3 months 3 weeks ago
எதிரியும் போற்றும் தலைவன் மேதகு பிரபாகரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்.
3 months 3 weeks ago
அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை. சங்கர் கலவியில் முக்கியமாக கணித பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அவரைப் போன்ற கல்வியில் மிக திறமையானவர்கள்களின் தியாகம் எல்லாம் வீணாகியதுடன், இன்று புலம் பெயர் அடாவடிகளின் கையில் சிக்கி தமிழரின் அரசியல் பாழ்படுவதால் வந்த கடுப்பில் கூறப்பட்ட கருத்து. அவமானப்படுத்தும் தொனியில் அது தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை மீளப்பெற்றுகொள்கிறேன். மன்னிக்கவும்.
3 months 3 weeks ago
வளர்ப்பு அப்பிடி. தாய், தகப்பனுக்கு பாராட்டுக்கள். 😂 கு.சா. ஒரு கிழமைக்கு இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார். 🤣
3 months 3 weeks ago
எவ்வளவு நல்ல பிள்ளை.ஆரம்பமே இப்படி என்றால்...🤭
3 months 3 weeks ago
இந்திய அணியினர் ஐ பி எல் விளையாட்டினுள் அதிகம் ஐக்கியமாகிவிட்டதால் டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை போல.
3 months 3 weeks ago
ஆள் எஸ்கேப்.
3 months 3 weeks ago
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில், போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மாசிச்சம்பல் போத்தல்களுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட நிலையிலேயே மேற்படி போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்ப டுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!
3 months 3 weeks ago
சாத்தான் வேதம் ஓதுகிறது.
3 months 3 weeks ago
மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம். 26 Nov, 2025 | 04:03 PM மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு - மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (26) காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் சிறப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பில் உள்ள நான்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், வவுணதீவு தாண்டியடி துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஆனைத்து துயிலும் இல்லங்களிலும் தமிழ் மக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம் | Virakesari.lk
3 months 3 weeks ago
போட்டி சமனாகும் என்று நினைத்திருந்தேன்.
3 months 3 weeks ago
உங்கள் சட்ட அறிவையும் பொது அறிவையும் காட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம், நன்றி😇! உண்மையில், இன்று சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் பலரை ரணில் மைத்திரி அரசின் நிர்வாகம் கைது செய்யவில்லை. உங்கள் "சட்ட வியாக்கியானத்தின்" படி அதனால் தான் ரணில் அரசு விடுதலை செய்யத் தடை இருந்திருக்கிறது போல! நீங்களெல்லாம் இலங்கை சுப்றீம் கோர்ட்டில் இருக்காமல் ஏன் இங்க நிக்கிறீங்களோ தெரியவில்லை😎!
3 months 3 weeks ago
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது. இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk
3 months 3 weeks ago
26 Nov, 2025 | 06:34 PM யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk
3 months 3 weeks ago
பொங்கிடும் கடற்கரை ஓரத்தில், மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்தில், மங்களம் தங்கிடும் நேரத்தில், பிறந்த எங்கள் ஒரே தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! நீங்கள் விட்ட சுவாசம் கலந்த காற்றை நான் சுவாசித்ததும், உங்கள் காலடித் தடம் பதித்த கோண்டாவில் முகாமில் சுவடுகள் காயும் முன் நானும் நடந்ததும், உங்களின் குரலை கேட்டதும் என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே ஒரு பெரும் பாக்கியம் ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது எனக்கும் இருக்கலாம். ஆயினும் நீங்கள் ஒருவரே என் தலைவன். என்னைப் போன்றோரிற்கான ஒப்பற்ற ஏக தலைவன். இறந்தும் இறவாமல் நீக்கமற நிறைந்து இருக்கும் தலைவன்! -நிழலி
3 months 3 weeks ago
நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!
3 months 3 weeks ago
அன்றைய நாட்களில் பல உயர்தர மாணவர்கள் தாமாகவே புலிகளில் இணைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு இணைந்தனர். அவ்வாறு சுய விருப்பில் இணைந்த அனைவரையும் உங்கள் இந்த கருத்து அவமானப்படுத்துகின்றது. நாமெல்லாம் வசதியான வாழ்க்கையை நோக்கி நகரும் பொழுது படிப்பை விட, தாயக மீட்பு முக்கியம் என சென்ற ஆயிரக்கணக்கானோரை அவமானப்படுத்தி உள்ளீர்கள் இங்கு.
3 months 3 weeks ago
கண்ணால் கண்ட கடவுள் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் எங்கிருந்தாலும் வாழ்க.
3 months 3 weeks ago
ஆகா தாத்தா சிறி வாழ்த்துக்கள். சிவானிகுட்டி நலமோடு வாழ வேண்டுகிறேன்.
3 months 3 weeks ago
26 Nov, 2025 | 03:51 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231500
3 months 3 weeks ago
"இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆரம்பத்தில் இலங்கையின் நிலப்பகுதி ஊடாகவும், பின்னர் இலங்கையின் கிழக்குக் கரைப்பகுதி ஊடாகவும் நகரவுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியளவிலேயே அந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை வடக்கு மாகாணத்தில் இருந்து நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது." என்றார். https://tamilwin.com/article/close-proximity-to-sri-lanka-in-the-last-130-years-1764154057
Checked
Tue, 03/17/2026 - 22:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed