1 day 3 hours ago
என் பார்வையில்.., கள்ளன் யார்? காவல்காரன் யார் என்பதை முன்பிருந்ததைவிட தமிழக மக்களுக்கு விஜய் வந்து தனது செயல்களால் உணர்த்தியன் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒழுக்கம் போற்றப்படும் அளவுக்கு புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது இத்தேர்தலில் உணரப்படும்.
1 day 4 hours ago
விஜை பிஜேபி கூட்டணிக்கு போனால் - திமுகவிடம் இன்னும் அதிகமாக ஸ்வீட் பாக்ஸ் எடுக்கலாம் எண்ட அண்ணன், தூ துரைமுருகன் ஆசையில் மண்😂
1 day 4 hours ago
கோழிக்கும், ஆட்டுக்கும், மாட்டுக்கும் மட்டும் அல்ல…. புண்ணாக்கு பரிமாறப்பட்டுள்ளது😂 புரிஞ்சவன் பிஸ்தா😂
1 day 4 hours ago
அப்பாடா இவ்வளவு குளங்களா? இவ்வளவு குளங்களையும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி மழை நீரை சேகரித்தாலே நிலம் செழிப்பாக இருக்கும்.
1 day 4 hours ago
ஓ......அப்ப ரஷ்ய காஸ் அடுப்ப இடப்பக்கம் வைச்சு சமைக்கிறம். சீன காஸ் அடுப்ப வலப்பக்கம் வைச்சு சமைக்கிறம்.😂 வேண்டாம்....அது கொஞ்சம் அகோர காரமாய் இருக்கும் 🤣
1 day 5 hours ago
வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் குழு : ரஜினி முருகன் கன் கன் கன் ரஜினி முருகன் கன் கன் கன் ஆண் : டண்ட நக்குற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன் ஆண் : நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல ஆண் : கால நேரம் பாத்து காத்து வீசவில்ல கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல குழு : { கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2) ஆண் : சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க குழு : மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம் அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம் ஆண் : கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம் கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம் ஆண் : வேசம் போடாம பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம் கூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம் கும்பலா நாங்க டப்பு அடிப்போம் குழு : சிட்டு போல தறி கெட்டு தர மேல தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல பட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள ஆண் : மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம் மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம் ......! --- கொக்கரக்கோ கோழி கூவ ---
1 day 5 hours ago
இங்கேயும் தேர்தல் நடக்கின்றது . ....நானும் நேற்று காலையில்தான் வாக்களித்து விட்டு வந்தேன் இனி அடுத்த ஞாயிறு வாக்களிக்க வேண்டும் . .....! இவர் அசப்பில் நம்ம பிரதமர் ஹரிணி அம்மையார் போல் இருக்கிறார் முடி இழந்தபின் காவி ஒன்று மிஸ்ஸிங்........!
1 day 6 hours ago
நான் ஒரு மாதம் 2500 மைல் (கிமி அல்ல) ஓடுபவன். யூகே போல் ஒரு சின்னம் சிறிய நாட்டில் இது மிக பெரிய தூரம். மின்சார ரேஞ், உள்கட்டுமானம் இன்னும் வளரட்டும் என காத்திருக்கிறேன். ஆனால் போர் நீண்டால் கார் உற்பத்தி பாதிக்கப்படின், அடுத்து சில வருடங்கள் காரின் விலை கூடும் (கொவிட் பின் காலம் போல) எனவே இப்போ வேண்டுவது அதிகம் பிழை இல்லை என எண்ணுகிறேன். அண்மையில் அவுஸின் அவுட்பாக்கில் ஒரு மாதம் செலவழித்தேன். அங்கே எல்லாம் பெற்றோல் டீசல் இல்லாவிட்டால் வாழ்க்கை அடியோடு படுத்து விடும்.
1 day 6 hours ago
ஓம் மற்றைய திரியில் உங்கள் இந்த கருத்தை வாசித்தேன். ஆனால் இதை இப்போதைக்கு அமெரிக்கா ஒரு மட்டுப்பட்ட யுத்தமாகவே நடத்துகிறது. ஈரானின் எண்ணை ஏற்றுமதி, உணவு இறக்குமதி கட்டுமானத்தில் கைவைக்கவில்லை. ஹோர்மூசை திறக்காவிடில் அப்படி செய்வோம் என மிரட்ட கூட இல்லை. ஜப்பான் அருகே இருந்து தரையிறக்க கப்பலை விலக்கி ஈரானுக்கு நகர்த்த, தைவானை சீனா சுற்றுகிறது. கிரீன்லாந்து, நேட்டோ துருப்புகளின் தியாகத்தை கொச்சை படுத்தியது, என சண்டைக்கு போக முன் நட்புநாடுகளை சீண்டியது. இப்போ பெட்டிரோடொலருக்கு ஆபத்து என சொல்லப்படும் போதும் கைகட்டி நிற்பது…. நான் எங்கே வருகிறேன் என்பது புரியும் என நினைக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தனி மனிதனால், ஜனாதிபதியே ஆனாலும் உள்ளடி வேலையை செய்ய முடியுமா என்றும் யோசிக்கிறேன். உங்களுக்கு வாத்தியார் சொன்னது விளங்கவில்லை. எனக்கு அவர் சொன்னதும், நீங்கள் சொல்ல வருவதும் கூட விளங்கவில்லை😂
1 day 6 hours ago
செய்தி நிறுவனங்கள் எதுவும் இதனை உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன் (இணையத்தில் தேடிப்பார்த்ததில்).
1 day 6 hours ago
உலகின் பலம் வாய்ந்த நாட்டின் உச்ச பதவிக்கு வந்தாலும்..ஒரு பன்னாடை பன்னாடையாகவே தான் இருக்கும் என்பதற்கு தம்பு ஒரு உதாரணம்😂!
1 day 6 hours ago
சமச்சீரற்ற தேய்மான போர், ஈரானின் பூகோள கேந்திர முக்கியத்துவம் (ஒப்பீட்டளவில்) அதிக சாதகமாக உள்ளது. இந்த ஒப்பீட்டளவில் எனும் பதம் பாவிக்கும் போதெல்லாம் ஒரு கடந்த கால சம்பவம் நினைவில் வரும், ஒரு கணித ஆசிரியர் ஒரு கேள்வியினை கேட்டார், பெரியதாக உள்ள ஒன்று (அது போல ஏதோ ஒன்று) எப்போது சிறிதாகும் என்றார் (கேள்வி சரியாக நினைவில்லை) வகுப்பு முழுவதும் துள்ளிக்குதித்து கைகளை தூக்கியது எனக்கு தெரியவில்லை எனக்கு கேள்வியே ஒரு அசட்டுத்தனமாக இருப்பது போல இருந்ததால் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த என்னைப்பார்த்து ஆசிரியர் சரியான ஆள் கிடைத்து விட்டான் என்று என்னை எழ்ப்பி பதில் சொல்லு என சொன்னார் (எனக்கு தெரியாது என தெரிந்து கொண்டே), நான் எனக்கு தெரியாது என சொல்ல ஆசிரியர் சொன்னார் ரெலோ அடிச்சால் ரெலோ புலி அடிச்சால் புலி என (ரெலோவினை புலிகள் அப்போதுதான் தடை செய்திருந்தார்கள்), அதன் பின்னர் (அதற்கு முன்னரும் பெரிதான அபிப்பிராயம் இல்லை) எனக்கு அந்த ஆசிரியரை பார்க்கும் போது ஒரு வித கலவையான உணர்வு ஏற்படும். நீண்ட காலமாக மின்சார கார் பற்றி சிந்தித்துக்கொண்டுள்ளேன் (உலகிற்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யகூடாது என) ஆனால் புதிதாக காரிற்கு செலவிடுவதா (பொருளாதார ரீதியான நெருக்கடி) என நினைத்துக்கொண்டிருக்கும் போது இது நிகழ்ந்துள்ளது.
1 day 6 hours ago
இந்த செய்தியின் உண்மைதன்மையை க்ரோக் ஏ ஐ மூலம் சோதித்ததில். யுவான் பரிவர்தனையை உறுதிபடுத்த முடியவில்லை ஆனால் பாகிஸ்தான் கப்பல்கள் முன்பும் ஈரானிடம் யுவானில் வாங்கின என்கிறது. ஆனால் அபுதாபியில் யுவானில் வாங்கியதா என்பது உறுதியாக தெரியவில்லை. இத்தோடு 2 கிரேக கப்பல்கள் உட்பட மேலும் 3 கப்பல்கள் ஈரான் அனுமதியோடு பயணித்ததாக தெரிகிறது.
1 day 7 hours ago
மிஸ்டர் தம்பர், உம்மால முல்லாக்களையே தாக்கு பிடிக்க ஏலாமல் கிடக்கு - இதுக்க எங்களுக்கு வெருட்டு வேற😂. உம்மை விட ரஸ்யாவை எதிர்க நாங்கள் உக்ரேனை அதிகம் நம்பலாம்😂 இவ்வண், ஈயு, கனடா, யூகே
1 day 7 hours ago
இந்தச் சமையலுக்கு... "ஹிஸ்புல்லா" மசாலாவும் போட்டு சமைக்க, ஆஹா.... சொல்லி வேலையில்லை. 😂
1 day 7 hours ago
இந்த கப்பல் அபுதாபியில் யுவானில் எண்ணை வாங்கியதாக சொல்கிறாகள். @vasee
1 day 7 hours ago
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன். written by admin December 13, 2020 யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது. யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது. இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது. இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில் நாவாந்துறைக்கு உட்பட்ட பகுதியின் நீர் ஓட்டத்திலே ஏற்படும் தடைக்கு சந்திரத்துச் சந்திக்கு மேற்கே 25 மீற்றர் பரப்பிற்குள் ஓர் அடுக்குமாடி கட்டிடம் கழிவு வாய்க்காலை முழுமையாக மூடியே அமைக்கப்பட்டுள்ளதோடு அப் பகுதியின் ஊடான நீர் ஓட்டம் முழுமையாகவே தடைப்பட்டுள்ளதோடு அந்த இடங்களில் இருந்த வாய்க்காலை காணவில்லை. அதேபோல் பொம்மை வெளியில் கடலிற்கு நீர் வெளியேறும் பகுதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து அரசியல் குடியேற்றமும் இடம்பெற்றது. அவ்வாறு இல்லை என மறுக்க முடியாத நிலமை ஏனெனில் தற்போது கொட்டடிச் சந்தியினையும் தொலைத் தொடர்பு நிலையத்தினையும் இணைக்கும் வீதியில் இதன் மிகுதி வாய்க்கால் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்தப் பெரிய மழைக்கும் அதனுள் ஒரு துளி நீரையும் காணவில்லை. இதேநேரம் நகரின் மத்தியில் 55 ற்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் 4 அல்லது 5 குளங்களை காணவில்லை. தற்போது 44 குளங்கள் உள்ளன. ஆனால் எந்தக் குளமும் இருந்த அளவில் இல்லை. எல்லாமே மெலிந்து விட்டது. அதாவது நான்கு பக்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவை ஆட்சியாளர்களின் அணைவின் மூலம் 15 ஆண்டுகளிற்கு முன்பு தமக்கு இசைவானவர்களிற்கு வீடு அமைக்கவும் கடைகளாகவும் மாற்றப்பட்டது ஒரு புறம் எனில் ஆலயங்களும் தமது பணி மறந்து குளங்கள், ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளன. ஒருபுறம் இத்தனை இடர்பாடுகளும் ஏற்பட மறுபுறம் சுற்றுமதில்கள் வீதிகளின் அருகே கானப்படும் நிலத்திற்கும் நீர் ஓட இடமின்றி சீமேந்து. மிக நெருக்கமாக அடுக்குமாடிக் கட்டிடங்கள் என்பன எழுப்பும் அதே நேரம் வீதி அமைப்புக்களின்போது வீதிப் புனரமைப்பிற்கே போதாத நிதியில் வடிகால் எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்வியுடன் கூடிய பணிகளே இடம்பெறுகின்றன. நகரின் பல பகுதியிலும் நீர் தேங்குகின்றது. வடிகால் சரியில்லை மாநகர சபை தூங்குகின்றதா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. அரசியல் நோக்கத்திற்காக சிலர் எழுப்பும் கேள்விகளும் இதில் உள்ளடக்கம் . ஏனெனில் இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியதுபோன்று மாநகர சபையில் மட்டும் பழி போடப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபையின் எல்லைக்கு வெளியே குடாநாட்டின் ஏனைய பகுதியில் நீர் தேங்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும். அது தொடர்பில் வாய் திறக்க மாட்டார்கள். இவ்வாறெல்லாம் மாநகர சபையில் பழிச் சொல் சொல்லப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபை என்னதான் செய்கின்றது என அதன் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, “எமது பொறியியல் வல்லுநர்களிடம் கோரினால், மாநகர சபையின் வாய்க்கால் இரு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் ஆனாலும் அந்த நீர் தற்போது வேறு மார்க்கமாக திருப்பப்படுகின்றது. இதேபோன்று பல இடங்களில் கிளை வாய்க்கால், பிரதான வாய்க்காளிற்கு மேலாக கட்டித்திற்கான பாதை, வாகனத் தரிப்பிடம் என்பவை அனுமதி இன்றி அரசியல் செல்வாக்கின் மூலம் முன்பு கட்டியதோடு அந்த அரசியல்வாதிகள் மூலமே திறப்பு விழாவும் நடாத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெற்றது எல்லாம் இந்த சபை உருவாக்கத்தின் பின்பு அல்ல. 2010ஆம் ஆண்டிற்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஒரு தவறு இடம்பெறும்போது அதனை தடுப்பது சுலபம். அது விருட்சமாக மாறிவிட்ட பின்பு தடுப்பதில் பல சட்ட நெருக்கடிகள் உண்டு. அதேநேரம் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடந்த ஆட்சியில் வதிவிடச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே குளங்கள், ஏரிகளை சூழ இருந்த நிலங்கள் தூர்வாரப்பட வேண்டியதே அதன் சீரமைப்பு அதற்கு மாறாக அந்த இடங்களை கட்சிக்காக நோட்டீஸ் ஒட்டியவர்களிற்கும், கட்சிப் பணியாற்றியவர்களிற்கும் வழங்கி குளத்தின் அரைவாசிப் பங்கு ஆக்கிரமித்தாள் மிகுதி இடத்தில் மட்டும் நீர் தேங்க அதன் கொள் அளவு போதாது. தற்போது அவர்களை எழுப்பி வீதியில் நிறுத்தவும் முடியாத நிலமையே உள்ளது. இவைகளுடன் யாழ்ப்பாணக் குடாநாடு ஆண்டிற்கு சராசரியாக ஆயிரத்து 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் பிரதேசம் . ஐந்து நாட்களில் மட்டும் 624 மில்லி மீற்றர் மழை பொழிந்துள்ளது அதாவது அரைப் பங்கு மழை வீழ்ச்சி 5 நாள் இடைவெளியில் ஏற்பட்டது. இருப்பினும் ஒரு நாளில் அதனை வடிந்தோட வைத்தமையானதும் ஓர் இலகுவான பணி கிடையாது. அந்த நீர் ஓட்டத்தில் நெஞ்சளவு தண்ணீரில் இரு மணித்தியாளத்திற்கு ஒரு தடவை தொழிலாளர்கள் வாய்க்காளில் தேங்கும் கழிவுகளை அகற்றினர். அந்தப் பணியானது இலகுவில் கூறிவிட முடியாது. இதேநேரம் மாநகர சபை எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான் அண்மை மழையில் நீர் தேங்கி நின்று ஏனைய இடத்தில் அவ்வாறான நிலமை காணப்படவில்லை எனில் அதுதான் மாநகர சபையின் தவறாக இருக்க முடியும்.” எனப் பதிலளித்த மாநகர முதல்வரிடம் திட்டமிடப்படாத வடிகால் பணியின் காரணமாகவே வைத்தியசாலையின் இரு விடுதிகளிற்குள் நீர் புகுந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி முகநூல் வாயிலாக கருத்து பகிர்ந்துள்ளமை தொடர்பில் கேட்டபோது, “இந்தக் கருத்து நகைப்பி்கிடமானது, ஏனெனில் அவர் ஓர் நிர்வாக அதிகாரி அரசியல் நோக்கம் கொண்ட பதிலை நிர்வாக ரீதியில் கூறக்கூடாது. அதாவது சைவத்தில் கூறுவார்கள் யமதர்மராயாவின் மந்திரியான சிப்திரகுப்தன் ஒவ்வொருவர் தொடர்பிலும் எழுதி வைக்கும் பிரம்மச் சுவடி அவரை தவிர வேறு யாருக்கும் புரியாது என. அதுபோன்றுதான் உள்ளது யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அமைப்பு முறமை அந்த 13 ஏக்கர் நிலப் பரப்பு காணிக்குள் போனால் வெளியில் வர பாதை தெரியாத காட்டில் விட்ட நிலமை. அதனை அமைத்தவர்களிற்கே விளங்குமோ புரியாது. இதேநேரம் 2010ற்கு பின்பு 10 வரையான கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது எதற்குமே மாநகர சபையின் அனுமதியே கிடையாது என்பதல்ல எதற்கும் விண்ணப்பிப்பதே கிடையாது. அங்கே நெருப்பு பெட்டி போன்று அருகருகே அமைத்து ஒரு கட்டிடத்தின் நீர் மறு கட்டிடத்திற்குள் செல்லும் நிலமையும் நீர் ஓடுவதற்கு பாதையின்றி சகல திசையும் கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது. இவை அனைத்தும் அவர்கள் நிர்வாகம் அதற்கும் அப்பால் வைத்தியசாலையின் மதில் ஓரம் எமது பிரதான வாய்க்கால. உள்ளது. அந்த நீரை கொண்டு வந்து வாய்க்காலில் விழ வைப்பது ஒரு சாதாரணமான பணி வேண்டுமானால் நோயாளர்களின் நலன் கருதி அதனையும் நாமே செய்து வழங்கவும் தயாராகவே உள்ளோம்.” என்றார். இதேநேரம் குடாநாட்டில் நீண்ட காலம் பணியாற்றிய ஓய்வு பெற்ற பொறியியலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது , நீர், குப்பை, சுகாதார ஏற்பாடு என்றால் மக்களிற்கு உள்ளூராட்சி மன்றங்களே பொறுப்பு எனத் தெரியும் ஆனால் நகரின் மத்தியில் பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, காங்கேசன்துறை வீதிகளில் நீர் வடிந்து ஓடவில்லை என்றால் அதற்கு முதல் பதில் அளிக்க வேண்டியவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதியின் இரு மருங்கும் இருந்த வாய்க்காலை அழித்தே வீதி அகட்டப்பட்டது. அதன் பின்பு வாய்க்காலை அமைக்காது வீதி அபிவிருத்தி அதிகார சபை தலை மறைவாகினர், அப்போது எவருமே கேட்கவில்லையே. இதுதான் இன்றைய நகரின் மத்தியில் அதிக இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதற்கு காரணம். இதனை யாரும் கூறுவதில்லை என்றார். பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள பெண்கள் விடுதிக் கட்டிடம் உள்ள இடம் 1980ஆம் ஆண்டுவரை குளம். அந்த குளத்தை மூடி அடுக்கு மாடிக் கட்டிடத்தை கட்டிப்போட்டு அதை கட்டிய அதே அறிவாளிகளே இன்று கூறுகின்றனர் மாநகர சபை சரியாக வடிகாலமைப்பு செய்யவில்லை என்று. இவை அனைத்திற்கும் மத்தியில் யாழ் நகர் முழுமையாக தேடியபோது வீதி அபிவிருத்தி அதிகார சபை உண்மையில் அழிவிருத்தியாகவே செயல்பட்டுள்ளமை பட்ட வெளிச்சமாக தெரிகின்றது. அதாவது பலாலி வீதியில் இருந்த வாய்க்காலை மூடி வீதி அமைத்துள்ளது, அதேபோன்று பல்கலைக் கழகம் முதல் பரமேஸ்வராச் சந்தியின் ஊடாக வீதியின் இரு பக்கமும் வாய்க்காலை அமைத்து வந்து எந்தவொரு பொறுப்பற்றதனமாக பழம்றோட், மணல்தறை வீதிகள் ஊடாக அந்த வெள்ள நீரை பாயவிட்டு அதற்கு அப்பால் வாய்க்காலே அமைக்காது தலைமறைவாகியுள்ளமை, ஒஸ்மாணியாக் கல்லூரி முன்பாக சிறிது தூரம் உள்ள வாய்க்கால் மிகுதி இடத்தில் வாய்க்காலே அமைக்கப்படாமை என 6 இடங்களில் இவ்வாறு பொறுப்பற்ற பணி ஆற்றியுள்ளது வீதி அபிவிருத்தி அதிகார சபை. இதனையாருமே கேட்கவோ அல்லது பேசாமல் இருப்பதன் மூலம் யாருக்கு லாபமோ அவர்களே மாநகர சபை மீது பழியை போடுகின்றனர் என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2020/154326/
1 day 7 hours ago
அண்ணை, குளங்களுக்கு வெள்ளத்தோடு வரும் மழை நீரே குளங்களில் நிரம்பி மேலதிக நீர் கடலுக்கு செல்லுமாறு விடப்படுகிறது. வெள்ளம் வழிந்தோடுகையில் மண்ணும் வந்து சேரும், அதனையே குறிப்பிட்ட சில ஆழத்தில் மேலால் அள்ளுவர். கூடுதலான ஆழத்தில் அள்ள வெளிக்கிட்டால் களிமண் அள்ளப்பட்டு நீர் தேங்கும் தன்மை பாதிக்கப்படும்.
1 day 8 hours ago
1 day 8 hours ago
வீதியோரம் . மலர் . ........... 14. வீட்டுக்குள் சுஜிதா இன்னமும் பயம் தெளியாமல் குத்துக்காலிட்டு தரையில் அமர்ந்திருக்கிறாள்.மணிமேகலை மூவருக்கும் சுட சுட தேநீர் போட்டு எடுத்து வந்து அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து பருக்குகிறாள்.தொண்டைக்குள் தேநீர் சூடாக இறங்கியதும் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள். அப்போது விநோதன் அவளிடம் உனக்கு அவர்களை முன்பே தெரியுமா என்று வினவ ஓம் என்று தலையாட்டுகிறாள். எப்படி என்று கேட்க அவர்கள் என் அப்பாவின் நண்பர்கள். அப்ப நான் சின்னப் பிள்ளை. அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்.வீட்டுக்கு வரும்போது சாப்பாட்டு சாமான்கள், இனிப்புகள்,சொக்கிலேட் எல்லாம் எனக்கும் தம்பிக்கும் கொண்டு வந்து தருவார்கள். இவர்கள் வந்தால் அப்பாவின் கையில் நிறைய காசு இருக்கும். — சரி பிறகு….. — அப்படித்தான் அன்றும் இவர்கள் வந்தார்கள். வந்து அப்பாவிடம் வேறொரு ஊருக்கு போய் வேலை செய்யவேண்டும் அங்கு வீடு எல்லாம் இருக்கு நீ முதல்ல போய் நிலமையைப் பார்த்து பின் வந்து இவர்களைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று சொன்னவர்கள். சரியென்று அப்பாவும் புறப்பட்டும் போனவர். பின் இரண்டு மூன்று மாதங்களாய் ஒரு தகவலும் இல்லை. இவர்கள் இடைக்கிடை வந்து சாமான்கள்,பணம் எல்லாம் அம்மாவிடம் குடுத்துவிட்டு போவார்கள். அண்டைக்கு இவர்களோடு புதுசாய் ஒருவர் வந்தவர். இப்ப என்னை முதலாய் திரத்தினவர் அவர்தான். அவர் என்னைப் பார்த்து நீ காம்புக்கு வாறியா அங்கு சின்ன சின்ன வேலைகள் செய்ய எமக்கு ஆட்கள் தேவை என்று சொல்ல அம்மா குறுக்க வந்து அவ சின்னப்பிள்ளை இதெல்லாம் வேண்டாம் என்று தடுத்தவ.மற்றவர்களும் வேண்டாம் அன்னை, இது எங்கள் நண்பனுடைய குடும்பம் விட்டுட்டு வாங்க போகலாம் என்று சொல்ல அவர் கேட்கவில்லை. உடனே அம்மாவை வீட்டுக்குள் கூட்டிப்போய் என்ன சொன்னாரோ தெரியாது பின் அம்மா வெளியில் வந்து பிள்ளை நீ இப்ப இவர்களோடு காம்புக்கு போ, நீ விரும்பிய நேரம் உன்னை இங்கு கூட்டி வருவார்கள் நானும் இடைக்கிடை அங்கு வந்து பார்ப்பேன் என்று அழுதுகொண்டு சொல்கிறா. இப்ப நீ போகாவிட்டால் அம்மாவையும் தம்பியையும் சுடுவன் என்று சொல்லுறாண்டி . பிறகு நான் இவர்களுடன் காம்புக்கு வந்தேன். அங்கு வந்தது முதல் சமையல் வேலைகள் எல்லாம் செய்ய வைத்தார்கள். பிறகு தப்பு தப்பான வேலைகள் எல்லாம் செய்ய சொன்னார்கள் செய்யாட்டி அடிப்பார்கள்.ஒருநாள் நான் காட்டுக்குள்ளால் வெளியே ஓடிவந்து ரோட்டில் நடந்து வரும் போதுதான் அந்த ஜீப்பில் வந்தவர்கள் என்னையும் தூக்கி கொண்டு வந்து ஒரு வீட்டில் வைத்து என்று சொல்ல மேகலை தடுத்து அது வேண்டாம் அப்புறம் சொல்லு என்கிறாள், பிறகு இன்னொரு ஜீப்பில் வந்தவர்கள் அவர்களிடம் என்னவோ சொல்லி அனுப்பி விட்டு என்னையும் அந்த ஜீப்பில் ஏற்றிக் கொண்டுவர அதற்குள் யுகேந்திரன் அழுதுகொண்டு இருந்தவன். பிறகுதான் உங்களையும் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள். சரி நீ போய் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டுட்டு படு….. இதெல்லாவற்ரையும் மறந்துவிடு. ஒருத்தரிடமும் ஏன் யுகேந்திரனிடமும் கூட சொல்ல வேண்டாம். இனி ஒரு பயமுமில்லை ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நல்லாப் படிச்சு முன்னுக்கு வரவேண்டும்.என்று சொல்லிவிட்டு விநோதன் எழுந்து செல்ல கூடவே மேகலையும் வருகிறாள். — அப்பாடா ஒருமாதிரி எல்லோருடைய பிரச்சினைகளும் தீர்ந்தமாதிரி இருக்கு, இல்லையா விநோ ….. —- அதெப்படி சொல்ல முடியும் மேகலை…..எப்பவும் நாங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். “ஒருபோதும் விதைகள் உறங்குவதில்லை அதுபோல்தான் குற்றங்களும்” இதெல்லாம் எங்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் சட்டங்களுக்கு மனிதாபிமானம் கிடையாது…..புரிந்து கொள் ….. —-- எப்படி ….. —-- முதலையால் கை கால் இழந்தவன் இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறான். இந்த மூவரையும் கொன்றது எங்கள் மூவருக்கும் தெரியும்…. ஒருத்தருக்கு தெரிந்தால்தான் அது இரகசியம்….சுஜிதா இப்ப கொஞ்சம் வளர்ந்த பிள்ளைதான் ஆனால் ஒருநாளோ ஒரு வருடமோ பத்து வருடமோ இன்னும் வளர்ந்து காலவோட்டத்தில் பயம் தெளிய யாரோடாவது வாய் தடுமாறி உளறவும் கூடும். இப்ப யுகேந்திரனுக்குத் தெரியாதுதான் ஆனால் ஒரு காலத்தில் தெரியவும் வரலாம். அப்போ அவனுக்கு எங்கள் மீது கோபம் வரலாம்…அதுதான் எந்நேரமும் நாங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். — சும்மா போ விநோ நீ அதை இதை சொல்லி கலவரப் படுத்திறதே உனக்கு வேலையாய் போச்சு ….. . காட்டுக்குள் யானைகளின் மரங்கள் முறிக்கும் சத்தமும், பிளிறலும் கேட்டு, அவை அருகில் எங்கோ இருப்பதை உணர்த்துகின்றன . ...... விநோதனும் சைக்கிளை எடுத்து அந்த வெள்ளை வானில் போட்டு விட்டு அதை ஒட்டிக்கொண்டு காட்டுப்பாதையால் போகிறான்...........! சுபம் …..! படங்கள் உபயம்: கூகுள். யாவும் கற்பனை …..! யாழ் அகவை 28 காக ஆக்கம் சுவி…..!
Checked
Wed, 03/18/2026 - 01:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed