அரசியல் அலசல்

சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாத தீர்மானம்! வருந்ததக்க விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும் சுமந்திரன்

1 day 9 hours ago

15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024)  இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/sumandran-presscomment-mullivaikal-remembrance-day-1715539722

ஓநாய் நீலி கண்ணீர் வடிக்கிறது பதவிக்காக .

பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர

1 day 22 hours ago
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர

Sri-lanka-300x158.jpegதமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் கூறப்பட்ட ஷஎலியட்ட தாண்ட| பதில் போதும். இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! 

இந்த வருடத்தில் நடைபெற்றேயாக வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாதா, ஒரேயடியாக பின்தள்ளப்பட்டுப் போகுமா என்ற கேள்விகள் அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து நிலவி வருகிறது.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று, வருகின்ற அக்டோபர் மாத முதலாவது சனிக்கிழமை (5ம் திகதி) தேர்தல் நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு எத்தனை அவுன்ஸ் நம்பகத்தன்மை கொண்டதென்ற அடுத்த கேள்வி இப்போது முனைப்புப் பெற்று நிற்கிறது. இதற்கான முதற்காரணம், ரணிலை ஜனாதிபதி அரியாசனத்திலேற்றி இன்றுவரை இறக்காமல் பாதுகாத்து வருகின்ற பொதுஜன பெரமுன நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென அடாப்பிடியாக நிற்பதே.

இந்தக் கோரிக்கையை ரணிலிடம் நேரடியாக முன்வைத்தவர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச. எதற்குமே நேரடியாகப் பதிலளிக்காது அலைக்கழித்து வரும் ரணில், ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் கட்டாயம் நடத்தப்பட வேண்டியது என்று மட்டும் நாசூக்காக பதிலளித்துவிட்டு, தேர்தலுக்கான அக்டோபர் 5ம் திகதியை வெளியிட்டார்.

ரணிலிடம் தமது பருப்பு அவியாது என்பதைப் புரிந்து கொண்ட பசில், அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன செயற்குழுக் கூட்டத்தில் – நான் பொதுத்தேர்தலை முதலில் நடத்துமாறு ரணிலிடம் கோரினேன். அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே அவரது விருப்பம்போல் செயற்படுமாறு கூறினேன் என்று தமது இன்றைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இதனாலோ என்னவோ பெரமுனவின் தேசிய அமைப்பாளராக ஷகுட்டி ராசா| நாமல் ராஜபக்சவை கட்சி நியமித்துள்ளது. நாமலை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டுமென விடாப்பிடியாக கேட்டு வரும் கட்சியின் ஓர் அணியினருக்கு இது வாய்ப்பாகப் போயிற்று. இவர்கள் தொடர்ந்து அந்த வாய்ப்பாட்டையே வாசித்து வருகின்றனர்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க – சிறிமாவோ பண்டாரநாயக்க தம்பதியினரின் ஏகபுதல்வரான அனுர பண்டாரநாயக்கவும் இன்றைய நாமல் ராஜபக்ச போன்று உயர்மட்டத்தில் வைத்துப் பார்க்கப்பட்டவர். தமது பெற்றோர் அமர்ந்த ஆசனத்தில் (அப்போது பிரதமர் பதவி) தாமும் ஏற வேண்டுமென துடியாய்த் துடித்தவர் அனுர பண்டாரநாயக்க. ஒரு கட்டத்தில் தமது தந்தை உருவாக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சபாநாயகர் பதவியைப் பெற்றவர்.

பொறுமை காத்து அவர் அரசியல் செய்திருந்தால் அவரது சகோதரி சந்திரிகா குமாரதுங்க பெற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிப் பதவிகள் அவருக்கே கிடைத்திருக்க வேண்டியவை. ஷவெள்ளை மாடு கொழுத்தாலும் வழுவழுப்பு நீங்காது| என்பது போல அனுர பண்டாரநாயக்க பெயரளவில் குடும்ப வாரிசாக உயர்ந்திருந்தாலும் அரசியல் செயற்பாட்டிலும் அந்த நிலைக்கு வளர்ந்திராததால் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானது வரலாறு.

இந்த அரிச்சுவட்டிலேயே நாமலும் இன்று நடைபயில்கிறார். ரணிலும் நாமலும் மலையும் மடுவும் போன்றவர்கள். இதனை நன்கு புரிந்து கொண்டதால்தான் நாமல் இப்போது ஜனாதிபதிப் போட்டியில் இறங்குவதை அவரது தந்தை மகிந்த விரும்பவில்லை. இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் ஷநம்மடை ஆள்| ரணில் ஜனாதிபதியாக இருப்பாரானால், அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் வயதாலும் அனுபவத்தாலும் தகுதி பெற்றுவிடுவாரென்று மகிந்த கருதுகிறார்.

ஏறத்தாழ பசிலும் இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார். அதனாற்தான், நெருக்கடியான நேரத்தில் ஆட்சியை பொறுப்பேற்ற ரணில்; பொருளாதார ரீதியாக நாட்டைக் காப்பாற்றி (தங்களையும் காப்பாற்றினாரென பகிரங்கமாகக் குறிப்பிடாமல்) மக்களுக்கு பசி நீக்குகிறார் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்.

பசில் இவ்வாறான முடிவெடுத்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. 1. ரணிலுக்கெதிராக பெரமுன ஒருவரை களமிறக்கினால் ஏற்கனவே அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களாக இருப்பவர்கள் ரணிலின் பக்கம் செல்வர். இதனால் பெரமுன பிளவடையும். 2. எக்காரணம் கொண்டும் ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார வெற்றி பெறுவதை அனுமதிக்கக்கூடாது. 3. சஜித் பிரேமதாசவின் எதிர்காலத்தை சூனியமாக்கி அரசிலிருந்து அப்புறப்படுத்த ஒரேவழி ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே.

ஆக, இன்றைய களநிலைவரப்படி ஆட்சித் தரப்பின் ஆதரவோடு ரணில் ஜனாதிபதி வேட்பாளராகிறார் என்பது நம்பக்கூடிய நிச்சயமாகிறது.

எனினும், ரணில் தொடர்ந்து பெரமுன, சஜித் அணி ஆகியவற்றை பிய்த்தெறியும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் நாடு முழுவதும் சென்று தேர்தல்; அட்வான்ஸ் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அதிகாரபூர்வமாக வெசாக் தினத்தின் பின்னரேயே தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகுமெனை அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17க்கும் அக்டோபர் 17க்குமிடையில் நடைபெறுமென்று நம்ப வைக்கும் அறிவிப்புகளையும் விடுத்து வருகின்றார்.

கடந்த ஒருவாரத்தில் பருத்தித்துறை, றாகம மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்களை கையளித்தது, நாட்டின் மிகப்பெரிய மகப்பேற்று மருத்துவமiiயை காலியில் திறந்து வைத்தது, அரச ஊழியர்களுக்கு ஏப்ரலில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு, ஓய்வூதியகாரர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு, பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு என பல நிகழ்ச்சிகளில் ரணில் நேரடியாக பங்கேற்று வருவதானது, ‘ஐயா லெக்~ன் கேட்கிறார்” என்ற பிரபல நாடகத்தை நினைவூட்டுகிறது.

இப்படியான சாதக சமிக்ஞைகள் காணப்படும் அதேசமயம், தேர்தலுக்குப் பொறுப்பான தேர்தல் ஆணையாளர் இரண்டு விடயங்களை அறிவித்து அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் இவ்வருடத்தில் நடத்தக்கூடிய வலுவுடன் தேர்தல் திணைக்களம் இருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 18ம் திகதி நடத்தினால் நல்லது எனவும் இவர் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்களம்தான் தேர்தல்களை நடத்தினாலும் ஆட்சித்தரப்பில் ஜனாதிபதி தமக்கான சகல நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தி முடிவெடுப்பார் என்பதே யதார்த்தம்.

கடந்த வருடம் உள்;ராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்த தேர்தல் திணைக்களம் அதற்கான திகதி அறிவித்து, அபேட்சகர் கட்டுப்பணம் செலுத்தி வாக்குச் சீட்டுகளையும் அச்சடித்துக் கொண்டிருந்த வேளையில் – தேர்தலுக்குப் பொறுப்பு தேர்தல் ஆணையாளர், வாக்குப் பெட்டி ஜனாதிபதியின் கைகளில் – என்ற தலைப்பில் இந்தப் பத்தியில் எழுதப்பட்டது ஞாபகம் இருக்கிறது. அச்சொட்டாக அவ்வாறே தேர்தல் ரத்தானது. இன்றுவரை தேர்தல் நடைபெறவில்லை. இதனை அரசியல் கட்சிகளும் மறந்தேவிட்டனர்.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. மேலும் ஐந்தோ பத்துப்பேர் போட்டியிடக்கூடும்.

தாம் அமைச்சராக இருந்தபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினால் ராஜிவ் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்குமென கூறிவரும் அவரது ஆட்சியிலேயே அந்த அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தி தமிழர் பிரதேச காணிகளும் வழிபாட்டுக்குரிய நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன.

வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேனென்று தெரிவித்த சஜித் பிரேமதாசவிடம் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார திசநாயக்க புனித கங்கையில் நீராடி புனிதமான மனிதராக காட்சி கொடுக்க முனைகிறார். தமிழர் வாக்குகளை இலக்கு வைத்து அண்மையில் வடக்கே சென்ற இவர் கிழக்குக்கும் செல்லப் போகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாத நடுப்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற ரொறன்ரோ கூட்டத்தில் சுமார் இருநூறு வரையான தமிழர்களும் பங்குபற்றினர். இமாலய பிரகடனத்தினால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளும் இங்கே காணப்பட்டனர்.

அனுர குமார திசநாயக்க தமது தாய்மொழியான சிங்களத்தில் உரையாற்றினார். இதனை தமிழில் கேட்க அதற்கான செயலி வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அது இயங்காமல் போயிற்று. ‘தமிழில் மொழிபெயர்ப்புத் தாருங்கள்” என தமிழர் ஒருவர் வேண்டினார். மேடையிலிருந்த பிரமுகர் ஒருவரிடமிருந்து ‘எலியட்ட தாண்ட” எனப் பதில் வந்தது. இதன் அர்த்தம் வெளியே போ என்பது.

தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பதில் போதும்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது!

பனங்காட்டான்

பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர – குறியீடு (kuriyeedu.com)

 
 

தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்

2 days 1 hour ago

 

தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்

spacer.png

 

ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர்கள், புலமையாளர்கள், காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள், யுடியூப்பார்கள்… என்று அனைவரும் அடங்குவர். இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை  விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு  விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப்  பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்ப்  பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ்  மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக்  கட்டியெழுப்புவது.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம். பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன. கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன. தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன.

2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள். எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும்  சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்; ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது.

இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு. தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை  வைக்கும் ஓர்  அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா?

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு  கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா?

 

articles_oqF2dgHWywdy2xvr1yHd-1c.jpg
438118590_1637440950399539_2087891460431

 

தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்… என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ?

கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. எனினும்   காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது.

பொது வேட்பாளர் தோற்கக்கூடாது. உண்மைதான். தோற்கக் கூடாது. அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும். அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான்.

கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப்  பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும்  அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல.

தமிழரசியல்  கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த  தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு  அவர்  கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.

பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா? அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட  ஒரு வேட்பாளர் வேண்டும்,

தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில்  கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக்  கொண்டே போகும் ஒரு  சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா?

 

https://www.nillanthan.com/6754/

 

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

2 days 22 hours ago
பிரதமர் மோதியின் பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், ஊடகங்களின் கருத்து  - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை தகவல்
  • எழுதியவர், வினீத் கரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மக்களவைத் தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பரப்புவது வெளிநாடுகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், "இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத்தனமாக உள்ளது. இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்று கூறினார்.

'இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல'

மும்பை கலவரத்திற்குப் (1993) பிறகு அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மும்பையின் சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் பொறியாளர் இர்பானின் கூற்றுப்படி, ``இதுபோன்ற தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல.” என்கிறார்.

”இதற்கு முன்பு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் `ஊழல் எதிர்ப்பு’, `இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது (அச்சே தின்)’, `தேசியவாதம்’ உள்ளிட்ட வாக்கியங்களின் அடிப்படையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2024 தேர்தல் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளை முன்வைத்து நடத்தப்படுகின்றன,” என்றார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் வில்சன் மையத்தின் தெற்காசியா பிரிவின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பிரதமர் மோதி ஆற்றிய பிரசார உரை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருந்தது , இந்தக் கட்டுரையின் தலைப்பு - "No, Prime Minister".

ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்று குறிப்பிட்டார்.

 
அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள்
பிரதமர் மோதியின் பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், ஊடகங்களின் கருத்து  - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ANI

இந்த பிரசார விவகாரம் இத்துடன் முடியவில்லை.

கர்நாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட், 'முஸ்லிம்களுக்கு எதிரான' தேர்தல் விளம்பரம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள் தவறானவை என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறி வருகின்றனர்.

இது தவிர, ‘‘தனிப்பட்ட சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பாஜக தலைவர் ஜேபி நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தபோது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார்.

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு,அமித் மாளவியா

தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், "காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்," என்றார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்று கூறினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஷரியா, தாலிபன் போன்ற வார்த்தைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

பிரதமர் மோதி, பன்ஸ்வாராவில் ஆற்றிய உரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விடவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்தான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.

 
வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்களின் கருத்து என்ன?

பாஜகவின் பிரசாரம் மீதான விமர்சனங்கள் குறித்து வலதுசாரி சுவ்ரோகமல் தத்தா பேசுகையில், "இந்த நாட்டில் உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டது இல்லையா? கஜ்வா-இ-ஹிந்த் என்ற சித்தாந்தம் இந்த நாட்டிற்குள் வரவில்லையா? ஓட்டு ஜிகாத் இந்த நாட்டிற்கு வரவில்லையா? இந்த உண்மைகளை பிரதமர் அம்பலப்படுத்துகிறார், அவர் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்?” என்றார்.

பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் மோதியின் பிரசாரம் மீதான விமர்சனங்களை ஏற்கவில்லை.

ஜமால் சித்திக் பேசுகையில், “மோதி ஜி எப்போதும் முஸ்லிம்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் ஊடுருவியவர்கள் என்றால் முஸ்லிம் என்று அர்த்தம் இல்லை. அதை ஏன் முஸ்லிம்கள் மீது திணிக்கிறோம்?

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நாட்டை உடைக்க முயல்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகிறார்கள். ஆம், இந்து, முஸ்லிம் என இரு தரப்பிலும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்," என்றார்.

 
தேர்தல் ஆணையம் 'மௌனம்' காப்பது ஏன்?
பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ``விஷமத்தனமான கருத்துகளை” உள்ளடக்கிய தேர்தல் பிரசாரங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆளும் பாஜக தலைவர்கள் மீது காட்டும் கடுமையை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் காட்டுவதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னர், பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் இந்து மத சின்னங்களைப் பயன்படுத்தியதற்காக தேர்தல் ஆணையம் பாஜக மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையம் ஒரு "பாகுபாடான நடுவர்" போல் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரதமரின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிபிசியிடம் பேசுகையில், "சாதி, மதம், சமூகம் குறித்த கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் கூறுகையில், ``கடந்த காலங்களில் சர்ச்சையான பிரசார உரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமை காட்டியிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.,’ என்றார்.

தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரி நடத்தை விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தின்போது மத சின்னங்களை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது. மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடாது. தேர்தல் நடத்தை நெறிகளின்படி, எந்தவொரு மத அல்லது இன சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைக் காரணம் காட்டி, பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசாரப் பேச்சுக்கான நோட்டீஸ் பிரதமருக்கு அனுப்பப்படாமல், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பப்பட்டது கேள்விகளின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இதேபோன்று, ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் , “பிரதமரின் தரக்குறைவான கருத்துகளால் சாமானிய மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

சமமாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியின் கருத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்? தேர்தல் ஆணையத்திற்கு இது அவசியமா? பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை விதித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது,” என்று குறிப்பிட்டார்.

 
அழுத்தமான பேச்சுகளுக்கு என்ன காரணம்?
பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசார உரை, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பாகப் பேசப்பட்டது. வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோதி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோதியே மயானம் மற்றும் சுடுகாடு பற்றிக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார்.

``கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்னையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், ``தேர்தலுக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது, பாஜக கட்சியினர் மத்தியில், இது ஹிட்-விக்கெட் (hit-wicket) என்று ஒருதரப்பும் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று மற்றொரு தரப்பும் நம்பியது. இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்தது.”

பிரதமர் மோதியின் பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், ஊடகங்களின் கருத்து  - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,அரவிந்த் கெஜ்ரிவால்

கேஜ்ரிவாலின் கைது பாஜகவின் அதீத நம்பிக்கையின் விளைவு என்று அவர் கருதுகிறார். ``ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவின் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் கட்சிகள் உடைந்ததால் பலர் பாஜகவில் இருந்து விலகிச் சென்றனர்,’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தியை தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோதி, அதானி மற்றும் அம்பானி பற்றிக் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பேசிய நூருதீன் ``பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் என நம்பப்படும் நபர்களை பிரசாரத்தில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் நம்பும்படி இல்லை,” என்கிறார்.

மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதி தேர்தலில் தானும் தனது கட்சியும் சிறப்பாகச் செயல்படுவதாக நம்புகிறார். அவர் தனது முக்கிய ஆதரவாளர்களைத் தாண்டி மேலும் பலரை கட்சியில் இணைக்க முயல்கிறார்.”

" இது புத்திசாலித்தனமான கொள்கை அல்ல. கட்சியில் மக்களைs சேர்க்க விரும்பினால், அவர்கள் முஸ்லிம் வாக்காளர்களை நல்ல முறையில் அணுக வேண்டும், சுதந்திர எண்ணம் கொண்ட வாக்காளர்களிடம் பேச வேண்டும், பாஜகவை சார்ந்த வாக்காளர்களை அணுக வேண்டும். நீங்கள் அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறீர்கள் என்றால், பயன்படுத்தும் கடுமையான மொழியைத் தவிர்ப்பது நல்லது. தற்போதைய பிரசார பாணி துரதிர்ஷ்டவசமானது,” என்று மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

பாஜகவின் கொள்கைகளை ஆதரிப்பவரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகையில், "பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் அல்ல, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது."

” பிரிவினை ஏற்படுத்தும் செயல்கள் செய்தது காங்கிரஸ்தான் என்று பிரதமர் மோதி தொடர்ந்து கூறி வருகிறார், இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இதைப் பார்த்து நாடும், சமுதாயமும் உஷாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நம்மை எச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் இருக்கிறார்."

"மேலும், நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது வரலாற்று ரீதியாக உண்மை கிடையாது,” என்றார்.

விமர்சகர்களின் கருத்துப்படி, மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது என்கின்றனர்.

 
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இதை எப்படிப் பார்க்கின்றன?
பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் செய்திகள் நல்ல தொணியில் இல்லை. இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் இந்த விவகாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.”

``செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு எந்தப் பதிவாக இருந்தாலும், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நிலை சரியில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்கிறார்.

பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், "தற்போது உலகின் கவனம் இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்மறை அம்சங்களை நோக்கியே உள்ளது. நிஜ்ஜார் கொலை வழக்கில் வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கை மற்றும் இந்திய உளவாளிகள் என்று குறிப்பிட்டு ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தி அறிக்கை ஆகியவை இதற்கு சான்று’’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா மறுத்து வருகிறது.

பேராசிரியர் நூருதீன் மேலும் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூ ரிசர்ச் நடத்திய ஆய்வறிக்கையின்படி ஐரோப்பாவில் காலப்போக்கில் இந்தியா மீதான எதிர்மறை எண்ணம் அதிகரித்துள்ளது,” என்றார்.

மைக்கேல் குகல்மேன் கூறுகையில், "பிரதமராக நரேந்திர மோதியின் பேச்சுகளையும், தேர்தல் பிரசாரங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், பாஜகவின் கொள்கைகள் குறித்து பல முஸ்லிம்கள் கவலைப்பட்டாலும், பிரதமர் மோதியின் ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா உடனான மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகள் வலுப்பெற்றுள்ளதால் இந்திய நிலைமைகள் பற்றி அவை எதுவும் கூறாது, இது தவிர ஏராளமான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்,” என்றார்.

மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, ”பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர, வேறு எந்த நாட்டின் தலைவரும் தேர்தல் பிரசாரங்களைக் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெளிநாட்டு மண்ணில் நிஜார் படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வரும்போது இந்த நிலைமை மாறுகிறது."

"இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 'வெறுக்கத்தக்க பேச்சு' என்றே சொல்லத் தோன்றுகிறது” என்றும் அவர் கூறுகிறார்.

 
குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜக தலைவர்கள்
பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். வலதுசாரி சர்வதேச விவகாரங்களின் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா கருத்துப்படி, இந்தியாவை பற்றி சர்வதேச நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை.”

அவர்கள் முதலில் அவர்கள் பிரச்னைகளைப் பார்க்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் ஸ்வீடன், பிரான்ஸில் போராட்டங்கள் நடத்தினர், பாரிஸிலும் தாக்குதல் நடந்தது, லண்டனில் வெடிகுண்டு தாக்குதல்கள், மாஸ்கோ தியேட்டர்களில் ஐ.எஸ் தாக்குதலில் மக்கள் இறந்தது எனப் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் மற்றும் ஸ்பானியர்களுக்கு செய்யப்படும் பாகுபாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதலில் சரி செய்ய வேண்டும்,” என்றார்.

பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், "பிரதமருக்கு முன் கேள்விகள் வரும்போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, காங்கிரஸ் இளவரசர் ராகுல் பையா தனது கருத்தைத் தெரிவிக்கும்போது, மோதியை தாக்கும்போது, மோதிஜி உங்கள் கருத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்."

சமீபத்தில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோதி, முஸ்லிம்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "சுயபரிசோதனை செய்து, சிந்தித்துப் பாருங்கள், நாடு முன்னேறி வருகிறது. குறை என்று உங்கள் சமூகத்தில் உணரப்பட்டால், அது காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு செய்த செயல்பாடுகளின் விளைவுதான்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c72pg37gvngo

தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா?

3 days ago

தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா?
Oruvan

இலங்கைத்தீவின் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். மக்களின் இந்த விரும்பங்களுக்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடி வருகின்றன. இது 95 சதவிகிதம் இணக்கமாகத் தெரிகிறது. 

யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கிலிருந்து மொத்தம் 46 சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. 

ஆரம்பக் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

'பொது பொறிமுறை'யை அமைத்த பின்னரே சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்தித்து தமிழ் பொது வேட்பாளர்கள் விவகாரம் தொடர்பாக உரையாடவுள்ளன.

ஜனாதிபதியாக வரமுடியுமா?

இந்த முயற்சியைச் சிலர் இனவாத செயற்பாடு என்று கூற முற்படுகின்றனர். ஆனால் அது இனவாத ஏற்பாடு அல்ல. அது ஈழத்தமிழர்களுக்குரிய ஜனநாயக உரிமை.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க முடியாது என்று நேரடியாகக் கூறவில்லை. 

ஏனெனில் 75 வீதமானவர்கள் சிங்களவர்கள். தமிழ் முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்தாலும் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான குறைந்தபட்ச 51 சதவீத வாக்குகளை பெற முடியாது.

அப்படியானால் கணிசமான சிங்கள மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் ஒரு தமிழருக்கு சிங்களவர்கள் வாக்களிக்கும் அரசியல் கலாச்சாரம் இலங்கைத்தீவில் இன்னும் உருவாகவில்லை. 

ஆனால் தமிழ் - முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். 

அரசியலமைப்பின் விதி

தமிழ் முஸ்லிம் மக்கள் தாங்கள் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது இலங்கை அரசியலமைப்பில் எழுதப்படாத விதியாகும்.

எனினும், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்கள் பிராந்தியங்களில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் தங்கள் மக்களின் பிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். 

வடக்கு - கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. 

இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுகின்றன, ஆனால் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சிங்களப் பிரதிநிதிகளும் அது சிங்களக் குடியேற்றம் அல்ல என்றும் வடக்கு கிழக்கு சிங்கள மக்களின் வரலாற்று வாழ்விடமாகும் என்றும் கூறுகின்றனர். 

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு 'வரலாற்று வாழ்விடங்கள்' என்று அழைக்கப்படுகிறது. 

ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கியது

இது தமிழர்களின் பாரம்பரிய தாயகம் அல்லது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்று குறிப்பிடப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக தமிழர்கள் ஏற்க மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய பிரதேசம் என்று கூறி வருகின்றனர். தமிழர்கள் இன்றும் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய தாயகம் என்று நம்புகிறார்கள். 

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினால் வடக்கு - கிழக்குப் பிரச்சனை உருவானது என்று சிங்கள அரசியல் கட்சிகள் இன்னமும் சிங்கள மக்களுக்குக் காரணம் காட்டி வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. 

1920இல் 'இலங்கைத் தேசிய இயக்கம்' பிளவுபட்டு 1921இல் 'தமிழ் மகா சபை'உருவானபோது எழுந்த சிங்கள-தமிழ் முரண்பாடு 1930இல் டொனமூர் மற்றும் 1947இல் சோல்பரி அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது மேலும் விரிவடைந்தது.

பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடப்புத்தகங்களில் கூட இது பற்றிய கதைகள் உள்ளன.

இப்போது நீளம் கருதி இந்த வரலாறுகளை முழுமையாக ஆராய விரும்பவில்லை. ஆனால் இந்த வரலாறுகளின் பின்னணியில்தான் வடகிழக்கு தமிழர்கள் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பொது வேட்பாளரை நிறுத்த நினைக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ் வாக்காளர்கள் தேவை

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் பின்னர், முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் தேவை என்று தமிழர்கள் உணர்ந்தனர். 

ஏனெனில் 2009க்குப் பிறகு 15 வருடங்களில் குறைந்தபட்ச அரசியல் தீர்வைக் கூட வழங்க இலங்கை அரசு விரும்பவில்லை என்பது தமிழர்களின் குற்றச்சாட்டாகும். 

1960களில் வி.நவரத்தினம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தைச் செல்வா), அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் எந்த அரசியல் தீர்வையும் காணத் தவறியது. 

அதன் பின்னர் 1970களில் தமிழ் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற முடியவில்லை. போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்கள் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 2009ல் அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இறுதிப் போருக்கு இலங்கை அரசுக்கு ஆதரவளித்தன. இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிதியுதவியும் வழங்குகின்றன. 

அரசியல் தீர்வை முன்வைக்காத இலங்கை

அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு இச் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு கடும் அழுத்தத்தை மட்டுமே கொடுத்து வருகின்றன. பொருளாதார உதவிகளை வழங்கும்போது அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டும் அல்லது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாத்திரமே அறிக்கை விடுவார்கள். 

2012ஆம் ஆண்டு முதல் ஜெனிவா மனித உரிமைச் சபையில் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அரசியல் தீர்வுகளுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் இல்லை. 

2020ல் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தைப் பகிரங்கமாக நிராகரித்தது.

ஆனால், 2009ல் நடந்த போரை ஆதரித்த அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் தீர்மானம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக கோட்டாபய அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை.

மாறாகத் தமக்குரிய பிராந்திய புவிசார் அரசியலில் கவனம் செலுத்தி, வடக்கு கிழக்கில் தங்களுக்குத் தேவையான இயற்கை வளங்களையும் அரசியல் பொருளாதார நலன்களையும் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே இந்த நாடுகளின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.

கவலை தெரிவித்த சம்பந்தன்

ஆனால், இலங்கைத் தீவிற்குள் நிரந்தர அரசியல் தீர்வும் இல்லை, தமிழர்களுக்கு நீதியும் இல்லை.எனவே, சர்வதேச நீதி கிடைக்கும், குறிப்பாக 2009க்குப் பிறகு, சர்வதேச நீதி வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அது அவர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் என்றும் நம்புகின்றனர். 

2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆர்.சம்பந்தன், 2009ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க-இந்தியத் தூதுவர்கள், விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர், தமிழர்களுக்கு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் பத்து வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை எனவும் சம்பந்தன் தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார். அந்த உரையில் சம்மந்தன் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் சுட்டிக்காட்டினார். 

ஆனால் 2009க்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் பொருத்தமான அரசாங்கத்தை அமைப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துகின்றன. 2010, 2015 மற்றும் 2020 ஆட்சி மாற்றங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. 

குறிப்பாக 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அனைவரின் நம்பிக்கையையும் வீணடித்தது. ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த வல்லரசுகள் கூட மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் இருந்து தாம் நினைத்த எதையும் சாதிக்க முடியவில்லை.

சந்திரிக்கா ஆட்சி

1994 இல் வடகிழக்கு தமிழர்கள் ஏகமனதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் அவரது பதினொருஆண்டு கால ஆட்சியில் போர் மாத்திரமே நடந்தது. 2000 ஆம் ஆண்டு சந்திரிகாவின் பலவீனமான ஆட்சி பல அரசியல் நெருக்கடிகளையும் கண்டது. 

எனவே இலங்கைத் தீவிற்குள் முழுமையான அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரமே நிலையான சமாதானத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் உகந்தது என்பதைச் சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. எனினும், இந்த வரலாறுகள் பற்றிச் சர்வதேச சமூகம் அறியாதவை அல்ல. 

எனவே இந்த வரலாறுகளைப் புரிந்து கொண்டு வேறு மாற்று அணுகுமுறைகளை கையாளாமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமான ஒருவரை இந்த நாடுகள் தேடி வருகின்றன. 

ஆனால் இந்த நாடுகள் இலங்கை அரசியலில் தலையிடுவதில்லை என அவ்வப்போது மறுத்தும் வருகின்றன. 

இந்தப் பின்னணியில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடி வருகின்றன.

இங்கு தமிழ் பொது வேட்பாளர் எத்தனை வாக்குகளைப் பெறுகிறார் என்பதை விட, தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் முக்கியமானவை.

சர்வதேச நீதியே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாகும் என்பதை அக் காரணங்கள் பகிரங்கப்படுத்துகின்றன. அது்துடன் இது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறது. 

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தன்மை பற்றி உலகுக்கு உணர்த்துகிறது. 

தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் கொழும்பை மையப்படுத்திய சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாகவும் சில வெளிநாடுகளின் விருப்பத்துக்கு ஏற்பவும் செயற்படுவது உண்மைதான். அதை மறுக்க முடியாது. 

2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் சில தமிழ் உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். 

தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வு

இதனால் தமிழ் தேசிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை முடக்க முயற்சிக்கின்றனர்.

அதே சமயம் தமிழர்கள் உண்மையான அரசியலை ஏற்க வேண்டும் என்று சில தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பதை எற்க வேண்டும் என்கிறார்கள், இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்கின்றனர்.

ஆனால் 'உண்மையான அரசியல்' மற்றும் 'இணக்க அரசியல்' ஆகியவற்றின் வரையறை எப்போதும் கேள்விக்குரியது. 

தமிழீழ விடுதலைப் புலிகளால் நிலையான அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்று கடந்த முப்பது வருடங்களாக இலங்கை அரசு வாதிட்டு வருவது உலகம் அறியாதது அல்ல. 

ஆனால் விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 15 வருடங்களில் என்ன நடந்தது என்பதைச்சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தீர்மானத்திற்கு சிவில் சமூக அமைப்புக்கள் தயாராகி வருவதாக யாராவது கூறினால் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அ.நிக்ஸன்

 

https://oruvan.com/sri-lanka/2024/05/10/can-tamils-and-muslims-become-president

எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!

3 days ago

எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!
எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!

 — கருணாகரன் —

வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ  எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! 

இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக்  கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். கூடவே தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) கொண்டிருப்பதுமாகும். சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. 

இதனால் எப்போதும் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வுடன் – பதற்றத்துடன் எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனை அதற்குள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும். இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கும் என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகுவது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக அணிதிரள்வது,  மக்களைத் திரட்டுவது, மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கும்.

சிங்களத் தரப்பு தமிழர்கள் மீதும் தமிழர்கள் சிங்களவர் மீதும் கொண்டுள்ள சந்தேகமும் எதிர்ப்புணர்வும் (பகையுணர்வும்) இவ்வாறானதே. இப்படித்தான் முஸ்லிம்கள் மீது தமிழர்களும் சிங்களவர்களும் சிங்களவர், தமிழர் மீது முஸ்லிம்களும் சந்தேகம் கொள்வதும் எதிர்ப்புணர்வுடன் நோக்குவது என இந்த வியாதி தொடர்கிறது. அரசு இதில்  முழுமூச்சாக இயங்குகிறது. போட்டியாக  ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு இனவாதத்தை எல்லோரும் வளர்க்கின்றனர்.  இதுவே லாபகரமான அரசியலாக்கப்பட்டுள்ளது. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வரலாற்றுப் பழியாகவே உள்ளது. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகள் உருவாகியிருக்கும். 

இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்கிறார்கள்? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இப்படிச் சில அடிப்படையான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். 

இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு இன்னும் இலங்கைத்தீவில் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்களும் நோக்குகின்றனர். ஊடகங்களும் வெளியுலகமும் பார்க்கின்ற பார்வை உண்டு. இதற்குக் காரணம், அவை வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. 

இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு நீண்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் பிற அமைப்புகளும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு நாற்றுப்போலவே அமைதிக்கான தரப்புகள் முளைத்தெழ வேண்டும். 

ஏற்கனவே இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை மக்களே தோற்கடித்து விட்டனர். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். நாடும் பொருளாதார ரீதியாகவும் ஜனநாயகம், அமைதி, சுபீட்சம் போன்றவற்றாலும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. 

ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக மொத்தத்தில் மக்களும் தமது தலைவர்களைப்போல இனவாதத்தில் சிக்கியுள்ளனர். தலைவர்களுக்கேற்ற மக்கள். அல்லது மக்களுக்கேற்ற தலைவர்கள். 

“இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்”  என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. 

“நாங்கள் சமாதானத்துக்காக எத்தனை படிகள் கீழே இறங்கினாலும் அரசாங்கம் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிறதே. அது மேலும் மேலும் சமாதானத்துக்கு எதிராக அல்லவா செயற்படுகிறது? சிங்களப் புத்திஜீவிகள் கூட இதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றார்களே!” என்று பதிலளித்தோம். 

“உலகம் அப்படித்தான் உள்ளது. அதிகாரத் தரப்புகளின் குணவியல்பே அப்படியானதுதான். ஆனால் அரசுக்கு எல்லா மக்களையும் காக்க வேண்டிய பொறுப்புண்டு. அந்த அடிப்படையில் செயற்பட வேண்டிய கடப்பாடுண்டு. அதையே சர்வதேச  நியமங்கள் வலியுறுத்துகின்றன. அதற்கமைய சமாதானத்துக்கான வற்புறுத்தலைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அனைத்து அரசியற் தரப்புகளுக்கும் உண்டு. அப்படிச் செய்தால் நிச்சயமாகச் சமாதானத்தை எட்ட முடியும்? அதைச் செய்தே ஆக வேண்டும். நீங்கள் சொல்கிற மாதிரி நம்பிக்கையீனமாக  யோசித்தால் உலகம் முழுவதும் இரத்தக்களரியாகத்தானிருக்கும். யதார்த்த உலகம் அப்படி இல்லையே!” என்றார் அவர். 

இதற்கு என்ன பதிலைச் சொல்வது?  

தலையைக் கவிழ்ந்து கொண்டு அமைதியாக இருந்தோம். 

இந்தப் பின்னணியில்தான் சமகால – எதிர்கால அரசியலை நாம் பேசவும் பார்க்கவும் வேண்டியுள்ளது. நம்முன்னே உள்ள யதார்த்தத்தையும் நடைமுறைச் சாத்தியத்தையும் பற்றி நம்முடைய அரசியற் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் மக்களும் சிந்திப்பதேயில்லை. உலகத்தின் மொழியையும் வரலாற்றின் குரலையும் பொருட்படுத்துவதில்லை. 

பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் நம்முடைய மனது எதிர்ப்பில், பகைமையில்தான்  திளைக்கிறது. அது ஒரு போதையாகி விட்டது. எதிர்த்தரப்பை அப்படி நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும், யப்பானும் அமெரிக்காவும் எனப் பல பகையைக் கடந்த உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை. 

இனமுரணை மேலும் மேலும் வளர்த்தால் தீர்வை எட்டவே முடியாது. இனப் பிளவு கூடக் கூட நாடு பலவீனப்படும். இதனால் நாடு அந்நியச் சக்திகளிடம்தான் பறிபோகும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நமக்குள்ளே உடன்பாடு காணவும் அதிகாரங்களைப் பகிரவும் தயாரில்லை என்றால், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பிற சக்திகள் நம்முடைய நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். இலங்கை இந்திய உடன்படிக்கை எதற்காக வந்தது? இனப்பிரச்சினையின் விளைவாகத்தானே. ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாறாக திருகோணமலை எண்ணெய்க்குதங்களை நீண்டகால அடிப்படையில் இந்தியா எடுத்துக் கொண்டது. இப்படித்தான் ஒவ்வொரு நாடும் இலங்கையைக் கூறு போட்டு எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான விலையை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என எல்லோரும் இணைந்தே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஏதாவது  வேறுபட்ட நிலையிலா செலுத்திக் கொண்டிருக்கிறோம்? அல்லது இந்த விலை கொடுப்பில் யாருக்காவது விலக்கிருக்கிறதா?

சிவனின் முதுகில் விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டதைப்போல, இலங்கைத்தீவுக்கு வருகின்ற நெருக்கடிகளும் அழுத்தங்களும் அனைவருடைய தலைகளிலும்தான் சுமையாக ஏறுகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் ஆளாளுக்கு பகைமையை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம். இது அந்நியருக்குச் சேவகம் செய்வதாகும். காலனிய ஆட்சிக்கால அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விட்டதாக நாம் கருதலாம். அது முடியவில்லை. நம்முடைய அறிவீனத்தின் விளைவாக இப்போதும் நாம் அடிமையாகவே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நம்முடைய உழைப்புச் சுரண்டப்படுவது வேறு. நம்முடைய தாய் மண்ணிலேயே பிறரால் சுரண்டப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வேறு. இது மிகக் கொடுமையானது. இதற்குக் காரணமாக நாமே இருப்பது இன்னும் கொடுமையானது. 

இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. தம்முடைய சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்துக் கொண்டு, அந்திய சக்திகளுக்குத் தொண்டு செய்கிறது அரசு. அரசு மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து இனக் கட்சிகளும்தான். இதில் தமிழ், சிங்களச் சமூகத்தினருக்கே கூடுதல் பொறுப்புண்டு. இருதரப்புக்கும் இடையிலான இனமுரண்களே பாதிப்பின்  பெருவிளைவுகளாகும். பின்னர், முஸ்லிம்களிடமும் இந்த வியாதி  தொற்றிக் கொண்டது. 

இனவாதத்தையும் அதனால் உண்டாகும் இனமுரணையும் பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளிற் சிலவும் கூடத் தமது தேவைக்கேற்ப ஊக்குவிக்கின்றன. வளர்க்கின்றன. அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை இனவாதத்திற்கு எதிராக – அமைதித் தீர்வுக்காகச் சில நாடுகள் உண்மையிலேயே  முயற்சிக்கின்றன. நம்மவர்கள் அதிகம் நம்புவதும் தொடர்பில் இருப்பதும் தீர்வுக்கு எதிரான தரப்புகளுடனேயே.

இப்படி ஒரு சிக்கலான நிலைக்குள்ளேதான் இலங்கையின் இனப்பிரச்சினையும் இனங்களின் நிலையும் உள்ளது. 

இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். 

“இது சாத்தியமா?” என்று சிலர் கேட்கலாம். “அப்படிச் சிந்தித்த இடதுசாரிகளே இனவாதிகளாக மாறிய பிறகு, அதுவும் சிங்கள மேலாதிக்கத்தோடு அவர்கள் இணைந்த பிறகு எப்படி, எதில் நம்பிக்கை வைத்து நம்மால் செயற்பட முடியும்? மேலும் சமாதானத்துக்கான முயற்சியும் விட்டுக் கொடுப்பும் அதிகாரமற்ற சிறுபான்மைத் தரப்பிலிருந்து ஒரு எல்லைக்கு மேல் செய்யப்படுமாக இருந்தால், அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்டு, அரசு மேலாதிக்கம் செய்து விடும். இப்பொழுது அது தமிழர்களின் நிலப்பகுதியை – பிரதேசங்களை – சிங்கள மயமாக்கி வருகிறது. ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. படையை ஆதிக்க முனையாக தமிழரின் நிலத்திலேயே நிறுத்தியுள்ளதே!  இந்த நிலையில் எப்படிச் சமாதானத்தை முன்னெடுப்பது?” என்று  பல கேள்விகளை அடுக்கலாம். 

இனவாத அரசு, ஒடுக்குமுறை இயந்திரம் வேறு எப்படி இருக்கும்? வேறு எப்படி இயங்கும்? முதலாளிகள் தங்களுடைய லாபங்களை எல்லாம் தொழிலாளிகளுக்காக விட்டுக் கொடுத்து விடுவார்களா? வேண்டுமானால் சில சலுகைகளைச் செய்து கொள்வார்கள். அதற்குமேல் எதுவுமே இல்லை. இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். இதுதான் உலக மொழி. அகிம்சையின் வழி. 

இந்த வார்த்தைகளைப் படித்துப் பலரும் சிரிக்கக் கூடும். சிலர் பரிகசிக்கலாம். அல்லது இதொரு மோசமான கற்பனை என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால், இறுதியிலும் இறுதியாக இந்த இடத்துக்கே வந்து சேர வேண்டும். ஏனென்றால், இலங்கைத்தீவில் பிரிவினையை எந்தச் சக்தியும் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, ஆதரிக்கப்போவதுமில்லை. அந்தச் சூழலே மாறி விட்டது. இப்போது உலகம் விரும்புவதும் வலியுறுத்துவதும் அமைதியையும் சமாதானத்தையுமே. அதற்காகவே அமெரிக்கா தொடக்கம் நோர்வே, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா தொடக்கம் அனைத்து நாடுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு (போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட) உதவுகின்றன. சமாதானத்துக்காகவும் பகை மறப்புக்காகவும் பல செயலணிகளை உருவாக்குவதற்கு நிதிப்பங்களிப்பையும் அறிவுசார் செயலாக்கப்பகிர்வையும் செய்கின்றன.  

ஒரு காலம் போருக்கு உதவியவை இதில் உள்ள சில நாடுகள். இப்பொழுது சமாதானத்துக்குப் பங்களிக்கின்றன. இதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. 

ஏற்றுக் கொள்ள மறுத்தால், இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று அவர்கள் சொல்ல வேண்டும்.
 

 

https://arangamnews.com/?p=10728

மானிட சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்ற மைக்றோபிளாஸ்ரிக் : கட்டுப்பாடு நடப்புத் தேவையாகும்

5 days 17 hours ago
08 MAY, 2024 | 11:27 AM
image

மானிடனின் புலமைசார் அபிவிருத்தியின்  பெறுபேறாக விஞ்ஞானரீதியான தொழில்நுட்ப முடிவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அபிவிருத்தியென இனங்காணப்படுகின்ற மாற்றத்திற்கு ஒட்டுமொத்த மானிட சமூகமும்  நிகழ்காலத்தில் இந்த மாற்றத்தின் சாதகமான மற்றும் பாதகமான பெறுபேறுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதோடு பாதகமான தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக துரிதமானதும் பயனுறுதிமிக்கதுமான தீர்வுகளைக் காண்பது உலகளாவிய சவாலாக மாறியுள்ளமையையும் இனங்காண முடியும்.

தொழில்நுட்பத்தின் பலம் காரணமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் போட்டித்தன்மையும் சிக்கலும் நிறைந்த சமூகத்தில் மனிதன் மிகவும் நெகிழ்ச்சியானதும்  வசதியானதுமான நுகர்வுப் பாங்குகளுடன் மாறிவருகிறான்.  மேற்சொன்ன நுகர்வுப் பாங்குகள் மற்றும்  வாழ்க்கை நடத்தைநெறிகள் மீது மாத்திரமன்றி  தனது மானிட வாழ்க்கை வழியுரிமை மீதும் ஏற்படுத்தியுள்ள  தாக்கம் மிகவும் தீர்மானகரமானதும் சவால்நிறைந்ததாகவும் அமைகின்றது.  

இந்த நுகர்வுப் பாங்கின் பக்கவிளைவாகவே மைக்றோபிளாஸ்ரிக் பிரதான மாசுபாட்டுக்காரணியாக சுற்றாடலில் சேர்கின்றது எனக்கூறுவதும்  பெரும்பாலும் பொருத்தமானதாகும். 

ஏனெனில் பிளாஸ்ரிக் உற்பத்திகளில் நிலவுகின்ற எடைகுறைந்ததன்மை மற்றும் வசதியாக அங்குமிங்கும் கொண்டுசெல்ல இயலுகின்றமை, விலை குறைவானதாக உள்ளமை, பல்வேறு நிறங்களையும் கவர்ச்சிகரமான தன்மையையும் கொண்டுள்ளமை, நீண்டகாலமாக நிலைத்திருத்தல் மற்றும் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதிலான வசதி ஆகிய பலவிதமான பண்புகள் காரணமாக மக்கட் சமூகத்தில் பிரபல்யமான நுகர்வுப் பண்டமாக பிளாஸ்ரிக்  மாறியுள்ளது. 

இவ்விதமாக பாவிக்கின்ற பிளாஸ்ரிக் உற்பத்திகள் பாவனையின்பின்னர் முறைசாராதவகையில் கழிவுப்பொருட்களாக கையுதிர்க்கப்படுவதும் அத்துடன் பிளாஸ்ரிக்கின் உள்ளடக்கம் காரணமாக பாவனையின்போதே உடலில் சேர்வதாலும் அதன் பெறுபேறாக மானிட சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் நீண்டகால மற்றும் குறுங்காலரீதியான பாதகமான தாக்கங்கள் தோன்றியுள்ளன.

குறிப்பாக நவீனகாலத்தில் ஒருசில உற்பத்திகளின்போதும்  மைக்றோபிளாஸ்ரிக் மூலப்பொருளாக பாவிக்கப்பட்டு வருவதோடு  அது தொடர்பில் கட்டாயமாக கவனம் செலுத்தப்படவேண்டும்.    ஏனெனில் இதனூடாக மானிட சுகாதாரமும் சுற்றாடலும் அச்சுறுத்தலுக்கு இலக்காவதால்   நிலைபெறுதகு எதிர்காலத்திற்கு அது பாரிய சவாலாக அமைந்துள்ளமையாகும்.

image_01__1_.jpg

மைக்றோபிளாஸ்ரிக்கை இனங்காண்போம்.  

பருமனில் 5 மில்லிமீற்றரைவிடக் குறைவானதும்   பல்லுருத்தோற்றம் கொண்டதுமான பிளாஸ்ரிக் பாகங்கள் மைக்றோபிளாஸ்ரிக்காக இனங்காணப்பட முடியும்.  அவை உக்கிப்போகின்ற  துரிதநிலை  குறைந்த மட்டத்தில் நிலவுவதால் மானிட உடலுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி சுற்றாடலில் பாரியஅளவில் எஞ்சிநிற்கின்றது. மைக்றோபிளாஸ்ரிக் அவற்றின் தோற்றுவாய் மற்றும் துணிக்கைகளின் அளவுக்கிணங்க  முதனிலை மற்றும் இரண்டாம்நிலை என வகைப்படுத்தப்பட முடியும்.   சலவைக் காரணிகள் மற்றும் அழகுசாதன தயாரிப்புகள் போன்ற பாவனையாளர் பாதுகாப்பு உற்பத்திகள் அல்லது கைத்தொழில் உற்பத்திகளாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் பாகங்கள் முதனிலை மைக்றோபிளாஸ்ரிக் என அழைக்கப்படுவதோடு மைக்றோ முத்துக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  அத்துடன் சுற்றாடலுக்கு திறந்தநிலைக்கு ஆளாகிய பின்னர் அழிவடைகின்ற பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்களும் நாரிழைகள் அல்லது பிளாஸ்ரிக் பண்டங்கள் போன்ற பிளாஸ்ரிக் அடங்கிய தயாரிப்புகள் இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் ஆகும். 

குறைந்த அல்லது கூடிய அடர்த்திகொண்ட பொலிஎத்திலீன் (PE), பொலிப்றொபிலீன் (PP), பொலியஸ்டரீன் (PS), பொலிப்றொபிலீன் டிறெப்தலேற் (PET), பொலிவயினயில் குளோறைட்  (PVC)  மற்றும் பொலிவயினயில் அல்கஹோல்  ஆகிய பல்லுருத்தோற்றங்களை உள்ளடக்கிய மைக்றோபிளாஸ்ரிக், துண்டுகள், படலங்கள், நார், நுரைகள், முத்துக்கள், கோளங்கள் / கட்டிகளாகவும் நிலவுகின்றன. 

image_03__2_.jpg

மைக்றோபிளாஸ்ரிக்கின் நவீன சவால்  

மைக்றோபிளாஸ்ரிக்  எந்தளவில் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் அது எதிர்காலத்தில் பிரமாண்டமான   சுற்றாடல்  பேரழிவினை உருவாக்க  காரணமாக அமையுமென்பதும் பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சிகள் மூலமாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  குறிப்பாக பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கள் காரணமாக கடல்சார் சூழற்றொகுதி  மாசுபாட்டுக்கு இலக்காவது  நிகழ்காலத்தில் மிகவும் பாரதூரமான சுற்றாடல் சிக்கலாக மாறியுள்ளது. புவிமேற்பரப்பின் ஒட்டுமொத்த ஒட்சிசன் தேவையின் 80%  கடல்சார் சூழல் மூலமாகவே  நிவர்த்திசெய்யப்பட்டு வருவதோடு  அது உயிருள்ள , உயிரற்ற விலங்கினத்தின் வழியுரிமைமீது பிரமாண்டமான அச்சுறுத்தலை விடுக்கின்றது.  

இன்றளவில் பல்வேறு ஆய்வுகள் மூலமாக  வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி  பிளாஸ்ரிக் உக்கிப்போக சராசரியாக ஏறக்குறைய  500 - 1,000 ஆண்டுகள் கழிகின்றதென்பதும் அவை முழுமையாக உக்கிப்போகாமல் மைக்றோபிளாஸ்ரிக்காக  மாறுகின்றதென்பதுமாகும்.  அதற்கிணங்க இன்றளவில் வளிமண்டலத்தில் ஏறக்குறைய 50 - 75 ரில்லியன் தொன் பிளாஸ்ரிக் துணிக்கைகளும் மைக்றோபிளாஸ்ரிக்குகளும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த ஆராய்ச்சிகள் மூலமாக 2025 அளவில் அது  250 மில்லியன் தொன்களை விஞ்சக்கூடுமெனவும் அத்துடன் 2050 ஆம் ஆண்டளவில் கடலில் வசிக்கின்ற மீன்களின் நிறையைவிட பிளாஸ்ரிக்கின் அளவு அதிகரித்துவிடுமெனவும்  மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த பத்து வருடங்களுக்குள் கடந்த நூற்றாண்டினைவிட பிளாஸ்ரிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதன் மூலமாக பிளாஸ்ரிக் நுகர்வு உயர்வடைந்துள்ளமையும்,  மறுபுறத்தில் 8 - 10 மில்லியன் மெட்றிக் தொன் வரையான அளவு இவ்விதமாக பாவனைக்குப் பின்னர் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் வெளிப்படுகின்றது.

image_02.jpg  

மைக்றோபிளாஸ்ரிக் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகும்

அன்றாட வாழ்க்கையில்  பல்வேறு பாவனைகள் ஊடாக  நேரடியாகவோ மறைமுகமாகவோ மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகள் உடலில் சேர்ந்து அபாயநேர்வு நிலைமைக்கு  மாற்றுகின்றது   வாய் மூலமாக, சுவாசம் மூலமாக மற்றும் சருமத்தின் ஊடாக இவ்விதமாக  மைக்றோபிளாஸ்ரிக் உடலில் கலப்பதால் சமிபாட்டுத்தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி, அகச்சுரப்பித்  தொகுதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நீண்டகால மற்றும் குறுங்கால நோய் நிலைமைகள் உருவாகும்.

இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் பிளாஸ்ரிக் துணிக்கைக சுவாசம் வழியாக அவை உடலில் சேர்வதை தடுக்கமுடியாதுள்ளது.  அதனூடாக சுவாசக்கோளாறுகள், இதயநாளங்கள் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள், நுரையீரல்சார்ந்த தொற்றுகள் காரணமான இருமல், தும்மல்,  குருதியில் ஒட்சிசன் செறிவு மாற்றமடைவதால் சுவாசிப்பதிலான சிரமங்கள்,  களைப்பு, தலைச்சுற்று போன்ற குறுங்கால நோய் நிலைமைகளும் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

image_05.webp

சூழற்றொகுதி தரங்குன்றுதல் 

பறவைகள், மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள்  மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகளை உணவாக உட்கொள்வதால் உணவுப் பாதையில் காயங்கள் ஏற்படுதல், உணவுப் பாதைக்குள் சிக்குதல் போன்ற உள்ளக மற்றும் வெளிப்புற அபாயநேர்வுமிக்க நிலைமைகள் ஏற்படுகின்றன. 

மைக்றோபிளாஸ்ரிக் கட்டுப்பாட்டுக்கான உலகளாவிய அணுகுமுறைகள் 

உலகளாவிய நெருக்கடியொன்றாக மாறியுள்ள  பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம் மற்றும்  பாவனையை கட்டுப்படுத்துவதற்காகவும்  மட்டுப்படுத்துவதற்காகவும் மறுபுறத்தில் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதன் மூலமாக பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப்பொருள் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும் அரச மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் / வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளின் உற்பத்திப் பொருளாதார செயற்பாங்கில் மேற்சொன்ன தாக்கம் உயர்மட்டத்தில் நிலவுகையில் இந்நாடுகளால் பல்வேறு கட்டுப்பாடுசார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 

image_04__1_.webp

சவால்களை எதிர்கொள்ளல் : இலங்கை நடைமுறைகள்

பொலித்தீன்  மற்றும் தனிப்பாவனை பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு   எதிர்காலத்திலும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. 

அதன்கீழ் பொலித்தீன் உணவுப் பொதியிடல்பொருள் (லன்ச் ஷீட்)  உற்பத்தி, பாவனை மற்றும் வர்த்தகம். அதிக பருமன்கொண்ட பொலிஎத்திலின்  (HDPE),ஷொபிங் பேக், குரொசரி பேக், பிளாஸ்ரிக் பொருட்கள்  மற்றும் எச்சங்களை திறந்தவெளியில் தகனம்செய்தலும் விரிவடைந்த  பொலியஸ்டரின் உணவுப் பெட்டிகள் உற்பத்தி, வர்த்தகம், பாவனையைத் தடைசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும்  PET, PVC தேறிய பரிமாணம் 20 மில்லிமீற்றர் / தேறிய நிறை 20 கிறாமிற்கு இணையான அல்லது அதற்குக் குறைவான செஷே பக்கெற்றுகள்  ( உணவு மற்றும் ஔடத பொதியிடலுக்காக பாவித்தல் தவிர்ந்த) காற்று நிரப்பக்கூடிய விளையாட்டுச் சாமான்கள் (பலூன், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய / நீச்சல் தடாகங்களில் பாவிக்கின்ற விளையாட்டுச் சாமான்களும் நீர் விளையாட்டுச் சாதனங்கள் தவிர்ந்த) அத்துடன்  பிளாஸ்ரிக் காம்புகள்  (STEM) கொண்ட கொட்டன் பட்ஸ் ( COTTON BUDS) ( மருத்துவ/ கிளினிக்சார்ந்த சிகிச்சைகளுக்காக பாவிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கொட்டன் பட்ஸ் தவிர்ந்த) மற்றும்  தனிப்பாவனை பானக் குழாய்கள் மற்றும் கலத்தல் சாதனங்கள்  / விமானப் பயணங்கள் தவிர்ந்ததாக பாவிக்கப்படுகின்ற உணவுப்பொதியிடல் பீங்கான், கோப்பைகள்,  கரண்டிகள், முள்ளுக் கரண்டிகள் மற்றும் கத்திகள் / மலர் மாலைகள்/ இடியப்பத் தட்டுகள் பாவிக்கப்படுவது  தடைசெய்யவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

அதன்படி,  மைக்றோபிளாஸ்ரிக்  சம்பந்தமாகவும் அதன் அபாயநேர்வு நிலைமையை இனங்கண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு நாடு என்றவகையில் நிறுவனமென்றவகையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட மற்றும்  கட்டுப்பாட்டு  முறையியல்கள் போன்றே  பல்வேறு ஊடகப் பாவனைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, தொடர்பாடல் முறையியல்களும் மக்கள் மனங்களை விழித்தெழச் செய்வித்து நிலைபெறுதகு வாழ்க்கைப்பாங்கு மற்றும் நிலைபெறுதகு எதிர்காலத்திற்காக வழிகாட்டுகின்ற பயனுறுதிமிக்க அரும்பணியாகுமென எடுத்துக்காட்ட இயலும். 

 

Logo.png 

ENV_-_Logo.jpg

 

 

சுஜீவா பெரேரா

சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர்

சுற்றாடல் மேம்பாட்டுக் கூறு

மத்திய சுற்றாடல் அதிகாரசபை

https://www.virakesari.lk/article/182914

உக்ரைன் புலனாய்வு தலைவர் கூறிய கள இரகசியம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்.

6 days 10 hours ago

 

உக்ரென் ரசியாவிடம் பெரியதொரு தோல்வியை சந்தித்திருக்கிறது போல.

12 நாடுகளின் கவச வாகனங்கள் ராங்கிகள் என பல வகையான கனரக ஆயுங்களை அள்ளிக் கொண்டு போய் மாஸ்கோவில் மே தின ஊர்வலத்தில் ரசிய மக்களுக்கு காட்டியுள்ளார்கள்.
 

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 21

6 days 14 hours ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 21
 
 
 
சிங்கள அறிஞர் முதலியார் குணவர்தன, ஆனந்தா பாடசாலையில், 28.09.1918 , சிங்களத்தின் இலக்கணம் திராவிடம் என்கிறார் [Sinhala scholar Mudliyar Gunawardena at a lecture delivered at Ananda College on 28.09.1918 had stated "....the science of exmination of the structure of a sentence is called its grammar. The grammar of the Sinhala language is Dravidian...] பேராசிரியர் J. B. திஸ்ஸநாயக்க, தனது "சிங்களத்தை புரிந்து கொள்ளுதல் " என்ற புத்தகத்தில், பக்கம் 118 இல், தெற்காசியாவின் மொழிகளில், சிங்களம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அதற்க்கு காரணம் அது இந்தோ ஆரியன் மற்றும் தமிழுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு என்கிறார் ["Prof. J. B. Dissanayake in his book "Understanding the Sinhalese" at page 118 states "....Sinhala occupies a unique position among the languages of South Asia because of its close affinity, with two of the major linguistic families of the Indian sub continent Indo-Aryan and Dravidian..."].
 
இதில் இருந்த நாம் இலகுவாக ஊகிக்கலாம், சிங்கள எழுத்து கட்டாயம் ஆரிய மொழியும், திராவிட மொழியும் தெரிந்த ஒருவரோ அல்லது பலராலோ தான் உண்டாக்கப் பட்டு இருக்கும் என்பது. மேலும் அரபு நாட்டில் இருந்து இலங்கைக்கு ஏழாம் நூற்றாண்டில் குடியேறியவர்களின் சந்ததி, இன்று முஸ்லீம் என்றும் சோனகர் என்றும் அழைக்கப் படுபவர்கள், எல்லோரும் வீட்டில் தமிழ் பேசுபவர்களாகவே மாறினார்கள். காரணம் தமிழ் தான் அங்கு பாவனையில் இருந்துள்ளது. சிங்களம் அங்கு பாவனையில் இருந்து இருந்தால், கட்டாயம் சிங்களமே பேசி இருப்பார்கள் ?.
 
மற்றும் விஜயபாகுவின் அரச கட்டளைகள் (A.D. 1056-1111) சிங்களத்திலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத் தக்கது [Arab settlers came to Ceylon about 7th century A.D. Their descendants are now called Muslims and Moors. They learned Tamil because that would have been the language in use. Also Royal edicts of Vijayabahu (A.D. 1056-1111) were in Sinhala and Tamil]. இது விஜயபாகுவின் ஆட்சியில் பெரும் தொகையான குடிமக்களாக தமிழர்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.
 
தீபவம்சம், மகாவம்சம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், மகாவம்சம் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தமிழருக்கு எதிரான போக்கை கையாளுவதைக் காணலாம். உதாரணமாக, கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை ஆட்சி செய்த சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்களையும் தீபவம்சம் ராஜகுமாரர்கள் [princes] என கூறும் அதே வேளையில், அதற்குப் பிறகு எழுதப்பட்ட மகாவம்சம், அவர்கள் இருவரையும் குதிரை வியாபாரியின் மகன்மார்கள் [sons of a horse trader] என்றும், வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறது. இது, வரலாற்றில் எந்த பெரிய வேறுபாடு ? உங்களுக்கு தலை சுத்துகிறதா?
 
ஆனால் தீபவம்சம் அவர்கள் சோழநாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ வந்தவர்கள் என்று கூறவே இல்லை. அதே போல எல்லாளனை தமிழ் இளவரசன் என்றோ அல்லது சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றோ தீபவம்சம் கூறாத வேளையில், தீபவம்சத்தை 150 / 200 ஆண்டுகளின் பின் விரிவாக்கிய மகாவம்சம் முரண்பாடான கருத்தை அங்கு பதிவிடுகிறது. தீபவம்சம் தமிழர் விரோத வெறுப்பைக் பொதுவாக எங்கும் கக்கவில்லை. ஆனால் அது புத்த மாதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது.
 
அபய [Abhaya] அல்லது துட்டகைமுனுவின் தந்தையின் பெயர் காக்கவன்ன [Kakkavanna]. அதே போல வன்னியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் பெயர் பண்டாரவன்னியன், அவனை காட்டிக்கொடுத்தவனின் பெயர் காக்கவன்னியன். பெயர் காக்கவன்ன குரல் ஒலியில் காக்கவன்னியனுடன் ஒன்றாகிறது [phonetically similar]. அது மட்டும் அல்ல, தீபவம்சம் காக்கவன்னவுக்கும், மூத்தசிவ அல்லது தேவநம்பிய தீசனுக்கும் இடையில் என்ன உறவு என்று கூறவும் இல்லை.
 
மகாவம்சத்தில், சிங்கத்துடன் வங்க நாட்டு இளவரசி புணர்ந்து இரு மனித பிள்ளைகளை பெற்றார் என்றும், அந்த சகோதரங்கள் தங்களுக்குள் திருமணம் செய்து விஜயன் பிறந்தான் என்றும் கூறுகிறது. உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
 
உதாரணமாக, சிங்கம் 36 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Lions have 36 chromosomes and humans have 46 chromosomes.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 38, 36 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும் , மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு பத்து ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது.
 
அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!
 
கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சாகசப் பெண்ணை [adventurous woman] சிங்கம் உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 22 தொடரும்
317612026_10222106571996087_2430202466594402582_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kgyay2AhfeoQ7kNvgHBdSpm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCtan1gwaGD5aF8y_lbAoF7jxkq-JJHUaCtVNN5dO95Og&oe=66403FBE 317505800_10222106572516100_4591536405103709323_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oX75iOdH0usQ7kNvgHbduZU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCZ7zW0cxdwzL_uA9YDX9gfiAlpd_A7a5KvgA0TWhM1AA&oe=6640316A
 
317604425_10222106572316095_5737174575133805072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0_PIjwE7P0YQ7kNvgErcbjj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAH1OTOYMSwHy6Kitb5jW1p4Lu4Zyo6bqxH1Ei4ayp17Q&oe=66402C6E 317609124_10222106571756081_6033022436565376234_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Eg8CrMiwzMkQ7kNvgHZj4G4&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBSsQMxuakMcm1w4VE8CyEs-57xrBWVXotGnchSQj7PKg&oe=66405B4F
 
 

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

6 days 21 hours ago

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள்  தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. 

தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன்.  எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். 

இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன். 

தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன்

1 week 2 days ago

தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன்

438174770_1168423184148437_8556757522994

கடந்த  மாதம் 30ஆம்  திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை  நிறுத்துவது என்று மேற்படி  சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

அது ஒரு முக்கியமான சிவில் சமூகச் சந்திப்பு. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நிகழ்ந்த அச்சந்திப்பில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த 32 சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அமைப்புகளைச் சாராத செயற்பாட்டாளர்களுமாக மொத்தம் 46 பேர் பங்கு பற்றினார்கள்.

மதத் தலைவர்கள், கருத்துருவாக்கிகள், ஏற்கனவே பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்திய “மக்கள் மனு” என்ற சிவில் அமைப்பு, வெளிநாட்டுத் தூதரகங்களோடான சந்திப்புகளில் தொடர்ச்சியாக தமிழ் நோக்கு நிலையை வெளிப்படுத்தும் “தமிழ் சிவில் சமூக அமையம்”  உள்ளிட்ட பலமான சிவில் அமைப்புகள். வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கான அமைப்பு, அரசியல் கைதிகளுக்கான அமைப்பாகிய “குரலற்றவர்களின் குரல்” அமைப்பு, வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்புகள், மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்காகப் போராடும் அமைப்பு,தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக இயங்கும் செயற்பாட்டு அமைப்புக்கள்… முதலாக பல்வேறு வகைப்பட்ட அமைப்புக்கள் அச்சந்திப்பில் பங்குபற்றின.

மிகக்குறிப்பாக “பொங்கு தமிழ்” எழுச்சியின் முக்கியஸ்தர்கள், ”எழுக தமிழ்” எழுச்சிக்குப் பின்னால் இருந்து உழைத்தவர்கள், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” அமைப்பின் இணைத் தலைவர்கள் என்று, தமிழ்ப் பரப்பில் நிகழ்ந்த மூன்று எழுச்சிகளின் பின்னால் நின்று உழைத்த பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தார்கள் என்பது ஒரு சிறப்பம்சம். இம்மூன்று மக்கள் எழுச்சி அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஒரு சந்திப்பில் ஒன்றுகூடியமை என்பது கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட  கூட்டு அறிக்கை வருமாறு….

“தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

1.-தமிழ் மக்கள்  ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2-ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.-அதற்கு அமைய ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4-அதற்காக சிவில் சமூகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளும்  இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.-தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்காலக்          கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது..”

இவ்வாறு சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் தங்களுக்கு இடையே ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தபின்,அடுத்த கட்டமாக அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பொது கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் பொருட்டு கட்சிகளோடு உரையாடுவதற்கு என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது.

IMG-20240504-WA0025-1024x768.jpg

பொதுக் கட்டமைப்பானது சிவில் சமூகங்களையும் அரசியல் கட்சிகளையும் கொண்டதாக அமையும். பொதுக் கட்டமைப்பு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு தேவையான குழுக்களை உருவாக்கும். ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு உபகுழு,தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான உபகுழு, நிதி விவகாரங்களை கையாள்வதற்கான உபகுழு, பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளாத ஏனைய தரப்புக்குளோடு உரையாடுவதற்கும் தென்னிலங்கையில் உள்ள கட்சிகளோடு உரையாடுவதற்கும் ஓர் உபகுழு.. என்று வெவ்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்படும். அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக கட்டமைப்பு ரீதியாக சிந்திக்கப்படுகின்றது என்று பொருள்.

தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப் பொது நிலைபாடு எனப்படுவது பிரயோக நிலையில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியம் என்பது இங்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் என்பதைக் கடந்து கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் இணைந்த ஒரு கட்டமைப்பாகச் சிந்திக்கப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்த எல்லா எழுச்சிகளும் சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்புக் கூடாகவே சிந்திக்கப்பட்டது. எழுத தமிழாகட்டும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பெரெழுச்சியாகட்டும் ஏனைய எந்த ஒரு பெரிய மக்கள் எழுச்சியாக இருந்தாலும், அங்கே தனியாகக் கட்சிகள் அதனை முன்னெடுக்கவில்லை. தனிய சிவில் சமூகங்களும் அதனை முன்னெடுக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் வெற்றி பெற்ற எல்லாப் பேரெழுச்சிகளும் சிவில் சமூகங்களும் அரசியல் சமூகமும் இணைந்து பெற்ற வெற்றிகள்தான்.

அப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளுக்குள் ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதம், பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 13 அம்ச ஆவணம், தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கூட்டுக் கடிதம்..உள்ளிட்ட பெரும்பாலான முயற்சிகள் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து முன்னெடுத்தவைதான். இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால், கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த போதுதான் வெற்றிகள் கிடைத்தன. அந்த அடிப்படையில்தான் இப்பொழுதும் அவ்வாறான ஒரு வெற்றியை நோக்கி சிந்திக்கப்படுகின்றது.

இந்தக் கட்டமைப்பு வெற்றிபெறுமாக இருந்தால் இது ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு கட்டமைப்பு என்பதைக் கடந்து தமிழ்ப்பொது விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு பொருத்தமான அரசியல் தளமாக மாற்றப்பட வேண்டும் என்ற விருப்பமும் மேற்படி கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. அதன்படி எதிர்காலத்தில் தமிழ் அரசியலை தீர்மானிப்பதற்கு தேவையான ஒரு பலமான மக்கள் அமைப்புக்குரிய பொருத்தமான கட்டமைப்பாக அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பேரவை தோன்றியது. தமிழ் மரபுரிமைப் பேரவை தோன்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சி இயக்கம் தோன்றியது. ஆனால் இவை எவையுமே அவற்றின் அடுத்தடுத்த கட்டக் கூர்ப்புக்குப் போகவில்லை. இவை எவையுமே தேர்தல்மைய அரசியலைக் கடந்த ஒரு வெகுசன அரசியலை முன்னெடுக்கும் பொருத்தமான ஏற்பாடுகளாகக் கூர்ப்படையவில்லை. இந்த மூன்று கட்டமைப்புகளின் எழுச்சியில் இருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் அல்லது போதாமைகளில் இருந்தும் கற்றுக்கொண்டு ஒரு புதிய பொருத்தமான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதல் அடிவைப்பாக மேற்படி கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பை எடுத்துக் கொள்ளலாமா?

IMG-20240430-WA0011-1024x768.jpg

கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சி அரசியல் எனப்படுவது வளர்ச்சியாக இல்லை. தேய்மானமாகத்தான் இருக்கின்றது. பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறு கூட்டுகள் உருவாகி வருகின்றன.கூட்டுக்கள் உடைந்துடைந்து உருவாகும் தனிக் கட்சிகளும் கூட பின்நாளில் தங்களுக்குள் உடைகின்றன. அதாவது கடந்த 15 ஆண்டு கால கட்சி அரசியல் எனப்படுவது, தேயும் அல்லது சிதறும் ஒரு போக்காகத்தான் காணப்படுகின்றது. வளரும் ஒரு போக்காக அல்லது திரளும் ஒரு போக்காக இல்லை. மக்கள் இயக்கங்களும் தோன்றி மறைகின்றன. தொடர்ச்சியாக அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் போகவில்லை.

எனவே இந்தப் பாரதூரமான வெற்றிடத்தின் பின்னணியில் சிவில் சமூகங்களும் கட்சிகளும் இணைத்து ஒரு புதிய வளர்ச்சிக்குப் போகவேண்டிய ஒரு தேவை வலிமையாக மேலெழுகின்றது. ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்தி அவ்வாறான ஒரு கட்டமைப்பின் கருநிலைக் கட்டமைப்பை உருவாக்கினால் அது எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப ஒரு பொருத்தமான வளர்ச்சியை அடையும் என்ற எதிர்பார்ப்பு சிவில் சமூகங்களிடம் காணப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கட்சிகள் பலமாக இருக்கும் பொழுது அல்லது பெரிய கூட்டு பலமாக இருக்கும் பொழுது சிவில் சமூகங்களை மதிப்பது குறைவு. 2014 ஆம் ஆண்டு மன்னாரில் நடந்த சந்திப்பு ஒன்றில் சம்பந்தர் அப்போதிருந்த மறைந்த ஆயர் ராயப்பு ஜோசஃப் அவர்களை நோக்கி சொன்ன பதில் அதைத்தான் காட்டுகிறது. ”பிஷப் நீங்கள் சொல்லுவதை சொல்லுங்கோ நாங்கள்தான் முடிவெடுக்கிறது” என்று சம்பந்தர் திமிராகச் சொன்னார். ஆனால் 2020ல் கூட்டமைப்பின் ஏகபோகம் உடைந்து அதன் ஆசனங்கள் வெளியே போனபோது கூட்டமைப்பு இறங்கி வந்தது. அதன் விளைவுதான் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடிதம். அதாவது கட்சிகள் பலமாக இருக்கும் போது அல்லது கூட்டுக்கள் பலமாக இருக்கும் பொழுது அவர்கள் சிவில் சமூகங்களை மதிப்பதில்லை. ஆனால் கட்சிகள் பலவீனமடையும் போது சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீக தலையீட்டைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது. அப்படி ஒரு கட்டம் இப்பொழுது தமிழ் அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது அரசாங்கத்தால் ஏற்படுத்தித் தரப்பட்ட ஒரு வாய்ப்பு. அதைத் தமிழ்த் தரப்பு தனது நோக்கு நிலையில் இருந்து கையாள முடியும். இதை கவித்துவமாகச் சொன்னால், அரசாங்கம் திறந்து விட்டிருக்கும் ஒரு மைதானத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய விளையாட்டை விளையாடுவது.
 

https://www.nillanthan.com/6743/

பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.

1 week 2 days ago
may-18-1-720x375.jpg பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.

மே 18 வருகிறது. 2009இலிருந்து இன்றுவரையிலுமாக 15 ஆண்டுகள் கழிந்து விட்டன. இது கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் அரைவாசிக் காலத்துக்கு கிட்ட வரும். ஆயுதப் போராட்டம் மொத்தம் 38 ஆண்டுகள். இதன் அரைவாசிக்காலம் 19 ஆண்டுகள்.எனவே கடந்த 15 ஆண்டுகளிலும் ஈழத் தமிழர்கள் எதை பெற்றார்கள்? எதைப் பெறவில்லை? என்ற தொகுக்கப்பட்ட அறிவு அவசியம்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்தில் கட்சி அரசியல்தான் பெருமளவுக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது.மக்கள் இயக்கமோ அல்லது போராட்ட இயக்கமோ அங்கு கிடையாது. கட்சிகள்தான் போராடுகின்றன. கட்சிகள்தான் பேச்சுவார்த்தைக்குப் போகின்றன.கட்சிகள்தான் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீல் செய்கின்றன. இக்கட்சி அரசியலைத் தொகுத்து பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளிலும் பெற்றவை பெறாதவை எவை ?

தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி, முடிவில் தமிழரசுக் கட்சி மிஞ்சியது. அதற்குள்ளும் இப்பொழுது உடைவு.கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஓர் உடைவு. கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஏனைய கட்சிகள் இணைந்து தங்களுக்கு இடையே கூட்டணி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றன. ஆனால் அது ஒரு சிறிய கூட்டு. அதன் வாக்குப் பலத்தை இனிமேல்தான் அளவிட வேண்டும். இப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கூட்டுக்கள் உருவாகவில்லை. பெரிய கூட்டுக்கள் உடைந்துவிட்டன என்பதே சரியானது. அதேசமயம் கட்சி அரசியல் போதாது, அல்லது கட்சி அரசியல் தோல்விகரமானது, கட்சிகளை வைத்து ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்த முடியாது என்று கூறும் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்புகளும் தொடர்ந்து முன்னேறவில்லை.

கடந்த 15 ஆண்டுகளிலும் அவ்வாறு மூன்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலாவது முயற்சி தமிழ் மக்கள் பேரவை.அது ஒரு அருமையான சேர்க்கை. கட்சிகளும் புத்திஜீவிகளும் சிவில் சமூகங்களும் இணைந்தன. ஆனால் அந்தக் கூட்டு ஒரு பிரமுகர் மையக் கூட்டு. சமூகத்தில் ஏற்கனவே பிரபல்யங்களாக இருந்த நபர்கள் இணைந்து விக்னேஸ்வரன் என்ற ஒரு முதலமைச்சரை மையமாக வைத்து அதைக் கட்டி எழுப்பினார்கள்.அது மேலிருந்து கீழ் நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஒரு பிரமுகர்மைய அமைப்பு. அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் நின்று பிடிக்கவில்லை. அதன் தோல்விக்கு முக்கியமாக அது ஒரு காரணம். அது தவிர விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியை துறந்த பின் தமிழ் மக்கள் பேரவையை ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக மாற்றி அதை வழிநடத்த விரும்பவில்லை.இது இரண்டாவது காரணம்.

மேலும் தமிழ் மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் பயன் பொருத்தமான ஒரு ஐக்கியம் நிலவவில்லை.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்டத்துக்கு மேல் நின்றுபிடிக்க முடியவில்லை. அதன்பின் முல்லைத்தீவை மையமாகக் கொண்டு தமிழ் மரபுரிமை பேரவை என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.அது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒர் ஆர்ப்பாட்டத்தை செய்தது.சிவில் சமூகங்களின் சந்திப்புகளில் அதன் முக்கியஸ்தர்கள் அவேசமாகவும் தர்கபூர்வமாகவும் தீவிரமாகவும் உரையாடுவார்கள். ஆனால் அந்த அமைப்பின் மையமாக காணப்பட்ட ஒருவர் உலகப் பெரு நிறுவனம் ஒன்றில் உயர் பதவி பெற்றதோடு அந்த அமைப்பு அரசியல் பரப்பில் இருந்து காணாமல் போய்விட்டது.

மூன்றாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான கட்டமைப்பு. அது கடந்த 15 ஆண்டுகளிலும் மிகப்பெரிய மக்கள் எழுச்சியை ஒழுங்குபடுத்தியது. அந்த மக்கள் எழுச்சியின் பெயரால் அது தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. ஆனால் அந்த மக்கள் எழுச்சியின் அடுத்த கட்டமாக அந்த அமைப்பை மக்கள் மயப்படுத்தி ஒரு நிறுவனமாக வளர்த்தெடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவையை போல அது அரங்கில் இருந்து முற்றாக அகன்று விடவில்லை. அதன் இணைத் தலைவரான வேலன் சாமியார் தொடர்ந்தும் போராட்டக் களங்களில் காணப்படுகின்றார். ஆனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு வெற்றிகரமான ஒரு மக்கள் இயக்கமாக வளரவில்லை.

இதுதான் தாயகத்து அரசியல் நிலவரம்.அதாவது கட்சிகளும் உடைந்து உடைந்து சிறுத்துக் கொண்டு போகின்றன. மக்கள் அமைப்புகளும் தோன்றி மறைகின்றன. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் திருப்திப்படும் ஒரு நிலைமை தாயகத்தில் இல்லை.

அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழர்களை எடுத்துக் கொண்டால் அங்கு நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் எதுவரை முன்னேறி யிருக்கிறார்கள்?
ஐநாவை நோக்கிய செயற்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான முன்னேற்றங்கள் எவையும் இல்லை. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு இயங்குகின்றது. ஆனால் அது மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அமைப்பு. தமிழ் மக்கள் கேட்டது போல பலமான ஒரு கட்டமைப்பு அல்ல. மேலும் ஐநா மைய அரசியல் எனப்படுவது தமிழ் அரசியலை மனித உரிமைகள் பேரவை என்ற பெட்டிக்குள் கட்டி வைத்திருக்கின்றது.இந்த வரையறை காரணமாக ஐநா மைய அரசியலில் தமிழ் மக்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியவில்லை.

அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் தாயகத்துக்கு அடுத்தபடியாக அதிகம் தமிழர்கள் வாழும் ஒரு நாடு கனடா. அங்கே தனிப்பட்ட நபர்களும் சில அமைப்புகளும் முன்னெடுத்த தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, கனேடிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மூத்த இரண்டு ராஜபக்சங்களுக்கும் எதிராகத் தடை வந்திருக்கிறது. சில படைத்தளவாதிகளுக்கு எதிராகவும் தடை வந்திருக்கிறது. கனேடியப் பிரதமர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.தமிழ் புலம்பெயர்ந்த சமூகங்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தைப் பொறுத்தவரை,கனேடியத் தமிழ்ச்சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

எனினும், அதே கனேடியத் தமிழர்கள் மத்தியில் இருந்துதான் இமாலயப் பிரகடனமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தோடு முழுமையாக கலந்து ஆலோசிக்காமல் உருவாக்கப்பட்ட ஒரு பிரகடனம் அது. பௌத்த மகா சங்கத்தோடு அவ்வாறான ஒரு பிரகடனத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பெருமளவுக்கு நீர்த்துப் போகச்செய்யப்பட்டுள்ளன.புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்று தாயக அரசியலின் மீது எவ்வாறு எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்தலாம் என்பதற்கு அது ஒரு ஆகப் பிந்திய உதாரணம். எனினும் அந்தப் பிரகடனத்திற்கு எதிராக பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கிளர்ந்து எழுந்தன. விளைவாக, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து எதிர்ப்பை காட்டின.கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை அந்த அடிப்படையிலாவது ஒன்றாக நின்றன.

எனவே, இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகள்; பெற்ற அடைவுகள் எவை எவை என்பதனை கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய அரைவாசி காலகட்டத்தை தமிழ் மக்கள் கடந்துவிட்ட பின்னரும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ்மக்கள் தொடர்ந்து ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியவில்லை. அதுபோலவே தாயகத்திலும் கட்சி அரசியலைக் கடந்து ஒரு மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், மற்றொரு மே 18 வருகின்றது. அதையொட்டி தாயகத்தில் “தமிழ் சிவில் சமூக அமையும்” ஒரு அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது.அதுதொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் ஒழுங்குபடுத்தியது. அதுபோலவே இனிவரும் கிழமைகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நினைவு கூர்தலுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்படும்.மே 18 வரையிலும் நிலைமைகள் உணர்ச்சிகரமாக இருக்கும்.

நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தாமரை மொட்டு கட்சியின் பொது வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால், தனக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பெரிய அளவில் கிடைக்காது என்பது அவருக்கு தெரியும். அதேசமயம் தனிச்சிங்கள வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ராஜபக்சக்களின் கட்சியில் தங்கியிருக்கும் காரணத்தால், அவரும் தனிச்சிங்கள வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நினைவுகூர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விடுவாரா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால் அதுகூட ஒரு விதத்தில் நன்மையாகத்தான் முடியும். ஏனென்றால், இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல, கடந்த 15 ஆண்டுகளாக தேங்கிப் போயிருக்கும் தாயகத்து அரசியலில் ஒடுக்குமுறைதான் குறைந்தபட்சம் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கடந்த 15 ஆண்டுகளாகவும் அதுதான் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் தாங்களாக ஒன்றிணைந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பவோ அல்லது தமிழ் கட்சிகள் தாங்களாக ஒன்றிணைந்து ஒரு பெரிய கூட்டை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக எதிரியின் ஒடுக்குமுறைகள்தான் அவர்களை விழித்தெழு வைத்திருக்கின்றன. ஒடுக்குமுறைதான் அவர்களைப் புதிய பெரிய அணிச் சேர்க்கையை நோக்கி உந்தித் தள்ளுகின்றன.அல்லது எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடாத்தப்படும் தேர்தல்கள் அல்லது அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றின் விளைவாகத்தான் தமிழ்மக்கள் அவ்வப்போது சீண்டப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் அமைப்புக்கள் தோன்றிய காலகட்டம் அல்லது குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பேரெழுச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்ட காலகட்டம் எவை என்று பார்த்தால், இரண்டு சந்தர்ப்பங்களில் அவ்வாறு எழுச்சிகளும் அமைப்புகளும் உருவாகியுள்ளன.

முதலாவது சந்தர்ப்பம்,ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் அதிகரிக்கும் ஜனநாயக வெளி. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமை பேரவை போன்றன தோன்றின. இரண்டாவது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்படும் எழுச்சிகள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான எழுச்சி அத்தகையதுதான்.

இரண்டாவது சந்தர்ப்பம், தேர்தல்கள் அல்லது அரசாங்கத்தின் புதிய நகர்வுகள் அல்லது ஐநா மனித உரிமை கூட்டத்தொடர். இந்த வெளித் த்தரப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக தமிழ் மக்கள் ஏதோ ஒரு ஐக்கியத்துக்கு போவார்கள். அல்லது ஏதோ ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அதாவது தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக ஒடுக்குமுறைதான் காணப்படுகின்றது. அரசறிவியலில் இதனை எதிர்வினை ஆற்றும் அரசியல் என்று கூறுவார்கள். எதிரியின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்படும் தரப்பு காட்டும் எதிர்ப்பு. அதேசமயம் தானாக ஒரு தேசத்தை கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் மக்கள் அமைப்புகளை உருவாக்கி அல்லது கட்சிக் கூட்டுகளை உருவாக்கி தமிழரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லமுடியாத ஒரு அரசியல் போக்கு. இந்தப் போக்கை உடைத்துக்கொண்டு தமிழ்மக்கள் ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் போராட்ட அமைப்புகளையும் கட்சிக் கூட்டுக்களையும் உருவாக்கி தொடர்ச்சியாகப் போராடுவதுதான் நினைவுகூர்தலை அதன் முழுமையான பொருளில் செய்வதாக அமையும்.

https://athavannews.com/2024/1381169

தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து

1 week 3 days ago

தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து
தமிழர் பொதுவேட்பாளர்  ஒரு பம்மாத்து

— கருணாகரன் —

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. 

மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு ஒரு கலந்துரையாடலை வலு உற்சாகமாகச் செய்திருந்தது. “தமிழ்ச்சிவில் சமூகத்தினர்(?)” என்ற பேரிலும் அரசியல் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று தம்மைக் கருதிக் கொள்வோரும் இதில் இணைந்துள்ளனர். மேலும்  சில மதகுருக்களும் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்குப்  பின்புலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி  ஊடக நிறுவனமொன்று செயற்பட்டு வருகிறது. அதுவே “மக்கள் மன்றம்” என்ற பெயருடைய ஒரு திடீர் அமைப்பை கடந்த மாதம் இதற்காகத் தோற்றியது. “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் காலத்தின்தேவை” என்றே இதற்கு நியாயம் சொல்லப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. 

1. தமிழ் மக்கள்  ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும்  இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது. 

இதைப்படிக்கும் வாசகர்கள் சிரிக்க வேண்டாம். இதில் என்ன உண்டு? எந்தப் புதிய உள்ளடக்களும் இல்லையே. இதைத்தான் இந்தத் தரப்புகள் காலாகாலமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனவே என்று கோபித்துக் கொள்ளவும் வேண்டாம். 

ஏனென்றால் இவர்களால் இப்படித்தான் சிந்திக்க முடியும். இதற்கு மேல் புதிதாகச் சிந்திக்கக் கூடிய – யதார்த்தத்தை உணரக் கூடிய, காலமாற்றம், சூழல் மாற்றம், சமூக மாற்றம் பற்றிய அறிதிறன் ஆற்றல் இவர்களிடம் இல்லை. என்பதால் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள். ஆகவே இவர்களைக் கோபித்து எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், இவர்களுடைய இவ்வாறான தவறான சிந்தனை மிக ஆபத்தான விளைவுகளை மக்களுக்கு உண்டாக்கக் கூடியது. கடந்த காலத்திலும் இதுவே நிகழ்ந்தது. வரலாறு அதை நிரூபித்திருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம். 

இந்தப் பொதுவேட்பாளர் பற்றிய (முசுப்பாத்திக்) கலந்துரையாடல்  நடந்து மறுநாள், கிளிநொச்சியில் நடந்த “தமிழ்த்தேசிய மேதினக் கூட்டத்தில்” கலந்து கொண்ட மனோ கணேசன், தாம் இந்தத் தீர்மானத்துக்கு வெளியே நிற்பதாகப் பகிரங்கமாகவே அறிவித்தார். மட்டுமல்ல, “வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழர்களை இந்தப் பொதுவேட்பாளர் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம். அந்தச் சூழலே வேறு” என்றும் சொன்னார். 

ஆக மனோகணேசனும் இந்தப் பொதுவேட்பாளர் என்ற “பகிடி” விவகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே இன்னொரு வேடிக்கையும் உண்டு. தமிழ்ப்பொது  வேட்பாளருக்கு மனோ கணேசனின் பெயரைக் கடந்த வாரம் சிலர் பரிந்துரைத்திருந்தனர். ஆனால் மனோ கணேசனோ, பொதுவேட்பாளர் விடயத்தில் தாம் சம்மந்தப்படவே போவதில்லை என்று முகத்திலடித்துச் சொல்லி, அதிலிருந்து வெளியேறி விட்டார். 

மனோ கணேசனுக்கு இதில் பங்கெடுப்பது சிக்கலானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும்  பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சியில் பங்கெடுக்கிறார். அப்படியிருக்கும்போது சஜித்துக்கு மாறாக அவரால் சிந்திக்க முடியாது. மட்டுமல்ல, 13 ஆவது திருத்தத்துக்கு சஜித் ஆதரவளிக்கிறார் என்ற சேதியையும் கிளிநொச்சியில் வைத்துச் சொல்லியிருக்கிறார் மனோ. 

ஆகவே மறைமுகமாக பொதுவேட்பாளர் விடயம் பயனற்றது என்பதையும் தமிழர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாம் என்பதையும் ஒரே மேடையில் வைத்துச் சொல்லாமற் சொல்லியுள்ளார் மனோ கணேசன். மனோவின் சிறப்பும் கவனிக்கத் தக்க அம்சமும் இதுதான். அவர் எப்போதும் துணிச்சலோடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தலைவர். 

“மனோ கணேசன் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையைப் பற்றித் தீர்மானிக்கும் ஆளல்ல. அவருடைய கருத்துப் பொருட்படுத்தத் தேவையற்றது” எனச் சில சிங்கங்கள் கர்ஜிக்கலாம். இன்று இலங்கைத்தீவில் பரவலாக அறியப்பட்ட தீர்மானச் சக்தியுடைய தமிழ்த்தலைவர்களில் மனோ கணேசன் முக்கியமானவர். அவரைப் பல சந்தர்ப்பங்களிலும் வடக்குக் கிழக்கு அரசியலில் தமிழ்த் தலைவர்களும் சேர்த்தே பயணித்திருக்கின்றனர். வடக்கில் தேர்தல் மேடைகள் தொடக்கம் முக்கியமான அரசியற் கலந்துரையாடல்கள், கட்டமைப்பு உருவாக்கங்கள், தீர்மானங்கள் எல்லாவற்றிலும் இணைத்தே வந்திருக்கின்றனர். அப்படித்தான் கிளிநொச்சி மேதினக் கூட்டத்திலும் மனோவின் பங்கேற்பு நடந்தது. என்பதால் மனோவை விட்டு யோசிக்க முடியாது. அவரைச் சுண்டித் தள்ளி விடமுடியாது.

இதில் கவனிக்க வேண்டிய கேள்வி ஒன்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனைக் கலந்து கொள்ள வைத்து, அவர் மூலமாகச் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறாரா? என்பதுவே அது. 

இதை விட, இந்தத் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயம், மிகப் பலவீனமாக உள்ளது என்பதற்கு சில காரணங்களைப்பார்க்கலாம்.

1.     பொதுவேட்பாளர் என்பது தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை மட்டும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். குறைந்த பட்சம் இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மலையக மக்களையும் முஸ்லிம்களையும் கூட இதில் உள்ளடக்க முடியாதிருப்பது, தமிழர்கள் மேலும் தனிமைப்பட்டுச் சுருங்கிச் செல்வதையே காட்டுகிறது. குறுகிய சிந்தனைக்கு இதுவே சரியெனப்படும். ஆனால், அரசியல் ராசதந்திர முதிர்வுக்கு இது பொருத்தமானதல்ல. குறிப்பாக வெளியுலகம் இதைக்குறித்துச் சிந்திக்கும்போது அல்லது கவனிக்கும்போது “தமிழ்பேசும் மக்களாகக் கூடச் சேர்ந்து ஓரணியில் நிற்க முடியாத அளவுக்குத்தான் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சமூகங்கள் உள்ளனவா?” என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பும். 

2.     மட்டுமல்ல, ஜனாதிபதித்தேர்தலை கஜேந்திரகுமார் அணி நிராகரிக்கிறது. தமிழ் மக்கள் இதில் பங்கேற்கத் தேவையில்லை என்கிறார் கஜேந்திரகுமார். ஆகவே அவர்களுடைய கணிசமான வாக்காளர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அத்துடன், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் அங்கயன் ராமநாதன், வியாழேந்திரன் போன்ற தரப்புகள் பொது வேட்பாளரை ஏற்கப்போவதில்லை. மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்களும் உண்டு. (மஸ்தான் போன்றவர்களுக்குப் பெரும்பாலான தமிழ் வாக்குகளே கிடைக்கின்றன). அவர்களுடைய வாக்குகளும் பொ. வே க்குக் கிடையாது. இதை விடச் சமத்துவக் கட்சி, மாக்ஸிஸ, லெனினிஸ ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் நிலைப்பாடு என்ன என்று இன்னும் தெளிவாகவில்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அந்தக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவோரின் கட்டுரைகளும் உரைகளும் சொல்கின்றன. தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஆதரவு – எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடே உண்டு. இதை விட ஏற்கனவே சிறிலங்கா, சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, ஜே.வி.பி போன்றவற்றுக்கான வாக்குகளும் உண்டு. அவையும் இந்தப் பொ.வே விளையாட்டில் பங்கேற்காது. ஆகவே பொ.வே. பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை எந்தளவில் பிரதிபலிக்கும்?

3.     பொதுவேட்பாளரை நிறுத்தித்தான் “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும்” என்றால் இதை விட வேறு பலவீனமான நிலை இல்லை எனலாம். வேறு வழிகள், வேறு முறைகள் ஏதுமில்லாத கையறு நிலையிலா தமிழ் மக்கள் உள்ளனர். சரி பிழைகளுக்கு அப்பால்  1977 லிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன் என்றும் சொல்லலாம். இன்னும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் முன்னிலைப் பாத்திரத்தை வகிக்கின்றன என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? அல்லது, புலம்பெயர் தேசங்களில் இன்னும் பெருவாரியான தமிழ் மக்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்? தமக்கு விடுதலை வேண்டும் என்றுதானே! அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை எனத்தானே! அப்படியிருக்கும்போது பொது வேட்பாளரை நிறுத்தித்தான் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை வெளியுலகத்துக்குப் புதிதாகக் காண்பிப்பது என்றால், இதை விட வேடிக்கை என்ன? தேசமாகத் திரள்வது, சமூகமாகச் சிந்திப்பது என்பதெல்லாம் குறித்த மக்களோடு இணைந்து நின்று களப்பணிகளைச் சிந்திப்பதன் மூலமே சாத்தியமாகும்  என்று சிந்திக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமும் கட்சிகளுக்கிடையில் உள்ள இணக்கப்பாடுகளும் முதலில் உருவாக்கப்படுவது அவசியம். அதைச் செய்வதற்கு இந்தச் சிவில் அமைப்புகளால் முடியவில்லை. ஏன் மதகுருக்களினாலும் முடியவில்லை. பதிலாக ஒவ்வொருவரும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விட்டனர். யாரோ, எங்கோ, எப்படியோ எடுக்கின்ற தீர்மானங்களுக்கு இங்கே காவடி ஆடுவோராக மாறியுள்ளனர். 

4.     தம்மால் வேறு விதமாகச் சிந்திக்க இயலவில்லை என்பதை மறைப்பதற்காகவே “ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக (பொது வேட்பாளர் விடயத்தை) கையாள்வதும் பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவதும்” இதனுடைய நோக்கமென்று சொல்கிறார்கள். 

இது எவ்வளவு பம்மாத்து? மாறாக தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், அதனுடைய (வெற்றியளிக்கக் கூடிய) எதிர்கால அரசியல் என்ன? அதை ஆய்வு ரீதியாக – விஞ்ஞானபூர்வமாக – முன்னெடுப்பதற்கான கட்டமைப்பு எப்படியாக இருக்க வேண்டும்? அதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்? முன்னெடுப்பு எப்படி என ஆய்வுக்குட்படுத்தி உருவாக்க வேண்டும். முக்கியமாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு அரசியலின் உச்சமே விடுதலைப் புலிகளின் அரசியலாகும். அது பெரும் சேதங்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. இனியும் அதைத் தொடர முடியாது. இவையெல்லாம் தந்த படிப்பினைகளிலிருந்து நாம் புதிய அரசியலை – சமாதானத்துக்கான – தீர்வுக்கான அரசியலைத் தொடர வேண்டும். அது நீண்டது. கடினமானது. உச்சமான பொறுமையைக் கோருவது. போரைப்போல விறுவிறுப்பற்றது. ஆனால், அதைத்தான் நாம் தொடர வேண்டும். கால நிர்ப்பந்தம், வரலாற்று நிர்ப்பந்தம் அதுவே. 

அதைச் செய்ய முடியாமலிருக்கும் தமது தவறையும் பலவீனத்தையுமே இந்த பொ.வே என்ற அவசர நடவடிக்கை காட்டுகிறது. அதாவது இவர்கள் யாரும் நடைமுறையில் களப்பணி செய்யத் தயாரில்லாதவர்கள். உண்மையையும் யதார்த்தத்தையும் எதிர்கொள்வதற்கான துணிவற்றவர்கள் என்பதால் “தமிழ் மக்கள் பேரவை”யைப்போல இப்பொழுது பொ.வே என்ற பலூனை ஊதிப்பெருப்பிக்கப் பார்க்கிறார்கள்.  ஒரு ஆறு மாதம் இவர்களால் தாக்குப் பிடிப்பது கடினம். பிறகு இதெல்லாம் காற்றுப்போகக் கைவிடப்படும் ஒன்றாகி விடும். 

ஆனால், இதையிட்டெல்லாம் இவர்கள் ஒரு போதும் பொறுப்புக் கூறுவதும் இல்லை, திருத்தம் செய்வதும் இல்லை. 

இப்படிப் பல விடயங்கள் உண்டு. உண்மையில் செய்ய வேண்டியது இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய அரசியலும் வேலைத்திட்டமுமே. கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில், புதிய சூழலுக்குரிய (போருக்குப் பிந்திய) அரசியலைப் பகுத்து அதை முன்னெடுக்க வேண்டும். அதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகிறது. சமாதானத்துக்கான – தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியுங்கள், அதில் ஈடுபடுங்கள் என. அதாவது மிக நிதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வுக்கான அரசியலை. நிச்சயமாக பகை வளர்ப்பு அரசியலை அல்ல.

ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, போருக்கு முந்திய, போர்க்காலத்தைய பகை வளர்ப்பு என்ற தோற்றுப்போன, தோல்வியைத் தரக்கூடிய அரசியலையே. 

இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல. ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த காலத்தில் கூட இவர்களுக்கு எந்தச் சேதாரங்களும் ஏற்பட்டதில்லை. 30 ஆண்டுகாலப்போரை ஆதரித்த இவர்களின் உடலில் ஒரு சிறு கீறல் விழுந்ததில்லை. என்பதால்தான் இன்றும் போர்வீரர்களாக வெறிகொண்டு நிற்க இவர்களால் முடிகிறது. 

எனவேதான் தமிழ் அரசியல் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்லப்படும் ஈழத்தமிழர்களுடைய அரசியலானது, பெரும்பாலும் சிறுவர்களுடைய மணல் விளையாட்டைப்போன்றே உள்ளது எனக் கூறவேண்டியுள்ளது. கற்பனை அதிகம். முயற்சிகளும் அதிகம். நல்விளைவுகள் எதுவுமில்லாதவை. சிறுபிள்ளை மணல் விளையாட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியாவது இருக்கும். வெளியே பாதிப்பிருக்காது. இங்கே முன்னெடுக்கப்படும் தமிழ் அரசியலில் எதிர்விளைவுகளே அதிகம். குருதியும் கண்ணீருமே அதனுடைய விளைவு மொழி.

இதைப்பொருட்படுத்தாமல் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். இது வன்மையான கண்டத்துக்குரியது என்று சொல்ல வேண்டியுள்ளது. 

 

https://arangamnews.com/?p=10695

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 20

1 week 3 days ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 20
 
 
 
அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 தமிழ் மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறது. இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப்படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது.
 
கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதியீடாக ஹெள அல்லது எலு மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. என்றாலும் எலு அல்லது ஹெல என்னும் மொழியின் தோற்றம் குறித்துத் தெளிவு இல்லை. ஆனாலும், இது இலங்கையிலேயே தோற்றம் பெற்ற ஒரு மொழி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எலு மொழிக்கும், சமஸ்கிருதம், பாளி முதலிய இந்திய-ஆரிய மொழிகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் காணப்படுகின்றன.
 
அத்துடன், இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்களில் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய இனத்தவரின் மொழிகளும் கலந்து உருவானதே ஹெலமொழி என்று கருதப்படுகிறது. இம்மொழிகளுள் ஆரிய மொழிகளும், தமிழும் அடங்கும். அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், இதில் இருந்து சிங்கள மொழி மற்றும் மாலைதீவுகளில் பேசப்படும் திவெயி மொழி [Elu is ancestral to the Sinhalese and Dhivehi languages] முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும்.
 
அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் கூட, வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம்.
 
ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து, அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்கவில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார்.
 
["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].
 
வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்புகளில் இருந்து, தமிழ் நாட்டில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், தூத்துக்குடி மற்றும் இலங்கையில் மாந்தை அல்லது மாதோட்டம் [மன்னர்] போன்ற இடங்களில் இருந்து [From the annals of history we learn that the port of Puhar along the Coromandel coast of Tamil Naadu, the port of Tutucurin along the Southern coast of Tamil Naadu and the port of Mantai (Mannar) along the North-Western coast of Lanka] கிருஸ்துக்கு முன்பும், ஆரம்பகால கிறிஸ்தவ காலங்களிலும் வர்த்தகம் செய்ததிற்கு வரலாற்று சான்றுகள் பல உண்டு. அவர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருள்களின் தமிழ் பெயர்களை இன்றும் கிரேக்கத்திலும் ஆங்கிலத்திலும் காணலாம் [Tamil names of the commodities exported and imported are seen in the vocabularies of the Greek and English languages today]. உதாரணமாக கிரேக்கத்தில் அரிசியை, ஒரிசா [oryza] என்றும், இஞ்சியை சிஞ்சிபெர் [zingiber] என்றும், கருவா (பட்டை) யை கர்பியன் [karbion] என்று அழைப்பதை கவனிக்க. இது அங்கு தமிழ் மொழியே பேசப்பட்டதை மேலும் உறுதி படுத்துகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 21 தொடரும்
316661931_10222067421457348_8460099691435305320_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PbS-lDLKXXsQ7kNvgE7qSXf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCH3XXe0TLfFxbV6eTaQruowT71QjP9xa1XibhJfgoprQ&oe=663B55B7 316527097_10222067421697354_6648548844770322818_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NV0xvN3lKscQ7kNvgGJhkkz&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAlN19R6bwnx_PvTxFqAX2fnSGZdSS9WjeKJG5wp_7oug&oe=663B3F8C 316672096_10222067421257343_6070281922098168634_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=JWJbBqqtgDEQ7kNvgHcWo1M&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB82N9OZa5VgWKgTlSbRWmLNwr1Mug0l7FYnsThMhRf4w&oe=663B48EF 316661182_10222067421857358_7276087610792161512_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GMrzT8zkioAQ7kNvgHiLGcL&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCAcOSp8dNDK0Hn1RH3yRLtB8Nz6daw9tvZ3eC1QpEceQ&oe=663B60DE 316662502_10222067422257368_8643959497518551882_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5fqq32RVoOwQ7kNvgFrTdws&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAsD3NmAUbfKjb3eOn79jiqIGrvSQyL_1cR2ZKUfUf1Pg&oe=663B7001
 
 
 

தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?

1 week 5 days ago

தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?
தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன?

— கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ்த்தேசியக் கட்சி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர்.   

கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டுக்கும் இதொரு நல்ல முடிவாக அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு (இனப்பிரச்சினை, சமூக, பொருளாதாரப் பிரச்சினை உட்பட அனைத்துக்கும்) தீர்வை எட்டுவதற்கு ஒரு சரியான கட்டமைப்பும் மாற்று அரசியலும் வேண்டும் எனவும். 

 “கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு பொதுச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும். நிரந்தரத் தலைமைக்குப் பதிலாக அதில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகளுக்குச் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தனித்த முடிவுகள் எடுக்கப்படாமல், முடிவுகள் திணிக்கப்படாமல், கூட்டாகவே தீர்மானங்கள் எடுக்கப்பட  வேண்டும். மக்களுக்கான அரசியலானது செயற்பாட்டரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பல நியாயமான கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய தரப்புகளால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் “அரச ஆதரவு நிலைப்பாடு என்றால் அது எந்த அடிப்படையிலானது? அதனுடைய முன்னேற்றமென்ன? அரச எதிர்ப்பு என்றால் அதன் தாற்பரியமென்ன? அது தருகின்ற அரசியல் வெற்றிகள் என்ன? இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன? அது எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? அதனை அடைவதற்கான வழிமுறைகள் என்ன?” என்ற கேள்விகளையும் இவை எழுப்பியிருந்தன.

இதையெல்லாம் தமிழரசுக் கட்சி பொருட்படுத்திக் கொள்ளவேயில்லை. அதனுடைய மூத்த தலைவர்களான இரா. சம்மந்தன், மாவை சேனாதிராஜா தொடக்கம் சுமந்திரன், சிறிதரன் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலையாளர்கள் வரையில் அனைவரும் பொதுக் கூட்டமைப்பு ஒன்றுக்கான அடிப்படைகளைப் புரிந்து கொள்ள மறுத்தனர். இவர்கள் எவரும் கூட்டமைப்புக்கான அரசியற் பண்புடனும் அதற்குரிய மனப்பாங்குடனும் செயற்படவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்தியும் முதன்மைப்படுத்தியுமே வந்தனர். தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற வகையிற் செயற்பட்டும் வந்தனர். 

இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து நொறுங்கியது. 2010 இல் ஒரே அணியாக இருந்த கூட்டமைப்பு, உடைந்து இப்பொழுது ஏழு துண்டாக நிற்கிறது. கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி, சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா என ஒவ்வொரு தரப்பாக வெளியேறி, இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவையும் தனித்து நிற்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  

மட்டுமல்ல, கூட்டமைப்பில் உச்சச் செல்வாக்கைச் செலுத்தி வந்த தமிழரசுக்கட்சி அரசியல் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரசுடன் மென்னிலை எதிர்ப்பையும் உள்வளையும்  ஆதரவையும் கொண்டிருப்போர். ஐக்கிய இலங்கைக்குள் ஏனைய சமூகத்தினருடன் இணைந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட முயற்சிப்பவர்கள். 

மறுதலையாக மாவை சேனாதிராஜா, சிறிதரன், அரியநேந்திரன், ஸ்ரீநேசன் போன்றோர் தீவிர அரச எதிர்ப்பு, விடுதலைப் புலிகள்  ஆதரவு என்ற நிலைப்பாட்டையுடையவர்கள். கற்பனாவாதத்  தன்மையுடையவர்கள். தமிழரசுக் கட்சியின் இந்த இரட்டைநிலை,  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் பிரதிபலித்தது. இப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சிறிதரன் அணியும் மென்போக்கைக் கொண்ட சுமந்திரன் அணியும் தலைமைத்துவப் போட்டியில் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.  

இதனால் உரிய  – பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முடியாதிருந்தது. இதற்கு நல்ல உதாரணம், ‘நல்லாட்சிக் காலம்’  என வர்ணிக்கப்பட்ட 2015 – 2020 வரையான மைத்திரி – ரணில் ஆட்சியின்போது சுமந்திரனும் சம்மந்தனும் வெளிப்படையாகவே அரச ஆதரவு நிலைப்பாட்டிலிருந்தனர். ஏனையோர் அதை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த ஒற்றையாட்சிக் கோட்பாடு பற்றிச் சுமந்திரன் தமிழ்மக்களுக்கு  வியாக்கியானம் செய்து வந்தார். இதனை கூட்டமைப்பிலிருந்த சுரேஸ், செல்வம், சிறிதரன் போன்றோர் விமர்சித்து வந்தனர்.

இவ்வாறான நெருக்கடிகள் நிறைந்த பின்னணியில்தான் DTNA இன் உருவாக்கம் 2023 இல் நிகழ்ந்தது. அது தடுமாற்றங்களிலிருந்து விடுபட்டு,  தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதியதொரு வழிமுறையைக் காண்பதாக இருக்கும் என நம்பப்பட்டது. 

இதற்குக் காரணம்,  DTNA இல் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியன ஆயுதப்போராட்ட அரசியலிலும் ஜனநாயக வழிமுறை அரசியலிலும் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவை. அவற்றின் தலைவர்களுக்கு இவை இரண்டிலும் தொடர்ச்சியான அரசியல் அனுபவமுண்டு. ஆகவே இரண்டு அனுபவங்களின் வழியாகவும் புதிய அரசியலை – குறிப்பாகச் செயற்பாட்டு அரசியலை – DTNA யினால் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. 

முக்கியமாக தமிழ்ப்பரப்பில் செயற்பாட்டு அரசியலை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் மக்களிடம் இருந்தது. போராட்ட அரசியலுக்கு முன்னரும் பின்னரும் செயற்பாட்டு அரசியல் இல்லை. இரண்டு காலகட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசுக் கட்சியிடத்திலும் தமிழ்க் காங்கிரஸிடமும் செயற்பாட்டு அரசியற் பாரம்பரியமோ அனுபவமோ இல்லை. ஆனால், விடுதலைப் போராட்ட இயக்க அனுபவங்களுக்கூடாகப் பயணித்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்றவற்றுக்கு செயற்பாட்டு அரசியற் பாரம்பரியம் இருந்தது. 

ஆகவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும். அது கற்பனாவாத (மிதவாத) அரசியலில் இருந்து விடுபட்டு, நடைமுறை அரசியலை, மக்களுக்கான அரசியலை நோக்கிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு  மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன  செய்து கொண்டிருக்கிறது? அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாகும். 

TNA யிலிருந்து வெளியேற்றத்துக்குப் பின்னர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு DTNA இன்னும் தன்னைத் தனித்த அடையாளமாகக் காட்டவில்லை. அதாவது, கொள்கை ரீதியாகவும் கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றிலும் தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட வேறுபட்டதாக உணர முடியவில்லை. 

இந்தப் பின்தங்கிய நிலை தொடருவதற்கான காரணம் என்ன?

தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட்டு வெளியேறிய பின் DTNA இன்  புதிய செயற்பாட்டுப் பரப்பு, புதிய செல்வாக்குப் பரப்பின் விரிவாக்கம் எதுவாக உள்ளது?

DTNA இன் புதிய பெறுமானங்கள், அது பெற்றுக் கொண்ட – உருவாக்கிய நல்லடையாளங்கள் என்ன? 

இந்தக் கேள்விகளை DTNA விடம் ஏன் எழுப்ப  வேண்டியிருக்கிறது என்றால் –

1.      ஏறக்குறைய 20 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த ஒரு (TNA)  கட்டமைப்பிலிருந்து வெளியேறி, புதிய அணியாக DTNA செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக முன்னதற்கும் பின்னதற்குமான வேறுபாட்டை அது காண்பிக்க  வேண்டும். அரசியல் ரீதியாகவும் அதை முன்னெடுத்துச் செல்லும் அணுகுமுறைகள் எப்படியானவை எனவும் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டுக்குமிடையிலான அரசியல்  வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்துவதோடு, பிரிந்து சென்று புதிதாக இயங்குவதற்கான நியாயத்தையும் சொல்வதாக இருக்கும். ஆனால், அப்படி எதையும் இதுவரையில் உணரமுடியவில்லை. 

2.      குறிப்பிட்ட அளவுக்கு அவ்வப்போது தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறது DTNA. அதேவேளை அது மீண்டும் தமிழரசுக் கட்சியோடு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு) இடைநிலைச் சமரசத்துக்கும் முயற்சிக்கிறது. இந்தத் தத்தளிப்பு நிலை அல்லது தடுமாற்றம் ஏன்? ஏனென்றால், DTNA உம், தமிழரசுக் கட்சியைப் போலச் செயற்பாட்டு அரசியலை விட்டு, பிரமுகர் அரசியலிலும் முற்று முழுதான கற்பனாவாத அரசியலிலும் மூழ்கிப்போயுள்ளது. அதனால்தான் அதனால், கொள்கை, கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றால் தனித்துவப்படுத்திக் காண்பிக்க முடியவில்லை.  

3.      இதனை மறைத்துக் கொள்வதற்காக அது தீவிர அரசியலைப்  பேச முற்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் என்ற கதையாடலே தமிழ்த்தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத தடுமாற்றத்தின் விளைவுதான். அதொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல, தமிழ் மக்களுடைய அல்லது தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் மீட்சிக்கான வழிமுறையும் அல்ல. 

மட்டுமல்ல, தீவிர அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டே, அதனுடைய தலைவர்கள் அதிதீவிர அரசியலை முன்னெடுக்கின்றனர். இந்த அதிதீவிர அரசியல் தமக்குரிய அதிகாரத்தையும் எதிர்காலத்தையும் தமிழ்ச்சமூகத்திடமிருந்து பெற்றுத் தரும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அதைப் பேசுவதற்கும் அந்த  வழியில் செயற்படுவதற்கும் கஜேந்திரகுமாரின் அணியும் சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரின் அணியும் இருக்கிறதே. பிறகேன் இவர்கள் (DTNA)? 

தேவையேற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படத் தயார் என DTNA  இன் தரப்பிலிருந்து சித்தார்த்தன், செல்வம் போன்றோர் சொல்லியிருக்கின்றனர். அதாவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு ஒற்றுமையாக – ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அதற்காகவே இப்படிச் சிந்திக்கிறோம் என்கிறார்கள்.

அப்படியென்றால், பிரிந்து செல்வதற்கு காரணமாக இருந்த நிலவரங்களை தமிழரசுக் கட்சி சீராக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை.  அப்படியிருக்கும்போது எதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மீளிணைவைப் பற்றி DTNA சிந்திக்கலாம்? அப்படியாயின் தனித்து இயங்குவதில் DTNA க்கு உள்ள தயக்கம் – அச்சம்தான் காரணமாக இருக்க வேணும். நிச்சயமாக. இன்னும் மக்கள் DTNA ஐ பிறிதொரு சக்தியாக அடையாளம் காணவில்லை. ஒரு தேர்தல் வருவதற்கு முன்பு, மக்களிடம் கணிப்பீடு வரமுன்னர் எப்படி இப்படிச் சொல்லமுடியும்? என்று DTNA தரப்பில் கேள்வி எழுப்பப்படலாம்.  தமது கூட்டணிக்குப் பெயர் சூட்டப்பட்ட விதத்திலிருந்து, முன்னெடுக்கப்படும் அரசியல், அவ்வப்போது கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சியினருடனான பொது நிகழ்வுப் பங்கேற்புகள் வரையில் DTNA தனித்துத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக தான், இன்னும் கூட்டமைப்பின் நிழலாக இருக்கிறேன் என்றே காட்ட முற்படுகிறது. தனித்து DTNA என நின்றால், பின்னடைவைத் தந்து விடுமோ என்ற அச்சம் அதற்குண்டு. 

இந்த அச்சத்துக்குக் காரணம், DTNAதான். ஏனென்றால், தமிழ் அரசியல் அரங்கில் விடுதலைப்புலிகள் இல்லாது போன 2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளிலும் DTNA இன் கட்சிகளால் (இயக்கத்தினரால்) ஒரு புதிய அரசியலை, தங்களுடைய தனித்துவ அடையாளத்துடன் முன்னெடுக்க முடியவில்லை. அப்படிச் செய்வதற்கு முன்பு புலிகள் தடையாக இருந்தனர். அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். 2009 க்குப் பிறகு அப்படிச் சொல்ல முடியாது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியைக் கூட DTNA உள்ளிட்ட பிற சக்திகள் எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லையே. அதை மேவிச் செல்லவும் முடியவில்லையே. 

4.      தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது வெறும்கோது மட்டுமே. அதிலிருந்து அனைத்துத் தரப்பினரும் வெளியேறி விட்டனர்.  தமிழரசுக் கட்சி மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற லேபிளில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிளவுண்டு சிதையக் கூடிய நிலையில். உள்முரண்பாடுகள் முற்றி நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது.  இந்த வாய்ப்பான சூழலில் DTNA தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். தனக்கு  வெளியே உள்ள சக்திகளையும் இணைத்துக் கொள்ளலாம். தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் சமரசம் செய்வதற்கு முயற்சிப்பதை விட அதற்கு வெளியே உள்ள சக்திகளை இணைத்துத் தன்னை விரிவாக்கம் செய்வதே  பயனுடையது. ஆனால், அது அப்படிச் செய்யவில்லை. அதில் அக்கறை  கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை. 

இது ஏன்?

5.      தமிழரசுக் கட்சியை DTNA இன்னும் விமர்சிப்பதற்குக் காரணம், அதில் முன்னணிப்பாத்திரம் வகிக்கின்ற – எதிர்காலத்தில் முன்னணியில் திகழப்போகின்ற – சுமந்திரன், சிறிதரன் போன்றோருடன் DTNA வினரால் உடன்பட்டுப் பயணிப்பதில் உள்ள நெருக்கடியே! இந்த விமர்சனத்தைக் கூட சுரேஸ் பிரேமச்சந்திரனும் ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி போன்றோரும்தான் செய்கின்றனர். அபூர்வமான சந்தர்ப்பங்களில் செல்வம் அடைக்கலநாதன் ஏதாவது சொல்வார். சித்தார்த்தன் எதுவுமே பேசுவதில்லை. ஆனால் DTNA என்ற வகையில் தமிழரசுக் கட்சி மீதான விமர்சனங்களுக்கு அனைவரும் உடன்பாடு கொண்டேயுள்ளனர். அந்தளவுக்குக் கசப்பான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. 

முக்கியமாகச் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை விடச் சிறிதரனும் சுமந்திரனும் அரசியல் வரலாற்றில் ஜூனியர்கள். ஜூனியர்களாக இருந்தாலும் ஏனையவர்களை விட இருவரும் செல்வாக்கோடும் அரசியல் அதிகாரத்தோடும்  தற்போதுள்ளனர். கூட்டமைப்பில் எல்லோரும் இணைந்திருந்த காலத்திற் கூட சுமந்திரனும் சிறிதரனும் ஏனையவர்களை மிஞ்சும் வகையிலேயே, அவமதிக்கும் வகையிலேயே நடந்து கொண்டனர். சிறிதரன் பல சந்தர்ப்பங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,  ரெலோ ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், சாடியிருக்கிறார். கிளிநொச்சியில் ஏனைய கட்சிகளின் செயற்பாட்டை அவர் முற்றாகவே மட்டுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுமிருந்தார். அத்துடன்,  தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் தொடர்ச்சியாகவும் காட்ட முற்படும் சிறிதரனுக்கு ஏனையவர்களை, விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருந்தவர்கள் என்ற கடந்த கால வரலாற்றைத் தோண்டியெடுத்து முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. 

சுமந்திரனுக்கு இது வேறு வகையில் இருந்தது. அவர் சம்மந்தனின் தொடர்ச்சியாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தினருடனும் இணைந்து பெறக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்தித்தும் பேசியும் வந்தார். இது தமது கடந்த கால வரலாற்றின் நிழலை மறைத்து புதிய (அரச எதிர்ப்பு – தமிழ்த்தேசிய) அரசியலைத் தீவிர நிலையில் முன்னெடுக்கும் சுரேஸ், செல்வம் போன்றோருக்கு ஏற்புடையதாக  இருக்கவில்லை. மட்டுமல்ல, கூட்டமைப்பில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளுக்கும் சமநிலையான அடையாளத்தையும் உரிமையையும் வழங்குவதற்குச் சுமந்திரன் ஏற்புடையவராகவும் இருக்கவில்லை. அத்துடன் ஏனையவர்கள் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு – அனுசரித்து – நடக்க வேண்டும் என்று சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சம்மந்தன், மாவை சேனாதிராஜா வரையில் அனைவரும் நடந்து கொண்டனர். அதாவது தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதை அனுசரித்து ஏனையவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றவிதமாகச் செயற்பட்டமை. 

இதையெல்லாம் முறியடிக்கக் கூடிய ஒரு செயற்திட்டத்தைக் கூட DTNA உருவாக்கவில்லை. பதிலாக அது கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சிறிதரன் போன்றோரின் அதிதீவிர அரசியலின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பின்னோடி எந்தப் புதிய சாதனைகளையும் DTNA வினால் நிகழ்த்த முடியாது. தன்னை இழப்பதில்தான் அது போய் முடியும். குறைந்த பட்சம் தம்முடைய முன்னோடித் தலைவர்கள் பத்மநாபா, உமா மகேஸ்வரன், சிறிசபாரத்தினம் போன்றோரின் அரசியற் தொடர்ச்சியையாவது பேண முற்படலாம். அதாவது விஞ்ஞானபூர்வமான, சமகாலத்தன்மையுடைய அரசியலொன்றைப் பகுத்தாய்ந்து முன்னெடுக்கும் விதமாக. 

காலம் எதிர்பார்த்து நிற்பது அதையே. அதையே DTNA செய்ய  வேண்டும். அல்லது, அதுவும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்தான் தள்ளப்படும். 

00

 

https://arangamnews.com/?p=10689

 

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 19

1 week 5 days ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 19
 
 
 
பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"].
 
டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].
 
அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் கி பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் மட்டுமே இன்று உள்ளன. கல்வெட்டுகளில் அசோக மன்னனின் மகன் திவாலா ['திவாரா'] மட்டுமே, அவரது தாய் ராணியுடன் பதியப் பட்டுள்ளது [Tivala [or Tivara ], the son of Ashoka and Karuvaki, is the only of Ashoka's sons to be mentioned by name in the inscriptions along with his mother, in the Queen Edict / S. N. Sen (1999). Ancient Indian History And Civilization. New Age International. p. 151.].
 
வட இந்தியா பாரம்பரியம் படி, அசோகனுக்கு குணாலா [Kunala ] என்ற மகன் இருந்து உள்ளார். மேலும் இது, திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") என்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட நூலில் குணாலா அவதானம் என்ற பகுதியில் குறிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது.
 
என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மஹிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் (Romila Thapar) பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
"Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1922-24 Vol.29" இல், பக்கம் 243 இல், துட்ட காமனி பற்றி குறிப்பிடுகையில், ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’ என்று கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
 
அதாவது பெரும்பாலான இலங்கை அரசர்களை போல, துட்ட காமனியும் கூடுதலாக பௌத்தனாக இருப்பதிலும் பார்க்க ஒரு இந்துவாகவே இருந்தார் என்பதை, ரிதி விகாரையை (வெள்ளிக் கோயிலை / රිදී විහාරය), அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினி, தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கின் [பிரதிஷ்டை செய்யும்] பொழுது, 500 புத்த பிக்குகளும், ஆனால் 1,500 வேதத்தில் தேர்ச்சி பெற்ற இந்து பிராமணர்களும் ஒன்று கூட அந்த நிகழ்வை நடத்தியதில் இருந்து புரிகிறது என்கிறது.
 
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலப்பதிகாரம். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு ஆட்சி மகாவம்சம் 35 ஆம் அத்தியாயத்தில் உள்ளது. மேலும் சிங்களவரும் தமிழரும் இரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. எனவே இவைகளைப்பற்றி ஒரு விரிவான பக்கச்சார்பு அற்ற ஆய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 20 தொடரும்
315709780_10222027682903909_5886347206494693031_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=W7qyw68LSo4Q7kNvgEbniIs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDJvzlmM_8_frCK-bes2lJu0ZN-dIYC21L87UErO0L8ug&oe=6638A05F 315665482_10222027682863908_6524643912050753869_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=I3hYS_KgoREQ7kNvgHzTIpf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDaoDHCifZMA1rYwQ7vi8Phui61NyQAm5_5T_VOihjrug&oe=6638BD32 315542428_10222027682663903_119581499600503497_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=w39vATpugkgQ7kNvgGFhVzG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAZ_xqJESWMZF4gMi4Q_au8SijNHcN2Sjj9oSkE8FXlTg&oe=6638BE9A 315874544_10222027683103914_8217672410561383169_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1E3NjG7ilTAQ7kNvgHIwiRt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAGk-a5e_dAirsrSA5SCRTzVgqH8lrbXwh8xkVlKMWcwg&oe=6638CC03 May be an image of text that says 'Wheel Publication No. 124/125 Buddhism in South India Pandit Hisselle Dhammaratana Mahathera' May be an image of text that says 'NCBA ANCIENT INDIAN HISTORY and CIVILIZATION Sailendra Nath Sen' 
 
 
 
 
 
 

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 18

1 week 5 days ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 18
 
 
 
அசோகனின் பாறை ஆணை-7 இல், எல்லா மதங்களும் எல்லா இடங்களிலும் வசிக்க வேண்டும் [King Piyadasi, desires that all religions should reside everywhere,] என்று அசோகன் கூறுகிறார். அதே போல அசோகனின் பாறை ஆணை-12 இல், 'சந்நியாசிகள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் இருவரையும், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் மதிக்கிறோம்' .. 'என் மதத்தை மகிமைப்படுத்த விடுங்கள் என்பது உண்மையில் அவரின் மதத்தையே தீங்கு விளைவிக்கும்' என்கிறது [King Piyadasi, honors both ascetics and the householders of all religions, ... "Let me glorify my own religion," only harms his own religion. ].
 
மீண்டும் அசோகனின் பாறை ஆணை-13 இல், தெற்கில் சோழ, பாண்டியர் என உறுதிப்படுத்தப் படுகிறது [ beyond there where the four kings named Ptolemy, Antigonos, Magas and Alexander rule, likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamraparni.]. மேலும் அந்த பாறையில், என்னால், இந்த தரும அல்லது அறநெறி கட்டளை எழுதப்பட்டது ஏன் என்றால், என் மகன்களோ இல்லை பேரன்களோ புதிய வெற்றிகளை போரிட்டு பெறக் கருதக்கூடாது என்பதாலாகும் என்கிறார் [I have had this Dhamma edict written so that my sons and great-grandsons may not consider making new conquests,].
 
ஆனால் எந்த பாறையிலும் தன் மகனை, மகளை புத்த மதம் பரப்ப அனுப்பியது எழுதப்படவில்லை? மற்றும் 'எல்லா மதமும் சம்மதம்' என்பதையும் எல்லாளன் - துட்டகாமினி தொடங்கி, இன்று வரை காணமுடியவில்லை ?
 
புத்தரின் முதலாவது வருகையில் அவர் கடும் மலையையும் புயலையும் தோற்றுவித்து, இயக்கர்களின் மனதில் பீதியையும் திகிலையும் உண்டாக்கி, அதன் மூலம் அவர்களை தன் வழிப்படுத்தி இலங்கையில் இருந்து அகற்றினார் என்னும் நடவடிக்கை ஒருக்காலும் புத்தர் செய்யமாட்டார்?
 
என்றாலும் இந்த யோசனையை மகாவம்சம் எழுதிய மகாநாம தேரர் [Mahānāma] கட்டாயம் இந்து வேதத்தில் இருந்து பெற்றிருப்பார் போல் தெரிகிறது. அங்கு "நான் இடிமுழக்கத்தையும் மின்னலையும் அனுப்பும் பொழுது தான் நீ என்னில் நம்பிக்கை வைப்பாய்" [“Yes, when I send thunder and lightning” says Indra “then you believe, in me.”] என இந்திரன் சொல்வதாக அறிகிறோம்.
 
அது மட்டும் அல்ல மகாவம்சத்தின் பல செய்திகள், காட்சிகள் சமஸ்கிரத இதிகாசங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவைகள் எல்லாம் புத்தரின் கொள்கைக்கும் அவரின் இயல்புக்கு ஒவ்வாதவையாகும்?
 
தீக நிகாயம் [Digha Nikāya], அறிவுரை 11 இல், கேவத்த [Kevaddha] என்ற ஒரு சாதாரண மனிதனின் கேள்வி ஒன்றிற்கு புத்தர் பதிலளிக்கும் பொழுது “ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்; தண்ணீர் மீது நடந்து செல்லலாம்; காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்; நிலவையும் கதிரவனையும் தொடலாம்; பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.” [Miracles of psychic power; multiplying ones body; passing through walls, mountains etc.; walking on water; flying through the air cross-legged; touching the sun and moon; and traveling as far as the Brahma Realms.]
 
என்றாலும் இதை பார்க்கும் ஒருவர், அதை, இந்த சம்பவத்தை, சந்தேகப் படுபவர்களிடமும், நம்பாதவர்களிடமும் முறையிட்டால், அவர்கள் இது ஒருவித மந்திர வசீகரமே காரணம் என்பார் [But if one were to see this kind of miracle and report it to someone skeptical and unbelieving they would think it was due to some kind of magic charm.],
 
ஆகவே புத்தர் திட்ட வட்டமாக "அதனால் தான். நான் அவைகளை விரும்பவில்லை, நிராகரிக்கிறேன், வெறுக்கிறேன்" என்று சொல்கிறார் [That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them].
 
உலகளாவிய அன்பு மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் [universal love and compassion for all living beings] என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் புத்தரின் போதனைகள் பொதுவாக உருவாக்கப் பட்டவையாகும்.
 
தீக நிகாயம், அறிவுரை 30 இல், ததாகதர் [துறவு நிலை அடைந்தவர்] என்பவர் எப்பவும் ஒரு கடுமையான பேச்சை நிராகரிப்பவர், அப்படியானவற்றில் இருந்து விலகுபவர், குற்றமற்ற பேச்சு பேசுபவர், காதுக்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும், ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றையும், இதயத்தை அடையக் கூடியவற்றையும், நாகரிகமானவற்றையும், மற்றும் மக்களின் கூட்டத்திற்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும் கவரக்கூடியவற்றையும் பேசுபவர் என்று வர்ணிக்கிறார் [“the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude”]
 
இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும். அதாவது, இலங்கையில், எங்கு நாகர்கள், இயக்கர்களை விட பெரும்பான்மையாக காணப்பட்டார்களோ, அங்கு தமிழ் மொழி மேம்பட்டது அல்லது நிலவியது எனலாம் [In Sri Lanka, wherever the Nagas were concentrated in larger numbers than the Yakkhas, the Tamil language prevailed].
 
ஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வரலாறு இலங்கையில் பெரிதாக தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
 
இலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது என்றே தோன்றுகிறது, உங்களுக்கு எப்படியோ ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 19 தொடரும்
314784311_10221991431717652_3635862385884407312_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EzeM-mcF-0YQ7kNvgF_ifIt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDmLzLm-k9qRuGqqqv4EARZQc_lkUKk_bFOHC8yhaNfnw&oe=66381244 315025988_10221991431997659_2536276205367447696_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xDEh5FC45sUQ7kNvgFhA1li&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDb0z4KTLIIS5BOwwuP7Pg3WncSUm146gZG08iB8F0WVA&oe=66381F26 315080630_10221991433357693_9141498049809145050_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6CtCKIBS6XMQ7kNvgFDiQD3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCnZoFQI8d72x0cE7K6ES09eLq4AAtMbEaSGoyp6wJZ2Q&oe=663829DC 314955617_10221991432557673_1235697582836129457_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=E1-0_E5amxMQ7kNvgEs8jZr&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDq29UaSlQnTTxAeQWfeStYj-wCDC4vqsi6_TXZR2Z8dg&oe=66380E9C 314971120_10221991432797679_5280919523106509395_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BAlf7N9h8A0Q7kNvgGP9PKK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAWSJ98gdp6I_oDJS2z21_WPul2Pu9684vOqaw0c01u0g&oe=663824B4
 
 

"சாணக்கியரின் நேர்மை!" [ஊழல் செய்யும் அரசியல் அதிகரிகளுக்கும் ,மந்திரிகளுக்கும்]

1 week 5 days ago
"சாணக்கியரின் நேர்மை!" [ஊழல் செய்யும் அரசியல் அதிகரிகளுக்கும் , மந்திரிகளுக்கும்]
 
 
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.
 
ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்'' என்றார்.
 
"தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன்'' என்றார் அரசர்.
 
அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.
சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.
 
குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
 
சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், "ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும் போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?'' என்றான்.
 
அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? அப்படிப் பயன்படுத்தினால் மன்னர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார் சாணக்கியர்.
 
திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். "எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்'' என்று சத்தியம் செய்தார்கள்.
 
"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
(குறள் 171)
 
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.
 
சாணக்கியரின் செயலைக் கவனித்தீர்களா?
 
பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சாணக்கியர் ஒரு நல்ல உதாரணம்.
 
மேலும் பொது மக்களுக்கு சேரவேண்டியதை ஊழல் செய்யும் அரசியல் அதிகரிகளுக்கும் ,மந்திரிகளுக்கும் இது சமர்பணம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
No photo description available. 
 
 
 
 
 
 

2024 நாடாளுமன்றத் தேர்தல் “வீதிகளில் பார்க்கும் ஜனநாயகம்” : டி.அருள் எழிலன்

1 week 6 days ago

2024 நாடாளுமன்றத் தேர்தல் “வீதிகளில் பார்க்கும் ஜனநாயகம்” : டி.அருள் எழிலன்
modi.jpg

மொத்த இந்தியாவையும் காவி மயமாக்கி வரும் மோடி நாட்டின் தலைநகரான டெல்லியின் அடையாளங்களையும் மாற்றி வருகிறார். டெல்லி மக்களவை வளாகத்தில் ஒரு காந்தி சிலை இருக்கிறது. நியாயமாக இந்தப் பத்தாண்டுகளில் மோடி அந்தச் சிலையைக் கடாசி விட்டு அதில் சாவர்க்கர் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியமாக அதைச் செய்யவில்லை. காந்தி சிலையை விட்டு வைத்திருந்தார்.

ஏன் தெரியுமா?

பிரதமர் மோடியின் இந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் மொத்த எதிர்க்கட்சிகளும் இந்த காந்தி சிலையின் கீழ்தான் போராடிக் கொண்டிருந்தனர்.  எங்கே இந்த காந்தி சிலையை அகற்றி விட்டால் இவர்கள் மக்களிடம் சென்று போராடத் தொடங்கி விடுவார்கள் என்று மோடி அதை அகற்றாமல் விட்டார். இது வேடிக்கையாக நான் முன்பே எழுதியதுதான் என்றாலும் இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பிரதான காரணம் இதுவே.

மோடி வீழ்த்தவே முடியாத தலைவர், பாஜக வெல்லவே முடியாத கட்சி என்ற கதையை வளர விட்டதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு. மிக எளிதாக வீழ்த்த முடிகிற ஒருவரை வளர விட்டு அது இன்று  குடியரசு விழுமியங்களுக்கே உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்து அனைத்தையும் அழிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. இதற்கிடையில் தேர்தல் போன்ற பாவனையில் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

”தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப்பாதை” இது  தேர்தல் அமைப்பை நிராகரிக்கக் கூடிய மாவோயிஸக் குழுக்களின் தேர்தல் பற்றிய பார்வையாக இருந்தது. மொத்தமாக இந்தத் தேர்தல் அமைப்பில் பங்கேற்கும் அனைவரையுமே திருடர்கள் எனச் சுட்டிய தீவிர கம்யூனிஸ்டுகளே இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

 electora-bonds-300x169.png

காரணம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் ஜனநாயகமும் இந்திய அரசியலைமைப்பும் இருக்குமா என்ற அச்சம்தான். முதலாளித்துவத் தேர்தல் அமைப்பில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கவேனும் நாம் இருக்க வேண்டுமே என்ற பதற்றம்தான் காரணம். அந்த அளவுக்கு அச்சம் நிறைந்த தேர்தலாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது.

இந்தியத் தேர்தல் கமிஷன் தரவுகள்படி இந்தியாவில் ஆறு தேசியக் கட்சிகளும் 57 மாநிலக் கட்சிகளும் 2 ஆயிரத்து 597 அங்கீகரிக்கப்படாத சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன. ஏதோ ஒருவகையில் கோடிக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சிகளின் அடையாளம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இருக்குமா என்பதே கேள்விக்குறிதான்.

இந்தியாவில் உள்ளூராட்சித்  தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை எல்லாத் தேர்தல்களுமே திருவிழாதான். மதப்பண்டிகை போலவே மக்களும் வாக்களிப்பதை ஒரு தெய்விகக் கடமையாகவே கருதிச் செய்கிறார்கள். ஆனால் ஒரு வாக்குச் சீட்டை இயந்திரத்தின் வழியே செலுத்துவதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதங்கள் அதை மிக மோசமான மோசடியான தேர்தல் என்பதையே உணர்த்துகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தேசியக் கட்சியாகக் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. இன்னொரு தேசியக் கட்சியாக இருந்த இடதுசாரிகள் கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஜனதாக் கட்சி உட்பட வேறு சில கட்சிகள் தேசிய அளவில் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சவால் கொடுக்கும் சக்திகளாக இல்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. சொல்லப் போனால் ஒரு தேசியக் கட்சிக்கு முதன் முதலாக விடை கொடுத்தது தமிழ்நாடுதான். கேரளத்தில் இடதுசாரிகளின் வெற்றி இரண்டு தேசியக் கட்சிகளின் ஆதிக்கங்களுக்கு வழி வகுத்தது. தமிழ்நாட்டில் முழுமையாக தேசியக் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு மாநிலக் கட்சிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன.

மோடி ஒரு பிராண்டாக மாறியது எப்படி?

2014-ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு வளர்ச்சி என்பதை முன் வைத்து குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்தவர் மோடி. ஆர்.எஸ்.எஸ் அவரைப் பிரதமர் வேட்பாளராக டெல்லிக்கு அனுப்பி அதற்குரிய வேலைகளையும் செய்தது. இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே  ஒரே ஒரு முகம்தான். ஆனால் பாஜகவுக்கும் ஒரு முகம்தான். அது மோடியாக முன் வைக்கப்பட்டது, ஆனால் அது ஆர்.எஸ்.எஸ் என்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்பின் ஒரு வெகுசனத் தேர்தல் அமைப்பு என்பதை  ஏனோ யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்றிருந்த அதிருப்திகளை மோடி பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது முறையும் வென்று பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தப் பத்தாண்டுகளில்  கீழ் மட்டம் முதல் ஆர்.எஸ். எஸ் என்ற சிந்தாந்த அமைப்பையும், பாஜக என்ற அரசியல் கட்சியையும் இந்திய அரசு என்ற நிறுவனத்துடன் ஆழமாகப் பிணைத்து விட்டார்.

இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கட்டமைப்பாக மக்களவை, நீதித்துறை, தேர்தல் ஜனநாயகம்,  ஊடகங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிடுகிறோம் அல்லது நம்பிக்கொண்டிருக்கிறோம். மோடி முதன் முதலாகக் கையில் எடுத்தது இந்த அமைப்புகளை அல்ல. அவர் முதன் முதலில் ராணுவத்தை ஒற்றைத் தலைமையின் கீழ்க் கொண்டு வந்தார். மோடியின் விசுவாசிகளே ராணுவத் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. பின்னர் தேர்தல் அமைப்பின் மாற்றம், நீதித்துறையில் மாற்றம் என ஒவ்வொன்றாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். விசாரணை அமைப்புகள் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் பலவீனமானவை எனக் காட்டின. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது பாஜகவுக்கென இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டமைப்பு இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களிலும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் பாஜக இல்லை அவர்கள் குஜராத்திலும், உத்தரபிரதேசத்திலும் மட்டுமே இருந்தனர்.

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றத் துவங்கி விஸ்தரித்துக்கொண்டனர். இப்போது பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி செய்கிறது. இந்திய வாக்காளர்களில் வெறும் 30 சத வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் பாஜக எப்படி இத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்கிறது?

நமக்கு மரபார்ந்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அதிலொன்று இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதுதான். என்னதான் இருந்தாலும் பாஜக இப்படி எல்லாம் செய்யாது என நம்பினோம். இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் பாஜக எதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என நினைத்தோமோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள். ராமர்கோவில், காஷ்மீர் 370 சிறப்புச் சட்டம் ரத்து, இன்னும் எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டும்தான். அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மிக முக்கியமானது.

அதை எல்லாம் மனத்தில் வைத்துத்தான் 400 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். உண்மையில் 400 தொகுதிகளில் வென்றால் அவர்கள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிய மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை மாற்றுவார்கள். மற்றவை எல்லாம் மிக எளிதாகச் செய்யக் கூடிய வேலைகள்.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான சட்டத்திருத்தங்களை பாஜக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. சீர்படுத்தும் அமைப்புகளையும் விசாரணை அமைப்புகளாக மாற்றியது. அமலாக்கத்துறை, ஐ.டி. தேர்தல் பத்திர நன்கொடை எனச் சத்தமில்லாமல் நடந்த சட்டத்திருத்தங்களின் விளைவை இன்று இந்தியா அனுபவிக்கிறது.

தேர்தல் பத்திரங்களின் மூலம் பத்தாயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது பாஜக, தேர்தல் கமிஷனரை நியமிக்கும் உரிமையை பாஜக தனக்கேயான தனியுரிமையாக்கியுள்ளது. குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாவிட்டாலும் கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்கத்துறையும், போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறையும் கொண்டுள்ளது. குற்றப்பத்திரிகையை 90 நாள்களுக்குள் செய்யாவிட்டாலும் ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறை வைக்கும் அளவுக்குக் கொடூரமான அமைப்புகளாக இவை மாற்றப்பட்டு விட்டன. அதிகாரம் பொருந்திய உச்சநீதிமன்றத்தையே பலவீனமாக்கி இந்த அமைப்புகளை பாஜகவின் காவல்நிலையங்களாக மாற்றி விட்டார் மோடி

.electoral-300x180.png

ஒரே மாத இடைவெளிக்குள் இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாடு முழுக்க எழுத்தாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், சமுகச் செயற்பாட்டாளர்களும் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. “இந்திய மக்களில் 20 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் எங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 ரூபாயைக் கூட எங்களால் எடுக்க முடியவில்லை. தேர்தல் விளம்பரங்களுக்குள், மாநிலத் தலைவர்களுக்கு பிளைட் டிக்கெட் போடக்கூடக் காசில்லாமல் இருக்கிறோம். இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய்” எனக் கொதித்துப் போய் காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள்.  அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஒரு கட்சியின் நிலையே மோடியின் இந்தியாவில் இதுதான்.உண்மையில் மோடியை மிக எளிதாக வீழ்த்தியிருக்க முடியும் எதிர்க்கட்சிகளின் போராட்டமின்மை, பத்தாண்டுகளில் இந்தச் சட்டத்திருத்தங்களின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ளாமை. ஒருங்கிணைப்பின்மை, நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்காமை என வாய்ப்பை நழுவ விட்டு விட்டு இப்போது வாசல் வரை வந்து விட்ட டாங்கிகளுக்கு நடுவில் அன்பின் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மிசாவைவிட மோசமான காலம் இது.

மோடி ஆட்சியின் கீழ் இன்றைய இந்தியாவைப் பலரும் மிசாக் காலத்துடன் ஒப்பிடுகிறார்கள். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மிசா (MISA) சட்டத்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்தார். 1976-ஆம் ஆண்டு நாடு முழுக்க அதை அமல்படுத்தினார். அப்போதைய எதிர்க்கட்சியினர் லாலு, கலைஞர் கருணாநிதி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்குள் மிசாவின் கொடுமைகளை இந்திய மக்கள் குறிப்பாக வட இந்திய மக்கள் உணர்ந்து இந்திராகாந்தியை வீட்டுக்கு அனுப்பினார்கள். 1978-ஆம் ஆண்டு 9-ஆவது அட்டவணையில் இருந்து இச்சட்டமே நீக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அதிகாரக் குவிப்பு நோக்கங்களுக்கு அப்பால் மிசாவுக்கு வேறு நோக்கங்கள் இல்லை,மேலும் மிசா மதத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் மிசாக் காலக் கொடுமைகளைக் கடந்து வரவும் முடிந்தது, இந்திரா காந்தியை மிசாவுக்காகத் தண்டிக்கவும் முடிந்தது. அன்று ஒரே ஒரு மிசா சட்டம் இருந்தது. இன்று ஏராளமான மிசா சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இந்து மதத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஒவ்வோர் அமைப்பும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் அமைப்பாக உருவாகி நிற்கிறது. இந்தப் பத்தே ஆண்டுகளில் பல தேசியக் கட்சிகள் பாஜகவில் கரைந்துவிட்டன. அல்லது பாஜகவின் நிழலில் வாழும் கட்சிகளாக மாறிவிட்டன. அன்று மிசாவுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது இன்று நீதித்துறையின் அணுகுமுறை நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்து விட்டது. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதி முக்கியமான வழக்குகளில்கூட நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஆதரவான போக்கையே கொண்டிருந்தது. தேர்தல் கமிஷனரை நியமிக்கும் அதிகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விலக்கி வைக்கும் நடைமுறையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் அதன் பாதகத்தை அனுபவிப்பது அரசியல் கட்சிகள். இதை எல்லாம் பேசுவதற்கான ஒரே ஓர் அமைப்போ தீர்ப்பாயங்களோ இன்றைய இந்தியாவில் இல்லை.

தேர்தல் களம்

மிகவும் நெருக்கடியோடும் சிக்கல்களோடும் அதிகார நெருக்கடிகளோடும் நடைபெறும் இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு அல்லது பாஜகவின் சாதனை என்ற வார்த்தையே களத்தில் இல்லை. மோடி அரசு என்றுதான் ஒன்றிய அரசு நிறுவனங்களே விளம்பரங்கள் கொடுக்கின்றன. புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றுதான் அவர்கள் புதிய கோஷத்தை வைக்கிறார்கள். 400 தொகுதிகளை இலக்கு வைத்துள்ள பாஜகவின் எண்ணங்களுக்கு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் மூலம் வடிவம் கொடுத்தன.

இந்தியா கூட்டணியைப் பலவீனமாக்கிக் காட்டும் ஊடகங்களின் சித்திரங்களுக்கு அப்பால் இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக  உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின், ஆம் ஆத்மி,காங்கிரஸ், சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ் என இந்தியாவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் முதன் முதலாக இணைந்து எதிர்கொள்ளும் தேர்தலாக இது  உள்ளது.

eps-300x180.jpg

துவக்கத்தில் புதிய நாடாமன்றக் கட்டடத் திறப்பும்,  ராமர்கோவில் திறப்பும் தமக்கு 400 தொகுதிகளை வென்று கொடுக்கும் என நினைத்த மோடி பாஜகவுக்குக் கூட்டணி தேவை இல்லை என்றே கருதினார். நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை  ஒரு புதிய குடியரசின் உருவாக்கம் போல மோடி காட்ட முயன்றார். மோடியின் எல்லா நிகழ்வுகளும் சடங்குகளும் இந்திய மக்களை நம்பவைக்கும் முயற்சி அல்ல, அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. கடந்த பத்தாண்டுகளில் அவர்  தரித்த  பேரரசன் வேடம், முனிவர் வேடம், தலைமை பீடாதிபதி வேடம், ராமரை அர்ப்பணிக்கும் அர்ச்சகர் வேடம்  என அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. இந்து தேசியவாதத்தின் அடையாளப் பிம்பம். ஆனால் துரதிருஷ்டமாக இதை அனைத்து இந்துக்களும் பெரும்பான்மை இந்துக்களும் நம்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. மோடியின் அரசியல் நாடகங்களில் இதுவும் ஒன்று என்பதாகவே வட இந்திய மக்களே போதுமான ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. அதன் பின்னர்தான் பாஜக வெற்றி பெற வலிமையான கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்தது. ஆனால் அதற்கு மேற்குவங்கத்தை தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தனது  கூட்டணியை இறுதி செய்து விட்டது.

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாஜகவால் இன்றுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. அதைவிட முக்கியமானது மோடியின் என்.டி.ஏ கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மோடியின் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் சிபி ஐயும் பெரிய கட்சிகளை உடைத்து மோடியிடம் ஒப்படைத்த கட்சிகள். தலைமைக்குத் துரோகம் இழைத்துத் தன்னோடு வந்தவர்களுக்குரிய நியாயத்தைக்கூட பாஜக செய்யவில்லை. மகாராஷ்டிராவில் ஷிண்டேவையும், அஜித் பவாரையும், பிகாரில் பராஸ் பாஸ்வானையும், நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தவர்களையும் நட்டாற்றில் விட்டிருக்கிறது பாஜக. இந்தியா முழுக்க பிராந்திய வாரியாகச் செல்வாக்குப் பெற்ற இந்தக் கட்சிகளின் வாக்குவங்கியைத் தன்னுடையதாக மாற்றி வெல்வதே பாஜகவின் வெற்றிச் சூத்திரம்,

எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையை இழந்தது ஏன்?

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்தான் கடந்த 55 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன. 1967-ஆம் ஆண்டு தேசியக் கட்சிகளுக்கு விடை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவை உருவாக்கினார். அதிமுகவுக்கென்று சிந்தாந்தப் பின்புலங்கள் எதுவும் இல்லை.  பிம்ப அரசியல் வழியே நகர்ந்து வந்த அதிமுக 80 –களில் சில சாதியினரின் நலன்களுக்காகவும், 2000 மில்லேனியம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு நலன் என்ற அடிப்படையிலும் செயல்பட்டது. ஆனால்  அதிமுகவின் இருப்பே திமுக எதிர்ப்பு, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் உருவானதுதான். அதன் பிம்ப அரசியல் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டதாகவே தெரிகிறது.

அதிமுக என்ற கட்டமைப்பின் 90 சதம் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டமைப்பு எத்தகையது என்பதும்  முந்தைய தலைவர்களுக்கு இருந்த கவர்ச்சிகரமான அம்சங்கள் எதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாமல் இருப்பதும் அவரது பலவீனம். ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் துரதிருஷ்டமாகத் துரோகத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியை இன்று   தமிழ்நாட்டு மக்களோ அதிமுக தொண்டர்களோகூட நம்பவில்லை.

ஜெயலலிதாவிடம் இருந்து இரவோடு இரவாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த சசிகலாவைத் தடுத்து பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். பின்னர் பன்னீர் சசிகலாவுக்குத் துரோகம் செய்தார். அவரைச் சிறைக்கு அனுப்பும் உத்தரவு  வந்தபோது நம்பிக்கைக்குரிய  விசுவாசி என நம்பிப்  பழனிசாமியிடம் ஆட்சியை  ஒப்படைத்துவிட்டு  ஊழல் வழக்கில் சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்குத் துரோகம்  செய்தார். ஆனால் இது அனைத்தின் பின்னாலும் பாஜக இருந்தது. இதை முடித்துக் கொடுத்தவர் அப்போதைய பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆளுநர் வித்யாசாகர் ராவும்.

எடப்பாடி பழனிசாமி மோடியின் தயவில் ஆட்சியில் இருந்து பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் பாஜக கூட்டணியைத் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் அண்ணாமலையின் நடவடிக்கைகளில் அதிருப்தியாகி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிமுக சொல்கிறது.

ஆனால், அரசியல் தளத்தில் அதிமுகவோ எடப்பாடி பழனிசாமியோ பாஜகவை எதிர்ப்பதில்லை. பாஜக கொண்டு வந்த காஷ்மீர் 370 ரத்து, குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் சட்டங்கள் என எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுத்த அதிமுக தனிநபர்களை எதிர்ப்பதை பாஜக எதிர்ப்பாகக் காட்ட முயல்கிறது.ஒன்றிய  பாஜக அரசு திமுகவுக்கு எதிராகக் கட்டமைக்கும் கதைகளையே அதிமுகவும் பேசுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பேசும் எது ஒன்று குறித்தும் அதிமுக பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இரண்டாம் இடம் யாருக்கு என்பதற்காகவே பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக  டம்மி வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. வென்றே ஆகவேண்டும் என்ற வேட்கை அதிமுகவுக்கு இருந்திருந்தால் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் ஆனால் பாஜக இரண்டாம் இடம் வரட்டும் என்பதற்காகப் பலவீனமான வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது.

திமுக கூட்டணி முன்பே உருவான கூட்டணி இந்துத்துவ எதிர்ப்பையும் பாஜக எதிர்ப்பையும் திவீரமாக அரசியல் களத்தில் வைக்கும் கட்சிகள் எனவே திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் பேசவே இல்லை,. அவர்களுக்கிருந்த இரண்டு வாய்ப்பு ஒன்று பாஜக அல்லது அதிமுக இதில் பாமகவைக்கூடத் தன் பக்கம் தக்கவைத்துக்கொள்வதில் அதிமுக ஆர்வம் காட்டவில்லை.

rahul-gandhi-300x200.jpg

நாடாளுமன்றத் தேர்தலை முக்கியமான ஒன்றாகவே அதிமுக கருதவில்லை. காரணம்  டெல்லி செல்லும் எம்.பிக்கள் அவர்கள் வாக்களிக்கும் முறைகளால் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து கொள்வதும், கட்டமைப்பில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்ளவும், அதனால் பாஜகவுக்கு மறைமுகமாக உதவி புரிவதுமே அதிமுக எடப்பாடி பழனிசாமியின் நோக்கம்.

இதனால்தான் பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார் என்பதை எவரும் நம்பவில்லை. அந்த நம்பிக்கை உருவாகும் விதமான அரசியலும் இனி அதிமுகவில் சாத்தியமில்லை.

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகம் ஜீவித்திருக்குமா என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் மோடியும் பாஜகவும் மிகப்பெரிய அளவு அச்சம் அடைந்திருக்கிறார்கள்.அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தொலைக்காட்சிகள் மட்டுமே கருத்துக்கணிப்புகள் மூலம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கின்றன.  நிச்சயம் மோடியால் பெரும்பான்மையைப் பெற முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தியா கூட்டணிக் கட்சிகள் புயல் போல இந்தி மண்டலங்களில் தேர்தலை ஒரு போர் போல நடத்தினால் மோடி எளிதில் வீழ்த்தப்படுவார். கைதுகள், வங்கிக்கணக்குகள் முடக்கம் இதை எல்லாம் கடந்து மக்களை நம்பி வீதிக்கு வந்தால் வெற்றி நிச்சயம். இதுவே வரலாறு உணர்த்தும் உண்மை. ஏனெனில் எப்போதும் இந்தியாவில் ஜனநாயகத்தை நாம் வீதிகளில் பார்க்க முடியும் அதிகார பீடங்களில்  அல்ல.

 

https://uyirmmai.com/article/uyirmmai-april-2024-arul-ezhilan-article-06/

 

40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம்

1 week 6 days ago

40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம்

லக்ஸ்மன்

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று  மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39,000 சனத்தொகையையும் 29 கிராம சேவகர்  பிரிவுகளையும் 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகம்.

இந்நிர்வாக அலகானது 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 திகதிய, 93/600/034(1) இலக்க 93.03.31 திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 93.07.09ஆம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது.

அதனடிப்படையில், தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

தற்போது கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

அந்தவகையில்தான்  கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப் பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல.  

2002இல் உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006இல் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க முடியுமாயின், 34 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்தும் வெளிவருகிறது. 

உண்ணா விரதங்களையும், போராட்டங்களையும் நடத்தியதுடன், பல்வேறு நிருவாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும், இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தினார்.

கோட்டபாய அரசாங்கத்தில் அவரினால் கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்திக் கொடுக்க முடியவில்லை. 2019இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபொழுது ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு தரம் உயரும் என்று முழக்கமிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ போய்  இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கிறார். வியாழேந்திரன் அமைச்சராக இப்போதும் இருக்கிறார்.

அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்து அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து பிரதி அமைச்சரான கருணா எனும் வி.முரளிதரன் கல்முனை விடயத்தில் பல உறுதிப்பாடுகளைக் கூறியிருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை.

கடந்த தேர்தலில் கல்முனை தமிழ்ப் பிரிவினைத் தரமுயர்த்துவேன் என்ற தேர்தல் அறைகூவலுடனேயே போட்டியிட்டார். அவரது இந்த உறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்பாறைக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவமே இல்லாமல் போனது.

கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான துருப்புச் சீட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர் அரசியலில் அரசுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதான் வரலாறு. இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர் ஆளும் கட்சியென்று மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்குத் தமிழ்த் தேசியத் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு நில அளவை செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.  கிராமங்களின் வீதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம் தற்போது இஸ்லாமாபாத் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன. நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக இப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடி நடைபெறுவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது

மிகக் குறைவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகப் பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்ற போதும், 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகவே இருந்துவருகிறது. இது.  அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கவலைக்குள்ளாகும் செயலாகும்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993 முதல் இற்றை வரை உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதி வளம் அற்றதாக இயங்கும் இந்த பிரதேச செயலகத்திற்குக் கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் தமிழர் அரசியலில் சாத்தியங்கள் கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை நாட்டில் ஏற்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்டர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக் குழப்பம் உள்ளிட்ட பல அதனைக் குழப்பியடித்தது.

ஏற்கெனவே 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர் பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்று.

கல்முனை தமிழ்ப் பிரிவு 34 வருடங்களைத் தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். காலத்தையும் கடத்துகிறார்கள். மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தினைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை. அந்தவகையில்,   கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவே அமைந்திருக்கிறது. இன விரோதம் வலுத்தேவிட்டது.

அதன் தொடர்ச்சியாகத்தான் கல்முனையில் உருவாகியிருக்கின்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டுத் தடுக்கப்படுவது கவலையானதே. இவ்வாறான சம்பவங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும். 

அடிக்கடி ஒரு பொரி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர் தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதும்தான் தமிழ் மக்களின் நிலைப்பாடு. ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று   பொது வெளியில் பேசிக்கொண்டு உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே அனைவருடையதும் கனவு நிலைப்பாடாகும்.

இலங்கையில் இனப் பிரச்சினை உருவான வேளை, சிறுபான்மை, தமிழ் என்றிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் காலப்போக்கில் பிரிந்து இரு துருவங்களானார்கள். அதன் பின்னர் தமிழ் பேசும் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள். முயற்சி செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/40-வருடங்களாக-உரிமை-மறுக்கப்படும்-பிரதேச-செயலகம்/91-336332

Checked
Tue, 05/14/2024 - 08:23
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed