Aggregator

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

1 week 6 days ago
“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் - தமிழ் சிவில் சமூக அமையம் 24 JUN, 2025 | 09:29 PM (எம்.நியூட்டன்) “அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. செம்மணியில் நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தெடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: செம்மணியில் அண்மைக்காலத்தில் புதிதாக அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளை முறையாக அகழ்வு செய்ய வேண்டும் எனக் கோரி, நேற்றிலிருந்து மூன்று நாட்கள் “அணையா விளக்கு” என்ற பெயரில் நடைபெறுகின்ற போராட்டத்துக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்றது. பதினாறு வருடங்களாக தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தில் செம்மணியில் புதைகுழிகள் அண்மையில் மீளக் கண்டறியப்பட்டதும் அதன் அகழ்வின்போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு திருப்புமுனையாக அமைகின்றது. பொறுப்புக்கூறலுக்கான தேவையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் நீதியின் முன்னால் கொண்டு நிறுத்தப்படவேண்டிய தேவையையும், பொறுப்புக்கூறல் தொடர்பிலான தமிழ் மக்களுடைய அவாவினையும் குறித்த மனிதப் புதைகுழிகள் மீள ஞாபகமூட்டுகின்றன. மனிதப் புதைகுழிகளை மனித கௌரவத்தோடும் (human dignity) இறந்தவர்களுக்கு உரிய மரியாதையோடும் (respect for the dead) அணுகுவது என்பது அவசியமானது என சர்வதேச சட்டம் கூறுவதோடு, அவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து அவற்றை முறையாக அகழ்வது தொடர்பிலும், அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எச்சங்களை முறையான விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பிலும், முறையான விசாரணையின் தொடர்ச்சியாக, அந்த மனிதப் புதைகுழிகளில் இடப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விசாரித்து பொறுப்புக்கூறலை சாத்தியப்படுத்துவது தொடர்பிலும், சர்வதேச சட்டத்தில் வழிகாட்டல் குறிப்புகள் தாராளமாக உண்டு. அவற்றைப் பின்பற்றி குறித்த அகழ்வு நடைபெற வேண்டும் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. மேலும், செம்மணியில் மாத்திரம் அல்லாமல் மன்னாரிலும் கொக்கட்டிச்சோலையிலும், இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அப்புதைகுழிகளும் முறையாக விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், உண்மைகள் வெளிக்கொணரப்படுவதும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் அரசினுடைய அங்கங்கள் தொடர்பில் நம்பிக்கையற்று இருப்பது புதிய விடயமல்ல. எனவே இவ்வாறான மனிதப் புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பங்குபற்றலும், சர்வதேச கண்காணிப்பும், சர்வதேச உள்ளீடும் இருப்பது அவசியம் என தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகிறது. மனிதப் புதைகுழி அகழ்வு, அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தல், பின்னர் அது தொடர்பிலான குற்ற முறை, விசாரணை ஆகிய மூன்று கட்டங்களின் போதும் சர்வதேச கண்காணிப்பும் பங்களிப்பும் உள்ளீடும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகின்றது. மேலும், இவ்விடத்தில் தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறல் தொடர்பான தேவையானது ஒரு சர்வதேச விசாரணை மூலமாகவே பூர்த்தியடையும் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் இவ்விடத்தில் மீள ஞாபகப்படுத்துவதோடு, 2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்களால் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீள ஞாபகப்படுத்தி, அதாவது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து முறையாக இலங்கை பொறுப்புக்கூறல் விடயமானது ஐ.நா பொதுச்சபைக்கு பலப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டு, ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை இவ்விடத்தில் நாம் ஞாபகப்படுத்துகிறோம். குறித்த விடயங்களை இந்த போராட்டம் நடைபெறுகின்ற மூன்று நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தில் கொண்டு இது தொடர்பிலான தனது பரிந்துரைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகிறது. இறந்தவர்களுடைய நினைவுக்கும் இறந்தவர்கள் மீது எங்களுக்கு உள்ள மரியாதையையும், அந்த இறப்புக்கான காரணங்களை தேடி அறிவதற்கான எமது தொடர் பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் பெருமளவில் நாம் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென தமிழ் சமூக அமையம் தமிழ் மக்களை உரிமையோடு கேட்டு நிற்கிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218336

வலி. வடக்கில் 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரும் போராட்டம்

1 week 6 days ago
காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் 24 JUN, 2025 | 06:15 PM (எம்.நியூட்டன்) “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய (24) போராட்டத்தில் காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு 500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை சுமந்தவாறு வாழ்ந்துவரும் நிலையில் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்திவருகிறார்கள். சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இன்றைய நாளில் தமது கைகளில் காணி உறுதிகளை கையிலேந்தியவாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். “நாங்கள் அரச காணிகளை கேட்கவில்லை; எமது சொந்த நிலத்தைத்தான் கேட்கிறோம்", "எமது நிலத்தில்தான் எமது உயிர் போகவேண்டும்”, “இனியும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ முடியாது”, “எமது நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்” என தெரிவிக்கிறார்கள். இதன்போது முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் எனது ஊரில் இருக்கும்போது முதலாளியாக இருந்தேன். இன்று தொழிலாளியாக இருக்கிறேன். வாழமுடியாமல் தற்போது இருக்கிறேன். சொந்த நிலத்தை விட்டால் மீண்டும் முதலாளியாக ஆகிவிடுவேன் என்கிறார். நம்பிக்கையுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தெரிவிக்கையில், நான் பிறந்தது தற்போது இருக்கும் இடத்தில்தான். எனது சொந்த வீடு மயிலிட்டியில் என்று அப்பா, அம்மா கூறி கை காட்டுகிறார்கள். எமது வீட்டில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அவ்வாறு என்றால் நான் எவ்வாறு எமது சொந்த வீட்டுக்குப் போவது? எங்கள் தலைமுறையும் இடப்பெயர்வு வாழ்க்கையை வாழ்வதா? என்று கேட்டார். நான்காவது நாளாக தொடரும் இன்றைய போராட்டத்தில் மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வலி வடக்கு, மயிலிட்டி, காங்கேசன்துறை மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218339

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் நீங்கள் எவ்வளவு தூரம் சாதாரண செய்திகளைக் கூட வாசிக்காமல் இருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரேலின் வடக்கு முனைக்கும், ஹிஸ்பல்லா அமைப்பின் கட்டுப் பாட்டில் இருக்கும் தென் லெபனானிற்குமிடையே தூரம் ஆயிரம் அல்ல, நூறு கிலோ மீற்றர்கள் கூடக் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில், ஹிஸ்பல்லாவிற்கு ஏன் 1000 கிலோமீற்றர் செல்லும் ஏவுகணை தேவை? ஹிஸ்பல்லா அமைப்பின் ஒரே நோக்கம் வடக்கு தெற்காக 420 கிலோ மீற்றர்கள் நீண்டிருக்கும் இஸ்ரேலை அழிப்பது மட்டும் தான். இதற்கேன் 1000 கிலோமீற்றர் போகும் கணை? ஆனால், ஈரானிடம் இந்த இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்திற்காக பல வகை ஏவுகணைகளை ஹிஸ்பல்லா அமைப்புப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில், Qadr-1 என்ற 300 கிலோமீற்றர்கள் செல்லும் ஈரானிய தயாரிப்பு ஏவுகணையை முதன் முதலாக இஸ்ரேல் நோக்கி ஹிஸ்பல்லாக்கள் ஏவினார்கள். இவையெல்லாம் சாதாரண செய்திகளில் காணக்கிடைக்கும் தகவல்கள்! எப்படி இவை தெரியாமல் இங்கே வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறீகள்🙄?

இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

1 week 6 days ago
24 JUN, 2025 | 03:38 PM இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318 ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு, 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய் 2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய் 2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாய் 2024 ஆம் ஆண்டில் 16,476 ரூபாய் 2025 ஆம் ஆண்டில் 16,342 ரூபாய் https://www.virakesari.lk/article/218324

இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

1 week 6 days ago

24 JUN, 2025 | 03:38 PM

image

இலங்கையில் வாழும் தனிநபரொருவரின் மாதாந்த செலவு தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தனிநபரொருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் வாழும் தனிநபரொருக்கு தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,318  ரூபா தேவைப்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளின் அடிப்படையில் தனிநபரொருவரின் மாதாந்த செலவுகள் பின்வருமாறு,

2012 - 2013 ஆம் ஆண்டுகளில் 5,223 ரூபாய்

2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாய்

2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாய்

2024 ஆம் ஆண்டில்  16,476 ரூபாய்

2025 ஆம் ஆண்டில் 16,342 ரூபாய்

https://www.virakesari.lk/article/218324

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
அண்ணா ayatollah ali khamenei நான் பார்த்த‌ ம‌ட்டில் இவ‌ரை ப‌ல‌ ஈரான் ம‌க்க‌ள் க‌ட‌வுளாக‌ பார்க்கின‌ம்.................இவ‌ர் கூட‌ நேர‌ங்க‌ளை குழ‌ந்தை பிள்ளைக‌ளுக்கு ஒதுக்கிறார்..................பொறுமையான‌ நிதான‌மான‌ ம‌னித‌ர் போல் தான் தெரிகிறார் , ம‌ற்ற‌ ப‌ந்தியில் இவ‌ர்க‌ள் அமெரிக்க‌ ம‌க்க‌ளை அடைச்சு வைச்சு இருந்த‌து என்று எழுதி நீங்க‌ள் அதுவும் தெரியும் , அர‌சிய‌லில் எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது அண்ணா......................நேற்று ர‌சோத‌ர‌ன் அண்ணாவிட‌ம் சில‌ கேள்விக‌ளை கேட்டு இருந்தேன் , அவ‌ரும் ஒன்னு இர‌ண்டை வ‌டிவாய் விள‌ங்க‌ப் ப‌டுத்தினார் , ச‌தாமுக்கு தூக்கு , நெத்த‌னியாகுவுக்கு புக‌ழார‌ம் சூட்டும் அமெரிக்காவின் ந‌டுநிலை அற்ற‌ செய‌ல் உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து..................இத‌னால் தான் ப‌ல‌ர் அர‌சிய‌லையே எட்டியும் பார்ப்ப‌து கிடையாது , எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாற்றை தெரிந்து கொள்ள‌ ஒதுக்கின‌ நேர‌ம் தான் கூட‌ , உல‌க‌ நாட்டு அர‌சிய‌லுக்கு நான் ஒதுக்கின‌ நேர‌ம் மிக‌ மிக‌ குறைவு......................விடுத‌லை வேண்டி போராடின‌ இன‌த்துக்கு இவ‌ங்க‌ள் தொட‌ர்ந்து துரோக‌ம் செய்யின‌மே என்ர‌ க‌வ‌லை இன்று வ‌ரை என‌க்குள் இருக்கு.....................க‌ன‌டா தான் அப்ப‌ அப்ப‌ மெதுவாய் எம‌க்கு ஆத‌ர‌வாக‌ குர‌ல் கொடுக்குது ம‌ற்ற‌ம் ப‌டி ம‌ற்ற‌ நாடுக‌ள் இதுவ‌ரை வாய் மூடி மெள‌வுன‌மாக‌ இருக்கின‌ம்....................தொட‌ர்ந்து இதுக்கை எழுத‌ த‌ல‌ இடிக்குது அண்ணா , ஜாலியா இர‌ண்டு பாட்டு கேட்டால் தான் த‌லையிடி நிக்கும் இன்னொரு திரியில் விவாதிப்போம் , கூட‌ நேர‌ம் ஒதுக்கி ந‌ல்ல‌ விள‌க்க‌த்தை த‌ந்த‌துக்கு ந‌ன்றி ர‌கு அண்ணா🙏👍.................................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 week 6 days ago
LIVE 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India 471 & 364 England (80 ov, T:371) 465 & 349/5 Day 5 - Session 3: England need 22 runs. Current RR: 4.36 • Min. Ov. Rem: 16 • Last 10 ov (RR): 41/0 (4.10) வெற்றியை நெருங்கிவிட்டது இங்கிலாந்து அணி... கோச் பிரண்டன் மெக்கலமின் அணுகுமுறைக்கு வெற்றி.

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

1 week 6 days ago
"40 முறை போதைப் பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்" - வழக்கில் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு, நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதற்கு முன் நடந்த கைதுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் திங்கட்கிழமையன்று கைதுசெய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்தது நுங்கம்பாக்கம் காவல்துறை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது அரசியல், திரையுலகு என பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இவ்வளவு பெரிய அளவில் இந்த விவகாரம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோதல்தான். மே மாதம் 22ஆம் தேதி திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளரான ராஜா என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்த வந்திருக்கிறார். அப்போது அங்கே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவருக்கும் ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து பார் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில், ராஜாவுக்கு ஆதரவாக சிலர் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய காவல்துறை, மே 29ஆம் தேதி மைலாப்பூரைச் சேர்ந்த டி. பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ்குமார் (42), வடபழனியில் உள்ள சின்ன போரூரைச் சேர்ந்த ஜி. தனசேகர் (29), பனையூரைச் சேர்ந்த டி. அஜய் ரோகன் (36), சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான நாகேந்திரசேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகியோர் தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு ராஜா, சந்தோஷ் என்ற இருவரும் புனேவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பிரசாத் ஏற்கனவே சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இந்த மோசடிகளில் அவருக்குத் துணையாக இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மணிகுமார் என்பவரும் காவலரான செந்தில்குமார் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர். பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு,நடிகர் ஸ்ரீகாந்த் இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) அளித்த தகவல்களின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ப்ராடோ என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஜூன் 17ஆம் தேதி கைதுசெய்தது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது. பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், தான் பிரசாதிற்கு போதைப் பொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர் அதனை நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். சுமார் 40 முறை இதுபோல வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பின்னணியில்தான் ஸ்ரீகாந்த்தை அழைத்து விசாரித்த நுங்கம்பாக்கம் காவல்துறை, விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச காவல்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். பிரதீப்பிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்னொரு நடிகருக்கும் காவல்துறை விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கேரள திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES திரை நட்சத்திரங்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் சிக்கலான விவகாரமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, மலையாள திரைத்துறையின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ்தர்களை அழைத்து போதைப் பொருள் பரவல் குறித்து கூட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக ஆழப்புழாவில் ஒரு காரை கலால் துறையினர் சோதனையிட்டபோது, அந்தக் காரில் இருந்து ஹைபிரிட் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு, இது தொடர்பாக திரைத்துறையினர், தொலைக்காட்சி நடிகர்கள், மாடல்கள் ஆகியோரிடம் கலால் வரித் துறையினர் விசாரணை நடத்தினர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9xnmm21xpo

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

1 week 6 days ago
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர். இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது. இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது. உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது. Also Read ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

1 week 6 days ago

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர்.

இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது.

இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது.

உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது.

Also Read

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
அண்ணா ஹிஸ்புள்ளாவிட‌ம் அதி ந‌வின‌ தொழிநுட்ப‌ ஆயுத‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை , 1000கிலே மீட்ட‌ர‌ தாண்டி போய் வெடிக்கும் ஆயுத‌ங்க‌ள் ஹிஸ்புள்ள்ளா குழுக்க‌ளிட‌ம் இருக்க‌ வில்லை , எம்ம‌வ‌ர்க‌ள் போர்க்க‌ள‌த்தில் பாவித்த‌ ஆயுத‌த்தை விட‌ இன்னும் சில‌ புதிய‌ ஆயுத‌ங்க‌ள் ஹிஸ்புள்ளாவிட‌ம் இருந்த‌து....................ஈரானால் இஸ்ரேலுக்கு ஏற்ப‌டுத்தின‌ அழிவை ஏன் ஹிஸ்புள்ளா குழுக்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ முடிய‌ வில்லை................அத‌ற்கான‌ ப‌திலை இதில் இருந்தே தெரிந்து கொள்ள‌லாம்....................ஹ‌மாஸ் கூட‌ பாவிச்ச‌து கையில் வைத்த‌ ப‌டி தாக்கும் சிறிய‌வ‌கை ஆயுத‌ங்க‌ள்.............................. நான் கூட‌ நேர‌ம் ஒதுக்குவ‌து விளையாட்டுக்க‌ளில் , ஜ‌ரோப்பா அமெரிக்கா விளையாட்டுக்க‌ளில் , நான் 2009ம் ஆண்டோட‌ அர‌சிய‌லை பெரிசா எட்டியும் பார்த்த‌து கிடையாது , பிற‌க்கு சீமான் க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ அவ‌ர்க‌ளின் அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன் என்னால் ஆன‌தை அவ‌ர்க‌ளின் க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு செய்தேன்............................என‌க்கு அமெரிக்க‌ன்ட‌ குழ‌ந்தை பிள்ளை அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது................இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ஈரானுக்கு செய்த‌து ப‌க்கா அநீதி , அது தான் என் ம‌ன‌தில் இருப்ப‌தை இந்த‌ திரியில் கொட்டி தீர்த்தேன்..........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
இந்த திரியில் ரஞ்சித், ஜஸ்டீன், ரசோ அண்ணைகள் எழுதிய கருத்துக்களுக்கு நிகர எடையில் தங்கம் கொடுக்கலாம். அதிலும் அந்த கடைசி இருவரும் எனது இன்றைய சிரிப்புகுறிகளை அனைத்தையும் இந்த திரியிலே செலவழிக்க வைத்து விடுவார்கள் போலுள்ளது. தலையால் சிந்திப்பது - இதற்கு நல்ல நேர்மறையான விளக்கம் உள்ளது. இன்னும் எத்தனை பேர் தம் உள்மன அழுக்கை பொது வெளியில் கழுவுகிறார்கள் என பார்க்க ஆசைபடுவதால்🤣 கொஞ்சம் தாமதித்து விளக்கத்தை வெளியிடுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
அழிப்பது வேறு. அடக்குவது வேறு. நீங்கள் சொல்லுவது எல்லா அமெரிக்கார்களும் சொல்வது. அழித்தாலும், அணு துறையை அழிக்க முடியாது. அதாவது உறுதி இல்லை. அப்படி ஆயின் அணு ஆயுதத்தை பாவிக்க வேண்டும். அதுவும் 2-3 தடையை பிரயோகிக்க வேண்டும். ஜப்பானில் பாவித்த பொது வேறு எவரிடமும் அணு ஆயுதம் இல்லை. இப்பொது மற்றவர்களும் அணு ஆயுதத்தி வைத்து இருக்கிறார்கள். ஒருவர் அணுஆயுதத்தை பாவிப்பது, மற்றவரின் இருப்புக்கு அச்சுறுத்தல். அரசு சாரா ஹௌதி களுக்கு கூட ஏன் அமெரிக்கா இரங்கி வந்தது? எல்லாமே சீனா. இறங்கினால் அமெரிக்காவுக்கு புதைகுழி. இரானும் அதை அறிந்தே விளையாடுகிறது. இது ஒன்றும் உடனடியாக வெட்டு ஒன்று, துண்டு 2 என்ற கதி, காலம் அல்ல. இரானுக்கு தெரியாத அமெரிக்காவை எதிர்க்க முடியாது என்று, வரம்புக்குள் நின்று எதிர்பத்தே ஆட்டம். அதில் அதன் கேந்திர இலக்குகளை அடைவது. ஏறத்தாழ பாதிக்கு மேல் பெற்றுவிட்டது அதே போலவே அலெக்சாண்டர் எல்லாத்தையும் அழித்து இருக்கலாம், ஆனால் அது அரசு / இராச்சியம் அல்ல. மிக கொடுமையான சிங்கிஸ்கான் கூட முதலில் இராச்சியத்தை கொடு, இல்லாவிட்டால் கூண்டோடு தரைமட்டம் என்றே பிடித்தது. டிரம்ப் அப்படியான போக்கில் சரணடை (அதாவது US சொல்வதில் கையெழுத்து வை) சொல்லி, இப்போது நிபந்தனை இல்லாத சண்டை நிறுத்தத்தில். இவற்றின் காலங்கள் வேறு வேறு, அனால் நோக்கம் ஒரே தன்மை.

அமெரிக்காவில் அகோர வெய்யில்.

1 week 6 days ago
நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு முழு அமெரிக்காவும் மிகவும் வெப்பநிலையாக உள்ளது. கனடாவும் இதே காலநிலையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது ஏரியாவில் நேற்று 160000 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை. இரவு 12-1 மணி போல நின்ற மின்சாரம் 12 மணிநேரம் கழித்து தான் மீண்டும் வந்தது. இப்போதும் எமது பகுதியில் பல வீதி சமிக்கைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நேற்றைய நாளைவிட இன்று அதிக வெப்பமாக உள்ளது. 100 காட்டுகிறது37-38.ஆனாலும் இதைவிட கூடுதலாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். இன்னும் 2நாட்கள் இதே காலநிலை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
என் அவதானிப்பில், சில ஆதரவு நிலைப்பாடுகள் முழுமையான முட்டாள் தனத்திலிருந்து தான் உருவாகின்றன. பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள் தனம் தான் இந்த ஈரான் முல்லாக்களுக்கான ஆதரவும், மக்களைப் பட்டினி போட்டு தான் தின்று கொழுக்கும் கிம்மை "தலைவா!" என்று பணியும் நிலைப்பாடும். அடிப்படை வாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஆபத்தானவர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இந்த பூமியில் இழப்பதற்கு எதுவும் இல்லையென்று வாழ்வோர். வானத்தை நோக்கி ஒற்றை விரலைக் காட்டி விட்டு, செத்தால் "சாஹிட்" ஆவோம், விண்ணுலகில் தமக்கு எல்லாம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் இருப்போர் இவர்கள். இவர்களிடம் போய் அணு குண்டு கிடைத்தால் அல்லது கொஞ்சம் யுரேனியம் கிடைத்தால் கோசான் சொல்வது போல "நம் ஒவ்வொருவர் பிருஷ்டத்திற்கு அடியிலும்" அது வெடிக்கும்😂! இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ள, ஒரு மனிதனுக்கு எத்தனை நியூரோன்கள் தேவை?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
இதில் ஒரு வரலாற்று காலச்சக்கர ஒப்புமையும் இருக்கிறது கி,மு 331 இல், அலெக்ஸாண்டர் சிறிய அரசாக (இராசியமாக) ஒப்பீட்டளவில் மிகச் சிறிய படையுடன், Achaemenid வம்ச டாரியஸ் ஆட்சி செய்த பாரசீக பேரரசை கொண்ட டாரியசின் மிகப் பெரும் படையுடன் மோதி , டாரியஸ் ஐ தோற்கடித்து, பாரசீக பேரரசை வென்று, பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படும் இப்போதைய ஆப்கானிஸ்தானையும் கைப்பற்ற முநைந்து, அழிவினை சந்தித்து, பஞ்சாப்பில் , விபச நதி அடியில் (இதுவே சரஸ்வதி ஆறு என்று அழைக்கப்ட்டதாக நம்பப்படுகிறது, இது வற்றியதே சிந்துவவெளி நாகரிகம் அழிந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் நம்பப்படுகிறது) அலெக்சாந்தரின் படைகள் அலெக்ஸாண்டருக்கு எதிராக கிளர்ந்த படியால் கி.மு 325 இல் திரும்பினார் பபிலோனியாவுக்கு (இன்றைய இராக், குறிப்பாக பாக்தாத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 மில்கள் தெற்காக). அலெக்சாண்டர், பபியலோனியாவில் கி.மு 323 இறக்க, அலெக்ஸாண்டரின் மசடோனியன் பேரரசு உடைந்தது. (அலெக்சாண்டர், டரியஸ் இன் பாரசீக பேரரசை (இப்போதைய இரான் முழுமையாக) வென்றதே மேற்கு நாகரிகத்தின் எழுச்சியாக கருதப்படுவது) இப்போதைய நிகழ்வுகள் எல்லாம் இதன் காலச்சக்கர பிம்பமகா இருக்கிறது. வல்லரசு அமெரிக்கா ஆஃப்கானில் புதைந்து (இந்த காலத்திலேயே சீனா மட்டும் அமெரிக்காவுக்கு பொடியாக எழும்பியது, அமெரிக்கா அரசியல், ராஜதந்திர மற்றும் வரலாற்று வட்டங்கள் பொதுவாக ஆப்கானை புதைகுழி என்கின்றன), திரும்பி, சிறிய இரானுடன் மோதி, ஈரான் கட்டார், இராக்கில் (இதை அமெரிக்கா படைகள் கண்காணிப்பில்படவில்லை என்கிறது) ஆக குறைந்தது குறியீடு அளவிலாவது அமெரிக்காவை தாக்கி பெரும்பாலும் முடிவுக்கு வந்து இருக்கிறது. மீறல்கள் தொடர்கிறது. அல்லது டிரம்ப் இந்த வழமையான பணியாகவும் இருக்கலாம் (சண்டை நிறுத்தம் என்று விட்டு, கபடமாக அடிப்பதுக்கு, அல்லது சண்டை நிறுத்தம் என்று கொண்டே அடிப்பதுக்கு ) ஆனல், முன்பே சொன்னது போல அமெரிக்கா (இஸ்ரேல் உம்) இதில் மாட்டுப்பட்டு இருக்கிறது (சிறிய இரானிடம் , பெரிய அமெரிக்கா - முன்பு சிறிய மசடோனியாவிடம், பெரிய பாரசீக பேரரசு).

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 6 days ago
வடகொரியாவின் கிறுக்கனுக்கும் ஆயொதொல்லா கமேனிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கிம்மை விட கமேனி எந்த விதத்தில் சிறந்தவர் என்று கருதுகிறீர்கள்? ஒரு கிறுக்கனிடம் அணுவாயுதம் இருப்பதே மொத்த உலகிற்கும் ஆபத்தாகிப் போயிருக்கின்ற இந்த நிலையில், இன்னொரு மத அடிப்படைவாதியிடமும் அணுவாயுதம் இருப்பது நல்லது என்று கூறுகிறீர்கள். அடிப்படைவாதிகளின் நாட்டிற்குச் சென்றால் அங்கிருக்கும் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அதையே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிறீர்கள். சரி, உங்களின் விருப்பம்.