Aggregator

அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு

3 months 2 weeks ago
@Kavi arunasalam நீங்கள் எழுதியது தெளிவாக விளங்கியது அய்யா அனால் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு வெளிநாட்டில் வாழும் கணவர்மார் பிரச்சனை என்ன என்பது தான் விளங்கவே இல்லை 😂

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன்.

அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.

சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது.

ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதை எப்படி சரிசெய்வது?

வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை.

ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை.

மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

- எழுத்தாளர் பாலகுமாரன் -

May be an image of 1 person and beard


Jeeva Murugesan  ·

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பண்ணிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா? கனடியத் தமிழரின் குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது. ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது. பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன: 1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை, 2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப் பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது, 3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரும் பொறிமுறைகளில் இருந்து CTC பின் தங்கியுள்ளது. இந்த முரண்பாடுகள் கனடிய, தாயக, உலகத் தமிழர் சமூகத்தினால் கவனிக்கப்படாமல் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனடிய தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கத் தவறிய குற்றச்சாட்டுகளையும் CTC நீண்ட காலமாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. புதிய நெருக்கடி நிலை CTC இதுவரை காலமும் இல்லாத கடுமையான நெருக்கடி நிலை ஒன்றை இப்போது எதிர்கொள்கிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் இருந்து சமீபத்திய சர்ச்சை உருவாகிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல், தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள் அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத் தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த மின்னஞ்சல் பிரதி ஒன்றை “தேசியம்” பெற்றுள்ளது. (இந்த மின்னஞ்சல் வாசகர்களின் பார்வைக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளது) Strengthening Canada Through Unity and Understanding குறிப்பிட்ட மின்னஞ்சலின் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துக்கள் என ராஜ் தவரட்ணசிங்கம் வலியுறுத்துகின்றார். ஆனால், தனது நீண்ட பதவிக் காலத்தில் பேரவைக்குள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் சக்தியாகச் செயற்பட்ட பின்னணியில், அவர் தனது கருத்தையும் பேரவையின் கருத்தையும் வேறுபடுத்த முனைவது ஓர் அப்பட்டமான முரணாகும். மின்னஞ்சல் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துகள் என ராஜ் தவரட்ணசிங்கம் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்? இந்தக் கருத்துகள் எப்போதாவது பேரவையின் சொந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையிலேயே வேறுபட்டு இருந்தனவா? தமிழர்களின் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்க்கமாகச் செயற்படத் தவறியதற்காக பேரவை நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை CTC பல ஆண்டுகளாக மறுத்துவந்தது . இறுதியாக May 2024 இல், ஒரு சுருக்கமான, அடையாள அறிக்கை மூலம் மாத்திரமே தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதாக முதல் தடவையாக CTC தெரிவித்தது. இது மிகவும் தாமதமானது எனப் பலராலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது, தமிழ் இனப்படுகொலை விடயத்தில் அதன் மௌனம், கனடிய உள் விவகாரங்களில் இலங்கையின், வெளிநாடுகளின் தலையீடு (Foreign interference) குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியது உட்பட்ட விடயங்களில் பேரவையின் நகர்வுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் , பேரவையின் மூத்த பிரமுகர்களுள் ஒருவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடு, தமிழர் மத்தியில் நீண்ட காலமாக இருந்த கவலைகளையும் விமர்சனங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அபாயகரமானதாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக, பேரவை தமிழ் கனடியருக்கான பெரும் சக்தியாக தன்னை சுயபிரகடனம் செய்துவந்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க அது மறுத்து வருகிறது. தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமானவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அது தவறியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பேரவையை, தூர விலக்கியது மட்டுமல்லாமல், அதன் தலைமை மீது பரவலான அவ நம்பிக்கைக்கும் வழிவகுத்தது. இமாலயப் பிரகடம் – மகிந்த ராஜபக்ச சந்திப்பு – பதவி விலகல் இவற்றின் வெளிப்படையானதும் தெளிவானதுமான உதாரணங்களுள் ஒன்று April 27 2023 அன்று நிகழ்ந்தது. உலகத் தமிழர் பேரவையின் (GTF) தலைமையிலான இமாலயப் பிரகடனத்தில் ராஜ் தவரட்ணசிங்கம் GTF-இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய பேரவையின் சார்பாக ஒப்பமிட்டார். இந்தப் பிரகடனம் தமிழர்களின் அரசியல் ஈடுபாட்டை நோக்கிய ஒரு முதல் படியாக பேரவையினால் நியாயப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. Himalaya Declaration, with signatories ஆனால் அது கனடாவிலும் தாயகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது. இந்தப் பிரகடனம் குறித்து ஈழத் தமிழருடன் பேரவை கலந்தாலோசிக்கவில்லை. தவிரவும், தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற விடயங்களில் மௌனம் காத்துள்ளது. சில மாதங்களின் பின்னர், ராஜ் தவரட்ணசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியானது. பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர். வெளியான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒளிப்படம் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள் நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது. இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தின் போது இவர்கள் இருவரும் முறையே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். மேலும் கனடாவில் உள்ள இவர்களின் சொத்துகள், நிதிச் செயற்பாடுகள் முடக்கப்படும் எனவும் கனடிய அரசாங்கம் அறிவித்தது. இவர்கள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்த முடிவு குறித்து கனடிய அரசாங்கம் அறிவித்தது. இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவும், அவரோடு புகைப்படம் எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்ரீலங்காவின் அரச தலைமையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவாக, நீதியை ஓரங்கட்டும் ஓர் இராஜதந்திரச் சூழ்ச்சியாகத் தோன்றிய பேரவையின் இந்த முயற்சியைக் கனடாவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர் கண்டித்தனர். தனது தவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, CTC ஆரம்பத்தில் தன்னை நியாயப்படுத்தியது. எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் கூட, இராஜதந்திர ஈடுபாட்டின் அவசியம் இது என தனது தவற்றுக்கு பேரவை நியாயம் கற்பித்தது. தொடர்ச்சியான நீண்ட சமூக அழுத்தத்தின் பின்னர், உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இவற்றின் பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகல் பொது வெளியில் இருந்த மையக் கேள்விக்கு எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை. இது பேரவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கும் ஓர் உண்மையான நகர்வா? அல்லது பேரவையை மேலும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையா? தமிழர் தெருவிழாவும் சமூகத்தின் எதிர்வினையும் தமிழ் அரசியல் விடயங்களை CTC கையாண்ட விதம் மற்றொரு சவாலை August 2024 இல் எதிர்கொண்டது. தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் அமைப்பதைத் தடுக்குமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo, May 3, 2024-இல் கடிதம் ஒன்றை அனுப்பினார். கனடிய அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளித்தது. கனடாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கனடியப் பிரதமர் Justin Trudeau இதன் தீவிரத்தை ஒப்புக்கொண்டார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த நடவடிக்கையை வெளிநாட்டுத் தலையீடு எனக் கண்டித்த Patrick Brown, கனடியத் தமிழர் பக்கம் உறுதியாக நின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளை பேரவை சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்தது. ஆனால் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடன வேலைத் திட்டங்கள் உட்பட நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கைத் தூதரகம் தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியது. தூதரகத்தின் இந்தக் கூற்றை CTC கண்டிக்கவும் இல்லை – நிராகரிக்கவும் இல்லை. ‘தேசியம்’ பெற்றுக்கொண்ட இந்தக் கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்படுகிறது. LETTER TO PATRICK BROWN கனடியத் தமிழர் சமூகம், பேரவையின் இந்த கேள்விக்குறியான முடிவை அன்றும் அவதானித்தது – இன்றும் அவதானிக்கிறது. CTC முன்னெடுக்கும் வருடாந்தக் கலை நிகழ்வான, ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. கனடாவின் உள் விவகாரங்களில் இலங்கையின் தலையீடு குறித்த பேரவையின் மௌனம், இமாலயப் பிரகடனத்தில் அதன் கடந்த கால ஈடுபாடு, தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கோரத் தவறியது உட்பட்ட விடயங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் CTC தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ஆனால் அந்த அறிக்கை பேரவை மீது மக்கள் நம்பிக்கையை மீள் உறுதி செய்யத் தவறிவிட்டது. கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் புறக்கணித்தனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மக்களில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரம் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் பேரவையின் முதன்மையான கொண்டாட்டமாக இருந்த நிகழ்வு இம்முறை நிராகரிப்பின் பகிரங்க சாட்சியாக மாறியது. Video Player 00:00 01:13 தமது கடந்த காலத் தவறுகளுக்கு CTC-யின் தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரிய போதிலும், மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை CTC இதுவரை முன்னெடுக்கவில்லை. நிர்வாக மறுசீரமைப்பு, தமிழ் இனப் படுகொலைக்கான நீதி கோரல், வெளிப்படைத் தன்மை, மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு என அனைத்து விடயங்களிலும் CTC தனது முன்னைய நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது. எனவே, CTC மக்களுக்கான, மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்கத் தயாரில்லை என்பதையே தனது இறுமாப்பான நிலைப்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. கனடிய அரசியல்வாதிகளுக்கான ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டின் உச்சக்கட்டமாக வெளிப்பட்டுள்ளது. இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை மறுக்கிறது, தமிழர் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது, மேலும் கனடியத் தமிழ் அரசியல்வாதிகளை அவமதிக்கிறது. இந்நிலையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது: ராஜ் தவரட்ணசிங்கம் எவ்வாறு பேரவையின் தலைவராகவும், அதன் ஆலோசகராகவும் இத்தனை காலம் பதவி வகித்தார்? இவ்வாறான முக்கியமான விடயங்களில் பேரவை தொடந்தும் தோல்வியடைந்த நிலையில் ராஜ் தவரட்ணசிங்கத்தின் அழுத்தமும் செல்வாக்கும் பேரவைக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதே பெரும் கேள்வி. வெளிவராத ஆலோசனை! தமிழர் தெரு விழாவைத் தொடர்ந்து, CTC உள்ளகச் சீர்திருத்தத்தை உறுதியளித்தது. ஒரு சமூக ஆலோசனை முயற்சியை அறிவித்தது. அதிக வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொறுப்புக்கூறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியளித்தது. இந்த ஆலோசனையின் முடிவுகளை விவரிக்கும் அறிக்கை February 2025-இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுரை March மாதம் வரையப்படுகிறது. இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தக் கண்டுபிடிப்புகளும் பகிரப்படவில்லை. இந்த ஆலோசனை ஓர் இணைய மூலக் கணக்கெடுப்புக்குச் சமமாக இருப்பதால், இதன் மூலம் வெளியாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் கொண்டிருக்காது. பலருக்கும் இவை ஒன்றும் ஆச்சரியமான விடயங்கள் இல்லை. இந்த ஆலோசனை ஒருபோதும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையாளர் உள்ளிட்ட விமர்சகர்களின் வாதமாகும். மாறாக இது தமது இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு யுத்தியாகும். இந்த ஆலோசனைகள் முறையானதாக இருந்தால், அவற்றின் முடிவுகள் எங்கே? இந்த விடயம் குறித்து “தேசியம்” சார்பாக வினவிய பின்பே, முதல் தடவையாக March இறுதிப் பகுதியில் குறிப்பிட அறிக்கை வெளியாகும் என பேரவை பதில் அளித்தது. பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை இந்தப் பின்னணியில், ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை அவர் நிராகரிப்பதும், தமிழ் மரபுத் திங்கள் அங்கீகாரத்தைக் கண்டனம் செய்ததும், தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை கேள்விக்கு உட்படுத்தியதும் பேரவையை அதன் நீண்டகாலத் தலைவர்களுள் ஒருவரின் சர்ச்சையான தமிழர் விரோதப் போக்கான கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது. பேரவையின் நிகழ்வொன்றில் ராஜ் தவரட்ணசிங்கம் இந்தக் கட்டுரையாளர், ராஜ் தவரட்ணசிங்கத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ளடக்கத்தை முழுமையாகக் கண்டிக்கிறார். பேரவையின் முழுமையான தலைமைத்துவ மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் ஒரு தனி மனிதனின் கருத்துகள் இல்லை. மாறாக கனடியத் தமிழரின் நலன்களில் இருந்து தூர விலகி நிற்கும் ஒரு தனியார் குழுமத்தின் நிலைப்பாடாகும். இதை பல உதாரணங்கள் உறுதிப்படுத்துகின்றன. மௌனம், மழுப்பல், நம்பிக்கை சிதைவு: நுண்ணாய்வுக்குள் பேரவையின் பதில்கள் சமூக நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பு, சமூகத்தின் கேள்விகளுக்கு மௌனத்தால் பதிலளிப்பது அதிகம் ஆபத்தானது என்பது நடைமுறை அடிப்படை. “கனடியத் தமிழர்களின் குரல்” என தம்மைப் பிரகடனப்படுத்தும் பேரவை, சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சலின் உள்ளடக்கம் உட்பட பேரவை குறித்த சமூகத்தின் பல கேள்விகளுக்கு “தேசியம்”, CTC இடம் முன்வைத்து. நேரடிச் செவ்விக்கான அழைப்புக்கு பேரவை சாதகமாகப் பதில் அளிக்காவிட்டாலும், தேசியத்துடன் இரண்டு மின்னஞ்சல் கேள்வி – பதில் பரிமாற்றத்தில் CTC பங்கெடுத்தது. இதில் தலைமை, முடிவெடுத்தல், பொறுப்புக் கூறல் குறித்த பல கேள்விகளை CTC மீண்டும் மீண்டும் திசை திருப்பியது, தவிர்த்தது அல்லது முற்றிலுமாகப் புறக்கணித்தது. இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் பேரவையின் நிலைப்பாடு விடயத்தில் நீண்டகாலமாக மௌனம் காப்பது ஏன்? என “தேசியம்” கேள்வி எழுப்பியபோது, முதலில் வெறுமனே சமீபத்திய அறிக்கை ஒன்றை CTC தனது பதிலாகச் சுட்டிக்காட்டியது. ஒரு சமூகத்துக்காகக் குரல் எழுப்பும் நேர்மையான பரப்புரைக்குத் தேவை தொடர்ச்சியே தவிர, தெருவிழா நிராகரிப்பின் முன்னதான அழுத்தத்தின் கீழ் எதிர்வினையாற்றும் அறிவிப்புகள் அல்ல. மேலும் அடையாள ஒப்புதலைத் தாண்டி எடுக்கப்பட்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய போது, 15 ஆண்டுகளாக பேரவை, மனித உரிமைகள், இனப்படுகொலை அங்கீகாரத்துக்காக வாதிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என பதில் அளித்தது. இது உண்மைக்கு புறம்பானதாகும். தமிழ் இனப்படுகொலை என்ற பதத்தை எழுத்திலோ, பேச்சிலோ பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை CTC கொண்டுள்ளது என அதன் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ February 2024 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையோ, பொய்யோ பேரவை தனது நிலைபாட்டில் உறுதித்தன்மையைப் பேணமுடியவில்லை என்பது இந்த விடயத்தில் மீண்டும் உறுதியாகிறது. அதனைக் கண்டிக்க வேண்டிய பேரவை, ஏன் மௌனத்தைப் பரிசளிக்கிறது? முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு கேள்விக்கு இரண்டு வெவ்வேறு விடயங்கள் உண்மையாக இருக்க முடியாது. கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீடு குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த கரிசனையை பேரவை நிராகரித்தது. இதுபோன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக பேரவை நியாயம் கற்பித்தது. அதனால் இந்த விடயங்களில் தலையிடமுடியாது என தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது. ஆனால் CTC நீண்ட காலமாக மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் வரும் விவகாரங்களில் உரிமை எடுத்துக் கொண்டமைக்கான சாற்றுகள் அதிகம் உள்ளன. அகதிகள் உரிமைகள் முதல் சர்வதேச விவகாரங்கள் வரை அதற்கான உதாரணங்கள் விரிவடைகின்றன. ஆனாலும், தமிழ் கனடியர்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விடயமான இலங்கை அரசின் வெளிநாட்டுத் தலையீடு குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பேரவை தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை “தேசியம்” மீண்டும் முன்வைத்தது: மீண்டும், அதற்கு பேரவையிடம் பதில் இல்லை. CTC-யின் கனடியத் தமிழர் சமூகம் குறித்த ஈடுபாட்டை விரும்பாத நிலை, இலங்கை அரசாங்கத்துடனான அதன் உறவுகள் வரை நீண்டுள்ளது. கனடா – ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத் தூதர் Thusara Rodrigo போன்றவர்களுடன் அதன் உறவு குறித்து வினவிய போது, பேரவைக்கு அது போன்ற எந்த ஒரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தது. ஆயினும் SJV செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் (SJV Chelvanayakam Memorial Lecture), Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார். CTC ஏற்பாடு செய்த SJV செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo CTC ஏற்பாடு செய்த இந்த நிகழ்விலும் ஏனைய சில நிகழ்வுகளிலும் பேரவையின் உறுப்பினர்களுடன் Thushara Rodrigo ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். பேரவை கூறுவதைப் போல் இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையில் எந்த உறவும் இல்லை என்றால், இலங்கைத் தூதரகம் அதன் நல்லிணக்க முயற்சிகளை நியாயப்படுத்த ஏன் CTC-யின் பெயரைப் பயன்படுத்துகிறது? இங்கு “தேசியம்” மீண்டும் முன்வைத்த கேள்வி: இந்த நிகழ்வுகளுக்கு Thushara Rodrigo-வை அழைத்தது யார்? முன்னைய பல கேள்விகள் போல் CTC இதற்கும் பதில் கூற மறுத்து விட்டது. ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல் சர்ச்சையைப் பேரவை கையாண்ட விதமும் இதே பாணியைப் பின்பற்றியது. அந்த மின்னஞ்சல் தமிழர்களுக்கு எதிரானதா? என “தேசியம்” மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியது. “அது, அவரது தனிப்பட்ட கருத்து” என CTC நிராகரித்தது. ஆனால் பேரவையின் அனைத்துப் படிமுறைகளையும் அறிந்த, முன்னாள் தலைவர், மூத்த ஆலோசகர் என பதவிகளை வகித்த ஒருவரிடமிருந்து வெளியாகும் கருத்துகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. மேலும், இந்த “மின்னஞ்சலை நீங்கள் கண்டிக்கிறீர்களா இல்லையா?” என மீண்டும் வற்புறுத்தியபோது, CTC மீண்டும் மௌனம் காத்தது. இந்த விடயங்களில் பேரவையின் நிலைப்பாடு ராஜ் தவரட்ணசிங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் CTC எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. இமாலயப் பிரகடன விடயத்தில்; யார் முடிவுகளை எடுத்தார்கள்?, யார் உரையாடல்களில் பங்கேற்றார்கள்?, யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது? என்பதற்கு CTC பதிலளிக்க மறுத்து விட்டது . ராஜ் தவரட்ணசிங்கம் இந்தச் செயல்முறையில் ஈடுபட்டிருந்தார், பேரவைக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்கினார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பல உள்ளன. அதற்குப் பதிலாக,”ஏற்கனவே எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டோம்” எனக் கூறியதுடன், “ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைப்பது உண்மைகளை மாற்றாது” என பேரவை தேசியத்திடம் வலியுறுத்தியது. இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், ஒரு போதும் இதில் உண்மை வெளியாகவில்லை என்பதாகும். தொடர்ந்து கேள்விகளைத் திசை திருப்புவதனால்; பதில்கள் உண்மையாகப் போவதில்லை. ஒரு விடயத்தில் இருந்து விலகி நிற்பது என்பது அதைத் தெளிவுபடுத்துவது அல்ல. இந்த செயற்பாடுகளை யார் அங்கீகரித்தார்கள், என்பதை CTC கூற மறுத்தால், இவற்றின் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? அண்மைய காலத்தில் CTC தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி தெருவிழா 2024-இல் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. இதனால் அங்கு சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு கோரியபோது, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க முடிவு செய்தது பேரவை. இதில் சமூகத்தின் அக்கறைகளை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என “தேசியம்” கேள்வி எழுப்பிய போது, CTC “ஒப்பந்தக் கடமைகளை” (Contractual obligations) பூர்த்தி செய்ததாக மாத்திரம் கூறியது. அதிகாரத்துவப் பாணியிலான இந்தப் பதில், நம்பிக்கை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டிய தெருவிழாவின் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. விற்பனையாளர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல் தவிர்ப்பதற்கான எண்ணம் முன்னரே பேரவையினால் திட்டமிடப்பட்டதா? என வினவியபோது, CTC மீண்டும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகள் போல், தெளிவாக ஆம் அல்லது இல்லை என்று விடை தரக்கூடிய பின்வரும் கேள்வியை “தேசியம்” முன்வைத்தது. “CTC எந்த விற்பனையாளர்களுக்கும் பணத்தை மீள வழங்கியுள்ளதா?”. பேரவை அதற்குப் பதிலளிக்கவில்லை. பேரவைக்கும் தேசியத்துக்கும் இடையிலான நீண்ட இரண்டு கேள்வி பதில் மின்னஞ்சல் பரிமாற்றம் நியாயத் தன்மையின் அடிப்படையிலும், நடுநிலை, நெறிமுறை இதழியல் கோட்பாட்டிலும், CTC-யின் பதில்கள் நியாயமாகவும், துல்லியமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இங்கு முழுமையாக வழங்கப்படுகிறது. பேரவையின் நிலைப்பாடுகள் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படாமல் வெளியிடப்படுவதை இந்த நடைமுறை உறுதி செய்யும் என தேசியம் நம்புகிறது. மேலும் ஒரு தொகுப்புக் கேள்விகள் தேசியத்தால் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான பதில்களும் கிடைக்கப்பெறும் போது இங்கு இணைக்கப்படும். EMAIL EXCHANGE BETWEEN THESIYAM AND CANADIAN TAMIL CONGRESS பேரவையின் தமிழர் சமூகத்துடனான இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது வெறும் நிர்வாகத்தின் தோல்வி மட்டுமல்ல; மாறாக நம்பிக்கைத் துரோகமாகும் என்பதை உறுதியாகக் கூறலாம். CTC தன்னை தமிழ்க் கனடியர்களின் பிரதிநிதியாக நிலை நிறுத்துகிறது, இருப்பினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அதே சமூகத்தின் நியாயமான கவலைகளுக்குச் செவிசாய்க்கத் தொடர்ந்து மறுத்து வருகிறது முக்கிய விடயங்களில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, பேரவை உள்ளடக்கம் இல்லாத பதில்களால், அல்லது நிராகரிப்புகளால், அல்லது வெளிப்படையான மௌனத்துடன் கடந்து செல்கிறது. ஆனால் மௌனம் நடுநிலையானதல்ல என்ற கசப்பான உண்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வர இந்தக் கட்டுரையாளர் விரும்புகிறார். மௌனம் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தேர்வாகும். ஒரு சமூக அமைப்பு தனது செயல்களுக்குப் பதிலளிக்க மறுக்கும்போது, சமூகத்தின் கரிசனையும், தொடர் கேள்விகளும் கொள்கை பற்றியதாக இல்லாமல் நேர்மைத்தன்மை குறித்ததாக மாறும் அபாயம் உள்ளது. பேரவையின் விடயத்திலும் இன்றைய நிலை இதுதான். பேரவையின் எதிர்காலம் என்ன? பல ஆண்டுகளாக, CTC கனடிய தமிழர்களின் முதன்மை அரசியல் குரலாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. ஆனால் வளர்ந்து வரும் அதிருப்தி, மறுசீரமைப்புக்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அதன் தகுதி இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. 1) பேரவை தனது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளுமா? 2) வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? 3) சமூகத்தின், மாற்றத்துக்கான தொடர் கோரிக்கைகளை அது தொடர்ந்து புறக்கணிக்குமா? 4) பேரவையின் உறுப்புரிமையை யார் பெறவேண்டும் என்ற முடிவைத் தன்னிச்சையாகச் சில தனிநபர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வார்களா? 5) CTC குறித்த அண்மைக்காலத் தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவை நிகழ்ந்த காலப்பகுதியில் பேரவையைத் தனிமனித ஆளுமைக்குள் கட்டுபடுத்தி வைத்துள்ளதான குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நிர்வாகப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா, அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலகுவாரா? இந்தப் பின்னணியில், CTC அடையாளம் அற்று நீர்த்துப் போகுமா என்பதை வரும் வாரங்களும் மாதங்களும் தீர்மானிக்கும்! https://thesiyamnation.com/41151/ இலங்கதாஸ் பத்மநாதன்

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

CTC-BANNER-960x564.png

கனடியத் தமிழரின்  குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது.  ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது.

பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன:

1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை,

2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப்  பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது,

3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரும் பொறிமுறைகளில் இருந்து CTC பின் தங்கியுள்ளது.

இந்த முரண்பாடுகள் கனடிய, தாயக, உலகத் தமிழர் சமூகத்தினால் கவனிக்கப்படாமல் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனடிய தமிழர்களின் அபிலாஷைகளைப்  பிரதிபலிக்கத்   தவறிய குற்றச்சாட்டுகளையும் CTC நீண்ட காலமாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

புதிய நெருக்கடி நிலை

CTC இதுவரை காலமும் இல்லாத கடுமையான நெருக்கடி நிலை ஒன்றை இப்போது எதிர்கொள்கிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் இருந்து சமீபத்திய சர்ச்சை உருவாகிறது.

raj-2-219x300.jpg

பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம்

கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல், தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள்  அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத்  தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச்  செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.  இந்த மின்னஞ்சல் பிரதி ஒன்றை “தேசியம்” பெற்றுள்ளது.

(இந்த மின்னஞ்சல் வாசகர்களின் பார்வைக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளது)

Strengthening Canada Through Unity and Understanding

குறிப்பிட்ட மின்னஞ்சலின் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துக்கள் என ராஜ் தவரட்ணசிங்கம் வலியுறுத்துகின்றார்.  ஆனால், தனது நீண்ட பதவிக் காலத்தில்  பேரவைக்குள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் சக்தியாகச்  செயற்பட்ட பின்னணியில், அவர் தனது கருத்தையும் பேரவையின் கருத்தையும் வேறுபடுத்த முனைவது ஓர் அப்பட்டமான முரணாகும்.

மின்னஞ்சல் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துகள் என ராஜ் தவரட்ணசிங்கம் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?  இந்தக்  கருத்துகள் எப்போதாவது பேரவையின் சொந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையிலேயே வேறுபட்டு இருந்தனவா?

தமிழர்களின் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்க்கமாகச் செயற்படத் தவறியதற்காக பேரவை நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை  CTC பல ஆண்டுகளாக மறுத்துவந்தது . இறுதியாக May 2024 இல், ஒரு சுருக்கமான, அடையாள அறிக்கை மூலம் மாத்திரமே தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதாக முதல் தடவையாக CTC தெரிவித்தது. இது மிகவும் தாமதமானது எனப்  பலராலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது, தமிழ் இனப்படுகொலை விடயத்தில் அதன் மௌனம், கனடிய உள் விவகாரங்களில் இலங்கையின், வெளிநாடுகளின் தலையீடு (Foreign interference) குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியது உட்பட்ட விடயங்களில் பேரவையின் நகர்வுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் , பேரவையின் மூத்த பிரமுகர்களுள் ஒருவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடு, தமிழர் மத்தியில் நீண்ட காலமாக இருந்த கவலைகளையும் விமர்சனங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அபாயகரமானதாக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக, பேரவை தமிழ் கனடியருக்கான பெரும் சக்தியாக தன்னை சுயபிரகடனம் செய்துவந்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க அது மறுத்து வருகிறது. தமிழர்களின் துயரங்களுக்குக்  காரணமானவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அது தவறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பேரவையை, தூர விலக்கியது மட்டுமல்லாமல், அதன் தலைமை மீது பரவலான அவ நம்பிக்கைக்கும் வழிவகுத்தது.

இமாலயப் பிரகடம் – மகிந்த ராஜபக்ச சந்திப்பு – பதவி விலகல்

இவற்றின் வெளிப்படையானதும் தெளிவானதுமான  உதாரணங்களுள் ஒன்று April 27 2023 அன்று நிகழ்ந்தது. உலகத் தமிழர் பேரவையின் (GTF) தலைமையிலான இமாலயப் பிரகடனத்தில் ராஜ் தவரட்ணசிங்கம் GTF-இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய பேரவையின் சார்பாக ஒப்பமிட்டார். இந்தப் பிரகடனம் தமிழர்களின் அரசியல் ஈடுபாட்டை நோக்கிய ஒரு முதல் படியாக பேரவையினால் நியாயப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

Himalaya Declaration, with signatories

ஆனால் அது கனடாவிலும் தாயகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது.

இந்தப் பிரகடனம் குறித்து ஈழத் தமிழருடன் பேரவை கலந்தாலோசிக்கவில்லை. தவிரவும், தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற விடயங்களில் மௌனம் காத்துள்ளது.

சில மாதங்களின் பின்னர், ராஜ் தவரட்ணசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியானது. பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

Himalaya-Declaration-and-CTC.jpeg

வெளியான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒளிப்படம்

மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள்  நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது. இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தின் போது இவர்கள் இருவரும் முறையே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். மேலும் கனடாவில் உள்ள இவர்களின் சொத்துகள், நிதிச் செயற்பாடுகள் முடக்கப்படும் எனவும் கனடிய அரசாங்கம் அறிவித்தது. இவர்கள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்த முடிவு குறித்து கனடிய அரசாங்கம் அறிவித்தது.

இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவும், அவரோடு புகைப்படம் எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்ரீலங்காவின் அரச தலைமையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவாக, நீதியை ஓரங்கட்டும் ஓர் இராஜதந்திரச் சூழ்ச்சியாகத் தோன்றிய பேரவையின் இந்த முயற்சியைக் கனடாவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர் கண்டித்தனர்.

தனது தவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, CTC ஆரம்பத்தில் தன்னை நியாயப்படுத்தியது. எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் கூட, இராஜதந்திர ஈடுபாட்டின் அவசியம் இது என தனது தவற்றுக்கு பேரவை நியாயம் கற்பித்தது. தொடர்ச்சியான நீண்ட சமூக அழுத்தத்தின்  பின்னர், உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

Himalaya-Declaration-withrowal-1024x374.

இவற்றின் பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகல் பொது வெளியில் இருந்த மையக் கேள்விக்கு எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை.

இது பேரவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கும் ஓர் உண்மையான நகர்வா? அல்லது பேரவையை மேலும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையா?

தமிழர் தெருவிழாவும் சமூகத்தின் எதிர்வினையும்

தமிழ் அரசியல் விடயங்களை CTC கையாண்ட விதம் மற்றொரு சவாலை August 2024 இல் எதிர்கொண்டது.

தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் அமைப்பதைத் தடுக்குமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo, May 3, 2024-இல்  கடிதம் ஒன்றை அனுப்பினார். கனடிய அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளித்தது. கனடாவின் உள்  விவகாரங்களில் வெளிநாடுகளின்  தலையீட்டுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கனடியப் பிரதமர் Justin Trudeau இதன் தீவிரத்தை ஒப்புக்கொண்டார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த நடவடிக்கையை வெளிநாட்டுத் தலையீடு எனக் கண்டித்த Patrick Brown, கனடியத்  தமிழர் பக்கம் உறுதியாக நின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளை பேரவை சந்தேகத்துக்கு  இடமின்றி நிராகரித்தது. ஆனால் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடன வேலைத் திட்டங்கள் உட்பட  நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கைத் தூதரகம் தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியது. தூதரகத்தின் இந்தக் கூற்றை CTC கண்டிக்கவும் இல்லை – நிராகரிக்கவும் இல்லை. ‘தேசியம்’ பெற்றுக்கொண்ட  இந்தக்  கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்படுகிறது.

LETTER TO PATRICK BROWN

கனடியத் தமிழர் சமூகம், பேரவையின் இந்த கேள்விக்குறியான  முடிவை அன்றும் அவதானித்தது – இன்றும் அவதானிக்கிறது.

CTC முன்னெடுக்கும் வருடாந்தக் கலை நிகழ்வான,  ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. கனடாவின் உள்  விவகாரங்களில் இலங்கையின் தலையீடு குறித்த பேரவையின் மௌனம், இமாலயப் பிரகடனத்தில் அதன் கடந்த கால ஈடுபாடு, தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கோரத் தவறியது  உட்பட்ட விடயங்களைக்  கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் CTC தலைவர்  குமார் ரட்ணம்   பகிரங்க மன்னிப்புக்  கோரினார். ஆனால் அந்த அறிக்கை பேரவை மீது மக்கள் நம்பிக்கையை மீள் உறுதி செய்யத் தவறிவிட்டது. கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் புறக்கணித்தனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மக்களில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரம் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் பேரவையின் முதன்மையான கொண்டாட்டமாக இருந்த நிகழ்வு இம்முறை நிராகரிப்பின் பகிரங்க சாட்சியாக மாறியது.

Video Player

00:00

01:13

தமது கடந்த காலத் தவறுகளுக்கு CTC-யின் தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரிய போதிலும், மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை CTC இதுவரை முன்னெடுக்கவில்லை. நிர்வாக மறுசீரமைப்பு, தமிழ் இனப் படுகொலைக்கான நீதி கோரல், வெளிப்படைத் தன்மை, மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு என அனைத்து விடயங்களிலும் CTC தனது முன்னைய நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது. எனவே, CTC மக்களுக்கான, மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்கத் தயாரில்லை என்பதையே  தனது இறுமாப்பான நிலைப்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

கனடிய அரசியல்வாதிகளுக்கான ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டின் உச்சக்கட்டமாக வெளிப்பட்டுள்ளது. இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை மறுக்கிறது, தமிழர் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது, மேலும் கனடியத் தமிழ் அரசியல்வாதிகளை அவமதிக்கிறது.

இந்நிலையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது:  ராஜ் தவரட்ணசிங்கம் எவ்வாறு பேரவையின் தலைவராகவும், அதன் ஆலோசகராகவும் இத்தனை காலம் பதவி வகித்தார்?

இவ்வாறான முக்கியமான விடயங்களில் பேரவை தொடந்தும் தோல்வியடைந்த நிலையில் ராஜ் தவரட்ணசிங்கத்தின் அழுத்தமும் செல்வாக்கும் பேரவைக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதே பெரும் கேள்வி.

வெளிவராத ஆலோசனை!

தமிழர் தெரு விழாவைத் தொடர்ந்து, CTC உள்ளகச் சீர்திருத்தத்தை உறுதியளித்தது. ஒரு சமூக ஆலோசனை முயற்சியை அறிவித்தது. அதிக வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொறுப்புக்கூறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியளித்தது. இந்த ஆலோசனையின் முடிவுகளை விவரிக்கும் அறிக்கை February  2025-இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டுரை March மாதம் வரையப்படுகிறது. இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தக் கண்டுபிடிப்புகளும் பகிரப்படவில்லை. இந்த ஆலோசனை ஓர்  இணைய மூலக் கணக்கெடுப்புக்குச் சமமாக இருப்பதால், இதன் மூலம் வெளியாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் கொண்டிருக்காது.

பலருக்கும் இவை ஒன்றும் ஆச்சரியமான விடயங்கள் இல்லை. இந்த ஆலோசனை ஒருபோதும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையாளர் உள்ளிட்ட விமர்சகர்களின் வாதமாகும்.  மாறாக இது தமது இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு  யுத்தியாகும்.

இந்த ஆலோசனைகள் முறையானதாக இருந்தால், அவற்றின் முடிவுகள் எங்கே?

இந்த விடயம் குறித்து “தேசியம்” சார்பாக வினவிய பின்பே, முதல் தடவையாக March இறுதிப் பகுதியில் குறிப்பிட அறிக்கை வெளியாகும் என பேரவை பதில் அளித்தது.

பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை

இந்தப் பின்னணியில், ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை அவர் நிராகரிப்பதும், தமிழ் மரபுத்  திங்கள் அங்கீகாரத்தைக்  கண்டனம் செய்ததும், தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை கேள்விக்கு உட்படுத்தியதும் பேரவையை அதன் நீண்டகாலத் தலைவர்களுள் ஒருவரின் சர்ச்சையான தமிழர் விரோதப் போக்கான கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

 

raj-1-225x300.jpg

பேரவையின் நிகழ்வொன்றில் ராஜ் தவரட்ணசிங்கம்

இந்தக் கட்டுரையாளர், ராஜ் தவரட்ணசிங்கத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ளடக்கத்தை முழுமையாகக் கண்டிக்கிறார். பேரவையின்  முழுமையான தலைமைத்துவ மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.  ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் ஒரு தனி மனிதனின் கருத்துகள் இல்லை. மாறாக கனடியத் தமிழரின் நலன்களில் இருந்து தூர விலகி நிற்கும் ஒரு தனியார் குழுமத்தின் நிலைப்பாடாகும். இதை பல உதாரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மௌனம், மழுப்பல், நம்பிக்கை சிதைவு: நுண்ணாய்வுக்குள் பேரவையின் பதில்கள்

சமூக நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர்  அமைப்பு, சமூகத்தின் கேள்விகளுக்கு மௌனத்தால் பதிலளிப்பது அதிகம் ஆபத்தானது என்பது நடைமுறை அடிப்படை. “கனடியத் தமிழர்களின் குரல்” என தம்மைப் பிரகடனப்படுத்தும் பேரவை, சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சலின் உள்ளடக்கம் உட்பட பேரவை குறித்த சமூகத்தின் பல கேள்விகளுக்கு “தேசியம்”, CTC இடம் முன்வைத்து. நேரடிச் செவ்விக்கான அழைப்புக்கு பேரவை சாதகமாகப் பதில் அளிக்காவிட்டாலும், தேசியத்துடன் இரண்டு மின்னஞ்சல் கேள்வி – பதில் பரிமாற்றத்தில் CTC பங்கெடுத்தது. இதில் தலைமை, முடிவெடுத்தல், பொறுப்புக் கூறல் குறித்த பல கேள்விகளை CTC மீண்டும் மீண்டும் திசை திருப்பியது, தவிர்த்தது அல்லது முற்றிலுமாகப்  புறக்கணித்தது.

இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் பேரவையின் நிலைப்பாடு விடயத்தில் நீண்டகாலமாக மௌனம் காப்பது ஏன்? என “தேசியம்” கேள்வி எழுப்பியபோது, முதலில் வெறுமனே  சமீபத்திய அறிக்கை ஒன்றை CTC தனது பதிலாகச் சுட்டிக்காட்டியது. ஒரு சமூகத்துக்காகக்  குரல் எழுப்பும் நேர்மையான பரப்புரைக்குத்  தேவை தொடர்ச்சியே தவிர, தெருவிழா நிராகரிப்பின் முன்னதான அழுத்தத்தின் கீழ் எதிர்வினையாற்றும் அறிவிப்புகள் அல்ல. மேலும் அடையாள ஒப்புதலைத் தாண்டி எடுக்கப்பட்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்துக்  கேள்வி எழுப்பிய போது, 15 ஆண்டுகளாக பேரவை, மனித உரிமைகள், இனப்படுகொலை அங்கீகாரத்துக்காக வாதிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என பதில் அளித்தது. இது உண்மைக்கு புறம்பானதாகும்.

தமிழ் இனப்படுகொலை என்ற பதத்தை எழுத்திலோ, பேச்சிலோ பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை CTC கொண்டுள்ளது என அதன் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ February 2024 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையோ, பொய்யோ பேரவை தனது நிலைபாட்டில் உறுதித்தன்மையைப்  பேணமுடியவில்லை என்பது இந்த விடயத்தில்  மீண்டும் உறுதியாகிறது. அதனைக் கண்டிக்க வேண்டிய பேரவை, ஏன் மௌனத்தைப் பரிசளிக்கிறது? முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு கேள்விக்கு இரண்டு வெவ்வேறு விடயங்கள் உண்மையாக இருக்க முடியாது.

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீடு குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த கரிசனையை பேரவை நிராகரித்தது. இதுபோன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக பேரவை நியாயம் கற்பித்தது. அதனால் இந்த விடயங்களில் தலையிடமுடியாது என தமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தியது. ஆனால் CTC நீண்ட காலமாக மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் வரும் விவகாரங்களில் உரிமை எடுத்துக் கொண்டமைக்கான சாற்றுகள் அதிகம் உள்ளன. அகதிகள் உரிமைகள் முதல் சர்வதேச விவகாரங்கள் வரை அதற்கான உதாரணங்கள் விரிவடைகின்றன. ஆனாலும், தமிழ் கனடியர்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விடயமான இலங்கை அரசின் வெளிநாட்டுத் தலையீடு குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பேரவை தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை “தேசியம்” மீண்டும் முன்வைத்தது: மீண்டும், அதற்கு பேரவையிடம் பதில் இல்லை.

CTC-யின் கனடியத் தமிழர் சமூகம் குறித்த ஈடுபாட்டை விரும்பாத நிலை, இலங்கை அரசாங்கத்துடனான அதன் உறவுகள் வரை நீண்டுள்ளது. கனடா – ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத் தூதர் Thusara Rodrigo போன்றவர்களுடன் அதன் உறவு குறித்து வினவிய போது, பேரவைக்கு அது போன்ற  எந்த ஒரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தது. ஆயினும்  SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் (SJV Chelvanayakam Memorial Lecture), Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார்.

CJV-1024x473.jpg

CTC ஏற்பாடு செய்த SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo

CTC ஏற்பாடு செய்த இந்த நிகழ்விலும் ஏனைய சில நிகழ்வுகளிலும் பேரவையின் உறுப்பினர்களுடன் Thushara Rodrigo ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். பேரவை கூறுவதைப் போல் இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையில் எந்த உறவும் இல்லை என்றால், இலங்கைத் தூதரகம் அதன் நல்லிணக்க முயற்சிகளை நியாயப்படுத்த ஏன் CTC-யின் பெயரைப் பயன்படுத்துகிறது? இங்கு “தேசியம்” மீண்டும் முன்வைத்த கேள்வி: இந்த நிகழ்வுகளுக்கு Thushara Rodrigo-வை அழைத்தது யார்? முன்னைய பல கேள்விகள் போல் CTC இதற்கும் பதில் கூற மறுத்து விட்டது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல் சர்ச்சையைப் பேரவை கையாண்ட விதமும் இதே பாணியைப் பின்பற்றியது. அந்த மின்னஞ்சல் தமிழர்களுக்கு எதிரானதா? என “தேசியம்” மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியது. “அது, அவரது தனிப்பட்ட கருத்து” என CTC நிராகரித்தது. ஆனால் பேரவையின் அனைத்துப் படிமுறைகளையும்  அறிந்த, முன்னாள் தலைவர், மூத்த ஆலோசகர் என பதவிகளை வகித்த ஒருவரிடமிருந்து வெளியாகும் கருத்துகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. மேலும், இந்த “மின்னஞ்சலை நீங்கள்  கண்டிக்கிறீர்களா இல்லையா?” என மீண்டும் வற்புறுத்தியபோது,  CTC மீண்டும் மௌனம் காத்தது. இந்த விடயங்களில் பேரவையின் நிலைப்பாடு ராஜ் தவரட்ணசிங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் CTC எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

இமாலயப் பிரகடன விடயத்தில்; யார் முடிவுகளை எடுத்தார்கள்?, யார் உரையாடல்களில் பங்கேற்றார்கள்?, யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது? என்பதற்கு CTC பதிலளிக்க மறுத்து விட்டது . ராஜ் தவரட்ணசிங்கம் இந்தச் செயல்முறையில் ஈடுபட்டிருந்தார், பேரவைக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்கினார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பல உள்ளன. அதற்குப் பதிலாக,”ஏற்கனவே எமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தி விட்டோம்” எனக் கூறியதுடன், “ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைப்பது  உண்மைகளை மாற்றாது” என பேரவை தேசியத்திடம் வலியுறுத்தியது. இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், ஒரு போதும் இதில் உண்மை வெளியாகவில்லை என்பதாகும். தொடர்ந்து கேள்விகளைத்  திசை திருப்புவதனால்; பதில்கள் உண்மையாகப் போவதில்லை. ஒரு விடயத்தில் இருந்து விலகி நிற்பது என்பது அதைத் தெளிவுபடுத்துவது அல்ல.  இந்த செயற்பாடுகளை  யார் அங்கீகரித்தார்கள், என்பதை CTC கூற மறுத்தால், இவற்றின் தவறுகளுக்கு  யார் பொறுப்பேற்பார்கள்?

அண்மைய காலத்தில் CTC தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி தெருவிழா 2024-இல் வெளிச்சத்துக்கு வந்தது.  முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. இதனால் அங்கு சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு  கோரியபோது, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க முடிவு செய்தது பேரவை.  இதில் சமூகத்தின்  அக்கறைகளை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என “தேசியம்” கேள்வி எழுப்பிய போது, CTC “ஒப்பந்தக் கடமைகளை” (Contractual obligations) பூர்த்தி செய்ததாக மாத்திரம் கூறியது. அதிகாரத்துவப் பாணியிலான இந்தப் பதில், நம்பிக்கை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டிய தெருவிழாவின் கட்டமைப்பைக்  கேள்விக்குள்ளாக்குகிறது. விற்பனையாளர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல் தவிர்ப்பதற்கான எண்ணம் முன்னரே பேரவையினால் திட்டமிடப்பட்டதா?  என வினவியபோது, CTC மீண்டும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகள் போல், தெளிவாக ஆம் அல்லது இல்லை என்று விடை தரக்கூடிய பின்வரும் கேள்வியை “தேசியம்” முன்வைத்தது. “CTC எந்த விற்பனையாளர்களுக்கும் பணத்தை மீள வழங்கியுள்ளதா?”. பேரவை அதற்குப் பதிலளிக்கவில்லை.

பேரவைக்கும் தேசியத்துக்கும் இடையிலான நீண்ட இரண்டு கேள்வி பதில் மின்னஞ்சல்  பரிமாற்றம் நியாயத் தன்மையின் அடிப்படையிலும், நடுநிலை, நெறிமுறை இதழியல் கோட்பாட்டிலும், CTC-யின் பதில்கள் நியாயமாகவும், துல்லியமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இங்கு முழுமையாக வழங்கப்படுகிறது. பேரவையின் நிலைப்பாடுகள் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படாமல் வெளியிடப்படுவதை இந்த நடைமுறை  உறுதி செய்யும் என தேசியம் நம்புகிறது. மேலும் ஒரு தொகுப்புக் கேள்விகள் தேசியத்தால் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.  அவற்றுக்கான பதில்களும் கிடைக்கப்பெறும் போது இங்கு இணைக்கப்படும்.

EMAIL EXCHANGE BETWEEN THESIYAM AND CANADIAN TAMIL CONGRESS

பேரவையின் தமிழர் சமூகத்துடனான இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது வெறும் நிர்வாகத்தின் தோல்வி மட்டுமல்ல; மாறாக நம்பிக்கைத் துரோகமாகும் என்பதை உறுதியாகக்  கூறலாம். CTC தன்னை தமிழ்க் கனடியர்களின் பிரதிநிதியாக நிலை நிறுத்துகிறது, இருப்பினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அதே சமூகத்தின் நியாயமான கவலைகளுக்குச்  செவிசாய்க்கத்  தொடர்ந்து மறுத்து வருகிறது  முக்கிய விடயங்களில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, பேரவை உள்ளடக்கம் இல்லாத பதில்களால்,  அல்லது நிராகரிப்புகளால், அல்லது வெளிப்படையான மௌனத்துடன் கடந்து செல்கிறது. ஆனால் மௌனம் நடுநிலையானதல்ல என்ற கசப்பான உண்மையை இந்தச்  சந்தர்ப்பத்தில் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வர  இந்தக் கட்டுரையாளர் விரும்புகிறார். மௌனம் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தேர்வாகும். ஒரு சமூக அமைப்பு தனது செயல்களுக்குப் பதிலளிக்க மறுக்கும்போது, சமூகத்தின் கரிசனையும், தொடர் கேள்விகளும் கொள்கை பற்றியதாக இல்லாமல் நேர்மைத்தன்மை  குறித்ததாக மாறும் அபாயம் உள்ளது. பேரவையின் விடயத்திலும் இன்றைய நிலை இதுதான்.

பேரவையின் எதிர்காலம் என்ன?   

பல ஆண்டுகளாக, CTC கனடிய தமிழர்களின் முதன்மை அரசியல் குரலாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. ஆனால் வளர்ந்து வரும் அதிருப்தி, மறுசீரமைப்புக்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அதன் தகுதி இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

1) பேரவை தனது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளுமா?

2) வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

3) சமூகத்தின், மாற்றத்துக்கான தொடர் கோரிக்கைகளை அது தொடர்ந்து புறக்கணிக்குமா?

4) பேரவையின் உறுப்புரிமையை யார் பெறவேண்டும் என்ற முடிவைத்  தன்னிச்சையாகச் சில தனிநபர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வார்களா?

5) CTC குறித்த அண்மைக்காலத் தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவை  நிகழ்ந்த காலப்பகுதியில் பேரவையைத் தனிமனித ஆளுமைக்குள் கட்டுபடுத்தி வைத்துள்ளதான குற்றச்சாட்டை  எதிர்கொள்ளும் நிர்வாகப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா,  அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்றுப் பதவி  விலகுவாரா?

இந்தப் பின்னணியில், CTC அடையாளம் அற்று நீர்த்துப் போகுமா என்பதை வரும் வாரங்களும் மாதங்களும் தீர்மானிக்கும்!

https://thesiyamnation.com/41151/

 

இலங்கதாஸ் பத்மநாதன்

இலங்கையில் 5 நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுக்கும் திட்டம் - இது சாத்தியமாகுமா?

3 months 2 weeks ago
👉 https://www.facebook.com/reel/1222394072637639👈 குரங்குகளின் கணக்கெடுப்புக்கு உதவுங்கள். தண்டரோ அடித்து அறிவித்தல்.

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க

3 months 2 weeks ago
அனுராவின் ஆட்சி அமைந்தவுடன், வெகுவிரைவில் இந்த ஆட்சி கவிழும், கலைக்கப்படும் என்று ரணிலார் கலவரப்பட்டபோதே நினைத்தேன், பின்னால் ஏதோ செய்தி இருக்கிறதென்று. எல்லோரும் ஒருவரின் குற்றத்தை மற்றவர் மூடி மறைத்து, ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து எழுபத்தாறு ஆண்டுகளாக நாட்டை சுடுகாடாக்கியதுதான் இவர்களின் சாதனை! இவர்களுக்கு எப்படியான மரணம் வரும்? மஹிந்த, கோத்தாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், இவர்கள் தப்பினாலும் அவர்கள் அனுபவிப்பார்கள். ஆனால் ரணில், அப்பாவிமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல. அவர் செய்தவற்றுக்கெல்லாம் தானே அனுபவித்துத்தான் முடிய வேண்டும்.

கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.

3 months 2 weeks ago
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்ன கூட்டமைப்பில் இணைந்தனர் சிறீகாந்தா , சிவாஜிலிங்கம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கடந்த வாரம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசுக் கட்சி இணைந்திருந்த நிலையில் அக்கூட்டமைப்பினை பலப்படுத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சியும் இணைந்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் நேற்றைய தினம் இக்கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டதாகவும் சட்டத்தரணி ந. சிறீகாந்தா புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சில ஒற்றர்களின் ஊடுருவல் காரணமாக பல கட்சிகளாக உடைந்து சின்னாபின்னமாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை மீள் உருவாக்கும் காலம் இவ்வாறான தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமையின் காரணமாக கனிந்துள்ளதாகவும் தற்போது உருவாகியுள்ள இக்கூட்டமைப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு கூறுகின்றனர். Kunalan Karunagaran

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
டாக்டர் அர்ச்சுனாவை குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தனர். டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன் தலைவர் செய்தது பிழையென்றும் ஒட்டுமொத்தமாக இவர்களை உள்ளே வைத்து சீமெந்து பூசி இருக்க வேண்டும் என்று ஒரு நச்சுக்கருத்தை வெளியிட்டுள்ளார். கேட்க > https://www.facebook.com/share/v/1DyRWcSwHn/ காலம் தாழ்த்தி, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தது தவறு என உணர்ந்தனர் புலிகள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமான கருத்தை கொண்டுள்ளார் டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இவரைத் தவிர அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் மொழியாகவிருப்பதால் தமது சகோதரர்கள் என்று தான் கூறுவார்கள். பாராளுமன்றத்தில் எத்தனையோ தடவைகள், முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர். 1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் விரட்டியடிக்கும் போது, யாழ்ப்பாணத்தினுள்ள தமிழ் மக்களின் முக்கியமானவர்களும் இந்து சமய குருக்களும் சேர்ந்து யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசர பேச்சு வார்த்தைகளை நடாத்தியும் கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. இவ்வாறுதான் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் மேயராக ஒரு முஸ்லிமை சட்டத்தரணி எம். எம்.சுல்தான் அவர்களை மேயராக தெரிவு செய்து கெளரவப்படுத்தினார்கள். இவ்வாறுதான் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். புலிகள்தான் முதலில் ஒற்றுமையை சீர்குழைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்கள், தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கிறார் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன். இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குழைக்கும் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் இந்த நாட்டின் குடியுரிமைக்கு கூட தகுதியில்லாத டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தகுதியில்லை. எனவே டாக்டர் அர்ச்சுனா இராமநாதனின் குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கூறுகிறோம். யாழ்ப்பாணத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த முஸ்லிம்களின் இன்றைய நிலையை அறிந்து கொள்ளுங்கள் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே! யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் விரட்டியடிக்கும்போது உங்களுக்கு 4 வயது தான். அறிந்து கொள்ளுங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் துயர நிலைமையை . யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று பல திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன. 34 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம். “யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள். புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா? ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம். பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது. பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது…… விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. 2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது. முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 34ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும். தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அச்சுறுத்தலாக விளங்குகிறார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி யாழ்ப்பாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!! *கலாபூஷணம் பரீட் இக்பால்-* https://madawalaenews.com/16689.html

3000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை!

3 months 2 weeks ago
3000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன் முறையாக வெள்ளிக்கிழமை (14) அவுன்ஸ் ஒன்றுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியது. அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் கட்டணக் கொள்கை, பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த அச்சங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள் கணக்கிட்டு வருவதால் தங்கத்தின் விலையானது உச்சத்துக்கு சென்றுள்ளது. வெள்ளிக்கிழ‍ைமை சந்தை அமர்வின் தொடக்கத்தில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,004.86 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. பின்னர் மதியம் 02:01 ET (1801 GMT) நிலவரப்படி 0.1% குறைந்து 2,986.26 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,001.10 டொல்களில் முடிவடைந்தது. வர்த்தகப் போர்களின் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பெரும்பாலும் பாதுகாப்பான புகலிடமாக நாடுகிறார்கள். மேலும், இந்த ஆண்டு அதன் விலை சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளின் தாக்கம் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையின் தாக்கம் குறித்த அச்சம் இதற்கு ஒரு காரணமாகும். தங்கத்தின் விலை மத்திய வங்கியின் தேவையால் ஆதரிக்கப்பட்டுள்ளது, முக்கிய வாங்குபவரான சீனா பெப்ரவரியில் தொடர்ந்து நான்காவது மாதமாக அதன் தங்க இருப்புக்களை அதிகரித்துள்ளது. அமெரிக்க கொள்கை நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களின் தேவையை ஆதரிக்கக்கூடும் என்பதால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் விலை $3,100-$3,300 செல்லும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதேவ‍ேளை, வெள்ளிக்கிழமை வெள்ளி ஒரு அவுன்ஸ் $33.80 ஆகவும், பிளாட்டினம் 0.1% உயர்ந்து $995.20 ஆகவும், பல்லேடியம் 0.6% உயர்ந்து $963.76 ஆகவும் இருந்தது. இதேவ‍ேளை, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்றைய தினம் 235,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது பவுண் ஒன்றுக்கு 217,300 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425269

திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது. அதாவது, “திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார். திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. https://athavannews.com/2025/1425265

இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல்

3 months 2 weeks ago
இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு கொந்தளிக்கவில்லை. இனவாதம் இல்லை என்று சொல்லும் இந்த அரசாங்கம் தான் மோசமான இனவாதிகள். கடந்த கால அரசாங்கங்கள் தங்களை இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமது செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கம் இனவாதம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க இனவாதத்தில்தான் ஈடுபடுகிறார்கள். இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா? இசைப்பிரியாவுக்கு இந்த நாட்டிலே நீதி தேவையில்லையா எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2025/1425262

இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல்

3 months 2 weeks ago

abc.jpg?resize=534%2C298&ssl=1

இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு கொந்தளிக்கவில்லை.

இனவாதம் இல்லை என்று சொல்லும் இந்த அரசாங்கம் தான் மோசமான இனவாதிகள்.
கடந்த கால அரசாங்கங்கள் தங்களை இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமது செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள்.

ஆனால், இந்த அரசாங்கம் இனவாதம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க இனவாதத்தில்தான் ஈடுபடுகிறார்கள். இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா? இசைப்பிரியாவுக்கு இந்த நாட்டிலே நீதி தேவையில்லையா எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2025/1425262