எங்கள் மண்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!

9 hours 33 minutes ago

--->வல்வை குமரன்(தேவரண்ணா...)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உலகின் பல நாடுகளாலும் பேசப்படுகின்ற ஒரு அமைப்பாக விளங்குகின்றது. தரைப்படை,கடற்படை,விமானப்படை என முப்படைகளையும் வைத்திருந்து பல்வேறு கட்டுமானங்களோடு தமிழீழ மண்ணில் ஆட்சி செலுத்த முடிந்ததென் றால் இந்த இயக்கம் கட்டி எழுப்பப்பட்ட வரலாற்றை நாம் அறிய வேண்டும்.

தேசியத்தலைவர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மாபெரும் அமைப்பாக மாற்றினார் என்றால் அதற்கு அத்திவாரக் கற்களாக, அத்திவாரமாக ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர்கள் தமிழக உறவுகள் தான் என்பதை நாம் என்றுமே மறந்துவிட முடியாது.

1982 காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப் பட்டவருமான பேபி அண்ணா தமிழகத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி ஐயா.பழ.நெடுமாறன் அவர்களது காமராசர் காங்கிரசு,திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட்ட அனைத்து அமைப்பினர்களுடனும் தொடர்பு கொண்டு தேசியத்தலைவர் அவர்கள் பற்றியும்,அவரால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும்,தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் எடுத்துக் கூறி எமக்கான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக தமிழக மக்கள் மத்தியிலும் அந்தப் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் திராவிடர் கழகத்தில் அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களின் ஒத்துழைப்போடு 'தமிழீழ விடுதலைப் புலிகள் தோழமைக் கழகம்' என்றோர் அமைப்பை 1984 காலகட்டத்தில் உருவாக்கினார்.

1983 இன் ஆடிக் கலரத்தினைத் தொடர்ந்து சிங்களவர்கள் இலங்கையில் நடத்திய படுகொலைகளைக் கண்டு வேதனையுற்ற இந்திரா காந்தி அம்மையாரின் அரசு சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமன்றி, இலங்கையில் அப்போது செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்க முன்வந்தது.அதன்படி 1983 நவம்பர் மாதம் முதல் டிசம்பர் கடைசிவரை இந்திய அரசின் பயிற்சி முகாம்கள் வட இந்தியா வில் நடைபெற்றன.அங்கு இரண்டு முகாம்களிலும் சில நூறு எண்ணிக்கையிலான புலிகளுக்கே பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தன. அத்தோடு தேசியத்தலைவர் அவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. தமிழ்நாட்டிலும் பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,ஆயிரக் கணக்கான வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என விரும்பினார். அந்த விருப்பம் மணி அண்ணாவின் (கொளத்தூர் மணி)ஒத்துழைப்போடு நிறைவேறியது.

பின் நாட்களில் தேசியத் தலைவர் அவர்களால் 'புலிகளின் மூத்த போராளி' என அழைக்கப்பட்ட மணி அண்ணாவின் மேட்டூர் கொளத்தூர் பாப்பாரம்பட்டியில் உள்ள மணி அண்ணாவின் இடம் அன்று போராளியாக இருந்த ராகவன் மற்றும் கோபி என்பவர்கள் சென்று பார்த்து ராகவனால் போராட்ட பயிற்சி முகாம் நடத்துவதற்கு பொருத்தமான இடம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு மணி அண்ணாவின் பூரண சம்மதத்துடன் அங்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.

அப்பையா அண்ணர் அவர்களே மூன்றாவது பயிற்சி முகாமுக்கான (முதல் இரண்டும் வட இந்தியாவில் நடைபெற்றிருந்தன) போராளிகளை அழைத்துச் சென்றிருந்தார்.அங்கு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் அது.3,6,10 ஆகிய மூன்று பயிற்சி முகாம்கள் அங்கு நடத்தப்பட்டன.

3 ஆவது பயிற்சி முகாம்,1984 ஜனவரி 5ஆம் நாள் ஆரம்பமானது.ஒவ்வொரு முகாமிலும் பயிற்சிகள் இடம்பெறும் போது தேசியத்தலைவர்  அவர்கள் அங்கு சென்று வருவார். அந்தக் காலப்பகுதிகளில் தலைவருக்கும் மணி அண்ணாவுக்குமான உறவு நெருக்கமாக வளர்ந்தது.

அங்கு நடைபெற்ற  3 பயிற்சி முகாம்களும் பொன்னம்மானின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன. 3ஆவது பயிற்சி முகாமினை புலேந்தி அம்மான் பொறுப்பேற்று நடத்தினார். அவருக்கு உதவியாக நம்மாள் என்பவரும் பணியாற்றினார்.

3ஆவது பயிற்சி முகாம் நடாத்தப்பட்ட காலகட்டத்தில் இயக்கத்திடம் பெருமளவில் நிதி வசதி இருக்கவில்லை.அந்த நேரங்களில் மணி அண்ணாவின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது.உள்ளூர் மக்களிடமும்,கட்சிப் பிரமுகர்களிடமும் நிதி பெற்று வழங்கினார்.அந்தக் காலகட்டத்தில் மணி அண்ணாவின் குடும்பத்திற்கு என சாராயக் கடைகள்,கள்ளுத் தவறணைகள் என்பன இருந்தன.அந்த வருவாய்களும் போராளிகளின் செலவுகளை ஈடு செய்தன.அது மட்டுமன்றி தனது நண்பர்களிடமும் சென்று ஒவ்வொருவரிடமும் மூன்று மூடை நெல், 1 கிடாய் ஆடு என்ற விதமாகவும் பெற்று வருவார்.அவ்வாறு சேகரிக்கப்பட்ட நெல் மூடைகளும், கிடாய் ஆடுகளும் போராளிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது. அது மாத்திரமன்றி வாணியம்பாடி, பெங்களூர்,சேலம்,திருப்பூர் போன்ற இடங்களிலும் பலரையும் தொடர்பு கொண்டு நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுத்தார்.வாணியம்பாடியில் அண்ணா தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் 1லட்சம் ரூபா நிதி திரட்டி வழங்கினார்கள். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஐயா 2லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தார். கரூரில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பழ.ராமசாமி அவர்கள் முகாமின் பாவனைக்கென ஜீப் வண்டி ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தார்.அது மட்டுமன்றி முகாமில் ஆழ்குழாய்க் கிணற்று வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ஈரோடு திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் தேசியத்தலைவர் மீது மிகுந்த பற்றும்,மரியாதையும் கொண்டவர்.பயிற்சி முகாம் காலத்தில் 6 ஆவது முகாம் நடைபெற்றபோது அரிசி மூடைகளும்,வாரத்திற்கு 1000 முட்டைகள் வீதமும் வழங்கி உதவியவர்.

அது மட்டுமன்றி நமது போராளிகள் காயப்பட்டு வந்த வேளைகளில் ஈரோட்டில் அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவர்களைப் பராமரித்தவர்.குறிப்பாக சீலன்,புலேந்தி, ரகுவப்பா காயப்பட்டு வந்திருந்த வேளையில் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளையும் செய்து தந்தவர்.

6ஆவது பயிற்சி முகாம் பொன்னம்மானின் மேற்பார்வையில் லூக்காஸ் அம்மான்,மேனன் ஆகியோர் பொறுப்பில் நடைபெற்றன.அந்தப் பயிற்சி முகாமின் போது போராளிகளுக்கு சின்னம்மை(பொக்குளிப்பான்) நோய் வந்து போராளிகள் மிகவும் துன்பப்பட்டார்கள்.அந்த நேரம் வண்டிமாடு கட்டிச்சென்று வேப்பிலைகளை பெருமளவில் கொண்டு வந்து முகாம்களில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடில்களில் அவற்றைப் பரப்பி வைத்து அவற்றின் மேல் அவர்களைப் படுக்க வைத்து பராமரித்து பழ வகைகளை வாங்கி வந்து அவர்களுக்கு வழங்கி அவர்களுக்கான அனைத்துப் பணிவிடைகளையும் செய்தவர் மணி அண்ணா.

4ஆவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற ஒரு போராளிக்கு சின்னம்மை வந்து மாறியிருந்தது.6ஆவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக்கொண்ட தனது தம்பியைப் பார்ப்பதற்காக அவர் அங்கு வந்திருந்தார்.அவர் மூலமே அந்த நோய் அங்கு பரவியிருக்கலாம் என மணி அண்ணா தெரிவித்தார். ஆரம்பத்தில் 5 பேரில் தொடங்கி 50 பேர் வரை அது பரவியிருந்தது.மணி அண்ணாவின் பெரு முயற்சியினா லேயே அது மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருந்தது.

கொளத்தூரில் நடைபெற்ற மூன்று முகாம்களின் போதும் மணி அண்ணாவின் பங்களிப்பு தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டும்படி யாக அமைந்திருந்தது.பயிற்சிப் பாசறைகளின் பணிகளோடு மட்டும் மணிஅண்ணா நின்றுவிடவில்லை.

1986 ஆம் ஆண்டு ஏழாம் நாள் டெல்லியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் ஒன்றிற்கு கலந்து கொள்ளச் சென்றிருந்த மணி அண்ணா தன்னோடு பள்ளியில் பயின்றவரும்,பெரியாரிய பற்றாளரும்,விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அந்த நண்பர் இந்திய இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர்.அவர் படைத்துறை அறிவியல் சார்ந்த கிட்டத்தட்ட 50 அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவை புலிப்படைக்குப் பயன்படட்டும் என்று கூறி மணி அண்ணாவிடம் கையளித்துள்ளார்.சென்னை திரும்பிய மணி அண்ணா அவற்றை தேசியத் தலைவர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றைப் பார்த்ததும் தேசியத்தலைவர் அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தலைவர் அவர்கள் மணி அண்ணாவிடம் மீண்டும் புதுடில்லி சென்று வருமாறு கேட்டுள்ளார்.

இரண்டு லட்சம் ரூபாய்களை மணி அண்ணாவிடம் கொடுத்து அப்போது விடுதலைப் புலிகளின் படைத்துறைத் செயலகத்தில்( MO) பணியாற்றி வந்த ஜான் மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறி அதற்கான ஏற்பாட்டையும் செய்தார் தலைவர்.முன்பு மணி அண்ணா கொண்டுவந்த நூல்களின் தொகுதியில் ஒரு புத்தகத்தின் இரண்டாம் பாகம் இருந்துள்ளது.முதலாம் பாகத்தையும் எப்படியாவது தேடி வாங்கி வருமாறும் கூறியுள்ளார்.அடுத்த நாளே ஜான் மாஸ்டரோடு டெல்லிக்கு பயணமானார் மணி அண்ணா.டெல்லிக்குச் சென்ற அவர்கள் புத்தகக் கடைகள்,பல்வேறு பதிப்பகங்கள் என அலைந்து திரிந்து மேலும் ஏராளமான படைத்துறை சார்ந்த அறிவியல் நூல்களை வாங்கி வந்து தலைவர் அவர்களிடம் ஒப்படைத்தார் மணி அண்ணா. இவ்வாறு மணி அண்ணா அவர்கள் அனைத்துப் பணிகளையும் இயக்கத்தில் ஒருவராக இணைந்து நின்றே செய்து முடிப்பவர்.

அமைதிப்படையென்று கூறி இலங்கைக்கு சென்று விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கில் புலிகளுக்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நடைபெற்ற சமர்களில் எம்மவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள்.அவ்விதம் காயப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்ட லெப்டினன்ட் கேணல் நவம் சிகிச்சைகள் பலனின்றி மரணத்தை தழுவிக் கொண்டார். நவம் அவர்களது உடலை மருத்துவ மனையில் இருந்து எடுத்துச் சென்று அவருடைய உடலைக் குளிப்பாட்டி புலிச்சீருடை அணிவித்து அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலி உறுப்பினர்கள் மற்றும் திராவிடர் கழக உடன்பிறப்புக்கள் பலர் அணிவகுத்துச் சென்று நவம் அவர்களது உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.அவரது அஸ்தி சேகரித்து வைக்கப்பட்டு 31ஆம் நாள் அஞ்சலி நிகழ்வையும் நடத்தி முடித்து அந்த அஸ்தியை தமிழீழ மண்ணுக்கு அனுப்பி வைத்தவர் மணி அண்ணா.

இந்தியப்படை நடவடிக்கை களின்போது காயமடைந்து தமிழ் நாட்டுக்கு கொண்டு வரப்படும் புலிப் போராளிகளுக்கு தனது ஏற்பாட்டிலேயே சேலம்,ஈரோடு,போன்ற இடங்களில் அமைந்திருந்த தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைகள் அளித்து பலரை ஈழத்திற்கு அனுப்பியது மட்டுமன்றி,தமிழகத்தில் சிகிச்சைகள் பலனளிக்காது மரணித்த ஒன்பது பேர்களின் உடல்களுக்கு தகுந்த மரியாதைகள் செய்து தனது சொந்த குடியிருப்புப் பகுதியிலேயே தகனம் செய்தவர் மணி அண்ணா.

தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த வேளையில் 1987 நவம்பர் 27ஆம் நாள் முதலாவது மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் மணி அண்ணாவும் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய தேசியத் தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டுக்கு வந்து திரும்புமாறு மணி அண்ணாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.அந்தக் கடிதத்தில் மாவீரர்நாள் நிகழ்வு பற்றி தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருக்கவில்லை.கடல் பயணம் தடைப்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட நவம்பர் மாத காலப்பகுதியில் மணி அண்ணாவுக்கு தமிழ் ஈழம் செல்ல முடியாது போய்விட்டது.

1987 டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மணலாற்றுக் காட்டுக்கு சென்று தேசியத்தலைவர் அவர்களைச் சந்திக்க முடிந்தது.தலைவர் அவர்களுடன் தங்கியிருந்த நாட்களில் கண்ணிவெடி தயாரிப்புத் தொழிற்சாலை சீருடைகள் தைக்கும் பாசறை,மொழி பெயர்ப்புப் பணிகள் செய்துவந்த தனிப்பகுதி,பெண்புலிகள் பாசறை, கமாண்டோ பயிற்சிப் பாசறை என பல பகுதிகளுக்கும் தேசியத்தலைவர் அவர்களோடு சென்று மணி அண்ணாவினால் அனைத்தையும் பார்க்க முடிந்தது.

தேசியத்தலைவர் மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த வேளையில் இந்திய அமைதிப்படை நடவடிக்கை களின்போது மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் பொய்யான தகவல் ஒன்றும் பரப்பப்பட்டிருந்தது.மணி அண்ணா காட்டில் தலைவரைச் சந்தித்து, தலைவரோடு நின்று எடுத்த புகைப் படங்களைக் காண்பித்து ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் மூலம்தான் அந்தத் தகவல் பொய்யானது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள்.

தலைவரைச் சந்தித்து வந்த பின்பும் மணி அண்ணாவின் இயக்கம் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றே வந்தன.இயக்கப் போராளிகள் கஷ்டம் என்று யார் வந்தாலும் முகம் சுழிக்காமல் உதவிகள் செய்பவர்.

2014 இல் ஒரு நாள் மணி அண்ணாவிடம் இருந்து எனக்கு கைபேசி அழைப்பு." சொல்லுங்கோ அண்ணா" என்றேன் நான்.ஒரு பெயரைச் சொல்லி " இவர் மைசூர் பக்கம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றாராம்.நம்ம ஆளா?" என்றார்.அவர் சொன்ன பெயரைக் கேட்டதும் அதிர்ந்து போய்விட்டேன். மு.வே.யோகேஸ்வரன் என்ற பெயரில் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த வாஞ்சிநாதனே அவர்.தான் ஜேர்மனியில் இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். " அண்ணா அவரை உடனை சென்னைக்கு எடுக்க வேணும்.நான் வீட்டில் வைச்சுப் பார்க்கிறன்.கொஞ்ச காசு அனுப்புங்கோ" என்று கூறி வங்கி இலக்கத்தையும் வாஞ்சியிடம் இருந்து வாங்கி மணி அண்ணாவுக்கு தெரிவித்தேன்.மணி அண்ணா உடனடியாக 10 ஆயிரம் ரூபா அனுப்பி இருந்தார்.பணம் கிடைத்த இரண்டொரு நாட்களில் வாஞ்சி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.வாஞ்சி ஆட்டோவில் வந்து எங்கள் வீட்டு வாசலில் இறங்கியபோது அவரை அடையாளம் காண முடியாமல் இருந்தது.சரியாக மெலிந்து நடக்கவும் முடியாமல் முதுகு வளைந்தபடியே வந்து சேர்ந்தார். நான் மறு நாளே அண்ணா நகரில் உள்ள ஒரு சிறந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பூரண உடற்பரிசோதனைகள் செய்வித்தேன்.அவருக்கு கான்சர் என்ற மாதிரித்தான் முதலில் கதை பரப்பப் பட்டிருந்தது.அவருக்கு கான்சர் இல்லை. ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடாமல் அல்சர் முற்றிய நிலை. பின் இரண்டு மாதங்கள் வரை அவருக்கு சிகிச்சைகள் மேற்கொண்டு எனது வீட்டில் நானே பராமரிப்பு செய்து பூரண நலமடைந்து பின்பே திரும்ப மைசூருக்கு அனுப்பி வைத்தேன்.அதன் பின்பும் மணி அண்ணா வாஞ்சியோடு தொடர்பில் இருந்து நிதியுதவிகளும் செய்துள்ளார்.

90 காலப்பகுதியில் கப்டன் றோய் நாட்டில் காயப்பட்டு சிகிச்சைக்காக மணி அண்ணாவிடம் அனுப்பப்பட்டிருந்தார். முதலில் ஈரோடு L.K.M  மருத்துவமனையில் வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் பெங்களூரில் Peoples Hospital இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி றோய் மரணத்தைத் தழுவிக் கொண்டபோது அவரின் உடலைப் பொறுப்பேற்று எடுத்துவந்து அவருக்குரிய மரியாதைகளோடு றோய் வாழ்ந்த கொளத்தூர் கும்பாரப்பட்டியிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் நினைவாக அந்த இடத்திற்கு புலியூர் என பெயர் மாற்றம் செய்து பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றினையும் உருவாக்கி புலியூர் பகுதியில் வருடாவருடம் தமிழீழ மாவீரர் நாளை வெகு விமரிசையாக செய்து வருகின்றார் மணி அண்ணா. அத்தோடு நினைவு நிழற்கூடத்திற்கு பின்புறமாக ஒரு ஏக்கர் காணியைப் பெற்று மாவீரர் நினைவு மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் மணி அண்ணா.

'ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக தன் சொந்தப் பணத்தையே செலவழித்திருக்கின்றார்.ஈழப் போராளிகளின் இலட்சியம் நிறைவேறுவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்' என 1994 இல்'கியூ' பிரிவினர் மணி அண்ணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்திருந்தனர்.

08.02.91-27.04.91காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்தவர்.

28.05.94-02.01.95 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கியதாக தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை.

10.09.95-08.09.96 வேலூர் சிறப்பு முகாமில் இருந்து தப்பிய விடுதலைப் புலிப் போராளிகளுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தவர். இந்த வழக்கில் தனக்காக தானே வாதாடி விடுதலையானார்.

28.02.2009-04.05.2009 ' ராஜீவ் கொலை அல்ல மரண தண்டனை' என்று திண்டுக்கல்லில் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டும் சிறை.

02.11.2013-15.02.2014 இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கூறி சேலம்,மற்றும் சென்னையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் இணைக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறை சென்றார்.

இவ்வாறு 1984 காலகட்டத்தில் இருந்து தேசியத்தலைவர் அவர்களுக்கு விசுவாசமாக விடுதலைப்புலிகளில் ஒருவராக செயற்பட்டு வரும் மணி அண்ணா தனது சொத்துக்களில் பெரும் பகுதியை எமக்காகவே இழந்தவர்.பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தும் இன்றுவரை இலட்சியத்தோடு வாழ்ந்து வருபவர். பயிற்சி முகாம் நடைபெற்ற தோட்டத்தில் 15 ஏக்கரை முன்பே விற்றிருந்தார்.மீதியாக இருந்த 12 ஏக்கர் காணியையும் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார் என்பதைக் கேள்விப்படும் போது வேதனையாக இருக்கிறது.பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மணி அண்ணா சொந்த வீடும் இன்றி வாடகை வீட்டிலேயே இன்று வாழ்ந்து வருகின்றார்.

மணி அண்ணாவின் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் உடனிருந்து உதவி வருபவர் மணி அண்ணாவின் இளவல் தா.செ.பழனிச்சாமி அவர்கள்.

அவர்கள் இருவர்க்கும் என்றென்றும் தமிழீழ மக்கள் சார்பில் நன்றிகள் பல கோடி!

km2-1623910627.jpg

 

விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளி "ராமு" 2017இல் அமரத்துவம் அடைந்தார்

9 hours 51 minutes ago
Tuesday, July 24, 2018

https://thamilvaralaru.blogspot.com/2018/07/blog-post_24.html

 

வரலாற்று சமர் என்று வர்ணிக்கப்படும் திருநெல்வேலி தாக்குதலில் பங்கு பற்றியோரில் இன்னும் உயிருடன் இருப்போரின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைந்து உள்ளது.

இந்த தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர் . தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அன்றைய இளைஞர்களை வீட்டில் இருந்து வெளியே வரச்செய்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் இணைந்து கொண்டனர். இந்தச் சமரில் பங்கு பற்றியிருந்த ராமு (கந்தசாமி கணேஸ்வரன்) 15.6.2017 அன்று காலமானார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

பிரபாகரனின் நேரடி வளர்ப்பு என்று சொல்வார்களே அது இயக்கத்தில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அது அப்படியே இருக்கும் ஒழுக்கம், எச்சரிக்கை உணர்வு, சிக்கனம், உணவை விரயமாக்காமை முதலான சகலதுமே ராமுவிடம் கடைசி கணம்வரை இருந்தே வந்துள்ளது.

இவரது மனைவிக்கு ஆறுதல் சொல்லவும் துயரை பகிர்ந்து கொள்ளவும் முன்னால் போராளி ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.எல்லாருடைய பெயர்களையும் (code words ) அவர் எழதி வைத்துதிருந்தார் .எனக்கு அது தெரியாது என்று குறிப்பிட்டு இருந்தார் திருமதி ராமு. இத்தனை வருடம் ஒன்றாக வாழ்ந்து இன்ப துன்பத்தில் பங்குபற்றி இரு பிள்ளைகளுக்கும் தாயான அவருக்கே தெரியாதென்றால் பிரபாகரன் கற்பித்ததை இறுதிவரை கடைபிடித்து இருக்கின்றார் என்றுதானே அர்த்தம். அன்றைய காலகட்டம் பற்றி விபரிப்பதானால் இன்றைய தலைமுறையினருக்கு அதை நம்ப கஷ்டமானதாக இருக்கும்

நான்தான் பிரபாகரனுடன் கூட சென்றேன்.இந்த முடிவு எடுக்கும்போது நான் பக்கத்தில் இருந்தேன்.ஆலோசனை சொன்னேன் என்று கற்பனை கலந்த கதைகளை அல்லது வரலாற்றை திரிவுபடுத்தலாக மிகைப்படுத்தலாக எழதிக் குவிப்போர் பலர் வாய் மொழியாகச் சொல்வோர் தொகை பெருகிவிட்டது. அட இவருக்கு எல்லாமே தெரியும்மென்று தம்மை பற்றிய பிரமிப்பை மாயையை அடுத்த தலைமுறையினர் மத்தியில் பதிய வைக்க ஒரு கூட்டமே முயன்று வருகின்றது. அதில் கணிசமானோர் ஊடகவியலாளர்கள், பத்தி எழுத்தாளர்கள்.

வரலாறு என்பது நடந்து முடிந்தது அதனை எமது விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்ற முயல்வது துரோகம். இயக்க நடவடிக்கைகள் செய்ய உத்தேசித்துள்ள விடயங்கள் அடுத்தவருடைய ஊர்,சொந்த பெயர்,உறவினர் பற்றிய விபரங்கள் கல்விதன்மை சாதி முதலான விடயங்களை ஆராய முற்படக்கூடாது என்பன அடிப்படை விதிகள் ஆகும்.  எங்கேயாவது ஒருவர் போலீசாரிடம் சிக்க நேர்ந்தால் சித்திரவதைகளின் கரணமாக ஏனையோரைப்பற்றி விபரங்கள் அவர் அவர் வெளியிட்டக்கூடும்.எனவே ஒருவர் கைதுதானாலும் இயக்க நடவடிக்கைகள் தடங்கலின்றித் தொடர வேண்டும் இதற்காக இயக்கத்துடன் தெடர்புபட்டோரை மிக அவசியமாகின் மட்டுமே வெளிப்படுத்துவார். சம்மந்தபட்ட தேவை முடிந்ததும் அவசியம் இல்லாமல் அவர்களுடன் தெடர்பு கொள்ள கூடாது.

உதாரணத்திற்கு, 1983/07/15 மீசாலை சுற்றிவளைப்பில் லெப். சீலனுடன் வீரச்சாவைத் தழவிக்கொண்ட மயிலிட்டியை சேர்ந்த ஆனந்ததை நேரில் சந்திக்காத இயக்க உறுப்பினர் இருந்து உள்ளனர். அப்போது இந்த இருவரைத் தவிர பிரபாகரன், பேபி/இளங்குமரன், செல்லகிளி, ராகவன், மாத்தையா, பண்டிதர் ,யோகன் (பாதர் ), கிட்டு, பொன்னம்மான், ராமு, புலேந்திரன், ரகு (குண்டன்), ரஞ்சன் /லாலா ,அருணா ,நேசன். அப்பையா அண்ணா, சந்தோசம் ,கேபி (குமரன் பத்மநாதன் ),தேவர், பசீர் /காக்கா,பொட்டு ,ஞானம், கணேஷ், ரெஜி, அல்பேட் , ராஜேஷ் , லிங்கம், விக்டர் , சுப்பண்ணா ஆகிய 29 பேர்தான் உலகம் முழுவதும் இருந்த புலிகள் இயக்க முழுநேர உறுப்பினர்கள். சங்கர் ஏற்கனவே வீரச்சாவு.

போதுவாக ஒரு இடத்திற்கு ஒருவர் அல்லது இருவர் எப்போதாவது மூவர் செல்வர். அதுவும் அந்த விடயம் தவிர்க்க முடியாததா என ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . விதிவிலக்காக நடந்த நிகழ்வுகள் என்றால் 1980 முன்பகுதியில் நீர்வேலி வாய்க்கால்தரையிலும் 1980 ஆகஸ்டில் ஊர் காவல்துறையிலும் நடந்த இரு மாநாடுகளை பற்றி மட்டுமே குறிப்பிடலாம். அப்போதுதான் இதுவரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத முகங்களை பலர் கண்டனர் .(ஏற்கனவே பண்ணைகளில் சிலர் அறிமுகமாகியிருந்தனர்) பிரபாகரன்,செல்லகிளி, ராகவன், ஜோண், பண்டிதர், மாத்தையா , சங்கர் ,ராமு , பொன்னம்மான், ரகு (குண்டன்) ,குமரன் அன்ரன், சீலன் , புலேந்திரன், அய்யர், வாத்தி நாகராஜா, சந்தன், குமணன், அழகன் ,மனோ மாஸ்டர், நந்தன், சுந்தரம், கறுப்பி ,மதி, கண்ணண், சிவம், நெப்போலியன், சால்ஸ், பீரிஸ் , டானியல், காந்தன், சோமண்ணை ஆகியோர் வாய்க்கால்தரை மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் குறிப்பிட்டத்தக்கவர்கள். பேபி(இளங்குமரன்)கிட்டு , கலாபதி ஆகியோர் தவிர்க்க முடியாத கரணத்தால் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமலற் போயிற்று.

இந் நிகழ்வுக்கு முன்னதாக இச்சந்திப்பு எவ்வாறு நடைபெறவேண்டுமென திட்டமிட்டார் பிரபாகரன். ஒரு குறிப்பிட்ட வயதினர் ஒன்று கூடும்போது அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது. சந்திப்பிற்கு முன்னதாக நூலகங்களில் நேரத்தை செலவிடல் போல வெவ்வேறு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. எதுவுமே செய்ய முடியாதவர்கள் சினிமா படம் பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திகு வரும் வகையில் பிரபாகரன் ஒழங்கு படுத்தினார். எல்லோரையும் அளந்து தானே கையாள வேண்டும் அவர். கிரிக்கெட் விளையாடச் சென்ற இரு குழுக்கள் போல் இயக்க உறுப்பினர்கள் நடந்து கொண்டனர்.

அந்த வெளியில் உள்ள மர நிழலில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் அலசப்பட்டனர். ஆயிரம் சொற்போழிவைகளை விட ஒரு தாக்குதல் வலிமையானது. கூடுதல் பயனை விளைவிக்கும் என கியூபா வரலாற்றுடன் தொடர்புபட்டோர் குறிய கருத்தை ரமு வலியுறுத்தினார். இவருடைய கருத்தை அன்ரன் வழிமொழிந்தார். இதற்கு மாறாக மனோ மாஸ்டர், நந்தன் ஆகியோர் மக்கள் புரட்சிக்கு பின்னரே ஆயுத நடவடிக்கை என பல்வேறு நாட்டுச் சித்தாத்தங்களால் கூடி இருந்தோரை வறுத்தெடுத்தனர்.

இந்த சந்திப்பின் பின் இயக்கம் பல பின்னடைவுகளை சந்தித்தது;உடைந்தது; சிதறியது என்று குறிப்பிடலாம்.

இந்நிலையில் 1980 ஆகஸ்டில் உறுப்பினரிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தவேன லண்டனில் இருந்து ராஜா என்றழைக்கப்படும் ஒருவர் வந்தார். முக்கியஸ்தர்களைச் சந்தித்தார். இதன் பின் அணிகளின் சகல உறுப்பினர்களையும் சந்திக்க ஊர்காவல் துறையில் மாநாடு கூட்டப்பட்டது. இது காலை தொடங்கி நடு இரவு வரை நடந்து முடிவு காண இயலவில்லை . அடுத்த நாள் காலை தொடங்கி மாலை முடிவு முடிவுற்றது. இதில் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களாக பிரபாகரன், பேபி, சுப்பிரமணியம், ஐயர், நாகராஜா, ஆகிய நால்வரும் இயக்க வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து சொன்னார்கள். ஒழங்காற்று நடவடிக்கைகள் விமர்சித்ததும் சாதகமாகவும் முரண்பாடான நிலையில் சிலர் கருத்து தெரிவித்தனர். பிரபாகரன், அய்யர் ஆகிய இருபர் சார்பிலும் இரு அணிகளாக நிலைப்பாடு எடுத்திருந்தனர்.

பிரபாகரன் அணியில் பின்வருபவர்கள் கலந்து கொண்டனர்: பிரபாகரன் ,பேபி அண்ணா, கலாபதி ராகவன், பண்டிதர் மாத்தையா ,சங்கர், ராமு பொன்னம்மான், ரகு (குண்டன்), குமரப்பா, அன்ரன் ,சீலன், புலேந்திரன், சசி, ரத்தினம், மனோ மாஸ்டர், தனி (பல்கலைக்கழகம் )

ஐயர் அணியில் பின் வருபவர்கள் கலந்து கொண்டனர்: ஐயர், வாத்தி நாகராஜா, சந்தன், குமணன், அழகன், நந்தன், சுந்தரம், கறுப்பி, மதி, கண்ணண், சிவம், நெப்போலியன், சித்தப்பா.

எந்த அணியும் சாராமல் காந்தன், செல்லகிளி, குலம் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர்.

ராஜாவின் கடும் முயற்சியின் பயனாக இரு அணியும் ஒன்றுபட்டதுபோல் காட்டி கொண்டனர். இறுதியில் மத்திய குழு ஐனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார் என முடிவாயிற்று. நடுநிலைமை வகித்தவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 27 வாக்குகள் பெற்று சாந்தன் முதல் இடத்திலும், 26 பேரில் ஆதரவு பெற்று அன்ரன் இரண்டாவது இடத்திலும், 25 உறுப்பினர்களின் ஆதரவு பெற்று பிரபாகரன் மூன்றாவதாக தெரிவானர். அய்யர் 10 க்கும் குறைவான வாக்கு பெற்று தெரிவாகினார் . வரலாறு செயல்திறனுள்ளவர்களுக்கே உரிய இடத்தை கொடுத்தது. வேறு வழிகளில் முதல் இடத்தை பெற்றவர்கள் சாதனையாளர்கள் என்று வரலாற்றில் பதியப்படவில்லை மூன்றாவது இடத்தை பெற்ற பிரபாகரனுக்கே செயல்திறன் இருந்தது.

பாரதியார் வாழ்விலும் இதே நிகழ்வு நடந்தது மதுரை சேதுபதி பள்ளியில் அவர் ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது .இதற்கு செந்தமிழ் நாடேனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே என்ற கவிதையை அவர் அனுப்பி வைத்தார் .இக்கவிதை எளிதில் விளங்க கூடியதாக இருக்கின்றதே என்று எண்ணிய நடுவர்கள் போனால் போகின்றது மூன்றாம் பரிசுக்கு அதனை தெரிவு செய்தனர். முதல் இரு பரிசு பெற்ற கவிதைகள் மக்களை சேரவில்லை .அவை காலத்தால் காணாமல்போகின.அது போல செயல்திறனுள்ள பிரபாகரனை வரலாறு தத்தெடுத்துக்கொண்டது. ஓட்டு போட்ட ஐக்கியம் நிடிக்கவில்லை. மனதளவில் மற்றம் வராவிட்டால் செயலிலும் எதனையும் காணமுடியாது. ஐயர் குழுக்கு போராட்டம் பற்றிய நம்பிக்கை வலுக்காததால் வரலாற்றில் இருந்து தூக்கி ஏறியப்பட்டனர்.

1977-1978 பிளவு ஏற்படும்வரை புலிகள் அமைப்பில் அநேகர் இணைந்தனர். வன்னியிலும் கிழக்கிலும் மறைமுக பண்ணைகள் இருந்தன. இதில் வந்தவர்கள் பண்ணை வாழ்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கி கொண்டவர் பலர். முதலில் வவுனியா பூந்தோட்டம், பன்றிக்கெய்தகுளம். அடுத்தகட்டம் வள்ளிபுனம் , மாங்குளம் (அம்பகாமம்) முத்தையன்கட்டு, மன்னாரில் முருங்கன். பின்னர் பன்னாலை கோழிப்பண்ணை (இதுதான் முதலில் யாழில் அமைக்கப்பட்டது). மட்டகளப்பில் புலிபாய்ந்தகல், செங்கல்வாடி (யோகன் பாதர்) மற்றும் மியான்கல்குளம். பண்ணைகளுடன் திருமலையிலும் ஒரு பண்ணை இருந்தது.

1980 பிற்பகுதியில் ரேலோ இயக்கம் புலிகளுடன் இணைந்து செயல்பட்டன. 1981 இல் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் கைதானதைத் தொடர்ந்து மிக நெருக்கடி ஏற்பட்டது. ஒரு இரவு படுப்பதற்காக அறிமுகப்படுத்திய இடங்களுக்கும் இராணுவம் படையினர் விரைந்தனர். 100 ரூபாய்தான் அன்றைய காலத்தில் மிக அதிகூடிய பெறுமதி. நீர்வேலியில் வைத்து வண்டி தொடரை மறித்து கைப்பற்ற பட்ட பணத்தில் மிக பெரும்பாலானவை இரண்டு ரூபாய் முதலானவைகளே அவற்றை பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த மறைவிடங்களுக்குச் சோதனை வந்தது சிலர் கைதாக நேர்ந்தது அவ்வாறு இருந்தும் மூன்று லட்சம் தவிர மற்றவற்றை இடம் மாற்றி விடப்பட்டது. மறைவிடத்தை விட்டு பணத்தை எடுத்ததும் அங்கே படையினர் சென்றமை கிளித்தட் டு விளையாட்டைப்போல நடந்துகொண்டு இருந்தது. சிறிய தள்ளுவண்டியில் ஒருவர் பணத்தை வைத்து தள்ளிக்கொண்டு போனபோது அவரை படையினர் வாகனம் விலத்திச் சென்றது.

தேவைப்படுவோர் தொகை அதிகரித்தது. வறுவா, சின்னவறுவா, பொன்னம்மான், தேவர் அண்ணா, நேசன் (ரவிந்திரதாஸ்), கேபி (பத்மநாதன்), கிட்டு என பலர் இப் பட்டியலில் சேர்ந்தனர். இக்காலப்பகுதில் யாழ் காங்கேசன்துறை வீதியில் சீலன் தலைமையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இரு படையினரும் அவர்களுடன் கூட வந்த ஒருவரும் பலியாகினர். .303 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் தற்காலிகமாக இந்தியாவில் தங்குவதேனமுடிவாயிற்று. தேடப்படுவோர் படகு மூலமாகவும் செல்வதெனவும் ஏனையோர் விமானமூலம் செல்வதேனவும் முடிவாயிற்று. ரெலோவின் சுதன் இவ்வாறு சென்றார். புலிகளின் ராமு விமானம் மூலம் சென்ற ஒருவராக இருந்தார்.

தமிழத்தின் திருப்பரங்குன்றத்தில் சரவணப்பொய்கைக்கு எதிரில் இருந்த திருமணமண்டபத்தில் இரு இயக்கத்திற்குமான உடல் பயிற்சிகளும் வகுப்புகளும் நடைபெற்றனர். உடற்பயிற்சிகளை ராகவன் வழங்கினார். வகுப்புகளை ராமுவே வழி நடத்தினார்.

இக்காலப்பகுதில் 1982 தைப்பொங்கல் நாளன்று சுதந்திர தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தப்போவதாக கிருஷ்ண வைகுந்தவாசன் அறிவித்தார். போராட்டத்தை மலினப்படுத்தும் இம் முயற்சியை எதிர்த்து நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு என்றோரு துண்டுபிரசுரத்தைப் புலிகள் வெளியிட்டனர். அதே போல சுந்தரம் மீதான ஒழங்காற்று நடவடிக்கை குறித்து "துரோகத்துக்குப்பரிசு" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வெளியானது. புலிகளின் இலச்சினைகளுடன் வெளியிடப்பட்ட இவ்விரு துண்டுப்பிரசுரங்களையும் ஸ்ரீசாபரத்தினம் முதலானோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். அப்போது புலிகளின் தீவிர ஆதரவாளனாக இருந்த பொட்டு, ஞானம் ஆகியோர் இவற்றை மக்களிடையே விநியோகித்தனர்.

சில மாதங்கள் பின்பு இரு இயக்கமும் தனி தனியாக இயங்குவதென முடிவுவாயிற்று. குட்டிமணி, தங்கதுரை போராளிகளை கொழும்பில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டேனும் மீட்போம் பிரபாகரன் தெரிவித்த கருத்தைப் பரிசீலிக்க டெலோவினரான ராசப்பிள்ளை, ஸ்ரீசாபரத்தினம் ஆகியோர் தயராக இல்லை. வழக்கு விசாரணை கொண்டு வரப்படும் சமயத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வோம் என பிரபாகரன் தெரிவித்து இருந்தார். திட்டத்தை செயல்படுத்தத் தயராக இல்லாதவர்களுடன் இணைந்து பணிபுரிவது கடினம் என்றும் முன்புபோல் தனித்தே இயங்க வேண்டுமெனவும் பிரபாகரன் மனதில் தோன்றியது.

தொடர்ந்து முரண்பாடுகள் முற்றின.

இறுதியாக ஜெயம் எனப்படும் முன்னால் ரெலோ உறுப்பினர் ஒருவர் மீது தன்னிச்சையாக டேலோவினர் நடவடிக்கை எடுத்ததை தெடர்ந்து தனித்து இயக்கும் தமது முடிவை அறிவித்தார் பிரபாகரன். ஒன்றாக இருந்து பிரச்சினைபடுவதை விட பிரிந்து நண்பர்களாக இருப்போம் என சொன்னார் அவர்.

அடுத்த நடவடிக்கை பற்றி ஆராயவும் விமானம் மூலம் செல்வோரை முதலில் அனுப்பவும் பிரபாகரன் தீர்மானித்தார் . சென்னைக்கு சென்ற பிரபாகரன் ராமுவை அங்கு அழைத்தார். ஒரு நாள் மாலை பாரிமுனைக்கு போன அவர் The Commados படம் பார்த்துவிட்டிர்களா ? எனக்கேட்டார் . இல்லை என்று ராமு சொன்னதும் நான் நேற்றுதான் பார்த்தேன், இன்றுதான் கடைசிநாள் எனக்கூறி அவருடன் இன்னோரு உறுப்பினரை அனுப்பி வைத்தார். பிரபாகரனுடன் ராகவன், நேசன் சென்றனர்.

படம் பார்த்துவிட்டு ராமு திரும்பி வரும்போது வழியில் சந்தித்த நேசன் பாண்டிபஜாரின் முகுந்தன் (உமாமகேஸ்வரன்) கண்ணண் ஆகியோருடன் தம்பியும் (பிரபாகரன்) ராகவனும் துப்பாக்கி சமரில் ஈடுபட்டனர். அவ்விருவரையும் பொதுமக்கள் பிடித்து பெலிசாரிடம் ஒப்படைத்தனர். என்னை இனம் கண்டு துரத்திய மக்களிடம் இருந்து நான் தப்பியதே பேரும் பாடாகிவிட்டது எனக்கூறினார்.

மூவரும் மைலாப்பூரில் தங்கியிருந்த இடத்திற்கு சென்றனர். தானும் நேசனும் அங்கிருந்ததிற்காக தடயங்களை அழித்து வருவதாகவும் உடனடியாக விமானம் மூலம் மதுரைக்கு சென்று திருமணமண்டபத்தில் தங்கியிருக்கும் அனைவரையும் இடம் மாற்ற ஏற்பாடு செய்யுமாறு பேபி அண்ணாவுக்குச் (இளங்குமரன் ) சொல்லுமாறு மற்ற உறுப்பினர்களை பணிந்தார். அப்படியே கருமங்கள் நடந்தன. விமானம் மூலம் சென்றோர் நாட்டுக்கு திரும்பினர்.

அடுத்து நடக்க வேண்டிய விடயங்களை இளங்குமரன் கையாண்டர். தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். இவர் எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்றினார்.

நாடு திரும்பிய ராமுவின் நேரடி களமான நெல்லியடியில் நடந்த பெலிஸார் மீதான தாக்குதல் அமைந்தது. இதில் நான்கு பொஸிஸார் பலியாகினர். சங்கர் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். மாத்தையா, அருணா, ரகு(குண்டன்), சந்தோசம், பசீர் ஆகியோர் இத் தாக்குதலில் பங்கு பங்குபற்றினர்.

தொடர்ந்து காரைநகரிலிருந்து வந்த கடற்படையினரின் வாகன தொடரணி மீதான தாக்குதல் முயற்சி நடந்தது. இதில் சீலன் தலைமை தாங்கினார். அப்பையா அண்ணா, சங்கர், அருணா, மாத்தையா, ரகு (குண்டன்), பசீர் ஆகியோரும் இத் தாக்குதலில் பங்கு பற்றினர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல். சீலன் தலைமையில் நடந்த இந்த தாக்குதலில் ரகு (குண்டன் ), ராமு, புலேந்திரன், மாத்தையா, அருணா, சங்கர் சந்தோசம், ரஞ்சன்/லாலா, பசீர் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பொன்னம்மான் தலைமையில் உமையாள்புரத்தில் நிகழ்ந்த இராணுவ அணி மீதான தாக்குதலில் ராமு, அப்பையா அண்ணா, கிட்டு ,ரஞ்சன், மாத்தையா, அருணா, சந்தோசம் ,பசீர், கணேஷ், ராஜேஷ், செல்லக்கிளி ஆகியோர் பங்கேற்றனர்.

1983 முன்பகுதியில் புதிய போராளிகளுக்கான பயிற்சி முகாம் ஒன்று உடையார்கட்டு இருட்டுமடுவில் அமைக்கப்பட்டது. இதில் பிரபாகரன் ,செல்லகிளி, பொன்னம்மான், சீலன் புலேந்திரன், கிட்டு, ரஞ்சன்/லாலா, ராமு ஆகியோர் பயிற்சி வகுப்புகள் நடத்தினர். யோகன்(பாதர்), அருணா, பொட்டு, ஞானம், ராஜேஷ் ,விக்டர் ,ரெஜி, லிங்கம், சுப்பண்ணா, அல்பேர்ட், ஆனந், ஆகியோர் இம் முகாமில் பயிற்சி பெற்றனர்.

திருநெல்வெலியில் நடந்த வரலாற்றுச்சமரில் செல்லக்கிளி தலைமையில் நடைபெற்ற இத்தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, பொன்னம்மான், புலேந்திரன், சந்தோசம், ரஞ்சன் லாலா, அப்பையா அண்ணா, லிங்கம், பசீர் காக்கா, ஞானம், விக்டர், ராஜேஷ், சுப்பண்ணா, கணேஷ், ரெஜி ஆகியோர் பங்கேற்றனர்.

மட்டகளப்பு சம்மந்தமான விடயங்களை கையாண்டவர் மட்டு சிறையுடைப்பு தொடர்பாக ஈ.பி .ஆல்.எல் வினர் தொடர்பு கொண்டு ஆயுதங்களை தருமாறு கோரினர். இவர் ஒரு போராளி என சத்தியம் செய்தாலும் ஒருவரும் நம்ப மாட்டார்கள். இவரது உருவமைப்பு அவ்வாறு இருந்தமைக்கு இவருக்கு ஒரு பலமாக இருந்தது. படையினர் போராளிகள் குறித்து வைத்து இருக்கும் பிம்பம் இவருடைய உருவத்திற்கு பொருந்தாது. ஒரு முறை மட்டகளப்பு சென்ற பேருந்து அனுராதபுரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் இவரும் காயம் முயற்றார். சிங்களமும் தெரியாது எப்படியோ ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி மட்டகளப்புக்கு சென்றார். இவர் மட்டகளப்பில் ஆற்றிய பணிகள் குறித்து "என் தம்பி ஜெயத்திற்கு" என்ற நூலில் கவிஞர் காசி ஆனந்தன் குறிப்பிட்டு உள்ளார்.

ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலிலும் ராமுவின் பங்கு இருந்தது. மாத்தைய தலைமையில் நடந்த தாக்குதலில் பசீர், பரமதேவா, சந்தோசம் , குட்டி ,பசீலன் , சசி, வசந்தன், சகோதரம், தீசன் ,கோபி, மான வள்ளல் ,லோரன்ஸ், சபா ,ரெஜி ,லலித் ,பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

இயக்கத்தில் இருந்து விலகினாலும் அதே நடைமுறை பழக்கம் பழக்கங்களுடன் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார் சரித்திரத்தில் ராமுவுற்கும் தனி இடம் உண்டு. அதை பதிவு செய்ய வேண்டுமென்பதற்கான ஒரு முயற்சியின் ஆக்கமே

முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!

18 hours 24 minutes ago

முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!
May 18, 2024

97 முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!“உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ”

– லூக்கா

இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும்

இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும்.

அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி.

2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது.

ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர்.

விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’.

98 முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு.

மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?.

மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான்.

சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

98 1 முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர்.

பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும்.

முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.
 

https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/

வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே!- தயாளன்

20 hours 58 minutes ago

2020

 

எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.

இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர்  , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் .

ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி.

எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார்.

அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார்.
இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம்.

இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.

பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.”

இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார்.

இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார்.

http://www.ilakku.org/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-22-at-08.57.07.jpeg

 

புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன.

சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும்.

குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன்.
இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்.

அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு.

மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா?

ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்?

சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார்.
உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம்.

வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண்.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர்.

இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர்.

இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார்.

1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது.

"சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.”

இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது.

இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும்

‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார்.

இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது.

தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல.

தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர்.

2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும்.

நன்றி – ஈழநாடு

 

https://www.ilakku.org/வரலாற்றை-திரிபுபடுத்துவ/

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முன்வந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மூத்த போராளிகள்

21 hours 5 minutes ago

ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை)
 

Ruban.jpg


விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார்.
13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வட மாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிகேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர்.

இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது.

35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என சிறிதுகால தடுப்பின் பின் விடுதலையானார்.


முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்)

 

kakkaa.jpg


இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான 'குத்துக்கரணங்கள்' மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய 'ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து' என்ற தலைப்புகளில் எழுதியவர்.

1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை 'உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்' மற்றும் 'சிறைப்படாத சிந்தனைகள்' தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் 'விழுதுகள்' ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் 'மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்' என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர்.

இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர்.

https://www.pathivu.com/2018/05/blog-post_288.html

-----------------------------------------------------------------------------------------------------------

 

 

யோகன் எ பாதர் (பாலிப்போடி சின்னத்துரை)

தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு.

தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர்.

தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார். மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர்.

இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது. 

https://thamilkural.net/thesathinkural/views/71024/

"வன்முறைகளில் வனிதையர்"

1 day 10 hours ago
"வன்முறைகளில் வனிதையர்"
 
 
 
 
பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும்,  அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம்  அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால்,  வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது.
 
 
 
அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும்.
 
 
 
அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு  கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
 
 
 
ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா 
சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து 
கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும்.
 
 
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, ...... "
 
 
 
என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி 
என்றாகி விட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 
ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க,  வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக 
முதலில் அமைந்தது எனலாம்?
 
 
 
உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை?
 
 
 
இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட,  'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்?
 
 
இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா?
 
 
இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?
 
 
வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு?
 
 
நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில்,  தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை  வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
 
 
 
வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால்  குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள்  விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்
 
 
 
ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து  வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் !
 
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
277000696_10220761000837649_8510015818740363711_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=i36tWYfQBXoQ7kNvgHeVSYi&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDApq1pjPi1r3cTBGPd8piVca_af3Cfw71z-icSWl15GQ&oe=664D3AE3 276321669_10220761001117656_1702345077335484839_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=l0a34xe2rhkQ7kNvgFvtAzs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYApRYcUfTjuzicsm7nAljv381VVWr-j2dSMuxZ2_5r28Q&oe=664D3B2F
 
 
 
 

09/08/2018இல் மறைந்தார் இசையமைப்பாளர் யாழ். றமணன்

4 days 22 hours ago
தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும்  இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. 
 
ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர்,  இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர்.  பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். 
 
No photo description available.
 
 
தாயகத்தில் தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம் திரைப்படத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் எண்ணதத்தில் உருவான பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற உருக்கமான பாடலுக்கும், திசைகள் வெளிக்கும் என்கின்ற பெண்களின் பிரச்சினைகள் குறித்துப்பேசும் படத்துக்கான இசையினையும்  ரமணன் அவர்களே வழங்கியிருந்தார்.  அத்துடன் போராட்டகாலப்பகுதியில் தாயகத்தில் மகளிர்  அணியினரின் இசை உருவாக்கங்களிலும் இவருக்கு பெரும்பங்குண்டு.  
 
ஈழத்தின் மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் யாத்த மாவீரர் யாரோ என்றால் என்கின்ற பாடல், ஆதிலட்சுமி சிவகுமாரின் புதுயுகம் ஒன்று படைத்திடவேண்டும் புறப்பட்டு வா தோழி என்கின்ற பாடல், கவிஞர் வேலணையூர் சுரேசின் முல்லைமண் எங்களின் வசமாச்சு என்கின்ற பாடல் உட்பட ஏராளமான பாடல்கள் இவரின் இசையில் மலர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.  
தன்னுடைய சிறப்புமிக்க இசைத்திறனால் தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தவர். இறுதிவரை விடுதலைதாகத்தை தன் நெஞ்சிற்குள் சுமந்திருந்தவர். இத்தகைய சிறப்புகளும், நுண்திறனும், பற்றும் கொண்டுவாழ்ந்த றமணன் அவர்களின் இழப்பு என்றும் ஈடுசெய்ய முடியாததாகும். இவரின் இழப்பினால் துயரடைந்து கலங்கும் இவரின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள்,  அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் இவருக்கு எமது இறுதி வணக்கத்தை கொள்கின்றோம். 

https://www.pathivu.com/2018/08/ramanan_14.html

போராட்டப் பாதையில் புகுந்த புலிகளும், விழுந்த துரையப்பாவும் | நெடுந்தொடர்

4 days 23 hours ago

தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது.

 

முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே.
மூல வலைத்தளம்: அறியில்லை
மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான்

 

1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும்.

இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே!  நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு  வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

நாதன் கூறியசெய்தியோ மீண்டும் ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்ன நபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரணமாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன.

 1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக    கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால்  ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன்  இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை.

இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது.  இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார்.

இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக  நாதன் சொன்னதும் ஏன்?  என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக்  கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார்.

 இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன  இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார்.

1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாத போராட்ட உணர்வுடன் செயற்பட்டவர் பிரபாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில்  விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த  இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான  நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார்.

(காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்)

1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும்  சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார்.

1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ் மாணவர் பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார்.

1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும்  தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது.  இக்காலத்திலேயே  வல்வெட்டித்துறைக்கு  வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார்.  செட்டி  ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர்  அவர்களுடன் இணைந்து தாக்குதல்  முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது  உட்பட  வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார்.

1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர் பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச் இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார்.

இவர்களுடன் ஏறத்தாள இரண்டு வருடங்கள் வேதாரணியம் திருச்சி, சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்ட முன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.

 

 

"விண்ணில் வாழும் வீரன் இவன்!"

5 days 11 hours ago
"விண்ணில் வாழும் வீரன் இவன்!"
 
 
"மொழியில் ஒரு பற்றுக் கொண்டு
விழியில் ஒரு ஏக்கம் கவ்வ
வழியில் வந்த தடை உடைத்து
சுழியில் மூழ்கிய வீரன் இவன்!"
 
"ஒன்று இரண்டு ஆயிரம் கொலை
இன்று நேற்று கண்டு துடித்து
வென்று ஒரு முடிவு காண
சென்று மாண்ட வீரன் இவன்!"
 
"தாயின் தங்கையின் கற்பு காக்க
சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி
நாயின் வாலை நிமித்த எண்ணி
பேயில் சிக்கிய வீரன் இவன்!"
 
"உண்மை வெல்ல களத்தில் போராடி
கண்ணை இழந்து கையை முறித்து
மண்ணை மீட்க மரணம் தழுவி
விண்ணில் வாழும் வீரன் இவன்!"
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
No photo description available. 
 

முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேதகு வே. பிரபாகரன் அவர்கட்கு வீரவணக்கம்

5 days 21 hours ago

அன்பார்ந்த தமிழீழ மக்களே,

பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார்.

அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்ளது என்பதை அறியாதோருக்கு அறியத் தருகிறேன்.

அன்னாருக்கு கடந்த 15 ஆண்டுகளாக உரிய முறையில் வீரவணக்கம் செய்யப்படாத நிலையில் எதிர்வரும் மே 18ம் திகதி அன்று ஐரோப்பிய நேரம் பகல் 14 மணிக்கு டென்மார்க்கில் தலைவரின் தம்பியின் மகனால் உரிய முறையில் வீரவணக்கம்/ இறுதிச் செய்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். அதற்கு நானும் ஒத்தாசை வழங்குகிறேன் என்பதோடு அதற்கு எனது முழு ஆதரவையும் நல்குகிறேன்.

இதற்கு எம்மக்களும் ஆதரவை வழங்கி தலைவரினதும் குடும்பத்தினரினதும் ஆன்மா சாந்தி அடைய வேண்டுங்கள் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்.

நடைபெறுமிடம்:
paladspassagen,
ved analaeget 12C,
7100 Vejle,
Denmark

ஒருவேளை, எதிர்பாராத காரணங்களால், அது நிறுத்தப்பட்டாலும் யாழில் என்னால் அது சரியாக மே 18 அன்று மேற்கொள்ளப்படும் என்பதை பறைந்துகொள்கிறேன்.

நன்றி,

இங்ஙனம்,
நன்னிச் சோழன்.

"தமிழீழமே தமிழர் தாகம்"


 

"எங்கள் தலைவன் போல் இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்கும் எவனும் இல்லை!
எரிமலை மூச்சுக்கும் எழும்புயல் வீச்சுக்கும் ஏதடா எல்லை?"

 

 

மாவீரர் வீரவணக்க இலச்சினை.jpg

தென் தமிழீழத்தில் பல போராளி இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

6 days 4 hours ago

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் பஸ் எரிப்பு வங்கிக் கொள்ளை கைக்குண்டு வீச்சு என்று சில சம்பவங்கள் தனிக் குழுக்களாலும் சில தனிமனிதர்களாலும் நடத்தப்பட்டாலும்,

மட்டு அம்பாறை மண்ணில் நாகப்படை என்ற இயக்கம் மாலா இராமச்சந்திரனுக்கு கொடுத்த மரணதண்டனை சம்பவம் ஒன்றும் இருந்தாலும்,

ஈஸ்ரேன் குரூப் என்ற அமைப்பு மட்டக்களப்பு கச்சேரி அறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளையும், மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்திலிருந்து எக்ஸ்ப்லொடெர் என்று அழைக்கப்படும்,  வெடிக்கவைக்கும் கருவியையும், அத்தோடு, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில்  விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கக் கூடிய பொருட்களையும் கைப்பற்றியதே முதலாவது பாரிய தாக்குதல் சம்பவமாகப் பார்க்கப்படுகின்றது. 

அதனைத் தொடர்ந்து 41 தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து  திட்டம் தீட்டி தப்பியோடிய நிகழ்வும், 
 
அதன் பின்னர் புலிகளால் நிர்மலாவை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சிறை உடைப்பும் அதிரடியானவை என்றாலும்,
 
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் எனும் இடத்தில் அமைந்துள்ள  காவல் நிலையத்தை "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்ற அமைப்பு வெற்றிகரமாக தாக்கி அங்கிருந்து பல ஆயுதங்களை கைப்பற்றிய நிகழ்வே முதலாவது காவல் நிலைய தாக்குதல் சம்பவமாக மட்டு அம்பாறை வரலாறு பதிவு செய்து இருக்கின்றது.

இவைகளைப் போலவே கொடுவாமடு பகுதியில் ஈரோஸ் இயக்கம் STF  என்ற சிறப்பு அதிரடிப்படை மீது வெற்றிகரமாக நடத்திய கண்ணிவெடித் தாக்குதலே மிகப் பெரிய கரந்தடித் தாக்குலாகும். அதன் விபரம் பின் வருமாறு:

STF என்ற சிறப்பு அதிரடிப் படை பிரிவு என்பது  1983 ஆம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை காவல்துறையின் சிறப்புப் படையினரைக் கொண்டு ராணுவத் தாக்குதல்களின் அனைத்து அம்சங்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இராணுவப் படையாக அல்லாமல் மிகவும் சிறப்பு வாய்ந்த பொலிஸ் பிரிவாக இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. இந்த விசேட அதிரடிப்படையினர் முழுமையாக உருமறைப்புச் சீருடையில்  “கோல்ட் கொமாண்டோ” என்று அழைக்கப்பட்ட கோல்ட் ஆட்டோமேட்டிக் ரைபிள் (ஆற்௧5), யூசி மெஷின் கன், க்ளோக் பிஸ்டல் மற்றும் பிரவுனிங் ஹை-பவர் கைத்துப்பாக்கி அத்தோடு அல்டிமேக்ஸ் 100 எல்எம்ஜி, ஹெக்லர்&கோச் பிஎஸ்ஜி ஸ்னைப்பர் ரைபிள்ஸ்  சகிதம் பிரித்தானியாவின் தயாரிப்பான ளன்ட் றொவெர் Dஎfஎன்டெர்  இல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் வாகனேரி தொடக்கம் திருக்கோவில் வரையான இடங்களில் ஆறு  முகாம்கள் அமைத்து நிலை கொண்ட  இந்த விசேட அதிரப்படையினரது எந்த முகாம்களையும் 1983 ஆம் ஆண்டில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிவரை எந்த போராளிக் குழுக்களாலும் தாக்க முடியவில்லை என்பதே நிதர்சனமாகும். 

அத்தோடு இந்த  விசேட அதிரடிப்படையின் பலதிற்கு அதன் பொறுப்பதிகாரியாக இருந்த தர்மசிறி வீரக்கோன் மற்றும் விஜயதுங்க போன்றவர்களின் வழி நடத்தலும் ஒரு காரணம் எனலாம்  இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை தாக்கி தகர்க்க முடியாவிட்டாலும்  நாள் தோறும் ரோந்து செல்லும் அந்த விசேட அதிரடிப் படையினர் மீது  தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கும் முடிவினை எடுத்த ஈரோஸ் இயக்கப் போராளிகள்  
மிகத்துள்ளியமாக திட்டம் தீட்டி நன்றாக வேவு பார்த்து நன்கு பயிற்றப்பட்ட  பத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தயார்படுத்தி தாக்குதல் நடத்தும் இடமாக கொடுவாமடுவை தேர்ந்தெடுத்து அந்த தாக்குதலுக்கு 1985 ஆம் ஆண்டு  4 ஆம் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை நாள் குறித்தனர். 

பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம்  தலைமையில், கரண் ,கஜன், முருகன், சாண்டோ, மோகன், விக்கி, சின்னவன், சுரேஷ் ஆகிய போராளிகள் உட்பட மேலும் சில போராளிகள் கண்ணி வெடிகளை புதைத்து தாக்குதலுக்கு தயாராகி இருந்த நிலையில் .

அதிரடிப்படை அதிகாரி வீரதுங்கா தலைமையில் புல்லுமலை கோப்பாவெளிப் பகுதியில் தமது சுற்றி வளைப்பை மேற்கொண்டு விட்டுத் பொது மக்களுக்கு சொந்தமான ஒரு றோஸா Mini Bus, ணிச்சன் Caravan என இரண்டு வாகன சகிதம் திரும்பி வந்து கொண்டிருந்த விசேட அதிரடிப் படை மீது, புதைத்து வைத்து கண்ணிகளை வெடிக்க வைத்து துப்பாக்கி தக்குதலை ஈரோஸ் இயக்கத்தினர் மேற்கொண்டனர்.
 
பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம் தலைமையில் நடை பெற்ற இந்த தாக்குதலில் அதிகாரி வீரதுங்கா உட்பட  பெருந்தொகையான படையினர் கொல்லப்பட்டு, Cold Commando  றிfலெ, AK47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் ஈரோஸ் அமைப்பினரால் கைப்பற்றப்பட்டன. 

அத்தோடு கோப்பாவெளிச்  சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினரால் கைதாகி அவர்களின் வாகனத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களான தவராசா மற்றும் ராஜன் ஆகியோரும்   இத்தாக்குதலின் போது  கொல்லப்பட்டனர் என்பதோடு  

இதனைத் தொடர்ந்து  புலிபாய்ந்தகல் என்னும் இடத்துக்கு அருகாமையில்  வடமுனை வீதியில்  நடத்தப்பட்ட  மற்றுமொரு கண்ணி வெடித் தாக்குதலிலும் 

துப்பாகிச் சமரிலும் மேலும் பல அதிரடிப்படையினர் ஈரோஸ் இயக்கதினரால் கொல்லப்பட்டனர். 
பிற்காலங்களில் ஈரோஸை போன்று இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல்கள் பலவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியது என்பதே  வரலாறாகும்.

என்றாலும் 

PLOTE  இயக்கம் மன்னம்பிட்டியில் ராணுவ காவலரன் மீதான தாக்குதலையும் 

EPRLF அமைப்பு  புல்லுமலை உட்பட வேறு சில இடங்களில் தூரத்தில் இருந்து மோட்டார் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு இருந்தாலும் 

மட்டு அம்பாறை மாவட்டங்களில் TELO அமைப்பு எந்த தாக்குதல்களையும் நிகழ்த்தவில்லை என்பதே நிதர்சனமாகும் 

இவ் அமைப்புக்கள் இவ்வாறு குறிப்பிட்டுக் கூறும்படியான எந்த ஒரு ராணுவத் தாக்குதல்களையும் மட்டு அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அல்லாது திருகோணமலை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு இடத்திலும் நடத்தவில்லை என்பதையும் உறுதியாக பதிவு செய்து,
 
ஈரோஸ் இயக்கத்தின் இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமைதாங்கிய போராளி பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம் அவர்கள், 1987 ஆம் ஆண்டு  6ஆம் மாதம் 22ஆம் திகதி மருத்துவமனையில் தங்கி இருந்த வேளையில் விசேட அதிரடிப்படையின் தாக்குதலில் வீரமரணமானார் என்பதோடு, அவரது சகோதரர் விமலநாதன் என்ற பாக்கியராசா ரவியும் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருக்கும் போது களத்தில் சமராடி வீரமரணமானார் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன்.

அத்தோடு ,

இந்த தாக்குதல் மட்டும் அல்லாது மட்டு மாவட்டதின் புனானைப் பகுதியிலும்  ஶ்ரீலங்கா ராணுவத்திற்கு எதிராக தாக்குதலைச் செய்து ஆயுதங்களை கைப்பற்றிய ஈரோஸ் இயக்கமே தமிழீழ பிரதேசங்களுக்கு வெளிய முதல் முதலாக குண்டு வெடிப்பு தாக்குதல்களையும் நடத்தி இருந்தது.  

இது இவ்வாறு இருக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் மற்றைய மக்கள் விரோத இயக்கங்கள் யாவும்  தடை செய்யப்பட்டபோதும், அது தமிழீழ விடுதலைப் புலிகளால் எந்த விதத் தடையும் இன்றி தொடர்ந்தும் இயங்கி வந்தது.

ஆனால் 

முதலாம் கட்ட ஈழப்போரின் பின்னர்  இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில், ஈரோஸ் இயக்கம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  விடுதலைப் புலிகளின் அன்றைய மட்டு அம்பறை சிறப்பு தளபதியான  கருணா ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் மக்கள் மத்தியில் பதிவு செய்தார் என்றாலும், 

புலிகளின்  அறிவுறுத்தலின் படி ஆகஸ்ட் மாதம் முதாலாம் திகதி 1990 ஆம் ஆண்டு ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் வே.பாலகுமார் அவர்களால் ஈரோஸ் இயக்கம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாது  ஈரோஸ் அமைப்பின் ராணுவப் பொறுப்பாளரான சங்கர் ராஜீ அவர்களின் தலைமையில் 
ஈரோஸ் அமைப்பில் சிலர் இயங்க முற்பட்டாலும் அந்த எண்ணம் ஈடேறவில்ல. மாறாக ஈரேஸ் அமைப்பின் ஒரு தலைவர் வே. பால குமார் மற்றும் முக்கிய உறுப்பினரான பரா எனப்படும் பரராஜசிங்கம் மற்றும் சில ஈரோஸ் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தமிழீழ விடுதலை புலிப் போராளிகளானார்கள். 

இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பில் அந்த அமைப்பு கலைக்கப்படும் வரை இருந்து  வீரமரணம் அடைந்த ஈரோஸ் போராளிகள் அனைவருக்கும் மாவீரர் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம் வழங்கினார்கள் அந்த வகையில்
விடுதலைப் புலிகளினால் பிரேரிக்கப்பட்ட ஈரோஸ் மாவீரர்கள் பட்டியலில் 
திருகோணமலை மாவட்டதை சேர்ந்த 91 பேரும்
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 44 பேரும்
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 43 பேரும் 
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் 
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும் 
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் 
யாழ்பாண மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும் 
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும்
மேலும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும் 
அத்தோடு  விபரம் அறிவிக்கப்படாத 9 பேருமாக 
மொத்தம் 266 மாவீரர்கள்  என அறிவித்து விடுதலைப் புலிகளால் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளால்,
ஈரோஸ் இயக்க முன்னாள் தலைவர் பாலகுமார் அவர்கள் புலிகளின் மத்திய குழு உறுப்பினராகவும்  
பரா எனப்படும் பரராஜசிங்கம் அவர்கள் தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளராகவும் உள்வாங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் என்பதோடு 
விடுதலை புலிகளில் இணைந்து கொண்ட  முன்னாள் ஈரோஸ் போராளிகள் பலருக்கு தரநிலைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

சுவாமி சங்கரானந்தா🙏

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை போராடி வீரவரலாறான புதியவன் மாஸ்டர்

6 days 6 hours ago

breaking

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம்.

யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் சிங்களவர் அதே பெறுபேறில் சித்தியடைய அதே பெறுபேறுள்ள தான் தரப்படுத்தல் என்ற போர்வையில் புறக்கணிக்ப்பட்டதை கண்டித்து இனி சிங்களவர்களது இந்த பாடத்திட்டத்தைப் படிக்கமாட்டேன் என மறுத்து தனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோது பெற்றோரின் வற்புறுத்தலில் தாயகத்தைவிட்டு 1980 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து யேர்மனியில் தஞ்சமடைந்தார்.

 

அங்கு சென்ற காலத்திலேயே தனது விடுதலைக்கான பணியினை ஆரம்பித்து அன்றைய இக்கட்டான நெருக்கடி நிறைந்த சூழ்நிலைகளில் எந்தவித பயமும் இன்றி விடுதலைப் போராட்டத்திற்கான நிதி திரட்டுதல். விடுதலைப் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கிலான பரப்புரைப் பணிகளையும் துணிச்சலுடன் முன்னெடுத்தார். அன்றைய காலத்தில் யேர்மனியில் சிறிலங்கா கைக்கூலிகளினாலும் மாற்றுக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிலை நிறுத்தியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இதன் விளைவாக யேர்மனிய அரசால் கைது செய்யப்படும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் மிகக் காத்திரமானதாக அமையப் பெற்றிருந்தது.  பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாததால் சிறையிலிருந்து விடுவித்த போது யேர்மனிய அரசு இவருக்கு வழங்கிய 8000 டொச்மார்க்குகளை அமைப்பின் செயற்பாடுகளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.

1992ம் ஆண்டு தமிழீழம் திரும்பிய புதியவன் மாஸ்டருக்கு இயக்கத்தில் நேரடிப் பணிகள் காத்திருந்த போதும் அவர் இயக்கத்திடம் வைத்த பிரதான கோரிக்கை தான் இயக்கத்தின் அடிப்படைப் பயிற்சியினை எடுக்கவேண்டும் என்பதாகும். அவரது வயது முதிர்ச்சியை கருத்திற்கொண்ட இயக்கம். அவர் ஒரு முழுமையான போராளியாக அடிப்படைப் பயிற்சி இன்றியே பணியாற்றலாம் என்றபோதும் அவர் அடிப்படைப் பயிற்சி எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக நின்று பயிற்சியினை எடுத்து இதயபூமி 1 எனப் பெயரிடப்பட்ட மணலாறு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையிலும் பங்குபற்றினார். கராத்தேயில் கறுப்புப் பட்டியைப் பெற்றிருந்த புதியவன் மாஸ்டர் என்றுமே இயக்கப் பயிற்சிகளில் சளைத்தவர்

அல்ல. புதியவன் மாஸ்டரின் வெளிநாட்டு நிர்வாக அனுபவத்தை தமிழீழத்தில் பயன்படுத்த விரும்பிய இயக்கம். அவரை மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் செயலாற்ற வழிவகை செய்தது. அரசியல் செயற்பாடுகளையும் சண்டைக் களங்களையும் எதிர்கொள்ளும் ஒரு போராளியே முழுமை பெறுகின்றான் என்ற அடிப்படையில் போரையும் அரசியலையும் போராளிகள் மத்தியில் அனுபவப் படங்களாக்கிப் போராளிகளைப் புடம்போட்டு வளர்க்கும் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் எதற்கும் தயங்காத போராளியாகத் தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் பொறுப்புகளையும் சண்டைக் களத்திலும் சரி அரசியல், நிர்வாகப் பணிகளிலும் சரி நேர்மையாகச் செய்து முடிப்பவரே புதியவன் மாஸ்டர்.

 1992 இல் அடிப்படைப் பயிற்சியை முடித்து வந்த புதியவன் மாஸ்டர் நந்தவனத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றார். நந்தவனம் என்பது தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து மீண்டும் தமிழீழம் வருவோருக்கான வதிவிட அனுமதியை வழங்குவது முதற்கொண்டு அவர்களுக்கான பலதரப்பட்ட தேவைகளையும் நிறைவாக்கிக் கொடுத்து. புலம்பெயர் தமிழர்களின் உறவுப் பாலமாகச் செயலாற்றி நின்ற செயலகமாகும். இத்தகைய நந்தவனத்தின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து அதியுயர்ந்த பொறுப்புகள் வரையில் பலவிதமான செயற்பாடுகளையும் மிகத் திறம்படச் செய்த போராளிகளில் முன்னுதாரணமான ஒருவர் புதியவன் மாஸ்டர். அவர் செயலாற்ற ஆரம்பித்த காலம் முதல் 2009 மே 18 வரையில் நந்தவனக் கட்டுமானத்தின் செயற்பாடுகளிலும் வளர்ச்ச்சியிலும் விரிவாக்கத்திலும் நற்பணிகளிலும் புதியவன் மாஸ்டரின் பங்களிப்பென்பது தவிர்க்கமுடியாது பின்னிப்பிணைந்திருக்கும் மகத்துவம் மிக்கது.

மண்கிண்டி மலைத் தாக்குதலின் பின்னர் நிர்வாகப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த புதியவன் மாஸ்டருக்கு 1996 இன் பின்னர் இடையிடையே குட்டிசிறி மோட்டர் படையணியின் சண்டைக் களங்களுக்குச் சென்றுவர வாய்ப்புகள் கிடைத்தபோதும், 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவு பரந்தன் கள முனைப்பகுதியில் கனரக கிட்டு ஆட்டிலறிப் படையணியில் மொங்கன் எனப் பெயரிடப்பட்ட ஆயுதத்தில் சண்டையிடும் வாய்ப்புக்கிட்டியது. அதனையும் தனக்கே உரிய பாணியில் திறம்படச் செய்தவர் பின்னைய நாட்களில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்லறிப் படையணியில் 130MM ஆட்டிலறி போன்ற பல வகையான ஆட்லறிகளை எதிரிக்கு எதிராக ஏவிச் சண்டையிடும் சமர்க்களப் பணிகளை மிகத்துணிவுடன் செய்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் தாயகக் கட்டுமானம்  என்பது நந்தவனம், ஆவணக்காப்பகம், மாவீரர் படிப்பகம், இராசன் அச்சகம், அறிவியல் கல்லூரி, அரசறிவியல் கல்லூரி, ஊடக மையம், தொண்டு நிறுவனம், சுற்றுலா விடுதிகள், தொலைத்தொடர்பு நிலையங்கள் எனப் பல கட்டுமானங்களைக் கொண்டது. இக்கட்டுமானங்கள் பலவும் லெப். கேணல் தரப் போராளிகள் பலரினால் நிர்வகிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுமானங்கள் பலவற்றிலும் அனைத்துலகத் தொடர்பகத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான புதியவன் மாஸ்டர் செயல் திறன் மிக்க போராளியாகவும், இடைநிலைப் பொறுப்பாளராகவும், ஆவணக் காப்பகம் போன்ற சிலவற்றின் பொறுப்பாளராகவும் செயலாற்றிய காத்திரம் மிக்க பொறுப்பாளர்.

1992ம் ஆண்டு தமிழீழம் வந்த புதியவன் மாஸ்டருக்கு அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக ஒருசில ஆண்டுகளிலேயே இயக்கத்தின் ஏற்பாட்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண இணையராகி இருவரும் இணைந்து வயதுவந்த போராளிகளுக்கான திருமண ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்துவைப்பதற்குப் புதியவன் மாஸ்டர் ஆற்றிய பங்கென்பதும் அவரது விடுதலை வரலாற்றின் இன்னொரு அத்தியாயமே. விடுதலைக்காக அயராது உழைத்ததன் விளைவாக இவர்களுக்கு குழந்தை வாய்ப்புகள் பலதடவைகள் வந்து கரைந்து போயிற்று. இத்தகைய சூழலில் இயக்கத்தினதும் குடும்ப உறுப்பினர்களினதும் சகபோராளிகளினதும் நண்பர்களினதும் அன்புரிமை கலந்த வேண்டுதல்களுக்கு அமைய செயற்பட்டு அன்புக்குழந்தைச் செல்வத்தினை பெற்றெடுத்தனர். குழந்தை பிறந்து சில ஆண்டுகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் இறுதிநாள் வந்தது.

போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இராணுவத்திடம் சரணடைகின்றனர். குழந்தையும் கையுமாகப் போராளி. மனைவி மற்றும் சக போராளிகள் பலரும் தணியாத விடுதலை மீதான தாகத்தைச் சுமந்தபடி கையறு நிலையில் விடுதலைக்காகப் போராட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரும் என்ற நம்பிக்கையுடன் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

வாழ்வின் எல்லா இடங்களிலும் தன்னை மறைத்துத் தன் மனைவியை முன்னிறுத்திய புனிதப் போராளி புதியவன் மாஸ்டர் தனது மனைவியால் மகனைப் பாதுகாக்க முடியும் என்ற பூராண நம்பிக்கையுடனும், என்றுமே போராளிகளின் மனதைப் புண்படுத்தாத புதியவன் மாஸ்டர் இராணுவத்திடம் சரணடையத் தீர்மானித்துவிட்ட சக போராளிகளின் மனம் புண்படாத படியும் அவர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறான கதைகள் சொல்லிவிட்டு போர்க்களம் நோக்கிப் போகின்றார்.

ஆம்! அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. எப்போதுமே எவர்மனதையும்

புண்படுத்திவிடாது விடுதலைக்காய் அப்பழுக்கின்றி செயலாற்றிய உறுதியின் வடிவமாகிய அந்த உத்தம வீரர், வாழ்வின் எல்லாக் கால கட்டங்களிலும் சலசலப்புக்காட்டாது தளராத உறுதியுடனும் தன்னடக்கத்துடனும் வாழ்ந்தது போன்றே இறுதிக் கணத்திலும் அப்படியே உறுதியின் வடிவமாகி 18 மே 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். எம் நினைவெல்லாம் நிறைந்த புதியவன் மாஸ்டர் இன்று எம்முன்னே விடுதலையின் வித்தாகி, தமிழீழத்தின் வீர வரலாறாகி நிற்கின்றார்.

 

 

நன்றி 

சூரியப்புதல்வர்கள் -2023

https://thaarakam.net/news/70226046-07e7-4efc-9a34-aeade4aa04e3

"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?"

1 week 3 days ago
"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?"
 
 
சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் உடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை ஊர்வம்பாய் பேசப்பட்டன. இதை "அம்பல்" என்றும் "அலர்" என்றும் சங்க கால மக்கள் வழங்கி வந்தனர்.
 
"அம்பல்" என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் கருத்து கொள்ளலாம். இது ஒரு வித கிசுகிசு என்று கூட சொல்லலாம். ஊர்வம்பு என்றாலே பொதுவாக பெண்களையே குறிக்கும். "தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்" என்று நற்றிணையில் கபிலர் கூறுகிறார். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும் என்று பொதுவான கதை உண்டு. கூடியிருந்து முணுமுணுத்துப் அடுக்களைப் புகையைப் போல அதை பரப்புவார்களாம்.
 
எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையிலே ஒரு காட்சி வருகின்றது. ஒரு பெண் ஆடவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அதைத் தெரிந்து கொண்ட அயல் பெண்கள்; அந்தப் பெண்ணின் தாய் தெருவில் போகும் போது கடைக்கண்ணால் பார்த்து தம் மூக்கின் மேல் சுட்டுவிரலை வைத்து அவளை இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள். அவமானத்தால் குறுகிப் போன தாய் வீடு திரும்பி வந்து காதலித்து தனக்கு வசை தேடித்தந்த தன் மகளைத் தடி எடுத்து நன்றாக அடித்து விடுகின்றாள். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
மேலும் இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ ஓடி விடுவது தான். ஊரைப் பற்றிக் கவலைப்படாதே.. எப்போதும் அலர் தூற்றும் ஊர்..  அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் தோழி!!
 
 
"சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப
அலந்தனென்; வாழி தோழி! கானல்
புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு
செலவு, அயர்ந் திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!"
[நற்றிணை - 149]
 
 
இன்று எத்தனையோ பெற்றார் காதலித்தவனோடு மகள் ஓடிவிட ஐயோ முதலே தெரிந்திருந்தால் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாமே என்று கவலைப்படுவதைக் காண்கின்றோம். என்னுடைய அறியாமையால் பிள்ளை போய்விட்டதே என்று தன்னைத்தான் நொந்து கொள்ளும் ஒரு தாயின் அவலத்தை காண்கின்றோம். இது போல மகளை நினைத்து ஏங்கும் தாயை அகநானூற்றிலும் காண்கிறோம்! தலைமயிரும் [கூந்தலும்] சுருண்டு படிந்துள்ளது. முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் என்னும் இயல்பினை அமைந்தனள் -என்று- என் கண்களே பல முறை பார்த்து எனது நெஞ்சமானது நேற்றும் ஐயுற்றது. அதன் பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்யாது விட்டேன் என புலம்பும் ஒரு தாயை இங்கு காண்கிறோம். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
அவள் நடக்கும்போது ஒலிக்கும் தன் காலிலுள்ள சிலம்பைக் கூடக் கழற்றி வைக்காமல் சென்றுவிட்டாள்... என்னை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்..... இவள், என் மகள்... தரிசு நிலத்திற்கு போனாலோ? ... சுனையில் நீர் இல்லாததால் அங்கே புறா புதிய நெல்லிக்காயை குத்தி சாப்பிடுங்கள், அங்கே வறண்ட தண்டுகள் மற்றும் நெல்லிக்காய்கள் மேற்கு காற்றினால் கீழே விழுந்து  குவிந்து கிடந்தது பளிங்கு போல் தெரியும். அப்படியான வறண்ட நிலத்தைக் கொண்ட  காட்டு வழியில் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை.. கையில் கூர்மையான வேல் வைத்திக்கும் காளை போன்றவனுடன் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை..  காளையின் பொய்யுரையை நம்பிச் சென்று கொண்டிருப்பாளோ?..... இல்லை..  தேக்கின் அகன்ற இலைப்புதர் போல் தோன்றும் குடிசையில் வாழும் கானவர் சிறுகுடி முற்றத்தில் வேகவைத்த புலால் உணவை உண்டு கொண்டிருப்பாளோ?... புலம்புகிறாள் தாய் !!
 
 
"கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும்
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே."
[அகநானூறு 315]
 
 
பெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும் வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
 
 
சங்க காலத்திலே குழந்தைப் பருவம் முதல் பெண்கள் அணிந்திருக்கும் சிலம்பை அவர்களின் திருமணம் நடப்பதற்கு முன்பு அகற்றுவார்கள். அதனைச் சிலம்பு கழிதல் என்பார்கள். இன்றைய வளைகாப்பு போல அந்த நிகழ்வும் விழாவாக நடைபெற்றுள்ளது போலும்.
 
ஒரு வசதியான குடும்பத்துப் பெண் தன் ஏழைக் காதலனோடு ஓடிச் சென்று விடுகிறாள். கணவன் வீட்டிலே அவளின் சிலம்பு அகற்றும் விழா நடக்கின்றது எளிமையாக! அதைப் பெண்ணின் தாய் கேள்விப் படுகின்றாள். ஐயோ என் பிள்ளைக்கு புல்வேய்ந்த குடிசை வீட்டில் வறுமையுடன் விழா நடக்கிறதே! எங்கள் வீட்டில் என்றால் எப்படிச் சீரும் சிறப்புமாகச் செய்திருப்போம் என்று வருந்துகிறாள் அந்தத் தாய்!
 
 
"கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,
கொடியோள் முன்னியது உணரேன், ''தொடியோய்!
இன்று நின் ஒலி குரல் மண்ணல்'' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனள் ஆகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
''சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?'' என நோவல் யானே. "
[அகநானூறு 369]
 
 
சீரும் சிறப்பும் இல்லாத அவன் மனை. ஏழைப் பெண்கள் வாழும் புல் வேய்ந்த குடிசை. அதன் முற்றத்துத் தூணில் ஒரே ஒரு பசு மட்டும் கட்டியிருக்கும். ஏதுமில்லாது வறுமையில் வாடும் அந்த மனையில் சிலம்பைக் கழற்றி வைக்கும் திருமணம் நடை பெறுகிறதே என்ற செய்தி அகநானூற்றில் [369] காணப்படுகின்றது.
 
துணிவோடு கல் நெஞ்சத்துடன் நீ அறியாத நாட்டுக்கு, தகைமை இன்றி உன்னை அழைத்துச் செல்லும் சிறுமைக் குணம் படைத்தவனுக்கு ஒத்தவளாகச் சென்றுவிட்டாய். இதுதான் உன் மடமைத் தகுதி என்று ஏசுகிறாள் அந்த தாய் தனது வேதனையில்.. . அது மட்டும் அல்ல, மகளே! என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணிந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர்... அவர்கள் இப்போது தவிக்கின்றனர்... நீ ஊட்டாததால்... நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது.... மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை.... நீ நீர் ஊற்றாததால்.... நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை.... அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை..... இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன்.....
 
அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை... வளையல் அணிந்தவளே!... “இன்று நீ தலை முழுகும் நாள்” என்றேன் [“This is the day of bathing after your menses”] தன்னைத் தாய் 'தலை முழுகப் போகும் நாள்' என்று தாய் கூறியதாக நினைத்து சினந்து நீ வருந்துகிறாய் என புலம்பும் தாயை காண்கிறோம். இங்கே வறுமைப்பட்ட இடத்திலே வாழ்க்கைப்பட்டு விட்டாளே என்ற எண்ணப்பாடுடைய ஒரு தாயைச் சந்திக்கின்றோம்! மகள் புகுந்த வீட்டை விட தன் வீடே பண வசதியில் சிறந்தது என்ற எண்ண ஏற்றத்தாழ்வை இன்றுபோல அன்றும் பார்க்கின்றோம்.
 
பெரியோரை வியத்தலும் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை என்ற சங்கப் பண்பு நெறி அடிபட்டுப் போவதை இங்கே காண்கிறோம்.!
 
இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
19598943_10209661603319648_6327591870321169744_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jHTs3_kMg7AQ7kNvgGp8vQA&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBdQmINvPrusr2DlU6fx2FkldA16pqd7qBnP9DYjEtv6g&oe=6662D0C8 19642295_10209661605679707_959355806057558988_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XiqdvP0cCeUQ7kNvgEV_aJv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAvq6aE-qsBfMYmRR4mbuRyZ8vAxjcw8gN6kQH-Qky5fA&oe=6662DF52 19642539_10209661607559754_6055775717698101424_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ipXDNNeK9G4Q7kNvgGXbFNc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCite062LPw1kwMUULQDUhTQzrO7XStWyGJFD3edd2y_Q&oe=6662C827
 

வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்

1 week 6 days ago

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

 

பாகம் - 01

 

தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது.

இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் பற்றி முதற்கண் பார்ப்போம்.

 

  • பிடாரச்சொற்கள் (Newly coined terms):

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களானோர் சிறிலங்காப் படைத்துறையுடனோ அல்லது இந்தியப் படைத்துறையுடனோ அல்லது தமிழ் தேசவெறுப்புக் கும்பல்களுடனோ மிண்டி ஏற்படும் அடிபாடுகளால் மரணமடையும் போது அச்சாவானது "வீரச்சாவு" என்று புலிகளாலும் தமிழ் மக்களாலும் சுட்டப்பட்டது.  

இவ்வீரச்சாவானது களத்திடை நிகழும் போது "களச்சாவு" என்றும் களத்தில் விழுப்புண்ணேந்தி மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது அஃது பலனளிக்காது சாவடைய நேரிட்டால் "காயச்சாவு" என்றும் சுட்டப்பட்டது. எவ்வாறெயினும் வேறுபாடில்லாமல் பொத்தாம் பொதுவாக "வீரச்சாவு" என்ற சொல்லே பாரிய பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டுள்ளது. "களச்சாவு" என்ற சொல் ஆங்காங்கே இலக்கியத்திலும் இயக்கப்பாடல்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. "காயச்சாவு" என்ற சொல்லின் பாவனையோ புலிகள் கால எழுத்துலகில் என்னால் காணமுடியவில்லை! 

வீரச்சாவடைந்த புலிவீரர் "மாவீரர்" (மா+வீரர்) என்று விளிக்கப்பட்டார். பல்பொருளுடைய இந்த மா என்ற ஓரெழுத்துச் சொல்லானது ஒருவரின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடையாகும். அத்துடன் இக்கூட்டுச்சொல்லானது மிகப் பெரிய பெருமையும் வலிமையும் உடைய வீரர் என்று வீரச்சாவடைந்த அவ்வீரரை குறிக்கிறது. இது ஆகக்குறைந்தது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் வாரத்திலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இச்சொல்லை சரியாக எப்போதிலிருந்து பாவிக்கத் தொடங்கினர் என்பது தெரியவில்லை.

இம்மாவீரரின் சடலமானது "வித்துடல்" (வித்து + உடல்) என்று சுட்டப்பட்டது. இவ்வித்துடல் "துயிலும் இல்லத்தில்" புதைக்கப்படும் செயலானது "விதைத்தல்" என்று அழைக்கப்பட்டது. இச்சொல்லினை, ஒரு தாவரத்தின் வித்து (உவமை) நாட்டப்படும் போது பெரும்பாலும் முளைக்கிறது என்ற நியதியின்படி தமிழ் விடுதலை வீரர்களின் சடலங்களான (உவமேயம்) வித்துடல்கள் விதைக்கப்படும் போது அதனைக்காணும் தமிழர்களும் புதிதாய் இயக்கத்தில் சேர்வார்கள் என்று பொருள்படும் படியான உவமைச் சொல்லாக உண்டாக்கியிருந்தனர்.

"வீரவணக்கம்" என்ற சொல்லானது 1986ம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகள் இதழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டுள்ளது. இது வீரச்சாவடைந்த ஒருவருக்கு செய்யும் வீரமான வணக்கம் என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. ஒருவரின் வீரச்சாவு அறிவித்தல் வெளிவரும் போதோ அல்லது அவரது நினைவு நாள் அறிவித்தலின் போதோ இச்சொல்லானது பாவிக்கப்படுகிறது.

இந்தியப் படைக்குப் பின்னான காலகட்டத்தில் மாவீரர் கல்லறைகளின் தலைப் பகுதியின் மேற்பகுதியிலும் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியிலும் 'வீரம் நிறைந்த புலி' என்ற பொருள்படத் தக்கதான சொல்லான "வீரவேங்கை" என்ற சொல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சொல் தான் தவிபுஇன் அடிப்படைத் தரநிலையும் கூட. இச்சொல்லானது துயிலுமில்லங்களில் பாவிக்கப்பட முன்னர் பொதுமக்களால் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரலாற்று ஆதரங்களும் உள்ளன.

ஈழநாதம்-Eelanatham-1990.12.20.jpg

இம்மாவீரரின் தரநிலையுடனான இயக்கப்பெயருக்கு மேலே "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. படிமப்புரவு: ஈழநாதம் 1990.12.20 | பக்கம் 2

ஆகக்குறைந்தது 20/12/1990 அன்று தொடக்கமாவது "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்ட்டிருப்பதை அற்றை நாளில் வெளியான ஈழநாதம் நாளேடு மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. அற்றை நாளேட்டில் 'லெப். சுஜி' என்ற மாவீரரின் 45ம் நாள் நினைவஞ்சலி பதிவில் அவரது தரநிலைக்கு மேலே வீரவேங்கை என்ற இச்சொல் எழுதப்பட்டுள்ளது. அதாவது கல்லறை மற்றும் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே - அதிலும் அவை தோற்றம் பெற முன்னரே - இச்சொல் அவற்றில் பாவிக்கப்பட்டிருந்த விதத்தைப் போல பாவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சொற்கள் யாவும் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்கள் நடுவணில் பரவலறியாகி புழக்கத்திற்கு வந்தன. இன்றளவும் புழக்கத்தில் உள்ளன.

 

  • புழக்கச் சொற்களின் பாவனை

அப்படியானால் இச்சொற்களிற்கு முன்னர் எத்தகைய சொற்கள் பாவனையில் இருந்தன என்று உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். 

இதற்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்று மேற்கூறப்பட்டவை போன்ற தனியான பிடாரச் சொற்கள் (newly coined terms) இருந்ததில்லை. பொதுவாக மக்கள் நடுவணில் புழக்கத்திலிருந்த சொற்களே புலிகளாலும் கையாளப்பட்டன; வீரமரணம், Body (த.உ.: பொடி) அ புகழுடல், தகனம் அ புதைத்தல் ஆகியனவே அவையாகும்.

எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதியில் வெளியான புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இதழில் தமிழீழ விடுதலை போரின் முதல் மாவீரரான லெப். சங்கரின் வீரச்சாவின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி ஓர் சுவரொட்டி வெளியாகியிருந்தது.

Lt. Shankar 2nd year poster - 1984 dec.png

படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1984 திசம்பர்

இச்சுவரொட்டியில் அன்னாரின் தரநிலையுடன் இயக்கப்பெயருக்குப் பகரமாக முதலெழுத்துடனான இயற்பெயரே வழங்கப்பட்டுள்ளது. இயக்கப்பெயரானது மாற்றுப்பெயராக தரநிலையுடன் கீழே வழங்கப்பட்டுள்ளதைக் காண்க. இம்முறைமையானது, "லெப்டினன்ட்" வரையான தரநிலை உடையோருக்கு மட்டுமே 1987ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிவந்த அனைத்து "விடுதலைப்புலிகள்" இதழ்கள் மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. 

எனினும், கப்டன் முதல் லெப். கேணல் ஈறான தரநிலைகளிற்கு பிற்காலத்தில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்ட 'தரநிலையுடனான இயக்கப்பெயர்' என்ற முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான விடுதலைப்புலிகள் இதழில் "கப்டன் ரஞ்சன் லாலா" என்று ஒரு போராளியின் (அடிக்கற்களில் ஒருவர்) வீரச்சாவு குறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பிற அடிக்கற்களில் சிலரான லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ் உள்ளிட்டோரின் விரிப்புகளும் விடுதலைப்புலிகள் இதழில் வெளியாகியுள்ளன. 

மேலும், அச்சுவரொட்டியில் வீரச்சாவு என்ற சொற்பதத்துக்குப் பகரமாக "வீரமரணம்" என்ற சொற்பதத்தையே தொடக்கத்தில் பாவித்துள்ளனர். இச்சொல்லானது 1992 நடுப்பகுதி வரை பாவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரிருந்து "வீரச்சாவு" என்ற சொல் பாவானைக்கு வந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வீரமரணம் என்ற சொல்லும் சமாந்தரமாக கையாளப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலும் இதற்குப் பின்னான காலப்பகுதியிலும் "களப்பலி" (களச்சாவு என்ற சொல்லுக்கு ஈடான சொல்) பாவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போரின் தொடக்க காலத்திலிருந்து 1991 இன் ஒரு குறித்த (சரியான காலம் தெரியவில்லை) காலம் வரை போராளிகளின் வித்துடல்கள் "பொடி/Body" என்றுதான் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் விளிக்கப்பட்டுவந்தது. ஆயினும் ஆகக்குறைந்தது எழுத்து வழக்கிலாவது 1991ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்திலிருந்து "புகழுடல்" என்ற சொல்லானது போராளிகளின் வித்துடல்களைக் குறிக்க பாவிக்கப்பட்டது என்ற தகவலை 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து அறியமுடிகிறது. பிடாரச்சொல்லான "வித்துடல்" என்ற சொல் புலிகள் அமைப்பில் பாவனைக்கு வந்த காலத்தை அறியமுடியவில்லை. 

தொடக்க காலத்தில் போராளிகளின் வித்துடல்கள் சுடுகாடுகளில் தகனப்பட்டன அ இடுகாடுகளில் புதைக்கப்பட்டன. அதனைச் சுட்ட தகனம் அல்லது எரியூட்டல் மற்றும் புதைத்தல் போன்ற வழக்கமான சொற்கள் பாவிக்கப்பட்டன.

புலிகள் அமைப்பில் வித்துடல்களை விதைக்கும் பழக்கம் ஏற்பட்ட 1991ஆம் ஆண்டிலும் "புதைத்தல்" என்ற சொல்லே இச்செயலைச் சுட்டப் பாவிக்கப்பட்டுள்ளது. விதைத்தல் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது அலுவல்சார் கட்டுரை வெளிவந்த ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டில் கூட "புதைத்தல்" என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது! எவ்வாறெயினும் "விதைத்தல்" என்ற சொல்லின் பாவனை தொடங்கப்பட்ட காலத்தையும் அறியமுடியவில்லை.

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

"பல வகை நீர் நிலைகள்"

2 weeks 2 days ago
"பல வகை நீர் நிலைகள்"
 
 
பல வகை நீர் நிலைகளை தமிழ் மொழியில் நாம் காண்கிறோம் அவை:
 
"இலஞ்சி, கண்ணி, எரி, மடு, வாவி, வட்டம், நளினி, குட்டம், குளம், கயம், கோட்டகம், மலங்கன், ஓடை, சலந்தரம், தடாகம், பொய்கை, கிடங்கு, கற்சிறை, கிணறு, கேணி, துரவு. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறை கிணறு, ஊருணி, ஊற்று,கட்டு கிணறு, கண்மாய் (கம்மாய்), கலிங்கு, கால், கால்வாய், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை, தடம், தளிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக் குளம், தொடு கிணறு, நடை கேணி, நீராவி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு, மடை, மதகு, மறு கால், வலயம், வாய்க்கால்"
 
என 50 இற்கு மேற்பட்ட சொற்களை காண்கிறோம்.
 
எந்த ஒரு மொழியில் ஆவது இத்தனை சொற்கள் நீர் நிலைக்கு உண்டா?
 
அப்படி என்றால் தமிழில் மட்டும் எப்படி இத்தனை சொற்கள் வந்தன? இது தான் நாம் கவனிக்க வேண்டியது.
 
அதாவது தமிழனின் வாழ்வு, நாகரிகம் ஆதியில் இருந்து இன்றுவரை நீர் வளத்துடன் அமைந்ததே இதற்கு காரணம் என நாம் இலகுவாக கருதலாம். அதனால் தான் நீர்பாசனம் அங்கு முக்கியம் அடைகிறது.
 
அந்த நீர்பாசன முறை, பொறி முறையாக்கப்பட்டது தான் ஆதித் தமிழரின் அதி உன்னத வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பதே உண்மை. அதனால் தான் இத்தனை சொற்கள் போலும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
No photo description available. 

புலிகளின் காலத்திய 212 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு

3 weeks ago

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

 

பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர்களின் போர்க்காலத்திய வாழ்வானது பாடல்களின் மூலமாக காட்டப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை ஈர்ந்தும் பல வரலாறுகளையும் சாதனைகளையும் படைத்த தமிழீழ விடுதலைப் போரின் பக்கங்கள் பாடல்களாக புலிகளின் காலத்தில் வெளிடப்பட்டன. இவை புலிகளின் அனுமதிபெற்று அவர்களின் வரமுறைகளுக்கு உட்பட்டு புலிகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ வெளிநாட்டுக்கிளைகள் ஊடாக வெளியிடப்பட்டன. பேந்து, நான்காம் ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, புலிகளுக்குப் பின்னான காலத்திலும், வெளிவந்துகொண்டுள்ளன. 

இப்பாடல்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் பின்னாளில் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் வெளிவந்தன. 1990இற்கு முன்னர் வந்த பாடல்கள் தனிப்பாடல்களாகவும் பின்னாளில் தனிப்பாடல்களாகவும் இறுவெட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. இப்பாடல் ஆக்கத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்களித்திருந்தனர். 

இப்பாடல்கள் யாவும் "இயக்கப்பாட்டு" என்றும் "புலிப்பாட்டு" என்றும் மக்கள் நடுவணில் அறியப்பட்டுள்ளன. இலக்கியங்களில் "விடுதலைப் பாடல்கள்", "போர்க்காலப் பாடல்கள்", "இயக்கப்பாடல்" என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன.

இவற்றின் பாடல்வரிகள் போரின் பல பக்கங்களை பல கோணங்களில் விதந்துரைப்பவையாக எழுதப்பட்டிருந்தன. 

தமிழீழ மக்களின் வாழ்வு, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போரிற்கு ஆட்சேர்ப்பித்தல், போராளிகளின் களவாழ்வு, படைத்துறைக் கிளைகள், கரும்புலிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்தம் வாழ்க்கை, வலிதாக்குதல் நடவடிக்கைகள், விடுதலைப்போரிற்கு ஆதரவளிக்கும் சிங்கள/இந்திய வன்வளைப்பு வாழ் மக்களின் வாழ்வு, போராளிகளின் வீரச்சாவுகள், துயிலுமில்லங்கள், இடப்பெயர்வு அவலங்கள், படுகொலை அவலங்கள், வழிபாட்டுத் தலப் பாடல்கள் என விடுதலைப்போரின் அனைத்துக் கூறுகளும் பாடல்களாக வடிப்பிக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு வெளிவந்த பாடல்களில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வெளிவந்த, புலிகளின் காலத்திய, மொத்தம் 209 இறுவெட்டுகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளேன். நான் தொகுத்ததைத் தவிர வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனைத் தொகுக்க தெரிவித்துதவுமாறு கேட்டுள்கொள்கிறேன்.

இவை எதிர்காலத்தில் புலிகளின் காலத்திய பாடல்களுக்கும் நான்காம் ஈழப்போரிற்குப் பிறகு வெளிவந்த பாடல்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவதோடு இருவேறு காலத்திய பாடல்களை இலகுவாக அடையாளம் காண உதவும் என்று நம்புகிறேன்.

 

ஆக்கம் & வெளியீடு 
நன்னிச் சோழன்


*****

 

"வீரனும் அறவழி போரும்"

3 weeks 1 day ago
"வீரனும் அறவழி போரும்"
 
 
உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம்- மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல்
 
"Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds."
 
இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:
 
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”
["சத்ரபதி சிவாஜி"/ பாரதியார்]
 
என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது. இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:
 
"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight."
 
"குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!
(கீதை 2-37)"
 
மேலும் போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி, எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை, எம் மூதாதையர்கள், தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள்.
 
அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.
 
சங்க காலம் என்பது கி.மு. 700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.
 
அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.
 
இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் / இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
 
ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல்.
 
அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும், தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) இது காணப்படுகிறது. [Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்:
 
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"
 
பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.
 
அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.
 
அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 

கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு  நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! 

3 weeks 4 days ago

 

 
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு  நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! 
 

 — எம்.எல்.எம். மன்சூர் —

கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு  நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! 

அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த  Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. 

அவருடைய கம்பெனி 1949 – 1951 காலப் பிரிவில் பட்டிப்பளை ஆற்றை மறித்து, இரண்டு மலைகளை இணைக்கும்  விதத்தில் உருவாக்கிய கல்லோயா அணைக்கட்டும், 35  சதுர   மைல் பரப்பளவைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான சேனாநாயக்க சமுத்திரமும் இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விவசாய – பொறியியல் துறை சாதனைகள்.

1957 டிசம்பர் மாதம் கிழக்கில் இடம்பெற்ற பெரு மழையின்  போது கல்லோயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்க முடியும் என்ற விதத்தில் ஒரு பாரிய அச்சம் நிலவியது. அச்சந்தர்ப்பத்தில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபை  நிலைமையின் தீவிரத்தை விளக்கி,  அக்கம்பெனிக்கு ஓர் அவசரத் தந்தியை அனுப்பி வைத்தது. 

‘Galboard’ என்ற தந்தி முகவரிக்கு உடனடியாக கிடைத்த பதில் இது:  

“அணைக்கட்டின் இருபுறங்களும் இணைக்கப்பட்டிருக்கும் மலைக் குன்றுகளின் வலிமையை பரீட்சித்துப் பார்க்கவும்” (Check the strength of the two rocks to which the dam is connected to).

தம்மால் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டின் வலிமை குறித்து Morrisons – Knudson   கம்பெனி வழங்கிய மறைமுகமான உத்தரவாதம் அது. 

1949 இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் முதலாவது மிகப் பெரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான “கல்லோயா திட்டம்” இவ்வாண்டில் அதன் 75  ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூருகிறது.

நிதி அமைச்சின் செயலாளராக இருந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிவில் சேவை அதிகாரியான Huxham என்பவர் 1949 – 1952 காலப் பிரிவில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் (GODB)  தலைவராக இருந்து வந்தார். ஆனால், அத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேகத்திற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டிருந்த பாரிய சவால்களுக்கும் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் டி எஸ் சேனாநாயக்க (அப்பொழுது காணிகள் ஆணையாளராக பணிபுரிந்து வந்த) கே கனசுந்தரத்தை தனிப்பட்ட முறையில் அழைத்து ‘நீங்கள் கட்டாயமாக இப்பணியை பொறுப்பேற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் தனது அரச சேவை ஓய்வூதியத்தை இழக்க வேண்டி நேரிடும் என்பதனை நன்கு அறிந்திருந்த போதிலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் கனகசுந்தரம் அப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். 

அது பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவின்  அரசியல் தலைமையின் கீழும், கனகசுந்தரம் என்ற தமிழ் சிவில் சேவை அதிகாரியின் நிறைவேற்றுத் தலைமையின் கீழும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான முயற்சி. சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் மலே ஆகிய இனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி, பெருந்தொகையான வெளிநாட்டு சிவில் பொறியியலாளர்கள், அணைக்கட்டு வல்லுனர்கள், வனவளம் தொடர்பான நிபுணர்கள், கட்டடக் கலைஞர்கள், இயந்திரப் பொறியியலாளர்கள் ஆகிய பன்முகத் திறன்களை கொண்டிருந்த  ஓர் அணியின் கூட்டு உழைப்பு அது. 

அத்திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிட்டத்தட்ட 1400  சதுர மைல் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்ததுடன், அப்பிரதேசம் முழுவதும் நேரடியாக கல்லோயா அபிவிருத்திச் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.          அந்நிலப்பரப்புக்குரிய அரசாங்க அதிபரின் அதிகாரங்கள் மட்டுமன்றி, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்குரிய அதிகாரங்களும், கருமங்களும் இச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. 

அந்த விதத்தில் அச்சபையின் தலைவர் என்ற முறையில் கனகசுந்தரம் அபரிமிதமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.

பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் இரு சமூகங்கள் செறிந்து வாழ்ந்து வந்த (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசனவியல் தொகுப்பை (Demographic Composition) சிதைத்து, கிழக்கை சிங்களமயமாக்கும் பேரினவாத செயல்திட்டத்தின் ஒரு பாகமாகவே பொதுவாக “கல்லோயா திட்டம்”  சிறுபான்மை சமூகங்களால் நோக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

1952 இல் ஒரு நாள் கொழும்பு – மட்டக்களப்பு ரெயில் வண்டியில் எஸ் ஜே வி செல்வநாயகம் கே. கனகசுந்தரத்தை தற்செயலாக சந்தித்த பொழுது கூறிய பின்வரும் வார்த்தைகள் அந்தக் கண்ணோட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்: 

“Young man –  Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?” 

அக்கேள்விக்கு GODB தலைவர் பின்வருமாறு பதிலளித்ததாக கூறப்படுகிறது –

“அப்படி இல்லை…….  நான் கேகாலையில் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய காலத்தில் கண்டிய சிங்களவர்களின் கடும் வறுமையையும், காணிப் பிரச்சினையையும் நேரில் பார்த்திருக்கிறேன். கல்லோயாவில் புதிய குடியேற்றங்கள் அமைக்கப்படவிருக்கும் பிரதேசங்கள் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பிரதேசங்கள். புராதன காணிகள் (Purana Lands) என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் கிராம விஸ்தரிப்புக்கென தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  போதிய நிலப்பரப்புக்கள் இருந்து வருகின்றன.” 

கே கனகசுந்தரத்தின் புதல்வரான அஜித் கனகசுந்தரம் “60 ஆண்டுகளுக்குப் பின்னர்  கல்லோயா திட்டம் குறித்த ஒரு மீள் பார்வை” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரை (சன்டே ஐலன்ட், 2016 செப்டம்பர் 18, 25) பெருமளவுக்கு சர்ச்சைக்குரிய இந்தத் தலைப்பு தொடர்பாக முன்முடிவுகள் எவையுமின்றி, நிதானமான ஒரு பார்வையை முன்வைக்கின்றது –

“அநேகமாக இப்பொழுது எவரும் கல்லோயா திட்டத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் சுமார் 20 வருட காலம் அது நவீன சுதந்திர இலங்கையின் முகத்தோற்றத்தை வெளியுலகுக்கு பிரதிபலித்து வந்திருக்கிறது. பின்னர் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமுல் செய்யப்பட்ட மகாவலி திட்டம் போன்ற பிரமாண்டமான திட்டங்கள் கல்லோயா திட்டத்தின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்தன. ஆனால்,  ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மதிப்பிடப்பட வேண்டிய தர நியமத்துக்கான உரைகல்லாக கல்லோயா திட்டமே இன்னமும் இருந்து வருகின்றது.” 

“………. இலட்சிய ரீதியாக காரியங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான உதாரணம் கல்லோயா திட்டம். அது முழுக்க முழுக்க தேசிய நிதி வளங்களை பயன்படுத்தி, உள்நாட்டு நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டம். காடுகளை துப்புரவு செய்தல், குடியேற்றவாசிகளை குடியமர்த்துதல், புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் என்பன  எல்லாமே திட்டமிட்ட அதே விதத்தில் உரிய காலகெடுவுக்குள் துல்லியமாக நிறைவேற்றப்பட்டன. இங்கு முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் உபகரணங்களின் கொள்வனவுக்கென பல கோடி ரூபாக்களை செலவிட வேண்டியிருந்த போதிலும் திட்டம் முழுவதிலும் ஊழல், மோசடி, முறைகேடுகள் என்பன குறித்த எத்தகைய குற்றச்சாட்டுக்களும் எழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.”

“………..எனது தந்தை கே கனகசுந்தரம் கல்லோயா அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த காலத்தில் (1952 – 1957)  கொழும்பில் ஒரு வீட்டை கட்டினார். அச்சந்தர்ப்பத்தில் கட்டடப் பொருட்களுக்கான கொள்வனவு கட்டளைகளை அவர் ஒருபோதும் தனது பெயரில் அனுப்பி வைக்கவில்லை. அவ்வாறு செய்தால் வழங்குனர்கள் தனக்கு நியாயமற்ற விலைக் கழிவுகளை பெற்றுத்தர முடியும் என அவர் அஞ்சினார்…….”  

“டி எஸ் சேனாநாயக்க சிங்களவர்களுக்கு சார்பானவர்; ஆனால் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல. சரியாக சொல்வதானால் அவரிடமிருந்தது ஒரு விதமான கொவிகம / வெள்ளாளர் சாதி அபிமானம்” என்கிறார் அஜித் கனகசுந்தரம்.

இக்கட்டுரை வரலாற்றாய்வாளர் மைக்கல் ரொபர்ட்சின் “Thuppahi” இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிர்வினையாற்றிய பேராசிரியர்கள் சந்திரா விஜேவர்தன  மற்றும்  ஜெரால்ட் பீரிஸ் ஆகியோர் முன்வைத்திருந்த பின்னூட்டங்களும் முக்கியமானவை –

“மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதற்கென 1948 இல் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளின் போது ஒரு சில வடபுல தமிழ் அரசியல்வாதிகளும், கண்டிய சிங்கள பிரதானிகளுமே முதன்மையாக காய்களை நகர்த்தினார்கள். அச்சட்ட வரைவின் தயாரிப்பில் (அப்போது பாதுகாப்பு மற்றும்  வெளி விவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்து வந்த) கந்தையா வைத்தியநாதன் முக்கியமாக  பங்களிப்புச் செய்திருந்தார்.”

“பெருந்தோட்டங்களில் இடதுசாரிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவதும், குறிப்பாக லங்கா சமசமாஜ கட்சி மலையகத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் ஒரு நிலை தோன்றுவதை தடுத்து நிறுத்துவதுமே அவர்களுடைய அசல் நோக்கமாக இருந்து வந்தது” – சந்திரா விஜேவர்தன.

கல்லோயா திட்டத்தின் 42 குடியேற்ற அலகுகளில் 9 அலகுகள் இடதுகரை கால்வாய் பகுதியில் (தற்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்ததாக கூறிப்பிடும் பேராசிரியர் ஜெரால்ட் பீரிஸ், அப்பிரதேசத்தில் சிங்களவர்களுக்கு காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனச் சொல்கிறார்.

கே கே டி சில்வா ” The Galoya Valley Scheme and the People who made it a Reality” (மே 2022) என்ற நீண்ட கட்டுரையில் கல்லோயா திட்டத்தின் சுருக்கமான வரலாற்றை முன்வைப்பதுடன், அதற்குப் பங்களிப்புச் செய்த உள்நாட்டு / வெளிநாட்டு ஆளணியினர் குறித்த தகவல்களை விரிவாக  பதிவு செய்கிறார்.

ஜே எஸ். கென்னடி என்பவர் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக இருந்த பொழுது கல்லோயா நீரேந்து பரப்பில் பட்டிப்பளை ஆற்றின் உள்ளார்ந்த அபிவிருத்தி ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதற்கென 1936 இல் ஒரு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காரணமாக இத்திட்டத்தின் அமுலாக்கம் தாமதப்படுத்தப்பட்டது.

நீர்ப்பாசன பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது இலங்கையர் (1951) டபிள்யு ரி ஏ அழகரத்தினம். அவர் 1940 களின் தொடக்கத்தில் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக  பணியாற்றிய பொழுது  காடுகளில் நடந்து சென்று,  இங்கினியாகலயில் முகாம் அமைத்து தங்கி நின்று, இது தொடர்பான பூர்வாங்க மதிப்பீட்டாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.  

அது தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பட்டிப்பளை ஆற்று வடிநிலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை குறித்து 1940 கள் நெடுகிலும் தொடர்ந்து குரலெழுப்பி வந்திருக்கிறார்கள். கல்லோயா அபிவிருத்திக்கான விரிவான திட்டங்களும், இங்கினியாகலையில் அமைக்கப்படவிருக்கும் அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்கம் என்பன தொடர்பான பொறியியல் வடிவமைப்புக்களும் 1946 லேயே தயாரிக்கப்பட்டிருந்தன. 

இந்தப் பின்புலத்திலேயே இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முக்கியமான ஒரு அரசியல் தீர்மானத்தை பிரதமர்  டி எஸ் சேனாநாயக்க 1949 இல் மேற்கொண்டார். அவ்வாண்டில்  ஒரு  பாரளுமன்ற சட்டத்தின் மூலம் கல்லோயா அபிவிருத்திச் சபை  ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், பலர் நம்புவதைப் போல, கல்லோயா திட்டம் டி எஸ் சேனாநாயக்கவின் கற்பனையில்  உருவான ஒரு திட்டம் (Brainchild) அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு போதுமான விரிவான தகவல்களை தருகிறது கே கே டி சில்வாவின் கட்டுரை.

1956 ஜூன் மாதம் 11 ஆம்  திகதி தொடக்கம் நான்கு நாட்கள்  அம்பாறையிலும், இங்கினியாகலயிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா திட்டத்தின் தொடக்க கால வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் களங்கம். GODB இல் பணியாற்றிய தமிழ் ஊழியர்களை இலக்கு வைத்து இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஜூன் 5-ம் தேதி தமிழரசு கட்சி காலி முகத்திடலில்  நடத்திய சத்தியாகிரகத்தின் போது பலர் தாக்கப்பட்டார்கள். அதனையடுத்து  மட்டக்களப்பில் பத்தாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட ஒரு எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டதுடன், அதன் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தார்கள். பின்னர் மட்டக்களப்பு, காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு எதிரான (சார்பு ரீதியில் சிறு அளவிலான) ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இச்சம்பவங்கள் குறித்த செய்திகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட வதந்திகளாக அம்பாறையை வந்தடைந்த பொழுது 11 ஆம் தேதி அங்கு வன்முறை வெடித்தது. புதிய குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல் GODB வாகனங்களையும், வெடிபொருட்களையும் பலவந்தமாக கைப்பற்றி நிகழ்த்திய கொடூரங்களின் போது குறைந்தது 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

பெருமளவுக்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின் பங்களிப்புக்களுக்கு ஊடாக நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் அந்த ஊழியர் அணியைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொலை செய்தார்கள் என்பது வரலாற்றின் பெரும் முரண்நகை.

அம்பாறை வாடி வீட்டில் 85 GODB தமிழ் ஊழியர்கள் தமது குடும்பங்களுடன் தஞ்சம் புகுந்திருந்திருந்தார்கள். அவர்களில் கனகசுந்தரமும், அவரது மனைவியும் இருந்தார்கள். பத்மநாதன் என்ற பொலிஸ் அதிகாரி 5 (சிங்கள) பொலிஸ்  உத்தியோகத்தர்களுடன் வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த கனகசுந்தரம் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பத்மநாதனுக்கு   கட்டளையிட்டார். அதனையடுத்து சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று நபர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்கள். ‘அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களில் அந்தக் கும்பல் மாயமாக மறைந்தது’ என எழுதுகிறார் அஜித் கனகசுந்தரம்.

1956 வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா பள்ளத்தாக்கு நெடுகிலும் துளிர் விட்டுக் கொண்டிருந்த புதிய நம்பிக்கைகளை சிதைத்ததாக  கூறும் கனகசுந்தரம், கல்லோயா அபிவிருத்திச் சபை ஈட்டிக் கொண்டிருந்த புதிய பொறியியல் திறன்களை பயன்படுத்தி, தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய விதத்தில் புராதன கிராமங்களில் குறைந்த செலவில் ஒரு அணையை நிர்மாணிப்பதற்கென தயாரிக்கப்பட்டிருந்த திட்டங்களும் அதனுடன் இணைந்த கைவிடப்பட்டதாக  சொல்கிறார்.

அதன் பின்னர் 1983 நிகழ்த்தப்பட்ட இன அழிப்புச் செயல்களுக்கான ஒத்திகையாகவே கல்லோயா வன்முறை இருந்து வந்தது என்பது அவருடைய கருத்து. 1983 வன்முறையின் மூலம் மிக  மோசமாக பாதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறியவர்களில் அஜித்  கனசுந்தரமும் ஒருவர்.  அப்பொழுது அவர் இலங்கை மத்திய வங்கியில் பணியில் இருந்தார்.  ஹோகந்தரையில் இருந்த அவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவிலான கால்நடைப் பண்ணை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டதுடன், கால்நடைகளும் கொல்லப்பட்டன. அதன் பின்னர் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு  சர்வதேச வங்கியில் நீண்ட காலம் உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அஜித் கனகசுந்தரம் “Tale of Two Countries: Sri Lanka and Singapore” (2018) என்ற மிக முக்கியமான நூலின் ஆசிரியர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா 33 மாணவர்களை  (26 சிங்கள மாணவர்கள், 7 தமிழ் மாணவர்கள்) அழைத்துக்கொண்டு புதிய குடியேற்றவாசிகள் தொடர்பான சமூக – பொருளாதார ஆய்வொன்றை நடத்துவதற்காக இங்கினியாகலைக்கு சென்றிருந்தார்.  அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த துல்லியமான விவரங்களுடன் கூடிய ஓர் அறிக்கையை அவர் உபவேந்தர் ஐவர் ஜென்னிங்சிடம் சமர்ப்பித்திருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் பழைய ஆவணக் குவியல்களிலிருந்து அந்த அறிக்கை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பிற்காலத்தில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியல் துறை பேராசிரியராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா (1929 –  2014) எழுதிய “Buddhism Betrayed: Religion, Politics and Violence in Sri Lanka” (1992) என்ற நூல் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த நவீன இலங்கை தொடர்பான மிக முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம். இன்றைய இலங்கையின் சிறுபான்மை சமூகங்களுக்கும், இடதுசாரிகளுக்கும், அதேபோல மிதவாத அரசியல் தலைவர்களுக்கும் பெரும் சவாலாக எழுச்சியடைந்திருக்கும் ‘Political Buddhism’  என்ற எண்ணக் கருவின் தோற்றத்தையும், அதன் பன்முக பரிமாணங்களையும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல் அது.

1956 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலும், அணுகு முறையிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. புதிய அரசாங்கத்தின் காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக சி பி டி சில்வா பதவி ஏற்றார். அந்த அமைச்சின் கீழேயே கல்லோயா அபிவிருத்திச் சபை இருந்து வந்தது. கனகசுந்தரமும், சி பி டி சில்வாவும்  நெருங்கிய நண்பர்கள். 1935 இல் இலங்கை சிவில் சேவைக்கு போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஒன்பது பேரில் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தில் இருந்தவர் கனகசுந்தரம் (இரண்டாம் இடம் – ஏ எம் ஏ அஸீஸ்; எட்டாவது இடம் –   சி பி டி சில்வா ).  

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமைச்சர் சி பி டி சில்வாவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் காரியங்கள் அரங்கேறின. 1957 இல் கனகசுந்தரம் GODB  தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்படுகிறார். அதன் பின்னணி குறித்த அஜித் கனகசுந்தரத்தின் விளக்கம்  – 

“பல ஆண்டுகளுக்குப் பின்னர்  சி பி டி சில்வா   நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக இங்கிலாந்து  வந்திருந்தார். சிகிச்சை முடிந்து எங்கள் லண்டன் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது எனது அப்பாவிடம் இப்படிச் சொன்னார்:

கனகஸ் – என்னால் ஒன்றும் செய்ய  முடியவில்லை. பிலிப் (குணவர்தன) பண்டாவிடம் (பிரதமர்) சொன்னார்: ‘கல்லோயா அபிவிருத்திச் சபை போன்ற உயர் அதிகாரங்களை கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் தமிழர் ஒருவர் தலைவராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக நீக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக நான் எனது தொழிற்சங்கங்களை களம் இறக்குவேன்’.  மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த பண்டாரநாயக்க அதற்கு உடன்பட வேண்டியிருந்தது. அதனால் தான் நாங்கள் உங்களை நீக்கினோம். 

ஆனால், அது தொடர்பாக குற்ற உணர்ச்சியில் இருந்த பண்டாரநாயக்க, பிரிட்டனுக்கான இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராக  கனகசுந்தரத்தை அனுப்பி வைக்கிறார். 

அஜித் கனசுந்தரத்தை போலவே இன்னும் சிலர் – குறிப்பாக கல்லோயா திட்டத்தில் பணியாற்றிய வெளிநாட்டவர்களின் பிள்ளைகள் – 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தமது பிள்ளைப் பருவ நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். மாதிரிக்காக ஒரு சில நினைவுகள் கீழே –

இரண்டாவது உலகப் போரின் போது  அகதியாக இடம்பெயர்ந்த  உக்ரேயின் நாட்டைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர் ரோமன் செகோவட்ஸ்கி 1950 – 1961 காலப் பிரிவில் கல்லோயா திட்டத்தில் பணியாற்றினார்.  அலுவலக கட்டடங்களையும், ஊழியர் குடியிருப்புக்களையும் வடிவமைத்தவர் அவர்.

1951 இல் இலங்கையில் பிறந்த அவருடைய மகன் அன்ட்றியாஸ் தொடக்கத்தில் இங்கினியாகல சிங்கள பாடசாலையில் சேர்ந்து படித்தார். பின்னர் கொழும்பு சென்ட் ஜோஸப்  கல்லூரியில் அவர் தனது கல்வியை தொடர்ந்தார். 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தனது பிள்ளைப் பருவ நாட்களை நினைவு கூரும் அவர்,  பல்வேறு  சந்தர்ப்பங்களில் தான் தனது அப்பாவுக்கும்,  சிங்கள தொழிலாளர்களுக்கும் இடையில்  உரைபெயர்ப்பாளராக பணியாற்றியதாக சொல்கிறார்.

இலங்கையிலிருந்து வெளியேறி 55 ஆண்டுகளின் பின்னர்  2016 இல் தனது சகோதரியுடன் இங்கு வந்த அவர் இங்கினியாகலைக்குச் சென்று  தனது  பிள்ளைப் பருவ நண்பரான ஜே  பி லயனல் பிரேமசிரியை  சந்தித்தார்.

அமெரிக்கரான Ron Utley  இன் (2008) நினைவுப் பகிர்வு இது-

“மொரிசன் –  நட்சன் கம்பெனியில் வேலை செய்த எனது அப்பா கல்லோயா அணைக்கட்டை நிர்மாணிக்கும் பணியில் பங்கேற்றார். அப்பொழுது எனக்கு வயது 13. அப்பாவுடனும் , ஏனைய அமெரிக்க கட்டுமானத் தொழிலாளர்களுடனும் 18 மாதங்கள் நான் பிரதான முகாமில் தங்கியிருந்தேன். இந்த ஆண்டு எனக்கு 70 வயது நிறைவடைகின்றது. இங்கினியாகலயிலும், உஹனவிலும் கழித்த அந்த இனிமையான நாட்களையும், எனது வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்து வந்த நண்பர்களையும் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்…….”

கல்லோயா திட்டத்தின் உருவாக்கத்திலும், அமுலாக்கலிலும் இன ரீதியான பாரபட்சம் (Ethnic  Bias ) இருந்து வரவில்லை என அஜித் கனகசுந்தரம் மற்றும் கே கே டி சில்வா போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், மட்டக்களப்பு / அம்பாறை மாவட்டங்களின் குடிசனவியல் தொகுப்பில் அது எடுத்து வந்த மாற்றத்தையடுத்து, கிழக்கில் இன உறவுகளில் தொடர்ந்து பதற்ற நிலைமைகள் நிலவி வருவது அதன் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. 

கரையோர அம்பாறை மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையையடுத்து தென்னிலங்கையில் எழுந்த இனவாத  எதிர்ப்பலை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு புதிய நகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு இனவாதச் சக்திகள் தெரிவித்த கடும் ஆட்சேபனை என்பன ‘இலங்கை ஒரு பல்லின, பல் சமய ஜனநாயக நாடு’ என்ற விதத்தில் நிலவி வரும்  பொதுவான நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட ஒரு பெரும் சவால். 

‘தனி மாவட்டம் தரவும் முடியாது; சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக  வாழ்ந்து வரும் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக நியமனம் செய்யவும் முடியாது’ என்பதே இத்தரப்பின் நிலைப்பாடு. சிறுபான்மை அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவது ஒரு விதத்தில் வெறுமனே ஒரு அலங்காரப் பெறுமதியாக (Ornamental Value) மட்டுமே இருந்து வர முடியும். ஒரு குறியீட்டு மதிப்புக்காக கூட அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.

  ‘எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிதாக மலரவிருக்கும் இலங்கையில்’ சிறுபான்மை சமூகங்களின் நியாயமான கோரிக்கைகள் – தர்க்க ரீதியில் நியாயப்படுத்தப்படக்கூடிய கோரிக்கைகள் – எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

https://arangamnews.com/?p=10659

 

Checked
Sat, 05/18/2024 - 21:33
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed