Aggregator
பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் பாலியல் வன்முறையை பயன்படுத்துகின்றது - ஐநா
Published By: RAJEEBAN
14 MAR, 2025 | 01:56 PM
காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது.
காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காசா மருத்துவமனைகளில் மகப்போறு வோர்ட்கள் மற்றும் பெண்களிற்கு சுகாதார சேவைகளை வழங்கும் ஏனைய நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து விரிவான விபரங்களை அந்த அறிக்கையில் காணமுடிகின்றது.
ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் அழிக்கப்பட்டமை காசாவிற்குள் மருந்துகள் உணவுபொருட்கள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டமை காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்க திறனை ஒரு பகுதியாக அழித்துவிட்டது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலைசமவாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் இரண்டுவகையான இனப்படுகொலைகளாகும்.ஒன்று பாலஸ்தீனியர்களை உடல்ரீதியாக அழிப்பதற்கு திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை முறை வேண்டுமென்றே திட்டமிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துதல் மற்றையது பிறப்பை தடுப்பதற்காக திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் பொது இடங்களில் நிர்ப்பந்தப்படுத்தி ஆடைகளை களைதல் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்முறை அச்சுறுத்தல் ,உட்பட சிலவகையான பாலியல் மற்றும் பாலினஅடிப்படையிலான வன்முறைகளை தங்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர் என ஐநாவின்அறிக்கை தெரிவித்துள்ளது.
பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிப்படையிலான சித்திரவதைகள்போன்ற இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் பாலியல்வன்முறையின் வடிவங்களை பயன்படுத்துகின்றது இது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு சமனாது என ஐநா தெரிவித்தள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்களின் பரவல் மற்றும் தீவிரம் பாலஸ்தீன மக்களை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் ஒடுக்கவும்அழிக்கவும் இஸ்ரேல் அதிகளவில் பாலியல் வன்முறையை ஒரு போர் வடிவமாக பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவத்தலைமை பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு வெளிப்படையான உத்தரவுகளை அல்லது மறைமுகமான ஊக்கத்தை வழங்கியுள்ளது என ஐநாவின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் - பிரதமர்
பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் - பிரதமர்
பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் - பிரதமர்
Published By: VISHNU
15 MAR, 2025 | 02:46 AM
(எம்.மனோசித்ரா)
தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன.
பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக முன்னேறக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை உடைக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமும், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுத்திறனாளி சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை மாற்றுங்கள் ; இராதாகிருஸ்ணன் எம்பி கோரிக்கை
தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை மாற்றுங்கள் ; இராதாகிருஸ்ணன் எம்பி கோரிக்கை
14 MAR, 2025 | 04:32 PM
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பெருந்தோட்ட பகுதியில் 10 பேச்சர்ஸ் காணியில் தனி வீட்டினை நிர்மாணிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சபையில் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறேன்.
பெருந்தோட்ட பகுதிகள் 22 தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஒருசில தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் ஏதுமில்லை.
பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாக்க வேண்டும்.
50 ஆண்டுகாலத்துக்கே பெருந்தோட்டங்கள் தோட்ட கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மிகுதி 20 ஆண்டுகளில் இந்த தோட்ட கம்பனிகள் எந்த தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யபோவதில்லை.
50 ஆண்டுகால குத்தகையை நீடிப்பதா அல்லது இரத்துச் செய்வதா என்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டத்தொழில்துறை முழுமையாக கைவிடப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன. ஆகவே தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
பெருந்தோட்டங்களை அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாது. ஆகவே குத்தகை வழங்கல் தொடர்பில் தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் விரைவாக பேச வேண்டும்.
பெருந்தோட்டங்களில் தற்போது தோட்ட நிர்வாகிகள் தான் ஆங்கிலேயர்களை போன்று ஆதிக்கம் கொள்கிறார்கள். தோட்ட மக்களின் நலன்கருதி எந்த திட்டங்களையும் தோட்ட கம்பனிகள் மேற்கொள்வதில்லை.
பொகவந்தலாவலை பகுதியில் உள்ள பொகவான தோட்டத்தில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீதியை அந்த தோட்ட முகாமையாளர் மறித்துள்ளார். இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும்.இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும்.இந்த முறைமையை மாற்றுங்கள்.
தோட்ட முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே 1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெருந்தோட்ட பகுதிகளில் 64,740 தனி வீடுகள், 70,444 தனி லயன் அறைகள், 65,279 இரட்டை லயன் அறைகள் மற்றும் 10,891 தற்காலிக வீடுகள் காணப்படுகின்றன.
பெருந்தோட்டத்துறைகளில் 10 பேச்சர்ஸ் காணியுடன் தனி வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை பெருந்தோட்ட பகுதியில் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.