| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 270 online users. » 0 Member(s) | 267 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,213
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,525
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பதில் சொல்லுங்கள் அப்பா எங்கே? |
|
Posted by: வியாசன் - 02-11-2005, 01:29 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
அப்பா எங்கே அம்மா?
மூன்று மாதம் காத்திராமல்
சென்றுவிட்டாயே என் கணவா?
உன் குஞ்சின் முகங்காணாமல்
தூரச் சென்றுவிட்டாயே என்னவா?
உன் பிள்ளை நாளை..
அப்பா எங்கே அம்மாயெனக் கேட்டால்..?
போர் களத்தில் வீரனாயோ?
துரோகியின் சூழ்ச்சிக்கு பழியானாயோ?
அரசியல்துறையில் பணியாற்றி..
அப்பாவியாக போனாயென்று சொல்லவா?
சொல்லடா என்னவா? என்னடா சொல்வேன்?
ஒருநிமிடம் சிந்திக்க வைக்கவில்லை..?
வாழ் நாள் முழுவதும்
சிந்திக்க வைத்துவிட்டாய்.. நான்
மட்டுமில்லையடா.. தென்கிழக்கே
உனைத் தேடி நிற்கிறது..!
இதேவேளை..
எமது குஞ்சு வெளியே வந்து
உனைக் கேட்டால்.. ஐய்யையோ..
என்ன சொல்வேன் என்னவனே?
..ஸ்காபுரோ ஷஷி.
நிதர்சனத்திலிருந்து சுடப்பட்டது
பதில் சொல்லுங்கள் அப்பா எங்கே?
|
|
|
| கௌசல்யன் எனுமோர் அக்கினி |
|
Posted by: Thaya Jibbrahn - 02-11-2005, 06:40 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
(1)
மீண்டும் மீண்டும்
எங்கள்
பொறுமை சீண்டப்படுகின்றது.
மீண்டும் மீண்டும்
கண்மணிகள்
பறிக்கப்படுகின்றது.
சமாதானத்தின் பெயரால்
எங்கள் தலையில்
சோகம் திணிக்கப்படுகின்றது.
எங்கள் பொறுமை
எல்லை கடந்து
எதிரிகளை இல்லாமற் செய்யும்
வெறியாகிறது.
ஆனாலும் ஆனாலும்
தலையை மிஞ்சும் வாலல்லவே
நாங்கள்-
பொறுத்திருக்கின்றோம்
பெருந்திருவே
ஆனாலும்
எங்கள் சின்ன சின்ன
மூளைகளுக்கு
சமாதானம் சமாதானம்
என்று
ஒன்றொன்றாய் இழப்பதிலும்
சண்டையென்று சொல்லி
மொத்தமாய் அழிவதெனிலும்
மானமுள்ளதாய் படுகின்றது.
என்ன செய்வதாய் உத்தேசம்.??
எதுவெனினும்
நாங்கள் தயார்
உன் பின்னால் அணி திரள-
எங்கள் அடலேறுகளை
வீதிகளில் இழக்கின்ற
வேதனைகள் இனியும் வேண்டாம்.
------------------------------------
(2)
பார்க்குமிடமெங்கும்
நீக்கமற
நயவஞ்சகர் வாழும்
பூமியிது.
குள்ளநரிகளெல்லாம்
கூடியிங்கே
கூத்தடிக்கின்றதே.
யாரொடு நோவோம்?
சத்தியப்பிரமாணம்
செய்யும் போதே
தேசத்திற்காய்
செத்துவிடவும்
உறுதிபூண்டவர்கள் தான்.
என்றாலும் என்றாலும்
ஏதிலிகள் போல
தெருவினிலே சாய
பார்த்திருக்க மாட்டோம்.
கௌசல்யன்.
தேசவிடுதலைக் குரலை
தேசமெங்கும் முழங்கிய
விடுதலைப் பறவை.
துரோக வேர்களின்
ஆழம் கண்டறிந்து
தேசம் காத்த தனயன்.
வீதியிலே வீழ்ந்தானோ?
விதிமுடிந்து போனானோ??
நம்ப முடியவில்லை.
இயற்கையும் விதியும்
எதிரிகளுடன் சேர்ந்து
ஒப்பந்தம் போட்டனவோ??
தமிழ்த் தேசம்
அழிப்பதுவாய்
சாபங்கள் இட்டனவோ?
வெல்லும் வரைதான்
உலகம்
விரட்டும்.
வென்ற பின்னர்
வாழ்த்தும்.
இனியோர் புலி விழுவதெனில்
நூறுபகை
அழிந்த பின் என்பதாய்
சபதமொன்று செய்திடுவோம்.
கொக்கரிக்கும் பகைவருக்கும்
புல்லுருவிகளுக்கும்
ஓர் செய்தி...
எரிமலையில் நெருப்பெடுத்து
அடுப்பெரிக்க நினையாதீர்;
இது
பொங்கியெரியும் விடுதலைத் தீ-
----------------------------------
-தயா ஜிப்ரான் -
|
|
|
| மூளையுள்ள தமிழனா !? |
|
Posted by: anpagam - 02-11-2005, 04:27 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (40)
|
 |
தமிழ்நாட்டுப் புலவர் செல்வக் கலைவாணன் என்பவர் அண்மையில் அருமையான பாடல் ஒன்றைப் புனைந்துள்ளார். பாடலின் தலைப்பு மூளையுள்ள தமிழன்!
தமிழ்ப் பற்றைத் தமிழர்கள் பெயரில் தழுவச் செய்ய வேண்டும் என்பது திரைப்படத்துப் பெயர்களுக்கும் பொருந்தும். அந்தப் பாடல் இது.
நன்மாறன் நெடுஞ்செழியன் குமணன்
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மன்னர் மன்னன்
அன்பழகன் அறிவழகன் கண்ணன் வேலன்
அழகரசன் இளங்கோவன் கீரன் என்றே
இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு
இன்று ரமேஷ் சுரேஷ் கார்த்திக் ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத்
தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார் கவரிமானின் தோன்றலாக
மானுடத்தைப் பெற்றேன் என்பார்.
பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல
பூக்களிடை நச்சுமரம் விளைதல் போல
என்.மாறன் எம்.எஸ்.கே பொன்னன் என்றே
ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே
முன்னெழுத்தைத் தமிழ் எழுத்தால் எழுதச் செய்யும்
மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம்.
சினிமா மாயையிலும் மோகத்திலும் மூழ்கிக் கிடக்கும் தமிழ் நாட்டுத் தமிழனை மூளையுள்ள தமிழனாக முதலில் மாற்ற வேண்டும். அதே போல் உலகத் தமிழனை மூளையுள்ள தமிழனாக மாற்ற வேண்டும்.
அப்படிச் செய்து விட்டால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகு எங்கும் எதிலும் வானம் அளந்த அனைத்தும் அளந்திடும் எங்கள் தமிழ்மொழி தன்மணம் வீசி இசைகொண்டு வாழும்! தமிழனும் உயர்வான்!
தமிழ்நாதத்தில் இருந்து -நக்கீரன் (கனடா)
|
|
|
| காதலர் தினம் |
|
Posted by: Malalai - 02-11-2005, 02:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (178)
|
 |
அன்புக்கு அளவுகோல்
அகிலமதில் இல்லை என்பதை
காட்டிடவே ஒரு நாளை
காதலுக்காக காக்க வைத்த
காதலர்களே பல்லாண்டு
ஒன்றினைந்து வாழ்ந்திடவே
வாழ்த்துகிறேன் உங்கள்
அனைவரையும்
உண்மையான காதல்
உள்ள உள்ளங்களே
உங்களால் தான்
உண்மைக் காதல்
உலகில் என்றேன்றும்
உயிர் பிழைத்துக் கொள்ளும்
|
|
|
| சிரிக்க....... |
|
Posted by: KULAKADDAN - 02-10-2005, 10:50 PM - Forum: நகைச்சுவை
- Replies (48)
|
 |
<img src='http://img131.exs.cx/img131/3894/ShowLetter8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/6668/ShowLetter9.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/7250/ShowLetter10.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/6774/ShowLetter11.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/2064/ShowLetter13.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/7/ShowLetter14.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/4371/ShowLetter15.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/1736/ShowLetter16.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/7486/ShowLetter17.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/7153/ShowLetter19.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/6348/ShowLetter20.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/5246/ShowLetter21.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/9062/ShowLetter22.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img131.exs.cx/img131/7220/ShowLetter23.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| துவாயல்ல நாய்........... |
|
Posted by: KULAKADDAN - 02-10-2005, 10:34 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (13)
|
 |
துவாயல்ல நாய்...........
<img src='http://img223.exs.cx/img223/7017/pic07376.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img223.exs.cx/img223/5864/pic11840.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img223.exs.cx/img223/8408/pic13931.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img223.exs.cx/img223/2782/pic18756.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img223.exs.cx/img223/4944/pic19954.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| சதி கொன்ற சாவு |
|
Posted by: shanthy - 02-10-2005, 10:23 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>சதி கொன்ற சாவு.</span>
'கௌசல்யன்"
சத்தமின்றி இருந்த வீரன்
சத்தமின்றி எங்கள் மனங்களை
வென்று போன சத்தியன்.
மோப்பர்களை மீட்பர்களாய்
நம்பிய பாவம்
எங்கள் மீட்பர்களே
உங்களை நாம் இழந்து போக
அரச மோப்பரே சாட்சியாக.....
கண்காணிப்போர் கண்களில்
உங்கள் சாவு
குழு மோதல் என்பதாக.....
சார்ந்து நின்று நீதி சொல்லும்
பணிசெய்ய வந்த
பிணியரே இவர்களெல்லாம்.
கருணாவின் சதியென்று கதைபூசி
கௌசல்யன், புகழன்,
செந்தோழன், நிதிமாறன்
சாவிதனை விதியென்றா எழுதிவிட....?
இல்லையில்லை,
சதிகொன்று போனதெங்கள்
சந்ததியின் விதிமாற்றி எழுதிப்போன
வீரர்கள் வரிசையிலே
உரமாகிப் போனவர்கள்.
|
|
|
| கொன்றவர்களின் சகாக்களும் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் .... |
|
Posted by: Vaanampaadi - 02-10-2005, 08:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
கௌசல்யனை கொன்றவர்களின் சகாக்களும் அதனை நியாயப்படுத்தும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் டென்மார்க்கைச் சேர்ந்தவர்.
வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 -ஜெயராஜ்-
கௌசல்யனைக் கொன்றவர்களின் சகாக்கள் டென்மார்க்கில் தங்கி இருப்பதுடன் அங்கிருந்து கொலைக்கு உரிமை கோரியுள்ள அதே நேரம் இந்தக்கொலை யுத்த நிறுத்த மீறல் இல்லையென்றும் டென்மார்க் நாட்டுப் பிரிஜையான இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. கௌசல்யன் உட்பட 4 போராளிகளின் மரணத்திற்கும் இலங்கை அரச புலனாய்வுப்பிரிவினரின் புதிய தமிழ்த் தாக்குதல் பிரிவான கருணா குழு என்ற பெயரில் இயங்கும் முன்னை நாள் கிழக்கு மாகாண தமிழ்ப் போராளிகளின் கூட்டுக்குழுவினர் இன்று உரிமை கோரியியுள்ளது. இவர்களின் இணையத்தளம் வுஆஏP மற்றும் வுஐஏஆ டென்மாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இந்தக் கொலையை நியாயப்படுத்தியுள்ளதுடன் உரிமையும் கோரியுள்ளார்கள். இதேநேரம் இந்தச் சம்பவம் யுத்த நிறுத்த மீறல் அல்ல எனவும் இது ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டது என்றும் டென்மார்க்;கைத் தாயகமாகக் கொண்ட புதிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டென்மார்க் நாட்டின் பிரதமரின் செயலாளர் ää வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ää வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இராஜதந்திரப் பிரதிநிதி ஆகியோரிடம் கருத்துக் கேட்டபோது தமது இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர். மேற்கொண்டு தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.
இதேநேரம் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் இலங்கையரசின் புதிய தமிழ்ப் புலனாய்வுப்பிரிவினர் தமக்கிடையே மோதியதில் 9 பேர் வரை பலியாகி இருந்தார்கள். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் வீட்டில் நடந்த சம்பவத்தை ஒரு யுத்த நிறுத்த மீறல் என்றும் இது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டது கவலைக்குரிய விடயமென்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு அறிவித்திருந்தது. இதுவொரு பயங்கரவாத செயல் என்று அரசு தெரிவித்திருந்ததுடன் இலங்கையில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்படும் எனவும் அரச சமாதானச் செயலம் தெரிவித்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் ää அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் கருணா குழு எனக்கூறிக்கொண்டு இலங்கையரச புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டு அழிவுகளை உருவாக்கினால் அது யுத்த நிறுத்த மீறல் இல்லை என்றும் அதனைக் கருணா குழுவென்றும் முரன்பாடு என்றும் வேறாகப் பார்க்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கருணா குழு என்று கூறிக்கொண்டு அரச உளவாளிகள் உலாவும் போதும் அவர்கள் மீது அரச புலனாய்வுப்பிரிவு தமது பாதுகாப்புக்காக தகவல்களைத் திரட்டி பின்னர் கொன்றுவிட்டு புலிகள் மீது பழிசுமத்தும் போதும் அது யுத்த நிறுத்த மீறல் எனவும் புதிய நியாயம் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இதுவரை கேணல் சங்கர் முதல் லெப்.கேணல் கௌசல்யன் வரை பல டசின் தளபதிகளும் போராளிகளும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளையும் திட்டமிட்டுக் கொன்று குவிக்கும் அரசு அதற்கு அனுதாப அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றது.
Source : http://www.nitharsanam.com/?art=8705
|
|
|
| அமெரிக்க படைகள் நாட்டைவிட்டு வெளியேற தயாராகுகிறார்கள் ..... |
|
Posted by: Vaanampaadi - 02-10-2005, 08:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
அமெரிக்க படைகள் இலங்கையில் சுனாமி உதவி வேலைகளை செய்து
முடித்துவிட்டார்கள்.....இலங்கையை விட்டு வெளியேற தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்....பாதுகாப்பு அமைச்சு தகவல்....
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/th/afp_lo_1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20050210/capt.sge.jok44.100205164903.photo00.photo.default-283x384.jpg' border='0' alt='user posted image'>
<b>US marines end Sri Lanka tsunami mission, foreign troops set to leave</b>
27 minutes ago South Asia - AFP
COLOMBO (AFP) - US marines have completed their tsunami relief operations in Sri Lanka while troops from seven other nations were also scaling down their work and preparing to withdraw from the island, a defence official said.
Only a handful of US marines remained on the island after the 1,600-strong force began withdrawing in the past two weeks, the official said, adding that they too would be leaving shortly.
Troops from Austria, Belgium, Canada, Greece, India, Italy and Pakistan had also drastically reduced their strength in the last few days and were on the verge of completing a withdrawal, the official added.
More than a dozen countries rushed troops to help with the immediate relief operations after the December 26 tsunamis killed nearly 31,000 people and left a million homeless in Sri Lanka.
|
|
|
|