புதிய பதிவுகள்2

மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

3 months 3 weeks ago
மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! 🎂 இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருணன்! லண்டன் மண்ணில் உதித்த அழகன் கண்களில் மின்னும் புன்னகை நதி ஆண்டுகள் பறந்தாலும் மங்காத பாசம் விண்மீனாய் எங்கள் குடும்பத்தின் ஒளி!🌸 காழ்ப்புணர் வில்லா வாழ்க்கை கொண்டவனே ஆழ்ந்த அன்பின் மறு உருவமே தாழ்ந்த எண்ணம் அற்ற சுடரே யாழ்ப்பான வேரின் செடியே நீடூழிவாழ்க!🌸 அறிவும் ஆற்றலும் இணைந்து என்றும் அழகு தெய்வமாய் பிரகாசிக்கும் அருணனே அடக்கமும் பணிவும் இரண்டையும் கொண்டு அருமையான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!🌸 பன்னிரண்டு ஆண்டுகள் சென்றது போலவே இன்பம் என்றும் உன்னச் சூழ சின்ன அனிகா சேர்ந்து விளையாட வான் எங்கும் பிறந்தநாள் ஒலிக்கட்டும்! 🌸 தாத்தா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 🎂 Happy 12th Birthday, Arunan! Born as dawn lit London skies, A spark of joy in gentle eyes. Years have flown, yet bright you stay, A shining star in life’s ballet. From Jaffna roots your story grew, Through England’s dreams, life shaped anew. Now Swiss hills echo your name, In two sweet tongues, you play the same. A mind that learns, a heart so kind, With light of wisdom intertwined. Let courage lead, let laughter flow, Let love and kindness ever grow. Dear Arunan, twelve years today, May sunshine light your every way. With sister Anikka by your side, May life forever bloom with pride! 💫🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Joyeux 12ᵉ Anniversaire, Arunan ! Né à l’aube sous le ciel de Londres, Une étincelle de joie dans tes yeux tendres. Les années passent, tu brilles toujours, Étoile rayonnante des plus beaux jours. Des racines de Jaffna ton histoire s’élève, Par les rêves d’Angleterre, ta vie s’achève. Maintenant les collines suisses murmurent ton nom, En deux douces langues, tu fais ton son. Un esprit curieux, un cœur sincère, La lumière du savoir t’éclaire. Que le courage te guide, que le rire t’entoure, Et que l’amour grandisse chaque jour. Cher Arunan, douze ans aujourd’hui, Que le soleil éclaire tes nuits et tes vies. Avec ta sœur Anikka à tes côtés, Que la fierté et la joie soient à jamais partagées ! 🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! https://www.facebook.com/groups/978753388866632/posts/32547543381560888/?

இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு

3 months 3 weeks ago
இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு written by admin November 25, 2025 தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘ பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223052/

சாத்தானின் படை புத்தகம் வேண்டி

3 months 3 weeks ago
வணக்கம் ஐயனே, இந்த நூலின் இரண்டாம் Volume கிடைக்குமா? நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் முதல்1000 சொச்சம் பக்கங்கள் உள்ளன. இன்னும் 700 பக்கங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றை எப்படி பெற்றுக்கொள்வது? நன்றி

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 3 weeks ago
வேறு. வழி. ஏதாவது. உண்டா ?. எதிர்க்கமால். விட்டால். எற்றுக்கொண்டால். என்ன. நடக்கும். அதனால. ஐரோப்பிய ஓன்றியத்துக்கு. ஏதாவது. நன்மைகளுண்டா. ? உங்களை. விட. ஐரோப்பியா. ஓன்றிய. தலைவர்களுக்கு. அரசியல் அறிவு. கூட. உண்டு. ரஸ்யாவல். ஐரோப்பிய. ஒன்றியத்துக்கு. எண்ணையும். எரி வாயுவும். விற்க்கமால். வழ முடியுமா ? முடியுமாயின். விற்பனையை. நிறுத்த வேண்டியது தானே. ௳,,! ஏன். நிறுத்தவில்லை. ?

கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் இன‌வாத‌ அர‌சு கால‌த்தில் செய‌ல்ப‌ட்ட‌து போல் தொல்லிய‌ல் திணைக்க‌ள‌ம் செய‌ற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ வேண்டும்

3 months 3 weeks ago
அதுசரி, ஏன் மூஞ்சூரொன்று இப்ப குறுக்கால ஓடுது? மஹிந்தவின் காலத்தில், அநிஞாயத்திற்கு அவர்களுக்கு முட்டுக்கொடுத்து நிஞாயப்படுத்தியவர், இப்போ ஏன் மாற்றிப்பேசுகிறார்? எல்லோருக்கும் திடீரென்று அனுரா மேல் பாசம் வந்திட்டுது! இவர் கூறும் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 50 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 50 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இயக்கர்கள் பண்டைய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆரம்பகால ஆளும் பழங்குடியினரா?' டாக்டர் சுவாமிநாத ஐயரின் [உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் / Mahamahopadhyaya Dr V. Swaminatha Aiyar] கூற்றுப்படி, பாரம்பரியமாக சைன நெறி என்று அறியப்படும், ஒரு பண்டைய இந்திய சமயமான, சைனம் (Jainism) மதத்தில், 24 தீர்த்தங்கரர்களில் (ஆன்மீக ஆசிரியர்கள் அல்லது துறவிகள்) ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இயக்கர் (யக்கா மற்றும் யாக்கினி என்று அழைக்கப்படுபவர்கள்) இருந்தனர் என்று அறியப்படுகிறது. கேப் கொமோரின் (Cape Comorin / இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரியை ஆங்கிலத்தில் cape comorin என்பர்) அருகே சில இடங்களில் யாக்கி அல்லது யக்ஸி க்குப் பதிலாக, இன்று அது 'இசக்கி' என்று அழைக்கப்படுகிறது. சமண சமய சாத்திரங்கள் 24 யட்சினிகள் குறித்து பேசுகிறது. இந்த யட்சினிகள் சமணர் கோயில்களில் காணப்படுகிறது. மேலும் 'யக்ஷி ' என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக இன்று மாறிவிட்டது. பண்டைய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆரம்பகால ஆளும் பழங்குடியினரில் இயக்கர்கள் ஒருவராக இருந்ததாகவும், கிறிஸ்தவ சகாப்தம் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்பே அவர்கள் அழிந்து விட்டதாகவும் இராமாயணம், மகாவம்சம் மற்றும் புராணங்களில் இருந்து நாம் அறிகிறோம். மேலும் 'இசக்கிமுத்து' என்பது தமிழ்நாட்டில் மிகவும் பொதுவான பெண் பெயர் ஆகவும், இயக்கச்சி என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயராகவும் உள்ளதைக் கவனிக்கவும். மேலும் மகாவம்சத்தின் 10 ஆம் அத்தியாயத்தின் 86 முதல் 88 வரையுள்ள வசனங்களைப் பார்க்கவும் [கடந்த காலத்தில் மன்னன் பண்டுகாபயனுக்கு உதவிய அடிமைப் பெண் ஒரு யாக்கினியாக மீண்டும் பிறந்தார். நன்றியுள்ள மன்னன் நகரத்தின் தெற்கு வாசலில் அவளைக் குடியேற்றினார். அரச அரண்மனைக்குள்ளும் அவர் யாக்கினியை பெண்குதிரை வடிவில் வைத்திருந்தார். ஆண்டுதோறும் அவர் அவர்களுக்கும் மற்ற இயக்கர்களுக்கும் பலியிடுதல்களைச் செய்து வந்தார்; ஆனால் திருவிழா நாட்களில் அவர் யக்கா சித்தராஜனுடன் [yakkha Cittaraja] சமமான உயரத்தில் அமர்ந்திருந்தார். மேலும் அவர்களுக்கு முன்பாக தெய்வங்களும் மனிதர்களும் நடனமாடின.] அங்கு யக்கா சித்தராஜா மன்னன் பாண்டுகாபயனுக்கு இணையாக அமர்ந்திருந்தார். அதாவது இவனின் ஆட்சியில் இயக்கர்களுக்கென தனி விழாக்கள் எடுத்தும் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் இடமளித்தும் அவர்களை நண்பர்களாக கொண்டும் அரசாண்டதாகத் தெரிகிறது. மேலும் மன்னன் இந்த கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி அடைந்ததுடன், அவர் தெய்வீக மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயக்கர்களுக்கும் மரியாதை செலுத்தி, மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தார் என்றும் தெரியவருகிறது. ஆனால் ஒன்றை மீண்டும் நினைவு படுத்துங்கள். இந்த இயக்கர்களைத்தான், விஜயன் இலங்கைக்கு வரும் முன், புத்த சமயம் அங்கு வாழவென, முற்றாக இலங்கையில் இருந்து தீபவம்ச, மகாவம்ச புத்தர் வெருட்டி அகற்றினார்? Part: 50 / Appendix – Dipavamsa / 'Is Yakkas were one of the early ruling tribes in ancient South India and Ceylon?; Quote: ‘Yaksi devata. Dr. Swaminatha Aiyar in a note informs us that in the Jaina books, every one of the twenty four Tirthankaras [a saviour and supreme preacher of the dharma (righteous path)] was served by a Yakka and a Yakkini. This name is current as Issaki in places round about Cape Comorin. we know from history and legends as testified to Ramayana and Mahavamsa that Yakkas were one of the early ruling tribes in ancient South India and Ceylon, and died out some time before the commencement of the Christian era’. Unquote It may also be added that Issakimuttu is a very common female name in Tamil Nadu. Iyakkachchi is the name of a place in the Kilinochchi District of the Northern Province of Sri Lanka. Also see the verses 86 to 88 of the chapter 10 of the Mahavamsa [The slave-woman who had helped him in time past and was re-born of a yakkhini, the thankful (king) settled at the south gate of the City. Within the royal precincts he housed the yakkhini in the form of a mare. Year by year he had sacrificial offerings made to them and to other (yakkhas); but on festival-days he sat with the yakkha Cittaraja beside him on a seat of equal height, and having gods and men to dance before him, the king took his pleasure, in joyous and merry wise.] to see how the Yakkha Cittaraja was treated by the king Pandukabhaya. Yakkha Cittaraja was seated on par with the king Pandukabhaya. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 51 தொடரும் / Will follow துளி/DROP: 1916 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 50] https://www.facebook.com/groups/978753388866632/posts/32546205285028031/?

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 3 weeks ago
இன்னுமா அமெரிக்க அதிபர் சொல்வதை இந்த உலகம் நம்பி கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்........................🤣. நாளைக்கு விடிந்தால் அவர் என்ன சொல்லுவார் என்று எங்களுக்கு மட்டும் இல்லை, அவருக்கே தெரியாது...................😜. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் ஒரு விடயத்தை கடுமையாகச் சொல்லியிருந்தார். பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியை இந்தியாவுடன் இணைக்கப் போவதாக அவர் சொல்லியிருந்தார். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றார்கள் என்று அவர் சொல்லியிருந்தார். சிந்து நதியின் புனிதம் பற்றியும் சொல்லியிருந்தார். ரஷ்யா உக்ரேனை இணைக்கலாம். அமெரிக்கா கனடாவை இணைக்கலாம். இந்தியா சிந்துவை இணைக்கலாம்................. இலங்கையில் வடக்கை தெற்கு இணைக்கலாம்...........🙃.

வணக்கம்உறவுகளே

3 months 3 weeks ago
அப்படியாயின் 'வாருங்கள்.............. வணக்கம்...............' என்று நான் உங்களை வரவேற்பது முறையில்லை................... நீங்கள் தான் என்னை வரவேற்க வேண்டும்..................🤣. வணக்கம் நித்தி. நான் இங்கு களத்தில் போன வருடம் இணைந்தேன்...............

கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் இன‌வாத‌ அர‌சு கால‌த்தில் செய‌ல்ப‌ட்ட‌து போல் தொல்லிய‌ல் திணைக்க‌ள‌ம் செய‌ற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ வேண்டும்

3 months 3 weeks ago
🤣.................... முபாறக் மஜீத்துக்கு பகிடிகள் நன்றாகவே வருகின்றது............👍. அவர்கள் தொல்பொருட்களை தேடி ஆய்வு செய்யவில்லை. புதிதாக செய்து கொண்டிருக்கப்படும் புத்த பெருமானின் சிலைகளையும், முளைத்துக் கொண்டிருக்கும் வெள்ளரசு மரங்களுக்கும் புதுப்புது இடங்கள் தேடுகின்றார்கள். இந்த விடயம் தெரியாமல் என்னுடைய ஊர்ச் சந்தியில் அரச மரத்தை நாங்களாவே வைத்துள்ளோம். பழைய மரம் பட்டுப் போக, இப்பொழுது புதிய மரமொன்றை வைத்துள்ளோம். ஏதோ ஒரு விடிகாலைப் பொழுதில் அந்த அரச மரத்தையும் அவர் ஆட்கொண்டு விடுவார் போல.................. 'இது யசோதராவின் மரம்.............' என்று ஒரு அறிவிப்பை அந்த இடத்தில் எழுதி வைத்தால், அந்தப் பக்கமே அவர் எட்டிப் பார்க்க மாட்டார் போல............🤣.

வணக்கம்உறவுகளே

3 months 3 weeks ago
வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 3 weeks ago
புதிய அமைதி ஒப்பந்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொள்கிறது, மாற்றங்களுக்கு எதிராக ரஷ்யா எச்சரிக்கிறது ஆண்ட்ரூ டில்லெட்ஐரோப்பா நிருபர் புதுப்பிக்கப்பட்டதுநவம்பர் 26, 2025 – காலை 5.59 மணி ,முதலில் அதிகாலை 2.01 மணிக்கு வெளியிடப்பட்டது. சேமிக்கவும் பகிர் இந்தக் கட்டுரையைப் பரிசளிக்கவும். இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் 5 நிமிடம் லண்டன் | ரஷ்யாவுடனான தனது போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையிலான அமைதி ஒப்பந்தத்திற்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது, சிறிய விவரங்கள் மட்டுமே மீதமுள்ளன. ஆனால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அசல் 28-புள்ளி திட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஒப்பந்தம் கணிசமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தால் அதை நிராகரிக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது . ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது கிட்டத்தட்ட 500 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அதன் சமீபத்திய கொடிய தாக்குதலில் ஏவிய நிலையில், உக்ரைன் ரகசியத் திட்டத்தில் பெரும்பாலும் உடன்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி, அமெரிக்க ஊடகங்கள் இந்த திட்டத்தின் "சாரத்தை" கியேவ் ஆதரிப்பதாகக் கூறினார். கியேவ் ஆந்திராவில் ரஷ்யாவின் இரவு ஆளில்லா விமானத் தாக்குதலின் போது பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ட்ரோன் மோதியதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். செவ்வாய்க்கிழமை (புதன்கிழமை AEDT) வெள்ளை மாளிகை விழாவில், நன்றி தெரிவிக்கும் நாளுக்காக வான்கோழிகளுக்கு பாரம்பரிய மன்னிப்பு வழங்கும் நிகழ்வில் ஒரு ஒப்பந்தம் முடிவடைந்ததாக தான் நினைத்ததாக டிரம்ப் கூறினார். "நாங்கள் அங்கு செல்லப் போகிறோம்," என்று அவர் கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்ததன் மூலம் அமெரிக்கா ஒரு அமைதி ஒப்பந்தத்தை நோக்கி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார். "சில நுட்பமான, ஆனால் தீர்க்க முடியாத விவரங்கள் உள்ளன, அவை வரிசைப்படுத்தப்பட வேண்டும், மேலும் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மேலும் பேச்சுவார்த்தைகள் தேவைப்படும்," என்று அவர் கூறினார். தீர்க்கப்பட வேண்டிய அந்த நுட்பமான விவரங்களில் ரஷ்யா கைப்பற்றிய பிரதேசத்தின் மீதான ஒரு தீர்வும், உக்ரைனை ஒரு புதிய படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்களின் தன்மையும் அடங்கும் என்று நம்பப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானதும் எண்ணெய் கடுமையாக சரிந்தது. பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் லண்டனில் முந்தைய இழப்புகளை 2.4 சதவீதம் வரை குறைத்தது, பின்னர் அந்த சரிவை ஓரளவு சரி செய்தது. தாமிரத்தின் விலை டன்னுக்கு US$11,000 ஆக உயர்ந்தது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, விரைவில் டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்லத் தயாராக இருப்பதாக அவரது உயர்மட்ட உதவியாளர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்தார். ஒப்பந்தத்திற்கான ஆரம்ப காலக்கெடுவாக வியாழக்கிழமை - அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் - டிரம்ப் நிர்ணயித்திருந்தார், ஆனால் அது இப்போது சீராகிவிட்டது. ஜெனீவாவில் உக்ரேனிய உரையாசிரியர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பிற்பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரஷ்ய சகாக்களுடன் அமெரிக்க அதிகாரிகள் ஒரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர், இது செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்தது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு போர்நிறுத்தம் என்பது சாத்தியமற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் சமீபத்திய நாட்களில் நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தைகள் ஒவ்வொரு நாட்டின் அடிப்படைக் கோடுகளையும் சமரசப் பகுதிகளையும் உறுதிப்படுத்தியுள்ளன. எந்தவொரு போர் நிறுத்தத்தையும் நிலைநிறுத்துவதற்காக உக்ரைனுக்கு அனுப்பப்படும் பன்னாட்டு அமைதி காக்கும் படைக்கான அவசரத் திட்டத்தை பிரிட்டன் இன்னும் தயாரித்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அல்பானீஸ் அரசாங்கம் அந்த முயற்சிகளுக்கு பங்களிக்கும் விருப்பத்தைத் திறந்தே வைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு (புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு AEDT) அமைதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மேற்கத்திய நட்பு நாடுகளின் மெய்நிகர் “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” கூட்டத்தை ஸ்டார்மர் நடத்தினார், இந்த அழைப்பில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் கலந்து கொண்டார். பின்னர், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை உருவாக்குவது குறித்து அமெரிக்கா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஒரு பட்டறையை வழிநடத்தும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். அந்த நான்கு நாடுகளும் நேட்டோ உறுப்பினர்கள். "பேச்சுவார்த்தைகள் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன, எச்சரிக்கைக்கு காரணம் இருப்பதால் அல்ல - உக்ரைன் உறுதியாக உள்ளது, ரஷ்யா மெதுவாக உள்ளது, ஐரோப்பா உறுதியாக உள்ளது - ஆனால் இறுதியாக ஒரு நல்ல அமைதியை நோக்கி உண்மையான முன்னேற்றத்தை அடைய ஒரு வாய்ப்பு இருப்பதால், இந்த உத்வேகத்தை நாம் கைப்பற்ற வேண்டும்," என்று மக்ரோன் கூறினார். "நல்ல அமைதிக்கான முழுமையான நிபந்தனை மிகவும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் தொகுப்பாகும், காகித உத்தரவாதங்கள் அல்ல." கடந்த வாரம் ரஷ்யாவிற்கு மிகவும் சாதகமான ஒரு அமைதித் திட்டத்தை வெளியிட்ட பின்னர் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதில் டான்பாஸ் பகுதி முழுவதையும் உக்ரைன் ஒப்படைக்க கட்டாயப்படுத்துதல், நேட்டோவில் உக்ரைனை சேர தடை விதித்தல், அதன் இராணுவத்தின் அளவை 600,000 ஆகக் குறைத்தல் மற்றும் வெளிநாட்டு துருப்புக்கள் உக்ரைனில் நிறுத்தப்படுவதைத் தடை செய்தல் ஆகியவை அடங்கும். ஐரோப்பியத் தலைவர்கள் இந்த அமைதித் திட்டம் உக்ரைனை எதிர்காலத் தாக்குதலுக்கு ஆளாக்கும் என்று எச்சரித்து, அதை ஒரு "சரணடைதல்" என்று வர்ணித்த நிலையில், ஜெனீவாவில் சில சமயங்களில் நடந்த சோதனையான பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்கள் திட்டத்தை 19 உடன்பாட்டுப் புள்ளிகளாகக் குறைத்ததில் விளைந்தன. 19 அம்சங்களின் விவரங்கள் இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆனால் அமெரிக்க ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அமெரிக்க அதிகாரி, "உக்ரேனியர்கள் சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். சில சிறிய விவரங்கள் தீர்க்கப்பட உள்ளன, ஆனால் அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று கூறினார். உக்ரைன் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம், கியேவ் ஒப்பந்தத்தின் சாராம்சத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் முக்கியமான பிரச்சினைகள் ஜனாதிபதிகளால் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். உக்ரைனின் தேசிய பாதுகாப்பு செயலாளர் ருஸ்டெம் உமெரோவ், பிரதிநிதிகள் குழுக்கள் "ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறைகள் குறித்து ஒரு பொதுவான புரிதலை எட்டியுள்ளன" என்றும், டிரம்பை சந்திக்க ஜெலென்ஸ்கியின் அமெரிக்க விஜயத்தை ஏற்பாடு செய்ய ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். வியாழக்கிழமைக்குள் உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்படத் தவறினால், அதற்கான இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை உதவியை நிறுத்துவதாக வெள்ளை மாளிகை அச்சுறுத்தியிருந்தது, ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் அந்தக் காலக்கெடு நழுவுவதாகத் தெரிகிறது. இருப்பினும், ரஷ்யர்கள் தாங்கள் பார்த்திராத ஒரு புதிய ஒப்பந்தத்தில் சிக்கிக் கொள்ள மறுக்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் - சமீபத்திய வாரங்களில் கவனத்தை ஈர்க்காததால் அவர் நீக்கப்பட்டதாக ஊகங்கள் எழுந்தன - ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடந்த உச்சிமாநாட்டில் புடினும் டிரம்பும் முடிவு செய்தவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அமைதி முன்னெடுப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தார். "நாங்கள் நிறுவியுள்ள முக்கிய புரிதல்களின் அடிப்படையில் ஆங்கரேஜின் அர்த்தமும் எழுத்தும் அழிக்கப்பட்டால், நிச்சயமாக, அது [ரஷ்யாவிற்கு] அடிப்படையில் வேறுபட்ட சூழ்நிலையாக இருக்கும்," என்று அவர் கூறினார். அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோது, ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தின. நகர கட்டிடங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு இலக்கு வைக்கப்பட்டதில் கீவ் நகரில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். தெற்கு ரஷ்யாவில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். https://www.afr.com/world/europe/ukraine-agrees-new-peace-deal-but-russia-warns-against-changes-20251126-p5nifq
Checked
Tue, 03/17/2026 - 19:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed