புதிய பதிவுகள்2

நாட்டுப்பற்று.....

14 hours 33 minutes ago
அப்பாடா .....நான் வாக்களித்து விட்டேன் ........! நான் ஒருபோதும் வாக்களிக்கத் தவறுவதில்லை........ அப்படி எப்போதாவது தவறியிருந்தால் அந்நேரம் நான் வேறிடத்தில் இருந்திருப்பேன் . .......! 😀

Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்

14 hours 37 minutes ago
கிருபன், கிரிதரன். குமரன், குயிலன், குமணன், குறளமுதன், குறளரசு, குழந்தை. கேசவன், கேதீசன், கேதீஸ், கேதீஸ்வரன். கூலன், கூடலமுதன், கூடலரசன், கூடற்கதிர்.

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

14 hours 57 minutes ago
அவர் தனக்கு தானே தீ வைக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை. மனநல பிரச்சனைகளில் ஏற்கனவே இவர் இருந்ததாக தெரியவருகிறது. பேருந்தில் இருந்த ஏனையவர்கள் ஏன் தப்பிச்செல்ல முடியாமல் இருந்தது என்பதற்கான விசாரணைகள் நடக்கின்றன. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கே பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கதவு திறக்கப்படமாட்டாது. இந்த சம்பவமும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நடந்திருக்கிறது. யாரும் தப்ப முடியாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் அவர் பெட்ரோல் மூலம் பேருந்தை நனைப்பதற்கு சில வினாடிகளே பொதுமனாகாத இருந்திருக்கும். அதற்குள் தப்பி செல்வதற்கு போதிய அளவு நேரம் ஒருவருக்கும் இருந்திருக்காது.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

15 hours 33 minutes ago
😂 நீங்கள் நினைத்தது சரி விஜய் இரசிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன் ஏன் அவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவாவின் பதில் விஜய் அண்ணாவின் X படம் (எனக்கு பெயர் நினைவில்லை) பார்த்தேன் அதில் இருந்து அவர் முதலமைச்சரா வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார் என்று முடிவு எடுத்தேன். உண்மை

Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்

15 hours 47 minutes ago
கிரிராஜன், கிரிதரன், கிஷோர், கிருத்திக், கிளிவளவன். கு: குணாளன், குமரவேல், குரு, குலசேகரன், குணசேகர், குமரேசன், குயிலன். கூ: கூத்தன், கூத்தபிரான், கூர்மன், கூத்தன், கூத்தவேல். கே: கேசவன், கேதாரீஸ்வரன், கேடயன், கேயன், கேசவன், கேதார். எனது நட்சத்திரத்தில் பையன் பிறந்தபடியால் நல்லாயிருப்பான்.

Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்

16 hours 28 minutes ago
திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள் Male Baby

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

16 hours 58 minutes ago
ஆரம்பத்தில் விஜயின் கட்சிக்கு 10% இற்கும் குறைவான வாக்குகளே வரலாம் என நினைத்தேன், விஜையின் கட்சி கொள்கை எதுவும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை (கட்சிக்கென ஏதாவது கொள்கை உண்டா என தெரிந்தவர்கள் கூறவும்), அதனால் மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தேன், ஒரு காணொளியில் விஜையின் பெயரை கூறியது அரங்கிலிருந்த மக்கள் ஆர்ப்பரிப்பதனை பார்க்கும் போது விஜையிற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கும் போல உள்ளது. ஆனால் அந்த கூட்டம் ஒரு இளையவர்கள் அதிகமாக உள்ள கூட்டம் .

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

17 hours 6 minutes ago
திமுகவை தோற்கடிப்பதற்கு அதிமுக பலமடைய வேண்டும். விஜை வரும்பேதே கூட்டணிக்கு தயாரக இருப்பதாகச் சொன்னார். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.தற்போதைய நிலையில் 25 தொகுதிகள் அவருக்குப் போதுமானது. எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா? அவர் தனித்து நின்றால் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். சீமான் எப்போதும் தனித்தே நிற்பார். விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார். விஜை தனித்து நின்றால் அவருக்கு இது கடைசித் தேர்தலில் சீமானின் தனித்து நின்று இப்போதிருக்கும் வாக்கு சதவீதத்தை தக்க வைத்தாலே எதரிர்காலத்தில் தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாகி விடுவார்.

ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

17 hours 10 minutes ago
பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இன்று வட்டி விகிதத்தினை 0.25% ஆக உயர்த்தியுள்ளார்கள், பொருளாதார சரிவு வரும் போல உள்ளது (எனது கருத்து - பொருள்களின் விலை அதிகரிக்கிறது மக்கள் செலவு செய்ய தயாராக இல்லை) , ஆனாலும் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளார்கள்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

17 hours 16 minutes ago
பிபி ட்ரம்பை மாட்டிவிட்டுட்டார் என கூறுகிறார்கள், கடந்த கால அமெரிக்க அதிபர்களது மேசையிலும் ஈரானிற்கெதிரான தாக்குதல் கோப்பு காணப்படுமாம், ஆனால் அவர்கள் மாட்டுப்படவில்லை, ட்ரம்ப் மாட்டுப்பட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.

ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

17 hours 22 minutes ago
இங்கு 91 பெற்றோல் விலை முன்னர் 1.48 - 2.09 எனும் விலைக்குள் காணப்படும் ஆண்டு சராசரி விலை $1.72, இங்கிலாந்து பவுண்ஸில் 0.91(தற்போதய நாணய மாற்று), இங்கிலாந்து சராசரி பெற்றோல் விலை (91) பவுண்ஸில் 1.31 என இணையத்தில் கூறுகிறது அது அவுஸின் நாணயத்தில் $2.47, தற்போது பெற்றோல் விலை தொடர்ந்து இங்கு அதிகரித்து செல்கிறது இன்று $2.27 ($3 டொலர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது). ஒப்பீட்டளவில் இங்கிலாந்தில் பெற்றோல் விலை சாதாரணமாகவே அதிகமாக உள்ளது, அத்துடன் மூன்றாம் தரப்பு காப்புறுதி மிக அதிகமாக உள்ளது, வாகன வரி கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது (5 வருடத்திற்கு குறைவான காரிற்கு குறைவாக இருக்கும்). பெற்றோல் மிகையாக உற்பத்தி செய்யும் நாடு என கூறியுள்ளீர்கள், ஏன் இங்கிலாந்தில் பெற்றோல் விலை அதிகமாக உள்ளது?

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

17 hours 24 minutes ago
பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது! இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். மேலும், ஆறு உக்ரேனியர்கள் லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் செல்லுபடியாகும் விசாக்களில் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் கட்டாய தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி இல்லாமல் மிசோரமுக்குச் சென்றதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது. அங்கு, இந்தியாவிற்கு விரோதமான இனக் குழுக்களை அவர்கள் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவிலிருந்து வந்த பல ட்ரோன் சரக்குகளை அவர்கள் மிசோரம் மாநிலத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. சந்தேக நபர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, சனிக்கிழமையன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர் அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தார். சந்தேக நபர்களுக்கான தடுப்புக் காவல் திங்கட்கிழமையன்று மீண்டும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்தக் குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களின் நடமாட்டம் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது. https://athavannews.com/2026/1468779

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

17 hours 26 minutes ago
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகவும், இதனால் இந்த சந்திப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நேரில் சாட்சி பெற்ற சிலர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் பெண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றார், எந்தவித புகாரும் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பரவியதைக் கண்ட பிறகு, பொலிஸார் ரோபோவை கைது செய்ததை நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2026/1468772

இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

17 hours 28 minutes ago
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி! இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் 100க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான கடற்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு தீர்க்கமான மற்றும் எதிர்பாராத பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரானிய செய்திச் சேவையான Press TV தகவலின்படி, தனது வீரர்களின் மரணங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அந்த மூத்த அதிகாரி அறிவித்ததோடு, அந்த தாக்குதல் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த அறிக்கை, ஈரானின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமியின் முந்தைய கருத்துக்களைத் தொடர்ந்து வந்துள்ளது. அனர் முன்னதாக ஐரிஸ் தேனா போர்க்கப்பலின் மாலுமிகளின் மரணங்களுக்கு ஈரான் பதிலளிக்காமல் போகாது என்று எச்சரித்திருந்தார். அந்தக் கப்பல் ஒரு அமைதியான பணியை முடித்துவிட்டு, போரில் ஈடுபடாத நிலையிலும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹதாமி விளக்கினார். மாலுமிகளின் தியாகத்தை ஈரானின் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் நீடித்த சின்னமாக அவர் விவரித்தார். மார்ச் 4 அன்று, இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், ஈரானிய கடற்படையின் ‘தேனா’ என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 ரக நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் இந்தக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், 87 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் ஐரிஸ் தேனா கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றதால், இந்தத் தாக்குதல் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரவலான சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. https://athavannews.com/2026/1468790

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப்

17 hours 30 minutes ago
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்! கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது’ என ட்ரம்ப் தெரிவித்தார். கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார். https://athavannews.com/2026/1468797
Checked
Wed, 03/18/2026 - 01:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed