ஊர்ப்புதினம்

அண்மைய வரலாற்றில் மிகப் பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

1 month 3 weeks ago

Wootler.jpg?resize=750%2C375&ssl=1

அண்மைய வரலாற்றில் மிகப் பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை கடந்த 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதற்காக இன்று (22) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹாஷிஷ் மற்றும் கொக்கெய்ன் உள்ளிட்ட மொத்தம் 10,871 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 23,692 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

https://athavannews.com/2026/1460974

அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை!

1 month 3 weeks ago

அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை!

22 January 2026

1769057743_3612490_hirunews.jpg

அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது. 

இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை. 

இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். 

வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

https://hirunews.lk/tm/442073/important-warning-for-sri-lankans-going-to-the-us-violation-of-visa-regulations-will-result-in-a-lifetime-ban

புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்!

1 month 3 weeks ago

புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (21) காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 

இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினாவிய போது, 

டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20,023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13,168 குடும்பங்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15,260 பாடசாலை மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், 

டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். 

இதன் போது கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், 

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர். 

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான இரண்டாம் செயலாளர் இராமன் செட்டியார், அரசியலுக்கான அலுவலர் ஃபாறா பிர்தௌஸ் உடனிருந்தார்கள்.

https://adaderanatamil.lk/news/cmkoyz5xr048vo29nio3ed8f4

இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு

1 month 3 weeks ago

இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு

image_6fca563c42.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் குழு, இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனவரி 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம் செய்ய உள்ளது.

 இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரு கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோருடன், முன்னாள்   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் சம்பத் அதுகோரல, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  அரசியல் சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர்.

 இந்த விஜயத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இந்தக் குழு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருட்களைப் பார்வையிடும் பயணமும் பயணத்திட்டத்தில் அடங்கும்.

இந்த விஜயம் தொடர்பான ஒரு சுமுகமான கலந்துரையாடல் இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமீபத்தில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-குடியரசு-தின-விழாவில்-பொதுஜன-பெரமுனவினர்-பங்கேற்பு/175-371396

📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!” தவிசாளர் சோ. சுகிர்தன் ஆதங்கம்!

1 month 3 weeks ago

📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!”

தவிசாளர் சோ. சுகிர்தன் ஆதங்கம்!

adminJanuary 22, 2026

Vali.png?fit=717%2C717&ssl=1

வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதால், மக்கள் 36 வருடங்களாகத் தவிப்பதாக வலி. வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கவலை வெளியிட்டுள்ளார்.
மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா குரும்பசிட்டி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற போது அவர் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

📍 மயிலிட்டி நூலகம்: ஏனைய நூலகங்கள் சிறப்பாக இயங்கினாலும், மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூலகம் வசாவிளான் சந்தியில் இன்றும் ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது.

வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி திறக்கப்பட்டாலும், பாடசாலை இன்னும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே முடக்கப்பட்டுள்ளது.

தற்காலிக இடங்களில் இயங்கும் போதிலும், வசாவிளான் மத்திய கல்லூரி மற்றும் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் வாசிப்புப் போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

⚠️ தென்னிலங்கையினூடாகக் கொண்டு வரப்பட்டுள்ள “பிரஜாசக்தி” திட்டமானது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என தவிசாளர் இதன்போது எச்சரித்தார்.

“மக்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. உங்கள் தேவைகளுக்கு நேரடியாக பிரதேச சபையை அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

https://globaltamilnews.net/2026/227099/

சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்

1 month 3 weeks ago

சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்

adminJanuary 22, 2026

mandaitheevu.jpg?fit=1120%2C630&ssl=1

யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற போது, உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எழுப்பினார்.

2016-ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த ‘எக்கோ ரூறிசம்’ (Eco-tourism) திட்டம் உருவாக்கப்பட்டது. வேலணையின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். எனினும் முறையான பொறிமுறை இல்லாததால், சுற்றுலாப் பயணிகளுக்காக வாங்கப்பட்ட படகுகள் மற்றும் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்து கிடக்கின்றன. பல பொருட்கள் மர்மமான முறையில் சூறையாடப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாத் தளம் என்ற பெயரில், தற்போது அது மதுபானம் அருந்தும் இடமாகவும், சமூகச் சீரழிவுக்கான களமாகவும் மாறி வருவதாக உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பலரும் இவ்வாறான செயல்களுக்காகவே இவ்விடத்தைத் தேர்வு செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் முறையாகக் கிடைக்காததுடன், இந்தத் திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது வர்த்தக நோக்கில் இந்த மையத்தைப் பராமரிக்கும் தனியார் தரப்பினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறுப்பினர் வலியுறுத்தினார். இந்தப் பிரதேசத்தின் மாண்பைக் காக்க, மண்டைதீவு சுற்றுலாத் தளத்தை மீண்டும் அதன் உண்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேலணை பிரதேச சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவில் சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் 2024 செப்டம்பரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (அன்றைய நிலையில்) அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்டன.

சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் (மொத்தமாக 138 ஏக்கர் விளையாட்டு நகரமாக – Sports City) இந்த மைதானம் அமையவுள்ளது. 10 மத்திய விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச தரத்திலான எல்லைக் கோடுகளைக் கொண்ட மைதானமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் மற்றும் கனமழை காரணமாகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 2026 ஜனவரியில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

2026-ல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் T20 உலகக்கோப்பைக்குப் பிறகு, இங்கு முதலாவது முன்னோடிப் போட்டி (Trial Match) நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

இந்த மைதானத் திட்டத்திற்கு எதிராகப் பல சூழலியல் அமைப்புகள் (குறிப்பாக WNPS) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

கடலோரப் பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) இன்றி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவு ஒரு முக்கியமான சூழலியல் வலயமாகும். அங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதால், இறால் மற்றும் நண்டுப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதையும் என அஞ்சப்படுகிறது.

மண்டைதீவு இயற்கையாகவே ஒரு தாழ்வான பிரதேசம். டிட்வா புயலின் போது மைதானம் அமையவுள்ள பகுதி முழுமையாக நீரில் மூழ்கியிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்பியது.

மறுபுறம், இலங்கை கடற்படையினர் மற்றும் யாழ். பல்கலைக்கழகத் தாவரவியற்றுறை இணைந்து மண்டைதீவுப் பகுதியில் ஆயிரக்கணக்கான கண்டல் தாவரக் கன்றுகளை நடும் (Mangrove Restoration) பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://globaltamilnews.net/2026/227089/

குடத்தனை விபத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட மூவர் படுகாயம்!

1 month 3 weeks ago

குடத்தனை விபத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட மூவர் படுகாயம்!

adminJanuary 22, 2026

1-3-1.jpg?fit=1170%2C527&ssl=1

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 22, 2026) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளர், அவருடன் பயணித்த பிரதேச செயலக சக உத்தியோகஸ்தர் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு நபர் ஆகிய மூவரே படுகாயமடைந்துள்ளனா்.

படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Point Pedro Base Hospital) அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கிழக்கு வீதிகளில் அண்மைக்காலமாக அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குடத்தனை, மணற்காடு வீதிகள் புயலுக்குப் பின் சீரமைக்கப்பட்ட போதிலும், போதிய போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாதது ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
pointpitro-accident-rr.jpg?resize=800%2Cpointpitro-accident55.jpg?resize=800%2C3pointpitro-accident77.jpg?resize=800%2C3


https://globaltamilnews.net/2026/227102/

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்!

1 month 3 weeks ago

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்!

adminJanuary 22, 2026

0-1-2.jpeg?fit=1170%2C878&ssl=1

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை வலுப்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தனது மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள JICA நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா (Kenji Kuronuma) அவர்களுக்கும், ஆளுநருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் வடக்கின் பல்வேறு துறைசார் வளர்ச்சிக்கு JICA வழங்கிய பங்களிப்புக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

மாகாணத்தின் தற்போதைய பிரதான சவாலான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப உதவிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

பொதுமக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக JICA பிரதிநிதி தெரிவித்தார்.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

வடக்கின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என கென்ஜி குரோனுமா இதன்போது உறுதி அளித்தார்.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.


https://globaltamilnews.net/2026/227103/

பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

1 month 3 weeks ago

பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

22 Jan, 2026 | 09:05 AM

image

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலையின் நிர்மாணப் பணிகள் புதன்கிழமை (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்  ஹந்துன்நெத்தி தலைமையில், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹந்துன்நெத்தி, பரந்தன் இரசாயன நிறுவனத்தை மீளச் செயல்படுத்துவது நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி வலுப்படுத்தலுக்கும் முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, இரசாயன உற்பத்தியில் இறக்குமதி சார்பை குறைத்து, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உற்பத்தி ஆலை நிர்மாணம் நிறைவடைந்த பின்னர், விவசாயம், தொழில்துறை மற்றும் ஏற்றுமதி துறைகளுக்குத் தேவையான முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் திட்டம் வடக்கு மாகாணத்தின் பொருளாதார மீட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் அரச அதிகாரிகள், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- இணையத்தள செய்திப் பிரிவு

WhatsApp_Image_2026-01-22_at_08.37.27.jp

WhatsApp_Image_2026-01-22_at_08.37.34.jp

WhatsApp_Image_2026-01-22_at_08.37.26.jp

WhatsApp_Image_2026-01-22_at_08.37.25.jp

WhatsApp_Image_2026-01-22_at_08.37.23.jp

https://www.virakesari.lk/article/236653

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

1 month 3 weeks ago

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

22 Jan, 2026 | 10:29 AM

image

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், "உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார். அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் அவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

'வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்' தான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த தூதுவர், கொழும்பிலிருந்து வடக்கை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்ந்துள்ளமை ஒரு சிறப்பான மாற்றம் எனக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், "தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்ற. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக (Value Added Products) மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றன" என வலியுறுத்தினார்.

மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தார். இம்முயற்சிகள் எதிர்காலத்தில் மாகாணப் பொருளாதாரத்தில் நேரான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அண்மையில் வீசிய 'டித்வா' (Ditwa) புயலால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், மாகாண நிர்வாகச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், போதைப்பொருள் பாவனை விவகாரம் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் நெதர்லாந்துத் தூதரகத்தின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர், கலாசார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

IMG-20260122-WA0005.jpg

IMG-20260122-WA0013.jpg

https://www.virakesari.lk/article/236667

நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன்

1 month 3 weeks ago

நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன்

21 Jan, 2026 | 03:54 PM

image

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது.

இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/236617

நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு

1 month 3 weeks ago

நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு

Published By: Digital Desk 3

21 Jan, 2026 | 11:15 AM

image

நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் பல பகுதிகளில் வெப்பநிலைக் கணிசமாகக் குறைந்துள்ளது. 

நாட்டில் இன்று புதன்கிழமை (21) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.4°C நுவரெலியா வளிமண்டலவியல் திணைக்களத்தில் அதிகாலை வேளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

பிராந்திய ரீதியான வெப்பநிலை விபரங்கள் இன்றைய தினம் அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரங்கள் பின்வருமாறு:

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூடுபனி: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனி நிலவக்கூடும்.

தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களால் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள், நாட்டின் தற்போதைய வெப்பநிலை விநியோக வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/236580

டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்

1 month 3 weeks ago

டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்

Jan 21, 2026 - 07:03 PM

டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்

தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. 

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கிய நபர் என சந்தேகிக்கப்படும் நபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தால் மோதி கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். 

இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

பொலிஸ் பொறுப்பிலிருந்த அந்த டிப்பர் வாகனம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. 

மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் அந்த டிப்பர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நபரின் இளைய சகோதரர் அதே வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. 

எனினும், இந்த விபத்தானது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு நீதிக் கோரியும் பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

https://adaderanatamil.lk/news/cmko2cenw048ao29ndnhqypk9

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்

1 month 3 weeks ago

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்

Jan 21, 2026 - 12:37 PM

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. 

மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். 

இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும். 

இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், 60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவதாகும். 

உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 - 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 - 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும்.

https://adaderanatamil.lk/news/cmknokd44047to29n13m3udf1

📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

1 month 4 weeks ago

📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!”

சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

adminJanuary 21, 2026

1-2-3.jpeg?fit=1170%2C658&ssl=1

மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல்  என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும்.

இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள்.

அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம்.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்.

இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை.

சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான்  தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு  திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம்.

எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2026/227001/

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

1 month 4 weeks ago

Accident-2.jpg?resize=750%2C375&ssl=1

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

இந்த விபத்துக்களில் 216 பேர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் 490 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார்.

விபத்துக்களில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் சாரதிகள் ஆவார் (45), அதேநேரம் மோட்டார் சைக்களின் பின் இருக்கையில் இருந்து பயணித்த 07 பேரும் உயிரழந்துள்ளனர்.

இது தவிர விபத்துக்களில் பாதசாரிகளும் அதிகளவில் (33 பேர்) உயிரிழந்துள்ளனர்.

அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களைத் தடுக்க, சாலைப் பாதுகாப்பு அமுலாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2026/1460762

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு

1 month 4 weeks ago

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு

20 Jan, 2026 | 07:40 PM

image

அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’  என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை  வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பான 2016 வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ‘இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்’ எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து, குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/236558

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

1 month 4 weeks ago

New-Project-41.jpg?resize=750%2C375&ssl=

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.கே. நதீகா வத்தலியத்த தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும்.

ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும்.

https://athavannews.com/2026/1460688

வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது

1 month 4 weeks ago

Vehicles-.jpg?resize=750%2C375&ssl=1

வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1460686

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

1 month 4 weeks ago

NIE.jpg?resize=750%2C375&ssl=1

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதே பிரச்சினை தொடர்பாக மேலும் இரண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, உள் விசாரணையின் முடிவு வரும் வரை தனது பதவியில் இருந்து விலகினார்.

பொருத்தமற்ற வலைத்தளத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, புதிதாக அச்சிடப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின் விநியோகத்தை கல்வி அமைச்சு நிறுத்தி வைத்தது.

தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து ஏற்கனவே அச்சிடப்பட்ட இந்தப் பாடப்புத்தகம் குறித்த முறையான புகாரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1460621

Checked
Wed, 03/18/2026 - 07:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr