புதிய பதிவுகள்

"விண்ணில் வாழும் வீரன் இவன்!"     "மொழியில் ஒரு பற்றுக் கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!"   "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!"   "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!"   "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!"     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்
Published By: DIGITAL DESK 3 13 MAY, 2024 | 10:55 AM image   வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப்   கூறுகையில்,  "எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம்
மஞ்சள் மாளிகை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அவுட்லுக் தொடர் பதவி, பிபிசி உலக சேவை 12 மே 2024 "ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த
12 MAY, 2024 | 06:12 PM image ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள்  நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.  கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர்.  மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி  அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது  இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில்,  வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர்.   https://www.virakesari.lk/article/183354
Published By: DIGITAL DESK 3 13 MAY, 2024 | 10:55 AM image   வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப்   கூறுகையில்,  "எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது,"  உயிர் பிழைத்தவர்கள் வாழ போராடுகிறார்கள்.  42 வீடுகளில், இரண்டு அல்லது மூன்று வீடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வெள்ளம் முழு பள்ளத்தாக்கையும் அழித்துவிட்டது என்றார்
Published By: DIGITAL DESK 7 09 MAY, 2024 | 04:37 PM image   தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். poli_9524_2.jpg இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரத்யேக காணொளியில், ''  இது சொல்லாட்சி அல்ல. செயல் ஆட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் என்னை உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். 'தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என..!'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக சமூக
லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது! adminMay 12, 2024 latvia-sri-lankans.jpg லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று,   லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம்
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர bea0851927f9fed074926f9e58fb52f6?s=32&d=Posted on March 31, 2024 by தென்னவள்  124 0 Sri-lanka-300x158.jpegதமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில்
கடந்த அரை நூற்றாண்டிற்குள் தடுப்பூசிகளின் மூலம்154 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக  உலக சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு தகவல் வெளியிட்டுள்ளது.  த லென்செட் (The Lancet) எனப்படும் அறிக்கையில் இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  1974ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் (EIP) விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இறப்பு விகிதம்  இதற்கமைய, தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் சுமார் 154 மில்லியன் அளவிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  154-million-people-served-by-vaccine-in-50-years- ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, தடுப்பூசிகளால் குழந்தைகளே அதிக நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 104 மில்லியன் குழந்தைகளே உள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில்,
spacer.png 1958 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் சிலோன் (இலங்கை) இடையே தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை உலகின் இரண்டாவது மிக நீண்ட பேருந்து பயணமாக கருதப்படுகிறது. பயணத்தின் போது இந்த பேருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் பேருந்தை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு பயணித்தது. 42 நாட்கள் 20000 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்? Vino Rajacholan VII
438260417_459187366485700_75223251224214 முதியோர் இல்லத்திற்கு அன்னதானம்  •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப்  போறீங்களா,  •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச்  சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார்.  மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த  பாத்திரங்களை திரும்பவும்  ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம்                   மகிழ் !                                       -------சோம. அழகு     OIG2-2.jpeg உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு
spacer.png 1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.  இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும்
zx.jpg இரண்டும் முரண்பட்டுக் கொண்டன.  கடுமையாக முட்டி மோதிக் கொண்டன.  முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை.  மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும் சண்டைகளும் கூட  நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால்  அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு  நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை. உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால். எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம்  அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம் விட்டுக்கொடுத்து வாழ்வோம்  உறவு செழிக்கும் அன்பு தழைக்கும். 🙏 முகநூலிருந்து......
பூமி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றாலும், நாம் ஏன் அதை உணர்வதில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது
"விசுவாசம்"     நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை  'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை  காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே   பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை.    இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும்  என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம்  அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம்.   ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல!    எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது
"பூ மேயும் வண்டு "     சங்க இலக்கியத்தில், நற்றிணைப் பாடல் 290 இல், ஆண்களை "பூ மேயும் வண்டு" என்று தோழி சாடுகிறாள்.     “வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5 நீயே பெரு நலத்தையே; அவனே, ''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே.”   இதன் பொருள்:வயலில் வெள்ளாம்பல் பூக்கும். அது தலையில் சூடத் தகுந்த பூ. அதனைக் கன்று போட்டிருக்கும் பசு உண்ணும். அது தின்ற மிச்சத்தை நடை தளர்ந்த எருது மேயும். இப்படிப்பட்ட நில நாட்டுத் தலைவன் அவன். அவன் தொடர்பினை நீ நிலையாகக் கொண்டிருக்க விரும்பினால், என் சொல்லைக் கேள். நீயோ முள்ளைப் போன்ற பல் வரிசையுடன் பேரழகு மிக்கவள். என்றாலும், அவன், நீர் நிறைந்த பொய்கையில் அன்றாடம் மலரும் புது மலர்களை ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன் என்று கூறுகின்றனர். அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை. கவனமாக நடந்துகொள் என்று இந்த பாடல் அறிவுறுத்துகிறது. இப்படியே காளிதாசனும் ஆண்களை சாடுகிறான் !!     "Kalidasa in Shakuntalam Drama (Act 5 - verse eight
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்] "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே! நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?"   "வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே  தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம் ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!" "மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ  வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி"  "கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே  கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 மே 2024, 07:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்)
"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்"     தனது கணவனின் குற்ற மற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவை சொட்டும் வரிகளை பாருங்கள்.   அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்!   "தேரா மன்னா செப்புவது உடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி" (வழக்குரை காதை : 50-63)   “உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின்
"விண்ணில் வாழும் வீரன் இவன்!"     "மொழியில் ஒரு பற்றுக் கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!"   "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!"   "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!"   "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!"     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம் No photo description available.