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு ஆசனத்தைப்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் வாக்களித்தார். அதன்விளைவாக அப்பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற ரீதியில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கினார் எனும் அடிப்படையிலேயே கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217411
3 months 1 week ago
பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளராக திரேஸ குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். சுயேட்சை குழு (பந்து) சார்பில் இளையதம்பி திரேஸ குமாரன் (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார். வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் இளையதம்பி திரேஸ குமாரன் 9 வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் அரசு கட்சியின் கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 6 வாக்குகளை பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் 1 உறுப்பினர் நடுநிலை வகித்தார். பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் கனகநாயகம் கபில்ராஜ் (கொக்கட்டிச்சோலை வட்டாரம்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் திரேஸ குமாரன் தலைமையிலான சுயேட்சை குழுவும் இணைந்து பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன. சுயேட்சை குழுவை தலைமை தாங்கியுள்ள திரேஸ குமாரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் (சி. சந்திரகாந்தன்) அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் அவர்களின் சகோதரராவார். https://adaderanatamil.lk/news/cmbuyoh6901toqpbsmkybfygk
3 months 1 week ago
மதிய இடைவேளைக்கு முதல் முடிந்தால் முழுவதுமாக மட்ச்சைப் பார்க்கலாம்! இல்லாவிட்டால் கார் பயணத்தில் பிபிஸி சவுண்ட்டில் கொமென்ரரி கேட்கவேண்டும். அதுவும் த்ரில்லாகத்தான் இருக்கும்.
3 months 1 week ago
அப்ப என்ன நாளைக்கு மத்தியானச் சாப்போட்டோட முடிஞ்சிடுமா. எப்பவும் மறுநாள் ஆரம்பம் சிரமமாகத்தான் இருப்பது. இருவரில் ஒருவர் நின்றாலே முடிச்சு விடலாம். சரித்திரம் எழுதப்படுமா. கோசானின் முன்னிலையில்.
Checked
Wed, 09/24/2025 - 15:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed