Aggregator

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

3 months 2 weeks ago
ஏ.ஆர்.ரகுமான் ஹெல்த் ரிப்போர்ட்… அப்பல்லோ அப்டேட்! 16 Mar 2025, 12:22 PM லண்டனில் இருந்து நேற்று (மார்ச் 15) சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமான், இன்று (மார்ச் 16) காலை நீர்ச்சத்து குறைபாட்டால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சைகள் முடிந்து ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் இன்று காலை சென்னை கிரீம்ஸ் மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி, சினிமா பிரபலங்கள் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர் https://minnambalam.com/cinema/ar-rahman-discharged-from-apollo-hospital/

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
எமது தமிழ் சமூகத்தில் பண்பாடற்ற கீழ்தரமான அரசியல், சமூகவியல் கலாச்சாரத்தை உருவாக்கவும் அதற்காக ஆதரவாளர் அமைப்புகள் என்ற போலி முகபுத்தக அணிகளை கொண்டு தனக்கு பிடிக்காதவர்கள் மீது தன்னுடன் கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் மீதும் அவதூறுகளை புரிவதும், அதிலும் பெண்கள் என்றால் அவர்கள் மீது பாலியல் அவதூறுகளை பொழிவது போன்ற செயல்களை செய்யும் அர்சசுனா ஒரு விஷசெடி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவரோடு முரண்படுபவர்கள் வாய் திறந்தாலே அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச ஒரு காவாலி அணிகளை கட்டமைத்துள்ளார். முளையிலேயே கிள்ளி தூர எறியவேண்டிய விஷசெடியே அர்சசனா.

"கிராமியக் கலைஞன்"

3 months 2 weeks ago
"கிராமியக் கலைஞன்" ஆழமான வேரூன்றிய பாரம்பரியங்களுக்கும் துடிப்பான நாட்டுப்புறக் கலைகளுக்கும் பெயர் பெற்ற, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் வடமாகாணத்தில், தமிழ்செல்வன் அச்சுவேலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தான். அவன் சிறு வயதிலிருந்தே, ‘அரிச்சந்திரா” கூத்து என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும், காங்கேசன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி.வைரமுத்துவின் [பெப்ரவரி 11, 771924 - ஜூலை 8, 1989] 'மயானகாண்டம்' நாடகதின் மேலும் பாசையூர் அண்ணாவியார் கலாபூஷணம் முடியப்பு அருள்பிரகாத்தின் 'சங்கிலியன்' நாட்டுக்கூத்து மேலும் கொண்ட பற்றினால், பாரம்பரிய இசையின் தாளங்களாலும், கரகாட்டம், கோலாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களின் துடிப்பான அசைவுகளாலும் கவரப்பட்டு, அவன் தனது இளமை பருவத்திலேயே அச்சுவேலி கிராமத்தில் ஒரு திறமையான நாட்டுப்புற நடனக் கலைஞர் மற்றும் பாடகராக பெயர் பெற்று, கோவில் திருவிழாக்கள் மற்றும் உள்ளூர் விழாக்களில் கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி, ஆதரவும் அங்கீகாரமும் பெற்றான். அச்சுவேலியில் அவன் சுமாரான வாழ்க்கை வாழ்ந்தாலும், தமிழ்செல்வன் திறமையாக பாடி, நடனமாடியதும் அவரது சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அச்சுவேலி நாட்டுப்புறக் கலையில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. மேலும் அதன் மிகவும் பிரபலமான நாட்டுப்புற நடனக் கலைஞர்களில் ஒருவரிடம் தமிழ்செல்வன் நேரடியாக கரகாட்டம் மற்றும் கூத்து ஆகியவற்றில் இளம்வயதிலேயே தேர்ச்சி பெற்றவர் ஆவார். பழங்கால பாணியையும் மொழியையும் மற்றும் நவீன கதைசொல்லலையும் இணைத்து புதுமையான நடன அமைப்பிற்கு பெயர் பெற்ற அந்த குருவிடம், பயிற்சிகளை முறையாக பெற்றதால், தமிழ் கலாச்சாரத்தில் நடனம் மற்றும் இசையின் அழகையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றிய சங்க இலக்கியங்களில் இருந்து சமூக ஒற்றுமை, ஆன்மீக பக்தி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றை இணைத்து கிராமிய கலையின் பங்கை மேம்படுத்துவதில் தமிழ்செல்வன் தன் கவனத்தை பெரும்பாலும் செலுத்தினான். அதேவேளை, ஒரு ஏழை விவசாயியின் மகளான முத்துச்செல்வி பக்கத்து கிராமத்தில் வாழ்ந்து வந்ததுடன், அவள் தன் பெற்றோருடன் வயல்களில் வேலை செய்து, அன்றாட வாழ்க்கைக்கும் உதவினாள். அவர்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது மட்டும் அல்ல, அவர்களின் கனவுகள் கூட ஒரு எல்லைக்குள் முடங்கிவிட்டது. ஆனாலும், முத்துச்செல்வி தனது கிராமத்தின் இயற்க்கை அழகிலும் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளின் துடிப்பான கலை ஆற்றலிலும் ஓரளவு ஆறுதல் கண்டாள். அத்துடன் தமிழ்செல்வன் மற்றும் கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் அவள் முடிந்த அளவு கலந்து கொண்டாள். ஒரு நாள் அருகிலுள்ள கோவில் திருவிழாவின் போது தமிழ்செல்வன், வீரம் மற்றும் காதல் கதையை அடிப்டையாக வைத்து, ஒரு கூத்து நடத்திக் கொண்டிருந்தான். அவனது வீரம் நிறைந்த குரலும், இனிமை நிறைந்த காதல் குரலும் கூட்டத்தில் எதிரொலித்தது. அவனது நடன அசைவுகள் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. பார்வையாளர்கள் நடுவே, கூத்தை ரசித்துக்கொண்டு நின்றிருந்த முத்துச்செல்வியால் தன் கண்களை அவனிடம் இருந்து விலக்க முடியவில்லை. தற்செயலாக தமிழ்ச்செல்வனும் அவளைக் கவனித்தான். ஆனால் அவனின் கவனம் தன் கூத்திலேயே முழுமையாக இருந்தது. என்றாலும், நாடகம் முடிந்தபின், அவர்களின் கண்கள் சந்தித்தபோது, அவளுக்குள் அவனுக்குள் ஏதோ, சொல்லமுடியாத ஒரு புது உணர்வு கிளர்ந்தெழுந்தது. "கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று." கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம் அது களைவது போலவே கலைந்தும் போகும் என்று திருவள்ளுவர் கூறிச் சென்றார். அப்படித்தான், அவளின் அந்தப் பார்வையும் பின் கலைந்து போகுமோ என்று அவன் தன்னுக்குள் கேட்டுக்கொண்டான். என்றாலும், காலப்போக்கில், அவர்களின் சந்திப்புகள் அடிக்கடி நடந்தன. முத்துச்செல்வி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ்ச்செல்வனிடம் சில நேரமாவது நெருங்கிப் பழகவேண்டும் பேச வேண்டும் என்ற அவாவில், மேடையை சுத்தம் செய்ய அல்லது தயார் செய்ய தானாகவே முன்வந்தாள். அவ்வேளையில் அவர்களின் உரையாடல்கள் சாதாரணமானவையாக பொதுவாக இருந்தாலும் ஆழமானவையாகவும் இருந்தன. தமிழ்ச்செல்வன் அவளுடைய நெகிழ்ச்சியையும் கருணையையும் பாராட்டினான், அதே நேரத்தில் முத்துச்செல்வியும் தனது கலையின் மீதான ஆர்வத்தாலும் அர்ப்பணிப்பாலும் ஈர்க்கப்பட்டாள். அதேவேளை, அவர்களின் நட்பில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கண்டு மகிழ்ந்தனர். "நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே." இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய் என்று உருகுகிறார் மணிவாசகர். அப்படித்தான் அவளும் தொடக்கத்தில், கூட்டத்தோடு கூட்டமாக, ஒரு ரசிகன் போல் எந்த நோக்கமும் இல்லாமல், அவனின் நாடகத்தை பார்த்து இன்பம் அடைய விரைந்து வந்தவள், இப்ப உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் காதல் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாயா என்று கேட்க ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் காலப்போக்கில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். ஒரு நாள், அவர்கள் இருவரும் கடற்கரை ஒன்றில், மாலைப்பொழுது சந்தித்தார்கள். அப்பொழுது எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் கரைசேரும்போது அவை மணலைத்தொட்டு முத்தமிட்ட பின் கடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கடலுக்குச் சற்று தூரத்தில் சோளங்களைத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தார் வியாபாரி ஒருவர். தீச்சுவாலைகளில் சுடுபடும் பரவுகிற தீப்பொறிகள், ஆயிரம் மின்மினிகள் கூட்டமாகப் பறப்பது போன்று காட்சியளித்தன. தமிழ்ச்செல்வன் இருவருக்கும் இரண்டு சோளங்கள் வாங்கி, கடற்கரை மண்ணில், முத்துச்செல்வி அவன் அருகே நெருங்கி இருந்தவாறு, சூடான சோளத்தைக் கையில் பிடித்து ஊதி ஊதிக்கொண்டு சாப்பிடும் அழகை, கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன். "ஹாய் சாப்பிடாம இங்க என்னடா, என்னையே பார்த்துட்டு இருக்க?'' - தன் அகன்ற கண்களை விரித்து அவள் கேட்டாள். " ம்ம் முத்துசெல்வியின் முத்தில் அப்படி ஒரு ஆசையடா." அவன் அவளை இழுத்து அணைத்தபடி கூறினான். அப்பொழுது நாலு கண்களும் ஒருகணம் இமைக்காமல் நின்றன. "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன. ஆமாம் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள். என்றாலும் காலில் ஒரு பெரும் அலை மோதி, அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்தது. இருப்பினும், முத்துச்செல்வியின் குடும்பம் அவர்களின் பிணைப்பு வளர்ந்து வருவதை அறிந்ததும், அவர்கள் கோபமடைந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, தமிழ்ச்செல்வனின் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்க்கை நிலையற்றதாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருந்தது. தங்களுடைய மகளுக்கு நிலையான வருமானம் உள்ள ஒருவரை, பொருளாதார பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒருவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். குறிப்பாக அவளது தந்தை, தமிழ்செல்வனுடனான வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்து விடாப்பிடியாக இருந்தார். எதிர்ப்பால் மனம் தளராத தமிழ்செல்வன், முத்துச்செல்வியின் குடும்பத்தினரை அணுகி தனது அன்பையும் விருப்பத்தையும் தெரிவித்தான். நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், அவளை கவனித்துக் கொள்வதாகவும், ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குவதாகவும் அவன் உறுதியளித்தான். அவனது இதயப்பூர்வமான வார்த்தைகளும் நேர்மையும் இறுதியில் அவளது தாயின் நிலைப்பாட்டை மென்மையாக்கியது, ஆனால் அவளது தந்தை நம்பவில்லை. பல மாத விடாமுயற்சி மற்றும் கிராமத்தில் மரியாதைக்குரிய பெரியவரின் தலையீட்டிற்குப் பிறகுதான் அவர்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். என்றாலும் அவர்களது திருமண வாழ்க்கை, ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், குடும்பம் பெரிதாக, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. தமிழ்செல்வன் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிப்பது சொற்பமாக மாறியது. அவர்கள் சாப்பிடுவதற்கு ஓரளவு சமாளித்தாலும் குழந்தைகளின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. முத்துச்செல்வி அவர்களின் வருமானத்தைப் பூர்த்தி செய்வதற்காக சிலவேளை கூலிவேலைகளைச் செய்தாள். ஆனால் அவர்களின் குழந்தைகளை வறுமையில் வளர்க்கும் சுமை அவளைப் பெரிதும் பாரப்படுத்தியது. விவசாயத் தொழிலாளியாகவோ அல்லது மீனவனாகவோ ஒரு நிலையான வேலையைத் தேடுமாறு தமிழ்செல்வனை அவள் அடிக்கடி வற்புறுத்தினாள், ஆனால் அவனுடைய இதயம் அவனது கலையில் நிலைத்திருந்தது. "நான் சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற கூத்தடி, பாடகர்" என்று அவன் கூறுவான். “யுத்தத்தின் போது கூட, நாங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோதும், எனது பாடல்கள் எங்கள் மனதை வாழவைத்தன. இது எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை; அது என் அடையாளம், என் ஆன்மா. எங்கள் நல்வாழ்வு இன்றைய நவீன உலகில் புறக்கணிக்கப்படுகிறது, அது எனக்குத் தெரியும். ஆனால் இந்த பாரம்பரியத்தை என்னால் கைவிட முடியாது. சிவனை தில்லைக்கூத்தன் என்று கொண்டாடும் இந்த தமிழர் இன்று, எம் பாரம்பரிய கூத்தை எனோ கைவிடுகிறார்கள். அது தான் எனக்கு புரியவில்லை" என்றான். என்றாலும், "ஒரு வாய் பிட்டுக்கு, கூத்தாடி சிவன் மண் சுமக்கவில்லையா?" என்ற முத்துச்செல்வியின் கண்ணீருடன் இணைந்த கேள்வியால், இறுதியில், வாழ்க்கையின் அழுத்தங்களை உணர்ந்த தமிழ்செல்வனை, ஒரு விவசாயக் கூலியாக ஒரு நிரந்தர வேலையைச் செய்யத் தள்ளியது. அவன் வயல்களில் நீண்ட நேரம் வேலை செய்தான், அவன் தனது குடும்பத்திற்கு போதுமான அளவு சம்பாதித்தான். ஆனால் அவன் தனது ஆர்வத்தை ஒருபோதும் கைவிடவில்லை. மாலை வேளைகளில் தனது குழந்தைகளுக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் நாட்டுப்புற நடனம் மற்றும் இசைக் கலைகளைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். முத்துசெல்வியும் அவனுக்குத் துணையாக ஒத்தாசை செய்வாள். அவன் தன் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் தவறாமல் கூத்து நாடகத்தை அரங்கேற்றுவான், ஆனால் இப்ப பணத்திற்காக அல்ல, ஆனால் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் மட்டுமே. முத்துச்செல்வி, ஆரம்பத்தில் நாட்டுப்புறக் கலை, தமது வாழ்வுக்கு போதிய வருமானத்தை தரவில்லை என்று தற்காலிகமாக வெறுப்படைந்தாலும், இன்று அதன் மதிப்பைக் காணத் தொடங்கினாள். இது சமூகத்தை எவ்வாறு ஒன்றிணைத்தது, அவர்களின் குழந்தைகளுக்கு, பெருமை மற்றும் அடையாள உணர்வை எவ்வாறு விதைத்தது, என்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாக, அவள் அவனது மிகப்பெரிய ஆதரவாளராக, முன்போல மீண்டும் ஆனார், அவள் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க உதவியதுடன் அவர்களின் குழந்தைகளையும் கிராமியக் கலை கற்க ஊக்குவித்தாள். ஆண்டுகள் கடந்தன, தமிழ்செல்வனின் விடாமுயற்சி பலனளிக்கத் தொடங்கியது. இளைய தலைமுறையினருக்கு கற்பிப்பதற்கான அவனது முயற்சிகள், முன்னோர்களின் நாட்டுப்புற மரபுகள் மறைந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்தது. கலையின் மதிப்பை வலியுறுத்தும் பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து அவன் அடிக்கடி மேற்கோள் எடுத்து, சமூகத்திற்கு காட்டினான். நாளடைவில் தமிழ்செல்வனின் கதை அச்சுவேலியில் மட்டும் அல்ல, தமிழர் வாழும் எல்லா பகுதிகளிலும் ஒரு உத்வேகமாக மாறியது. அவ்வேளையில் தான், 2025 தைப்பொங்கல் தினத்தை ஒட்டி, யாழ் நகரில், முற்றவெளியில் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் [கூத்து] நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முதன்மை கலைஞராக தமிழ்ச்செல்வன் தலைமைவகுத்தான். அவன் தனது தலைமை உரையில்: "இன்று மக்கள் நாட்டுப்புற இசை அல்லது நடனத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல சம்பளம் கிடைக்காததால் நாட்டுப்புறக் கலையை தங்கள் தொழிலாக எடுத்துக் கொள்ள இளைய தலைமுறையினர் விரும்புவதும் இல்லை. பாடசாலைகளிலும் அதைப்பற்றி எந்த அறிவும் போதிப்பதும் இல்லை". என்று கூறிவிட்டு கொஞ்சம் அமைதியாக பெருமூச்சு விட்டான். பின், பார்வையாளர்களைப் பார்த்து, "யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக, பல தலைமுறைகளுக்கு முன்னர் எமது நாட்டுப்புறக் கலைஞர்கள் அணிந்திருந்த பாரம்பரிய உடைகள், நகைகள் மற்றும் கிரீடங்கள் போன்ற பல சாதாரண அலங்கார பொருட்களையும் மற்றும் திறமைகளையும் நாம் இன்று இழந்துள்ளோம். உதாரணமாக, வன்னியில் எமது பாரம்பரிய கலை வடிவங்கள் “கிட்டத்தட்ட அழிந்துவிட்டன” என்பது மிகவும் துரதிஷ்டவசமானது. "கோவலன் கூத்து" மற்றும் "மகுடி ஆட்டம்" ஆகியவை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வன்னியில் மிகவும் பிரபலமானவை, மேலும் கோவில் திருவிழாக்களின் போது இரவு முழுவதும் 15 மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தப்பட்டன." என்று கூறியவன், மேடையில் அமர்ந்திருந்த ஏற்பாட்டாளர்களை நோக்கி, "இந்த யாழ்ப்பாண பொங்கல் இசை விழா 2025, கடந்த காலங்களின் தனித்துவ கலை வடிவத்தை மீட்டெடுக்கவும், புத்துயிர் பெறவும், உயிர்த்தெழுப்பவும் மற்றும் பாதுகாக்கவும் கட்டாயம் உதவும்" என்று பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் தன் ஆரம்ப பேச்சை முடித்தான். அந்த நேரம் அங்கு ஒலிபெருக்கியில்: "காவடி கரகங்களோடு காத்தான் கூத்தும் மாவிலை தோரணங்களோடு நாட்டுக் கூத்தும் பாவெடுத்துப் பாடியாடி பூவெடுத்துத் தூவிக்கூடி நாவெடுத்துப் பேருஞ்சூடி மாவெடுத்துக் கோலங்காட்டி சீனடி சிலப்படியொடு சிறந்த நல்ல சித்திர சிற்பக்கலைகளும் விளங்கும் தேசமே! சுந்தர தமிழில் வரலாறு செப்பி ஆடும் கிராமிய கலைஞனே வாழ்கவாழ்கவே!!" என்று ஒலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

3 months 2 weeks ago
வியக்காவின் படுக்கையறை மின் விளக்குகள் பாத்திமாவின் கன்னித்திரை டாக்ட்டர்களாக பிறப்பெடுத்து இருக்கிறார்கள். இது ஒரு புது டிசைனிங் இன்னும் எவ்ளவோ இருக்கும் என்றே எண்ணுகிறேன்

நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி!

3 months 2 weeks ago
நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி! சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானத்தின் பைலட்டிடம் தெரிவித்ததையடுத்து, அவர் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1425326

நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி!

3 months 2 weeks ago

New-Project-202.jpg?resize=750%2C375&ssl

நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி!

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.

அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானத்தின் பைலட்டிடம் தெரிவித்ததையடுத்து, அவர் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

https://athavannews.com/2025/1425326

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!

3 months 2 weeks ago
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு! வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றும், எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக் கொண்டால் அல்லது அனுமதிப் பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இந்த நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் வலியுறுத்தினார். சுற்றுலா வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு விருந்துகளுக்கான ஒலிபெருக்கிகளின் பயன்பாடு இரவு 10 மணியுடன் மட்டுப்படுத்தப்படுவது சுற்றுலாத்துறையின் விருத்திக்குப் பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குச் சுட்டிக்காட்டினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1425329

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!

3 months 2 weeks ago

New-Project-203.jpg?resize=750%2C375&ssl

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!

வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றும், எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக் கொண்டால் அல்லது அனுமதிப் பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

484072313_1015720250703774_7912388497989

ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இந்த நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் வலியுறுத்தினார்.

சுற்றுலா வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு விருந்துகளுக்கான ஒலிபெருக்கிகளின் பயன்பாடு இரவு 10 மணியுடன் மட்டுப்படுத்தப்படுவது சுற்றுலாத்துறையின் விருத்திக்குப் பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குச் சுட்டிக்காட்டினர்.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2025/1425329

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
இஸ்லாமியர்களும், தமிழர்களும் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளார்கள், ஆனால் அதனை உணர்ந்து தவறுகளை திருத்தி முன்செல்லாமல் இரண்டு தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கினர், அதற்கு காரணம், தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை, அதனாலேயே அர்சுனா போன்றவர்கள் இவ்வாறு இனவாதம் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை தமது வறுகளுக்காக மன்னிப்பு கேளாமல் அவர்களால் முன்னோக்கி செல்ல முடியாது, திறந்த மனதுடன் உண்மைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக இஸ்லாமியர்கள்தொடர்ந்தும் இருக்கிறார்கள். பார்ப்போம் இந்த நாரதர் (அர்சுனா) கலகத்தால் ஏதாவது நல்ல மாற்றம் நிகழுகிறாதா என.

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

3 months 2 weeks ago

New-Project-195.jpg?resize=750%2C375&ssl

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1425303

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

3 months 2 weeks ago
ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425303

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் - ஒன்பது பேர் பலி

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 16 MAR, 2025 | 10:47 AM காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் புகைப்படப்பிடிப்பாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளுர் பத்திரிகையாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நிவாரணங்கள் வழங்கப்படும் செய்தியை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிலையம்தெரிவித்துள்ளது. காசா யுத்தநிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தம் சிறைக்கைதிகள் விடுவிப்பை இஸ்ரேலிய பிரதமர் நடைமுறைப்படுத்தவேண்டும் என அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பெய்ட் லகியாவில் இடம்பெற்ற தாக்குதலிற்கு பல்வேறு தரப்புகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன ஆனால் இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவது இது முதல்தடவையல்லஇ காசாவின் தென்பகுதியில் இஸ்ரேலிய ஆளில்ல விமானங்களை பார்க்கமுடிகின்றது ரவா நகரில் 24 மணிநேர இஸ்ரேலிய தாக்குதல் இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர் என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெய்ட் லகியா தாக்குதலை பயங்கரமான ஈவிரக்கமற்ற படுகொலை என வர்ணித்துள்ள ஹமாஸ் அமைப்பு எமது மக்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் அதன் ஆக்கிரமிப்பை தொடர்வது குறித்த இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/209340

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் - ஒன்பது பேர் பலி

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN 16 MAR, 2025 | 10:47 AM

image

காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் புகைப்படப்பிடிப்பாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளுர் பத்திரிகையாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நிவாரணங்கள் வழங்கப்படும் செய்தியை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிலையம்தெரிவித்துள்ளது.

காசா யுத்தநிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தம் சிறைக்கைதிகள் விடுவிப்பை இஸ்ரேலிய பிரதமர் நடைமுறைப்படுத்தவேண்டும் என அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெய்ட் லகியாவில் இடம்பெற்ற தாக்குதலிற்கு பல்வேறு தரப்புகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன ஆனால்  இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவது இது முதல்தடவையல்லஇ காசாவின் தென்பகுதியில் இஸ்ரேலிய ஆளில்ல விமானங்களை பார்க்கமுடிகின்றது ரவா நகரில் 24 மணிநேர இஸ்ரேலிய தாக்குதல் இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர் என அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பெய்ட் லகியா தாக்குதலை பயங்கரமான ஈவிரக்கமற்ற படுகொலை என வர்ணித்துள்ள ஹமாஸ் அமைப்பு எமது மக்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் அதன் ஆக்கிரமிப்பை தொடர்வது குறித்த இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/209340

அமெரிக்க புயலில் பலர் பலி.

3 months 2 weeks ago
தெற்கு அமெரிக்க சூறாவளி; 34 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில் சனிக்கிழமை இரவு வரை 250,000 க்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டன. கிழக்கு லூசியானா, மேற்கு ஜோர்ஜியா, மத்திய டென்னசி மற்றும் மேற்கு புளோரிடா பன்ஹேண்டில் முழுவதும் சூறாவளி எச்சரிக்கை வெளியிடப்படுள்ளதால், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு முழுவதும் கடுமையான வானிலை தொடர்ந்து நிலவி வருவதால், மத்திய மிசிசிப்பி, கிழக்கு லூசியானா மற்றும் மேற்கு டென்னசி ஆகிய இடங்களிலும்; அலபாமா மற்றும் ஆர்கன்சாஸின் சில பகுதிகளிலும் திடீர் வெள்ளம் மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் வெள்ளம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு அலபாமா முழுவதும் பல சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மிசோரியின் அவசரகால மேலாண்மை நிறுவனம், இதுவரை 25 மாவட்டங்களில் 19ஐ சூறாவளிகளைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது. மிசோரியில் உயிரிழந்த 12 பேரில் ஒருவரின் வீடு ஒரு சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளதுடன், அனர்த்தம் காரணமாக பல வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425332

ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்!

3 months 2 weeks ago
ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்! செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. அமெரிக்கா தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக தெஹ்ரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அழுத்தத்தை அதிகரித்து வரும் அதேவேளையில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் நிலையில் ஹவுத்திகளுக்கு எதிரான தாக்குதல் வந்துள்ளது. இதேவேளை, ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹவுத்தி நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சாதாவின் வடக்கு மாகாணத்தில் அமெரிக்க தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1425297