புதிய பதிவுகள்2

இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு

3 months 3 weeks ago
புதிதாக புது மியுசிக் போட மற்றவர்களால் இயலவில்லை அதனால் தானே அவர் பாடலை களவெடுத்து அப்படியே போடுகின்றனர்

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 3 weeks ago
புடின் உக்ரேனை இணைக்க ஆசைபட்டதை பார்த்து ட்ரம் கனடாவை இணைக்க ஆசைபட்டதை பார்த்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆசை வந்து சிந்து பகுதி மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று சொல்லியுள்ளார். இலங்கையுடன் இணைந்து தான் தான் வட கிழக்கு உள்ளது. அகன்ற இந்தியா காண வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவுடன் இலங்கை வடகிழக்கை இணைக்கும் அகன்ற இந்தியா 🤣 ஆசை பிஜேபி தவைர்களுக்கு இருந்ததாக சொல்கின்றார்கள். ஜேவிபியும் இந்தியாவுக்கு இந்த நோக்கம் இருப்பதாக சொல்லி இருக்கின்றதாம். --- @Kandiah57 ஐரோப்பிய பாதகாப்பு மிகவும் முக்கியம் அதுவும் ரஷ்யா போன்ற மோசமான ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து

மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

3 months 3 weeks ago
மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! 🎂 இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருணன்! லண்டன் மண்ணில் உதித்த அழகன் கண்களில் மின்னும் புன்னகை நதி ஆண்டுகள் பறந்தாலும் மங்காத பாசம் விண்மீனாய் எங்கள் குடும்பத்தின் ஒளி!🌸 காழ்ப்புணர் வில்லா வாழ்க்கை கொண்டவனே ஆழ்ந்த அன்பின் மறு உருவமே தாழ்ந்த எண்ணம் அற்ற சுடரே யாழ்ப்பான வேரின் செடியே நீடூழிவாழ்க!🌸 அறிவும் ஆற்றலும் இணைந்து என்றும் அழகு தெய்வமாய் பிரகாசிக்கும் அருணனே அடக்கமும் பணிவும் இரண்டையும் கொண்டு அருமையான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!🌸 பன்னிரண்டு ஆண்டுகள் சென்றது போலவே இன்பம் என்றும் உன்னச் சூழ சின்ன அனிகா சேர்ந்து விளையாட வான் எங்கும் பிறந்தநாள் ஒலிக்கட்டும்! 🌸 தாத்தா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 🎂 Happy 12th Birthday, Arunan! Born as dawn lit London skies, A spark of joy in gentle eyes. Years have flown, yet bright you stay, A shining star in life’s ballet. From Jaffna roots your story grew, Through England’s dreams, life shaped anew. Now Swiss hills echo your name, In two sweet tongues, you play the same. A mind that learns, a heart so kind, With light of wisdom intertwined. Let courage lead, let laughter flow, Let love and kindness ever grow. Dear Arunan, twelve years today, May sunshine light your every way. With sister Anikka by your side, May life forever bloom with pride! 💫🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Joyeux 12ᵉ Anniversaire, Arunan ! Né à l’aube sous le ciel de Londres, Une étincelle de joie dans tes yeux tendres. Les années passent, tu brilles toujours, Étoile rayonnante des plus beaux jours. Des racines de Jaffna ton histoire s’élève, Par les rêves d’Angleterre, ta vie s’achève. Maintenant les collines suisses murmurent ton nom, En deux douces langues, tu fais ton son. Un esprit curieux, un cœur sincère, La lumière du savoir t’éclaire. Que le courage te guide, que le rire t’entoure, Et que l’amour grandisse chaque jour. Cher Arunan, douze ans aujourd’hui, Que le soleil éclaire tes nuits et tes vies. Avec ta sœur Anikka à tes côtés, Que la fierté et la joie soient à jamais partagées ! 🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! https://www.facebook.com/groups/978753388866632/posts/32547543381560888/?

இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு

3 months 3 weeks ago
இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு written by admin November 25, 2025 தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘ பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223052/

சாத்தானின் படை புத்தகம் வேண்டி

3 months 3 weeks ago
வணக்கம் ஐயனே, இந்த நூலின் இரண்டாம் Volume கிடைக்குமா? நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் முதல்1000 சொச்சம் பக்கங்கள் உள்ளன. இன்னும் 700 பக்கங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றை எப்படி பெற்றுக்கொள்வது? நன்றி
Checked
Tue, 03/17/2026 - 22:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed