Aggregator

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
உக்ரைனுக்கு முக்கியமான தருணத்தில் நேட்டோ கூட்டத்தைத் தவிர்க்க ரூபியோ திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராம் ஸ்லேட்டரி மற்றும் ஹுமைரா பாமுக் எழுதியது நவம்பர் 29, 2025 காலை 7:26 GMT+11 நவம்பர் 29, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 12, 2025 அன்று கனடாவின் ஒன்டாரியோவின் ஹாமில்டனில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, ஜான் சி. முன்ரோ ஹாமில்டன் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். REUTERS உரிம உரிமைகளை வாங்குதல் வழியாக மண்டேல் நகன்/பூல்., புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் நிறுவனங்கள் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைத் தவிர்க்க ரூபியோ திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் குறித்த பரந்த கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி சந்திப்பைத் தவிர்ப்பது மிகவும் அரிது. அவருக்குப் பதிலாக அமெரிக்க நம்பர் 2 இராஜதந்திரி கிறிஸ்டோபர் லாண்டாவ் கலந்து கொள்வார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாஷிங்டன், நவம்பர் 28 (ராய்ட்டர்ஸ்) - அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைத் தவிர்க்க அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ திட்டமிட்டுள்ளதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கிய கூட்டத்தில் அமெரிக்க உயர்மட்ட தூதர் இல்லாதது மிகவும் அசாதாரணமானது. அதற்கு பதிலாக துணை வெளியுறவு செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவு வாஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று, இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத விஷயங்களைப் பற்றி விவாதிக்க பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளில் ஒருவர் கூறினார். ராய்ட்டர்ஸ் பீக்கன் செய்திமடலுடன் புதுமையான யோசனைகள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கான தீர்வுகளில் பணியாற்றும் நபர்கள் பற்றிப் படியுங்கள். இங்கே பதிவு செய்யவும் . டிசம்பர் 3 கூட்டத்தை ரூபியோ ஏன் புறக்கணிக்க திட்டமிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் அவரது திட்டங்கள் மாறக்கூடும். ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டம் குறித்த இடைவெளிகளைக் குறைக்க அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் முயற்சித்து வரும் நிலையில் , சில ஐரோப்பிய இராஜதந்திரிகள் இந்த செயல்முறையிலிருந்து தாங்கள் விலக்கிக் கொள்ளப்படுவதாக புகார் கூறி வரும் நிலையில், அவர் பங்கேற்காமல் போக வாய்ப்புள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் முறையான கூட்டங்கள் நடைபெறும், மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கலந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் அரிது. 2017 ஆம் ஆண்டில், டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், அப்போதைய வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஆரம்பத்தில் ஏப்ரல் கூட்டத்தைத் தவிர்க்கத் திட்டமிட்டிருந்தார், இருப்பினும் அவரது அட்டவணைக்கு ஏற்ப கூட்டம் மீண்டும் திட்டமிடப்பட்டது. ரூபியோ கூட்டாளிகளை தவறாமல் சந்திக்கிறது: மாநிலத் துறை ரூபியோவின் சாத்தியமான இல்லாமை குறித்து கருத்து தெரிவிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார், ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் போது நேட்டோ கூட்டணி "முற்றிலும் புத்துயிர் பெற்றது" என்றும், ரூபியோ சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் பல ஐரோப்பிய அதிகாரிகளை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். "செயலாளர் ரூபியோ, கடந்த வார இறுதியில் ஜெனீவாவில் உட்பட, நேட்டோ நட்பு நாடுகளையும் தொடர்ந்து சந்தித்துப் பேசுகிறார்" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். ரூபியோ போதுமான கூட்டங்களில் கலந்து கொள்கிறார் என்று வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "செயலாளர் ரூபியோ ஏற்கனவே நேட்டோ நட்பு நாடுகளுடன் டஜன் கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார், மேலும் ஒவ்வொரு கூட்டத்திலும் அவரை எதிர்பார்ப்பது முற்றிலும் நடைமுறைக்கு மாறானது" என்று அந்த அதிகாரி கூறினார். ரூபியோவின் வருகை குறித்து நேட்டோ அதிகாரி ஒருவர் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவிக்காமல் ஒத்திவைத்தார், ஆனால் சில வெளியுறவு அமைச்சர்கள் நிகழ்வைத் தவிர்ப்பது அசாதாரணமானது அல்ல என்றார். ரஷ்ய நலன்களுக்கு மிகவும் சாதகமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதில் உக்ரேனிய மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் எச்சரிக்கையாக உள்ளனர், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 28-புள்ளி திட்ட வரைவு நவம்பர் 18 அன்று ஊடகங்களுக்கு கசிந்த பிறகு கவலைகள் கணிசமாக தீவிரமடைந்துள்ளன. ரூபியோவின் வருகை, சமீபத்திய ஆண்டுகளில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய பாதுகாப்புக்கான வாஷிங்டனின் அர்ப்பணிப்பு குறித்த கேள்விகளை ஆழப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் நேட்டோவின் உண்மையான தலைவர், ஆனால் டிரம்ப் அந்தக் கூட்டணியின் அவசியம் குறித்து பலமுறை சந்தேகங்களை எழுப்பியுள்ளார், மேலும் பல தசாப்தங்களாக பழமையான கூட்டணியிலிருந்து விலகலாம் என்றும் சில சமயங்களில் பரிந்துரைத்துள்ளார். ரூபியோவின் சார்பாக கலந்துகொள்ளும் இரண்டாவது அமெரிக்க இராஜதந்திரி லாண்டாவ், ஜூன் மாதம் X இல் ஒரு பதிவில் நேட்டோவின் தேவை குறித்து கேள்வி எழுப்பினார், பின்னர் அதை அவர் நீக்கிவிட்டார். ஜூன் மாதம் நடைபெற்ற நேட்டோ தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது, குழுவில் தனது நம்பிக்கையை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார், இது பரவலாக வெற்றியாகக் கருதப்பட்டது, ஆனால் வாஷிங்டன் இனி "அவர்களை விடுவிக்கப் போவதில்லை" என்று கூறி, உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். உக்ரைனுக்கு மிகவும் நெருக்கடியான தருணத்தில் இந்த வருகை ஏற்பட வாய்ப்புள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த கவலைகளுக்கு மேலதிகமாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் வெள்ளிக்கிழமை பதவி விலகினார், ஊழல் எதிர்ப்பு முகவர்கள் அவரது வீட்டை சோதனை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு. https://www.reuters.com/world/us/rubio-plans-skip-nato-meeting-key-moment-ukraine-sources-say-2025-11-28/

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 3 weeks ago
வசீ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லும் எவையும் ஒரு இரவு கூட தாக்குப் பிடிப்பதில்லை. இந்த 28 அம்ச திட்டம் அடுத்த நாளே 19 அம்ச திட்டம் ஆகியது. பின்னர் இந்த வார நீண்ட விடுமுறைக்கு முன்னர் இவை பேசித் தீர்க்கப்படும் என்றார். இங்கு கடந்த வியாழனும், வெள்ளியும் விடுமுறை தினங்கள். ஆனால் பேச்சுவார்த்தை எதுவுமே நடக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் இப்பொழுது நான்கு ஐந்து நாட்களாக வேறு விடயங்களில், ரஷ்ய - உக்ரேன் சண்டையில் அல்ல, தனது நேரத்தையும், முயற்சியையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றார். இந்தச் சண்டையில் அமெரிக்காவிற்கு நீண்ட கால நோக்கங்கள் சில இருக்கலாம். மேற்கு ஐரோப்பாவிற்கும் சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் நோக்கங்கள் இவைகளுடன் இணைந்தவை அல்ல. அவர் ஒரு முதிர்ச்சி அடையாத, நான் என்ற முனைப்பு மிக அளவுக்கு அதிகமான, வயது போன மனிதர் மட்டுமே. தான் வரலாற்றில் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றார்............... நிற்கத்தான் போகின்றார், ஆனால் அவர் நினைக்கும் இடத்தில் அல்ல. இந்த அம்ச திட்டங்கள் என்ற பேச்சு வந்த பின், ரஷ்யா வழமை போலவே இன்னும் அதிகமாக உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல்களையும், ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. சிலர் இறந்தும் போனார்கள். உக்ரேனும் ரஷ்யாவின் ஒரு லேசர் விமானத்தை அதன் இருப்பிடத்திலேயே குண்டு வைத்து தகர்த்தது. ரஷ்யாவிடம் இருந்தது இரண்டு லேசர் விமானங்கள் மட்டுமே. அங்கும் சிலர் இறந்தார்கள். இந்தச் சண்டையின் ஆரம்பமே உக்ரேனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்பது தான். உக்ரேனை நேட்டோவில் இணைப்பதை யார் தடுக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ரஷ்யா என்பதே. ரஷ்யாவை மீறி உக்ரேனை நேட்டோவில் இணைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. இந்த இரு பக்கங்களிலும் எவர் உக்ரேனில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்காக போராடுகின்றார்கள்................. ரஷ்யாவா................ ரஷ்யாவில் இருக்கும் சிறுபான்மை மக்களே தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா. செச்னியர்கள் என்ற ஒரு இனமே ரஷ்யாவில் இல்லாமல் ஆகிவிட்டது அல்லவா. ரஷ்யா போன்ற அரசில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும், சீனாவிலும் கூட சிறுபான்மை அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவை வீழ்த்தி ஜப்பான் வென்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் அரசு அமைத்திருந்தால், இந்தியாவிலும் மொழிவாரி மாநிலங்களோ அல்லது தனித்தனி இன அடையாளங்களோ இருந்திருக்காது. பர்மாவில் 10 இலட்சம் தமிழர்கள் தொலைந்து போனது போல. இந்துக்களாகிய தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள், அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற காரணத்தை முன்வைத்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்க முடியாது. அப்படி இந்தியா செய்தால், இந்தியாவுக்கு எதிராகவே உலக அபிப்பிராயம் இருக்கும். அதுவே தான் ரஷ்யாவின் நிலையும் இன்று. என்ன ஆனாலும் எப்போதும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே வரும் கருத்துகளையோ, அல்லது எந்த நிலையிலும் எப்போதும் அமெரிக்க ஆதரவாக வரும் கருத்துகளையோ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது பெரும்பாலும் ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கும் விருப்பு - வெறுப்பு - காழ்ப்பு என்ற உணர்வுகளின் அடிப்படைகளில் வரும் கருத்துகள். ஊடகங்களும், கருத்தாளர்களும் இப்படி பக்கச்சார்பாக இயங்கினாலும், காலப்போக்கில் அவற்றின் தன்மைகளை அறிந்து, பிரித்தறிய வேண்டியது எங்களின் கடமை ஆகின்றது.

படுபட்சி நாவல்: விசாரணை

3 months 3 weeks ago
வணக்கம் நெடுமாறன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். சொந்தமாக விமானங்கள் செய்தோமா....................... அங்கு பல்கலைக் கழகங்களில் இருக்கும் இருக்கும் குப்பை போடும் தொட்டிகளை கூட, காலால் அமத்த மூடி திறக்கும் தொட்டிகள், நாங்கள் சொந்தமாகச் செய்யவில்லை..................🤣. முன்னர் எங்கேயோ இந்த குப்பைத் தொட்டி டிசைன் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன். Autofiction என்பதை Science fiction என்று மாற்றினால் போச்சு...................😜.

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்

3 months 3 weeks ago
குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

காப்பாற்ற சென்றவர்கள் உயிரிழந்த சோகம் - ஒரே பகுதியில் 'புதையுண்ட 23 தமிழர்கள்'

3 months 3 weeks ago
என்ன சோகமிது! இறந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையட்டும். தன்னுயிரை பொருட்படுத்தாது பிறர் உயிர் காக்க சென்று உயிர் நீத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 3 weeks ago
இரவா, பகலா செய்திகளை வந்து பார்த்துட்டு தான் போறனான்.உங்கள் செய்தி இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஏராளன்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.

காப்பாற்ற சென்றவர்கள் உயிரிழந்த சோகம் - ஒரே பகுதியில் 'புதையுண்ட 23 தமிழர்கள்'

3 months 3 weeks ago
கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் உதவியுடன் தேடல் இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன. ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இறுதி நொடியில் தப்பித்த தருணம் இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார். உதவ சென்றவர் உயிரிழந்த சோகம் படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார். 'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை' படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o

காப்பாற்ற சென்றவர்கள் உயிரிழந்த சோகம் - ஒரே பகுதியில் 'புதையுண்ட 23 தமிழர்கள்'

3 months 3 weeks ago

மண்ணுக்குள் புதையுண்ட 23 தமிழர்கள்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன்.

இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது.

சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மண்ணுக்குள் புதையுண்ட 23 தமிழர்கள்

ராணுவத்தின் உதவியுடன் தேடல்

இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர்.

பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன.

ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இலங்கை கனமழை, திட்வா புயல், கண்டி மண்சரிவு

படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன்

மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார்.

உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

இறுதி நொடியில் தப்பித்த தருணம்

இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார்.

உதவ சென்றவர் உயிரிழந்த சோகம்

இலங்கை கனமழை, திட்வா புயல், கண்டி மண்சரிவு

படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா

தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார்.

'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை'

இலங்கை கனமழை, திட்வா புயல், கண்டி மண்சரிவு

படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா

தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 3 weeks ago
சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தின் முழுமையான பாதிப்பு! 29 Nov, 2025 | 08:46 PM நிலவுகின்ற அசாதாரண வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 432 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் பகுதிகளில் சேதமடைந்துள்ளன. நான்கு பாதுகாப்பான இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 186 தங்க வைக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 1664 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 27 குடும்பங்களை சேர்ந்த 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலனைப் பிரதேச செயலர் பிரிவில் 328 குடும்பங்களை சேர்ந்த 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த 1085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஆறு பாதுகாப்பு மையங்களில் 66 குடும்பங்களை சேர்ந்த 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் அறுபது குடும்பங்களை சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 508 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 57 குடும்பங்களை சேர்ந்த 185 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 601 குடும்பங்களை சேர்ந்த 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒன்பது வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் எட்டு குடும்பங்களை சேர்ந்த 29 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 353 குடும்பங்களை சேர்ந்த 1104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 95 குடும்பங்களை சேர்ந்த 255 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231969

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 3 weeks ago
மட்டக்களப்பில் 166.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு 29 Nov, 2025 | 08:45 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை சனிக்கிழமை (29) ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்படுகின்றன. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு முகத்துவாரம், மற்றும் பெரியகல்வாறு ஆற்றுவாய் எனபன வற்றினூமாக மிக வேகமாக வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து வருகின்றது. இன்றிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. அதபோல் பெரிய நீர்ப்பாசனக் குளங்களாகவுள்ள வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம 19 அடி 7 அங்குலம், உறுகாமம் 16 அடி 3 அங்குலம், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 29 அடி 6 அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்துள்ளதாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறு இருக்க இவ்வருடம ஆரம்பத்திலிருந்து சனிக்கிழமை (29) காலை 8.30 மணிவரையில் 166.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் இம்முறை செய்கை பண்ணப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பல ஆயிரக்கணக்கான நெல்வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன. இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,994 குடும்பங்களைச் சேர்ந்த 30,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அனர்த்த முன்னாயத்த பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231968

படுபட்சி நாவல்: விசாரணை

3 months 3 weeks ago
மெய்யுண்மைக்கு (facts) மாறான பொய்களால் சோடிக்கப்பட்ட கட்டுரை. என். குணரத்தினம் அமெரிக்க Pazhmany Pl2 ஐ இலங்கையில் கட்டியுள்ளார், பாகங்களை ஒன்றாக்கி/ உருவாக்கி. https://en.wikipedia.org/wiki/Pazmany_PL-1 பிலிப் றே விஜயவர்த்தன விமானங்களை உருவாக்கவில்லை. மெய்யான ஓர் விமானத்தின் பாகங்களை வாங்கி அவற்றை மீண்டும் ஒன்றாக்கி விமானமாக்கினார். இது விமானம் உருவாக்குவதல்ல. கொப்பியடிப்பது! மேலும் இதில் அடித்து விடப்பட்டுள்ளது போன்று பல நூறு வானூர்திகள் இலங்கையில் உருவாக்கப்படவுமில்லை.🤣🤣 புலிகள் தரப்பில்: 1986 ம் ஆண்டு வாக்கில் லெப். கேணல் அப்பையா அவர்களால் விமானம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதை கப்டன் கண்ணாடி வாசு தரையில் ஓட்டி வானேற முயற்சித்து முடியவில்லை. மொத்தமாக இரண்டு உருவாக்கப்பட்டன. அவை பின்னாளில் இந்திய வான்படையின் வான் தாக்குதலில் பாரிய சேதமடைந்து போயின. பின்னர் அவற்றில் ஒன்று இந்திய படையினரால் கைப்பற்றப்பட்டது: இது முற்றிலும் சொந்த வடிவம். பின்னர் 2008 ம் ஆண்டு பாரிய வானூர்திகள் கட்டும் முயற்சிகளை புலிகள் மேற்கொண்டனர். அதன் முதற்கட்டமாக தொழிற்சாலை அமைத்து வானூர்தி மாதிரிகள் தயாரித்தனர். 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் மையப்பகுதி' அம்புட்டும்தா... நானறிந்தது. மொத்தத்தில் சொந்த வடிவத்தில் யாரும் பறக்கக்கூடிய ஆள்கொண்ட வானூர்தியை தீவினுள் உருவாக்கவில்லை.

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

3 months 3 weeks ago
பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை 29 Nov, 2025 | 09:04 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான மும்முனை சர்வதேச ரி20 கிரக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷீஹீன் ஸா அப்றிடி, மொஹம்மத் நவாஸ், அப்ரார் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளில் இலங்கை வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். காமில் மிஷாரவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற ஓரளவு பலமான நிலையில் இருந்தது. ஆனால், குசல் மெண்டிஸின் ஆட்டம் இழப்புடன் 52 பந்துகளில் எஞ்சிய 9 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்கு இலங்கை இழந்தது. காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது. பந்தவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 115 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/231978

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் ஹரிணி!

3 months 3 weeks ago
29 Nov, 2025 | 04:33 PM "திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், நகர பிதா உட்பட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231944

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் ஹரிணி!

3 months 3 weeks ago

29 Nov, 2025 | 04:33 PM

image

"திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், நகர பிதா உட்பட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-11-29_at_16.21.43.jp

WhatsApp_Image_2025-11-29_at_16.21.44.jp

WhatsApp_Image_2025-11-29_at_16.21.47.jp

https://www.virakesari.lk/article/231944

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 3 weeks ago
அலவத்துகொடை பகுதியில் பாரிய மண்சரிவு - சுமார் 20 குடும்பங்கள் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 04:50 PM கண்டியில் அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புக்கே ஆறு பகுதியில் இன்று சனிக்கிழமை (29) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231949

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 3 weeks ago
டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது - அடுத்த கட்டங்கள் எப்படி அமையும்! Published By: Priyatharshan 29 Nov, 2025 | 04:08 PM டிட்வா புயல் 29.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலைவரப்படி, புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றது. புயலின் மையம் எப்போதும் அமைதியானது. அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது. அதன் விளைவே தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றுக்கொள்ளும் சற்று கனமான மழை. இந்த மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை காற்று சற்று வேகமாக வீசும் ( மணிக்கு 40-60 கி.மீ.) என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே காற்று வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு புயலின் மிக ஆபத்தான பகுதி உள்வளையமே. வலுவான காற்றையும், அடர்த்தியான ஈரப்பதன் மிக்க முகில்களையும் கொண்ட உள்வளையமே புயலின் மிக ஆபத்தான பகுதி. அது நீர்ப் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குள் வரும்போதும், நிலப்பகுதியிலிருந்து நீர்ப் பகுதிக்கு செல்லும்போதும் அமைதியாக செல்லாது. இதுவே இலங்கை முழுவதும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று இரவு இதன் வெளிவளையமும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை குறைந்தாலும் குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம். இந்த புயல் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால் வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/231942

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 3 weeks ago
கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு : 14 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 1 29 Nov, 2025 | 03:04 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்மலை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231923 குருணாகல் - அலவ்வ பகுதியில் பாரிய மண்சரிவு! 29 Nov, 2025 | 02:02 PM குருணாகல் - அலவ்வ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 22 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/231924 அரநாயக்க மண்சரிவு; குழந்தைகள் உட்பட 120 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 03:36 PM கேகாலை - அரநாயக்க பகுதியில் இன்று சனிக்கிழமை (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231938

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

3 months 3 weeks ago
நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது! 29 Nov, 2025 | 03:11 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/231935