Aggregator

உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்!

1 week 5 days ago
உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்! ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) இன்று யாழிற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக முன்றலில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437013

உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்!

1 week 5 days ago

IMG-20250625-WA0038.jpg?resize=750%2C375

உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்!

ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) இன்று யாழிற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக முன்றலில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250625-WA0036.jpg?resize=600%2C338

FB_IMG_1750818777013.jpg?resize=600%2C33

https://athavannews.com/2025/1437013

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது!

1 week 5 days ago

7a337975-2ee4-4a1c-a2b8-7770854058c2.jpg

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது!

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த   தந்தை செல்வாவின் சிலை இன்று  (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று  (25) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,   இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1437002

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலங்கள் மீட்பு!

1 week 5 days ago

New-Project-334.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலங்கள் மீட்பு!

மிதெனிய, தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம், சூப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர்கள் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.

எவ்வாறெனினும், மூன்று சிறப்பு புலனாய்வு குழுக்கள் மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

https://athavannews.com/2025/1436982

பகிடிவதை சம்பவம்; தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்!

1 week 5 days ago

New-Project-336.jpg?resize=750%2C375&ssl

பகிடிவதை சம்பவம்; தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

புதிய மாணவர்கள் குழு ஒன்று கொடூரமான பகிடிவதை செய்யப்படுவதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த இடைநீக்கங்கள் அமல்படுத்தப்பட்டன.

ஆரம்பகட்ட உள் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் பொறியியல் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு மேலதிகமாக, சம்பவம் குறித்து பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை உட்பட அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவே ஒரு சிறப்பு பணிக்குழுவை நியமித்துள்ளார்.

https://athavannews.com/2025/1436991

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்

1 week 5 days ago

New-Project-333.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்.

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும்.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது.

அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும்.

இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும்.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது.

அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது.

சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார்.

“இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார்.

ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார்.

ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது.

ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை

ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும்.

இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது.

GuPS55TXoAA1Nob?format=jpg&name=medium

அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப்

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

“ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார்.

அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில்,

இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார்.

இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார்.

ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1436979

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

1 week 5 days ago
இவர் ஒறிஜினல் தமிழர் என்று நான் நினைக்கின்றேன். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவராக இருந்திருந்தால்…. தமிழக அரசே இவரை காப்பாற்றி… வழக்கை நீர்த்துப் போக செய்திருக்கும். 😎

சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா!

1 week 5 days ago
நாம் அறிய வியாபாரிகள், பல்வேறு தொழிலாளர்கள் போன்றோர் பெரிய கணக்குகளை எல்லாம் மிக வேகமாக மனதால் துல்லியமாக கணித்துக் கூறுபவர்களாக இருந்தார்கள். “கல்குலேட்டர்” வந்த பின்… அவர்களின் திறமை அப்படியே மழுங்கி விட்டதை நேரில் காண்கின்றோம்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04

1 week 5 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 04 / 'இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று பௌத்த சபைகள் யாவை?' இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று புத்த சபைகள் பற்றிய விவரங்கள் இங்கு கூறப்பட்டு உள்ளன. முதல் சபையின் விவாதம் ஏழு மாதங்கள் நீடித்தது. இரண்டாவது சபையில் எட்டு மாதங்கள் விவாதம் நடந்தது. மூன்றாவது சபை ஒன்பது மாதங்கள் நீடித்தது; தீபவம்சத்தின் 5-5, 5-29 மற்றும் 7-59 ஐப் பார்க்கவும். சபைகளின் காலங்கள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது மாதங்கள் என்ற ஒரு நேர்த்தியான ஏறுவரிசையில் உள்ளன என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்? ஆனால், தற்செயல் நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள், அற்புதமான நிகழ்வுகள் மற்றும் பறத்தல், முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்குப் பார்வை, முன்னறிவித்தல் மற்றும் கணித்தல் [coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting] போன்ற அதீத மனித திறன்கள் இந்த நூல்கள் மூன்றிலும் காணப்படுகின்றன. இவை மத நூல்களில், ஒரு அலங்காரங்களாக அல்லது ஒப்பனையாக கூறுவது மிகவும் வழக்கமானவை. உதாரணமாக, ஒருவரின் ஆடை மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாக விவரிப்பது அல்லது கட்டிடத்தை சிற்பங்களால் அலங்கரித்ததாக கூறுவது போன்ற ஒரு அலங்கரிப்பையே இங்கு காண்கிறோம். ஆனால் இவை உண்மையான வரலாற்று நிகழ்வுகள் அல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்! பிரம்மாவின் உலகில் இருந்து மொகாலிபுத்த தீசர் (Moggaliputtatissa; கிமு 327–247), [ஏன் இந்து கடவுள் உலகத்தில் இருந்து?] கீழே இறங்கி வந்து ஒரு பிராமண குடும்பத்தில் பிறப்பார் [ஏன் பிராமண குடும்பத்தில் இருந்து?], மேலும் ஒரு சிறந்த ஆசிரியராக புத்த மதத்திற்கு மாறுவார் என்றும் இரண்டாவது பௌத்த சபையின் முடிவில் முன்னறிவித்தார்கள். இவர் மகிந்தவை அதிகாரப்பூர்வமாக மதத் தலைவராக்கினார். இரண்டாவது பௌத்த சபைக்கு, நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது பௌத்த பேரவை நிகழும் என்றும் இங்கு முன்னமே எதிர்கூறப்பட்டது. இந்த மூன்றாவது சபை, மகிந்த மற்றும் மொகாலிபுத்த தீசர் பற்றி பின்னர் விவாதிப்போம். Part: 04 / 'What are the three Buddhist Councils, which allegedly took place in India?' There are details about three Buddhist Councils, which allegedly took place in India. The deliberations in the first council lasted seven months. The deliberations in the second council lasted eight months. That in the third council lasted nine months; see 5-5, 5-29 and 7-59 of the Dipavamsa. One might wonder that the durations of the councils are in a neat ascending order of, seven, eight and nine months. There are so many coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting in the chronicles. These are quite usual as religious adornments or embellishments, but these are not genuine historical events. Theros foresaw at the end of the second Buddhist Council that Moggaliputta Tissa from Brahma’s world [Why Hindu god's world?] would come down and would be born into a Brahman family [Why Brahman family?], and would convert to the Buddhism to become a great teacher. He ordained Mahinda. The Third Buddhist Council was also predicted to occur one hundred and eighteen years after the second Buddhist Council. We will discuss more about this Third council, Mahinda, and the Moggaliputta Tissa later. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 05 தொடரும் / Will Follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04

1 week 5 days ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 04 / 'இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று பௌத்த சபைகள் யாவை?'

இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று புத்த சபைகள் பற்றிய விவரங்கள் இங்கு கூறப்பட்டு உள்ளன. முதல் சபையின் விவாதம் ஏழு மாதங்கள் நீடித்தது. இரண்டாவது சபையில் எட்டு மாதங்கள் விவாதம் நடந்தது. மூன்றாவது சபை ஒன்பது மாதங்கள் நீடித்தது; தீபவம்சத்தின் 5-5, 5-29 மற்றும் 7-59 ஐப் பார்க்கவும். சபைகளின் காலங்கள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது மாதங்கள் என்ற ஒரு நேர்த்தியான ஏறுவரிசையில் உள்ளன என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்? ஆனால், தற்செயல் நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள், அற்புதமான நிகழ்வுகள் மற்றும் பறத்தல், முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்குப் பார்வை, முன்னறிவித்தல் மற்றும் கணித்தல் [coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting] போன்ற அதீத மனித திறன்கள் இந்த நூல்கள் மூன்றிலும் காணப்படுகின்றன. இவை மத நூல்களில், ஒரு அலங்காரங்களாக அல்லது ஒப்பனையாக கூறுவது மிகவும் வழக்கமானவை. உதாரணமாக, ஒருவரின் ஆடை மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாக விவரிப்பது அல்லது கட்டிடத்தை சிற்பங்களால் அலங்கரித்ததாக கூறுவது போன்ற ஒரு அலங்கரிப்பையே இங்கு காண்கிறோம். ஆனால் இவை உண்மையான வரலாற்று நிகழ்வுகள் அல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்!

பிரம்மாவின் உலகில் இருந்து மொகாலிபுத்த தீசர் (Moggaliputtatissa; கிமு 327–247), [ஏன் இந்து கடவுள் உலகத்தில் இருந்து?] கீழே இறங்கி வந்து ஒரு பிராமண குடும்பத்தில் பிறப்பார் [ஏன் பிராமண குடும்பத்தில் இருந்து?], மேலும் ஒரு சிறந்த ஆசிரியராக புத்த மதத்திற்கு மாறுவார் என்றும் இரண்டாவது பௌத்த சபையின் முடிவில் முன்னறிவித்தார்கள். இவர் மகிந்தவை அதிகாரப்பூர்வமாக மதத் தலைவராக்கினார். இரண்டாவது பௌத்த சபைக்கு, நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது பௌத்த பேரவை நிகழும் என்றும் இங்கு முன்னமே எதிர்கூறப்பட்டது. இந்த மூன்றாவது சபை, மகிந்த மற்றும் மொகாலிபுத்த தீசர் பற்றி பின்னர் விவாதிப்போம்.

Part: 04 / 'What are the three Buddhist Councils, which allegedly took place in India?'

There are details about three Buddhist Councils, which allegedly took place in India. The deliberations in the first council lasted seven months. The deliberations in the second council lasted eight months. That in the third council lasted nine months; see 5-5, 5-29 and 7-59 of the Dipavamsa. One might wonder that the durations of the councils are in a neat ascending order of, seven, eight and nine months. There are so many coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting in the chronicles. These are quite usual as religious adornments or embellishments, but these are not genuine historical events.

Theros foresaw at the end of the second Buddhist Council that Moggaliputta Tissa from Brahma’s world [Why Hindu god's world?] would come down and would be born into a Brahman family [Why Brahman family?], and would convert to the Buddhism to become a great teacher. He ordained Mahinda. The Third Buddhist Council was also predicted to occur one hundred and eighteen years after the second Buddhist Council. We will discuss more about this Third council, Mahinda, and the Moggaliputta Tissa later.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 05 தொடரும் / Will Follow

511615078_10229748085069138_367831327629

510643251_10229748084869133_426564431388


வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 week 5 days ago
இந்த செம்மணி சந்தடி சாக்கில் அரச அடிவருடி / ஆவா குழு தலைவன் அருண் சித்தார்த்தன் பொண்டாட்டி அரைகுறையும் இல்லாத அசிங்க சிங்களத்தில் மற்றும் தமிழில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்காள். அது துணுக்கையிலோ எங்கோ எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு. சில பாழடைந்த கட்டிட இடிபாடுகள், கைவிடப்பட்ட புதர் காணியை காட்டி அது விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்த இடம் என்றும், அங்கே 1990களில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தன்னுடைய தகப்பனார் உட்பட 4,O௦௦ ஆயிரத்துக்கும் மேட்பட்ட அப்பாவி பொதுமக்களையும், குடும்பமாக கடத்தி படுகொலை செய்து புதைத்ததாகவும், செம்மணி புதை குழிகள் பற்றி நீதி கேட்போர் இவற்றை பற்றியும் கதைக்க வேணும் என்ற தொனியிலும், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு பற்றி பேசும் யாழ் பல்கலைகழக சமூகம் சகோதர யுத்தத்தால் கொல்லப்பட்ட இந்த மக்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி பதிவு செய்து சிங்கள ஊடகங்கள், வலை தளங்களில் பெருவாரியாக பேசப்பட்டு வருகிறது. https://lankaleader.com/lankaleader/page/10?post_id=13339

அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா

1 week 5 days ago
இன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/

அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா

1 week 5 days ago
பால் சுரக்காத …, முலைகளைத் தேடும், பச்சிளம் பாலகர்கள் மீது, விழுகின்றன, தாயொருத்தியின் இயலாமை சிந்துகின்ற கண்ணீர்த் துளிகள்..! என்று தான் இந்தச் சுமைகள் இறங்கும் என,ஏங்குகின்றன…, பாலஸ்தீனத்தின் கழுதைகள்..!

அமெரிக்காவில் அகோர வெய்யில்.

1 week 5 days ago
ஐயா எமது வீட்டில் கோடைகாலம் வரும்போது யன்னலில் தூக்கி வைப்போம். குளிர்காலம் வரும்போது கழட்டி கறாச்சினுள் வைப்போம். இந்த குளிராக்கி 200-300 டாலர்கள் காணும். பணமிருந்தால் இன்னும் பெரிது வாங்கி யன்னலிலேயே பூட்டலாம். நாள் முழுக்க வாகனத்தில் இருக்க முடியுமா? இரவு நிம்மதியாக தூங்க முடியுமா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது? மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்? மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே? அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣

அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா

1 week 5 days ago
நல்ல கவிதை நிழழி! இணையத்தில் தேடியபோது கிடைத மேலதிக தகவல். அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Ma...யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் - தேவ அபிராஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
அடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும். எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம். மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும். மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது. இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம். இதை என்ன செய்வது என யோசியுங்கள். பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.

அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா

1 week 5 days ago
அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
நல்ல கருத்து! நம்பிக்கைகளுக்கு வலு உள்ளது, சிலர் தமது நம்பிக்கைக்காக மற்றவர்களின் உயிர்களையே எடுக்கிறார்கள், பொதுவாக சாவிற்கு அடுத்தபடியாக மக்கள் வெறுக்கும் விடயம், தமது நிலைப்பாடு தவறு என உணரும் நிலை, இதற்கு காரணமாக கூறப்படுவது எமது கல்வி முறை, தவறாக இருப்பதில் தவறில்லை எனும் உனர்வினை சாதாரண மனிதர்களிடம் ஏற்படுத்துவது கடினம். Bigger loser win என்பது தற்கால நவீன வியாபாரத்தின் மாதிரி, அதனாலேயே அவர்கள் நஸ்டத்தினை உடனடியாக வெட்டி விடுகிறார்கள், தனது முடிவு தவறென தெரிந்தவுடன் அதிலிருந்து எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் வெளியே வருபவர்களால்தான் சரியான முடிவினை இறுதியில் எடுக்க முடியும், தான் எடுத்த தவறான முடிவினை நியாயப்படுத்த அதனை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஒரு சூதாடியின் மனநிலை, பெரும்பாலும் படித்தவர்களிடம் (மரபு சார்) இந்த வியாதி உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
உண்மைதான். அதே போல் 1990 இல் அநியாயமாக ஊரை விட்டு விரட்டியதால் உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வையும் இந்த தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத வரிகள் காட்டி நிற்கிறன. நீங்கள் எழுதுபவையும் 1990ம் ஆண்டின் நிகழ்வுகளை மாற்றி அமைக்காது.