3 months 3 weeks ago
மீண்டும்... அகில இலங்கை தலைப்பு செய்தியாக, சாவகச்சேரியான்ஸ். @குமாரசாமி எங்கிருந்தாலும், உடனடியாக மேடைக்கு வரவும்.
3 months 3 weeks ago
தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது இறுக்கமான கண்காணிப்புக்குள்ளும், கெடுபிடிக்குள்ளும் கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை அச்சமின்றி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகின்றமையை அவதானிக்க முடிகிறது. https://newuthayan.com/article/தலைவர்_பிரபாகரன்_பிறந்த_தினம்_இன்று!
3 months 3 weeks ago
ஒன்லைன் கேம் மோகம் காதலனின் தாயாரின் நகைகளை திருடிய பெண் கைது! adminNovember 26, 2025 நிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்த நிலையில் , இளைஞனின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்தமையால் யுவதி சில நாட்கள் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த இளைஞனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தாயார் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.11.25) குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் காதலியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் தாயாரின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளில் தாலிக்கொடி உள்ளிட்ட ஒரு தொகுதியை , சாவகச்சேரி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும், மற்றுமொரு தொகுதி நகைகளை யாழ் . நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் , தெரிவித்துள்ளார் ரிக்ரொக்கில் அறிமுகமான நண்பன் ஒருவருடன் தான், ஒன்லைன் கேம் விளையாடுவதாகவும் , அதற்கு இதுவரையில் சுமார் 27 இலட்ச ரூபாய் வரையில் செலவழித்து உள்ளதாகவும் , மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் நகைகளை திருடியதாகவும் அப்பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அத்துடன் அப்பெண்ணை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை , இவ்வாறான ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட , தனது நகைகளை விற்று பணம் செலுத்திய பெண்ணொருவர் , வீட்டில் பெற்றோர் நகைகள் தொடர்பில் கேட்ட போது அவை களவு போனதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை அடுத்து பெற்றோர் குறித்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில், அப்பெண்ணே, தனது நகைகளை விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்து காவற்துறையினர் விடுவித்தனர் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இணைய விளையாட்டுக்களில் பெரும்பாலான இளையோர் பெருந்தொகை பணத்தினை இழந்து வருவதுடன் , கடந்த மாதம் இரு இளைஞர்கள் இணைய விளையாட்டுக்காகக பணம் செலுத்த பெருந்தொகைகளை கடன் பெற்று , கடன் சுமையினால் தமது உயிரை மாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223074/
3 months 3 weeks ago
இணையவழி முதலீட்டுக்காக காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது! சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போனதாக, 17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியிலிருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே அந்த நகைகளைத் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ததாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட ஒரு நபரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதும், மேலும் பணம் செலுத்துவதற்காகவே காதலன் வீட்டில் நகை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1453908
3 months 3 weeks ago
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி, சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து புதன்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அத்துடன் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார். இதே போன்று அண்மை நாட்களில் வேறு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். https://madawalaenews.com/32520.html
3 months 3 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 3 weeks ago
பாரத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்துள்ளது!🤣
Checked
Wed, 03/18/2026 - 04:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed