6 hours 8 minutes ago
தமிழ் தேசிய முகமூடி அணிந்த றௌடிகளின் சேட்டைகளுக்கெல்லாம் "தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் போட்டி" என்ற ஒரே காரணத்தோடு வருவது நிலாந்தனுக்கே ஒரு கலர் கண்ணாடியினூடாகத் தான் எதையும் பார்க்க முடிகிறது எனக் காட்டுகிறது. அம்பிகா சற்குணநாதனை இதே போன்ற தூசணங்களால் திட்டி ஒதுங்க வைத்த போது, சுமந்திரனை அவுசில் வைத்துத் தூசணங்களால் திட்டிய போது, சும்மா ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்ப வந்து வேசம் போடும் நிலாந்தன் போன்றோர் தான் ஈழத்தமிழர்களின் "சிந்தனைத் தலைவர்கள் - thought leaders" 😎 என்றால், நமக்கு விடிவேயில்லை என்று தான் அர்த்தம்!
6 hours 14 minutes ago
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன? 17 மார்ச் 2026, 10:29 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் உலக நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில், எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளில் ஒன்றாக புதன்கிழமையை விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது. தாய்லாந்தில் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க மக்கள் கோட் - சூட்க்கு பதிலாக குறுகிய கை டி - ஷர்ட் அணியுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மியான்மரில் தனியார் வாகனங்கள் அவற்றின் பதிவு எண் அடிப்படையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில், பல்கலைக்கழகங்களில் ரமலான் விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் திட்டமிட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸில், சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வியட்நாமில், எரிபொருளை சேமிக்க மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்துகிறது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8759vj7en3o
6 hours 19 minutes ago
மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன் 17 Mar, 2026 | 12:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார். மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும். ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது. வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும். டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும். அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஒரு பிரபல ஆலையத்தை தொடர்பு கொண்டு ஆலைய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த ஆலய மதகுரு உட்பட ஆலய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது. எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம். இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது. எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம், வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/241177
6 hours 25 minutes ago
கெதியாகச் செய்யுங்கோ, கட்டாயம் சமூக வலைத்தளத்தில் எரிப்பதை வீடியோவும் போடுங்கோ! ட்ரம்ப் ரீமின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் "இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்" என்று விசேட விசாவும் கொடுத்து, உங்களைத் தட்டி வைக்கும் படி அனுரவுக்கு அழுத்தமும் கொடுப்பார்கள்😇!
6 hours 25 minutes ago
இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்! Mar 17, 2026 - 04:53 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது. இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmuiwcmr000w356px10448qj
6 hours 28 minutes ago
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் உயிரிழப்பு Mar 17, 2026 - 03:33 PM ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக இருந்தமையால், இந்த மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அவர் 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் (SNSC) செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2008 முதல் 2020 வரை 12 வருடங்களாக ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றிய ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஆவார். அலி லாரிஜானி ஆரம்பத்தில் தீவிரக் கொள்கை உடையவராகத் தோன்றினாலும், பிற்காலத்தில் அவர் ஒரு "மிதவாத" தலைவராகக் கருதப்பட்டார். அத்துடன், 2005 மற்றும் 2007 காலப்பகுதியில் அவர் ஈரானின் பிரதான அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmug174n000r356p03so4clm
6 hours 31 minutes ago
அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு Mar 17, 2026 - 02:16 PM நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் யாப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய பணிகளை வாரத்தின் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு அதிகாரியை புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமென நிறுவனத் தலைவர் தீர்மானித்தால், அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை. ஆனால் அதற்காக விடுமுறை தின சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு அல்லது பதில் விடுமுறை வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் அதிகாரிகள், அந்த வாரத்தின் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது. இருப்பினும், சேவையின் அவசரத் தேவை கருதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் அதிகாரிகளை சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் / மாகாண பிரதம செயலாளர் / திணைக்களத் தலைவர் அல்லது அரச கூட்டுத்தாபனத் தலைவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் அதிகாரிகளுக்கு மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை வழங்குவதற்குத் தடையில்லை என்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmudawyw000o356p5x2lrj67
6 hours 34 minutes ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் Published By: Digital Desk 3 17 Mar, 2026 | 12:31 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (17) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நடத்தி வரும் தொடர் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241175
6 hours 36 minutes ago
ட்ரம்பின் சீனப் பயணம் ஒரு மாதம் தாமதம் Mar 17, 2026 - 06:57 AM ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "நாங்கள் அதனை ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம்," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், போரை மேற்பார்வையிடுவதற்கு தான் அங்கிருப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதையடுத்து, ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறவிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள், தீர்வைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களாக பாரிஸில் சந்தித்துப் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmtxkf8n0003356pbt39iwow
6 hours 39 minutes ago
ஈரானில் வான்வழித் தாக்குதல்: உயர்மட்ட இராணுவ, பாதுகாப்பு தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு 17 Mar, 2026 | 05:40 PM இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். அலி லாரிஜானி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பின்னர் நாட்டின் முக்கிய பாதுகாப்புத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பாசிஜ் படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்த குலாம்ரெசா சுலைமானி, அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் பாசிஜ் படையின் பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய தங்குமிடத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை ஈரான் தரப்பில் இருந்து எந்தவித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இதற்கிடையில், அலி லாரிஜானி சமூக வலைதளத்தில் கையெழுத்துப் பிரதியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பதிவா என்ற குழப்பம் நிலவுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச அளவில் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241220
6 hours 45 minutes ago
ஆம். உண்மை. இராணுவன. உடையுடன். துப்பாக்கியுடன். கண்ணடித்தால். ஒரு. ஈரான். மங்கை. அழகே. அழகு. தான். வெளியில். அடக்குமுறை. என்று. சொன்னாலும. அவர்கள். சகல துறைகளிலும். பணியாற்றுகிறார்கள்.
7 hours 41 minutes ago
பொருளாதார தடை என்ற பெயரில் மற்றைய நாடுகளை கட்டிச் சுவராக்கி கடைசியில் இயலாமல் சரணடைய வைக்கிறார்கள். இவர்களது தூளத்திற்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையும் ஆடத் தொடங்கிவிடும்.
7 hours 54 minutes ago
ஈரான் நாட்டு பெண்கள் மிகமிக அழகானவர்கள்.
7 hours 55 minutes ago
அமெரிக்காவை பிச்சை எல்லாம் எடுக்க வைக்க ரொம்ப கஸ்டபட வேண்டி இருக்கும்😂. ஈரான் ஹோர்மூஸ் நீரிணையின் அமைவிடம் அமெரிக்கா படைகளை நிலத்தில் இறக்க தயங்குகிறது ஆதரவு நாடுகள் இல்லை என்பதை வைத்து அழகாக திட்டமிட்டு விளையாடுகிறது. ஆனால் இதற்கும் ஒரு எல்லை உண்டு. அமெரிக்காவின் வான் பரப்பு முழுவதும் ஈரான் வசம். காஸாவை போல் ஈரானின் சில பகுதிகளை ஆக்க அமெரிக்காவால் முடியும். அமெரிக்கா பிச்சை எடுக்கும் நிலை வர முதல் ஈரானுக்கு இப்படி செய்வார்கள் என எதிர் பார்க்கலாம்.
8 hours ago
கிருபன் என்று வைச்சுட்டா போச்சு.
8 hours 2 minutes ago
இவ்வளவு உறுதியாக இருக்கும் நீங்கள் ஏன் சீமான் 15% க்கு மேல் எடுப்பார் என பந்தயம் கட்ட தயங்குகிறீர்கள்? விஜை அதிமுக வோடு போகாமல் விட பெரிய காரணம் பாஜக உள்ளே வந்தது. தமிழ்நாட்டில் சீட் இழுபறியில் கூட்டணி சேராமல் விடுவது அரிதிலும் அரிது (ஒரு முறை வைகோ செய்தார்). விஜை கொள்கை குன்று என்பதெல்லாம் இல்லை - தாமரையை தொட்டால் குலநாசம் என அவருக்கு தெரிகிறது என நினைக்கிறேன். நிதீஸ்குமாரை டம்மி பீசாக்கி ராஜசபாவுக்கு அனுப்பி உள்ளனர். தேர்தலுக்கு பின் எடப்பாடியை பாஜக வச்சு செய்யும் போது விஜை எடுத்த முடிவின் காரணம் புலப்படும். நான் ஆதரிப்பது நோட்டாவையே😂
8 hours 7 minutes ago
நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம் 17 Mar 2026, 4:12 PM நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா. “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். 5 ஆண்டுகள் என்ன செய்தார் முதல்வர் என தரம் தாழ்ந்த வகையில் பேசினார். அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிவி சண்முகம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டு விட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார். https://minnambalam.com/admk-cv-shanmugam-apology-nayanthara-issue/
8 hours 20 minutes ago
ஒரே சொல்லில் பதில் - வரி. நீங்கள் பெற்றோல் வாங்கும் ஒவ்வொரு 1 டொலரில் 25 சதம் வரிகொடுக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு பவுண்சிலும் 75 பென்ஸை ஐ வரியாக கொடுக்கிறோம்😭. இதற்கு பல காரணங்கள் உண்டு - முதன்மையானது பெற்றோலை அதிக விலைக்கு விற்றால் அவுஸ் பொருளாதாரம் வளர்வது குறையும். ஆனால் யூகேயில் ரயில், பஸ் கட்டமைப்பு பரவலாக இருப்பதால் - இவ்வளவு வரி ஏற்றினாலும் பொருளாதாரத்தில் அடி விழாது. மிக ரிமோட்டான இடங்களை தவிர, யூகேயின் 90% இடங்களை பொது பயண முறையிலேயே அடையலாம். எனவே கார்களை விட இதையே ஊக்குவிக்கிறார்கள். அல்லது கார்களை வைத்திருப்பதை penalize பண்ணுகிறார்கள். ஆனாலும் வீட்டுக்கு 2 காராவது நிற்கும். சில ஐரோப்பிய நாடுகளில் எம்மைவிட லிட்டர் விலை கூட. நாம் டீசல் மிகை இறக்குமதி நாடு எனவே எப்போதும் அது பெற்றோலை விட விலை கூடவே.
8 hours 41 minutes ago
Six killed in Swiss bus fire after man reportedly set himself alight Summarise March 11, 2026 - 15:32 Participants at the press conference in Kerzers on Wednesday, 11 March 2026. Keystone / Cyril Zingaro 6 minutes RTS / SRF + Get the most important news from Switzerland in your inbox According to initial investigation findings, a man boarded the bus in Düdingen, in canton Fribourg, at around 5:45pm on Tuesday and set fire to himself in Kerzers at about 6:25pm. The fire then spread rapidly through the entire vehicle. The suspected perpetrator is believed to be a Swiss national who was “isolated and psychologically unstable”, authorities said at a press conference in Kerzers on Wednesday afternoon. The man, allegedly in his sixties, had been reported missing by his family, according to a statement from Fribourg police. He is thought to have died in the incident. He was “known to the authorities for psychological instability” and lived in canton Bern. Deadly Swiss bus blaze: what we know so far Mar 11, 2026 Swiss police say the fire that killed six people on a bus in canton Fribourg may have been started deliberately. “As for the motive, there is absolutely no evidence to suggest this was a terrorist act,” Raphaël Bourquin, the Fribourg attorney general said at the press conference. Six killed and five injured in bus blaze in Kerzers Authorities have also confirmed that the death toll stands at six. No further details were given about the victims, except that their years of birth range from 1961 to 2009. Five people were injured: four passengers and a rescue worker. Three of them are in a serious condition. The charred shell of a Swiss PostBus after it caught fire in Kerzers on Tuesday. Keystone / Alessandro Della Valle According to Swiss public broadcaster SRF, one of the injured is being treated in the specialist burns intensive care unit at Zurich University Hospital. Two of the injured were treated at the scene, while the other two seriously hurt were taken to different hospitals. Witness accounts Swiss public broadcaster RTS interviewed a witness on Wednesday who said he was at the scene when the fire broke out. He said he had wanted to help but “there was no chance of doing anything”, as the bus went up in “flames very quickly, in less than a minute”. Responding to a journalist’s question at the press conference on Wednesday, the cantonal inspector explained that a large amount of fuel and oxygen had been present, which caused the flames to spread so quickly. A small tent has been set up at the scene for people to leave flowers and other messages of support. Keystone / Cyril Zingaro The eyewitness described seeing “giant flames” and “people burning on the side of the bus”. The clothes of a woman who tried to help passengers escape even caught fire, he said. “I tried to put it out with my hands, then I went to get the extinguisher from my shop. There was no way of putting the fire out, it was coming out from everywhere,” he added, saying he had also been burnt. On the other side of the road is Teke Zeynel’s food truck. On Tuesday evening, shortly before 6:30pm, he saw everything unfold. “The bus was already completely engulfed in flames. It stopped right in front of me,” Zeynel told RTS. He added that “the driver managed to open the doors. I saw three people burning. I managed to put out the flames on a woman with my hands. Someone else used their jacket to put out another person. Then I went to get a fire extinguisher and a blanket, but it was already too late.” ‘Everyone tried to help’ He said passers-by were using stones to smash the windows. Just a few metres from the scene, Mina Gendre witnessed the events from her chemist’s shop. “I saw someone come out completely engulfed in flames: it was very shocking. Seeing something like that with your own eyes, right in front of your workplace, is terrifying,” she said. “We were all worried and wanted to help, but in the end there’s not much you can do. What was heartening, though, is that everyone tried to help. In the moment, it’s incredibly difficult because you don’t know what to do, but everyone was there, trying to do whatever they could.” Investigations continue as psychological support is provided Psychological support has been organised for the victims and their families, as well as for others affected, including witnesses, volunteer rescue workers and anyone else who was at the scene, the authorities said. Fribourg police have issued an appeal for witnesses, asking anyone with information that could assist the investigation to contact them on 026 347 01 17. Raphaël Bourquin, Fribourg attorney general speaks at a press conference in Kerzers on Wednesday. Keystone / Cyril Zingaro Philippe Demierre, president of the Fribourg government said they are in the process of securing video footage from all cameras, including surveillance cameras. There are also many different videos circulating, he added, and these still need to be reviewed. “Investigations will be carried out on the bus to rule out any cause, even a partial one, of a technical nature,” Bourquin said. The School of Criminal Sciences has been commissioned to conduct the examination. EU delegation offers condolences to Switzerland The European Union’s representation in Switzerland offered its “sincere condolences”. “Our thoughts are with the victims and their families at this difficult time,” it wrote on X. In its message, the EU Delegation also wished those injured “a swift and full recovery”. The EU has maintained a diplomatic mission in Bern for Switzerland and Liechtenstein since 2007. Ecumenical ceremony on Wednesday evening The dioceses of Lausanne, Geneva and Fribourg, together with the Evangelical Reformed Church of Fribourg, have expressed their “immense sadness” and “deep solidarity” following the tragedy in Kerzers. A service of remembrance will be held on Wednesday evening at the Reformed Church in Kerzers at 7pm. https://www.swissinfo.ch/eng/various/six-killed-in-swiss-bus-fire-after-man-reportedly-set-himself-alight/91080096
8 hours 53 minutes ago
இல்லை. தான். ஈரான். அமைச்சர். சொல்லியுள்ளார். அமெரிக்காவை. பிச்சை. எடுக்க. வைப்போம். என்று. ஈரான். செய்யும். என்று. நம்புகிறேன். ஈரான். அமைச்சரவை. ரொம்ப. படித்தவர்கள். கொண்டது. இங்கே. ஜேர்மனியில். கூட. பல. மருத்துவர்கள். ஈரான்கார ர்கள். மற்றும். அவர்களை. ஏமாற்றி. ஒப்பத்தம். எழுத. முடியாது.
Checked
Tue, 03/17/2026 - 19:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed