புதிய பதிவுகள்

அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி 17 Mar, 2026 | 12:28 PMimageஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஆறு அம்சங்களை சுட்டிக்காட்டி, அலி லாரிஜானி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின்போது ஈரான் ஒரு வஞ்சனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது, நாட்டை நிலைகுலையச் செய்து, துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதலாக இருக்கிறது என கடிதத்தில் அலி லாரிஜானி குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது நடத்தப்பட்ட
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்Published By: Vishnu17 Mar, 2026 | 08:51 PMimageலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா காமனெயி, பெஞ்சமின் நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters/Getty Imagesபடக்குறிப்பு,(இடமிருந்து வலம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுகட்டுரை தகவல்ஃபிராங்க் கார்ட்னர்பிபிசி செய்தியாளர்17 மார்ச் 2026, 03:18 GMTவாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்'எல்லோரும் விரும்புகிறார்கள்' என்று சொல்ல முடியாது, ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன.அமெரிக்காஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நோக்கங்கள் சற்றே தெளிவற்றதாக உள்ளன. இரானின் அணுசக்தித் திட்டத்தை கட்டுப்படுத்துவது, அமெரிக்க மற்றும்
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்Published By: Vishnu17 Mar, 2026 | 08:51 PMimageலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் முன்மொழிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவாகும் என நான் கருதுகின்றேன்.2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தொடர்பான ஆணைக்குழுவொன்று இருப்பதை நாம் 2025ஆம் ஆண்டிலிருந்தே உணரத் தொடங்கினோம். அதன் பின்னர், இந்த ஆணைக்குழுவைச் செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக, பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் ஆணைக்குழுவின் தேவைக்கேற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஏராளமான தடைகளும் சவால்களும் இருந்து வந்தன.குறிப்பாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது, தனது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம், செயற்பாட்டிற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை வரையறுப்பதற்கான சுதந்திரம், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் வருடாந்தத் திட்டங்களுக்கு அமைவான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல நடைமுறைச் சாத்தியமான நிலைமைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்ற போது, சுமார் 4,000-இற்கும் அதிகமான கோப்புகள் விசாரணைகள் முடிந்த நிலையிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்தன. மேலும், அங்கு வெறும் 31 சட்ட அதிகாரிகள் மாத்திரமே பணியில் இருந்தனர்.இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படுவதன் மூலம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரம், நிதி விவகாரங்களில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை ஆகியவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புதிய அரசியல் கலாசாரத்தினுள் ஊழலற்ற, லஞ்சத்துக்கு எதிரான சுத்தமான அரச சேவையை உருவாக்குவதற்கான மிக முக்கியமானதொரு அடித்தளம் இடப்படுகின்றது, என அவர் தெரிவித்தார்.மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்;தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியன பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வாறான நிலைமைகளை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாதுள்ளது. இப்பாதிப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தருணமாகும். இருப்பினும், அரசாங்கம் என்ற ரீதியில் இம்மாற்றங்களை இனங்கண்டு, அதன் மூலம் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதே எமது பொறுப்பாகும். அதற்காக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விசேட குழுக்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய,அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான குழு. அரசத் துறையில் எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் தற்போதுள்ள முறைகளுக்கு மேலதிகமாகப் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கான குழு. இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், குறிப்பாகச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணுதல் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை நாம் ஒரு நாடாகக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளாகும். இதற்காக எமது அரச சேவையினரும், தனியார் துறையினரும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி அரசியல் அதிகாரத் தரப்பினரும், நாட்டு மக்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்டது போலவே, இப்போதும் நாம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும். சரியான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்தினூடாக, தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு இந்த இக்கட்டான நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, எனப் பிரதமர் தெரிவித்தார்.https://www.virakesari.lk/article/241233
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி 17 Mar, 2026 | 12:28 PMimageஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஆறு அம்சங்களை சுட்டிக்காட்டி, அலி லாரிஜானி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின்போது ஈரான் ஒரு வஞ்சனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது, நாட்டை நிலைகுலையச் செய்து, துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதலாக இருக்கிறது என கடிதத்தில் அலி லாரிஜானி குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத் தளபதிகள், ஈரான் உயர் தலைவர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்ததாகவும் அதற்குத் தாம் பதிலடி கொடுத்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுக்கு பெரும்பாலான இஸ்லாமிய
தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?தமிழ்நாடு, தூத்துக்குடிகட்டுரை தகவல்விஜயானந்த் ஆறுமுகம்செய்தியாளர், பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்தாள். பிளஸ் 2 முடித்துவிட்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுதான் அவளுடைய கனவாக இருந்தது. அதற்குள் இப்படியொரு கொடூரத்தை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறி அழுகிறார், கொல்லப்பட்ட மாணவியின் சகோதரி.'மாணவி கொல்லப்பட்டு ஆறு நாட்கள் கடந்த பின்னரும் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படாததால், சடலத்தைப் பெற மாட்டோம்' எனக் கூறி கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை, சாட்சிகளிடம் விசாரணை என விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாக, நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர் கடந்த 10-ஆம் தேதி இரவு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்கச் சென்றனர்.'இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற தங்கள்
images?q=tbn:ANd9GcRFUwAqFYB41alE9urtEDK82256c86ff9640a042ac09080dc963bcசுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இறுதி அஞ்சலி செலுத்தினர்இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன?March 11, 2026ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன?— கருணாகரன் — தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் விவகாரம் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. (“நாங்கள் அப்படியல்ல. தொடர்ச்சியாகவே ஈழத் தமிழர்களுடைய விடுதலையைப் பற்றிப் பேசி வருகிறோம்” என்று பழ நெடுமாறன், வை.கோ, கொளத்தூர் மணி போன்ற சிலர் சொல்லக்கூடும். இதைக்குறித்துப் பின்னர் பார்க்கலாம்). தேர்தல் காலமென்றால், இன்னும் சற்று உரத்த தொனியில் இந்தப் பேச்சுக்குரல் கேட்கும். இப்போதும் அப்படித்தான்,  தமிழ்நாட்டு அரசியல் மேடைகளிலும் அரங்குகளிலும் ஈழத்தமிழர் அரசியலும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனின் பெயரும் பேசப்படுகின்றன. இதில் சீமான் சற்றுச் சத்தமாக முழங்குகிறார்.  இப்படிப் பேசப்படுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது; கிடைக்கிறது; எதிர்காலத்தில் எத்தகைய நன்மைகள் கிட்டும் என்பதைப் பற்றியெல்லாம் எவருக்கும் கவலை இல்லை. அதைப்பற்றிப் பரிசீலனை செய்வது கூட இல்லை.மூன்று வகை இதில் நாம் மூன்று வகையினரைப் பார்க்கலாம். ஒரு தரப்பு மெய்யாகவே ஈழ விடுதலை கிடைக்க வேண்டும்,  ஒடுக்கப்பட்ட மக்கள்
2,400 கிமீ அப்பால் இருந்த புற்றுநோயாளிக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த இந்திய வம்சாவளி மருத்துவர்இந்த அறுவை சிகிச்சை டூமாய் ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்தியதுபட மூலாதாரம்,PAபடக்குறிப்பு,இந்த அறுவை சிகிச்சை டூமாய் ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்தியதுகட்டுரை தகவல்ஏமி கிளார்க்பிபிசி நியூஸ்4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்லண்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், 2,400 கி.மீ தொலைவில் ஜிப்ரால்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பிரிட்டனின் முதல் நீண்ட தூர ரோபோ அறுவை சிகிச்சையைச் செய்ததாகக் கூறுகிறார்.முன்னணி ரோபோடிக் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ப்ரோகர் தாஸ்குப்தா, பால் பக்ஸ்டனுக்கு ப்ராஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது "தான் அங்கே இருப்பதைப் போலவே உணர்ந்ததாக" கூறினார்.ஆய்வில் பங்கேற்று மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறுவது தனக்கு எளிதான முடிவாகவே இருந்ததாக, 62 வயதாகும் புற்றுநோய் நோயாளியான பால் பக்ஸ்டன் கூறினார்.தொலைதூர ரோபோடிக் அறுவை சிகிச்சை எதிர்கால நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயணம் செய்வதில் உள்ள "பெருமளவு சிரமம் மற்றும் செலவை" தவிர்க்க
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.written by admin December 13, 2020Jaffna-Vellam.jpg?fit=600%2C360&ssl=1யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில்
உலக தாய்மொழி தினம் இன்றுFeb 21, 2026 - 10:49 AMஉலக தாய்மொழி தினம் இன்றுஉலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் உலக தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2000 ஆம் ஆண்டிலிருந்து இது உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான முன்மொழிவை முதன்முதலில் பங்களாதேஷ் நாடே சமர்ப்பித்தது. பங்களாதேஷின் தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான வரலாறு, மொழி பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அந்நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தன. 1952 ஆம் ஆண்டில் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்க அந்த நாட்டு
தனிமையும் துணிச்சலும்January 31, 2026AVvXsEimZyZvKefUUewsTu_t03rECN3Cf94Wo0qzTo9BXFqYW8bcFdcQc3pKMOQwH_Z6BGL_hxkZmc34YNLLZlB9iWPBVVGvLOqpOVNu8wHya-gi25QVdx2Ixm9GnXmcXADyyl95E8oNl_VnJ0s2GOiT2qV853R7-8fL_DAbb-lgs1jKk_fzrBmfkC1JdS1v_Np4=w400-h393துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே
உயிரினை பறிக்கும் அதிகுளிர்!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 22, 2026 1 Minute21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில்  மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.aa7ca5bc-f636-4e0d-97b3-6c07526c1332.jpgசுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல்  வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும்
குடிநீரில் மலக்கழிவு !!நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 18, 2026 1 Minuteஅன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன் என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli பக்டீரியா இருந்தமையே ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும் ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும்.sources-of-drinking-water-contamination-நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா?தனக்கு முன்னால் ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று மேலெழுந்துள்ள பல வண்ணமயமான வட்டங்களைப் பார்க்கும் ஒரு மனிதனின் உருவ நிழல். ஒவ்வொரு வட்டமும் நட்சத்திரங்கள் மற்றும் பிற சிறிய பிரகாசமான பொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது.பட மூலாதாரம்,Victor de Schwanberg/Science Photo Library via Getty Imagesகட்டுரை தகவல்எலன் சாங்பிபிசி உலக சேவை48 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்எங்காவது ஒரு இணையான பிரபஞ்சத்தில் உங்களை ஒரு ராக்ஸ்டார் அல்லது விண்வெளி வீரராக நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?ஒரு "மல்டிவர்ஸில்" பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற யோசனை பகற்கனவுகளையும் அறிவியல் புனைகதைகளையும் ஒருசேரத் தூண்டியுள்ளது - ஆனால் இது சில விஞ்ஞானிகளால் தீவிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.ஆனால் இது பெரும்பாலும் ஹாலிவுட்டில் சித்தரிக்கப்படுவதைப் போல் இல்லாமல் இருக்கலாம். அது உண்மையில் என்னவாக இருக்கும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்நாம் நிச்சயமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் நமக்காக மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டது
முதலைகளின் தீப்பாடல்நீலாவணை இந்திராமுதலைகளின் தீப்பாடல்ஹாவ்கின்ஸின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் எனது இதயத்தை துளைத்து வெளியேறிய கணத்திலேயே, நான் மரித்துவிட்டேன். தோட்டாக்கள் என்றால் அவை சாதாரண உலோகக்குண்டுகள் தான், ஆனாலும் அதிவேகத்தோடு அவை, எனது இதயத்தை துளைத்து முதுகினூடாக வெளியேறும் போது வெடிமருந்து நிறைந்த கைவண்டியில் நான் தவறி விழுந்தேன். எனது உடல் சுக்கல் சுக்கல்களாக வெடித்துச் சிதற, எனது தலை மட்டும் உடலை விட்டுப் பிரிந்து தனித்து விழுந்தது. இது எல்லாம் நடந்து முடிந்த பின்னரும், கொழும்பின் அடிமைத் தீவைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும் எனது ஆன்மாவிற்கு சொல்ல வேண்டிய கதையொன்று உள்ளது. அந்தக் கதையில் இந்த அடிமையானவன் செத்துப் போனான் என்ற முடிவை வாசகர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, என்பதற்காகவே நான் மரித்துவிட்ட செய்தியை ஏற்கனவே உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். நான் ஒரு தேர்ந்த கதைசொல்லியல்ல. ஆனாலும் இந்த துயர்நிறைந்த கதையை சொல்லியே தீரவேண்டும். முன்னும் பின்னுமாக எனக்குத் தெரிந்த உங்கள் மொழியில், இந்தக் கதையை எனது ஆன்மா உங்களுக்குச் சொல்ல விளைகிறது. அவைகளைக் கோர்த்து உங்களுக்குப் புரியும்படி கதையாக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள்…இப்போது எனது கதை ஆரம்பமாகின்றது.1மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவுநான் மரித்துப் போன அந்த ராத்திரியில் கொழும்பு முழுவதும் கடும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளும் அதன்
924714-diwali1.webpவாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்
வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்------------------------------------------------------------------large.Destruction.jpgதேசங்கள் வெட்கம் அற்றவைமெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும்எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவைஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போலஅடித்து பிடுங்கி அழித்துக் கொண்டேதர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவைபோலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள்நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்துவந்த பின் முகமூடியை  கழட்டி எறிந்து விட்டுகுதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும்எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவைஅயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டேபயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள்ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும்அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள்ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும்இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும்ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும்வெட்கமற்ற தேசங்கள் போலவேஅபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார்Published By: Vishnu17 Mar, 2026 | 08:37 PMimage(நெவில் அன்தனி)இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இரண்டாம் பிரிவு பி அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் ஜேசுதாசன் நிதர்சன் இரட்டைச் சதம் குவித்து சாதனை படைத்தார்.நீர்கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கு எதிராக யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது 9ஆம் இலக்க வீரராக களம் புகுந்த நிதர்சன், எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்து இரட்டைச் சதம் குவித்தார்.இதன் மூலம் இரண்டாம் பிரிவுக்கான பி அடுக்கு பாடசாலை கிரிக்கெட் போட்டி ஒன்றில் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார்.அத்துடன் இந்த சாதனையை நிலைநாட்டிய முதலாவது வட மாகாண வீரர் என்ற பெருமையையும் நிதர்சன் பெற்றுக்கொண்டார்.இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது.போட்டியின்
அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!153233804.jpgகார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்..கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.களவழி நாற்பது:''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கிலே - கார் நாற்பதுகார்த்திகை சாற்றில் கழி விளக்குப்போன்றனவை - களவழி நாற்பதுஅகநானூறு:''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழிதூதொடு வந்த மழை''சீவக சிந்தாமணி:குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்னகடிகமழ் குவளை பைந்தார்நற்றிணை:சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.வீரை வேண்மான் வெளியன் தித்தன்முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்கையற வந்த பொழுது - நற்றிணை 58மலைபடுகடாம்“கார்த்திகை காதில் கனமகர
தனித்து விடப்படும் முதியவர்கள்NillanthanBy Nillanthan - 4 months agoLess than a minuteFacebookTwitterGoogle+WhatsappShare via EmailIMG-20251020-WA0017-1024x682.jpgபுலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம்