புதிய பதிவுகள்2

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
திருகோணமலையில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் திருகோணமலை ,தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27)கொட்டும் கனமழைக்கு மத்தியிலும் இடம் பெற்றது. வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை இந்த நேரத்தில் அக வணக்கத்துடன் இயற்கையின் பேரிடரை கூட பொருட்படத்தாமல் இளைஞர்கள் நினைவேந்தலை முன்னெடுத்தனர். https://ibctamil.com/article/trincomale-maaveerar-naal-1764252908

சீரற்ற வானிலை; நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிப்பு!

3 months 2 weeks ago
27 Nov, 2025 | 05:03 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே 75 பிரதான வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகளை சீரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரற்ற வானிலை காரணமாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், வடமத்திய, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள வீதிகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், மலைப் பிரதேசங்களில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க 24 மணி நேர அவசரகால சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231680

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்கள்! மட்டக்களப்பிலும் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாறு நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/maaveerar-day-remembrance-event-2025-batticaloa-1764251903#google_vignette

புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள்

3 months 2 weeks ago
புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்…. தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நியூசிலாந்து நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன. நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிருந்தன. திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான் கலம் ஒன்று தமிழீழ தேசியக்கொடியை தாங்கியபடி வானில் பறந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் செனட் சபையின் பசுமைக்கட்சி உறுப்பினர் டேவிட்சூ பிறிட்ஜ் ஏற்கவே செனட்டில் மாவீரர் நாளை கௌரவித்து உரையாற்றிய போது தமிழர்களின் நாட்காட்டியில் மாவீரர் நாள் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றெனவும் கண்ணியம் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியா பிரித்தானியாவை பொறுத்தவரை லண்டன் எக்ஸல்மண்டபம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள உலகத்தமிழர் வரலாற்றுமையம் ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றன இதேநேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தீக்குளித்து தியாச்சாவடைந்த ஈகைபேரொளி முருகதாசனின் வித்துடல் உள்ள கல்லறையிலும் அஞ்சலி இடம்பெற்றிருந்தது . அதேபோல ஸ்கொட்லாந்து உட்பட்ட ஏனைய முக்கிய இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பிரித்தானியாவில் அரசியல் கட்சிகளின் பிரபலங்களும் நினைவேந்தல் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் ஆளும் தொழிற்கட்சியின் முன்னாள் நிழல் நிதியமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் மக்டொனால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் ஆகியோர் தமது செய்திகளை காணொளியில் வெளியிட்டனர். அதேபோல தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ்பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிடலை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டிருந்தார். காணொளி - https://youtu.be/cpRrbAbCruM பிரான்ஸ் பிரான்சில் இன்று பல நகரங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. முதன்மை நிகழ்வு தலைநகர் பரிசின் புறநகரப் பகுதியான லே போர்த் மார்லி பகுதியில் உள்ள பிரமிட் பெரு மண்டபத்தில் இடம்பெற்றது. இதேநேரத்தில் கப்டன் கஜன், லெப்.கேர்ணல் நாதன் மற்றும் கேர்ணல் பரிதி ஆகியோரின் வித்துடல்கள் உள்ள பந்தன் கல்லறை தோட்டத்தில் மதியம் 12.35 க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டிருந்தது. இதனைவிட போர்தோ, நீஸ், லியோன் , தூலூஸ் , ஜியான் உட்பட்ட பல முக்கிய நகரங்களிலும் நிகழ்வுகள் நடக்கின்றன. இதேபோல சுவிற்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி , டென்மார்க் , நோர்வே மற்றும் சுவிடன் உட்பட்ட நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. புலம்பெயர் நாடுகளில் அதிகமான ஈழத்தமிழ் மக்கள் வசிக்கும் கனடாவிலும் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/heroes-day-event-in-the-diaspora-1764243639

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களுக்கு முள்ளியவளை துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் முல்லைத்தீவு - முள்ளியவளை துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. இதனையடுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்து வருகின்றனர். சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/maveerar-ninaivendhal-mulliyavalai-2025-1764249093

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 2 weeks ago
அம்பாறையில் அடைமழை; கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 04:37 PM அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை கல்முனை பொலிஸார் சவளக்கடை பொலிஸார் தன்னார்வ ஆர்வலர்கள் இணைந்து இப்பொறிமுறையினை உருவாக்கியுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய உழவு இயந்திரம் இயந்திர படகுகள் ஊடாக இரு கரையிலும் உள்ள பொதுமக்கள் அத்திய அவசிய தேவைகளுக்காக ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார். இடையே வீதி மூடப்பட்டு பொலிஸார் இராணுவம் பாதுகாப்பு கடமையில் இன்றும் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது.மேலும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/231674

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
வரலாற்றில் முதன்முறையாக மாவீரர்களுடன் விடுதலை புலிகளின் தலைவருக்கும் அஞ்சலி..! தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இதன் போது மாவீரர்களின் உருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். https://tamilwin.com/article/mulankavil-maaveerar-thinam-1764247643

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 2 weeks ago
வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்! 27 Nov, 2025 | 07:05 PM வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பலர் இடம்பெயரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக நீர் வான்பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகைதந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இடம்பெயரும் மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்து நடைமுறைகள் தடைப்பட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண்மூடைகளை நிரப்பி பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்! | Virakesari.lk

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months 2 weeks ago
முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதனுக்கு யாழில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஈகை சுடர் வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/tribute-first-hero-shankar-satyanathan-in-jaffna-1764246419

உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல்

3 months 2 weeks ago
27 Nov, 2025 | 07:10 PM மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர். உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் | Virakesari.lk

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய்

3 months 2 weeks ago
திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய் 27 Nov, 2025 | 03:58 PM அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231662

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months 2 weeks ago
முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள் பாதுகாப்பாக மீட்பு! 27 Nov, 2025 | 03:56 PM முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் கிராமங்களைச் சேர்ந்த 16 விவசாயிகள், கல்நாட்டிவெளி வயல் பகுதிக்கு நேற்று புதன்கிழமை இரவு (26) காவல் பணிக்குச் சென்றிருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பிற்பகல் 2.30 மணியளவில் கிராம மீனவர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் சேர்ந்துகொண்டு ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, அந்த 16 விவசாயிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்புக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலையில் உள்ளனரென முல்லைத்தீவு மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/231660

சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

3 months 2 weeks ago
திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை, ஜனாதிபதி அவசர சந்திப்பு - என்ன நிலவரம்? பட மூலாதாரம், KRISHANTHAN கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 27 நவம்பர் 2025, 11:28 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.) இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 14 ஆக பதிவாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஐந்து பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. எந்தெந்த பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன? ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை, லுணுகல, பஸ்ஸர, கந்தேகெட்டிய, ஊவா பரணகம, சோரணாதொட்டை, எல்ல ஆகிய பகுதிகளில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கடுவன பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட மூலாதாரம்,DINESH VADIVEL பட மூலாதாரம்,DINESH VADIVEL சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள இப்பாகமுவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலபனை பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதேவேளையில், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 14 பேர் காணாமல் போயுள்ளனர். பட மூலாதாரம்,KRISHANTHAN மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் கொழும்பு - அவிசாவளை ரயில் மார்க்கத்தில் கற்கள் சரிந்து மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை - கல்கெட்டியாவ வீதியிலுள்ள பாலமொன்று வெள்ளத்தால் உடைந்துள்ளது. அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பகுதியிலுள்ள 40 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது. வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையால் நெடுங்கேணி மருத்துவமனை நீரில் மூழ்கியுள்ளது. வவுனியாவின் தென் பகுதியிலுள்ள ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 6 பேர் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DINESH VADIVEL பதுளை மாவட்டத்தின் வெலிமடை பகுதியில் மண்சரிவு காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அந்தந்த வீடுகளில் இருந்த அனைவரும் போலீஸாரினால் காப்பற்றப்பட்டுள்ளனர். பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸரை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தின் மனம்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன், பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மலையகத்தின் பல பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதன்படி, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,DINESH VADIVEL அதிகளவான மழை வீழ்ச்சி எங்கு பதிவானது? பட மூலாதாரம்,DINESH VADIVEL கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள றூகம பகுதியிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, றூகம பகுதியில் 300.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,DMC SRI LANKA தேர்வுகள் ஒத்திவைப்பு இலங்கையின் பல்கலைக்கழக நுழைவு பரீட்சையான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள பரீட்சைகளை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நவம்பர் 27 முதல் 29 வரையிலான தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் பரீட்சைகள் வழமை போன்று நடத்தப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், PMD படக்குறிப்பு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தல் ஜனாதிபதி அவசர சந்திப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர கூட்டமொன்றை நடத்தினார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அவசரக்கால நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதோடு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் உடனடியாகத் தலையிடுமாறும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvdn814lg8o

தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!

3 months 2 weeks ago
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சபையில் ரவிகரன் MP வாழ்த்து! தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன், “ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று” என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (26) அன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்தன , போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததது, காணி அபகரிப்புக்களும் இல்லை, எனவே, தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது, நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலாவக்கூடிய நிலையிருந்தது. தாயகப் பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்றுப் பாதுகாப்பாக வாழ்ந்தனர். எனவேதான் தமிழ் மக்கள் மேதகுவை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர். அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று (நேற்று) பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகுவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://athavannews.com/2025/1453959

இன்று மாவீரர் தினம்!

3 months 2 weeks ago
தமிழினம் தலை நிமிர்ந்து வாழ தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்கள் எல்லோருக்கும் வீர வணக்கங்கள். உயிருள்ளவரை நெஞ்சில் நிறைந்திருப்பீர்கள்.
Checked
Tue, 03/17/2026 - 22:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed